Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-5

 

சிறிது நேரம் அங்கே மௌனம் ஆட்சி புரிந்ததுஅதை பிரபு  தான் உடைத்தெறிந்தான் “என்ன பலத்த யோசனை…”

 

மிருணா”ஒன்னும் இல்லை…எதுக்கு வர சொன்ன..”என்று எதிர் கேள்வி கேட்டாள்…

பிரபுஉன் கிட்ட கொஞ்சம் பேசணும்…”

 

மிருணாஹோபோன்ல பேசினது பத்தாதா ???…நேர்ல சொல்லணுமா..சொல்லு ,,,கேக்குறேன் ..”என்று இரு கைகளையும் கட்டிக்கொண்டு நின்றாள்

பிரபுமிருஏண்டி..இப்படி பண்றநான் தான் தெரியாம,பேசிட்டேன்னு சொல்றேன் இல்லஎதுக்கு இவ்வளவு கோவம் உனக்குஎன்றான் பொறுமையாக.

 

மிருணாஹோநீங்க பேசிறது எல்லாம் பேசி எங்களை கஷ்டபடுத்துவீங்க ,அப்புறம் தெரியாம பேசிட்டேன்னு மன்னிப்பு கேட்ப்பீங்க,அதுக்கு உடனே நாங்க மன்னிக்கணும்அப்படி தானா…”என்றாள் காட்டமாக,அவளின் அப்பாவும் அவளை பற்றி சிந்திக்காமல் அவரே முடிவெடுத்த கோவம்,கண் மண் தெரியாமல்  அவன் மேலே திரும்பியது.

 

அவளின் இக்கோவத்தில் அவன் அதிர்த்ச்சியோடு  நின்று  இருந்தான் என்றால்,வழியில் செல்பவர்கள் இவர்கள் இருவரையும் ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு சென்றனர்

 

பிரபுவிற்கு அவளின் கோவத்தினை என்ன சொல்லி தணிப்பது என்று தெரியவில்லைஅதுவும் நடு ரோட்டில் நின்று கொண்டு இப்படி சண்டை போட்டால் தனக்கு தான் அசிங்கம் என எண்ணியவன்…”சரி இதை பத்தி இப்போ பேசவேண்டாம்இன்னொரு நாள் பேசிக்கலாம்,..நீ ரூம்க்கு போ..” என்றான்.

 

மிருணாபேச தான வந்தீங்க..இப்போவே பேசுங்க,நான் கேட்குறேன்,எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை …”என்றாள் அந்த இடத்தை விட்டு அகலாமல் அங்கே நின்று கொண்டு

 

“என்றும் இல்லாமல் இன்று அதிகம் அடம் செய்யும் மிருணா அவனுக்கு புதிதுஎன்னவாயிற்று இவளுக்கு,பேய் பிடிச்சிடுச்சா என்ன,இன்னைக்கு என் தலை வெடிக்க போகுது அது கண்பார்ம்என எண்ணியவன்…இப்போது பேச இது தகுந்த இடம் ,இதுவல்ல என எண்ணியவன்,அவளை அவனின் நண்பன் சாரதி வீட்டிற்கு அழைத்து செல்ல எண்ணி “சரி வா சாரதி வீட்டுக்கு போலாம்,ரோடுல நின்னு பேச முடியாது..”

 

மிருணாநான் எங்கையும் வரலஎதுவா இருந்தாலும் இங்கவே இருந்து பேசுங்க…”

 

அவளின் பதில் கடுப்பான பிரபுஎன்னடி ஆச்சு உனக்கு,நல்லா தான இருந்த  ,ஏன் இப்படி என்னை கொல்ற…”என்றான் எரிச்சலாக.

 

மிருணாஆமா நீங்க கொல்றதை விட,நான் தான் உங்களை கொல்றேன்..கொஞ்சம்கூட உங்களுக்கு அறிவில்லையா…??…இந்த நேரத்துக்கு உங்க பிரண்ட் வீட்டுக்கு என்னை அழைச்சிட்டு போனா,அவங்க எல்லாம் என்னை பத்தி என்ன நினைப்பாங்க…”என்றாள் கோவமாக.

பிரபுஇதுல போய் நினைக்க என்ன இருக்கு…”என இழுத்தவனின் மனதில் மின்னல் வெட்டியது…”…இப்போது இவளை அழைத்து சென்றால்,கண்டிப்பாக சாரதி அம்மாவிற்கு இவர்களின் உறவு தெரியவரும்,சாரதி அம்மா பருவதம் பிரபுவின் அப்பா சுந்தரத்திற்கு ஒன்று விட்ட தங்கை,இவன் பெங்களூரில் வேலைக்கு சேரும் போது தான் சாரதியை பார்த்ததுபிறகு இருவரும் தங்களை பற்றி பகிர்ந்து கொண்டதில் தான் அவர்களுக்கு தெரிய வந்ததுஇருவரும் உறவினர்கள் என்று.

அப்படியே நண்பன் மற்றும் உறவினன் என்று சாரதி உடன் பிரபுவிற்கு ஒரு நல்ல நட்பு இருந்தது…சாரதிற்கு இவர்களின் காதல் தெரியும்,ஆனால் அவன் இதை எல்லாம் வீட்டில் மூச்சை விடவில்லை

 

பிரபுசாரி நான் அதை பத்தி யோசிக்கல..கொஞ்சம்பேசணும்

பார்க்குக்கு போகலாமா..???..”

மிருணாஹ்ம்ம் ……ஆனா,நான் சீக்கிரம் வரணும்…”

 

பிரபுசரி வா,வந்து உட்காரு,”.

 

மிருணாஎங்க வந்து உட்காரது..நாம நடந்தே போலாம்…”

 

பிரபுசொன்னா கேளு,நடந்து போனா உனக்கு தான் லேட் ஆகும்,வந்து உட்காரு,சீக்கிரம் வரணும்ன்னு சொன்ன இல்ல,எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல,நடந்தே போலாம்,உனக்கு ஓகே அப்படின்னா எனக்கும் ஓகே.”

 

 

மிருணாஇல்ல இல்லநாம வண்டியிலேயே போகலாம்..”என்றவள் அவன் வரும் முன்னரே வண்டியின் அருகில் சென்று நின்று கொண்டாள்இதை பார்த்த பிரபுவின் இதழுக்கிடையில் புன்னகை அரும்பியது..பிறகு அவளை அழைத்து கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றான்..வண்டியினை அருகில் உள்ள இடத்தில் நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்அங்கு உள்ள பெஞ்சின் மேல் அமர்ந்தனர்

 

காற்று சிலுசிலுவென முகத்தில் மோதிக்கொண்டு,குளுமையை கொடுத்து கொண்டு இருந்தது..இருக்கும் மனபாரம் எல்லாம் குறைந்தது போல் உணர்ந்தனர் இருவரும்என்னதான் மனம் லேசாகபட்டாலும் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வரபோவத்தில்லை என அறிந்து தான் இருந்தனர்..

 

பிரபுஹ்ம்ம் ,சொல்லு என்ன சொன்னாங்க ….??”.

 

மிருணாஎன்ன, என்ன சொன்னாங்க,இப்படி மொட்டையா கேட்டா எப்படி…??”.என படபடப்பாக வந்தது அவளின் பதில்.

 

பிரபுஉன்கூட இத்தனை நாள் பேசிட்டு பழகிட்டு இருக்கேன் ,உன்னோடஒவ்வொரு நடவடிக்கையும் எனக்கு தெரியலைனா கூட,ஒரு சில நடவடிக்கை என்னால புரிஞ்சிக்க முடியும்,என்னதான் நான் அப்படி  சொன்னது உனக்கு பிடிக்கல அப்படின்னாலும் அதை கொஞ்சம் நேரத்துலையே மறந்துட்டு என் கிட்ட பேசக்கூடிய ஆள் நீ,ஆனா இன்னைக்கு இவ்வளவு நேரமும் பேசாம முரண்டு பிடிக்கிறன்னா,ஏதோ விஷயம் இருக்கு.அது எதுவா இருந்தாலும் என் கிட்ட தயங்காம சொல்லு…”

 

மிருணா “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை…”என்றாள் அவன் முகம் பார்க்காமல்…

 

பிரபு “இங்க பாரு மிரு,என் கிட்ட சொல்லாம ,உன்னாலே தீர்க்க முடியும்னா,எனக்கும் ஓகே தான்,ஆனா அப்படி முடிஞ்சு இருந்தா,நீ இப்படி கலங்கி நிக்க மாட்ட,நீ கலங்கி இருக்கும் போதே தெரியுது அது எவ்வளவு பெருசுன்னு,முரண்டு பிடிக்காம,என்ன ப்ராப்லம்னு சொல்லு,தேவையில்லாம நீ மட்டும் மனசுல போட்டு குழம்பிக்காத…”என்றான் அதூரமாக.

 

மிருணா ”மிபுபு…”என்ற கூவலோடு அவன் தோள் சாய்ந்து அழுதாள்…

 

பிரபு “என்னடா,என்ன ஆச்சு,ஏன் இப்படி அழுற,என்னனு சொல்லுமா,என்னன்னு சொன்னா தானா தெரியும்….”என்றான் அவளை சமாதான படுத்தியபடி…

மிருணாவும் அழுதபடியே அவளின் அப்பா சொன்னதை எல்லாம் தெரிவித்தாள்….

 

பிரபு “இதுக்கு ஏண்டா நீ அழுற,நல்ல விஷயம் தானே…” எனவும்

 

அழுது கொண்டு இருந்தவள்,அதிர்ச்சியாக அவனை நோக்கினாள்…

 

பிரபுவின் முகம் எதையும் காட்டாமல் சாந்தமாய் இருந்தது…ஆனால் அவனின் மனமோ “எப்போடா உங்க வீட்ல ஆரம்பிபாங்கன்னு நினைச்சேன்…இனிமேல் சுந்தரத்துகிட்ட பேச வேண்டியது தான் ..”என முடிவெடுத்து கொண்டான்…

 

ஆனால் அவனின் சாந்தமான முகத்தை பார்த்தவளின் கண்கள் கலங்கி “மிபு,உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா??..எனக்கு என்னவோ பயமா இருக்கு,நீ எனக்கு கிடைக்காம போய்டுவீயோன்னு,மனசு படபடன்னு அடிச்சிக்குது,நீ என்ன இப்படி சாதாரணமா சொல்ற,ப்ளீஸ் மிபு விளையாடாத,சத்தியமா நீ இல்லாம என்னால இருக்க முடியாது,என்னை ஏமாத்திடாத மிபு…ப்ளீஸ்….அப்படி மட்டும் பண்ணின என்னை நீ உயிரோடவே பார்க்க முடியாது….”என அவன் தோள் மேல் சாய்ந்து கதறி அழுதாள்…

 

அவள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தவன் அவளின் கடைசி வாக்கியத்தில் கோவம் கிளர்ந்தெழ அவளை தன்னிடம் இருந்து பிரித்து ஓங்கி அறைந்தான்….

 

கன்னம் ஜிவுஜிவு என்று எரிய,கண்கள் கலங்க,மிரண்டு விழித்த மிருணாவை கண்ட பிறகே கோவத்தினால் அவளை அடித்ததை உணர்ந்த பிரபு அவளை கட்டி அணைத்து கொண்டு “ஏண்டி இப்படி கொல்ற,நீ இப்படி சொல்லலாமா,உன் பிரபு உனக்குத்தான்,உன்னை நான் விட்டுடுவேனாடி,நீன்னா எனக்கு உயிர்,என் உயிர் இல்லாம நான் எப்படிடி இருப்பேன்,என்ன வார்த்தை எல்லாம் சொல்ற,என்னை இப்படி வார்த்தையால கொன்னுட்டியேடி “என சொன்னவன் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடி அவளின் கன்னத்தில் தெரித்தது…

 

தன் கன்னத்தில் பட்ட கண்ணீரில் அவனை நோக்கியவள்,அவனின் உண்மை காதலை ஒரு துளி கண்ணீர் மூலம் உணர்ந்தவள் “சாரி மிபு, எனக்கு கலக்கமாவே இருந்தது,நீயும் அப்படி சொல்லவும்,

எனக்கு எதுமே புரியல,எங்க நீ என்னை விட்டு போய்டுவியோ,இல்லை நம்பளை பிரிச்சிடுவாங்களோன்னு பயமா இருந்தது,அதான் அந்த பயத்துல என்ன என்னவோ பேசிட்டேன்,இனி அப்படி பேசமாட்டேன்..என்னை மன்னிச்சிடு” என்றாள் கேவலோடு…

 

அவளின் ஆதுரமாக அணைத்துக்கொண்டவன்,அவளின் விழி கண்ணீரை துடைத்துவிட்டான்…

 

அவனின் மனதில் அவன் அப்பாவிடமும்,மிருணாவின் அப்பாவிடமும் எப்படி பேசி சம்மதம் பெறுவது என்று சிந்தித்து கொண்டு அவனினுக்கும் மிருணாவிற்கும் ஆனா கல்யாண கனவில் மூழ்கினான்…

 

இவன் மனம் இப்படி கனவில் இருக்க,மிருணாவின் அப்பாவோ எங்கே எப்போது திருமணத்தை நடத்துவது,யார் யாரை அழைப்பது,என்ன மாதிரியான சீர் வைப்பது,அவர் ஜாதியினரிடையே தன் செல்வாக்கை காட்ட திருமணத்தை மிகவும் சிறப்பாய் நடத்த கனவு காண ஆரம்பித்தார்…

 

கண்ணீர் கண்ணீர் துளியே துளியே

உன் கவலைகள் துடைத்திடும் கைகள் இங்கே

கடல் மேல் மழை நீர் விழுந்தால்

அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

கண்கள் என்று இருந்து விட்டால்

அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை

கடவுளுக்கும் கவலை உண்டு

எங்கும் இன்பம் மட்டும் இருக்கின்ற இதயமில்லை

 

கல்யாண கனவில் மூழ்கி இருந்தவனை மிருணா தான் உலுக்கி நினைவுக்கு கொண்டு வர வேண்டியதாய் இருந்தது…

 

மிருணா “என்ன மிபு ,நான் கூப்பிட்டுட்டே இருக்கேன் ,நீங்க என்ன யோசனையில இருக்கீங்க …”

 

பிரபு “அது ஒன்னும் இல்ல மிரு ,உன்னோட கல்யாணத்துக்கு மொய் வைக்கலாமா இல்ல ஏதாவது பரிசு கொடுக்கலாமன்னு யோசிச்சிட்டு இருந்தேன் “என்றான் சிரியாமல்.

 

மிருணா “என்னதுதுது…எவ்வளவு கொழுப்பு இருக்கும் உங்களுக்கு ,நானே எப்படிடா அப்பா கிட்ட சொல்லி புரியவைக்கிறது,நம்ப காதலை எப்படி சொல்றதுன்னு ஒன்னும் புரியாம,தண்ணி கிடைக்காத காட்டுல இருந்து தண்ணிக்கு தவிக்கிற மாதிரி ,ஐடியா  ஏதாவது கிடைக்குமான்னு தவிச்சிட்டு இருக்கேன் ,உங்களுக்கு என்னன்னா கிண்டலா இருக்கா ??…” என்றாள் மேல் மூச்சு கீழ் மூச்சு  வாங்க

 

பிரபு “ஹே ஹே …கூல் மிரு …சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேன் …நான் சொன்னதை அப்படியே நம்பிட்டியா …அய்யோ அய்யோ …”என்றான் வடிவேல் பாணியில்…

 

மிருணா “மிபு என்னது இது,ஒரு சீரியஸ்னஸ் இல்ல உங்ககிட்ட,இப்படி சிரிச்சிட்டு இருக்கீங்க,இப்படியே  சிரிச்சிட்டு இருந்தீங்க,நம்ப பொழப்பு சிரிப்பா சிரிக்க போகுது…”என்றாள்.

 

பிரபு “ஹே மிரு,இந்த டயலாக் எந்த பாட்டி கிட்ட இருந்து சுட்ட …”

 

மிருணா “என்ன எந்த பாட்டி ??”.என்றாள் புரியாமல்.

 

பிரபு “ஹ்ம்ம்…நீ வர வர டுயூப் லைட் ஆகிட்டு வர …எதுமே உனக்கு புரியவேமாட்ங்குது ,என்ன செய்யறது …”

 

மிருணா “ஏன் சொல்ல மாட்டீங்க ,எங்க அப்பத்தா சொல்லும் சேர்க்கை சரியா இருந்தா ,நாமும் சரியாய் இருப்போமாம்..

என்னோட சேர்க்கை தான் உங்களுக்கு தெரியுமே ,அப்புறம் எதுக்கு என்னை கேட்க்குறீங்க ,உங்ககிட்டயே கேட்டுக்கோங்க ,ஏன் இப்படி இருக்குறீங்கன்னு …”என்றாள் வெடுக்கென..

 

பிரபு “ஏன் மிரு ,இவ்வளவு சூடா இருக்க “என்று அவள் அருகில் நகர்ந்து அவளின் தோளினை சுற்றி தன் கைகளை அணைவாய் போட்டு அணைக்க முயன்றான்…

 

அவன் கைகள் தோளை சுற்ற முற்பட்டதும் சட்டென்று அவனின் கைகளை தட்டிவிட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்…

 

அவளின் இக்கோவத்தினை கண்டவன் சிரிப்புடனே அவளின் கையினை பிடித்துகொண்டு அவளின் அருகில் அமர்ந்தான்…அவள் கையினை விளக்கி கொள்ள இழுக்கவும் அவனின் பிடி இறுகியது…

 

பிரபு “எதுக்கு மிரு இப்போ உனக்கு இவ்வளவு கோவம் வருது…என்னோட பொறுமையான எருமை மிரு எங்க போனா ???…இது என் மிரு இல்லையே …”.

 

மிருணா “யாரை பார்த்து எருமைன்னு சொல்றீங்க ,நானா எருமை ,நானா எருமை …”என்று கேள்வியோடு சில பல அடிகளையும் அவனுக்கு பரிசாய் வழங்கினாள்…

 

பிரபு “ஹே போதும்டி,ரொம்ப வலிக்குது…என்னோட சாலு பார்த்து பார்த்து வளர்த்த விட்ட என்னை அடிச்சே கொன்னுடுவ போல் இருக்கு,உன்னாலே நான் 10 கிலோ குறைஞ்சிட்டேன்…இரு சாலு கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு ..”என்றவன் அவளிடம் இருந்து அடிகளில் தப்பிக்க முயன்று கொண்டு இருந்தான்…

சிறிது நேரம் அடித்து ஓய்ந்தவள் மூச்சு வாங்க அமைதியாய் அமர்ந்து கொண்டாள்…

 

சிறிது நேரம் போக “என்ன மிபு இப்படி கூலா இருக்கீங்க,எனக்கு அப்பா சொன்னது நினைச்சா பயமா இருக்கு,எப்படி அவரை நான் சமாளிக்க போறேன்,எனக்கு இப்பவே இதயம் எகிறி வெளிய குதிக்கற மாதிரி இருக்கு,இதுல நீங்க என்னடான்னா ,காமெடி பண்ணிட்டு இருக்கீங்க,”என்றாள் அழுகுரலில்.

 

பிரபு “ஹே சில் பேபி..இப்படி நீ டென்ஷன் ஆகுறதுனால என்ன நடந்திட போகுது,உங்க அப்பா உனக்கு அந்த மாப்பிள்ளை வேண்டாம் அப்படின்னு சொல்லிட போறாரா,இல்ல என்னை தான் மாப்பிள்ளை எப்படின்னு சொல்லிட போறாரா,இது எதுவும் இல்ல,அப்புறம் எதுக்கு தேவை இல்லாம முன்னாடி நடக்க போறதுக்கு இப்பவே தேவை இல்லாம டென்ஷன் ஆகுற…

 

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்,

 

இந்த கீதா சாரத்தோட மூணு வரிகள் நினைச்சு பாரு நீ எதற்கும் கவலைப்படவே மாட்ட…எப்பவும் வருவதை ஏற்று கொள்ள பழகிக்கணும் மிரு,தேவை இல்லாமல் நீயும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்காத …இனிமேல் என்ன பண்ணலாம் அப்படின்றது மட்டும் யோசி…சரியா …”

 

மிருணா “ஹ்ம்ம் …பேசுறது மட்டும் நல்லா வக்கனையா பேசுறீங்க,என்ன பண்ணலாம் அப்படின்னு ஏதாவது யோசிச்சீங்களா…இப்படி காமெடின்ற பேர்ல என்னையும் சேர்த்து அறுக்குறீங்க…”என்றாள் சிரியாமல்.

பிரபு அவளை பார்த்து முறைத்தவன்…”நான் எதுவும் பிளான் பண்ணலையா…நான் எல்லாம் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்…”என்றான் கெத்தாக.

 

மிருணா “என்னது முடிவு பண்ணிட்டீங்களா,என்ன முடிவு பண்ணீங்க…ப்ளீஸ் மிபு ,என்னன்னு சொல்லுங்க ..”என்றாள் தீவிரமாக...

 

அவளின் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்து,இவ்வளவு நேரம் அவளை இலகுவாக்க செய்த சில்மிஷம்,காமெடி எதுவும் செய்யாமல் அவனும் அவர்களின் வாழ்க்கை பற்றிய அவனின் முடிவினை சொன்னால் இவளின் பதில் என்னவாக இருக்கும் என்பது அவனால் ஊகிக்கமுடியவில்லை

 

சிறிது நேரம் அவளின் முகத்தினை பார்த்தவன் மனதில் “நம்மோட முடிவிற்கு இவளின் பதில் என்னவாக இருக்குமோ…வேண்டாம் “என்று சொல்லிவிடுவாளோ என அவனின் மனம் சிறிது நேரம் தயங்கியது…

 

மிருணா “என்ன மிபு யோசனை,சொல்லுங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க,இல்ல நீங்க உங்க வீட்ல பேசிட்டீங்களா,அவங்களுக்கு ஓகே வா,அப்போ என்னோட வீட்ல தான் நான் பேசி சம்மதம் வாங்கனுமா..??…”என கேள்வியும் அவளே பதிலும் அவளே என பேசிக்கொண்டு இருந்தாள்…

 

அவளின் பேசியதை கேட்கும்போது தான் அவனுக்கு அவனின் அப்பா அம்மாவிடம் இதைபற்றி பேசிவிட்டு இவளிடம் பேசிக்கொள்ளலாம் என முடிவெடுத்தான்…அவனுக்கு அவனின் அப்பா அம்மா கண்டிப்பாக அவனின் காதலுக்கு தடை விதிக்கமாட்டார்கள் என நூறு சதவீதம் நம்பினான்…

அதனால் அவன் எடுத்த முடிவினை எதுவும் அவளிடம் சொல்லாமல் “மிரு நான் என்ன நினைச்சேனா, முதல்ல நான் எங்க அப்பா,அம்மாகிட்ட பேசிட்டு,அவங்க சம்மத்தோடு உங்க வீட்டுல பேசலாம் அப்படின்னு நினைச்சேன்,ஆனா உங்க வீட்ல இவ்வளவு சீக்கிரம் எல்லாமே ஏற்பாடு பண்ணுவாங்கன்னு நான் நினைக்கல,நான் இந்த முறை போகும்போது,அப்பா கிட்ட முதல்ல நம்பளோட காதலை பத்தி சொல்றேன்,அப்புறமா என்னோட அப்பா,அம்மா வந்து உன்னோட அப்பா,அம்மாகிட்ட பேசட்டும்,அவங்க பேசினா தான் நல்லா இருக்கும்..”என அவனோட எண்ணங்களை பகிர்ந்து கொண்டான்.

 

அவன் சொல்வதை அமைதியாய் கேட்டவள் “நீங்க சொல்றதும் சரி தான்,ஆனா அதுக்கு முன்னாடி நான் அப்பா கிட்ட நம்பளோட காதலை சொல்லிடறேன்.. நான் சொன்னா தான் அவர் திருமண ஏற்பாட்டை எல்லாம் நிறுத்துவார்…வரவங்க முன்னாடி அப்பா தலைகுனிய கூடாது மிபு..என்னால முடிஞ்ச அளவு நான் அவரை நம்ப திருமணத்துக்கு ஒத்துக்க வைக்கிறேன்..அப்பா சம்மதிக்கலனா உங்களோட அப்பா,அம்மா அதான் என்னோட மாமனார் ,மாமியார் , உங்களோட மாமனார்,மாமியார் கிட்ட பேசுனா சரியாகிடும்…என்ன நான் சொல்றது சரி தானா..”

 

பிரபு “மிரு நீயா இது,அப்பா அப்படினா 10000 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடுற நீயா,நம்ப காதலை அவர்கிட்ட தைரியமா சொல்ல போற,என்னால நம்பவே முடியல,நீ காமெடி ஒன்னும் பண்ணலையே ..”என்றான் கிண்டலோடு.

 

மிருணா “மிபு என்ன இது எப்ப பாரு என்னை  கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க…போங்க “என்றாள் சிணுங்களோடு…

அவளின் சிணுங்களை ரசனையோடு வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான் பிரபு…தாம் சொல்லியதற்கு அவனிடம் இருந்து பதில் இல்லாமல் இருப்பதை உணர்ந்து அவனை நோக்கியவள் அவனின் கண்களில் தெரிந்த காதல் கலந்த ரசனை கண்டு முகம் சிவக்க அவன் அறியா வண்ணம் முகத்தை திருப்பி கொண்டாள்…

 

ஆனால் அவனின் சிணுங்களை ரசனையோடு ரசித்து கொண்டு இருந்தவன் கண்ணில் தன்னவளின் கன்ன சிவப்பு மட்டும் தப்புமா என்ன ..??…”ராட்சசி இப்படி கொல்றீயே…”என முணுமுணுத்தவன் இனிமேலும் இங்கு இருந்தால் தன்னை தானே கட்டுபடுத்திக்கொள்ள முடியாது என எண்ணி “சரி மிரு,உனக்கு டைம் ஆகுது,நாம மீதியை நடந்துக்கிட்டே பேசலாம்,வா “என்றவன் தனது வண்டியினை எடுக்க சென்றான்…தன்னை சிறிது சமன்படுத்தி கொண்டு அவளும் வந்தாள்…

 

பிரபு “எப்போ மிரு ஊருக்கு போற…வீட்ல எப்போ வர சொன்னாங்க “

 

மிருணா “அடுத்த மாசம் மிபு “

 

பிரபு “சரி அப்பாகிட்ட  பொறுமையா பேசு,எனக்கு என்னவோ நீ வீட்ல சொல்ல வேண்டாம்ன்னு தோணுது, நாங்களே வீட்ல வந்து சொல்லிக்கிறோமே…”என்றான் அவன் மனம் ஏதோ தவறாய் நடக்க  போகிறது என அடித்துக்கொண்டே இருக்கிறது.இதனை இவளிடம் சொன்னால் இன்னும் கலவரம் ஆவாள் என அதனை அவளிடம் சொல்லவில்லை…

 

மிருணா “இல்ல இல்ல மிபு,நான் முதல்ல சொல்லிடறேன்,அப்புறம் அப்பாக்கு உங்க மூலியமா தெரியவந்தா,அதுவே அவருக்கு  இன்னும் கோவத்தை கொடுக்கும், எதுக்கும் நான் சொன்ன பிறகு  அப்பா,அம்மாவோட வீட்டுக்கு வாங்க…அது வரைக்கும் நீங்க எனக்கு போன் பண்ண வேண்டாம்,நானே சரியான நேரம் பார்த்து அப்பாகிட்ட பேசுறேன்…”

 

பிரபு “அது எப்படி நான் போன் பண்ணாம இருக்க முடியும்…அது  எல்லாம் முடியவே முடியாது…நான் பேசியே தீருவேன்..”என்றான் விடாப்பிடியாக.

 

மிருணா “மிபு தயவுசெஞ்சு புரிஞ்சிக்கோங்க,இரண்டு நாளைக்கு ஒரு முறை போன் பண்றேன்…”என்றாள் கெஞ்சலோடு.

 

பிரபு முடியவே முடியாது என தர்க்கம் செய்ய, அவனிடம் ஒரு நாளைக்கு ஒரு முறையெனும் பேசுவேன் என சத்தியம் செய்யாத குறையாக  சொல்லி ,சமாதானம் படுத்துவதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றானது…

 

அவளை ஹாஸ்டலின்  முன்பு விடும்போது கூட “கண்டிப்பா நீ பேசணுமா மிரு,வேண்டாமே ,ப்ளீஸ் ” என்றான் மறுபடியும்  கெஞ்சலோடு...

 

மிருணா “ஆமா கண்டிப்பா நான் பேசணும் மிபு , இது என்னோட வாழ்க்கை,இப்போ நான் பேசலைன்னா,என்னால எப்பவுமே பேசமுடியாத ஆகிடும்,நீங்க  கவலைபடாதீங்க ,நான் பாத்துக்குறேன்..”என்றாள் வெளியில் தைரியமாக.. பிறகு  அவளிடம் விடை பெற்று சென்றான்

 

இன்று விடைகொடுக்கும் நான்

ஒர் நாள் விடை தெரியாமல்

இருப்பேனோ…..

என்றோ ஓர் நாள்

பதிந்த உன் நினைவுகள்

இன்று பசுமையாய்

இருக்கிறதே….

விடை தேடி அலைந்தேன்

என்னுள்…

விடையாய் மாறினாய்

 நீ என் வாழ்விற்கு….

 

விலகல் தொடரும்

Advertisement