Advertisement

தூரிகை  10:

 

“சிந்து பிளீஸ்….நான் சொல்றதைக் கொஞ்சம் காது குடுத்து கேளு…ப்ளீஸ்…!” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அஸ்வின்.

“இதோ பார் அஸ்வின்…! எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை…நீ சொல்ற அந்த காதல், கருமாந்திரம் இப்படி எதுவுமே எனக்கு உன் மேல வரலை…என்னை மறுமடி மறுபடியும் தொந்தரவு பண்ணாத…!” என்று எரிந்து விழுந்தாள் சிந்து.

“சிந்து நான் சொல்றதைக் கேளு..!” என்று அஸ்வின் அவளின் கையைப் பிடிக்க….அதில் கடுப்பானாள் சிந்து.

“அஸ்வின் வேண்டாம்…..!என் கையை விடு….விடு….விடுடா….” “ என்று கத்த…

“இல்லை…நீ என்னை காதலிக்கிறேன்னு சொல்லு…!” என்று அவன் ஆக்ரோஷமாய் சொல்ல….,” ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தாள் சிந்து.

அவள் அறைந்த கன்னத்தில் கையை வைத்தபடி அஸ்வின் அதிர்ச்சியாய் பார்க்க…

இதோ பார் அஸ்வின்….இது தான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்…நான் உன்னை விரும்பலை.நான் தேவாவை தான் காதலிக்கிறேன்…அவனைத்தான் கல்யாணமும் பண்ணிப்பேன்….புரியுதா….!” என்றபடி அவள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் சிந்து.

சிந்து சொன்ன செய்தியில் அதிர்ச்சியானவன்…,அவள் போன திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

சிந்துவை இரண்டு வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வருகிறான் அஸ்வின்.ஆனால் சிந்துவோ அவனை கண்ணெடுத்தும் பார்க்காமல் தவிர்த்து வந்தாள்.அவள் தன்னை விரும்பாததற்கு காரணம் தேவா தான் என்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.எப்படியும் சிந்து தனக்குக் கிடைத்து விடுவாள் என்று நம்பிக் கொண்டிருந்த அவனின் எண்ணத்தில் மண் விழுந்தது.

                                *************

காலை நேர பரபரப்பில்…வேக வேகமாக டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாறன்.மாடிப் படிகளில் தேவா இறங்குவது கண்டு அவனைப் பார்க்க…. பார்த்தவர் திகைத்தார்.

ஊதா நிற கோட் சூட்டுடன்….படு ஸ்டைலாக இறங்கிக் கொண்டிருந்தான். வேகமாய் வந்தவன் டைனிங் டேபிளில் அமர்ந்தான்.பத்மா டிபனை எடுத்து வைக்க….வேண்டா வெறுப்பாய் அதை சாப்பிட்டான் தேவா.

எங்க கிளம்பிட்ட தேவா…?” என்றார் மாறன்.

சாப்பிட்டபடி அவரை நிமிர்ந்து பார்த்தவன்….அவர் கேட்டதை காதில் வாங்காதவன் போல் மறுபடியும் சாப்பிட ஆரம்பித்தான்.

உன்னைத்தான் தேவா….! எங்க கிளம்பிட்ட…?” என்றார் மாறன் அடக்கப்பட்ட கோவத்துடன்.

“பார்த்தா தெரியலை…! ஆபீஸ்க்கு..!” என்றான் தேவாவும் நக்கலாக.

“ஆபீஸ்க்கா…?” என்று அதிர்ந்தவர்…அதை முகத்தில் காட்டாது “இதை பத்தி நீ முன்னாடியே என் கிட்ட சொல்லவே இல்லையே…?” என்றார்.

“நான் என்ன புது கம்பெனிக்கு வேலைக்கா போறேன்..?எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போக.இப்ப நான் போகப் போறது என் கம்பெனி.அதாவது என் அப்பாவோட உழைப்பில் உருவான கம்பெனி.அங்க போறதுக்கு யார்கிட்டயும் சொல்ல வேண்டியதில்லை.அதுக்கான அவசியமும் இல்லை…” என்றான் எரிச்சலுடன்.

“இத்தனை வருஷம் அதை நிர்வாகம் பண்ணவன் நான்…! உனக்கு கார்டியனும் நான் தான்…அதனால் இதை என்கிட்டே சொல்லியிருக்கணும்…” என்றார் மாறனும் விடாத எரிச்சலுடன்.

தேவா…” “நீங்க ஒன்னும் சும்மா நிர்வாகம் பண்ணலை.ஆதாயம் இல்லாத எந்த காரியத்தையும் நீங்க செய்ய மாட்டிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.அது மட்டுமில்லாம,நான் மேஜர் ஆகுற வரைக்கும் தான் நீங்க எனக்கு கார்டியன்.இந்த விஷயத்தை நீங்க மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்..!

இப்பவும் உங்க கூடவே நான் இருக்குறதுக்கு ஒரே காரணம் என் அப்பா தான்.அவர் சொன்ன வார்த்தைக்காகத்தான் நான் இன்னமும் இங்க இருக்கேன்.

மத்தபடி உங்க கூட இருக்கனும்ன்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை.இதை நீங்க புரிஞ்சுகிட்டா நல்லது…”“ என்று கட்டளையுடன் முடித்தான்.

“என்ன தேவா…? எங்க கத்துகிட்ட இப்படி முகத்தில் அடித்த மாதிரி பேச…?” என்று பத்மா அதட்ட…அமைதியானான் தேவா.

மாறன் அளவிற்கு பத்மா மோசமில்லை என்பதால்…பத்மாவுடன் அவன் நெருங்கியும் பேச மாட்டான்.அதே சமயம் விலகியும் போக மாட்டான்.

“ம்ம்ம்… சார் ஆபீஸ்க்கு எல்லாம் கிளம்பிட்டாரா…?இனி அந்த ஆபீஸ் உருப்பட்ட மாதிரி தான்..!” என்றாள் கார்த்திகா.

அவளைப் பார்த்து நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்தவன்…எதுவும் பேசாமல் வேகமாய் சென்று விட்டான்.

காரில் ஏறி அமர்ந்தவனுக்கு ஆயாசமாய் இருந்தது.ஒவ்வொரு நாளும் அவர்களுடன் நாளைக் கடத்துவதே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது.

தன்னைப் பிடிக்காதவர்களின் மத்தியில் இருந்து கொண்டு….அவர்கள் தினம் தினம் நடிப்பதையும் பார்த்துக் கொண்டு அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அமைதியாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனதில் அனுமதியில்லாமல் வந்து ஒட்டிக் கொண்டது அந்த பெண்ணின் நினைவுகள்.

அவளைப் பற்றி நினைத்தவுடன் அவனின் மற்ற யோசனைகள் எல்லாம் பின் சென்றது.அவளின் தொலைபேசி நம்பர் தெரிந்திருந்தும் அவனால் அவ்வளவு எளிதில் அவளுடன் பேச முடியவில்லை.

அவளின் கடிதங்களிலிருந்து கஷ்ட்டப் பட்டு தெரிந்து கொண்ட… அவள் கல்லூரி விடுதியின் முகவரி தெரிந்திருந்தும் அவனால் நேரில் சென்று அவளை சந்திக்க முடியவில்லை.

“சாரி சார்….”“ என்ற குரல் காற்றினில் தவழ்ந்து அவன் காதருகில் வந்து செல்ல…சட்டென்று பிரேக் போட்டு காரை நிறுத்தினான் தேவா.

“என்ன இது…? எனக்கு என்னாச்சு…?” “ என்று கைகளால் தலை முடியைக்  கோதியவன்….மெல்ல சிரித்தபடி காரை எடுக்கப் போக….அப்போது தான் கவனித்தான் தேவா.

அவளைப் பற்றிய யோசனையில்…அவள் படிக்கும் கல்லூரி முன்னால் அவன் கார் நின்றிருந்தது.

“தேவா உனக்கு முத்திப் போய்டுச்சு…” “ என்று தனக்குத் தானே சொன்ன படி காரை எடுக்கப் போனவனை நிறுத்தியது அந்த குரல்.

“அண்ணா…தேவா அண்ணா…”!”“ என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தாள் ரூபா.

அவளின் குரலில் கலைந்தவன்….காரை விட்டு இறங்கினான்.” “ஹே ரூபா…!நீ இங்க என்ன பண்ற…?”“” என்றான்.

அவனை முறைத்த ரூபா….” “ம்ம்ம் என்னை இந்த காலேஜ்ல தான் சேர்த்து விட்டாங்க…என் அண்ணனும்,அவனோட பாலாப் போன பிரண்டும்….”“ என்றாள் கோபமாய்.

அப்பொழுது தான் அவனுக்கு நியாபகம் வந்தது…ரூபாவும் அதே கல்லூரியில் படிப்பது.ரூபா,குணாவின் செல்ல தங்கை.தேவாவிற்கும் அவள் செல்லம்.  

“என்ன அண்ணா…!இங்க வந்திருக்கிங்க.கண்டிப்பா என்னைப் பார்க்க வந்திருக்க மாட்டிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.அப்பறம் இங்க என்ன வேலை உங்களுக்கு…?”“ என்று ரூபா கண்ணடிக்க….

“ஹேய் வாலு…! அப்படி எல்லாம் இல்லை “ என்று தேவா மறைக்க…”ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..”“ என்றாள் கிண்டலாய்.

“சரி அண்ணா…! எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு…நான் வரேன்…” என்றபடி சென்றவள்…,வேகமாய் திரும்பி வந்து…”இருந்தாலும் எனக்கு ஒரு டவுட்…கண்டுபிடிக்கிறேன்…”“ என்றபடி சொல்லி விட்டு ஓடி விட்டாள்.

“சரியான வாயாடி…”!” என்று சிரித்தபடி காரில் ஏற போனவன்,ஏதோ உள்ளுணர்வு தோன்ற திரும்பிப் பார்த்தான்.

அஜந்தா நீல வண்ண சுடிதாரில்,அழகிய ஓவியமாய்,கல்லூரியின் உள்ளே மரத்தடியில்….தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள் தூரிகா..அவளைப் பார்த்தவன் இமைக்கவும் மறந்தவனாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“தேவா போய் பேசு….அவளோட பேசு…நீ யார்ன்னு அவகிட்ட சொல்லு…” என்று அவனின் மனம் உந்த…இரண்டு எட்டு முன் வைத்தவன்…”வேண்டாம்…அவசரப் படாத தேவா.அவ உனக்கு கடிதம் எழுதுறது ஒரு ரசிகையாய் தான்.மத்தபடி அவளுக்கு நீ யாரு..,உன்னைப் பிடிக்குமா..? இப்படி   எதுவும் தெரியாம அவகிட்ட போய் பேசுறது சரிப் பட்டு வராது..” “ என்று நினைத்தவன்…

மீண்டும் ஒரு முறை அவள் உருவத்தை தனது கண்களில் நிரப்பியவன்…. வேகமாய் காரில் ஏறி சென்று விட்டான்.

                                ****************

அங்கு அலுவலகத்தில் யோசனையுடன் அமர்ந்திருந்தார் மாறன்.தேவா இவ்வளவு சீக்கிரம் பொறுப்புகளை கையில் எடுத்துக் கொள்வான் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தன்னால் நடந்த குளறுபடிகளை எங்கே தேவா கண்டுபிடித்து விடுவானோ…? என்று அவருக்குள் ஒரு பதற்றம் நிலவியது.

அப்படியே அவன் கண்டுபிடித்தாலும்….அவனை எப்படி சமாளிப்பது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தார் சண்முகம்.

சண்முகம் சிந்துவின் அப்பா….பத்மாவின் சொந்த அண்ணன்…ஆனால் பத்மாவின் குணத்திற்கு எதிர்மரையானவர்.மாறனுக்கு தேவையான ஐடியாக்களை அள்ளி வழங்குவதில் கெட்டிக்காரார்.

“என்ன மாறன்…? எதுக்காக இப்படி இருக்கீங்க…? உங்க முகமே சரியில்லையே…?” என்றார் சண்முகம்.

“என்னன்னு சொல்ல சண்முகம்…! நடக்குறதை எல்லாம் பார்த்தா எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல…? என்ன பண்றதுன்னு தெரியாம கண்ணா முழி பிதுங்கிப் போய் இருக்கேன்…” என்றார் மாறன்.

சண்முகம்…“ஏன் என்னாச்சு…?” 

மாறன்…” “அதை ஏன் கேக்குற சண்முகம்…!இந்த தேவா பய திடீர்ன்னு ஆபீஸ்க்கு வருவேன்னு கிளம்பி  நிக்குறான்.எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே தெரியலை.

அவன் மட்டும் ஆபீஸ்க்கு வந்தான்…நான் கட்டி வச்ச மொத்த சாம்ராஜ்யமும் அழிஞ்சுடும்….”! என்றார் ஆவேசமாய்.

“கோவப்படாம நிதானமா யோசிங்க மாறன்…!ஏதாவது வழி கிடைக்காமையா போய்டும்.அது மட்டுமில்லாம தேவா ரொம்ப புத்திசாலி.நீங்க எப்படி சமாளிச்சாலும் அவன்கிட்ட பருப்பு வேகாது…”“ என்றார் சண்முகம்.

“நானே குழப்பத்துல இருக்கேன்…இதுல  நீ வேற ஏன் என்னைய மேல மேல குழப்புற….இதை சமாளிக்க ஒரு வழி சொல்லு சண்முகம்…!” என்றார்.

“எனக்குத் தெரிஞ்சு இதுக்கு ஒரே வழி தான் இருக்கு…” என்றார் சண்முகம்.

“என்ன வழி..?” என்றார் மாறன்.

“என் பொண்ணு சிந்துவும்,தேவா மேல உயிரா இருக்க…!தேவாவுக்கும் சிந்துன்னா இஷ்டம் தான்.பேசாம சிந்துவை தேவாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா…பையனும் நம்ம கைக்குள்ள வந்துடுவான்…சொத்தும் வெளிய போகாது.நமக்கும் பிரச்சனையில்லை…””“ என்றார் சண்முகம்.

“அட ஆமா…! எனக்கு இது தோணவே இல்லையே..!” என்றார் மாறன் யோசனையுடன்.

“உனக்கு என்னைக்கு தான் மூளை வேலை செஞ்சிருக்கு…!” என்று சண்முகம் மனதிற்குள் பேச….மாறனின் முகம் யோசனையில் சுருங்கியது.

“இது நல்ல யோசனை சண்முகம்…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ…அவ்வளவு சீக்கிரம் நாம இதைப் பண்ணியாகணும்.நான்  இன்னைக்கே பத்மாகிட்ட இதைப் பத்தி பேசுறேன்…!ஆனா தேவாகிட்ட எப்படி பேசுறது…?” என்று மாறன் தயங்க….

“அட…முதல்ல நம்ம எற்பாட பண்ணுவோம்.பிறகு பத்மாவும்,சிந்துவும் பேசுனா அவன் தலையை ஆட்டிடுவான்.அவனுக்கும் நம்மை விட்டா வேற யாருமில்லை.நமக்கு அவன் கட்டுப்பட்டு தான் ஆகனும்…” “ என்றார் சண்முகம்.

“நீ சொல்றதும் ஒரு விதத்துல சரி தான் சண்முகம்.இதுக்கான முதற் கட்ட நடவடிக்கையை உடனே பண்றேன்…” “ என்று மாறன் அவசர கதியில் கிளம்பினார்.

“எங்க கிளம்பிட்டிங்க…?” என்று சண்முகம் கேட்க…

“எனக்கு தெரிஞ்சு தேவா பர்ஸ்ட் இந்த ஆபீஸ்க்கு வர மாட்டான்.அவன் கிரானைட் கம்பெனிக்கு தான் போவான்னு நினைக்கிறேன்…அதனால் நான் இப்ப அங்க கிளம்பறேன்…”“ என்றபடி வேகமாய் செல்ல….

அவரின் வேகமும்,பதட்டமும் கண்டு மனதிற்குள் நகைத்தார் சண்முகம்.அவரின் நீண்ட கால கனவு சீக்கிரம் நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சி அவரின் மனதில் தாண்டவ மாடியது.

தேவாவை தனது மருமகனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கனவு தான் அது.அனைத்து சொத்திற்கும் தனது மகள் வாரிசாக வேண்டும் என்ற அவரின் கனவு நிறைவேறும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சண்முகம்.

இன்று மாறனிடம் அதற்கான தூண்டிலைப் போட்டு விட்டார்.அந்த தூண்டிலில் சிக்கப் போகும் தேவாவிற்காக காத்திருக்கத் தொடங்கினார்.

மாறன் வேகமாய் கிரானைட் கம்பெனிக்குள் நுழைய….அங்கு எப்போது  போல் அமைதியாக இருந்தது.

வேகமாய் எம்.டி அறையை சென்று பார்க்க அங்கு தேவா இல்லை.அந்த அறைக்குள் நுழைந்தவர் மேனேஜரை அழைத்தார்.

“எஸ் சார்..!” என்ற படி வந்தார் மேனேஜர்.

“இங்க தேவா வந்தானா…?” என்றார்.

“ஆமா சார்…! வந்திருந்தாரு.இப்பதான் கொஞ்சம் முன்னே கிளம்பிப் போனாரு…!” என்றார் மேனேஜர்.

“ஹோ…வந்த உடனே கிளம்பிட்டானா…!பெரிய இவன் மாதிரி பேசிட்டு வந்தான்.கொஞ்ச நேரம் கூட ஆபீஸ்ல இருக்க முடியலை.இவனெல்லாம் என்னத்தைக் கிழிக்கப் போறான்…!”  என்று மனதிற்குள் பேசியபடி மாறன் அமர்ந்திருக்க….

“அக்கவுண்ட்ஸ் பைல்,டீலர்ஸ் பைல்,நாம் எந்த கம்பெனிக்கு எல்லாம் சப்ளே பன்றோம்கிற டீட்டெயில்ஸ் அடங்கிய பைல் எல்லாத்தையும் தேவா சார் வாங்கிட்டு போய்ட்டார் சார்.

“இங்க இருக்குற ஸ்டாப்ஸ் டீட்டெயில் கூட வாங்கிட்டு போய்ட்டாரு சார்..!” என்று மேனேஜர் அனைத்தையும் ஒப்பிக்க….சிலையென அமர்ந்திருந்தார் மாறன்.

“வந்த கொஞ்ச நேரத்துல இவ்வளவு செஞ்சிருக்கானா…?” என்று உள்ளம் வெதும்பியவர்….”,நீங்க போங்க…” என்றபடி தலையில் கைவைத்து அமர்ந்தார்.

வீட்டில் தனது அறையில் அமர்ந்து அனைத்து பைலையும் ஆராய்ந்து பார்த்த தேவாவிற்கு,நடந்த குளறுபடிகள் எதுவும் புதிதாய் தோன்றவில்லை.

இவையனைத்தும் அவன் எதிர்பார்த்தவை தான்.ஆனால் இன்று அவன் கண்ணில் தப்புகள் நேராக படும் போது  அதை ஜீரணிக்க அவனுக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப் பட்டது.

தான் செய்ய வேண்டியது,மாற்ற வேண்டியது பற்றிய முழுமையான சிந்தனையில் ஆழ்ந்தான் தேவா.

கண் மூடி யோசித்த அவனது சிந்தனையில்….தென்றலாய் வீசியது அந்த நினைவு,”சாரி சார்…!” என்ற குரல் மீண்டும் ஒலிக்க….சட்டென்று கண் விழித்தான் தேவா.

“என்ன இது…? நானா இப்படி…?எனக்கு ஏன் மீண்டும் மீண்டும் அந்த பொண்ணோட நினைவு வருது…? என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியலை.

இது எப்படி சாத்தியம்…? இல்லை தேவா…இனி முடியாது.உனக்கு அவ வேணும்.அவளால் மட்டும் தான் உன் வாழ்க்கை முழுமையடையும்.” என்று அவனின் மனசாட்சி அவனுக்கு இலவச அறிவுரை வழங்கியது.

வேறு எதைப் பற்றியும் அவனால் சிந்திக்க முடியவில்லை.காலையில் பார்த்த அவளது உருவம் அவன் கண் முன்னாள் வந்து அவனை இம்சை செய்தது.

“என்ன பண்றது…?” என்று யோசித்தவன்…”அவளை மாதிரியே அவளுக்கு ஒரு கடிதம் எழுதலாம்…நல்ல ஐடியா..!” என்று யோசித்தவன்,ஒரு கடிதம் எழுதத் துவங்கினான்.

“என்ன எழுதுவதென்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.மண்டையைப் போட்டு குழப்பியவன்….ஒரு வழியாக யோசித்து முடித்தான். யோசித்தவனால் அதை வரிகளில் வடிக்க முடியவில்லை.பல ஓவியங்களை அற்புதமாக தீட்டிய அவனது கைகளுக்கு….ஏனோ ஒரு கடிதம் எழுதுவது,ஒரு பெரிய மலையைப் புரட்டுவது போல் இருந்தது.”

இறுதியாக கடிதத்தை எழுதத் துவங்கினான்….

 

எனது ரசிகையான தூரிகாவிற்கு….

 

வணக்கம்.என்னை யாரென்று நான் சொன்னால் தான் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.நீங்கள் வெகு நாட்களாய் பார்க்க துடிக்கும்,ஆட்டோகிராப் வாங்கத் துடிக்கும் ஓவியன் நான்.ஓவியன் என்பது எனது புனைப் பெயர்.இத்தனை நாட்கள் உங்கள் கடித வரிகளுக்கு பதிலளிக்காத நான் இன்று இந்த கடிதத்தை ஏன் எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.இத்தனை நாட்களாய் உங்கள் கடிதங்கள் என்னைக் கவர்ந்தன.உங்கள் கடித வரிகள்…ஏதோ ஒரு வகையில் என்னை அமைதிப் படுத்தியது.  

நீங்கள் நினைப்பதைப் போல் அல்ல நான்..என்னுடைய உலகம் வேறு.

இந்த ஓவியம்,படம் இதெல்லாம் என்னோட புரபஷனல் கிடையாது.எனது பொழுது போக்கிற்காக மட்டுமே வரையப்பட்டவை.அவை உங்களை இந்த அளவிற்கு ஈர்க்கும் என்று நான் அறியவில்லை.எனக்கு இப்படி ஒரு ரசிகை ஆவீர்கள் என்றும் நான் எண்ணவில்லை.

உங்கள் கடித வரிகளைப் படிக்கும் போது எனக்குள் ஒரு அமைதி.எனக்குள் ஒரு தென்றல்…கடிதங்கள் கூட கனவாகிப் போகுமோ என்ற நிராசை எனக்கு.

கடிதங்கள் அடையாள படுத்திய உங்களை…நான் நேரில் பார்த்திருக்கிறேன்.நீங்களும் என்னை பார்த்திருக்கிறீர்கள்.அன்று ஆர்ட் கேலரியில் நீங்கள் தடுக்கி விழுந்தது என் மேல் தான்.

”சாரி சார்…” என்று நீங்கள் சொன்ன வார்த்தை….அன்றிலிருந்து என் காதில் ரீங்காரமிடுகிறது.என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இது காதல் கடிதமா…? இல்லை ஒரு ரசிகைக்கு நான் எழுதும் பதில் கடிதமா…? என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் என் மனதில் உள்ளவற்றை வேறு எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

என்னை நான் கட்டுப் படுத்த நினைத்த தருணங்கள் எனக்கு தோல்வியை மட்டுமே பரிசாக  திருப்பி அளித்தன.இன்று காலையில் நீல வண்ணன சுடிதாரில் உங்களைப் பார்த்த  அந்த நொடி,என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாது.  

எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது.உன்னால் மட்டுமே என் வாழ்வு முழுமை பெரும் என்று நம்புகிறேன்.என் கரத்துடன் கரம் சேர்த்து என்னுடன் வாழ்க்கையில் பயணிக்க எனக்கு மனைவியாய் வர உனக்கு விருப்பமா…?

                                                        காதலுடன்……..

ஓவியன்.

என்று கடிதத்தை முடித்தான் தேவா.மீண்டும் ஒரு முறை அதை வாசித்தான் தேவா. எடுத்த எடுப்பில் இப்படி காதலை சொன்னால் ஏற்றுக் கொள்வாளா…? என்று அவன் யோசிக்க….”அதெல்லாம் ஏற்றுக் கொள்வாள்…” என்று அவன் மனம் அவனுக்கு நம்பிக்கையளித்தது.

 

வீசிடும் புயல் காற்றிலே….

 நான் ஒற்றை சிறகானேன்…!

காதலின் சுடும் தீயிலே…

நான் எரியும் விறகானேன்…!

Advertisement