தென் பாண்டி மீனாள் 17

முதல் இரவு இவர்களுக்கு மட்டும் முதல் இரவாக தோன்றவில்லை போல.

கட்டில் யுத்தம் செய்ய வேண்டிய நேரத்தில், வார்த்தை யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.

புது மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை கோழியாக சிலிர்த்து கொண்டு நின்றார்கள்.

இருவருக்கும் மற்றவர் இதயத்தில் இடமில்லாமல், தாம்பத்திய வாழ்க்கையை தொடங்க முடியாது என்பதாய் மீனலோக்ஷ்னி முடித்திருக்க, “சோ என்கிட்ட சேலஞ்ச் பண்றியா நீ?” என்று கேட்டான் வில்வநாதன்.

நீங்க என்கிட்ட பண்ணது சேலஞ்சா?” என்று மனைவி அவனிடம் கேட்டு வைக்க,

ஆமா. அப்படி தான்னு சொன்னா?”

நானும் அப்படி தான்என்றாள் மீனலோக்ஷ்னி.

அதை இப்போவே நான் உடைச்சிட்டா?” என்று புருவம் உயர்த்த, மீனலோக்ஷ்னி நொடி சென்றே புரிந்து கொண்டவள், கோவமாக கணவன் நெஞ்சில் கை வைத்து பலமாக அவனை தள்ளினாள்.

என்னை தள்ளிடுவியா நீ?” என்று, மேலும் அவளை நெருங்க, இருவரின் மொத்த உடலும் உரசி நின்றது

மீனலோக்ஷ்னி மூச்சிழுத்துவிட கூட முடியாமல், “தள்ளுங்கஎன்றாள்.

நீயே தள்ளிக்கோ. ஆனா பின்னாடி இல்லை முன்னாடிஎன்று சொல்லி, அழுத்தமாக நின்றான் வில்வநாதன்.

அப்படி என்றால் இருவரும் சேர்ந்து கட்டிலில் தான் ஒருவர் ஒருவர் மேல் விழுவர். அதை புரிந்து, மீனலோக்ஷ்னி அப்படியே நின்று கொண்டாள்.

நைட் முழுசா இப்படியே நிக்க போறோமா என்ன?” 

அது உங்க கையில தான் இருக்கு” 

என் கை இப்போ வேற செய்ய பார்க்குதுஎன்றவன் முதல் முறையாக அவளை தொட வந்தான்.

பெண் சட்டென பின்னால் வளைய, வில்வநாதன் மேலும் சீண்டிவிட்டது போல் உணர்ந்தான்.

வளைந்த மனைவியின் இடையை கை கொடுத்து இழுத்து தன் நெஞ்சில் வலுவாக முட்ட வைத்துவிட்டான்.

ஸ்ஸ்என்று பெண் முனக,

இது நீயே இழுத்துக்கிட்டதுஎன்றான் அவன் சீறலுடன்.

மீனலோக்ஷ்னிக்கு கோவம் அதிகமாக, அவனை அடித்துவிடவே நினைத்தாள். “அடிக்க ட்ரை பண்றியா என்ன?” என்று அவன் குரல் உயர்த்த,

அடிப்பேன். கடிச்சு கூட வைப்பேன். நீங்க என்னை விடாமல் போனாஎன்று எச்சரிக்கையாக சொல்ல.

செய் பார்க்கிறேன்என்றான் அவன் திமிராக.

மனைவிக்கு அவன் திமிரை உடைத்து விடவே பரபரத்தது. பொறுத்து நிற்க, வில்வநாதன் உதடுகள் நக்கலாக சுளித்தது.

முதல் நாளே என்னை நீ இவ்வளவு சீண்டியிருக்க வேண்டாம். இந்த ஒருமுறை எக்ஸ்கியூஸ் உனக்குஎன்று அவள் கைகளை தனக்குள் அடக்க

நீ என்ன எனக்கு எக்ஸ்கியூஸ் கொடுக்கிறது? பெண் பொங்கிவிட்டவள், வில்வநாதனின் கழுத்தில் நன்றாகவே கடித்துவிட்டாள்.

ஹேய்என்று அவன் திகைக்க,

இது நீங்களே இழுத்துக்கிட்டதுஎன்றாள் அவனின் மனைவி.

அவனின் கைகளும், அவளின் கைகளும் ஒன்றுக்குள் ஒன்று சிறையிருக்க, “என்ன பண்ணி வைச்சிருக்க நீ?” என்று வலியில் முகம் சுளித்து கேட்டான் வில்வநாதன்.

அப்போதும் அவளை விலக்கவில்லை அவன். “முதல்ல தள்ளி நில்லுங்கஎன்று அவள் சொல்ல,

முடியாதுஎன்றான் வில்வநாதன்.

திரும்ப கடிச்சா நான் பொறுப்பில்லை பார்த்துக்கோங்கஎன்று மிரட்டவே செய்தாள் அவள்.

உனக்கு மட்டும் தான் பல் இருக்கா? இல்லை எனக்கு மட்டும் தான் கழுத்து இருக்கா?” என்று அவன் அழுத்தமாக கேட்க,

ச்சீ. ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்ன்னு உங்களுக்கு தெரியலையா?”

என் பொண்டாட்டிகிட்ட எப்படி பேசணும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்

நீங்க இப்படி நிக்கிறது எனக்கு பிடிக்கலை

கடிச்சு வைக்க மட்டும் பிடிக்குதா உனக்கு?” என்று அதட்டலாக கேட்டான் வில்வநாதன்.

நீங்க தான் காரணம் அதுக்கு?”

நீ ரொம்ப நல்ல பொண்ணு இல்லை. அநியாயத்துக்கு பயந்தவ வேற

உங்களுக்கு அப்படிப்பட்ட பொண்ணு தான் வேணும்ன்னா, என்னை ஏன் கல்யாணம் பண்ணீங்க?” என்று அவள் கடுப்பாகி போனாள்.

நீயும் அப்படிப்பட்ட பொண்ணு தான். பயத்துல, கோவத்துல வாயடிச்சுட்டு நிக்கிற

இல்லை நீங்க தான் என்னை பேச வைச்சீங்க? தயா மாமா விஷயத்துல நான் சொன்ன உண்மையை உங்களால ஏத்துக்க முடியல. அதனால தான் இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துகிட்டு இருக்கீங்க

எந்த உண்மையை சொல்ற நீ?” அவனிடம் மீண்டும் விறைப்பு.

மீனலோக்ஷ்னி இதை தொடர விரும்பாமல் அமைதியாக நிற்க,

சொல்லுடிஎன்றான் கணவன்.

டி போடுறீங்க நீங்கஎன்றாள் மீனலோக்ஷ்னி குற்ற சாட்டாக.

உனக்கு பிடிக்காதா?”

சுத்தமா பிடிக்காது

அப்போ இனி டி மட்டும் தான் சொல்லி பேசுவேன்என்றான் கணவன் உடனே.

ம்ப்ச். இவரை பத்தி தெரிஞ்சும் வாய் விட்டேன்என்று முணுமுணுக்க,

நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலைஎன்று விடாமல் அதிலே நின்றான் வில்வநாதன்.

ப்ளீஸ்ங்க. நாம இதை இப்போதைக்கு முடிச்சுக்கலாம்என்றாள் மீனலோக்ஷ்னி.

அப்போ திரும்ப இதை பேச போறோமா என்ன?” என்று இருவரின் நெருக்கத்தை காட்டி அவளை மிரட்டவே செய்தான்.

மீனலோக்ஷ்னி அவன் கண்களுக்குள் பார்த்து ஆமா என்பதாக இமை சிமிட்ட, “நீ இன்னொசண்ட்டா இருக்கிற நேரம் மட்டும் தான் உன்னை பிடிக்கும். இப்போ நீ அப்படி இல்லைஎன்றான்.

என்னை நீங்க இப்படியும் அக்சப்ட் பண்ணத்தான் வேணும்என்று தயங்காமல் சொன்னாள் மீனலோக்ஷ்னி.

உன் மாமனார் விஷயத்துல நான் இப்படி இருக்கிறதை நீயும் அக்சப்ட் பண்ணிக்கோஎன்ற வில்வநாதன், அவளை விட்டு விலகி நின்றான்.

பெண்ணுக்கு அப்போது தான் நன்றாகவே மூச்சு விட முடிந்தது. கணவனின் கைக்குள், கட்டி வைத்தது போல், அசைவு இல்லாமல் இருந்தாள்

உள்ளிழுத்து நன்றாக மூச்சிழுத்தபடி அவனை கண்களை சுருக்கி முறைப்பாக பார்த்தாள்

திரும்ப என் கைக்குள்ள வரணுமா என்ன?” என்று புருவம் உயர்த்தினான் அவன்.

இனி நீ எப்போ என்னை கோவப்படுத்தினாலும், உனக்கான பனிஷ்மென்ட் இது தான்என்று எச்சரித்தான் நல்லவன்.

இதுக்கு நீங்க கத்தவே செய்ங்க. நான் பயப்பட மாட்டேன்என்று மனைவி சட்டென சொல்ல,

அப்போ என் கைக்குள்ள இருக்கிறது தான் பயம்ன்னு சொல்ற. ரைட். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தா என்ன பண்ணுவ?” என்று வம்பாக கேட்டான் வில்வநாதன்.

மீனலோக்ஷ்னி அவனுக்கு பதில் சொல்ல கூடாது என்பதற்காகவே, “எனக்கு தூக்கம் வருதுஎன்றாள்.

கண்ணுல தூக்கம் இல்லை, முறைப்பு தான் இருக்கு. படுத்துக்கோங்க மேடம்என்றான் வில்வநாதன்.

நீங்க?” என்று அவனை கேட்க,

நானும் வரேன். ஒண்ணா தூங்கலாம்என்றான் புரிந்தும் குறும்பாக

கடவுளேஎன்ற மீனலோக்ஷ்னி அவள் அமர்ந்திருந்த பக்கமே படுத்துக்கொள்ள,

என்னோட இடம் அதுஎன்றான் வில்வநாதன்.

மீனலோக்ஷ்னி  மறுபேச்சில்லாமல் அப்படியே உருண்டு மறுபக்கம் செல்ல, “ஹோய் என்ன பண்ற நீ?” என்று சிரிப்புடன் கேட்டான் கணவன்.

அவள் வாயே திறக்க கூடாது என்ற உறுதியான முடிவுடன், உருண்டதில் கொஞ்சம் மேலேறிவிட்ட சேலையை சரி செய்து கொண்டிருந்தாள்.

வெய்ட். என்ன இதுஎன்று வில்வநாதன் அவளின் காலின் புறம் வர

அம்மாடியோவ்என்று உள்ளுக்குள் அலறிவிட்ட மீனலோக்ஷ்னி நன்றாக கால்களை சுருக்கி கொண்டாள். முகத்தில் லேசான அச்சம் வேற.

காலை நீட்டுஎன்று வில்வநாதன் சொல்ல,

மாட்டேன். எனக்கு தூக்கம் வருதுஎன்று கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.

பாண்டி நாட்டு அழகிக்கு பனிஷ்மென்ட் திரும்ப வேணும் போலயேஎன்று அவன் கன்னத்தை தேய்க்க

ப்ளீஸ்ங்க. எனக்கு நிஜமாவே தூக்கம் வருதுஎன்றவள் கைகளை முன்னும்பின்னும் விட்டு பிளாங்கெட்டை தேடஅவள் கைகளுக்குள் எதுவும் சிக்குவேனா என்றது.

என் வேஷ்டியை உருவிடாதஎன்று வில்வநாதன் பின்னால் நகர்ந்து நின்று அவளை வாரினான்.

உங்க வேஷ்டி ஒன்னும் எனக்கு வேணாம். போர்த்திக்க எதுவும் இல்லையா?” என்று கேட்க,

நீ முதல்ல காலை நீட்டு, எடுத்து தரேன்என்றான் வில்வநாதன்.

மாட்டேன். நீங்க முதல்ல உங்க இடத்துக்கு போங்கஎன்றாள் மனைவி.

நீயே காலை நீட்டிடு. இல்லை அப்புறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை பார்த்துக்கோஎன்று அழுத்தமாக சொன்னவன், அவள் நீட்டாததில் தானே அவளின் கால்களை பற்றினான்.

என், என்ன பண்றீங்க நீங்க?” என்று மனைவி பதறி காலை கொடுக்க மறுக்க,

ஷ்ஷ். சத்தம் வராம அமைதியா இருக்கணும்என்று உதடு மேல் விரல் வைத்து ஆணையிட்டவன், வலது காலின் சேலையை மேலேற்றிவிட்டான். மீனலோஷினிக்கு அவனை பார்க்கும் தைரியம் இல்லாமல் கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்

மருதாணி வைத்திருந்தாள். முழங்காலுக்கும், பாதத்திற்கும் இடையில் அவன் பெயர் எழுதப்பட்டிருந்தது. 

கண்ணுக்குள்வில்வாஎன்று எழுதபட்டு, சுற்றி இதய வடிவத்தினை அழகாக டிசைன் செய்திருந்தனர். அவள் பெயரை கொண்டு கண்கள் என்பது புரிந்ததுடன், நன்றாக பளிச்சென தெரிந்ததை, நம்ப முடியாமல் மீண்டும் பார்த்தான்.

என்னடி இது?” என்று குரல் அதிர்ந்து சத்தமாக வர,

ப்ரோமிஸ்ங்க நான் இல்லை. அந்த சுகன்யாவும், என் ப்ரெண்ட்ஸும் சேர்ந்து இப்படி பண்ணிட்டாங்கஎன்று பயத்துடன் வேகமாக சொன்னாள்.

என்னை நம்ப சொல்றியா இதைஎன்று அவன் கடுப்பாக கேட்க,

மருதாணி வைக்கும் போது நான் தூங்கிட்டேன். அப்போ இந்த வேலையை பார்த்துட்டாங்க. நானும் பார்த்துட்டு உங்களை மாதிரி ஷாக் ஆகிட்டேன்என்று பாவமாக முகம் வைத்து சொல்ல,

நடிக்க ஆரம்பிக்கிற நீ?” என்று அவளின் காலிலே சுள்ளென ஒன்று போட்டான்.