Advertisement

தூரிகை 14 :

 

இரவு மாறன் கடும்கோபத்துடன் வீடு திரும்பினார்.எல்லாவற்றிலும் தோற்றது போல் ஒரு உணர்வு அவருக்கு.அவரது முகத்தை வைத்தே நடந்ததை ஓரளவு ஊகித்துக் கொண்டார் பத்மா.

எதுவும் பேசாமல்….அமைதியாக மாறனை சாப்பிட அழைக்க…”இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல்…எல்லா வினையும் உன்னால் தான் வந்தது…”என்று எரிந்து விழுந்தார்.

“இப்ப என்ன நடந்தது….? அப்படி நான் என்னதான் செஞ்சுட்டேன்…” என்றார் பத்மா ஆதங்கத்துடன்.

“இன்னும் என்ன  செய்யலை.நடந்த எல்லா விஷயத்துக்கும் நீ தான் காரணம்..அவன் பேசாம கன்னடாவில் இருந்தான்.சும்மா இருந்தவனுக்கு… கல்யாணம் பண்ணனும்,கருமாதி பண்ணனும்னு அவனை இங்க வர வச்சது நீதான…?” என்றார்.

“சும்மா என்னையவே குறை சொல்லாதிங்க…? அப்படி நான் என்ன செய்ய கூடாத தப்பை செய்துட்டேன்…என்ன தான் அவன் என் வயிற்றில் பிறக்கலைன்னாலும்…பிறந்ததில் இருந்து என் கண் முன்னே வளர்ந்தவன்.உங்க தம்பி இறந்ததுக்கு அப்பறம்….நான் என்னோட மகனாதான் நினைச்சு வளர்த்தேன்…

சொந்த அம்மா,அப்பா உயிரோட இருந்திருந்தா இந்நேரம் அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்த்திருப்பாங்க…என்ன இருந்தாலும் இவங்க பெரியம்மா,பெரியப்பா தானே என்று நாலு பேர் நாக்கு  மேல பல்லைப் போட்டு பேசக் கூடாதுன்னு தான் அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கணும்ன்னு சொன்னேன்..இது ஒரு தப்பா..” என்றார் பத்மா மூச்சு வாங்க.   

“கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைச்சது தப்பில்லை பத்மா.அவனுக்கு நடக்குற கல்யாணம் நமக்கு சாதகமா இருக்குமான்னு தான் பார்க்கணும்..இப்ப பாரு நடக்குற எல்லாமே தலைகீழா நடக்குது..” என்று அலுத்து போய் அமர்ந்தார் மாறன்.

“தப்பெல்லாம் உங்க மேலதான்.நீங்க அவன்கிட்ட உண்மையான பாசத்தைக் காட்டியிருந்தால்…உங்களுக்கு தேவையானதை நீங்க கேட்காமலேயே அவன் கொடுத்திருப்பான்.ஆனா நீங்க செய்தது என்ன…? இப்ப பேசுறது என்ன..?என்னை பொறுத்தவரை தேவாவை பெறவில்லை என்றாலும் அவன் எனக்கு மகன் தான்.ஆரம்பத்தில் உங்களுடன் சேர்ந்து நான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி நான் வருந்தாத நாள் கிடையாது…இனியாவது திருந்தி பிழைக்கிற வழியைப் பாருங்க..” என்றார்.

“என்ன எனக்கே அறிவுரையா..?அவன் கையில் தூக்கிக் குடுக்கத்தான் இத்தனை நாள் நாயா உழைத்தேனா…அது மட்டும் நடக்காது…அவன் எப்படி தொழிலை நடத்துறான்னு பார்க்குறேன்…” என்று மாறன் கூற…

“எதுக்கு பணம் பணம்ன்னு அலையறிங்க…! இந்த வயசுக்கு மேல சொத்து சேர்த்து என்ன  பண்ண போறீங்க…?உங்க பெண்ணையும்  உங்கள மாதிரியே வளர்த்து வச்சிருக்கிங்க…! இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியலை…” என்றார் பத்மா.

“போதும் நிறுத்து பத்மா.பணம்,கம்பெனி,தொழில் எல்லாம் புலிவால் மாதிரி.அதைப் பிடித்த என்னாலையும் அதை விட முடியாது.அதுவும் என்னை விடாது….புரியுதா…! போ..போய் வேலையைப் பார்…பேச வந்துட்டா பெருசா..” என்று விரட்டினார் மாறன்.  

“சிந்துவை எப்படியாவது இவனுக்கு கட்டி வச்சு….நம்ம கைக்குள்ளயே வச்சுக்கலாம்ன்னு  பார்த்தேன்…ஆனா அந்த சிந்து பிள்ளை என் நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டாள்…இவன் என்னடான்னா… எல்லாத்தையும் தோண்டி துருவுறான்….என்ன செய்றது….” என்று தனது மூளையைக் கசக்கி யோசித்துக் கொண்டிருந்தார் மாறன்.

பேராசை ஒருவரை எந்த எல்லை வரை இழுத்து செல்லும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.அறிந்திருந்தால்…..?

அறையை விட்டு வெளியே வந்த பத்மா….அங்கு அறை வாயிலில் கீர்த்தனா நின்றிருப்பதைப் பார்த்து திகைத்தார்.”என்னாச்சு கீர்த்தனா…? ஏதும் வேணுமா..?” என்று பத்மா திக்கித் திணற…

“ஆமாம் அத்தை…அவர்..அவர்…எங்க போயிருக்கார்ன்னு உங்களுக்கு தெரியுமா…?” என்றாள் சோர்ந்த முகத்துடன்.

“தெரியலைமா… மதியம் வந்து மேலே போனவன் தான். சாப்பிடக் கூட வரவில்லை கீழே.சாயந்திரமா….அவனைப் பார்த்தேன்.அதுக்கு அப்பறம் எழுந்து வெளியே போய்ட்டான்…ஏன் கீர்த்தனா ஏதும் பிரச்சனையா உங்களுக்கிடையில்…?” என்றார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை…!” என்று சொன்னவள் அமைதியாக மேலே போக…அவளின் முகத்தைப் பார்த்து குழம்பினார் பத்மா.

”ஒருவேளை நாங்க பேசினதை கேட்டிருப்பாளோ…? “ என்று தோன்ற… ”அப்படிக் கேட்டிருந்தா…எப்படி அமைதியா இருப்பா…?” என்று தனக்குத் தானே பதிலும் சொல்லிக் கொண்டார் பத்மா.

ஆனால் அறைக்கு சென்ற கீர்த்தனாவிற்கு குழப்பத்திற்கு  மேல் குழப்பமாக இருந்தது.மாறனும்,பத்மாவும் பேசியது ஒன்று விடாமல் அவள் காதுகளில் விழுந்திருந்தது.அவர்களின் அறை மாடிப்படியை ஒட்டிய அறை என்பதாலும்,அவள் வந்ததை கவனியாது அவர்கள் பேசிக்கொண்டிருந்ததாலும் அனைத்தையும் அவள் கேட்க நேரிட்டது.

முதலில் ஏதோ முக்கியமான விஷயம் பேசிக் கொள்கிறார்கள் என்று எண்ணி திரும்பிய கீர்த்தனா….அவர்களின் பேச்சில் தேவாவின் பெயர் அடிபடவும் அப்படியே நின்றாள்.

மாறனும்,பத்மாவும் அவனின் சொந்த அம்மா,அப்பா இல்லையென்ற அதிர்ச்சியையே அவளால் ஜீரணிக்க முடியவில்லை.இதில் மாறனுடைய பேச்சும்,செயல்களும் இன்னமும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.

இதையெல்லாம் தேவா கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்..? என்று நினைத்தவளால் அதற்கு மேல் யோசிக்க கூட முடியவில்லை.அவனை எண்ணிய ஒரு மனம் அவன் மேல் இறக்கம் கொண்டது.

தேவா இவளிடம் காதலை எதிர்பார்க்க….இவளோ இரக்கத்தை பரிசளித்துக் கொண்டிருந்தாள்.

நேரம் ஆக..ஆக…கீர்த்தனாவின் மனம் தவிக்கத் தொடங்கியது.”எல்லாம் என்னால் தான்…? அவன் தான் கோபமாய் கேட்டான் என்றால்…நானாவது பொறுமையாய் சொல்லியிருக்கலாம்….!  என்று ஒரு மனம் சொல்ல…

“என்னவென்று சொல்வாய்..! நான் வேறு ஒருவனை காதலிக்கிறேன் என்றா..?இல்லை எனக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகிவிட்டது என்றா…?” என்று மனசாட்சி கேள்வி கேட்க….“ அதிர்ந்தாள் கீர்த்தனா.

“இதை எப்படி மறந்தேன்…..? என்னால் எப்படி தேவாவை ஏற்றுக்கொள்ள முடியும்…? மனதில் காதலே இல்லாமல் எப்படி அவனுடன் வாழ முடியும்…! பத்து நாட்களாக அவள் இருந்த திசை பக்கம் கூட திரும்பாதவன்…கடந்த இரண்டு நாட்களாக…அவளை நெருங்கி வர முயற்சிப்பது போல் தெரிந்தது அவளின் மனதுக்கு…””

“இதை இப்படியே விடக் கூடாது…தேவாவிற்கு எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும்…” “ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே….வந்து சேர்ந்தான் தேவா.

அவனின் முகம் மிகவும் களைத்திருந்தது.நேராக கீர்த்தனாவின் அருகில் வந்து…அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்…அவளை இடுப்போடு கட்டிக் கொண்டான்.

“சாரி கீர்த்தனா…! நான் அப்படி பேசியது தப்புதான்.என்ன இருந்தாலும் அப்படி பேசியிருக்க கூடாது.என்னை மன்னித்து விடு..!”“ என்று சொல்லிக் கொண்டிருக்க…

“அவனிடமிருந்து இப்படியொரு செய்கையை எதிர்பார்த்திராத கீர்த்தனாவிற்கு உடல் வெடவெடத்தது.அவனின் மூச்சுக் காற்று அவள் மேனியில் சூடாய் பதிய…கீர்த்தனாவின் உடல் நடுங்கத் தொடங்கியது…”“

தேவாவோ அவளை விடாமல் கட்டிக் கொண்டிருந்தான்.நடுங்கும் கைகளுடன் அவனது கைகளை மெல்ல பிரித்தவள்….”

“பிளீஸ் தேவா….! சாரி எல்லாம் வேண்டாம்….ஆனா இப்படி…..இப்படி… என்னைத் தொடாதிங்க…! எனக்கு…எனக்குப் பிடிக்கலை…”“ என்று கண்கலங்கி சொன்னவள்…தலையைக் குனிய…அவளை வெறித்தபடி நின்றான் தேவா.

“நான் ஒன்னும் வேற யாரையோ தொடலை கீர்த்தி.நீ என் மனைவி.நான் உன் கணவன்.இதை யாராலும் மாத்த முடியாது….நீ உட்பட.இனிமேல் இப்படி ஏதாவது ஏடாகூடமா பேசினா…என்னோட இன்னொரு முகத்தை தான் நீ பார்க்கணும்…“

உன்னை நான் கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணவில்லை.இது உனக்கும் நியாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்…”என்றான்.

“நான் தான் உங்களை பிடிக்கவில்லை என்று சொன்னேனே…? “ என்றாள் கோபமாய்.

“உண்மைதான்.நான் இல்லைன்னு சொல்லவில்லையே..! நீ சொன்னது சரிதான்.ஆனா அதை யார்கிட்ட சொல்லியிருக்கணும்…உங்க அம்மா,அப்பாகிட்ட சொல்லியிருக்கணும்…எனக்கு உன்னை பிடித்திருந்தது.நான் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.உனக்கு பிடிக்கலன்னா…நீ தான் கல்யாணத்தை நிறுத்தியிருக்கணும்…“ என்றான் தெளிவாய்.

“உங்களை பிடிக்காத பொண்ணோட எப்படி உங்களால் மனம் ஒன்றி வாழ முடியும்..? “ என்றாள்.

“ஏன் முடியாது…? எத்தனை பேர் கல்யாணத்துக்கு அப்பறம் காதலிக்கிறாங்க… அவங்க சந்தோஷமா இல்லையா…? இதுவரைக்கும் என்னை உனக்கு பிடிக்கலைன்னாலும்…இனிமேலும் பிடிக்காதுன்னு அர்த்தமா.கண்டிப்பா உன் மனம் மாறும்…!“ என்றான் தீர்க்கமாய்.

“மாறாது..!“ என்றாள் முடிவாய்.

“மாறும்..! என்னை கொஞ்ச நேரம் காணவில்லை என்றவுடன்…எதற்காக அம்மாவிடம் சென்று நீ விசாரிக்க வேண்டும்…?“ என்று புருவத்தை உயர்த்த…

“அது..அது…ஒரு அக்கறை…என்னால்தான்..சண்டை…கோபம்…”“ என்று அவள் திக்கித் திணற…அவளது முகத்தை தன் கைகளால் நிமிர்த்தியவன்…” “இந்த அக்கறையே கூடிய சீக்கிரம் காதலாய் மாறும்…மாற வைப்பேன்..“ என்றான் உறுதியாய்.

அவள் வேதனையுடன் முகத்தை திருப்பிக் கொள்ள…” “சரி சாப்பிடலாமா…? காலையில் நீ என்ன உப்புமாவைக் கிண்டி கொடுத்தாயோ தெரியலை…! இப்ப வரைக்கும் பசியே எடுக்கலைன்னா பாரேன்…! என்று அவன் தலையை ஆட்டி சொல்ல…

“காலையில் சாப்பிட்டதா…?“ என்றாள் அதிர்ச்சியாய்.

“ஆமாம்..!“ என்றான் தேவா பாவமாய்.மதியம் உன்னோடு சேர்ந்து சாப்பிடலாம்ன்னு உன்னைக் கூப்பிட காலேஜ் வந்தேன்.அங்க தான் சொன்னாங்க நீ வீட்டுக்கு வந்துட்டேன்னு…சரி வீட்டுக்கு போகலாம்ன்னு கிளம்பி வந்தேன்…அப்பறம் நடந்துதான் உனக்கு தெரியுமே..!“ என்றான்.

அதைக் கேட்ட கீர்த்தனாவிற்கு…அவன்பால் கழிவிரக்கம் தோன்றியது.” “சாரி தேவா…! இது தெரியாமா…நான்…” “ என்று அவள் ஏதோ சொல்ல போக..

“அம்மா தாயே..! மறுபடியும் முதலில் இருந்தா…இதற்கு மேல் பசி தாங்க என்னால் முடியாது…”” என்று“ கூற…

“சரி வாங்க சாப்பிடலாம்… “என்றபடி அவனுடன் இணைந்து நடந்தாள்.அதைப் பார்த்தவனின் முகத்தில் புன்முறுவல் தோறியது.அவன் எதிர்பார்த்ததும் அது தானே…!

“இது தான் கீர்த்தனா…! அவளால் யாரிடமும் பாரமுகம் காட்ட முடியாது.உடனுக்குடன் மறந்து புன்னகை செய்வாள்.கோபம் வரும் போது…அவளைப் போல் உண்டா என்று நடந்து கொள்வாள்.மறதி என்னும் மாமருந்தை அவளுக்கு கொடுத்த கடவுள்….மறக்க முடியாத சில கசப்பான நினைவுகளையும் கொடுத்திருந்தான்.

டைனிங் டேபிளில் இருவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க….மாறனும் கார்த்திகாவும் வந்து அமர்ந்தனர்.

இருவரையும் பார்த்த கீர்த்தனா…சாப்பிடாமல் தயங்க….தேவாவோ எந்தவித தயக்கமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அங்கு மாறன்,கார்த்திகா என்று இருவர் இருப்பதை அவன் சட்டை செய்யவே இல்லை.

கீர்த்தனாவிற்குதான் தர்மசங்கடமாய் இருந்தது.கல்லூரியில் மாமனாரைப்  பார்த்ததில் இருந்து மாறனுடன் அவளால் இயல்பாய் பேசமுடியவில்லை.

அவள் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதை பார்த்த தேவா…”” “என்ன..? சாப்பிடு..!“ என்று புருவத்தை ஏற்றி இறக்க… அமைதியாய் சாப்பிட ஆரம்பித்தாள். புன்னகையுடன் அவளைப் பார்த்தபடியே சாப்பிட்டான் தேவா.

கீர்த்தனா சாப்பிட ஆரம்பிக்க….அவன் கண்ணால் சொன்னதையும்,இவள் சாப்பிடுவதையும் பார்த்து கடுப்பான கார்த்திகா…

“உங்க வீட்ல உனக்கு நல்ல பழக்க வழக்கங்களையே சொல்லித் தரலையா…?” ஒரு மாமனார் வந்து உட்கார்ந்திருக்கார்…நீ பேசாம சாப்பிட்டா என்ன அர்த்தம்….“ என்றாள் கார்த்திகா.

“நான் பசியா இருக்கேன்னு அர்த்தம்…!“ என்றாள் கீர்த்தனா பட்டென்று.

தேவா இதில் தலையிடாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க…அவனைப் பார்த்து பல்லைக் கடித்தாள் கீர்த்தனா.

“பிறந்தது பட்டிக்காடுன்னாலும் வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…!“ என்றாள் கார்த்திகா குத்தலாக.

“பட்டிக்காடுன்னா அவ்வளவு கேவலமா உங்களுக்கு..ஏன் அங்க பிறந்தவங்க எல்லாம் வாய் பேசக் கூடாதுன்னு எதுவும் சட்டம் இருக்கா…? பட்டிக்காட்டு மக்கள் இல்லைன்னா…நீங்க இங்க வேளா வேளைக்கு உட்கார்ந்து சாப்பிட முடியாது..!“ என்றாள் துடுக்காய்.

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த குதி குதிக்கிற…? பொண்ணு பார்க்க வந்தப்ப அவ்வளவு அமைதியா இருந்த…இப்ப என்னடான்னா…இந்த வாய் பேசுற..நான் சரின்னு சொல்லைன்னா உனக்கு இப்படி ஒரு வசதியான வாழ்க்கையே கிடைத்திருக்காது..! “ என்றாள் கார்த்திகா நக்கலாய்.

கார்த்திகாவின் பேச்சு கீர்த்தனாவிற்கு தாறுமாறாக கோபத்தை உண்டு பண்ண…கோப விழிகளுடன் தேவாவைப் பார்த்தாள்.அவனோ யாருக்கு வந்த விருந்தோ…! என்ற ரீதியில் சாப்பிட்டுக் கொண்டிருக்க…அவளின் கோபம் மேலும் பெருகியது.

“ஹோ…அப்படியா கார்த்திகா அண்ணி…! என்ன நினைச்சிங்க என்னைப் பத்தி நீங்க…? பார்க்க அமைதியா இருக்கா…குடும்பமும் கிராமம்.எதுவும் அதிர்ந்து பேசமாட்டாங்க..!நாம ஆடுற ஆட்டத்துக்கெல்லாம் கூட சேர்ந்து ஆடுவாங்கன்னு நினைச்சிங்களா…?”” “ என்றாள் கிண்டலாய்…

“கீர்த்தனா..! “ என்று கார்த்திகா சத்தமாய் கத்த…

“சும்மா கத்தாதிங்க அண்ணி…! உங்களால் தான் எனக்கு வசதியான வாழ்க்கை கிடைச்சிருக்கா…? என்ன பேத்தல் இது.எங்க அப்பா அடுத்தவங்க குடியைக் கெடுத்து சொத்து சேர்க்கலைன்னாலும்…அவரோட சொந்த உழைப்பில்..போதும் போதும் என்கிற அளவுக்கு சொத்து சேர்த்து வச்சிருக்கார்.

இனி இது மாதிரியான வார்த்தைகள் உங்க வாய்ல இருந்து வந்தது…என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.மரியாதைன்னா என்னன்னு முதலில்  நீங்க கத்துக்கங்க… அப்பறம் எனக்கு பாடம் எடுப்பிங்க…”“ என்று கிண்டலாய் கூறியவள்…

“நான் சொன்னது சரிதான மாமா…!“ என்று மாறனை துணைக்கு அழைக்க…

கீர்த்தனாவின் குத்தலான வார்த்தைகளில் வெகுண்டு போயிருந்த அவர்…எரிச்சலுடன் எதுவும் பேசாமல் எழுந்து சென்றார்.

இதையெல்லாம் கண்டும் காணாமல் தேவா சாப்பிட்டு முடித்து எழுந்து செல்ல…”” “இவன் என்ன…?இவ்வளவு பேசுறாங்க…எதுவும் கேட்காமல் போறான்…“ என்று அவன் மேல் கோபப்பட்டாள்.

“ரொம்ப ஆடாத கீர்த்தனா..!உன்னை எப்படி அடக்குறதுன்னு எனக்குத் தெரியும்..! “ என்று எச்சரித்தபடி கார்த்திகாவும் எழுந்து சென்றாள்.

அவர்களைப் பார்த்த கீர்த்தனாவிற்கு….”” “இவங்க எல்லாம் என்ன லூசா..? நான் பேசாம சாப்பிட்டுகிட்டு இருந்தேன்.அவங்களா வந்தாங்க…அவங்களா பேசினாங்க….நான் பதில் சொன்னா கோவிச்சுகிட்டு போறாங்க…! என்ன குடும்பமோ…? “ என்று புலம்பிக் கொண்டிருக்க…

அதுவரை எதிலும் கலந்து கொள்ளாத பத்மா….

“இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை கீர்த்தனா…!“ என்றபடி வந்தார்.

“எதை அத்தை..?”“ என்றாள் கீர்த்தனா.

“என்னுடைய கணவரை தாழ்த்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லையம்மா..!“ என்றார்.

“வீட்டுக்கு வாழ வந்த  பெண்ணை மட்டும் உங்க பெண் இப்படி பேசலாமா..? அதைப் பார்த்துட்டு நீங்க தான் இப்படி ஒதுங்கி நிற்கலாமா…? நான் மாமாவை ஒண்ணுமே சொல்லவில்லையே…! உங்களுக்கா எதுக்கு அப்படித்  தோணுது…!“ என்றாள் எதிர் கேள்வியாய்.

அவளது கேள்வியில் தலைகுனிந்தார் பத்மா.அவரின் அருகில் சென்ற கீர்த்தனா…” “நீங்க தலைகுனிந்து நிற்கணும் என்பதற்காக நான் சொல்லவில்லை அத்தை…!மத்தவங்க முன்னாடி மாமா தலை குனிந்து நிற்க கூடாது என்பதற்காக சொன்னேன்.நீங்க உங்க கணவருக்காக பேசும்போது நான் என் புருஷனுக்காக பேசலாம் இல்லையா…?“ என்றாள்.

அவளின் வார்த்தைகளில் உள்ளம் குளிர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாத பத்மா…”என்னம்மா..? திடீர்ன்னு புருஷன் மேல அக்கறை…? இத்தனை நாள்ல ஒரு நாள் கூட நீ மனைவியாய் நடந்து நான் பார்த்ததில்லையே..!  “ என்றார் கிண்டலாய்.

அவ்வளவு நேரம் பதிலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுது தான் உரைத்தது…” “இந்த வாழ்க்கையே பிடிக்காமல் ஏற்றுக் கொண்டது…? இதில் எங்கிருந்து மனைவியாய் நடந்து கொள்வது…?” “ என்று அமைதியாக….

மனதிற்குள் சிரித்துக் கொண்டார் பத்மா.”இதோ பார் கீர்த்தனா…! எனக்கும் வயசாகுது….என்னோட கணவரை மட்டும் தான் நான் கவனிக்க முடியும்.உன் புருஷனோட தேவைகளை நீதான் இனி கவனிக்கணும்… சாப்பாடு உட்பட என்று உறுதியாக சொல்ல விக்கித்து நின்றாள் கீர்த்தனா.

“இன்றைக்கு இந்த அளவுக்கு போதும்…!“ என்று நினைத்த பத்மா….திருப்தியுடன் செல்ல….கீர்த்தனாவின் நிலை தான் அதோ பரிதாபம்.

மேலே அறையில் தேவா…கீர்த்தனா பேசியதை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான்.கார்த்திகாவின் வாய்க்கு இவள் தேவைதான் என்று நினைத்தவனின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

அதே நேரம்….தான் இவர்களின் சொந்த பிள்ளை இல்லை என்பதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்..! என்று எண்ணியவனின் மனம் யோசனையில் ஆழ்ந்தது. யோசனைகளை பின் தள்ளியவன்….தனது மொபைல் போனில் இருந்த கீர்த்தனாவின் புகைப் படத்தையே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

Advertisement