Then Paandi Meenaal 23 2 8520 “இருடி. என் மாமனாருக்கு எல்லாம் இப்போவே சொல்லிடலாம். எங்க குழந்தை பிறந்தா அவங்க பேர்ல ஒரு ஸ்கூலும் ஆரம்பிக்க போறேன் மாமா. எனக்கு என் பாட்டி செஞ்சது போல” என்று முடித்தான் மருமகன். அவனின் மாமனாரோ அரண்டு போய் அமர்ந்திருந்தார் மனிதர். சில நூறு கோடிகளை கேட்டதற்காக, அடுத்த மூன்று இலக்க கோடிகளுக்கு தாவி விட்டான் அவரின் மாப்பிள்ளை. அறிவழகன் நொந்து போய், தயாளனை தான், “என்னப்பா இது?” என்று பார்த்தார். அவர் ஆறுதலாக சம்மந்தியின் தோள் தட்டியவர், “விடுப்பா, விடுப்பா” என்றார். அரவிந்தனுக்கு மாமா நிலைமை புன்னகையை கொடுக்க, “என் பாஸ் பத்தி தெரியாம உன் அண்ணா எதுக்கு வாய் கொடுக்கணும்?” என்று அம்மாவிடம் கேலி வேறு. “என்னடா தம்பி இப்படி இருக்கார்?” என்றார் அவர் அண்ணனுக்கும் மேல். “எனக்கு தெரிஞ்சு அவன் இந்தளவுலே விட்டதே மருமகளுக்காக தான் இருக்கும் அறிவழகா” என்றார் தயாளனும் அங்கு. “என்னய்யா பிள்ளையை வளர்த்து வைச்சிருக்கீங்க?” என்ற மாமனாரின் கண்கள் இன்னும் இருண்டு கொண்டு தானிருந்தது. வில்வநாதன், “என் பொண்டாட்டி விஷயத்துலே வேற யாரும் கேள்வி கேட்கணுமா?” என்ற பார்வையுடன் எல்லோரையும் பார்த்திருந்தான். “வேணாம் சாமி, வேணாம்” என்று அறிவழகன் அங்கிருந்து நடையை கட்ட, மருமகனுக்கு உதட்டுக்குள் புன்னகை. மனைவிக்கு கோவமோ கோவம். கணவனை முறைத்து பார்க்க, அவனோ அவளை பார்த்து கண்ணடித்து வைத்தான். அன்றிரவு அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர். மேல் மாடி கட்டும் வேலை நடப்பதால் அடுத்த முறை தங்கி கொள்ளலாம் என்று. அறிவழகன் மகளை முதல் முறையாக புகுந்த வீட்டிற்கு அனுப்புவது போல், அவளின் கையை இறுக்கமாக பற்றி கொண்டிருந்தார். மாப்பிள்ளை பயம். என் பொண்ணு எப்படி இவரை சமாளிக்கிறா? எக்கச்சக்க கவலை தந்தைக்கு. “உன் மருமகன் சொன்னது உண்மை தான் சுஜாதா. இவருக்கு தொழிலே கோடி படி மேல” என்று மனைவிக்கும் சொல்ல, மீனலோக்ஷ்னிக்கு தான் கடுப்பு. “ப்பா. அவர் அப்படி எல்லாம் கிடையாது” என்றாள் உறுதியான மறுப்புடன். “நீ நாங்க பயந்துட கூடாதுன்னு சொல்ற பாப்பா. நாங்க தான் நேர்ல பார்த்துட்டோமே” என்றார் தந்தை. “ம்மா” என்று மகள் அம்மாவின் உதவி தேட, “அவர் குணத்துக்கு எல்லாம் பயம் தான் மீனா. நீ கிளம்பு” என்று மகளை அவரிடம் இருந்து பிரித்து தான் வில்வநாதனிடம் ஒப்படைத்தார் மாமியார். வில்வநாதன் மாமனாரை பாசமாக பார்த்து கிளம்ப, அறிவழகனுக்கு அன்றிரவு சிவராத்திரி தான். வில்வநாதன் அறைக்கு தம்பதிகள் திரும்ப, மீனலோக்ஷ்னி கணவனை கண்டு கொள்ளாமல் அங்கும் இங்கும் நடந்தாள். “ஓய் பொண்டாட்டி இப்போ என்ன?” என்று அவளின் கை பிடித்து நிறுத்தினான் கணவன். மீனலோக்ஷ்னி போ என்று முகம் திருப்ப, கன்னம் பிடித்து தன்னுடன் அணை கட்டி கொண்டவன், “அப்பா பாசம் போல” என்றான். “ஆமா தான். தப்பா என்ன?” என்று பொங்கினாள் அறிவழகனின் மகள். “தப்புன்னு யாராலும் சொல்ல முடியாது” என்று அவன் சரண்டர் ஆக, “அவர் பாவம் தெரியுமா? ஏன் அப்படி பண்ணீங்க?” என்று நியாயம் கேட்டாள் மகள். “என்ன பண்ணினேன்? மாமனார் கேட்டதுக்கு எவ்வளவு சமத்தா பதில் சொன்னேன் நான்” என்றான் நல்லவனாய். “இது தான் உங்க சமத்தா?” என்று அவள் கடுப்பாக, “பின்ன இல்லையா?” என்றான் அவன் தோள் குலுக்கி. “அவர் மகளுக்காக அவர் கேட்காம வேற யார் கேட்பா? அப்படியென்ன தப்பா கேட்டுட்டார். சின்ன பொண்ணு, அவளுக்கு ஏன் இவ்வளவு கொடுக்கணும்ன்னு தானே கேட்டார்“ “என்னை விடவா இந்த ஷேர்ஸ் எல்லாம் மதிப்பு உனக்கு?” என்று வில்வநாதன் எப்போதும் போல் வேறு வழியில் வந்தான். “நோ. நீங்க என் வழியில வாங்க” என்று மனைவி உஷாராகிவிட்டாள். “எப்போவோ வந்துட்டேனே” என்று அவளின் இடையை வளைத்து கொண்டான். கணவனின் உல்லாசத்தில் மனைவி காண்டாகி, தோளிலே ஒன்று வைத்தாள். “இதுக்காகவே உன்னை வலுவாக்கணும்டி. வலிக்கவே மாட்டேங்குது” என்றான் கணவன். “என்னை டென்சன் பண்ண கூடாது” என்று மனைவி எச்சரிக்க, “ஏன் கடிச்சு வைச்சிடுவியா?” என்று குறும்பாக கேட்டான். “உங்களோட பேச முடியாது போங்க” என்று திமிர, “சரி பேசாத. நமக்கு வேற வேலை இருக்கு” என்றவன் அவளில் கழுத்தில் முகம் புதைத்தான். மீனலோக்ஷ்னி கணவனின் முடி பற்றி தன் முகம் பார்க்க வைக்க, அவன் அடங்காமல் அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். “ஏங்க?” “சொல்லுங்க“ “நாம சண்டை போட்டுட்டு இருக்கோம்“ “நானுமே அதை தானே பண்றேன். நீ தான் சரியா ஒத்துழைக்க மாட்டேங்கிற“ ஆஹ் என்று கத்த தோன்றியது மனைவிக்கு. வில்லனிடம் கோபம் கொண்டு பயனில்லை. “இங்க பாருங்க. அப்பா பாவம். உங்க வில்லத்தனத்துக்கு அவர் பக்கத்துல கூட நிக்க முடியாது. இனி அவரை டென்சன் பண்ண கூடாது சரியா? ரொம்ப கவலைப்பட ஆரம்பிச்சிடுவார்” என்றாள் நல்ல முறையில். “சரி. அவரும் என் பொண்டாட்டி பத்தி என்கிட்ட எதுவும் கேட்க கூடாது. டீல்” என்று கட்டை விரல் தூக்கினான் கணவன். “ஏங்க அவரோட பொண்ணுங்க நான்” என்றாள் மனைவி நொந்து போனவளாக. “இருக்கட்டும். வில்வநாதனோட பொண்டாட்டியும் நீ தானே” என்றவன், “ஓய் அழகி, நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன். அதை காட்ட விடாம பண்ணிட்டிருக்க நீ” என்றான். “மறுபடியும் சர்ப்ரைஸா. எனக்கு வேணாம்” என்றாள் பதறி. “ஹாஹா. இது வேறடி. உனக்கு பிடிச்சது” என்றவன், மனைவியின் கண்களை மூடி பால்கனி பக்கம் அழைத்து சென்றான். மீனலோக்ஷ்னி கண்களை திறக்க, ஊஞ்சல் அவளின் முன் அசைந்தாடி கொண்டிருந்தது. “சூப்பர்ங்க” என்று மீனலோக்ஷ்னி மகிழ்ந்து, வில்வநாதனின் தோள் பற்றி கொண்டாள். “வாடி என் தங்க கட்டி” என்று வில்வநாதன் அவளை அள்ளி கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தான். கணவனின் கழுத்தில் கைகளை கோர்த்து கொண்டு, அவனின் மடியில் அமர்ந்திருந்தாள் மனைவி. “இங்க நாம எப்படி வேணா இருக்கலாம்” என்றான் முழுதும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்ட பால்கனி காட்டி. “நாம அப்பா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் பண்ணதா?” என்று ஆர்வத்துடன் கேட்க, “ஆமா” என்றவன் மனைவியுடன் மெல்ல அசைந்தாடினான். பாண்டி நாட்டு அழகி சூடியிருந்த மொட்டு மல்லி மலர்ந்து அவனை மயக்க பார்க்க, என் பொண்டாட்டி விட நீ இல்லை என்பதாய் மல்லியை தள்ளிவிட்டு மனைவியின் கழுத்தில் முகம் புதைத்தான் கணவன். “உன் அப்பாக்கு உன் மதிப்பு தெரியலை. ஷேர்ஸ் பத்தி பெருசா பேசிட்டிருக்கார்” என்றான். “இப்போதான் வேற மாதிரி சொன்னீங்க” என்று மனைவி கண்களை சுருக்க, “ஏன் நான் உனக்கு அப்படி இல்லையா என்ன?” என்று மடக்கினான் கணவன். “அதுக்கு மேல நீங்க” என்று மனைவி நொடியும் இல்லாமல் சொல்ல, “அதுடி என் பொண்டாட்டி” என்று கொஞ்சி கொண்டான் அழகியை. “ஆனா நீங்க ஒன்னை யோசிக்கலை” என்ற மனைவி அவனின் கழுத்து செயினை உருட்டினாள். “எல்லாம் யோசிச்சுட்டேன். நைட் வேற மாதிரி. ம்ம்ஹ்ம்” என்று இதழில் முத்தம் வைக்க, “உங்களை” என்று சிணுங்கி அவன் முடியை ஆட்டியவள், “நான் சொன்னது வேற” என்றாள். “வேற கூட எனக்கு ஓகே தான். எப்படின்னு மட்டும் சொல்லு, அசத்திடலாம்” “அச்சோ. நீங்க சும்மா இருங்க” என்று அவனின் உதட்டின் மேல் தன் விரல் வைத்தவள், “இந்த ஷேர்ஸ் எல்லாம் எனக்கு கொடுத்திட்டீங்களே. நாளை பின்ன நான் உங்களுக்கு வேணாம்ன்னு நீங்க நினைச்சா?” என்று கேட்க, வில்வநாதன் உடல் இறுக்கம் காண ஆரம்பித்தது. “நோ. நோங்க” என்று அணைத்து கொண்ட மனைவி, “பதில் மட்டும் தான் சொல்லணும்” என்றாள். “என்ன பதில் சொல்லணும் ஆஹ்ன்” என்று அதட்ட, “உங்களுக்கு இருக்கிற பதிலை தான்” என்றாள் மனைவி அசராமல். “நான் வேணாம் நீங்க நினைச்சா, எனக்கு கொடுத்த ஷேர்ஸ் எல்லாம் வம்பு தானே?” என்று கேட்க, “எனக்கு நானே வேணாம்ன்னு தோணும் போது இதை பார்த்துப்போம்” என்ற கணவன் பதில் சொல்லிவிட்டேன், ஆனால் கேட்ட உன்னை விட மாட்டேன்டி என்பதாய் அவள் மேல் ஊஞ்சலில் வைத்தே பாய்ந்துவிட்டான். “ஏங்க இங்க வைச்சு” என்று மனைவி திணறியதெல்லாம் அவன் காதுகளை சென்றடையவே இல்லை. அவளின் கேள்வி அவனை வேறு மாதிரி தூண்டி விட்டிருக்க, மனைவிக்கு முத்தம் வைத்தே கொன்றான் வில்லன். ஊஞ்சல் எக்குத்தப்பாக ஆட, இவன் அதை விட அதிகமாக அவளில் ஆட்டம் ஆடினான். “ஸ்ஸ் வலிக்குதுங்க” என்று கணவன் முகம் நிமிர்த்த, “வலிக்கட்டும்டி” என்று மீண்டும் பல்லால் அவளை பதம் பார்த்தான். “நானும் கடிச்சிடுவேங்க” என்று மிரட்ட, “கடிடி” என்று சட்டையை கழட்டி தூர வீசி அவள் மேல் விழுந்தான். “ஆஹ்” என்று அவள் அலற, கையில் சிக்கிய முந்தானையை ஒரே இழுப்பில் மனைவியிடம் இருந்து எடுத்தான். ஊஞ்சலின் வேகம் கணவனின் வேகத்தின் முன் ஒன்றுமே இல்லாமல் போனது. “நான் கேட்டது தப்பு தான். ப்ளீஸ்ங்க” என்று அலற, பேச விட்டால் தானே என்று அவன் இதழ்களை கைது செய்துவிட்டான். “வில்வநாதன் ‘வில்லனான‘ எப்படி இருக்கும்ன்னு காட்டுறேன் இரு உனக்கு?” என்று விரல்களை கடித்து வைக்க, “என்கிட்ட நீங்க எப்போவும் வில்லனா தானே இருக்கீங்க” என்றாள் மனைவி. என்ன அதை கொஞ்சி சொல்ல, கணவனுக்கு சொல்லவும் வேண்டுமா? “ஊஞ்சலை இன்னைக்கே உடைச்சி விட போறீங்க நீங்க?” என்று மீனலோக்ஷ்னி தவிக்க, “புது ஊஞ்சல் வாங்கி மாட்டுவேன்டி. ஆனா உன்னை விடுறதா இல்லை” என்று அவளில் முழுதும் மூழ்கி போனான் மீனலோக்ஷ்னியின் வில்லன்!