டாக்சிக்கா இருக்கிறவங்களுக்கு தான் நீ சொல்றது பொருந்தும்என்றான் கணவன் இறுக்கமாக.

நல்லவங்களுக்கு கூட நான் சொல்றது பொருந்துங்கஎன்றாள் மனைவி நிதானமாக.

அத்தை செஞ்சது சரி, தப்புன்னு நான் கமெண்ட் பண்ண மாட்டேன், எனக்கு அந்த வயசில்லை, உரிமையும் இல்லை

ஆனா அவங்க பணம் வைச்சோ, சொத்து வைச்சோ எதையும் பண்ணிடலை. ஆணவமா அவங்க நடந்துக்கலை தானே? பாரம்பரியம்ன்னு யாரோ சொன்னதை ஏத்துக்கிட்டு பண்ணிட்டாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க, அதனால தான் தப்பா முடிவெடுத்து, எதோ பண்ணிட்டாங்க

அந்த நேரத்து தடுமாற்றமா இருக்கலாம். முழு மனசா எதையும் அவங்க பண்ணியிருக்க வாய்ப்பில்லைன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அதனால தானே நீங்க அத்தை மேல அந்தளவு கோவம் காட்டுறதில்லைஎன்று கணவனை சரியாக கணித்து சொன்னாள்.

அப்புறம் மாமா

என்ன உங்க மாமாவும் ரொம்ப நல்லவர், அதனால தான் மகனை விட்டுட்டார்னு சொல்ல  போறியா?” என்று கணவன் வெகு அலட்சியமாக  கேட்டான்.

நீங்க கோவப்பட்டாலும் அது தான் உண்மைஎன்றாள் மனைவி ஆணித்தரமாக.

உன்னை வெளுக்க வைச்சிடாதஎன்று கணவன் நிதானத்தை இழுத்து பிடித்தான்.

அம்மா ஏக்கம் உங்களுக்கு வந்துட கூடாதுன்னு அவர் கேரியரையே விட்டவர் உங்க அப்பா. அவரா அம்மாகிட்ட இருந்து மகனை பிரிக்க போறார்

தாத்தா பாட்டி.. அவங்க வாழ்க்கையே நீங்க தான். தன் ஒருத்தரை யோசிக்காம இவங்களை நினைச்சதால தான் இன்னைக்கு நீங்க அவர் மேல் கோவம் காட்டுறீங்க

முதல்ல என்னை யோசிச்சிருக்கணும்டி அவர்என்று மகன் கர்ஜிக்க,

என் மகன் என்னை புரிஞ்சுப்பான்னு அவர் யோசிச்சிருக்கலாம்என்றாள் மனைவி தெளிவாக.

நானா? நான் அவரை புரிஞ்சுக்கணுமா?” வில்வநாதன் குரல் உயர்த்த,

நிச்சயமா. ஏன்? உங்களை நெஞ்சிலே போட்டு வளர்க்கலை. எங்க இருந்தாலும் அப்பாக்கு நான் இருப்பேன்னு நீங்க நின்னிருக்கலாமே. அதுவும் பாசம் தானே?”

ஒருவேளை மாமா உங்களுக்காகன்னு, பிரியாம இருந்திருந்தா அவங்க உறவு ரொம்பவே மோசமா சிதைஞ்சி போயிருக்கும். இதை விட, அதுதான் உங்களை அதிகமா உடைச்சிருக்கும். யோசிங்கஎன்றாள் நெஞ்சின் வருடலை நிறுத்தாமல்.

யோசிக்க முடியாது? வேறென்ன?” என்றான் அவன் திமிரிலே நின்று.

இந்த வில்லனின் அன்பு வேறு வகை. இப்படி தான் என்று கணிக்க முடியாது

இவனின் கோவத்தில் இருந்து திமிர் வரை எல்லாம் அதிகத்துக்கு அதிகமே! தயாளன் மேல் இவன் கொண்டுள்ள பாசம் போல்

மீனலோக்ஷ்னிக்கு கணவனை எப்படி புரியாமல் இருக்கும். அவன் திமிரை மனைவி ரசித்தவள், மென்மையாக அவன் மார்பில்  சாய்ந்து கொண்டாள்.

தள்ளி போடிஎன்று கணவன் வெடிக்க,

முடியாதுங்க. வேறென்ன?” என்றாள் மனைவி அவனை போலவே.

உன்னைஎன்று அவன் தோள் பற்ற, அவனின் அழகி எட்டி கணவனின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்டி. சண்டை, சண்டை தான்என்று அவன் நெஞ்சு கொதித்து நிற்க,

மயங்காதீங்க. நான் என் புருஷன்கிட்ட மயங்கிக்கிறேன்என்றாள் அவனின் மனைவி.

போடிஎன்று தோட்டத்தை வெறித்தவன் உடல் இறுக்கம் என்னமோ மெல்ல தளர்ந்து கொண்டிருக்க, கண்கள் அவனின் பெற்றவர்கள் மீது.

மீனலோக்ஷ்னி தனக்கே தனக்கான இடத்தில் லயித்திருந்தாள். கணவனுக்கு தன் மனதினை சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். சொல்லிவிட்டாள். அவ்வளவு தான்.

வில்வநாதன் அதை ஏற்க வேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்பார்க்கவில்லை.

இன்னும் சொல்ல போனால் பெற்றவர்களை முற்றும் முழுதும் அறிந்தவன் வில்வநாதன். அவன் யோசிக்காத எதையும் அவள் சொல்லிவிட போவதில்லை!

எனவே தன் நியாயத்தை தைரியமாக பகிர்ந்துவிட்டு, கணவனின் திமிரை ரசித்து, அவளுக்கான இடத்தை ஆக்ரமித்துவிட்டாள் அழகி.

நேரம் சென்றாலும், கணவன் அங்கிருந்து நகர்வதாக இல்லை. முன்பிருந்த இறுக்கம் இல்லை. அதில் நிம்மதி.

“போதும்ங்கஎன்று பெண் அவனை உள்ளிழுக்க, அவன் அப்பாம்மாவின் முகத்தை இன்னமுமே தான் ஆராய்ந்திருந்தான்.

பெற்றவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு எழவில்லை. அவனின் மனைவி தான், “ஏங்க அவங்க நார்மலா தான் இருக்காங்க.  ஏன் அப்படி பார்க்கிறீங்க? உள்ள வாங்கஎன்று கை பிடித்து இழுத்து கொண்டிருக்கிறாள்.

பேரன்ட்ஸ்ன்னாலும் ப்ரைவஸி கொடுக்கணும். டீசண்ட்ஸி இல்லாத வேலை நீங்க பார்க்கிறதுஎன்று மூக்கை சுருக்க,

அதைப்பத்தி நீ பேசுறியாடிஎன்றான் கணவன்.

ஏன்? ஏன் நான் பேசினா என்ன? எவ்வளவு டீசண்ட்டான பொண்ணு தெரியுமா நான்என்று அதிக ரோஷத்துடன் கேட்டாள் பாண்டி நாட்டு மீனலோக்ஷ்னி.

தெரியும், தெரியும், நல்லா தெரியும். என் அம்மா என்னை அடிச்சிட்டாங்கன்னு என் அப்பாகிட்ட வந்த நேரம்கொஞ்சம் கூட டீசன்ஸி இல்லாம, அங்கேயே நின்னு சந்தோஷபட்டவ தானே நீ?” என்று நக்கலாக கேட்டான் கணவன்.

ஆஹ்ன். அது. அதுஎன்று பெண் கண்களை உருட்டி முழித்தாள்.

என்ன மேடம். வார்த்தை வரலையா?” 

ஆமா பார்த்தேன். ஆனா நீங்க அதையும் ஒரு காரணமா வைச்சு தானே என்னை பிடிச்சுக்கிட்டிங்க. கணக்கு சரியா போச்சு போங்கஎன்று கழுத்தை திருப்பினாள் பெண்.

நீயே கழுத்தை திருப்பிக்கிட்டா நான் எதுக்கு இருக்கேன். மொத்தமா முதுகு பக்கமா அதை திருப்பிடுறேன் இருஎன்று மனைவியை கோவமாக நெருங்க,

அச்சோ நான் இல்லைஎன்று அறைக்குள் ஓடினாள் அவனின் அழகி.

சில அடிகளில் மனைவியை அள்ளி கொண்டவன், தன் கால்களுக்கு இடையில் அவளை நிறுத்தி,  “ஆட்டமா காட்டுற என்கிட்ட?” என்று தன்னோடு அவளை நெருக்கினான்.

பனிஷ்மென்ட் தானே இது?” என்று மனைவி கண்டுகொள்ள,

அப்படி தான்என்று இன்னும் அழுத்தம் கொடுத்து அவளை வலிக்க வைத்தான்.

அப்போ நான் என் மனசை உங்ககிட்ட சொல்ல கூடாதா? ஆணாதிக்க வாதியா நீங்க?” என்று கண்களை சுருக்க,

பொண்டாட்டி ஆதிக்கவாதிடி நான்என்றான் அவன் நக்கலாக.

உங்களைஎன்று நெஞ்சிலே ஒன்று வைத்தவள், “அவங்க என் அத்தை, மாமா. எனக்கு தோணுறதை நான் பேசத்தான் செய்வேன்என்றாள்.

பேசு, பேசு. பார்த்துகிறேன். ஆனா மேடம் அது மட்டும் தான் பண்ணீங்களா என்ன?” என்று புருவம் உயர்த்தினான்.

மீனலோக்ஷ்னிக்கு கடுப்பு. “டக்குனு பார்முக்கு வந்துடுறீங்க நீங்க? எதையும் மறக்கிறதில்லைஎன்றாள்.

யாரை கேட்டு நீ கைட் வெளியே பார்த்த?” என்று இடையை கிள்ளி வைத்தான்.

ஸ்ஸ். ஏங்கஎன்று தேய்க்க போக,

நோ. அப்படியே இருஎன்று அவள் இரு கைகளையும் பின்னால் கொண்டு சென்று தன் கைக்குள் சிறை வைத்து கொண்டான்.

அது என்னோட விருப்பம்என்று கெத்தாக சொல்ல,

திரும்ப சொல்லுஎன்று அவன் மார்பிலே மனைவியை வலுவாக முட்ட வைக்க,

ஸ்ஸ்என்று முனகி கொண்டவள் கணவனை முறைத்து, “பனிஷ்மென்ட்ல கூட நீங்க வில்லன் தான்என்றாள்.

இருந்துட்டு போறேன். நீ முதல்ல பதிலை சொல்லுடி

எனக்கு நம்ம காலேஜ்க்குள்ள வர விருப்பம் இல்லைங்கஎன்று பாவமாக சொல்ல.

அடுத்த நடிப்பு இது. உன்னைஎன்று மூக்கை கடித்து விட்டவன், “நீ படிச்ச காலேஜ் தானே அதுஎன்றான்.

அதனால தான் வர ஒருமாதிரி இருக்கு

எந்த மாதிரியும் இருக்க கூடாது

ப்ளீஸ்ங்க. ப்ளீஸ். எனக்காக இதை ஒன்னு மட்டும் ஒத்துக்கோங்க. வேறெதையும் நான் கேட்கவே மாட்டேன்

வேற கேட்க வேற செய்வியா நீ?” என்று கணவன் மிரட்ட, அவனின் அழகியின் கண்கள் விழித்த விதத்தில்புருவங்களை இடுக்கினான்.

நொடியில் ஏதேதோ கணக்கு. மனைவி அவன் யோசிக்கிறான் என்று ஆவலாய் முகம் பார்க்க, “சரிஎன்றான் கணவனும்.

உண்மையாவா? சூப்பர்ங்கஎன்று எம்பி அவன் உதட்டில் முத்தம் வைக்க, நன்றாகவே வாங்கி கொண்டான் கள்ளன்.

சரி நம்ம டீலுக்கு வருவோம்என,

அதானே பார்த்தேன்என்று காண்டாகி போனவள், “சொல்லுங்கஎன்றாள் உர்ரென.

படிக்கிறது உன் இஷ்டம். வேலை என் இஷ்டம். சிம்பிள்மனைவியை கண்டுகொண்ட நம்பிக்கையில்  சொன்னான்.

ஆஹ்ன். முடியாது, முடியாது இது போங்காட்டம்என்று குதித்தாள் மீனலோக்ஷ்னி.

நீ ஆடுனது தாண்டி போங்காட்டம். இது நல்லாட்டம். நீ சொல்லி கொடுத்தது தான்என்று கண்ணடித்தான் நல்லவன்.

“PHD அஞ்சு வருஷமோ, ஆறு வருஷமோ தான். வேலை அப்படி இல்லை. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். இதுக்கு நான் நம்ம காலேஜ்ல PHD பண்ணிட்டு, வேலை என்னிஷ்டம் எடுத்துகிறேன்என்று மாற்ற,

ஒரு பிஸ்னஸ்க்காரன் பொண்டாட்டியாவா நடந்துகிற நீஎன்று கண்டித்த கணவன், “டீல், டீல் தான். மாத்த கூடாது. மாத்தவும் முடியாதுஎன்றான் முடிவாக.

அதெப்படி? அதையும் நான் பார்க்கிறேன்என்று இவள் நெஞ்சு நிமிர்த்த,

பாரு. பாரு. நல்லா பாருஎன்றான் கேலியாக.

ஏங்க. நான் பாவம் இல்லையா? கொஞ்சம் யோசிக்கலாமே?”

நானும் தான் பாவம். இப்படி ஒரு பொண்டாட்டி எனக்கு

ஏன் எனக்கென்ன குறை?” என்று சண்டைக்கு கிளம்ப,

எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்கிறியே?” என்றான் கணவன்.

வீட்ல உங்களுக்கு புல் சப்போர்ட் பண்றேன் நான்என்று உறுதியளித்தாள் மனைவி.

கேடி நீ. ஆல்ரெடி டீல் குளோஸ்ட். வேறென்ன?” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.

வேற ஒன்னுமில்லை. நீங்க தள்ளுங்கஎன்று விலக்க பார்க்க, கை முதல் கொண்டு எல்லாம் அவன் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது.

சில நிமிடங்களில் அவளின் கோவம் எல்லாம் வெட்கமாக, சிணுங்களாக மாறியிருக்க, கணவனின் அழுத்தம் எல்லாம் ஆராதிப்பாகியிருந்தது.

வில்லன் எப்போதும் போல் வில்லன் வேலை பார்க்க, அழகி வில்லனுக்குள் இருந்த ஹீரோவிடம் சரணடைந்து இருந்தாள்.