Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-9

 

திரையில் ஒளிர்ந்த எண்ணினை காண காண கண்கள் இன்னும் சிவக்க தொடங்கியது விஜய்க்கு..வந்த அழைப்பை ஏற்க விரும்பாமல் துண்டித்தவன் இருக்கும் வேலையினை செய்ய எண்ணம் இல்லாமல் அறையின் மூலையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தூங்க முயற்சித்தான்…சிறிது கண்மூடி அமர்ந்தவனின் நிம்மதியையும்,

தூக்கத்தையும் கெடுப்பது போல அவன் அலைபேசி மீண்டும் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு அலறியது….

 

எரிச்சலோடு மீண்டும் அதனை எடுத்து பார்த்தவன் திரும்பும் ஒளிர்ந்த அதே எண்ணை காணவும் கட்டுகடங்காமல் கோவம் மீண்டும் வந்தது..அதனை சிறிது நேரம் வெறித்து பார்த்தவன் அழைப்பை மீண்டும் துண்டித்துவிட்டு கண்களை மூடினான்….

 

அவனை சோதனைக்குள்ளாக்கவும் மீண்டும் அலறியது அவனது தொல்லைபேசி..அதனை எடுத்தவன் “எனக்கு எதுக்கு போன் பண்ணிட்டே இருக்க, எனக்கு உன்கூட பேச கொஞ்சம் கூட விருப்பம் இல்ல மனித தன்மையே இல்லாத உன்கூட பேசி என்னை நானே தாழ்த்திக்க விரும்பல, இன்னும் நீயும் உன் அக்காவும் செய்யறதுக்கும் சொல்றதுக்கும் பாக்கி இருக்கா, செஞ்சது எல்லாம் போதாதா, நீ அங்க இருந்து கொல்ற அப்படின்னா,உன் அக்கா இங்க என் கான் முன்னாடி இருந்து என்னை கொல்றா.”என பொரிந்த விஜயின் வார்த்தையில் அவ்வளவு வெறுப்பு மண்டி கடந்தது…

 

மறுபக்கம் இருந்து “மாமா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க..ப்ளீஸ்…என்னை கொஞ்சம் பேச விடுங்க…” என அப்பக்க குரல் கெஞ்சவும்..”ஹே…என்னை மாமா அப்படின்னு சொல்லாத…

அப்படி சொல்ற தகுதியை நீ எப்பவோ இழந்துட்ட…மாமா அப்படின்னு சொன்ன நான் கொன்னுடுவேன்..ச்சீ…நீ எல்லாம் மனிஷ பிறவியே இல்லை…என் வாழ்கையில நீங்க விளையாடிய எல்லாவகையான விளையாட்டும் போதும்..இனிமேலும் என் வாழ்கையில விளையாடனும்ன்னு நினைச்சீங்க,அது தான் உனக்கும் உன் அக்காவுக்கும் கடைசி நாளா இருக்கும்,கோவக்காரனா மாத்தின என்னை கொலைகாரனா மாத்திடாதா வச்சிடு…”என உறுமியவன் அழைப்பை துண்டித்துவிட்டு,அதனை அணைத்து தூக்கி எறிந்தான்…

 

தான் பேசியதை எதுவும் கேட்காமல் அணைப்பு துண்டித்த விஜயின் கோவத்தின் அளவு நன்கு புரிந்தது ஜீவாவிற்கு….தன்னால் தன் தமக்கையின்  வாழ்க்கை ஊஞ்சலாடுவது அவளுக்கு பெருத்த வேதனையாய் இருந்தது… தெரிந்தோ ,தெரியாமலோ நான் செய்த தவறு என் அக்காவின் வாழ்க்கைக்கு நானே தடையாய் ஆனேனே ..தன்னோட மடத்தனத்தால் மூன்று பேரின் வாழ்க்கை கடலில் தத்தளிக்கும் படகை போல இருப்பது அவளது இதயத்தில் கனமான பாறைகள் குடிபெயர்ந்தது போல வலித்தது…

 

இதில் ஸ்ரீயின் தவறு இல்லை என்பதை விஜயிடம் சொல்லலாம் என்று பார்த்தால் விஜய் நான் பேசும் எதையும் காது கொடுத்து கேட்பது போல் இல்லை ..நான் எப்படி அவருக்கு புரிய வைப்பேன் ..என ஜீவாவின் மனம் குறுகுறுத்தது..

 

தான் செய்த செயல் மட்டும் ஸ்ரீக்கு தெரிந்தது என்றால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னை மன்னிக்கமாட்டாள்..கடவுளே நான் செய்த தவறினை எப்படி சரிசெய்ய போகிறேன்…எனக்கு நீ தான் வழி காட்டணும் என கடவுளிடம் மனமுருகி கண்ணீர் வழிய வேண்டிக்கொண்டு இருந்தவள் அப்படியே கண்ணயர்ந்தாள்…

 

யாரோ தன்னை உலுக்குவது போல இருக்க மிகவும் சிரமப்பட்டு கண்ணை கசக்கிக்கொண்டு கண் விழித்தான் விஜய்…கண் முன் மங்கலான உருவம் தெரியவும் ,மீண்டும் கண்ணை கசக்கிக்கொண்டு யாரென்று நோக்கினான்…

 

பிரதீப் தான் அவன் முன் நின்று கொண்டு இருந்தான்…நீ எங்க இங்கே என்பதுபோல் அவனை விஜய் நோக்கவும்.. ”என்ன விஜய்,இங்கவே தூங்கிட்டீங்களா,ரூம்க்கு போகலையா நீங்க நேத்து,”என்றான் கேள்வியாய்…

 

பிரதீப்பின் கேள்வியில் நினைவிற்கு வந்தவன் அப்போது தான் ,தான் இருக்கும் இடம் உணர்ந்து “சாரி பிரதீப்,டெஸ்டிங் வொர்க் இருந்தது இல்லை,சுபர்ணா வருவாங்களான்னு தெரியலை இல்லை,எதுக்கு அவங்க வர வரைக்கும் வெயிட் பண்ணனும்ன்னு நானே எல்லாத்தையும் நைட் முடிக்கலாம்ன்னு தங்கிட்டேன்,விடிஞ்சதே தெரியல சாரி …”என்று எழுந்து சோம்பல் முறித்தான்…

 

பிரதீப் “எதுக்கு விஜய் இத்தனை சாரி,நான் தான் சாரி கேட்கணும்,உங்களுக்கு ஹெல்ப் பண்ணாம கூட,நேத்து நான் ரூம்க்கு போயிட்டேன்,இருந்து இருந்தா நானும் ஹெல்ப் செஞ்சு இருக்கலாம் இல்லை உங்களுக்கு,சாரி விஜய்..”எனவும்

 

விஜய் “ஹே பிரதீப்,நீங்க இதுல சாரி கேட்க வேண்டியதே இல்லை,எனக்கு நீங்க போன பிறகு தான் தோனுச்சு,அதான் அப்படியே வொர்க் பண்ண உட்கார்ந்துட்டேன்,உங்களை எதுக்கு தேவை இல்லாம அலைய வைக்கணும் அப்படின்னு தான் நான் உங்களை கூப்பிடல…”என்றவன் “சரி பிரதீப்,டெஸ்டிங் கேஸ் எல்லாம் சிஸ்டம்ல இருக்கு கொஞ்சம் சரி பார்த்துடுங்க,நான் ரூம்க்கு போயிட்டு ரெடி ஆகிட்டு வந்துட்றேன்…”என்றான்..

 

பிரதீப் “சரி விஜய்…நீங்க போய் பிரெஷ் ஆகிட்டு வாங்க..அதுக்குள்ளே நான் செக் பண்ணி பாக்குறேன்…”என்ற விஜய்க்கு விடைகொடுத்தவன் விஜய் சொன்ன வேலையினை செய்ய ஆரம்பித்தான்…

 

அதன்பிறகு ஸ்ரீ,வீணா வரவும் அவார்களுக்கு வேலையை ஒதுக்கி செய்ய சொல்லி கொடுத்தவன் விஜய் வரும் வரை செய்து கொண்டு இருந்தான்…

 

தாயாராகி வந்து இருந்த விஜய் “சாரி சாரி பிரதீப்,கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..”என மன்னிப்பு படலத்தோடு இருக்கையில் அமர்ந்தான்…

 

பிரதீப் “பரவாயில்ல விஜய்..டெஸ்ட் கேஸ் எல்லாம் பார்த்தேன்..எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஓகே..நீங்களும் ஒரு டைம் செக் பண்ணிடுங்க…அதே போல ஸ்ரீயும்,வீணாவும் அவங்க வேலையை முடிச்சிட்டாங்க,நீங்க ப்ரசென்ட்டேசன் ரெடி பண்ணா நாளைக்கு வர கிளைன்ட் கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ண ஈசியா இருக்கும்..”என தயங்கி தயங்கி  தன்னோட அபிப்ராயத்தையும் தெரிவித்தான்…

 

விஜய் “என்ன பிரதீப்,இதை சொல்ல இப்படி தயங்குறீங்க,முன்னாடி நான் இப்படி தான் பண்ணலாம்ன்னு பிளான் பண்ணி இருந்தேன்,உங்களோட அபிப்ராயமும் அப்படியே இருக்கு,எனக்கும் இது சரின்னு தோணுது,நீங்க என்ன பண்றீங்க,ப்ராஜெக்ட் இம்பிலிமென்ட்டேசன் எந்த அளவுக்கு கரெக்டா இருக்கு அப்படின்னு ஸ்ரீகூட சேர்ந்து பார்த்துடுங்க,வீணா ப்ரெசென்ட்டேசன் செஞ்சிடட்டும்,நான் டெஸ்டிங் கேஸ் எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்றேன்…”

 

பிரதீப் “விஜய்,நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒண்ணு சொல்றேன்…”என்றான் தயக்கத்தோடு..

 

விஜய் “என்ன பிரதீப் காலையில இருந்து தயங்கி தயங்கி பேசுறீங்க..எதுவா இருந்தாலும் சொல்லுங்க…”என அவனை ஊக்கினான்..

 

பிரதீப் “வீணா ப்ரசென்ட்டேசன் பண்ண வேண்டாமே,அவங்களுக்கு ஒன்னும் தெரியாது,ஸ்ரீனா நல்லா பண்ணுவாங்க..நாம்ப ஸ்ரீகிட்ட கொடுக்கலாமே,வீணா வேணும்ன்னா என்னோட இம்பிலிமென்ட்டேசன்ல (Implementation) இருக்கட்டும் விஜய்..”என்றான் வெளியில்…ஆனால் மனதில்“அந்த ஊமைச்சிக்கு இருக்குற கொழுப்பு யாருக்கும் இருக்காது,இன்னைக்கு நான் படுத்துற பாடுல,இவ இன்னைக்கு காலியாக போறா,இருடி உனக்கு இருக்கு இன்னைக்கு…”என வீணாவினை வறுத்து எடுத்து கொண்டு இருந்தான்…

 

விஜய் “நீங்க சொல்றதும் சரி தான் பிரதீப்,ஆனா ஸ்ரீயும் நல்லா பண்ணுவாங்களான்னு தெரியல,வீணாக்கும் டெஸ்டிங் தெரியாது,இல்லைன்னா அவங்க கிட்ட கொடுத்துட்டு நான் பிரெசென்டேசன் பார்த்து இருப்பேன்,இப்போ என்ன பண்ணலாம்…”என்றான் விஜய் மிகவும் யோசனையாக..அவனுக்கு ஸ்ரீயினை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைக்க பயமாய் இருந்தது…அவள் செய்வாள் என தெரியும் ஆனால் அது எந்த அளவிற்கு வெகுமதியாய் நல்ல பெயரை அவர்களுக்கு வாங்கி கொடுக்கும் என அவனால் எண்ண முடியவில்லை…

 

விஜய் அதிகம் யோசிப்பதை பார்த்து “என்ன விஜய் யோசிக்கிறீங்க..நீங்க டெஸ்ட் கேஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிக்க போறீங்க,அதுக்கு அப்புறம் நீங்க ஸ்ரீகூட சேர்ந்து பிரசென்ட்டேசன் செய்யலாமே…வீணா பொறுமையானவங்க அவங்க பண்ணா கிளைன்ட் முன்னாடி அவங்களும் அதை விளக்க வேண்டியதா இருக்கும்,அவங்க அந்த அளவுக்கு தைரியமா பேசுவாங்களான்னு தெரியல..எனக்கு என்னமோ நீங்க ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு தோணுது…”என விஜயினை குழப்பினான்…

 

விஜய் “ஏன் பிரதீப்,இப்படி பண்ணா என்ன,நீங்களும் நானும் ப்ரசென்ட்டேசன் பண்ணலாம்,அவங்க ப்ராஜெக்ட் இம்ப்லிமென்ட் பண்ணட்டும்…எப்படி “என புது யோசனையை கொடுக்கவும்…

 

“அநியாயத்துக்கு உங்க மூளை இப்படி வேலை செய்ய கூடாது,நானே எப்போ டா இந்த ஊமைச்சி என் கிட்ட மாட்டுவான்னு காத்திட்டு இருந்தா,அதுக்கு லட்டு மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சி இருக்கு,அதையும் இந்த மனுஷன் இப்படி பாலாக்குறாரே..”என மனதிற்குள் அவனை அர்ச்சித்தவன்,வெளியில் “ இல்லை விஜய்..அது சரிப்பட்டு வாராது,அவங்களால இம்ப்ளிமென்ட் கரெக்டா பண்ண முடியாது,நாம்ப ஆளுக்கு ஒரு பேட்ச்ல செய்யலாம்..ஏன் விஜய் உங்களுக்கு ஸ்ரீகூட சேர்ந்து செய்ய ஏதாவது பிரச்சனையா…”என்றான் எதை சொன்னால் விஜய் எதிர்க்கமாட்டான் என்று…

 

விட்டால் ஸ்ரீக்கும் எனக்கும் பிரச்சனைன்னு இவனே போய்  எல்லோர்கிட்டையும சொல்லிடுவான் போல் இருக்கு..சும்மா இருக்குற சங்கை நாம்ப எதுக்கு ஊதி கெடுக்கணும் என எண்ணியவன் “ச்ச ச….அப்படி எல்லாம் எதுவும் இல்லை பிரதீப்,நீங்க சொல்றது போலவே செஞ்சிடலாம்…”என்றான்..பிரதீப் எண்ணம் போலவே

 

அதன்பிறகு இரு குழுக்களாய் பிரிந்து வேலையில் ஈடுபட்டனர்…ஸ்ரீயும் விஜயும் டெஸ்டிங் மற்றும் பிரசென்டேசன் வேலையையும், பிரதீப் மற்றும் வீணா இம்ப்ளிமென்ட்டேசன் வேலையையும் செய்ய ஆரம்பித்தனர்…

 

பிரதீப் வந்து சொல்லும்போது வீணா அதிர்வதைவிட ஸ்ரீ தான் மிகவும் அதிர்ந்து போனாள்…விஜய் தன்னுடன் வேலை செய்வதாய் இருப்பதை கேட்டு…தெரிந்தே பாதாள குழியில் விழமாட்டானே என எண்ணியவளுக்கு தெரியவில்லை,அக்குழி பிரதீபினால் விஜய்க்கு தோண்டப்பட்டது,அவனின் சுயநலத்திற்காக அதில் அவளின் உயிர் தோழி கஷ்டப்படுவது அறியாமல்…

மனதை அக்கேள்வி அரித்தாலும் அதனை ஒதுக்கிவிட்டு விஜயிடம் ஒன்றாய் வேலை செய்யும் நேரத்தினை மனதிற்குள் ரசிக்க தாயராகிக்கொண்டு இருந்தாள்…

 

இங்கு வீணா தனக்கு சுற்றப்பட்டு கொண்டு இருக்கும் வலையை பற்றி அறியாமல் பிரதீப் கொடுத்த வேலையை செய்ய ஆரம்பித்து இருந்தாள்..

 

வீணாவின் அறைக்கு வந்த பிரதீப்,வீணா வேலை செய்வதை பார்த்து “வேலை செஞ்சிட்டு இருக்கியா ஊமைச்சி,ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி நடிச்சா எல்லோரும் நம்பற மாதிரி நான் நம்பிடுவேன்னா,என் கிட்ட உன்னோட நாடகம் எல்லாம் வேலைக்கு ஆகாது,இன்னிக்கு இருக்கு உனக்கு என்கிட்டே இருந்து…”என மனதில் கறுவிக்கொண்டு “என்ன வீணா,வேலை எல்லாம் முடிச்சிடீங்களா ..”என்ற கேள்வியோடு அவள் முன் நின்றான்…

 

தன் பக்க கேட்ட குரலில் பதறியடித்து கொண்டு எழுந்தவள் ,பிரதீபினை கண்டு மிரச்சியோடு “என்ன சார்,என்ன கேட்டீங்க..சாரி சரியா காதுல விழல…இன்னும் ஒரு முறை சொல்லுங்க…”என்றாள்…

 

அவளின் மிரச்சியை கண்ட பிரதீப்பின் கண்களில் பாவம் என்ற இரக்கத்திற்கு பதிலாக ,திமிர் ,என்னமா நடிக்கிறா,என எண்ணி கோவம் தான் வந்தது…”வேலை எல்லாம் முடிச்சிட்டீங்களான்னு கேட்டேன்..இதுக்கு எதுக்கு இப்படி மிரண்டு போய் பார்க்குறீங்க…” என கோவத்தோடு,எரிச்சலும் சேர அதையும் அவளிடம் பாகுபாடின்றி செவ்வனவே காண்பித்தான்…

 

அவனின் கோவத்தில் அதிர்ந்தவள் “இல்லை சார்,வேலை செஞ்சிட்டு இருந்ததுனால,எனக்கு நீங்க கேட்டது காதுல விழல,அதுனால தான்,என்ன சொன்னீங்கன்னு கேட்டேன்…”என்றாள் மீண்டும் அவனுக்கு புரியவைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு…

 

“ஹ்ம்ம்..போதும்…நீங்க முன்னாடி சொன்னதே எனக்கு நல்லாவே கேட்டது,எனக்கு ஒன்னும் காது எல்லாம் செவிடு இல்லை,மத்தவங்களை போல..”என அவளை குத்திகாட்டியவன் “எந்த அளவுக்கு வேலை எல்லாம் முடிச்சு இருக்கீங்க…”என்றான் முகத்தை பார்த்தபடியே…

 

அவளின் முகத்தில் தான் குத்தி பேசியதற்கான வருத்தம் இருக்கும் என எண்ணி அவளின் முகத்தை பார்த்தவனின் கண்ணில் “அவன் திட்டிய போது பார்த்த அதிர்ச்சி மட்டுமே கொஞ்சம் இருந்தது…”அவன் மனம் சப்பென்றானது…

 

ஆனால் அவன் குத்தி பேசியதுகூட தெரியாமல் அவன் கேட்டதற்கான  

விடையை சொல்ல ஆரம்பித்து இருந்தாள் வீணா “இந்த மாடுல் முடிஞ்சாச்சு சார்,டேட்டா பேஸ் மட்டும் இன்னும் சரியா வொர்க் ஆகல..சர்வர் சைடு ப்ராப்ளம்…” என சொல்லிக்கொண்டே போனாள்..

 

தான் நினைத்தது நடக்காமல் போனதின் எரிச்சல் பிரதீப்ரற்கு உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது..அவனால் வீணா சொல்வதை எதையும் சரிவர கவனிக்க முடியவில்லை….”சரி வீணா..நீங்க எல்லாத்தையும் முடிச்சு வைங்க..நான் இன்னும் 10 நிமிஷத்துல வந்துட்றேன்…”என அவளிடம் சொல்லிவிட்டு வெளியேறினான்…

 

விஜய் சொல்ல சொல்ல,கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டு இருந்தாள் ஸ்ரீ…விரல்கள் கீபோர்டில் நர்தனம் ஆட,ஜன்னல் புறம் வந்த காற்றில் பறந்த முடியினை ஒதுக்கிவிட்டு மீண்டும் டைப் செய்வதில் ஸ்ரீ கவனமாக இருக்க,விஜயோ தான் சொல்லவேண்டியதை மறந்து ஸ்ரீயின் மேல் கவனமாக இருந்தான்…

 

அவன் சொல்லியதை டைப் செய்து முடித்து இருந்தவள்,விஜயின் குரலுக்காக திரையில் கவனத்தை பதித்து 2 நிமிடம் அமைதியாய் இருந்தவள்,இன்னும் விஜய் எதுவும் சொல்லாமல் இருக்க அவனை நோக்கி தன் கவனத்தை திருப்பியவள் கண்ணில் “தன்னையே ரசனையாய் நோக்கி கொண்டு இருந்த விஜயின் கண்கள் தான் தெரிந்தன….”

 

அவன் கண்ணில் தன்னை துலைக்க இருந்தவள் காதில் அவளின் உறுதிமொழி நியாபகம் வர “இல்லை..இனிமேலும் நான் அசிங்கப்பட கூடாது,என்னோட காதலுக்கு முன்னாடி கிடைச்ச வெகுமதியே போதும்…”என தன்னை மேலும் நிலைபடுத்திக்கொண்டவள் “விஜய்ய்ய்ய்…”என சத்தமாக அழைத்து அவனை பூவுலகிற்கு கொண்டு வந்தாள்…

 

ஸ்ரீயின் அழைப்பில் தன்னிலை வந்த விஜய்,அவசரமாக ஸ்ரீயினை நோக்கினான்..அவள் முகம் அமைதியாய் இருக்கவும்,மனதிற்குள் தன்னை தானே கொட்டிகொண்டவன் அவளிடம் டைப் செய்யவேண்டியதை சொல்ல ஆரம்பித்தான்…அவனுக்கு வேலையின் காரணமாக இரவில் நடந்தது எதுவும் நினைவிற்கு வரவில்லை..அவனின் இப்போதைய எண்ணம் எல்லாம் ப்ராஜெக்ட் என்பதால் அவனுக்கு எதுவும் சிந்திக்க நேரமில்லை…

 

ஒருவேளை அவனுக்கு நினைவு இருந்து இருந்தால் ஸ்ரீ பார்க்கும் விஜய் இரும்பை விட கடினாமாய் தெரிந்து இருப்பான்..அவளின் நல்ல நேரம் அவளை மீண்டும் துன்புறுத்தா வண்ணம் விஜய் அமைதியாய் இருந்தது..ஆனால் விஜயின் பார்வையில் அவள் மனம் இளகத்தான் செய்தது..எத்தனை நாள் இப்பார்வைக்காக ஏங்கி இருப்பாள்…

 

ஸ்ரீயின் மனமோ அலையை உள்ளடக்கிய ஆழ்கடலை போல அமைதியாய் இருந்தது…ஆனால் ஒரு நாள் அலையும் வெகுசீற்றத்தோடு கடலை விட்டு வெளிவரும்போது கடலால் கூட அவ்வலையை அடக்கமுடியாது என்பதுபோல் ஸ்ரீயின் உள் அடங்கிய கோவ அலை வெகுசீற்றத்தோடு வரும்போது விஜய் அதனை அடக்குவானா,இல்லையா என்பது கேள்விக்குறியே…

 

பிரதீப் சென்றதும்,வேலையை செய்து கொண்டு இருந்தவளின் அலைபேசி அழைக்கவும் எடுத்து பார்த்தவள் கண்ணில் தெரிந்த எண்ணை பார்த்து அவள் முகம் ஒரு புன்னகையை சிந்தியது..அழைப்பது அவளின் ஒரே ஒரு அண்ணன் மாதவன்..அவளின் ஒரே ஒரு உறவு கூட….அதனை எடுத்தவள் “ஹெல்லோ…அண்ணா..எப்படி இருக்கீங்க…”

 

“………..”

 

“எனக்கு என்ன அண்ணா,நான் நல்லா இருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க…”

 

“……….”

 

“ஹ்ம்ம்…சாப்டேன்…நீங்க சாப்டீங்களா…”

 

“……..”

 

“ஹ்ம்ம்…வேலை எல்லாம் நல்லா போகுது அண்ணா…உங்களுக்கு…”

 

“……..”   

 

“அப்படியா…ஐய்ய்….ஜாலி…ஹ்ம்ம்…கண்டிப்பா…”என அவள் அண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தவள் கைகள் தவறி கீபோர்டில் டேலிட் பட்டனில் அழுத்திவிட அவள் செய்த வேலையில் பாதி அழிந்து போனது…

 

வெகுநாள் கழித்து பேசும் அண்ணனிடம் பேசியவள் நடந்த எதையும் கவனிக்கவில்லை..வெகு உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தாள்…

வெகுநேரம் பேசியவள் இணைப்பை துண்டித்துவிட்டு வைக்கவும் பிரதீப் வரவும் சரியாய் இருந்தது….

 

“என்ன வீணா…இப்போ சரியா…வொர்க் ஆகுதா…”எனவும்

 

“ஹா…..சார்….நான் செக் பண்ணி பார்த்துட்டேன்…சரியா வொர்க் ஆகுது…நீங்களும் கொஞ்சம் செக் பண்ணிடுங்க…”என்றாள்…

 

பிரதீப் “ஹ்ம்ம் சரி… ..இந்த பக்கம் வாங்க…..நான் பாக்குறேன்…”என்று அவளின் இருக்கையில் அமர்ந்தவன் அவள் செய்ததை சரிபார்க்க ஆரம்பித்தான்..

 

இரண்டு மூன்று முறை பார்த்தவன் எதுவும் சரியாய் வேலை செய்யாமல் போகவும்,எல்லாவற்றையும் செக் செய்தவனுக்கு எங்கு பிரச்சனை என்பதே புரியவில்லை…அதிகமான எரர்(Error) காட்டவும் கடுப்பாகியவன்…”என்ன வீணா…என்ன பண்ணிவச்சி இருக்கீங்க..டேமிட்….ஒரு வேலையை ஒழுங்கா செய்ய மாடீங்களா…பாதி கோட்(Code) இல்லை,எப்படி எல்லாத்தையும் எழுதமுடியும்…என்ன பண்ணீங்க…ச்ச நீங்க எல்லாம் வொர்க் பண்ண வரீங்களா…இல்லை பாய் ப்ரிண்ட் கூட போன் பேச வரீங்களா…எதுக்கு இப்படி வந்து எங்க உயிரை வாங்கறீங்க…உங்களை நம்பி இதுல போட்டது தப்பா போச்சு…நான் விஜய் கேட்டா என்ன சொல்லுவேன்…”என கத்தி கொண்டு சென்றவன் காதில் விசும்பும் சத்தம் கேட்கவும் ,அவளை நோக்கி திரும்பியவன் “இந்த நாடகத்தை எல்லாம் வேற யார்கிட்டியாவது காட்டுங்க..என் கிட்ட எல்லாம் வேலைக்கு ஆகாது…நீங்க அழுதா மட்டும் எல்லாம் சரியாகிடுமா..

நானா போய் விஜய்கிட்ட சொல்லிட்டு வரேன்….அதுக்குள்ளே

போன டேட்டா எல்லாத்தையும் ரிகவர்  பண்ண முடியும்மான்னு பாருங்க…”என கத்திவிட்டு விர்ரென்று சென்றுவிட்டான்…

 

அங்கு இருந்தவர்கள் எல்லாம் வீணாவினை பாவாமாய் பார்க்கவும்..அவளுக்கு உயிரே போவது போல வலித்தது…எங்கு என்ன தவறு என்று தெரியவில்லை…அவளின் அண்ணணிடம் பேசும்முன் கூட சரியாக வேலை செய்தது ,இப்போது வேலை செய்யாமல் போனதன் காரணம் தெரியாமல் விழிபிதுங்க கண்ணீர் வழிய திரையினை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்…

 

விஷயம் அறிந்து வேகமாய் வந்த விஜய்,வீணாவினை நகரசொல்லிவிட்டு அமர்ந்து என்னவென்று சரி பார்த்தான்…சில நிமிடங்கள் என்னவோ செய்தவன்,அதன்  பிறகு சரி செய்து பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டான்…

 

பிரதீப் “என்ன விஜய்..என்ன ஆச்சு…வொர்க் ஆகலையா…ச்ச எல்லாம் உன்னால தான்,ஒரு வேலையை ஒழுங்கா முடிக்க முடியல…செய்ய முடியலன்னா என்கிட்டே சொல்ல வேண்டியது தானா..இப்போ உன்னால எவ்வளவு பிரச்சனை…”என விஜயிடம் ஆரம்பித்து வீணாவிடம் முடித்தான்..

 

விஜய் “பிரதீப்,அவங்களை திட்டாதீங்க…டேட்டா அழிஞ்சிடுச்சு தான்,ஆனா அதை திரும்ப பெற முடியும்,நீங்களே அதை செய்து இருக்கலாம்…நான் கூட தேவையில்ல..தெரியாம டேலிட் பட்டன் மேல கைபட்டு அழிஞ்சு இருக்கு…பாவம் அவங்களை எதுக்கு திட்றீங்க…”என்றவன் “என்ன வீணா,இதுக்கு போய் அழுதுகிட்டு,இது எல்லாம் ஒன்னும் இல்லை…போய் வேலையை பாருங்க…”என்றவன் அறையைவிட்டு வெளியேறினான்….

 

ஸ்ரீயும் வீணாவின் தோளை அழுத்தி அவளுக்கு தைரியத்தை அளித்துவிட்டு விஜயினை தொடர்ந்து சென்றாள்…

 

பிரதீப் நகத்தினை கடித்து கொண்டு அமைதியாய் இருந்தான்…வீணா அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்…பிரதீப் நடவடிக்கை எல்லாம் முன்பு எதற்கு என்று விளங்கியது கிடையாது…ஆனால் இப்போது பிரதீபின் நடவடிக்கைகள் எல்லாம் வீணாவிற்கு தெள்ளதெளிவாய் விளங்கியது…தன்னை அசிங்கபடுத்த,

அவமானபடுத்த,அழவைக்க இவன் இவ்வளவும் செய்து இருக்கிறான் என புரிந்தது…இந்த தவறினை பிரதீப் சரி செய்ய முடியாதது கிடையாது,ஆனால் அவன் செய்யாமல் போனதன் காரணம் இது தானே…

அழுத்தமாய் அவனை நெருங்கியவள் “நான் உங்களுக்கு என்ன சார் பாவம் பண்ணேன்..ஏன் இப்படி எல்லோர் முன்னாடியும் அசிங்கபடுத்தினீங்க…நான் உங்களுக்கு என்ன கெடுதல் நினைச்சேன் ,உங்க கிட்ட ஈவன் நான் சிரிச்சு பேசினது கூட இல்லை,பொய் சொல்லி உங்களை ஏமாற்றினேனா..நான் எதுவுமே பண்ணலையே..அப்படி இருக்கும்போது,என்மேல உங்களுக்கு என்ன அப்படி ஒரு பழிவாங்க கூடிய உணர்வு…என்ன தான் இருந்தாலும் இந்த எண்ணத்தை மாத்திக்கோங்க,இது உங்களுக்கு நல்லது இல்லை…ஏன்னா நீங்க நல்லவங்க..ஏதோ என்னோட ஒரு செய்கை தெரிஞ்சோ தெரியாமலோ உங்களை இப்படி பண்ண வச்சிடுச்சு..அதுக்கு என்னை தயவுசெஞ்சு மன்னிச்சிக்கோங்க…”என அவனிடம் கைஎடுத்து கும்மிட்டவள் அழுகையுடனே அவ்விடத்தினை விட்டு சென்றாள்…

 

என் கண்ணீர் துளிகள்

சிந்தும் நேரம்

என் புன்னகை பூக்கள்

உதிரும் தருணம்

என் கண் இமைகள்

துடிக்கும் காலம்

இவையெல்லாம்

உனக்கு

பாதகமோ…

என் மேல் இருக்கும்

கோவத்தின்

காரணம் என்னவோ??

 

விலகல் தொடரும்…..

Advertisement