தூரிகை 9:
மாலை மங்கிய வேளையில் அந்த அரங்கமே கூட்டத்தால் குழுமியிருந்தது. பிரபல ஓவிய கண்காட்சி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.பல பிரபல ஓவியர்களின் ஓவியங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றாய் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா. தன்னுடைய ஓவியங்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதையோ….அதை அனைவரும் ரசிப்பதையோ அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மற்ற ஓவியங்களை அவன் ரசித்துக் கொண்டிருந்தான்.அதன் மூலம் அவன் மனம் ஒரு மூலையில் நிம்மதியாய் உணர்ந்தது.
“டேய் தேவா…! இன்னமும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி விளையாட்டு…?”” என்றான் குணா.
நீ எதைப் பத்தி சொல்ற…?” என்றான் தேவா.
“ம்ம்…நீ படம் வரையறதும்….அதுக்கு வர வரவேற்பும் பெரிசா இருக்கு…? ஆனா நீ தான் அந்த ஓவியன்னு ஏன் வெளி உலகத்துக்கு தெரியாம வச்சிருக்க….?” “” என்றான் குணா.
“தெரிஞ்சு என்ன ஆகப் போகுது…? தெரிஞ்சு என்னைக் கொண்டாட யாரும் இங்க இல்லைங்கும் போது… எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை…?”” என்றான் வெறுப்பாய் தேவா.
“ஸ்டாப் இட் தேவா….! உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.எப்படி உன்னால இப்படி பேச முடியுது…?
ஏன்..? உனக்காக நான் இல்லை…என் அம்மா,அப்பா,ரூபா இப்படி எல்லாரும் என்மேல வச்சிருக்க அன்பை விட உன்மேல் வைத்திருக்கும் அன்பு தான் அதிகம்..! இது உனக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்..!”” என்றான் மூச்சு வாங்க.
“சாரி குணா…! நான் அப்படி சொல்ல வரலை…” “ என்றான் தேவா தன் தவறை உணர்ந்தவனாய்.
ரொம்ப கஷ்ட்டமா இருக்கு தேவா…! உன்மேல அளவுக்கு அதிகமா அன்பு இருக்குறதுனாலதான் அப்பா அவரோட சொந்த பத்திரிகையில் உன்னோட ஒவ்வொரு ஓவியத்தையும் வெளிக்கொண்டு வராரு.
ஏன்..? நீ உன்னைப் பத்தி வெளிய தெரியக் கூடாதுன்னு சொன்னப்பக் கூட அவர் சரின்னு தான சொன்னாரு.இதுல எவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருக்குன்னு உனக்கு தெரியும்ல…” “என்றான் குணா கோபமாய்.
“சாரி…சாரி…சாரி நண்பா…இனிமேல் விளையாட்டுக்கூட இப்படி சொல்ல மாட்டேன் சரியா….?” என்றான் சின்ன பிள்ளை போல்.
அவன் முகத்தைப் பார்த்து சமாதானம் அடைந்த குணா…”சரி பிழைச்சுப் போ…இந்த ஒருதடவை உன்னை மன்னிக்கிறேன்…” என்றான் பெருந்தன்மையாய்.
இருந்தாலும் இந்த கைல ஏதோ ஒரு மாயம் இருக்குடா…” என்று தேவாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு குணா பெருமையாய் சொல்ல….அந்த தூய நட்பில் உள்ளம் குளிர்ந்தான் தேவா.
“தேவா…! அப்பறம் அந்த பொண்ணைப் பத்தி உனக்கு சொல்லியே ஆகணும்..! நீ யார்…?உன் அட்ரஸ் என்ன…? உன் நம்பர் என்னன்னு கேட்டு நச்சரிக்கிறதா அப்பா சொன்னாரு…!
என்ன பண்றது…? உன் நம்பரைக் குடுக்க சொல்லவா…?”” என்றான் குணா ஓரக்கண்ணால்.
“யப்பா சாமி அந்த தப்பை மட்டும் பண்ணிடாதா….!”” என்று கும்பிடு போட்டான் தேவா.ஆனால் ஏனோ தெரியவில்லை அவனுக்கு அந்த லெட்டர் பெண்ணின் நியாபகம் வந்தது.
அவளின் எழுத்துக்களில் ஏதோ ஒரு மாயம் இருப்பதைப் போல உணர்ந்தான் தேவா.அதைப் படிக்கும் போது ஏதோ ஒன்று தன்னை அமைதிப் படுத்துவதைப் போல் உணர்ந்தான்.
நாளுக்கு நாள் அவளுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தலை தூக்கிக் கொண்டே போனது.
“ஒருவேளை அவள் இந்த கண்காட்சிக்கு கூட வந்திருக்கலாம்…?யாராய் இருக்கும்…?”” என்று தேவாவின் கண்கள் அலைபாய….
“ஆமா அவளை உனக்கு ரொம்ப தெரியுமாக்கும்..!ஏதோ ரொம்பத் தெரிஞ்சவன் மாதிரி அவளைத் தேடுற…?”” என்று தேவாவின் மனசாட்சி கிண்டலடிக்க, ” “ஆமால்ல..” “ என்று தன் தலையைத் தானே தட்டிக் கொண்டான் தேவா.
“யார் கண்டா..? இந்த கூட்டத்துல கூட அவ இருக்கலாம் மச்சி..”” என்றான் குணா.
யாரு…?” என்றான் தேவா அப்பாவியாய்.
குணா…” “டேய்..! ரொம்ப அப்பாவியா முகத்தை வைக்காத…?நீ மனசுக்குள்ள பேசுறதா நினைச்சு வாய் திறந்து பேசிட்ட…நானும் கேட்டுட்டேன்…”” “ என்றான்.
“தேவா உனக்கு முத்திடுச்சு…” என்று தனக்குத் தானே சொன்னவன்…”விடு மச்சி…இதெல்லாம் சாதாரணமப்பா…..” என்றவன் வேகமாய் முன்னால் நடக்க…சட்டென்று யாரோ அவன் மேல் மோதி கீழே விழப் போக…சட்டென்று தாங்கிப் பிடித்தான் தேவா.
இறுகப் பின்னிய கூந்தலில் இருந்து சில முடிகள் விடுபட்டு திமிர…. பளிச்சென்று இருந்த முகம்….பெரிய கருவிழிகள் என அவனின் உண்மையான ஓவியம் போல் இருந்தாள் அந்த பெண்.
கீழே விழுந்து விடுவோமோ என்று அவள் கண்களை இருக்க மூடிக் கொண்டிருக்க… சில நிமிடங்களோ…கணங்களோ தேவா தன்னை மறந்திருக்க…முதலில் மீண்டவள் அவள் தான்.சட்டென்று கண் விழித்தவள் அவனைப் பாராது கீழே விழுந்த தன் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தாள்.
“சாரி சார்…தெரியாம வந்து மோதிட்டேன்…சாரி…!” என்று தலையை நிமிர்த்தாமல்,கீழே விழுந்த தன் பொருட்களை சேகரித்துக் கொண்டு, அவனைக் கண்டும் காணாமல் அவள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே செல்ல…பிரமை பிடித்தவன் போல் இருந்தான் தேவா.
“எப்படி இது சாத்தியம்…? என் மனதில் உதித்த கற்பனை உண்மையாகவே ஒரு பெண்ணின் உருவத்தில் இருக்க முடியுமா…? இல்லை கற்பனையே காரிகையாய் மாறி வந்தாளோ..!”” என்று அவன் மூளை செயலிழந்து யோசித்துக் கொண்டிருந்தது.
ஆனால் அவள் மோதியதில் தனக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டதை உணர்ந்தான் தேவா.மின்சார அதிர்வு போல் தன் உடல் எங்கும் தோன்றிய அதிர்வுகளை அவனால் உணர முடிந்தது.
“அவளைத் திரும்ப பார்…பார்…” !” என்று அவனுக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
சட்டென்று நினைவிற்கு வந்தவன்…வேகமாய் அவளைத் தேட…அவளோ அந்த இடத்தை விட்டு வெகு தூரம் சென்றிருந்தாள்.
யாரை நண்பா தேடுற…? நான் இங்க இருக்கேன்…!” என்று வந்து நின்றான் குணா.
“யாரையும் தேடலை…வாடா போகலாம்…”“ என்றபடி சென்றான் தேவா.
வரும்போது தனியாக வந்தவன் போகும் போது அவளுடைய நினைவுகளை சுமந்து கொண்டு சென்றான்.
“ஐயோ…! நான் இப்ப யாருக்கு சாரி சொன்னேன்..!வர வர எனக்கு புத்தி மங்கிப் போய்டுச்சு….நானே தான் போய் அவர் மேல இடிச்சேன்…நானே தான் சாரி சொன்னேன்..! ஆனா அவர் முகத்தைப் பார்த்து ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம வந்துட்டேனே…! என்னை கீழே விழாம அவர்தான் காப்பாத்தினார்….” “ என்று விசனப்பட்டாள்.
வேகமாய் மீண்டும அதே இடத்திற்கு சென்று அவன் யாரென்று தேடிக் கொண்டிருந்தது அந்த பேதை மனம்.அவனுடைய சட்டையின் நிறம் மட்டும் அவள் மனதில் ஆழப் பதிந்திருந்தது.
**********
தேவா வீட்டிற்கு செல்லும் போது நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.
அமைதியாய் வீட்டிற்குள் செல்ல…” “சார் இவ்வளவு நேரம் எங்க போய் ஊர் சுத்திட்டு வரிங்க…?”” என்றாள் இடக்காய் கார்த்திகா.
அவளை மவுனமாய் முறைத்தவன்…”” “அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை..”” “ என்று பட்டென்று சொன்னவன் வேகமாய் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
“நீ ஏன் எப்ப பார்த்தாலும் அவனை வம்புக்கு இழுத்துகிட்டே இருக்க கார்த்திகா…?”” என்று பத்மா அதட்டினார்.
“போதும்மா…! அவன் உன்னை மதிக்காத போதே அவனுக்கு நீங்க இப்படி வக்காலத்து வாங்குறிங்க…!இன்னும் கொஞ்சம் உங்களை மதிச்சு நடந்தான்…உங்களை கைலயே பிடிக்க முடியாது…”” என்றாள் எரிச்சலாய்.
கார்த்திகா அவன் உனக்கு தம்பி…!” என்று பத்மா அதட்ட…
“நல்ல தொம்பி….அவனும் அவன் சிடுமூஞ்சியும்…” “ என்றபடி எழுந்து சென்றாள் கார்த்திகா.
கடவுளே..! நான் செய்த ஒரு தப்புக்காக இன்னும் எத்தனை காலத்துக்கு என்னை சோதிப்பிங்க…?” என்று கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தார் பத்மா.
மாறன்-பத்மா தம்பதிகளுக்கு பிறந்த பெண் கார்த்திகா.மாறனின் தம்பியின் மகன் தேவா.அண்ணன் தம்பி என அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருந்த காலங்கள் இனிமையான நினைவுகளை மட்டும் தராமல் சில கசப்பான நினைவுகளையும் கொடுத்திருந்தது.
சிறு வயதிலிருந்தே கார்த்திகாவிற்கு தேவா என்றாள் அவ்வளவு இஷ்ட்டம் இல்லை.தனக்கு பிறகு வீட்டிற்கு வந்த கடைக்குட்டி என்பதால் அனைவருக்கும் தேவா என்றால் இஷ்ட்டம்.
அந்த காரணத்தினாலேயே…..தான் இரண்டாம் பட்சமாக அனைவருக்கும் தெரிவதாக அவள் மனதில் சிறு வயதிலேயே ஆழப் பதிந்து போனது.அதுவே அவள் தேவாவை வெறுப்பதற்கான காரணமாகவும் அமைந்தது.
தேவாவின் பெற்றோர் அவனுக்கு பத்து வயதாக இருக்கும் போது ஒரு விபத்தில் தவறி விட….அன்று முதல் அவன் மாறன்-பத்மா தம்பதிகளுக்கு மகனாகிப் போனான்.
ஆனால் தேவா அவர்களை பெற்றோர்களாக ஏற்றுக் கொள்ளவேயில்லை. பெரியம்மா,பெரியப்பா என்று கூப்பிட்ட வாய்க்கு அம்மா,அப்பா என்று அழைக்க ஏனோ அவனால் முடியவில்லை.
சில சமயம் பாசமாக பேசும் மாறன் சில சமயம் எரிந்து விழவும் செய்தார்.காரணம் என்னவென்று அறியாமலேயே அவன் பள்ளிப் பருவம் முடிந்தது
தனகென்று யாருமில்லை என்று அவன் உறுதியாக நம்ப ஆரம்பித்தான். தனக்கான தனிமையை தானே தேடிக் கொண்டான்.நண்பர்களை அதிகம் வைத்துக் கொள்ளவில்லை.
தனிமையில் தான் அனுபவிக்கும் ஒவ்வொரு விஷயத்தையும்,தான் ஏங்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஓவியமாக வரைய ஆரம்பித்தான்.இறுதியில் அதுவே அவனுக்கு உற்ற துணையும் ஆகியது.
யாரும் பூர்த்தி செய்ய முடியாத தன் தனிமையை ஓவியமும்,குணாவும் பூர்த்தி செய்வதாக முழுமையாக நம்பினான்.
.இதற்கிடையில் சொத்துக்கள் பற்றிய விபரம் தெரிய வரும் போதுதான் தன்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டான் தேவா.
மாறன் அவனை மைனராக காட்டி நிறைய சொத்துக்களை அவர் பெயருக்கு மாற்றியதும்,கார்த்திகாவின் பெயருக்கு மாற்றியதும் தெரிய வந்த போது, சுக்கு நூறாக உடைந்து போனான் தேவா.
அவர்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் அவன் மனதில் இல்லாமல் போனது.பத்மாவும் மாறனுக்கு துணை போனதாகவே எண்ணினான். அதனால் அவரிடமும் வெறுப்பைக் காட்டத் தொடங்கினான் தேவா.
தனது எம்பிஏ படிப்பு இன்னமும் ஒரு வார காலத்தில் முடிய இருப்பதால்,தனது தந்தையின் தொழிலையும்,கம்பெனிகளையும் தானே நிர்வகிக்க வேண்டும் என்று எண்ணினான்.
இதற்கிடையில் ஒவ்வொரு பயிற்சியின் மூலமும் தனது நிர்வாகத் திறமையைத் தானே வளர்த்துக் கொண்டான்.அவனுக்கென்று ஒரு உலகத்தை அவனே உருவாக்கிக் கொண்டான்.அதில் அவன் மட்டுமே தலைவன். தன்னையும்,தன் மனசாட்சியையும் உறுதியாக நம்பினான்.
இதற்கிடையில் காதல் என்ற உணரவுக்கு தன் வாழ்க்கையில் இடமளிக்கவே கூடாது என்று எண்ணியிருந்த அவன் எண்ணம் இன்று அவளைப் பார்த்ததும் சுக்கு நூறாய் உடைந்து போனது.
அவள் நினைவில் அமர்ந்திருந்தவன்…சட்டென்று ஒரு யோசனையுடன் எழுந்தான்.வேகமாய் தனது ட்ராயிங் கிட்டை எடுத்தவன்…..இன்று பார்த்த அந்த பெண்ணை வரைய ஆரம்பித்தான்.
தனது கற்பனையும்,இன்று கண்ட அவள் முகத்தையும் சேர்த்து அவள் அழகுக்கு அழகு சேர்க்க…அவன் விரல்கள் வர்ணம் பூச….அந்த கைவண்ணத்தில் அவளின் முகம் ஒளிர்ந்தது அந்த ஓவியத்தில்.
முழுமையாக வரைந்து முடித்து விட்டு அந்த திருப்தியுடன் அந்த ஓவியத்தை ஆசையாய் பார்த்தான் தேவா.ஏதோ அவள் நேரில் வந்து ,தன்னருகில் இருப்பதைப் போல் உணர்ந்தான்.
இப்படி ஒரு அழகா…? இப்படி செதுக்கிய சிற்பம் போல் ஒரு பெண் இருக்க முடியுமா…? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் தேவா.
அவன் அந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டே இருக்க….அவனின் செல்போன் ஒலியில் களைந்தான்.
செல் திரையில் குணாவின் நம்பரைப் பார்த்தவன் வேகமாக ஆன் செய்து காதில் வைத்தான்.
“சொல்லுடா…!””
குணா…””என்ன பண்ற தேவா..?”” என்றான்.
“சும்மாதான் இருக்கேன்…? ஏண்டா எதுவும் விஷயமா…?” என்றான்.
குணா…””ஆமாடா…! உன்னோட முகவரிய கேட்டு இன்னைக்கு அந்த பொண்ணு வேற ஒரு பொண்ணை அனுப்பியிருக்கா ஆபீஸ்க்கு….!”” என்றான்.
“ம்ம்ம் அப்பறம்…”” என்றான் தேவா.
“என்னடா அப்பறம்…? வரவர உன்னைக்கேட்டு வர அழைப்புகளை கட்டுப்படுத்த முடியலைன்னு அப்பா சொல்றார்.உன்னோட மொபைல் நம்பரை மட்டுமாவது கொடுக்கட்டுமான்னு கேட்குறார்…!”” என்றான் குணா.
வேண்டாம் குணா.இது என்னோட ப்ரோபசன் கிடையாது.மிஞ்சிப் போனா இன்னமும் ஒரு வாரம் மட்டும் தான் என்னால இப்படி சுதந்திரமா இருக்க முடியும்….அப்பறம் ஆபீஸ்,வேலைன்னு நிற்க நேரமில்லாம நான் ஓடியாகணும்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் என்னை வெளிப்படுத்தி இப்ப என்ன ஆகப் போகுது….அதனால் அப்பாகிட்ட சொல்லிடு…கடைசியா ஒரு ஓவியத்தை மட்டும் அப்பாகிட்ட குடுக்குறேன்னு சொல்லு…ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ண வேண்டாம் குணா…” “என்றான் தேவா.
“ஓகே தேவா…அதற்கு மேல் உன் விருப்பம்…நான் அப்பாகிட்ட சொல்லிடுறேன்…”“என்றபடி குணா போனை கட் செய்தான்.
போனை வைத்த தேவாவிற்கு அந்த பெண்ணை நினைத்து ஒரு புறம் பாவமாக இருந்தது.ஒரு ரசிகையாக அவன் என் ஓவியங்களை ரசிக்கிறாள்.அந்த ஓவியங்களுக்கு சொந்தக்காரனை பார்க்க விரும்புவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. என்ன செய்யலாம்….? என்று அவன் மூளை யோசிக்க….
அதான் ஒவ்வொரு கடிதத்திலும் அவள் நம்பரை அனுப்புறாளே…அந்த நம்பர்க்கு கால் பண்ணி பேசு…! என்று மனம் எடுத்துக் கொடுத்தது.
“அது தான் சரி…!”” என்று நினைத்தவன்..அந்த கடிதத்தை எடுத்து அதில் இருந்த மொபைல் நம்பரை டயல் செய்ய ஆரம்பித்தான்.
முதலில் முழுதாக ஒரு ரிங் போய் கட்டாக யாரும் எடுக்கவில்லை.”என்னடா இது…?” என்று நினைத்தவன்….மீண்டும் டயல் செய்ய…இம்முறை சில வினாடிகள் கழித்து போன் அட்டென் செய்யப்பட்டது.
தேவா… “ஹலோ..!”“ என்று சொல்வதற்கு முன்பாக எதிர்முனையில் கேட்ட ஹலோவில் பிரமை பிடித்தவன் போல் நின்றான்.
எதிர் முனையில் “ஹலோ..!ஹலோ..!“ என்று அந்த பெண் பல முறை கத்த…இவனால் வாய் திறந்து பேச முடியவில்லை.
அவளது குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தவன்…ஒரு கட்டத்திற்கு மேல் கத்திப் பார்த்த அவள்…பட்டென்று போனை கட் செய்ய….மெதுவாக போனைக் காதிலிருந்து எடுத்தான் தேவா.
“சாரி சார்…!”” என்ற வார்த்தையும்….””ஹலோ…!”” என்ற வார்த்தையும் மாறி மாறி அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
இது…இந்த குரல் இன்று கண்காட்சியில் பார்த்த பெண்ணோட குரல் போல் இருக்கே…!” என்று யோசிக்க…”,இருக்கே இல்லை…நிச்சியமா அவள் குரல்தான்…” என்று அவன் மூளை அதை அவனுக்கு உறுதி செய்தது.
வேகமாய் தன் முன்னால் இருந்த ஓவியத்தைப் பார்க்க….அதில் அவளது இதழ்கள்…”ஹலோ..!” என்று சொல்லும் பிரம்மையை உணர்ந்தான்.
“ச்ச என்ன இது…? ஒரு நாள்…சில நிமிடமே பார்த்த ஒரு பெண்…தன் மனதில் இவ்வளவு பதிய முடியுமா….? என்று நினைக்க….”ஏன் முடியாது…?” என்று அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.
உடனே தனது கபோர்டை திறந்தவன்….அவள் எழுதிய மற்ற கடிதங்கள் அனைத்தையும் வேகமாகத் தேட தொடங்கினான்.
இதையறியாத அவள் அங்கு இவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள். ”யார்ன்னு தெரியலை…? போன் பண்ணிட்டு அமைதியா இருக்காங்க….யாராய் இருக்கும்…?” தன் அறிவை பரிசோதித்துக் கொண்டிருந்தாள் அவள்.
ஏதாவது ராங் நம்பரா இருக்கும்…!” என்று நினைத்தவள்…அன்று கண்காட்சியில் வாங்கிய அந்த ஓவியங்கள் அனைத்தையும் எடுத்து தன் முன்னால் வரிசையாக வைத்து….அவற்றையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கு தன்னால் ஒருவன் தூக்கம் இழந்து தவிக்கிறான் என்பதை அறியாத கன்னி மனம்….அந்த ஓவியனைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது.
கண்ணோடும் நெஞ்சோடும்….
உயிரால் உன்னை மூடிக் கொண்டேனே…!
கனவோடும் நினைவோடும்….
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே…!
மதி பறிக்கும் மதி முகமே….
உன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேன்..!
எங்கே நீ சென்றாலும்…அங்கே நான் வருவேனே…!
மனசெல்லாம் நீ தான்…நீ தானே..!