தென் பாண்டி மீனாள் 20

வில்வநாதனிடம் திரும்ப அதே பார்வையை சந்தித்தாள் மீனலோக்ஷ்னி.

கஜலக்ஷ்மியிடம் பேசிவிட்டு, போனை கணவனின் கையில் கொடுத்த நேரம்.

சுற்றி ஆட்கள் இருக்க, நெருங்கி கேட்க தயக்கம். என்னாச்சு? என்று பார்வையில் கேட்க, அவன் அறிவழகனிடம் ஏதோ பேசினான்.

இரவு உணவு உட்கொள்ளும் நேரமும், பெரிதான பேச்சில்லை. “மாப்பிள்ளை சரியாவே சாப்பிடலைஅவருக்கு இங்க வசதி படலையா?” என்று சுஜாதா மகளிடம் கேட்டார்.

அப்படி இருந்தா தம்பி இங்க இருக்கேன்னு சொல்லியிருக்க மாட்டார் அண்ணி. டையர்டா இருக்காரோ என்னமோ?” என்றார் அத்தை.

மீனலோக்ஷ்னி வாய் திறக்காமல் நழுவி வந்துவிட்டவள் கணவனை தேட, அவன் வெளியே போன் பேசி கொண்டிருந்தான்.

அரவிந்தன் உடன் இருக்க, ஏதோ வேலை சம்மந்தமான பேச்சு. மீனலோக்ஷ்னி அவளின் அறைக்கு வந்தவள் கணவனுக்கு தேவையானதை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

இந்த அரவிந்தனுக்கு அறிவில்லை, மறுவீடு வந்த மாப்பிள்ளைக்கிட்ட வேலை பத்தி பேசிட்டிருக்கான்என்று அவனின் அம்மா திட்ட

கல்யாணம் பண்ணா புத்தி வந்திடும்ன்னு பார்த்தா, இப்போதான் முழு மக்கா மாறி நிக்கிறான்என்றார் அவனின் அப்பா.

அண்ணனோட பாஸ் பேசுறதுக்கு அண்ணனை எதுக்கு திட்டுறீங்க?” என்று வினய் சப்போர்டுக்கு வந்தான்.

இவன் ஒருத்தன் அண்ணா கோண்டு. அவர் பேசினாலும் இவன் ஏதோ ஒன்னு சொல்லி வர வேண்டியது தானே?” என்று அம்மா சின்ன மகனின் தலையில் தட்டினார்.

எவ்வளவு நேரம்? சுகன்யா நீ அவனுக்கு குரல் கொடுஎன,

என்ன சொல்ற நீ? அதெல்லாம் செய்ய கூடாது. அவங்க பேசிட்டு வரட்டும். முக்கியமான விஷயமா இருக்க போகுதுஎன்றார் அறிவழகன்.

மீனலோக்ஷ்னி இந்த பேச்சுக்களில் நொந்து போய் கணவனுக்கு அருகில் சென்று நிற்க, “நான் காலையில இதை பண்ணிடுறேன் பாஸ்என்றான் அரவிந்தன்.

ஏன் இப்போ என்ன?” என்று கொஞ்சம் அதட்டலாகவே கேட்டான் வில்வநாதன்.

லேப்

உன்கிட்ட இல்லையா?”

இல்லை பாஸ் என்கிட்ட இருக்கு

நான் போய் எடுத்துட்டு வரணுமா?” 

இல்லை, இல்லை நானே பாஸ்என்று அரவிந்தன் வீட்டிற்குள் ஓட, வில்வநாதன் போனை பார்த்தபடி, “நீ போய் தூங்கு, எனக்கு லேட் ஆகும்என்றான் மனைவியிடம்.

நான் வெய்ட் பண்றேன்என்று மீனலோக்ஷ்னி சொல்ல,

தூங்க எதுக்கு வெய்ட் பண்ணனும். போஎன்றான் கணவன்.

மீனலோக்ஷ்னி முகம் வாடி போனது. அரவிந்தன் வந்துவிட, இருவரும் வேலையை தொடர்ந்தனர்.

ரூம்ல டேபிள் இருக்குஎன்று மீனலோக்ஷ்னி சொல்ல,

இங்கேயே வசதியா தான் இருக்குஎன்று முடித்தான் கணவன்.

மீனலோக்ஷ்னி கணவனை விட்டு போகாமல், அங்கேயே மொபைல் பார்த்தபடி அமர்ந்து கொண்டாள். சில நிமிடங்கள் சென்று, “நாளைக்கு பார்த்துக்கலாம்என்று முடித்தான் வில்வநாதன்.

அரவிந்தன் விட்டால் போதும் என்று கிளம்பிவிட, தம்பதிகள் அறைக்குள் வந்தனர்.

மேல் மாடி என்றில்லாமல் கீழ் தளமாக இருந்ததில் பெரிதான பேச்சு வைத்துக்கொள்ளவில்லை.

பால்என்று மனைவி கேட்க,

வேண்டாம்என்று படுத்துவிட்டான். கட்டில் பெரிதாக மாற்றியிருந்தார் அறிவழகன். முன்பே மகளுக்கு ஏசி போன்ற வசதிகள் உண்டு.

வில்வநாதன் மிகவும் அமைதியாக இருக்க, மீனலோக்ஷ்னி தான் தவித்து போனாள்.

தூக்கம் வராமல் கணவன் பக்கம் திரும்பி படுத்தவள், “என்னங்கஎன்று அவன் கையை சுரண்டினாள்.

ம்ம்என்றான்.

என்னாச்சு? ஏதும் டென்க்ஷனா?” என்று கேட்க,

ஆமா?” என்று உடனே பதில் வந்தது.

தொழிலில் என்று நினைத்து கொண்டவள், “சரியாகிடும்என்றாள்.

வில்வநாதன் அவளை ஒருமாதிரி பார்த்தவன்,  “குட் நைட்என்று மறுபக்கம் திரும்பிவிட்டான்.

இவளுக்கு தூக்கம் வருவேனா என்றது. ஏன் புதுசா இருக்கார்

அடுத்த நாள் வில்வநாதன் விரைவாக எழுந்துவிட, மனைவிக்கு நல்ல தூக்கம். அறையிலே நடந்தவனின் புருவங்கள் இடுங்கியே இருந்தது.

அவனின் நடமாட்டத்தில் சுஜாதா கதவு தட்டி காபி கொடுத்தவர், மகளை கோவமாக எழுப்ப போக, “அத்தை. அவ தூங்கட்டும்என்றான் மருமகன்.

அவர் சங்கடமாக பார்த்து வெளியே சென்றுவிட, மீனலோக்ஷ்னி காலை உணவுக்கு தான் எழுந்தாள்

நேரம் பார்த்து பதறி போனவள், வேகமாக குளித்து வர, அரவிந்தன் கணவனுடன் இருந்தான்.

என்ன மீனா இது?” என்று மகளை கடிந்து கொண்ட சுஜாதா, அப்போது தான் எல்லோருக்கும் காலை உணவு பரிமாறினார்.

அன்றே அவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதால், அதற்கான வேலைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.

உறவுகள் எல்லாம் வர ஆரம்பிக்க, வில்வநாதனிடம் எப்போதும் ஆட்கள் இருந்தனர். இல்லை என்றால் போன், அரவிந்தன் இப்படி.

மதியம் போல் வில்வநாதனின் குடும்பம் வந்துவிட, இன்னும் அமர்களப்பட்டது.

அறிவழகனுக்கு தான் அதிக பதற்றம். பெரிய குடும்பம் என்பதோடு, சம்மந்தி வேறு. மிகவும் பார்த்து, பார்த்து தான் எல்லாம் செய்தார்.

கஜலக்ஷ்மியே ஒரு கட்டத்தில், “நம்ம வீடு தான் அறிவழகா. நிதானமா இருஎன்று அவரை நிறுத்தும் படி ஆனது

தயாளன் சம்மந்தியின் தோள் தட்டி எதோ பேச, கேட்க என்று இருக்க, மீனலோக்ஷ்னிக்கு நெஞ்சடைத்து கொண்டு வந்தது.

சீருடன் கணவனின் வீடு கிளம்ப வேண்டும். எல்லாம் தயாராக இருந்தது.

விருந்தும் ஆரம்பித்துவிட, புது தம்பதிகளை அமர வைத்து பரிமாறினர்.

பெண்ணுக்கு இறங்குவேனா என்றது. கணவனுக்கு பார்த்து, பொறுமையாக எடுத்து கொள்ள, மறுபக்கம் இருந்த பானுமதிக்கு மருமகளை புரிந்தது.

குடிக்க ஜுஸ் கொண்டு வர செய்தவர், “இதை குடிஎன்று கொடுத்தார்

மருமகள் குடித்து வைக்க, கணவனும் உணவு முடித்து கொண்டான். மனைவியின் கலங்கும் விழிகளை அவனும் கவனித்துவிட்டான்.

ப்ளீஸ் நீங்க சாப்பிடுங்கஎன்று மனைவி அவனிடம் மென் குரலில் சொல்ல,

எனக்கு போதும். நீ ரூமுக்கு போஎன்று அனுப்பிவிட்டான்.

சுஜாதா மகளின் பின் அறைக்கு வர, சில நிமிடங்கள் பாச போராட்டம். ஒற்றை பெண். அவளும் புகுந்த வீடு செல்கிறாள். தந்தையை தேட, அறிவழகன் மகள் பக்கம் திரும்புவேனா என்று இருந்தார்.

தயாளனுக்கு அவரின் உணர்வுகள் வருத்தத்தை கொடுக்க, “இப்போ என்னப்பா. நம்ம வீட்ல தானே மருமக இருக்க போறா. தைரியமா இருஎன்றார் தோள் தட்டி.

மகள் கிளம்பும் நேரம், தானே மகளிடம் வந்தவர் உச்சி முத்தம் வைத்து அவளை காரில் அமர வைத்தார்.

மீனலோக்ஷ்னி வழியெங்கிலும் மூக்கை உறிஞ்சி கொண்டே வர, “ஓய் இப்போ எதுக்கு இவ்வளவு அழுகைஎன்று மனைவியின் கை பிடித்து தட்டி கொடுத்தான் வில்வநாதன்.

உனக்கு அத்தை, மாமா வேணும்ன்னா சொல்லு, பக்கத்து வீட்டுக்கு அவங்களை பேக் பண்ணிடலாம்என்றான்

பக்கத்து வீட்ல தான் நாம இருக்கோமேஎன்று மனைவி கண்ணீருடன் சொல்ல,

உண்மையை சொல்லு நாம அந்த வீட்ல இருக்கோமா என்ன?” என்று கிண்டலாக கேட்டான்.

மனைவி அதிலே உர்ரென பார்க்க, சிரித்தவன்அதுக்கும் பக்கத்து வீட்டை சொன்னேன்என்றான்.

அந்த தெருவுல இருக்கிற அத்தனை வீட்டையும் வாங்கணுமா உங்களுக்கு?” என்று மனைவி கண்ணை துடைக்க,

தேவைப்பட்டா வாங்க வேண்டியது தான்என்றவன் அவளின் முடியை காதோரம் ஒதுக்கிவிட்டான்.

இதற்குள் அவர்கள் மாளிகை வந்துவிட, “இந்த பத்து நிமிஷத்துக்கு இந்த அழுகை அதிகம்என்றான் வில்வநாதன் புன்னகையுடன்.

மீனலோக்ஷ்னிக்கும் புரியாமல் இல்லை. ஆனால் பாசத்துக்கு கட்டுப்பட்ட பெண்ணின் உணர்வு அது.

மறுநாள் மண்டபத்தில் வைத்து பொது விருந்து. இருபக்க உறவுகள், ஊர்க்காரர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் விருந்து.

மதியம் தொடங்கி, பின் மாலை வரையே நடந்தது. வில்வநாதன் வீட்டின் மகனாக எல்லாம் முன்னின்று செய்தான்.

பெரியவர்களை முழு ஓய்வில் இருக்கும் படி பார்த்துக்கொண்டான். கஜலக்ஷ்மிக்கு பேரன் எல்லாம் எடுத்து கட்டி பொறுப்பாக செய்வதில் பெருமை, நிம்மதி.

அடுத்த இரண்டாம் நாள் வரவேற்பு. இது முழுக்க, முழுக்க தொழில் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே!

அரசியல் ஆட்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், தொழில் துறை நண்பர்கள் என்று எல்லாம் கலந்து கொள்ள, கெடுபிடி கொஞ்சம் அதிகம்.

பாதுகாப்பு பணிக்கென்று தனியே ஆட்களை வரவைத்து நேர்த்தியான ஏற்பாட்டையும் செய்திருந்தான் வில்வநாதன்.

உணவிற்கு தனி கவனம் எடுத்து, அதிகளவில் வகைகளை வைத்தான். “இவ்வளு தேவைபடுமா?” என்று மீனலோக்ஷ்னி மலைத்துவிட்டாள்.

நிச்சயம் தேவையில்லை தான். ஆனால் பிஸ்னஸ் பார்ட்டி. இதை தவிர்க்க முடியாதுஎன்றான் வில்வநாதன்.

பார்ட்டின்னா?” என்று அவள் கேள்வியாக பார்க்க,

நேராவே கேளுடி பொண்டாட்டி. நம்ம பார்ட்டில எப்போவுமே ட்ரிங்க்ஸ் கிடையாது. பல தலைமுறையாவே இந்த கட்டுப்பாடு உண்டு. வரவங்களுக்கும் அது தெரியும்என்றான்.

மீனலோக்ஷ்னி முகம் தெளிய, விருந்துக்கென மிகவும் மதிப்புள்ள வைரங்களை பேத்திக்கு பரிசளித்தார் கஜலக்ஷ்மி.

பானுமதி அவளின் ஆடையை அவரின் பொறுப்பில் எடுத்து கொண்டார். முன் மாலையே அவளை அலங்கரிக்க ஆட்கள் வந்துவிட்டனர்.

ரொம்ப எல்லாம் செய்ய வேண்டாம்என்று கஜலக்ஷ்மி சொல்லிவிட, மிதமான அலங்காரத்திலே மருமகள் ஜொலித்தாள்.