Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-8

 

விஜய் சொன்னதை வைத்து குறிப்பெடுத்து இருந்தவள்,அதனை பொறுத்து எல்லாவற்றையும் டைப் செய்து கொண்டு இருந்தாள்..கைகள் என்னதான் வேண்டியதை டைப் செய்துகொண்டு இருந்தாலும்,மனம் விஜயினை தான் நினைத்து கொண்டு இருந்தது…

 

அவனிடம் இருந்த வேலையின் நேர்த்தி,கண்ணியமாய் பெண்களிடம் நடந்து கொள்ளும் குணம்,எவரையும் இழிவாய் பேசாத செயலும் என அவனை பற்றிய எண்ணியவளின் மனதில் அவனின் குணங்கள் இன்றும் பட்டியலாகின…என்றும் போல் இன்றும் அவனின் பால் அவள் முழுதும் ஈர்க்கப்பட்டாள்..அவன் மன்னிப்பு கேட்கும்போது போது அவள் மனம் பாகாய் உருகத்தான் செய்தது…முன்னால் எடுத்து இருந்த உறுதி எல்லாம் காற்றில் இருந்த கற்பூரமாய் கரைய தொடங்கிய நேரம் அவளின் மனசாட்சி “உனக்கு எவ்வளவுபட்டாலும்,புத்தி வாரது,அசிங்கப்பட்டு அசிங்கப்பட்டு இன்னும் நீ திருந்தல…”என அவளை கோவமாய் முறைக்கவும்…

 

அதனின் முறைப்பை கண்டு பழைய உறுதியினை கடைபிடிக்க வேண்டுமா என்று எரிச்சல் சேர்ந்து அவனிடம் கறாராய் பேசவைத்தது…ஆனால் இவள் காட்டும் அந்த இணக்கம்கூட அவனுக்கு தன் பால் இல்லை என எண்ணும் போது இன்றும் இதயம் வலிக்கத்தான் செய்தது…இதை அனுபவிப்பது என்னோட விதி போல என எதை எதையோ எண்ணிக்கொண்டு இருந்தவள் வேலை அப்படியே தண்ணீரின் மேல் விழுந்த எண்ணெய் போல் முடிக்காமல் மிதந்தது….

 

இப்படியே இருந்தால் மீண்டும் அவனிடம் வாங்கிகட்டி கொள்ள வேண்டும் என்று அவள் மூளை அறிவுறுத்த அமைதியாய் வேலையில் கவனம் செலுத்தினாள்…

 

“என்ன ஸ்ரீ,இன்னும் வேலை முடியலையா??…நான் வேணும்னா உதவி செய்யட்டுமா??..”என உதவிக்கு வந்த வீணாவினை தடுத்தவள் “இல்லை வீணை,நானே முடிச்சுடுவேன்,நீ ஹெல்ப் பண்றது,ஸ்டீல்க்கு தெரிஞ்சது அதுக்கும் நான் அதுக்கிட்ட வாங்கிகட்டிக்கணும்.வேண்டாம் நானே முடிச்சுடறேன்..”

 

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்..முடிக்க..எல்லோரும் போயிட்டு இருக்காங்க..நான் வேணும்ன்னா,உன்னோட துணைக்கு இருக்கட்டுமா??..”.வீணா.

 

“ஹே வீணை குட்டி,நீ எனக்கு துணையா இருக்குறதும் ஒண்ணு தான்,இல்லாம இருக்குறதும் ஒண்ணு தான்..ஒரு புள்ள பூச்சி நீ.நீ எனக்கு துணை இருக்குறியா??..ஹாஹா..காமெடி பண்ணாத வீணைகுட்டி…ஒழுங்கா ஹாஸ்டல் போய் சேர்ற வழியை பாரு…”என்று சிரித்து அவளை கிண்டல் செய்தாள்…

 

வீணா அவளை இடுப்பி கைவைத்து முறைத்து “என்ன பார்த்தா புள்ள பூச்சி மாதிரியா இருக்கு…”என்றவளின் பேச்சு கீச்சு குரலாய் வெளிவந்தது…

 

அவளை ஒரு சுற்று சுற்றி பார்த்த ஸ்ரீ,”உன்னை இப்போ பார்த்தா புள்ள பூச்சி மாதிரி இல்ல,தொடப்ப குச்சி மாதிரி இருக்க…”என்றாள் சிரிப்போடு…வீணா ஒல்லியான உடல் வாகு கொண்டவள்,வீணா எப்போதும் அவளின் உடலினை பற்றி அவள் கவனம் கொண்டது கிடையாது..ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே உண்ணுபவள்…

 

முதலில் வேலையில் சேர்ந்து இருந்த ஸ்ரீ அவளின் விடுதியில் இருந்து உணவு கொண்டு வராமல் கேன்டீன் சென்று தான் உணவருந்துவாள்…இவள் சாப்பிட போகும்போது வேலையில் மூழ்கி இருக்கும் வீணா,ஸ்ரீ உண்டு முடித்து வந்தும் கூட அதே நிலையில் இருப்பாள்…இதே போல் தொடர்ந்து ஒரு வாரம் கவனித்தவள் எதுவும் அவளிடம் கேட்கவில்லை,அப்போது இருவரும் வேறு வேறு ப்ராஜெக்டில் வேலை செய்து கொண்டு இருந்தனர்…

 

அதன் பிறகு ஸ்ரீயும்,வீணாவும் ஒரு ப்ரொஜெக்டில் வேலை செய்ய நேரும் போதும் வீணா மதிய சாப்பாட்டினை தவிர்ப்பது தெரிந்த ஸ்ரீ “என்ன வீணா நீங்க மதியம் சாப்பிட்டு நான் பார்த்தே இல்லை…ஏதாவது விரதாம..என்ன கண்ணனுக்கு ரூட் போடறீங்களா??”என கண்ணடித்துகொண்டு அவளை கிண்டல் செய்தாள்…

 

வீணா “அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஸ்ரீ,சும்மா தான்..”என்றாள் சமாளிப்பாக…அதன் பிறகு வீணாவினை பற்றி தெரிந்து கொண்ட ஸ்ரீ வீணாவினை இழுத்து வைத்து பேசியவள்,அவளது உடல்நலம் குறித்தும் அக்கறை கொண்டு அவளை பார்த்து கொண்டாள்…ஸ்ரீயின் புண்ணியத்தால் வீணா ஒரு நாளைக்கு 2 வேலை உணவாவது உண்ணுகிறாள்…அவளுடன் யாரும் இல்லை என்ற குறையை ஸ்ரீ தான் போக்குகிறாள்…

 

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த ஸ்ரீயினை வீணா தட்டி பூவுலகிற்கு கொண்டு வந்தாள்…”என்ன ஸ்ரீ பதில் சொல்லாம,யோசனையில இருக்க..நான் துணைக்கு இருக்கட்டுமா??..”

 

“இல்ல வீணை,நீ கிளம்பு,உனக்கு பஸ் கிடைக்குறதே கஷ்டம்,இதுல எனக்கு வெயிட் பண்ணி,அதுக்கு அப்புறம் நீ பஸ் புடிச்சு,நடுராத்திரிக்கு ரூம்க்கு போவ,நான் இன்னும் ½ மணி நேரத்துல முடிச்சுடுவேன்.

அப்புறம் ஸ்டீல்கிட்ட ரிப்போர்ட் சம்பிட் பண்ணிட்டு கிளம்பிடுவேன்…நீ கிளம்பு”என்றாள் ஸ்ரீ.

 

“ஆர் யூ சூயர்…”என வீணா மீண்டும் உறுதிபடுத்தி கொள்ள கேட்கவும்..

 

“ஹ்ம்ம்..ஆமா டா..எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல,நீ கிளம்பு..”என ஸ்ரீ சொல்லவும் “சரி ஸ்ரீ,நான் கிளம்புறேன்..பார்த்து போ..”என்று அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள் வீணா..

 

வீணா கிளம்பியதும் வேலையை முடித்தவள் ரிப்போர்டினை விஜயிடம் கொடுக்க விரைந்தாள்…இப்போதே மணி 7.30 ஆகி இருந்தது..இப்போது அவள் கிளம்பினால் தான் அவளால் 9 மணிக்குள் விடுதி சென்று அடைய முடியும்,இல்லையேல் 10 மணி ஆகும் அவள் விடுதி சென்றயடைய,எப்போதும் 6 மணிக்கு கிளம்பிவிடுபவள் இன்று வேலை காரணமாக தாமதம் ஆகிக்கொண்டு இருந்தது..அதனால் அவள் மனம் காரணகர்த்தாவாகிய விஜயினை”நான் சந்தேகம் கேட்கும்போதே சொல்லி இருக்கலாம்,அப்புறம் வா அப்படின்னு சொல்லி,நானும் வேலை செய்யாம போய்,கடைசியில என்கிட்டே கத்துறான்..இவன் சொல்லி இருந்தா நான் செஞ்சு இருப்பேன் இல்லை,உனக்கு இதுக்கு எல்லாம் சேர்த்து வைக்குறேன் இரு…” திட்டிகொண்டு இருந்தது…

 

வாயோ “எப்போ பார்த்தாலும்,நான் தான் இவன் கிட்ட ரிப்போர்ட் சம்பிட் பண்றேன்,ஒரு நாள் இவன் என் கிட்ட வந்து சப்மிட் பண்ணனும்”எனவும் அவளின் மனமோ “ஹே…அவன் உன்னோட ப்ராஜெக்ட் மேனேஜர்,அவன் வந்து உன்கிட்ட ரிப்போர்ட் பண்ணனுமா..இது ரொம்ப ஓவர்..”எனவும்

 

அவளோ “அவன் ரிப்போர்ட் பண்ண வேண்டாம்,அட்லீஸ்ட் என்கிட்டே வந்து ரிப்போர்ட் கேட்டா என்ன,நான் தான் போகனுமா,சரியான திமிர் பிடிச்சவன்”என அவனை திட்டிக்கொண்டே விஜயின் அறைகதவினை திறந்து உள்ளே நுழைந்தாள்..

 

அறைகதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் காதில் அவள் சொன்ன கடைசி வார்த்தை நன்றாகவே விழுந்தது…கடைசி வார்த்தையை அவளை அறியாமலே சத்தமாக வெளிப்பட்டு விட அவனுக்கு கேட்டு இருக்குமோ என பயத்துடனே தலையை உயர்த்தி அவனை நோக்கியவள் கண்ணில் விஜய் அவனை முறைப்பது நன்றாகவே புரிந்தது…

 

அவனை சங்கடமாக நோக்கியவள் “விஜய் நீங்க சொன்ன வேலை எல்லாம் முடிச்சுட்டேன்,நீங்க ஒரு முறை பார்த்துட்டா நல்லா இருக்கும் “என்று அவள் செய்த வேலைகளின் ரிப்போர்டினை அவன் முன் சமர்பித்தவள்,பென் ட்ரைவில் சேமித்து வைத்து இருந்ததையும் அவன் சரி பார்க்க கொடுத்தாள்…முதலில் வீணா மற்றும் பிரதாப் செய்த வேலையை பார்த்து கொண்டு இருந்தவன் அதை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு ஸ்ரீ கொடுத்த டாகுமென்டை பார்க்க ஆரம்பித்தான்…

 

ஸ்ரீ அறையை முழுவதும் நோட்டம் விட ஆரம்பித்தாள்..வேலையை எல்லாம் சரிபார்த்தவன் ஒரு சில மாற்றங்களை சொன்னவன் “இது எல்லாம் சரிபண்ணிட்டு,எனக்கு மெயில் பண்ணிட்டு,நீங்க கிளம்பிடுங்க “என அவளிடம் சொன்னவன் அதன் பிறகு எதுவும் பேசாமல் வேலையில் மூழ்கினான்..அவன் ஏதாவது பேசுவான் என சில நிமிடங்கள் எதிர் பார்த்து நின்றவள் அவன் எதுவும் பேசாமல் இருப்பதை கண்டு வெளியேறி விட்டாள்..

 

அவள் வெளியேறியது விழி உயர்த்தி பார்த்தவனின் கண்களில் இருந்தது ஏக்கமா,கோவமா,வருத்தமா,காதலா என வர்ணிக்க முடியாத அளவில் இருந்தது அவன் பார்வை..

 

அறையில் இருந்து வெளியேறியவள் முதல் வேலையாக எல்லாவற்றையும் முடித்து அவனுக்கு மெயில் அனுப்பிவிட்டு அவனிடம் சொல்லிக்கொண்டு செல்ல அவனை காண சென்றவள் அவனின் அறை கதவினை திறக்கவும் ,அதே சமயம் அவன் திறக்கவும் சரியாய் இருக்க,இவள் அவனின் நெஞ்சில் தன் தலையினை மோதி நின்றாள்…

 

ஒரு சில நிமிடம் இருவருக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை..முதலில் சுயநினைவிற்கு வந்த விஜய் ஸ்ரீயினை நோக்கினான்..அவள் கிட்டத்தட்ட ,இவன் நகர்ந்தால் விழுந்துவிடும் அளவிற்கு நின்றுகொண்டு இருந்தாள்..சில நிமிடம் கழித்து கண்ணை திறந்தவள் மிக அருகினில் விஜயினை காணவும்,நிமிர்ந்து அவனை நோக்கினாள்..அவனும் இவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்…

விஜயின் கண்ணில் ஸ்ரீ எதையோ தேடிக்கொண்டு இருப்பது போல அவனின் கண்ணினை ஊடுருவினாள்..ஸ்ரீ தன்னை உடுருவது புரிந்து எதுவும் தெரியாவண்ணம் மறைத்தவன் அவளினை நேராக நிற்க வைத்தான்..

 

அவன் நிற்க வைக்கவும் நேராக நின்றவள் அவனை நோக்கினாள்..அவன் இவள் முகம் காணாது வேறெங்கு பார்த்துகொண்டு “இன்னும் என்ன பண்றீங்க,இங்க,உங்களை மெயில் பண்ணிட்டு போக சொன்னேனே..”என்றான்..

 

அவனையே பார்த்து கொண்டு இருந்தவள்,தன் முகம் காணாமல் பேசும் விஜயினை சிறிது நேரம் வெறித்து பார்த்தவள் கலங்கிய தன் கண்களை மறைத்துக்கொண்டு ”இப்போ தான்,முடிச்சேன்,மெயில் பண்ணிட்டேன்,உங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு  வந்தேன்…நான் கிளம்புறேன்..”என்றவள் வார்த்தை கடைசியில் நன்றாகவே பிசிறியது…விஜய் அதை உணர்ந்தும் அதை பற்றி தெரிந்து போல் காட்டிக்கொள்ளவில்லை…

 

ஸ்ரீயும் அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டு இருந்தாள்…விஜயும் எதுவும் சொல்லாமல் மீண்டும் அவனின் அறைக்கு சென்றுவிட்டான்…

 

10 மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தவள் எவ்வளவு சோர்ந்து இருந்தாளோ அவ்வளவு உற்சாகமாய் காணபட்டாள்..ஆனால் அவள் மனம் அனலாய் தகித்து கொண்டு தான் இருந்தது…

 

அலைபேசியினை எடுத்து எண்ணினை அழுத்தியவள் ரிங் போகவும் காதில் வைத்து கொண்டு அமைதியாய் இருந்தாள்..அந்த பக்கம் “ஹலோ..”என தூக்க கலக்கமான குரல் கேட்கவும்….”என்ன நந்தி இப்பவே தூங்கிட்டீங்க…மணி என்ன தெரியுமா…10 தான் ஆகுது..இவ்வளவு சோம்பேறியா இருக்கீங்களே..எந்திரிங்க.. எந்திரிங்க..”என்றாள் செல்ல கோவத்தோடு..

 

அந்த பக்கமோ “ஹே நடு ராத்திரில பிசாசு மாதிரி போன் பண்ணி,இப்படி பண்றீயே,உனக்கே நல்லா இருக்கா ஸ்ரீ,ரொம்ப டையார்டா இருக்கு,தூங்குறேன் டா செல்லம் “என கெஞ்சவும்.

 

“அது எல்லாம் முடியாது,இன்னைக்கு காலையில இருந்து ஒரு போன் கூட இல்லை,அதுக்கு இது தான் பனிஷ்மென்ட் எந்திரிங்க முதல்ல…சோம்பேறி நீங்க…அப்பறமா அப்பா கிட்ட போன் பண்ணி சொல்லிடுவேன்…”என மிரட்டவும்..

 

“அய்யோ அப்படி எல்லாம் பண்ணிடாத,உன் மேல தப்பு இருந்தாலும்,எனக்கு தான் திட்டு விழும்,என் பொண்ணுகிட்ட இருந்து சுறுசுறுப்பை கத்துக்கோ,ஒழுக்கத்தை கத்துக்கோ,அப்படி இப்படின்னு எதுவும் பண்ணாமலே,எனக்கு காதுல இருந்து இரத்தத்தை வரவச்சிடுவார் உங்க அப்பா…உனக்கு புண்ணியமா போகும் தாயே,போன் பண்ண காரணத்தை சொல்லு,எனக்கு தூக்கம் சொக்குது…”.என பரிதாபமாய் வந்தது அப்பக்க குரல்…

 

“ஹேய்..என் அப்பா பத்தி என்கிட்டயே சொல்றீயா,இரு அப்பாகிட்ட சொல்லி உன்னை முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன்..வரவர உன் வாய் அதிகமா போய்டுச்சு..”என ஸ்ரீ அவளின் அப்பாவினை பற்றி பேசியதால் கோவமாய் கத்தவும்..

 

“அம்மா தாயே,தெரியாம சொல்லிட்டேன்,இனிமேல் இப்படி சொல்ல மாட்டேன்,ஏன் கிண்டல்கூட பண்ண மாட்டேன்,என்னை விடுமா,எனக்கு தூக்கம் தூக்கமா வருது,நீ சொல்ல வந்ததை சொன்னீனா,நான் அமைதியா கேட்டுட்டு தூங்க போய்டுவேன்…”என கெஞ்சியது அப்பக்க குரல்..

 

“இனிமேல் இப்படி பேசின,அப்பறம் டைரக்டா மலர் அம்மா கிட்ட சொல்லிடுவேன்,அப்புறம் நடக்குற எந்த விஷயத்துக்கும் நான் பொறுப்பு இல்லை..” என்றாள் பெரிய மனிஷியின் தோரணையில்…

 

“ஸ்ரீ நீ முன்னாடி எனக்கு வச்ச ஆப்பே போதும்,இன்னும் வைக்காத,இந்த பிஞ்சு மனசு தாங்காது…இன்னைக்கு என்ன நடந்தது சொல்லு..”என்று சொன்ன அந்த பக்க குரல் மனதில் “பேசும் போது, ங்க போட்டு எப்படி மரியாதையா பேசினா,கடைசியில வா போ ன்னு பேசுறா,நல்ல வேலை வாடா போடா அப்படின்னு கூப்பிடல…விட்டா அதையும் செய்வா…முருகா,இந்த கொசுறு கிட்ட இருந்து எனக்கு சீக்கிரம் விடுதலை கிடைக்கணும்…”என கடவுளிடம் பிராத்தித்து…

 

ஆனால் முருகனோ “பக்தனே..இது ட்ரைலர் இதுக்கே இப்படி ஆடி போய்ட்டா எப்படி,இன்னும் மெயின் பிக்சர்க்கு என்ன செய்வாய்…பொறுத்து இருந்து எந்த திருவிளையாலடலை அனுபவிப்பாயாக…”என்று முகம் கொள்ள சிரிப்போடு அருள் புரிந்தார்…

 

“நந்தி நான் சொல்றது கேட்குதா, ஹல்லோ,ஹல்லோ…”என ஸ்ரீ கத்தவும்..

 

“சாரி ஸ்ரீ,ஏதோ யோசனை,பேச்சை கவனிக்கல…நீ சொல்லு,என்ன ஆச்சு..எதுக்கு இப்படி டென்ஷனா இருக்க…”என அக்கறையாய் வெளிவந்தது அந்த குரல்…

 

“இன்னைக்கு அவன் ரொம்ப பண்ணிட்டான் நந்தி,நான் என்ன பண்ணேன்,வரவர அவனை பார்க்கவே பிடிக்கல,என்கிட்டே முகத்தை திருப்புறான்,நான் கேட்குறதுக்கு எதுக்குமே முகம் கொடுத்து பேசறது இல்லை…இன்னைக்கு எல்லோர் முன்னாடியும் வேலை செய்யலைன்னு திட்டிட்டான் நந்தி அந்த குரங்கு…எப்போ பார்த்தாலும் என்னை முறைபையன் மாதிரி முறைச்சு முறைச்சு பாக்குறான்…ஒரு நாள் கூட என்கிட்டே சிரிச்சு பேசறது இல்லை…”என சிறு பிள்ளை போல் விஜயினை பற்றி புகார் பத்திரம் வாசித்து கொண்டு இருந்தாள்…     

 

இவள் சொல்லவதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அந்த பக்கம் மிகபெரிதாய் வாய்விட்டு சிரிக்கும் சத்தம் கேட்கவும் “என்ன நந்தி நான் சொல்றது எல்லாம் உனக்கு சிரிப்பா இருக்கா…”என அவள் அழுகுரலில் கேட்கவும்…

 

“ஹே ஸ்ரீ,என்னடா இது,இதுக்கு போய் அழுதுட்டு,அவன் கடக்குறான்,சின்ன பையன்,போக போக எல்லாம் சரியாகிடும்,எதையும் நினைச்சு குழம்பாத,அதுவும் இல்லமா வேலை செய்யலைன்னா திட்ட தாண்டா செய்வாங்க,அதுக்கு நீ சீக்கிரம் உன்னோட வேலையை முடிக்கணும்,இதுல நீ அவனை தப்பு சொல்றது சரியில்ல,அதே போல நீ உன்னோட சொந்த விஷயத்தை ஆபீஸ் எடுத்துட்டு போறது சரியில்ல,அங்க உனக்கு அவன் ப்ராஜெக்ட் மேனேஜர்,அவன் சொல்றதை நீ செஞ்சு தான் ஆகணும்..இரண்டையும் சேர்த்து குழம்பிக்காத,இனிமேல் இரண்டையும் சேர்த்து வைச்சு கஷ்டபடாத..எல்லாம் போக போக சரியாகும்…”Every Problem has Some Solution.” நீ தானா அடிக்கடி என்கிட்டே சொல்லுவ,அதே போல எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும்…சரியா…”என ஆதுராமாய் கேட்கவும்..

 

ஸ்ரீ “தேங்க்ஸ் நந்தி,இது தான் என் நந்தி கிட்ட இருக்குற ஒரு அதிசய குணம்,பவர்,எனக்கு இருந்த எல்லா பிரச்சனையும் போன மாதிரி இருக்கு,இப்போ தான் மனபாரம் எல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்கு,எவ்வளவு ரிலாக்ஸா பீல் பண்றேன்,தெரியுமா,அதுக்கு தான் ,உனக்கு இவ்வளவு நேரத்துக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்…சாரி நந்தி…“எனவும் ..

 

அப்பக்கம் “ஹே ஸ்ரீ,எனக்கு உன்னோட சாரி எல்லாம் வேண்டாம்..இரண்டு செட் டிரஸ் எடுத்து குடு போதும்,உன்னோட சாரி எல்லாம் எனக்கு எதுக்கு …”என கிண்டல் செய்யவும்…

 

இவ்வளவு நேரம் இருந்த மனபாரம்,கவலை எல்லாம் குறைந்தது போல வாய்விட்டு சிரித்தவள் “ஹே நந்தி,உனக்கு டிரஸ் தானா வேணும்,நான் அப்பா கிட்ட சொல்லி வாங்கி தர சொல்றேன்,வாங்கிக்கோ..என்னைவிட அப்பா செலக்சன் நல்லா இருக்கும்..என்ன கலர் வேணும் அப்படின்னு மட்டும் சொல்லு…”

 

“ஸ்ரீ எனக்கு தூக்கம் வருதுடா,,,நான் தூங்க போறேன்…நாளைக்கு பேசலாம்….பாய்…”என அவளின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல்

தொடர்பு துண்டிக்கப்பட்டது அப்பக்கம்…

 

“பிராட் அப்பான்னு சொன்னதும்,எதுவும் சொல்லாம லைன் கட் பண்ணிடுச்சு,இது எல்லாம் எப்படி தான் கமிஷ்னரா இருக்குதோ…”என செல்லமாய் அவளின் அத்தை பெத்த ரத்தினம் “நந்தலன் “என எல்லோராலும்,பெற்றோராலும் அழைக்கப்படுபவன், “நந்தி “என செல்லமாய் ஸ்ரீயினால் அழைக்கப்படும் இவன் “Commissioner of Police,Salem.” காவல் ஆணையராக பணியாற்றுபவன்…

 

ஸ்ரீயின் அப்பா திரு.மகேஸ்வரன் விருதுநகர் மாவட்டத்தின் “Inspector of General Police” காவல் பொது ஆய்வாளர் ஆக பணியாற்றி வருகிறார்..

அம்மா தமையந்தி குடும்ப தலைவி…ஸ்ரீயின் தங்கை ஜீவா கல்லூரி 4-ஆம் ஆண்டு படிக்கிறாள்…

 

இரவு உணவினை உண்டு முடித்து அவளின் குடும்பத்திடம் சிறிது நேரம் பேசியவள் களைப்பு மிகுதியில் உறங்கினாள்….ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் உதடுகள் “ஜெய்..”என அவனின் பெயரினை உச்சரித்து கொண்டு இருந்தது…

***********************

வேலை மிகுதியாக இருந்ததால் அறைக்கு செல்லாமல் காவாளியிடம் பணம் குடுத்து உணவு வாங்கி வர சொல்லி இருந்தவன் அவர் கொண்டு வந்து கொடுத்த உணவினை உண்டு முடித்து இருக்கும் வேலையில் மூழ்கினான்…சுபர்ணா வராமல் இருந்தால் என்ன செய்வது என எண்ணி அவள் செய்ய வேண்டிய டெஸ்டிங் வேலையை செய்து கொண்டு இருந்தவன் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்து பார்த்தவன்,திரையில் ஒளிர்ந்த பெயரினை கண்டவன் கண்கள் ரத்தநிறம் கொண்டு சிவந்தன…தாடை இறுகியது…

 

உன் பேரை சொல்லும்போதே

என் நெஞ்சில் புதிதாய்

ஒரு புத்துணர்வு…

உன்னை பார்க்கும் போதே

என் கண்ணில் ஏழு நிற

வானவில்…

உன்னை நினைக்கும்போதே

என் மனதில் ஒரு படபடப்பு…

எனக்கு ஏற்படும்

இந்த மாற்றம் எல்லாம்..

என்னை காணும் போது

உனக்கு

ஒரு துளியாவது ஏற்படுமா??

விடை அறியா

பல கேள்விகளோடு நான்..

உன் விடை அறிய

ஏங்குகிறேன்..

விடை சொல்லாமல்

நீ விலகுவது ஏனோ..??

விலகல் தொடரும்…..

Advertisement