Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-7

 

தன்னால் ஒரு பேதை மனம் வருந்தி கொண்டு இருப்பது தெரியாது பிரபுவிடம் பேசிக்கொண்டு இருந்தான் விஜய்…பிறகு பிரபுவிடம் “சரிடா,வந்து ரொம்ப நேரம் ஆகுது,வேலை எல்லாம் அப்படியே இருக்கு,இன்னும் மூன்று நாளைக்குள் ப்ராஜெக்ட் முடிக்கணும்,நான் போறேன்…”என்று எழுந்தான்…

 

பிரபு “டேய்..என்ன எஸ்கேப் ஆகலாம் அப்படின்னு பார்க்குறையா…

அதெல்லாம் என்கிட்ட நடக்காது…ஏன் நான் வரதுக்கு முன்னாடி அப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் போல உட்கார்ந்து இருந்த…என்னடா ஏதாவது பிரச்சனையா..??..முகமே சரியில்ல..”என்றான் ஆதுரமாக…

 

விஜய் “ச்ச சே…அப்படி எல்லாம் இல்லைடா…வொர்க் டென்ஷன் வேற ஒன்னும் இல்லை.. அங்க இருந்து வந்து ரெஸ்ட் எடுக்ககூட முடியல…ரொம்ப டையார்டா இருக்கு..அதான் அப்படி தெரியும் உனக்கு..”என அவனை சமாதானம் படுத்தியவன் அவனிடம் இருந்து விடை பெற்று சென்றான்…

 

போகும் அவனையே பிரபு பார்த்து கொண்டு இருந்தான்…ஏதோ ஒன்று விஜயிடம் வித்தியாசமாய் இருப்பதை உணர்ந்து தான் அப்படி கேட்டான்..ஆனால் விஜய் ஏதும் சொல்லாமல் மழுப்பும் போதே அவனுக்கு உறுதியானது…நேரம் வரும் போது அவனே சொல்லுவான் என எண்ணி அவனும் அவனின் வேலையை பார்க்க சென்றான்…

 

கேபின்க்கு வந்தவன் இருக்கும் வேலையில் மூழ்கினான்…இருக்கும் வேலைகளை எல்லாம் ஓர் அளவிற்கு அவன் முடித்துவிட்டு நிமிரும் போது மணி மாலை 5.30…அப்போது தான் பசி என்ற உணர்வே அவனுக்கு வந்தது…ஏதாவது சாப்பிடலாம் என எண்ணியவன் முதலில் அவனின் குழுவில் உள்ளவர்கள் எந்த அளவிற்கு வேலையை முடித்து இருக்கிறார்கள் என கேட்போம் என எண்ணி பிரதாபினை அழைத்தான்…

 

பிரதாப் அனுமதி பெற்று உள்ளே வரவும் “வாங்க,பிரதாப்,எந்த அளவுக்கு வேலை எல்லாம் முடிச்சு இருக்கீங்க…”என்றான்.

 

பிரதாப் “முக்காவாசி முடிஞ்சது விஜய்,…வீணாவும்,ஸ்ரீயும் எந்த அளவுக்கு முடுச்சு இருக்காங்க அப்படின்னு தெரியல…”

 

விஜய் ”அப்படியா,சரி…அவங்க இரண்டு பேரையும் வரச்சொல்லுங்க..

அவங்க எந்த அளவுக்கு முடிச்சு இருக்காங்க அப்படின்னு பார்த்துட்டு,மீதி இருக்குற வேலையை எல்லாம் சீக்கிரம் முடிக்க ட்ரை பண்ணலாம்…இன்னும் 3 நாளைக்குள் நாம்ப முடிச்சாகணும்..

அவங்களை வரச்சொல்லுங்க எவ்வளவு முடிச்சு இருக்காங்கன்னு கேட்போம்…”.

 

“சரி விஜய்…நான் வரச்சொல்றேன்…” என்ற பிரதாப் அவர்கள் இருவரையும் அழைத்து வந்தான்..வந்தவர்கள் இருவரும் விஜய்க்கு வணக்கத்தினை தெரிவித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்…

 

விஜய் “வீணா,ஸ்ரீ,பிரதீப் உங்க மூணு பேருக்கும் தெரியும்,நாம்ப இப்போ வொர்க் பண்ற ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியமானது,குறுகிய காலகட்டத்துக்குள்ள முடிக்கவேண்டிய ப்ராஜெக்ட்,இப்போ இருக்குற நாம நாலு பேரும் தான் இதை முடிச்சாகணும்,டெஸ்டிங் வொர்க் எல்லாமே சுபர்ணா பார்த்துபாங்க…”என்றவன்..சிறிது யோசனைக்கு பிறகு பிரதீபிடம் “சுபர்ணா எத்தனை நாள் லீவ் கேட்டு இருக்காங்க,என்னைக்கு வருவாங்க..”

 

பிரதீப் “2 நாள் கேட்டு இருந்தாங்க விஜய்..இன்னும் எக்ஸ்ட்ரா 2 நாள் கேட்டு மெயில் பண்ணி இருக்காங்க…”என்றான்.

 

விஜய் “அப்படியா…அவங்களுக்கு உடம்புக்கு பரவாயில்லைனா…ஒரு 2 நாள் வந்து வொர்க் எல்லாம் முடிச்சுட்டு போக சொல்லுங்க..அதுக்கு அப்புறம் அவங்க லீவ் எடுக்கட்டும்…முடியுமான்னு கேட்டு சொல்லுங்க.

அதுக்கு தகுந்த மாதிரி தான் பிளான் பண்ண முடியும்…”என்றவன் பிரதாப் சரி என்று சொல்லவும்…

 

வீணாவிடம் திரும்பி “வீணா நீங்க எந்த அளவுக்கு மாடூல்(Module) முடிச்சு இருக்கீங்க..”என்றான்..

 

வீணா “ஹ்ம்ம்.. சார்..ஓர் அளவுக்கு முடிஞ்சது சார்..இன்னும் 2 ஸ்டேஜ் மட்டும் இருக்கு சார் முடிக்க…”என்று வார்த்தைக்கு வார்த்தை சார் என்று அழைத்து அவள் முடித்த அளவினை சொன்னாள்…

 

விஜய் “வீணா…உங்க கிட்ட எத்தனையோ முறை சொல்லிட்டேன்..சார் சார்ன்னு சொல்லாதீங்கன்னு…ஜஸ்ட் விஜய் அப்படின்னு கூப்பிடுங்க…இப்போ இருக்குற கார்பரேட் கம்பெனியில பேர் சொல்லி தான் கூப்பிடணும்..அது தான் ப்ரோபெஸ்னல் வே…கொஞ்சம் இந்த பழக்கத்தை எல்லாம் மாத்திக்கோங்க….இனிமேல் நீங்க என்னை சார் அப்படின்னு கூப்பிட கூடாது…விஜய் அப்படின்னு தான் கூப்பிடணும்..இது வீணாவிற்கு மட்டும் அல்ல…எல்லோருக்கும் இது தான்…என்ன சரியா…”எனவும்.

 

வீணா “ஹ்ம்ம் சரி சார்…”என சொல்ல வந்தவள் விஜயின் முறைப்பினை கண்டு “ஹ்ம்ம் சரி விஜய்…”.என்றாள்….

 

ஸ்ரீக்கு விஜய் அவளை தான் குறிப்பிடுகிறான் என நன்றாக புரிந்தது..ஆனால் அதை அவள் வெளிகாட்டிகொள்ளவில்லை…

 

பிறகு ஸ்ரீயிடம் திரும்பியவன் “நீங்க எந்த அவளுக்கு முடிச்சி இருக்கீங்க..”என்றான்.

 

அவனை பார்த்தவள் “அது வந்து விஜய்..50% முடிச்சாச்சு…இன்னும் பாதி இருக்கு…ஒரு 2-3 மணி நேரம் டைம் கொடுத்தா முடிச்சுடுவேன்..”

என்றாள் தயக்கமாக தலையை குனிந்தாள்..

 

அவளின் பதிலில் அதிர்ச்சி அடைந்த விஜய் “என்ன ஸ்ரீ,என்ன சொல்றீங்க…இன்னும் பாதி இருக்கா…என்ன விளையாடுறீங்களா..இந்த மாடூல் மட்டும் இல்லை நம்ப கிட்ட,இன்னும் மூணு மாடூல் இருக்கு முடிக்க..இப்படி நீங்க பொறுப்பே இல்லாம இருந்தா எப்படி,அதுவும் இல்லாம நம்ப கிட்ட 3 நாள் தான் இருக்கு,அதுல 2 நாள்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டு,கடைசி நாள் டெஸ்டிங்,

இம்ப்லிமென்டேசன் பண்ணனும்…இதுல நீங்க எக்ஸ்ட்ரா 2 மணி நேரம் கேக்குறீங்க…முதல்ல அதை போய் முடிக்கிற வழியை பாருங்க…எவ்வளவு நேரம் ஆனாலும் முடிச்சிட்டு என்கிட்டே ரிப்போர்ட் சம்பிட் பண்ணிட்டு தான் போறீங்க…”என அவளுக்கு கட்டளையை பிறபித்தான்…

 

அவனை ஒரு பார்வை பார்த்தவள் மறுவார்தை பேசாது வெளியேறினாள்.

 

வீணா மற்றும் பிரதாபிடம் அடுத்த கட்ட வேலைகளை செய்ய விளக்க ஆரம்பித்து, அவர்களோட ஐடியாக்களையும் கேட்டு அறிந்து கொண்டான்…பிறகு இருவருக்கும் விடை கொடுக்கும் முன்னர் பிரதாபிடம் “பிரதாப் ,சுபர்ணா எப்போ வாரங்கன்னு கேட்டு சொல்லுங்க,இல்லைன்னா,நானே டெஸ்டிங் எல்லாம் பண்ணிடறேன்…”என்றான்…

 

பிரதாப்பும் “சரி விஜய்..நான் கேட்டு சொல்றேன்…”என்றான்.சரி என்ற விஜய்..”வீணா உங்களுக்கு வேற ஏதாவது சந்தேகம் இருந்தா,பிரதாப் கிட்ட கேட்டுக்கோங்க,அவர் சொல்றதையும் கொஞ்சம் பாலோ பண்ணிக்கோங்க…”என்றான்.

 

வீணா “சரி விஜய்..”என்று அவனிடம்  விடைப்பெற்று அவள் இடத்திற்கு சென்றாள்..

 

விஜயின் அறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீயின் முகத்தில் உள்ளே போகும் போது இருந்த சிரிப்பு,மலர்ச்சி வெளியில் வரும் போது  தொலைந்துபோய் இருந்தது…வாடிய மலராய் அவள் முகம் கூம்பி இருந்தது…விஜய் திட்டியது கூட அவளுக்கு வலிக்கவில்லை.விஜயிடம் சந்தேகம் கேட்க போகும்போது அவன் சிரித்து பேசிக்கொண்டு,

குத்தாட்டம் போட்டுக்கொண்டு  இருந்தது பார்த்ததும் மனதில் கோவம் கொண்டு,அந்நிமிடம் அவனிடம் திரும்பும் தன் காதலை வெளிபடுத்தியது,அதற்கு அவனிடம் இருந்து எந்த ஒரு எதிரொலியும் இல்லாமல் போனதே அவளின் மனதிற்கு  மிகுந்த வேதனையாய் இருந்தது…

எத்தனை நாள் இப்படி அவன் பின்னால் சுத்தி நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அலைவது என எண்ணும் போதே அவளின் மனம் சாட்டையால் அடிபட்டதை போல் துடிதுடித்து போனது… இருந்தும் வேலையையும்,சொந்த விஷயமும் ஒரே கோட்டில் தான் எடுத்து செல்வது அவளுக்கு பெரும் வேதனையாய் இருந்தது..இனிமேல் சொந்த விஷயம் எதுவும் இங்கு கொண்டுவரக்கூடாது என மனதில் உறுதி கொண்டாள்..

 

மேலும் எதையும் எண்ணி வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச எண்ணாமல்,இருக்கும் வேலையில் மூழ்கினாள்…

 

அவளுக்கு தெரிந்த வரையில் எல்லாவற்றையும் சரியாய் முடித்தவள்,அவளுக்கு இருந்த சந்தேகத்தினை தீர்க்க இம்முறை பிரதாபினை நாடிச் சென்றாள்…

 

ஸ்ரீ “பிரதாப்..எனக்கு இந்த ப்ராசெஸ் எப்படி முடிக்கிறதுன்னு தெரியல..கொஞ்சம் சொன்னா,நான் என்னோட வேலையை முடிச்சிட்டு,விஜய்கிட்ட சம்பிட் பண்ணிடுவேன்..கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா..??”.

 

பிரதாப் “ஹே….ஸ்ரீ..என்ன இது பெர்மிச்சியன் எல்லாம் கேட்டுட்டு,சொல்லுன்னா,சொல்ல போறேன்…எங்க குடு பார்க்கலாம்..”என அவளிடம் இருந்த பைலை வாங்கி பார்த்தவன் “சாரி ஸ்ரீ,எனக்கு இந்த ப்ராசெஸ் தெரியாது..இது வரைக்கும் நான் ஹேன்ட்ல்(Handle) பண்ணியது இல்லை..இப்போவும் இதனோட செயின் ப்ராசெஸ் விஜய்கிட்ட தான் இருக்கு..சாரி…நீ அவர்கிட்ட கேட்டு பாரு…”என அவளுக்கு உதவ முடியவில்லை என அவன் மன்னிப்பு கோரவும்…”பரவாயில்ல பிரதாப்..இதுக்கு எதுக்கு சாரி எல்லாம்….நான் கேட்டுக்குறேன்…”என்று வெளியில் சொல்லியவள் “முன்னாடி போகும் போது ,ஒத்த சொல்லால பாட்டுக்கு ஆட்டம் போட்டுட்டு இருந்தான்,இப்போ என்ன பாட்டோ…”என மனதில் எண்ணி கொண்டாள்…

 

ஸ்ரீயின் அமைதி பிரதாபினை பாதித்ததோ என்னவோ “என்ன ஸ்ரீ, விஜய் சொன்னதுக்கு அப்செட்ல இருக்கியா..அவர் சொன்னதை மனசுல வச்சுக்காத..பாவம் மனுஷன் வெளிநாட்டுல இருந்து வந்து ரெஸ்ட் கூட எடுக்காம வேலை பார்க்குறார்..சீக்கிரம் நல்லபடியா முடிக்கணும் அப்படின்ற டென்ஷன்ல பேசி இருப்பார்..மனசுல வச்சிக்காத…”என விஜய்க்கு பரிந்து வந்தான்…

 

பிரதாப்பின் பேச்சை கேட்டவள் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை தோஸ்த்..இது வேற டென்ஷன்…”என்றவள் “உங்க லீடர்க்கு ரொம்ப பரிஞ்சிட்டுவறீங்க..என்ன விஷயம்..அடுத்த மாசம் சம்பளம் ஏத்த ஏதாவது மேனேஜ்மென்ட்கிட்ட பேசுவார் அப்படின்னு இப்படி ஜால்றா அடிக்கிறீயா…நெவர்…உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ணாத..”என்றவள் அடுத்து வந்து நின்ற இடம் விஜயிடம் என்று நீங்கள் எண்ணினால் அது முழு தவறு ..அது அவளின் அருமை தோழி வீணையிடம்…

 

வேலை செய்து கொண்டு இருந்த வீணாவின் மண்டையில்,கையில் உள்ள பைல் மூலம் இரண்டு அடி கொடுத்தவள்,அவள் அருகில் உள்ள மேசையில் அமர்ந்தாள்…

 

“ஹே ஸ்ரீ பிசாசே,எதுக்கு இப்போ இப்படி அடிச்ச…”என்றாள் வீணா முனகலோடு வலியில்.

 

“ஹம்ம்ம்ம்..இதோட போச்சேன்னு சந்தோசபடு,வடிவேல் மாதிரி நான் அடிச்சிட்டே இருந்து இருந்தா,உன் மண்டையில தானேவே வெல்லம் உருண்டை ஆகி இருக்கும்…”என்றாள் ஸ்ரீ உல்லாசமாக.

 

“ஏண்டி சொல்லமாட்ட…அடிச்சிட்டு பேசுற பேச்சை பாரு,..ஒரு நாள் என்கிட்டே நீ இதைவிட அதிகமா வாங்க போற..”என்றாள் எரிச்சலோடு.

 

“ஹ்ம்ம்..வாங்கும் போது,வாங்கி வச்சுக்குறேன்…இப்போ கொடுக்கணும் அப்படின்னு நினைச்சதை கொடுத்துட்டேன்…நான் வரேன்..”என்று அவ்விடத்தினை விட்டு அகன்றாள் ஸ்ரீ..

 

“ஹே என்னடி ,வந்த அடிச்ச போற..வா ஒரு நிமிஷம் உட்காரு…”என அவளின் கையினை பிடித்து தன அருகில் உள்ள இடத்தில் அமர வைத்தவள் “சாரிடி,விஜய் சார் பேசும்போது என்னால எதுவும் பேச முடியல..அவரு உன்னை திட்டும்போது ,எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது…நீ ஏண்டி முடிக்கல..முடிச்சு இருக்கலாம் இல்லை..அப்படி இல்லையா என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லை,நானாவது கொஞ்சம் முடிச்சு கொடுத்து இருப்பேன்,அவர்க்கிட்ட திட்டு வாங்கி இருக்க வேண்டாம்…”என்றாள் கவலையோடு தன் தோழி விஜயிடம் திட்டு வாங்கி கட்டி கொண்டாளே என்ற வருத்தம் அவள் குரலில்…

 

அவளின் வருத்தத்தில்,அவள் தன் வைத்து உள்ள பாசத்தை உணர்ந்து கொண்ட ஸ்ரீ நெகிழ்ந்து தான் போனாள்..ஆனால் வீணா எண்ணும் வீதம் தவறு என உணர்ந்தவள் அவளுக்கு புரியவைக்க முயன்றாள்…

 

“வீணைகுட்டி ,நீ எதுக்கு கவலைப்பட்ற,அவரு திட்டியது எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை..நான் செய்யாம இருந்ததுனால தான் திட்டினார்…அதுவும் இல்லாம,இது ஒன்னும் ஸ்கூல் இல்லை,ஹோம் வொர்க் முடிக்கல அப்படின்னா மத்தவங்க செஞ்சு கொடுக்குறதை அப்படியே எடுத்துட்டு போய் காட்டுறதுக்கு..இது ஆபீஸ்…இதுல இப்படி தான் இருக்கணும்..சம்பளம் வாங்குற நாம்ப,ஒழுங்கா வேலையை செய்யணும்..அப்படி செய்யலைனா ,திட்டு கண்டிப்பா விழும்..அதுக்கு எல்லாம் கோவிக்க கூடாது… இதுல சப்போர்ட் அப்படின்னு எதுவும் இருக்கவும் கூடாது…சரியா..”என அவளிடம் விளக்கியவள் “சரி எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு,நானா விஜய்கிட்ட கேட்டுட்டு வரேன்..”என்று விஜயினை காண அவன் அறைக்கு சென்றாள்..

 

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் “எஸ்,கம் இன்”என்றான் விஜய்…

யார் என அறிய கணிணி திரையில் இருந்து தலையை நிமிர்த்தியவன் கண்ணில் பைல் உடன் உள்ளே நுழையும் ஸ்ரீ தான் தெரிந்தாள்…

 

அவளின் கையில் பைலை பார்த்தவன் கேள்வியாய் அவளை நோக்கியவும் “எனக்கு சந்தேகம் கொஞ்சம் தீர்த்து வைக்க முடியுமா…”என்று பட்டு தெரித்தார்போல வார்த்தைகள் வரவும் அவன் அவளின் முகத்தினை கூர்ந்து அதில் எதையோ தேடினான்…தான் திட்டியதால் ஏதாவது கோவமோ.அழுகையோ,வேதனை சாயல் ஏதாவது தெரிகிறதா என..ஆனால் அவள் முகம் எதையும் பிரதிபலிக்காமல் நிர்மலமாய் இருந்தது…

 

அவனிடம் இருந்து பதில் இல்லாமல் போக “நீங்க இப்போ,பிஸியா..ப்ரீயா இருக்கும்போது சொல்லுங்க…நான் அப்போ வந்து என் சந்தேகத்தை தீர்த்துக்குறேன்..”என்று சொல்லிவிட்டு வெளியேற முயன்றாள்…

 

அவளின் கேள்வியில் தன்னிலை அடைந்தவன்..”ஒரு நிமிஷம்..”என அவளை நிறுத்தியவன்..அவள் திரும்பி பார்ப்பதை உணர்ந்து ”என்ன சந்தேகம் சொல்லுங்க…நான் இப்போ ப்ரீ தான்…” என்றான்.

 

அவளும் அவளின் சந்தேகத்தினை சொல்ல,அவனும் நுணுக்கமாக அவளுக்கு புரியும்படி விளக்கினான்..அவன் சொல்லவதை எல்லாம் குறிப்பு எடுத்து கொண்டவளும்,மேலும் சில சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டாள்….

 

“தேங்க்ஸ் விஜய்..இது என்னை ரொம்ப நேரமா இம்சை பண்ணி எடுத்துடுச்சு…இன்னும் 15 மினிட்ஸ்ல வேலை எல்லாம் முடிச்சுட்டு உங்ககிட்ட ரிப்போர்ட் சம்பிட் பண்றேன்..”என அவனிடம் தெரிவித்துவிட்டு வெளியேற முயன்றாள்…

 

அவள் வெளியேறுவதை கண்ட விஜய் சட்டென்று “சாரி ஸ்ரீ…”என்றான்.

 

அவனின் “ சாரி ஸ்ரீ ..”என்ற வார்த்தையில் திரும்பியவள் “எதற்கு “என்பது போல் கேள்வியாய் நோக்கவும்.

 

“உங்களை அப்படி திட்டி இருக்ககூடாது…ஏதோ டென்ஷன்ல திட்டிட்டேன்..அதை எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க..”என்றான் உள்ளடங்கிய குரலில்..

 

அவனின் குரலில் இருந்த வேறுபாட்டினை உணர்ந்தாலும் அதை உணர்ந்தது போல் வெளிக்காட்டி கொள்ளாது “நீங்க எதுக்கு விஜய் சாரி கேட்க்குறீங்க…உங்க வேலையை நீங்க செஞ்சீங்க…என்னை நீங்க ஒண்ணும் பொழுதுபோக்கிற்காக திட்டலையே…நான் தப்பு செஞ்சதுனால தான திட்டினீங்க…அதே போல என் மேல தப்பு இருந்தா மட்டும் தான் நான் எதற்கும் பொறுத்துப்பேன்,என் மேல தப்பு இல்லாத போது நான் எதுக்கும்,யாருக்காகவும் பொறுத்துக்க மாட்டேன்,

அப்படியே பொறுத்தாலும் அது என் உயிருக்கு மேலானவங்களுக்காக மட்டுமே….”என என் உயிருக்கு மேலானவங்களுக்காக என்ற வார்தையில் ஒரு அழுத்தம் கொடுத்து சொல்லிவிட்டு அவன் பதில் எதிர்பாராது அறையை விட்டு வெளியேறிவிட்டாள்…

 

அவளின் பதிலில் சிலை என இருந்தவனுக்கு மனதில் “தாம் தான் தப்பாய் புரிந்து கொண்டோமோ…இவளின் மேல் எந்த ஒரு தப்பும் இல்லையோ..அப்படி என்றால் அன்று என் கண் முன்னே நடந்தது எல்லாம் பொய்யா..??…இல்லை..என் கண் முன்னாடி நடந்து எதுவும் பொய் இல்லை…அதனின் இழப்பு அவ்வளவு எளிதில் மறக்ககூடிய விஷயமில்லை..”

 

“இவளின் இத்தகைய பேச்சு எல்லாம் வெறும் நாடகம்,வேஷம்…

இன்னொரு முறை நான் ஏமாறமாட்டேன்…இவளால் தான் இழந்தது போதும்..இதற்கு மேல் என்னால் எந்த ஒரு நாடகத்தையும் நம்ப முடியாது…மீண்டும் இவள் என்னிடம் நாடகம் ஆடினால் அப்போது புரிய வைக்கிறேன்..இந்த விஜய் யாரென்று….”என மனதில் உருவேற்றி கொண்டு இருந்தான்…

 

எவ்வளவு தான் ஒரு பக்கம் மனம் அதை உருவேற்றி கொண்டு இருந்தாலும்,இன்னொரு பக்கமோ மனம் நாய்க்குட்டியை போல அவள் பின்னால் ஓடுவதை தடுக்க இயலாமல் அமர்ந்து இருந்தான்…அதை பற்றி நினைத்தாலே ஒரு பக்கம் நெஞ்சை பிழிவது போல ஒரு அவஸ்தையும்,இன்னொரு பக்கம் பனிச்சரலாய் மனதுக்கு இதமாகவும் இருப்பது போன்ற இரு வேறுபட்ட உணர்வு தோன்றுவதை அவனால் என்ன முயன்றும் தடுக்கமுடியவில்லை…இதில் யார் மேல் பிழை என்று அவனுக்கும் தெரியவில்லை…காலம் நாளுக்கு நாள் அவனுக்கு புதுப்புது வகையான பிம்பங்களை தருவிப்பதால் அவன் மிகவும் குழம்பியிருந்தான்….

 

தனக்கு மட்டும் ஏன் இப்படி பட்ட ஒரு சூழ்நிலை என விதியினை அவனால் சபிக்காமல் இருக்கமுடியவில்லை..என்றும் போல் இன்றும் அவன் மனம் சஞ்சலத்திற்கு உள்ளானது ஆயிராவது முறையாக…

 

நீ என்னை நெருங்கும் போது

நான் விலகிச்சென்றேன்..

நான்  உன்னை நெருங்கும் போது

நீ விலகிச்செல்கிறாய்…

கண்கள் ஆடிய கண்ணாமூச்சி

ஆட்டம் இன்னும் தொடர்கிறது

நம் இருவருக்குள்…

யார் நிறுத்துவது

இவ்வாட்டத்தத்தை

நீயா???இல்லை நானா??

ஒன்று நீ நிறுத்திவிடு!!!

இல்லையேல்

என்னை நிறுத்தவிடு!!!

 

இவ்விருவருக்குள் இருக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் என்ன???…யார் இதனை நிறுத்த போகின்றனர்???…ஸ்ரீயின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்??அடுத்த பதிவில்….

 

விலகல் தொடரும்

 

Advertisement