Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-6

 

மாதம் கடைசியில் மிருணா மதுரைக்கு சென்றாள்…அலுவலகத்தில் ஒரு வாரம்  விடுப்பு எடுத்து இருந்தாள்.. வீட்டிற்கு சென்றவள் முதல் இரண்டு நாட்கள் பிரபுவிற்கு அழைத்து பேசினாள்… பிறகு அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் பிரபுவிற்கு வரவில்லை…அவனும் அவளுக்கு தொடர்புகொள்ள முயன்று தோற்று கொண்டு இருந்தான்..

 

மிருணாவும் வீட்டிற்கு வந்து இரண்டு  நாட்கள் ஆன பிறகு தைரியத்தை வரவழைத்து கொண்டு  அவளின் அப்பாவிடம் காதலினை சொல்ல தன்னை தாயார்படுத்திக்கொண்டாள்…மனம் படபடவென்று அடித்துக்கொள்ள அவளின் அப்பாவின் முன் சென்று நின்றாள்..

 

மிருணா “அப்பா …”என்றாள் மெதுவாக..

 

பத்திரிக்கையினை பிடித்துக்கொண்டு இருந்தவர் அவளின் குரல்  கேட்டு “என்ன கண்ணு …”என்றார் ராமைய்யா..

 

மிருணா “அப்…பா உங்க…க  கிட்….ட கொஞ்சம் பேசணு…ம்..”என்றாள் திக்கியவாறே.

 

ஹ்ம்ம் …சொல்லு கண்ணு என்ன பேசணும்,மாப்பிள்ளை  பத்தி ஏதாவது தெரியணுமா..”

 

மிருணா “இல்ல பா…அது எல்லாம் ஒன்னும் இல்ல…இது வேற…அது அது …”என்றாள் எப்படி சொல்வது,என்ன சொல்வது என தெரியாமல்….

 

என்னமா, அது இதுன்னு,எதுகை மோனை  பேசிட்டு இருக்க,எனக்கு சங்கத்துக்கு போகணும்,எதுவா இருந்தாலும் சொல்லுமா,சொல்ல வந்ததை மறந்துட்டியா,யோசிச்சு வை,நான் சங்கத்துக்கு போயிட்டு,ஜோசியர்கிட்ட நல்ல நேரம் எப்போன்னு கேட்டுட்டு வரேன் “என்று எழுந்தார்.

 

மிருணா “அப்பா….இல்ல பா,இப்பவே பேசணும் ,ப்ளீஸ் பா…”

 

ராமைய்யாவிற்கு இப்போ அவரிடம் பேசும் மிருணா புதிது… ஒன்றை சொன்னால் சரி சரி என  கேட்டுக்கொள்ளும் மிருணா,இன்று  அவரிடம் பேசியே ஆக வேண்டும் என நிற்பது அவருக்கு சிந்தனையானது… புருவ சுழிப்புடன் அவளை நோக்கியவர் அவளை சொல்லுமாரு ஊக்கினார்…

 

மிருணாவும்  மனதில் இருக்கும் பயத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளினை ஒரு முறை மனமார வேண்டிக்கொண்டு அவளுக்கும் பிரபுவிற்கும் இடையிலான காதலினை மடமடவென சொல்லி முடித்தாள்… அவள் சொல்லி முடிக்கவும் ராமைய்யா அவளினை ஓங்கி அறையவும் சரியாய் இருந்தது

 

அவர் விளாசிய விளாசலில் அவள் தரையில் விழுந்தாள்..

அதன்பிறகு அவளை அடித்தே கொன்றார் ராமைய்யா..அவர் பையன் என்ன ஜாதி ,எந்த இனம் என்று எதுவும் கேட்கவில்லை..காதல் என்பதே அவருக்கு பாகற்காயை போல் கசக்கும்,இதில் எங்கு இருந்து அவர் அவர்களின் இனத்தினை பற்றி கேட்பது

 

அதன் பிறகு அவளினை வீட்டில் விட்டு வெளியில் வர அனுமதி அளிக்கவில்லை…ராமைய்யா அவளின் திருமணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் முடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்…

 

*************

 

மிருணாவிற்கு தொடர்புகொள்ள முயன்று சோர்ந்து போய் இருந்தான் பிரபு…அவளிடம் எப்படி பேசுவது,யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் விழி பிதுங்க நின்றான்…அவனின் உயிர் தோழன் விஜியும் இல்லாமல் தளர்ந்து போனான்..

 

கையில் இருந்த கைபேசி அழைக்கவும்,பித்து பிடித்து போய் அமர்ந்து இருந்தவன்,அச்சத்தத்தில் நினைவிற்கு வந்தவன் சுரத்தையே இல்லாமல் போனை எடுத்து “ஹலோ ..”என்றான்..

 

அப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ “அப்படியா,இல்ல எனக்கு எதுவும் தெரியாது,சரி நான் பாத்துக்குறேன்,ஹ்ம்ம்  சரி ,நான் எதாவது பண்றேன்,உங்களுக்கு இந்த நம்பர்க்கே அழைக்கட்டுமா,சரி சொல்லுங்க …99******58 என அதனை குறித்து கொண்டவன் அடுத்து என்ன செய்வது என புரியாமல் அமர்ந்து இருந்தவனை அலுவலகத்தில் இருந்து அழைத்து,வேலை காரணமாக, தவறாமல் வர வேண்டும் என்றவுடன் அலுவலகத்திற்கு சென்றான்…

 

அலுவலகத்தில் பிரபுவினை பார்த்தவள் மிருணாவினை பற்றி கேட்க அவனிடம் விரைந்தாள் ஸ்ரீ… பிரபுவின் அருகில் சென்றவள் “அண்ணா ..”என்றாள்..

 

அக்குரலில் திரும்பியவன் அவளை என்ன என்பது போல் பார்த்தான்…எப்போதும் இருக்கும் கலை அவனின் முகத்தில் இல்லை என்பதை அவளின் கண்கள் கண்டுகொண்டன.. “மிருணா அண்ணி எங்க அண்ணா,அவங்களை இன்னும் காணோம்..ஒரு வாரத்துல வரேன்னு போனாங்க…”என்றாள் ஸ்ரீ …பிரபுமிருணாவின் காதல் தெரிந்த பின் மிருணாவினை அவள் அண்ணி என்று தான் அழைக்க பழகி இருந்தாள்..

 

ஏற்கனவே என்ன செய்வது என தெரியாமல்,முடிவு எடுக்க முடியாமல் தன் மேலே கோவத்தின் இருந்தவன் ஸ்ரீயின் இக்கேள்வியினால் அக்கோவத்தினை வார்த்தைகளால் வெளியிட்டான்…”அவ மறுவீடு முடிஞ்சி தான் வருவா…அவளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க தாயாரா இரு,தயவுசெய்து இப்போ என்கிட்ட யாரை பற்றியும் கேட்டு தொந்தரவு பண்ணாத…”என அவளிடம் கத்தியவன் அவனின் அறைக்கு விரைந்து சென்றுவிட்டான்…

 

பிரபுவின் கத்தலில் அதிர்ச்சியாய் சில நிமிடம் சிலை என நின்றவள் அவனை காண அவனின் அறைக்கு சென்றாள்…

பிரபு மேசையின் மேல் தலையினை கவிழ்த்து அமர்ந்து இருந்தான்…அவனின் கோவத்தினை வைத்தே ஏதோ பிரச்சனை என ஊகித்தவள் உள்ளே நுழைந்தாள்..கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண் விழித்தவன் ஸ்ரீயினை திட்டிய குற்றவுணர்வில் அவளின் முகம் பார்க்காமல் “சாரி ஸ்ரீ,ஏதோ கோவத்துல பேசிட்டேன்,மனசுல வச்சிக்காத “என்றான்.

 

ஸ்ரீ “என்ன அண்ணா இது,சாரி எல்லாம் என் கிட்ட போய் நீங்க கேட்டுகிட்டு,உங்களுக்கு உங்க தங்கையை திட்ட உரிமை இல்லையா என்ன??…சரி அதை விடுங்க ,சொல்லுங்க இப்போ என்ன ப்ரோப்ளம்,எதுக்கு அண்ணி மேல இவ்வளவு கோவம்…”

 

பிரபு “அது ஒன்னும் இல்லமா,விடு “என்றான் சோர்வாக….

 

ஸ்ரீ “அண்ணா மனசுல போட்டு ரொம்ப அழுத்திக்காதீங்க,என் கிட்ட சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க,இல்லைன்னா வேண்டாம்…”என்று வெளியில் செல்ல எத்தனித்தாள்…

 

பிரபு “இரு மா,எனக்கும் யார்கிட்டயாவது சொல்லணும்ன்னு தோணுது,மிருணா வீட்ல எங்களோட காதல் தெரிஞ்சிடுச்சு,அவங்க அப்பா கல்யாண வேலையில மும்பரமா இறங்கிட்டார்..அவளை வீட்ல விட்டு வெளியில விடமாட்டன்னு இருக்காங்க…அடுத்த 2 மாதத்துல கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டாங்க…எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல…என் வீட்லயும் சொன்னேன்,எனக்கும் அவளுக்கும் ஜாதி பிரச்சனை வேற,வேற ஜாதி பொண்ணை என் மருமகளா நான் ஏத்துக்க மாட்டேன் அப்படின்னு அப்பா குதியா குதிக்கிறார்…அம்மா எனக்கு எவ்வளவோ சப்போர்ட் பண்ணியும் அப்பா ஒத்துக்கல,இதுல எனக்கு ஏதாவது சப்போர்ட் பண்றதுனால அம்மாவையும் அப்பா சந்தேகப்படறார்..அவங்க எனக்கு உதவி செய்யறாங்கன்னு…எனக்கு என்ன பண்றதுன்னு ஒண்ணுமே புரியமாட்டேங்குது…”என்று புலம்பி தள்ளிவிட்டான்…..

 

அவனின் புலம்பலை கேட்டவள் ,சிறிது நேரம் யோசித்தவள் “அண்ணாஅவங்க நம்பர் கொடுங்க “எனவும் குழம்பியவன் “என்ன ஸ்ரீ அவங்க நம்பர் உனக்கு எதுக்கு,எதுவும் தேவை இல்லாம பேசி கெடுக்காத…”என்றான்…

 

ஸ்ரீ “அண்ணா,நான் கேட்க்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க,இது தேவையா இல்லைன்னா உங்களுக்கு போக போக புரியும்,உங்க கிட்ட பேசுனவங்க போன் நம்பர் கொடுங்க நான் பேசுறேன்…”என்றவள் மிருணாவின் தோழி தேன்மொழியிடம் பேசி,அங்குள்ள சூழ்நிலையை அறிந்து கொண்டவள் “மிருணாவிடம் தான் சொல்வது போல் நடந்து கொள்ள சொல்லுங்கள் “என்று ,சில வழிமுறைகளை அவளிடம் சொன்னவள்….என்ன என்ன செய்ய வேண்டும் என்று மனதினில் திட்டமிட்டு கொண்டு,அதனை செயல்படுத்த வேண்டிய வேலையில் ஆயத்தமானாள்…

 

பிரபு “என்னமா ,என்ன பண்ற,எல்லாம் புரிஞ்சு தான் பண்றயா,இது எல்லாம் நீ நினைக்குற மாதிரி விளையாடுற விஷயம் இல்லை,என்னோட வாழ்க்கை பிரச்சனை,தேவையில்லாம ஏதாவது செய்து என் வாழ்கையில் விளையடிடாத…”என்றான் சிறு கண்டிப்போடு….

 

அவனை சிறிது நேரம் உற்று பார்த்தவள் “உங்க வாழ்க்கையை காப்பாத்திக்க உங்களுக்கு தெரியல,என் கிட்ட பேச வந்துட்டீங்களா,மிருணா அண்ணிக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க அப்படின்னு சொன்ன போது என்ன பண்ணீங்க,தலையில கையை வச்சிட்டு உட்கார்ந்தீங்களே தவிர அடுத்தது என்ன செய்யணும்னு யோசிச்சீங்களா,இப்போ நான் இது எல்லாம் உங்களுக்காக செய்யல,என்னோட அண்ணிக்காக தான்,இதுல எந்த ஒரு பிரச்சனையும் வராது,நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்,என்னடா சின்ன பொண்ணு நான் என்ன பண்ணுவேன்னு நினைக்காதீங்க,எங்க அண்ணிக்கு அவங்களுக்கு புடிச்ச வாழ்கையினை அமைத்து கொடுக்காம நான் ஓயமாட்டேன்…”என சபதம் எடுத்தவள் பிரபு அவளை வாய் விரித்து பார்த்து கொண்டு இருப்பதை கண்டு கொள்ளாமல் அங்கு இருந்து அகன்றாள்….

 

பிரபுவிடம் மிருணா அவளின் திருமணம் குறித்த செய்தியினை சொன்னவுடன் அவன் நினைத்தது பதிவு திருமணத்தினை பற்றி தான்…அதை சொன்னால் அவள் ஒற்றுக்கொள்ளமாட்டாள் என்பது 1௦௦% சதவீதம் அவனுக்கு புலப்பட்டது….அதனால் அவன் அதனை அவளிடம் சொல்லாமல் அவன் பேச்சினை அப்போது மாற்றினான்…

 

ஆனால் இப்போதிய சூழ்நிலையில் அவனால் என்ன செய்வதென்று தெரியவில்லை…

 

பிறகு நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டு இருந்தது…பிரபுவிற்கு வாழ்க்கை முள்மேல் நடப்பது போல் ஒரு பிரமை உண்டானது…ஸ்ரீ அன்று சொன்னதில் இருந்து அவனால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை அவனை அவள் செய்யவிடவில்லை….

 

பிரதீப்,ஸ்ரீகாந்த்,சுபர்ணா மற்றும் சாரதி உதவியுடன் சில பல திட்டங்களை தீட்டி,மிருணாவின் திருமணத்திற்கு முந்தைய நாள் அவர்கள் மதுரைக்கு சென்றனர்…

 

இதில் ஸ்ரீ திட்டங்கள் தீட்டி இருந்தாலும் அதை அனைத்தையும் செய்தது பிரதீப்,ஸ்ரீகாந்த்,சாரதி மூவர் மட்டுமே…அவர்களின் துணை கொண்டே ஸ்ரீ எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து இருந்தாள்….ஆனால் கடைசியில் ஒரு சொதப்பழான திட்டத்தினை தீட்டி எல்லாவற்றையும் பிரபு தவிடு பொடியாக்குவான் என யாரும் நினைக்கவில்லை….  

 

***********

 

அறையில் இருந்த மிருணாவிற்கு அழைப்பு என அவளின் தோழி தேன்மொழி யாருக்கும் தெரியாமல் தொலைபேசியினை அவளிடம் கொடுத்து விட்டு அறையின் வாசலிலே யாரவது வருகின்றனரா என கண்காணிக்க ஆரம்பித்தாள்…

 

போனை வாங்கிய மிருணா “ஹெல்லோ…”என்றாள்..”அண்ணி எப்படி இருக்கீங்க…நல்லா இருக்கீங்களா???…”ஸ்ரீ..

 

“ஸ்ரீ நீயா…நான் தினம் தினம் செத்துட்டு இருக்கேன் ஸ்ரீ…மிபுவை வந்து என்னை அழைச்சிட்டு போக சொல்லு ஸ்ரீ,என்னால அப்பா பார்த்து இருக்கற மாப்பிள்ளை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது…ப்ளீஸ் ஸ்ரீ,மிபு கிட்ட சொல்லு,அவர் என் கிட்ட பேச கூட முயற்சிக்கல…அவர் எப்படி இருக்கார்,ஏன் அவர் என் கூட பேசல,தேன் சொன்னதுக்கு அப்புறம் அவர் கிட்ட இருந்து ஒரு பதிலும் இல்லை,அவரோட பதிலுக்காக நான் காத்திட்டு இருந்தேன் ஸ்ரீ…என்ன ஆச்சு அவருக்கு,அவர் ஏன் என் கூட பேசல…”என்றாள் மிருணா அழுகையுடனே….

 

ஸ்ரீ“ அண்ணி,அழுறதை முதல்ல நிறுத்துங்க,நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை,அண்ணா உங்களை பத்தி தான் எப்பவும் நினைச்சிட்டு இருக்கார்,உங்களுக்கு அண்ணா கூட தான் கல்யாணம்,நாங்க இருக்கும் போது நீங்க ஏன் கவலைபடுறீங்க,

நாங்க எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டோம்,நீங்க ஒண்ணும் கவலைபடாதீங்க,எல்லாம் நாங்க பாத்துக்குறோம்,தேன்கிட்ட நான் சொன்ன மாதிரி நீங்க செஞ்சுடுங்க….சரியா…”.

 

மிருணா “சரி ஸ்ரீ,நீ சொன்ன மாதிரி செஞ்சுடறேன்…”என்றாள்.

 

திருமண வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தன…மாப்பிள்ளை அழைப்பிற்காக ராமைய்யா அங்கும் இங்கும் அழைந்து கொண்டு இருந்தார்…இத்திருமணத்திற்கு அவரின் ஜாதி தலைவர் வருகை தந்து திருமணத்தினை சிறப்பிக்குமாறு இருப்பதால் எல்லா ஏற்பாடுகளையும் கனகச்சிதமாக செய்து இருந்தார்…

 

அந்திகாலை பொழுது அழகான விடியலை அனைவருக்கும் தந்து கொண்டு இருந்தது….ராமைய்யா வாசலுக்கும் மணவறைக்கும் ஓடி கொண்டு இருந்தார்…கமலா அய்யருக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து கொண்டு இருந்தார்…மிருணா தேன்மொழியின் உதவியுடன் அலங்கார வேலையில் ஈடுபட்டு இருந்தாள்…

 

அவள் மனம் பெரும் சஞ்சலத்தில் இருந்தது,என்னதான் அவளின் அலுவலக நண்பர்கள் கல்யாண ஏற்பாடுகளையும் அதற்கான வேலையில் ஈடுபட்டு இருந்தாலும்,எந்த விதமான தடங்கலும் இல்லாமல் பிரபுவின் கையினால் கழுத்தில் தாலியினை ஏற்கும் வரை இப்படி தான் இருக்கும் என்பது அவள் அறிந்து தான் இருந்தாள்…எதுவும் சொதப்ப கூடாதே என அவள் மனம் அடித்து கொண்டது…

 

பயத்தினால் அவளின் கைகளில் வியர்வை துளிகள் உற்பத்தியாகியது..அதை கண்ட தேன்மொழி “ஹே மிருணா,எதுக்கும் பயப்படாத,எல்லாம் நல்லபடியாய் நடக்கும்…”.

 

மிருணா “எனக்கு அது தான்டி ,பயமா இருக்கு,எதுவும் ஆகாது இல்லை,அப்பாவை நினைச்சா எனக்கு வயத்துல புளியை கரைக்குதுடி தேனு…”என்று அவளின் கையினை இறுக்கமாய் பிடித்து கொண்டாள்…

 

தேன்மொழி “அது எல்லாம் ஒன்னும் ஆகாது…ரிலாக்ஸா இரு,எல்லாம் நல்லபடியா நடக்கும்..”.என்று தோழியினை சமாதானபடுத்தினாள் வெளியில்…ஆனால் அவளுக்கும் கலக்கமே எல்லாம் நல்லபடியாய் நடக்க வேண்டுமே என்று…

 

அறை கதவினை தட்டிக்கொண்டு கமலா உள்ளே நுழைந்தார்…தன் பெண்ணை கண்டவர் “ராசாத்தி,அம்சமாய் இருக்க,என் கண்ணே பட்டுடும் போல் இருக்கு “என்று திருஷ்டி கழித்தவர்,வா நலங்கு வைக்கணும்…என்று அவளை மேடைக்கு அழைத்து சென்றார்…

 

மிருணாவின் பாட்டி,அத்தை,சித்தி என அனைவரும் அவளுக்கு நலங்கு வைத்தனர்…பிறகு மாப்பிள்ளையின் அப்பா,அம்மா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவள்,அவர்கள் கொடுத்த மூகுர்த்த புடவையினை வாங்கி கொண்டு அறைக்கு சென்றாள்…

 

பிறகு முகூர்த்த நேரம் நெருங்க அவளை அழைத்து செல்ல கமலா வந்தார்…அவரின் வருகையை கண்டவள் கலக்கமாக தேனுவினை நோக்கினாள்…அவள் கண்களாலே தைரியம் அளிக்க,இப்போது எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் கடவுளினை ஒரு முறை நன்றாக வேண்டி கொண்டு கமலாவுடன் சென்றாள்…

 

மேடையில் சென்று அமர்ந்தவள் கண்ணில் கண்ணீர் இப்போ வரவா என திரண்டு இருந்தது…ராமைய்யா முகத்தில் நான் பார்த்த மாப்பிள்ளையையே மகள் மணம் முடிக்க போகிறாள் என பெருமிதத்திலும்,கமலாவின் முகத்தில் மகளின் திருமணத்தை காணப்போகும் ஆவல் மற்றும் அவளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமே என்ற பவிதரிப்பு இருந்தது…

 

அய்யர் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒரு எந்திரத்தை போல அவள் மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தாள்…தேனு பதட்டமாக வாயிலை பார்த்து கொண்டு இருந்தாள்…மிருணாவின் மனதில் நம்பிக்கை அற்று போய் இருந்தது…இதற்கு மேல் பிரபு வந்து அவளை கை பிடிப்பான் என அவள் நம்பிக்கை பொடிபொடியாக ஆகுவது போல் பிரம்மை உண்டானது…

 

அந்நேரத்தில் மூன்று கார்கள் வாயிலில் வந்து நிற்கவும், ராமைய்யா ஜாதி தலைவர் தான் என வரவேற்க வேகமாக விரைந்தார்…காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் கணிமைக்கும் நொடியில் கழுத்தில் பெரிய கத்தியினை வைத்தனர்…அங்கு உள்ளவர்கள் எல்லாம் அதிர்ந்து ஒரு அடி எடுத்து மர்ப நபர்களை நோக்கி வைக்கவும், ராமைய்யாவினை பிடித்து கொண்டு இருந்தவன் அவரின் கையில் கத்தியினால் ஒரு கிழி கிழித்தான்…பிறகு “இன்னும் ஒரு அடி எல்லாம் முன்னாடி வச்சிங்க ,நீங்க வக்கிர ஒவ்வொரு அடிக்கும் இந்த ஆள் மேல கத்தியால கிழிப்பேன் …எல்லோரும் ஒழுங்கா பின்னாடி போங்க …”என்று எச்சரித்தான்….அந்த இடமே கூச்சலும் ,பரபரப்புமாய் இருந்தது

 

அவன் எச்சரித்தபின் யாரும் அவனிடம் நெருங்கவில்லை…

இதனால் மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது,அதை கண்டு தேன்மொழி என்னவென்று சென்று பார்க்க வந்தவள் அதிர்ச்சி அடைந்தாள்…ஒருவன் ராமைய்யாவின் கழுத்தில் கத்தியினை வைத்து இருந்தான்…அவன் கத்தியால் கிழித்த இடத்தில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது…அவன் முகமூடி போட்டு இருந்ததினால் யாரென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை..…..

 

அதிர்ச்சியில் உறைந்த தேன்மொழி பிறகு வேகமாக மிருணாவிடம் சென்று தெரிவித்தாள்…எந்திரமாய் அய்யர் சொல்வதை செய்து கொண்டு இருந்தவள் காதில் தேன்மொழி வந்து விஷயத்தினை சொல்லவும் அப்படியே அதிர்ந்து அவளை நோக்கினாள்…

தேன்மொழியின் கண்ணில் கலக்கம் இருப்பதை உணர்ந்து சட்டென எழுந்தவள் அவளின் அம்மாவினை தேடியது…இதில் நடந்த களேபரத்தில் மயக்கி விழுந்தவரை அங்கு உள்ள சிலர் ஒர் அறையில் படுக்க வைத்து இருந்தனர்….இதை எல்லாம் அறியாத இருந்த மிருணா அய்யர் சொல்வதை செய்து கொண்டு இருந்தாள்….

 

ஆனால் விஷயம் தெரிந்து இப்போது அவள் கால்கள் அவளையும் அறியாமல் வேகமாக வாயிலை நோக்கி விரைந்தது….ராமைய்யா நின்று இருந்த இடத்தில் ரத்தம் சொட்டிகொண்டு இருந்தது…அவரின் கண்கள் மிகவும் சிரமப்பட்டு விழிக்க முயற்ச்சித்து கொண்டு இருந்தது…ஏற்கனவே ரத்த அழுத்தம்,சக்கரை நோய் என இருப்பவர்,அந்த மர்ப நபருடன் போராட முடியாமல் தவித்தார்…

 

அவரின் இக்கோலத்தை கண்டவள் நாடி நரம்பெல்லாம் அதிர்ந்தது “அப்பாபாபாபா……..”என்றாள் அலறலாக…இவளின் குரலை கேட்ட திரும்பிய ராமைய்யா “கண்ணு நீ எதுக்கு இங்க வந்த,மேடைக்கு போ,என்னை பத்தி ஒன்னும் கவலைப்படாத,உன் கழுத்துக்கு முதல்ல தாலி ஏறட்டும்,அப்புறம் இருக்கு இவனுங்களுக்கு “என்று தான் யார் என்பதை அப்போதும் காண்பித்தார்…ஜாதி தலைவர் வந்து இருந்தாள் இப்போது எப்படியாவது இவர்களை பிடித்து,போலீஸ் இடம் ஒப்படைத்து இருக்கலாம் என எண்ணாமல் அவரால் இருக்க முடியவில்லை…

 

“அய்யோ அப்பா….அவர் கையில ரத்தம் வருது….,என்ன வேணும் உங்களுக்கு,ஏன் இப்படி பண்றீங்க….அவரை விடுங்க,எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தரேன்,என் அப்பாவை ஒன்னும் பண்ணிடாதீங்க…..”என்றவள் கழுத்தில் இருக்கும் நகை,கையில் இருக்கும் நகை என அனைத்தையும் கழற்றி கீழே வைத்தாள்…  

 

மர்ப நபர்களுக்கு நகை எல்லாம் கண்ணுக்கு புலப்படவில்லை.

அவர்களின் நோக்கமே தான் வேறயிற்றே..மிருணாவினை கண்ட ஒருவன் “உங்க அப்பா உயிரோட இருக்கணும்னா,நான் சொல்றதை செய்,ஒழுங்கா அந்த வண்டியல போய் உட்காரு….”.

 

மிருணா அவனை அதிர்ந்து நோக்கவும்,”ஹ்ம்ம் சொல்றேன் இல்லை,உங்க அப்பா உயிரோட உனக்கு வேணுமா,

வேண்டாமா??…”என கத்தியினை ராமைய்யாவின் கழுத்தில் இன்னும் இறுக்கி பிடித்தான்…அவன் இறுக்கியதில் ராமைய்யா வலியால் முனங்கினார்…

 

அவனின் இச்செய்கையினை கண்ட மிருணா பதறி “ஹே….அவரை ஒன்னும் செய்திடாத…..” என்றறாள் கண்ணீரோடு….

 

ராமைய்யாவினை பற்றி இருந்தவன் “டேய் என்னடா பார்த்துட்டு இருக்கீங்க,இவளை தூக்கி கார்ல போடுங்க….”என்று அணையை பிறப்பிக்கவும் அவனின் சகாக்கள் அவளை கண் இமைக்கும் நேரத்தில் தூக்கி காரில் போட்டு அரணாய் அவளை அடுத்து 2 பேர் அவள் அருகிலும்,2 பேர் முன்னும் அமர்ந்து கொண்டனர்…

 

மிருணா “டேய் என்னை விடுங்க…என்னை எதுக்குடா தூக்கிட்டு போறீங்க…என்னடா வேணும் உங்களுக்கு,எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க…”என்றாள் கோவமாக…

 

“ஹே இப்போ சும்மா இல்லை,உன் அப்பனுக்கு சமாதி கட்டிட்டு தான் இங்க இருந்து போவோம்…ஒழுங்கா வை அடங்கிட்டு இரு…”என்று மிரட்டினான்..அவனின் மிரட்டலில் அரண்டவள் அமைதியாய் அனைத்து தடியன்களையும் நோக்கினாள்…

 

அவள் நகரா வண்ணம் இரண்டு பக்கமும் இரண்டு தடியன்கள் அவளை பிடித்து இருந்தனர்…மிருணாவின் கண்கள் ஜீவன் இழந்து வெறித்து கொண்டு இருந்தது….அடுத்து என்ன என்ன நடக்கும் என்பதை அறியாமல்…

 

இவர்களின் அடாவடிதனத்தை பார்த்து ராமைய்யா “மாப்பிள்ளை இவனுங்களை ஏதாவது பண்ணுங்களேன்,பாருங்க என் பொண்ணை தூக்கிட்டு போறாங்க,அய்யோ ஏதாவது செய்யுங்களேன்..

எப்படியாவது அவளை காப்பாத்துங்க மாப்பிள்ளை…ஏதாவது செய்ங்க…”என்றார் கெஞ்சலோடு…

 

அவர் தேர்ந்தேடுத்த புது மாப்பிள்ளையோ “இது என்ன பெரிய வில்லங்கமா இருக்கு,என்ன என்னவோ நடக்குது,என்ன அப்பா இது,இப்படி பட்ட ஒரு குடும்பத்துல எனக்கு பொண்ணு பார்த்து இருக்கீங்க,அவர் கழுத்துல இருக்குற கத்தி என் கழுத்துக்கு வர எவ்வளவு நேரம் ஆகும்,எனக்கு இந்த கல்யாணமும் வேண்டாம்,ஒன்னும் வேண்டாம்,வாங்க போலாம்…”என்று அவனின் அப்பாவிடம் மொழிந்து விட்டு யாரின் பதிலும் எதிர்பாராமல் வெளியேறிவிட்டான்…அவனை தொடர்ந்து அவனின் அப்பா ,அம்மா என உறவினர் சகிதம் வெளியேறினர்….

 

ஒருவனின் கையில் ஒருவரின் உயிர் ஊசலடுகிறதே,அதற்கு எதாவது செய்வோம் என எதுவும் செய்யாமல்,தனக்கு எதாவது ஆபத்து வந்து விட போகிறது என ஓடும் உறவினர்களையும்,

மனிதர்களையும் எண்ணி மனம் கசந்து போனது ராமைய்யாவிற்கு…

 

இன்னும் சில மனித நேயம் உள்ளவர்கள் உதவ எண்ணினாலும்,

ராமைய்யாவின் நலனை எண்ணி,அவரின் உயிரில் விளையாட விருப்பம் இல்லாமல்,தாம் ஏதாவது செய்ய போய் அது வேறு மாதிரியாய் முடிந்து,ராமைய்யாவின் உயிருக்கு ஆபத்து வந்து விட கூடாது என கையை பிசைந்து கொண்டு நின்றனர்…

 

தேன்மொழி அங்கு நடக்கும் எதையும் பார்க்க முடியாமல் தன தோழியின் நிலை எண்ணி கண்ணில் கண்ணீர் வழிய நின்று இருந்தாள்..அவளால் அதைமட்டுமே செய்ய முடிந்தது…வேறு எதுவும் அவளால் நினைக்ககூட முடியவில்லை…அவளுக்கும் நடந்து கொண்டு இருக்கிற நிகழ்வுகளால் மூளை மறுத்து போய் இருந்தது…

 

“மிருணா கண்ணு,நான் சொல்றது கேளுடா,இவங்களா என்னை ஒன்னு பண்ண முடியாது,நீ இவங்க கூட போகாத,அய்யோ என் பொண்ணை விட்டிடுங்கடா,உங்களுக்கு எது வேணும்னாலும் நான் தரேன்,என் பொண்ணை ஒன்னும் பண்ணிடாதீங்க…”என்று சுவதீனமாக முனகினார்…

 

அவரை பிடித்து இருந்தவனோ “நீ ஒன்னும் கவலைபடாதா,உன் பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது,இது எல்லாம் எதுக்குன்னு உனக்கு கூடிய சீக்கிரம் புரியும்,…”என்றவன்  அவரின் காதின் அருகில் “எங்க தகுறி மாரியண்ணாகிட்ட வச்சிகிட்டா எப்படி இருக்கும்ன்னு இப்போ புரிஞ்சிக்கோ..”என்று சொல்லியவன் மின்னல் வேகத்தில் புறப்பட்டு கொண்டு இருந்த காருக்குள் நுழைந்து கொண்டான்….

 

அவனின் பதிலில் சமைந்தவர்,பிடிப்பு எல்லாம் அப்படியே சரிந்து அமர்ந்தார்…தான் கேட்டது சரியா என அவரால் ஊகிக்க முடியவில்லை….

 

அவரின் தொகுதியில் எதிர் கட்சியில் உள்ள மாரிக்கும்,

ராமைய்யாக்கும் எப்போதும் ஏக பொருத்தமே…அதுவும் வேறு வேறு ஜாதியினர் என்று எப்போதும் அவர்களுக்குள் தகறாரு இருந்து கொண்டே இருக்கும்…ஒரு சின்ன சின்ன விஷயங்கள் தவறாக நடந்தாலும் எதிர் கட்சியினர் வேலை என்றே என்றும் எண்ணும் அளவிற்கு அவர்களுக்குள் போர் நடந்து கொண்டு இருக்கும்…

 

ஒரு சமயம் வெகுவாக இருவருக்குள்ளும் பிரச்சனை வந்து அந்த முறை ராமைய்யா தான் அத்தொகுதியில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் முதல் முறையாக…இதை கண்ட மாரிக்கு அவரின் மேல் வன்மம் வளர்ந்தது…தாக்க தருணம் பார்த்து காத்து இருந்தவருக்கு மிருணாவின் திருமணம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது….அதை நன்கு பயன்படுத்தி கொண்டார் மாரி…

 

******************

 

கார் வேகமாக அச்சாலையில் பறந்து கொண்டு இருந்தது..

மிருணாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது…யாருக்கும் தீங்கு செய்யாத தான்,எதற்கு இப்படி படாத பாடு படுகிறோம்,எதனால் இத்தனை வேதனை என எண்ணி கொண்டே சென்றவள் மனதில் அப்போது தான் பிரபுவை பற்றி எண்ணம் வர,அய்யோ அவருக்கு என்ன ஆச்சு,ஸ்ரீ எப்படியாவது உங்களை அழைச்சிட்டு போறோம் அப்படின்னு சொன்னாளே,ஏன் யாருமே வரல,ஒரு வேலை நான் தான் நடந்த களேபரத்துல பார்க்கலையோ,வந்து இருந்தாங்களோ…என எண்ணத்தில் உழன்று கொண்டு இருந்தவள் கார் ஏதோ ஒரு கோவிலில் நிற்கவும் ,தடியன்களை கேள்வியாகவும்,பயமாகவும் நோக்கினாள்…

 

ஆனால் அவர்களோ எதுவும் சொல்லாமல் அவளின் கையினை பிடித்து தரதரவென்று இழுத்து கொண்டு உள்ளே சென்றனர்…”டேய் ,இங்க எதுக்கு டா,என்னை அழைச்சிட்டு வந்தீங்க,உங்களுக்கு என்ன வேணும்,ஒழுங்கா என்னை விட்ருங்க,எங்க அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் ஓட வந்துடுவார்…”என்றாள் கோவமாக…

 

அவனின் கையினை பிடித்து இருந்தவன் “ஹே ஒழுங்கா வாயை மூடிட்டு வா,இல்லை பேசற வாய் மேலையே ரெண்டு போடுவேன்…என்ன நடக்க போகுதுன்னு நீ பார்க்க தானா போற…அப்புறம் என்ன நை நைனு…”என அவளிடம் எகுறியவன்,பக்கத்தில் இருக்கும் சகாவிடம் “டேய் அவங்களை எல்லாம் ஏற்படா வைக்க சொல்லு…இவளை ஒப்படைச்சிட்டு நாம போலாம்….”

 

அவர்கள் உள்ளே நுழையும் போது “மிரு அண்ணி,வாங்க,வாங்க…

அண்ணா உங்களுக்காக காத்திட்டு இருக்கார்…”என பேசிக்கொண்டே போனவள் அவளின் கண்ணில் இருக்கும் கண்ணீரை கண்டு பேச்சினை பாதியில் நிறுத்தி கொண்டு பிரதாப்பினை கண்ணாலே என்னவென்று கேட்க அவன் தெரியாது என்பது போல் உதட்டினை பிதுக்கி “சரி ,இங்கவே நின்னுட்டு என்ன பண்ண போறீங்க…சீக்கிரம் வாங்க,நல்ல நேரம் முடிய போகுது “என்றவன் ,”பாஸ்…கரெக்ட் டைம்க்கு அழைச்சிட்டு வந்துட்டீங்க… ரொம்ப தேங்க்ஸ்…” என்று மிருனாவுடன் வந்தவர்களிடம் கைகொடுத்து அவர்களை வழி அனுப்பிவிட்டு வந்தான்…மிருணா இவர்கள் செய்ததை உணர்ந்து அதிர்ச்சியில் இருந்தாள்…

 

*******************

 

மணமேடை என்ற எந்த ஒரு அலங்காரமும் இல்லாமல் நான்கு,ஐந்து பேர் புடை சூழ,அக்கோவிலில் மிருணாவின் கழுத்தில் மாங்கல்யத்தினை பூட்டினான் அவளின் காதலன் பிரபு…..

 

அவள் கழுத்தில் மாங்கல்யத்தினை பூட்டும் போது அவளின் கண்களை காதலாய் நோக்கிய பிரபுவிற்கு மிருணாவின் வெறுமை படர்ந்த பார்வையே அவனுக்கு பரிசாய் கிடைத்தது…

 

ஸ்ரீயின் சொன்னபடியே செய்து இருக்கலாமோ என்ற எண்ணம் அவனுக்கு முதன் முறையாய் உதித்தது…அவனை உலுக்கிய ஸ்ரீகாந்த் “டேய் என்ன கனவா,சாமி கும்மிடு…”என்றான்…ஹ்ம்ம் என்றவன் மனதில் தப்பு செய்த குறுகுறுப்பு இருந்தது…

 

ஸ்ரீக்கும் மிருணாவினை பார்க்கும் போது ஏதோ சரியில்லை என தோன்றியது…பிறகு கேட்டு கொள்ளலாம் என அவளும் ஏதும் கேட்காமல் பிரபுவிற்கும்,மிருணாவிற்கும் தனிமை கொடுத்து எல்லோரும் கோவிலை சுற்ற தொடங்கினர்…

 

பிரபு தன்னிலை விளக்கம் சொல்ல “மிரு “எனவும்…”ச்சீ..”இனிமேல் உங்க வாயால அப்படி சொல்லாதீங்க…நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்…உங்களை காதலிச்சது நான் பண்ண தப்பா…நீங்க இப்படி சில்லியா பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை…என்னோட நிலைமையை நினைச்சு பார்த்தீங்களா…

என்னோட அப்பா காதலை வெறுக்கறவர் தான்,ஆனா உங்களை மாதிரி முதுகுக்கு பின்னாடி குத்துறவர் இல்லை…அம்மா எப்படிப்பட்ட நிலையில இருக்காங்கன்னு தெரியல…அப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சதுன்னா இதுக்கு நானும் உடந்தை அப்படின்னு தான் சொல்லுவாங்க…”என பேசிக்கொண்டே சென்றவளை இடையிட்டது…..

 

பிரபுவின் குரல் “ஹே என்னடி பேசிட்டே போற…நான் வேணும்னா எல்லாம் செஞ்சேன்,மாரிகிட்ட போனா அவர் எல்லாம் ஏற்பாடும் செஞ்சு கொடுப்பார்,அப்படியே நமக்கு கல்யாணமும் எந்த ஒரு தடங்களும் இல்லாம நடக்கும் அப்படின்னு தான் போனேன்…ஆனா அவன் உங்க அப்பா மேல இருக்குற விரோதத்தை இப்படி பழி தீர்த்துப்பான்னு எனக்கு எப்படி தெரியும்…நான் எதுவும் வேணும்ன்னு செய்யல புரிஞ்சிக்கோ…உங்க அம்மா நல்லா தான் இருக்காங்க..சாரதி போய் பார்த்துட்டு தான் வந்தான்..தேன்மொழி கூட உங்க அம்மாக்கு உதவியா இருக்கா…இரண்டு பெரும் கொஞ்சம் வருத்தமா தான் இருக்காங்க…அதுவும் இல்லாம…”என அவன் இழுக்கவும் “என்ன “எனபது போல் அவனை நோக்கினாள்…

 

“நம்பளோட கல்யாண விஷயமும் அவங்களுக்கு தெரியும்…சாரதிக்கிட்ட சொல்லி அவங்க கிட்ட சொல்ல சொல்லிட்டேன்…”என்றான்.

 

“என்னது “என மிருணா அதிர்ந்து எழவும் “இதுல அதிர்த்ச்சி அடைய என்ன இருக்கு மிரு..எப்போவாவது தெரிய வேண்டியது தான,இப்போ தெரிஞ்சா என்ன..”என்றான் சாதாரணமாக…

 

ஆனால் ஒரு பொண்ணுக்கு தானே தெரியும் ,அவளை பெற்ற அப்பா,அம்மா எவ்வளவு வேதனை அடைவர் என்று..மிருணாவிற்கு பிரபுவிடம் எப்படி சொல்வது என்று புரியவில்லை…அவனை முடிந்த மட்டும் முறைத்து விட்டு அவனிடம் பேசாமல் இருந்தாள்…ஸ்ரீ மற்றும் சுபர்ணா இருவர் மட்டுமே அவளின் கண்ணுக்கு தெரிந்தனர்…

 

பிரதாப்,சாரதி,ஸ்ரீகாந்த்,பிரபு நால்வரும் ராமைய்யாவினை சென்று சந்தித்து திருமணத்தினை பற்றி பேச முயன்றனர்…ஆனால் அவர்கள் சென்ற நேரம் ராமைய்யாவினை ஒரு மருத்துவமனையில் சேர்த்து இருப்பது தெரிய மிருணா உடன் அங்கு சென்று பார்த்தனர்….

 

அதிக ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்து இருக்கிறார் என்றும்,இரண்டு நாட்கள் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருந்தனர்…

 

மிருணா சென்று பார்க்கும் போது அவளின் அம்மா அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தார்…மிருணா ஓடி சென்று அம்மா என அழைக்கவும் அதிர்ந்து நிமிர்ந்தவர் “அடிப்பாவி,சண்டாளி,இப்படி ராஜா மாதிரி இருந்த மனுஷனை இப்படி படுக்கைக்கு கொண்டு வந்துட்டியே,உனக்கே இது நியாயமா படுதா,அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன் காதலும் வேண்டாம்,கத்திரிகாயும் வேண்டாம்னு,என் பேச்சை கேட்டியா,யாரோ ஒருத்தனுக்காக,என்ன எல்லாம் நாடகம் ஆடி,ச்சீ…இனிமேல் எங்க கண் முன்னால கூட இருக்காத,போடி போ..இனிமேல் இங்க வரதா,இருக்குற கொஞ்சம் நஞ்சம் உயிரையும் எடுத்துட்டு போகாத…போடி போ..”என அவளை வெளியில் அவள் சொல்லவருவதை கேட்க கூட விருப்பம் இல்லமால் துரத்தினார்…

 

மிருணா கண்கலங்கி நிற்கவும் பிரபு ஆறுதலாய் அவனை அணைத்து கொண்டான்…ஆனால் அவளோ தீ சுட்டார் போல அவனிடம் இருந்து விலகி எல்லாத்துக்கும் நீ தான்  காரணம் என அவனிடம் கத்தியவள் மருத்துவனை விட்டு வெளியேறினாள்…

 

அதன் பிறகு மிருணா எதற்காகவும் பிரபுவிடம் பேசவில்லை என்பதைவிட அவன் பேச வரும்போதெல்லாம் தவிர்த்தாள்…இரண்டு நாட்கள் மதுரையிலே தங்கி ராமைய்யாவின் உடல்நிலை சிறிது சீரான பிறகே எல்லோரும் பெங்களூரு வந்து சேர்ந்தனர்…

 

இதனிடையில் பிரதாப் மூலம் விஷயம் அறிந்த ஸ்ரீ மிருணாவினை சமாதான படுத்த எடுத்து வைத்த எந்த ஒரு அடியும் ஒழுங்காய் அமையவில்லை…

 

நாளுக்கு நாள் மிருணா பிரபுவிடம் இருந்து விலகியே இருந்தாள்…ஸ்ரீ இதனை கண்டு காணாமல் பார்த்து கொண்டு இருந்தாலும் அவளால் அப்படியே விடமுடியவில்லை…

 

நடந்த அணைத்து குழறுபடிகளையும் சொன்னவள் பிரபுவினை பற்றி புரியவைக்க முயன்று வெற்றியும் கண்டாள்…அதன் பிறகு சிறிது சிறிதாக அவர்களுக்குள் இருந்த விரிசல் குறுகியது…அதன் பிறகே அவர்கள் தேன்நிலவிற்கு சென்றது….

 

ஆனால் இன்னும் மிருனாவிற்கு பிரபுவின் மேல் இருக்கும் கோவம் போகவில்லை…அது ஒவ்வொரு சமயம் வெளிவரத்தான் செய்கிறது…

 

இவ்வளவு பிரச்சனையில் என்னால உன்கூட பேச முடியல…என்ன செய்யலாம் அப்படின்னு கேட்க போன் பண்ணா லைன் கிடைக்கல…நான் என்னடா பண்ணட்டும்…என்றான் பிரபு பரிதாபமாக….

 

இவனின் கதையை கேட்ட விஜய் “ஹ்ம்ம்…ஆமாடா பாவம் தான் நீ…….உன்னை மன்னிச்சிட்டு விட்ட மிருணா மிகவும் நல்லவங்க…”என்றான் கிண்டலாக…

 

“என்னடா கொழுப்பா,நான் எவ்வளவு பீலிங்க்ஸ் ஓட சொல்றேன்..நீ என்னடான்னா கிண்டல் பண்ற…”

 

விஜய் “சுண்டலும் இல்லை,கிண்டலும் இல்லை….உனக்கு தான் எதுவமே ஒழுங்கா வராதே,இதுல நீ எதுக்கு பிளான் போட்ட,ஸ்ரீ மேடம் பிளான் உன்னை விட மோசமா என்ன…”என்று அவளின் பிளான் என்னவாக இருந்து இருக்கும் என்று அறிய ஆவலுடன் கேட்டான்…

 

“அவ பிளான் எல்லாம் நல்ல தான் போட்டா ,நான் தான் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டேன்…அவ போலீஸ் ஸ்டேஷன்ல கல்யாணத்தை பண்ணிக்க சொன்னா,ஆனா நான் தான் லூசு மாதிரி வேணாம் அப்படின்னு சொல்லிட்டேன்…”என்றான் பிரபு

 

“பரவயில்லையே அடிக்கடி நீயும் உண்மையை ஒத்துக்கற…கிரேட்…”என்றான் சிரிப்புடனே…

 

“உண்மையா…என்ன உண்மை…”என்றான் பிரபு புரியாமல்.

 

“ஹ்ம்ம்…நீ ஒரு லூசுன்னு….”என்றான் விஜய் பெரும் சிரிப்போடு….

 

அவன் சிரிப்பதை ஒரு ஜோடி கண் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்து கொண்டு இருந்தது….”எப்போது என்னுடன் இப்படி சிரித்து பேசுவாய்…”என வேதனை கொண்டது….அதேசமயம் “உன்னை இப்படி என்னுடன் பேச வைக்கிறேன்”என சபதமும் கொண்டது அந்த பேதை மனது….

 

உந்தன் கண்ணில் எந்தன்

வானவில்!!!

உந்தன் நெஞ்சில் எந்தன்

பூகோளம்!!!

உந்தன் மூச்சில் எந்தன்

சுவாசம்!!!

உந்தன் பேச்சில் எந்தன்

மௌனம்!!!

உந்தன் சிரிப்பில் எந்தன்

நிம்மதி!!!

உந்தன் பார்வையில் எந்தன்

வெட்கம்!!!

 

விலகல் தொடரும்

 

Advertisement