Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-4

 

பிரபு மிருணாவிற்கு போன் செய்து கை ரேகைகள் தேய்ந்தது தான் மிச்சம்… அவளின் மொபைல் சுவிட்ச் ஆப் என்றே தான் வருகிறதுஅவளின் குடும்ப நிலை பற்றி ஒன்றும் தெரியாமல் பித்து பிடித்து போய் அமர்ந்து இருந்தான்தான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்படி செய்தாளே,என்ன ஆனதோ,அவளின் அப்பா என்ன சொன்னாரோ என அவன் மனம் தவித்ததுஅன்றொரு நாளில் மிருணா அவனிடம் சொன்னதை நினைத்தான்….

 

என்றும் போல் அன்றும் இருவரும் போனில் பேசிக்கொண்டு இருந்தனர்….

பிரபுசாப்டியாமிரு ..”

மிருணாஹ்ம்ம் ..சாப்டேன்நீங்க சாப்டீங்களா..??”

பிரபுஇன்னும் இல்ல மிருஎனக்கு என்ன உன்ன மாதிரி ஹாஸ்டலா என்னநான் சமைச்சி சாப்பிடனும்சமைக்க போர் அடிக்குது….விஜி வேற இல்லஅவன் இருந்து இருந்தா ,சமைச்சி இருப்பான்,ஒரு ஆளுக்கு சமைக்குறது அலுப்பு தெரியுமா,அதுனால ஒரு பிளான் பண்ணி இருக்குறேன்…” என்று நிறுத்தினான்..

 

மிருணாவும்பிளான் அஹ்,என்ன பிளான்..”என்றாள் ஆர்வமாக ,தனக்கு ஆப்பு வைக்க போவதை தெரியாமல்

பிரபுஎனக்கு வயசாகிட்டே போகுது இல்ல..”

மிருணாஹ்ம்ம்ஆமா ஆமாரொம்ப வயசாகிடுச்சு…”

பிரபுஅதுனால …….”

மிருணாஹ்ம்ம்அதுனால ….”என ஊக்கினாள்

பிரபுஅதுனாலஅதுனால ….நான் ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முடிவு பண்ணிட்டேன் ….”என்றான்.

 

மிருணாவாட் ..கம் அகைன்…”என்றாள் அதிர்ச்சியோடு ..சத்தியமாய் அவள் இப்பதிலை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை….எதோ ஒரு சமையல் ஆளை வைக்கிறேன் என சொல்லுவான் என எண்ணி இருந்தவளுக்கு பிரபுவின் பதில் அதிர்ச்சியை கொடுத்தது….

 

பிரபு  “ஆமா மிருநான் ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க போறேன்அந்த பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கும் அதுக்கு நான் உத்திரவாதம்,ஆனா என்னோட வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னு நீ தான் அந்த பொண்ணுகிட்ட கேட்டு சொல்லணும்…”என்றான் சோகமாக.

மிருணா  “அப்படியா..கேட்டு சொல்லிட்டா போச்சு..அப்படியே அவங்க அப்பாகிட்டையும் கேட்கட்டுமா…??..ஏன்னா அந்த பொண்ணு ரொம்ப பயப்படுது….”என்றாள் கிண்டலாக.

பிரபுஏன் அந்த பொண்ணு பயப்படுதுஎனக்கு புரியல….”

 

மிருணாபின்ன உங்கள மாதிரி ஒரு அரை லூசை கல்யாணம் பண்ண அந்த பொண்ணு பயப்படனும் இல்ல…”என்றாள் சிரிப்பை உள்ளடக்கிய குரலில்.

பிரபுஹே யாருடி அரை லூசு,நீ ஒரு அரை லூசு,உங்க அப்பா ஒரு அரை லூசு,உனக்கு வாழ்க்கை கொடுக்க வந்த நான் ஒரு அரை லூசு ..”என்று கோவத்தில் அவனையும் லூசு என்று திட்டிகொண்டான்

 

மிருணாஹ்ம்ம்நீங்களே ஒத்துகிட்டீங்களாஅரை லூசுன்னுவெரி குட்….”என்றாள் உல்லாச சிரிப்புடன்.

பிரபுஅடிப்பாவி,என் வாயாலே என்னை லூசுன்னு சொல்ல வச்சிட்ட..ரொம்ப கில்லாடி தான் நீ…”

மிருணாஆனா என்னையும் எங்க அப்பாவையும் அரை லூசுன்னு சொன்னீங்க..எவ்வளவு தைரியம் உங்களுக்கு.” என்றாள் பொய்யான கோவத்துடன்.

பிரபுஅது சும்மா,தமாசுக்கு,அதுக்கு போய் நீ கோச்சிக்கலாமா??…

இனிமேல் நான் அப்படி சொல்லமாட்டேன்நோ கோவம்ப்ளீஸ் ப்ளீஸ்…”என்றான் கெஞ்சலோடு

மிருணாரொம்ப கெஞ்சுறீங்க..அதுனால இந்த ஒரு டைம் விடறேன்இனிமேல் இப்படி சொன்னீங்க அவ்வளவுதான்…”என்றாள் மிரட்டலாக.

பிரபுஇல்ல மிரு சத்தியமா..இனிமேல் அப்படி சொல்லமாட்டேன்….

சாரிசரியா..”

மிருணாஹ்ம்ம் ..சரி

பிரபுஹ்ம்ம் சரி நான் கேட்டதுக்கு,உன் பதில் என்ன…??”

மிருணா  “என்ன பதில்நீங்க என்ன கேட்டீங்க…??”என்றாள் ஒன்றும் தெரியாதது போல.

பிரபுஹே இது தான் வேண்டாம்ன்னு சொல்றது,இந்த பொண்ணுங்களே இப்படி தான் போலநீ மட்டும் இதுல விதிவிலக்கா என்ன??….எல்லாம் ஒரு குட்டையில ஊறுன மட்டைங்க தான….கொஞ்சம் மாறுங்கடி….என்னைக்கு தான் நீங்க எல்லாம் திருந்த போறீங்களோ “என்றான் சலிப்பாக தான் சொல்வதை உணராமல்.

மிருணாஹோ அய்யாவுக்கு அதுக்குள்ளே சலிப்பு வந்துடுச்சோ….அதா நான் வேண்டாம் வேறை யாரையாவது பார்த்துக்கோங்கன்னு சொன்னேன்எனக்கு அப்பவே தெரியும்நீங்க எல்லாம் இப்படித்தான்..நான் தான் உங்களை நம்பினேன்..எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.”என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

பிரபுஹே ,நான் இப்போ என்னடி சொன்னேன்,எதுக்கு இப்படி மூக்கை உறிஞ்சற..ஐயோ சாமி ,தெரியாம ஒளறிட்டேன்டி,தயவு செஞ்சு அழாதடி,ப்ளீஸ்,இனிமேல் இப்படி பேச மாட்டேன்…”என்று காலில் விழாத குறையாக கெஞ்சினான்

மிருணா “அது எப்படி தெரியாம சொல்லுவீங்க…மனசுல இருக்குறது தானா வார்த்தையா வெளிய வரும்….உங்களுக்கு எல்லாம் பொண்ணுங்கள பார்த்தா எப்படி இருக்கு…நாங்க எல்லாம் கிள்ளுகீரையா என்ன?..எல்லோரும் பொண்ணுங்களையே இறக்கி பேசுறீங்க…நாங்க மட்டும் தப்பு பண்ற மாதிரி பேசுறீங்க,நீங்க எல்லோரும் உத்தம புத்திரனுங்க பாருங்க…ச்ச நீங்ககூட இப்படி எல்லாம் பொண்ணுங்களை பேசுவீங்கன்னு நினைச்சுகூட பார்க்கல…எல்லா அம்பளைங்களும் இப்படி தான் போல….”என ஒட்டு மொத்த பெண் வர்க்கத்திற்கு சேர்த்து வைத்து அவனிடம் பொரிந்து தள்ளினாள்…

 

பிரபுவின் மனமோ “அடேய் மடையா,எந்த நேரத்துல ,எது பேசறதுன்னு தெரியறது இல்லை,இப்படியா பேசி மாட்டி தொலைஞ்சிப்ப,விட்டா இப்பவே இவ பெரிய போராட்டத்தை நடத்திடிவா போல் இருக்கே “பெண்களை இழிவாக பேசாதே”ன்னு,சமாளி டா,இல்லை நீ காலி,அப்புறம் பெண்மை தோழிகள் எல்லாம் உன்னை டின்னு கட்டிடுவாங்க….”என எச்சரிக்கை ஒலி எழுப்ப அதனை செவ்வனவே ஆதரித்து

 

“அய்யோ,மிரு நான் அப்படி எல்லாம் சொல்லடா ,சும்மா ஒரு ப்ளோல வந்துடுச்சு,தயவுசெஞ்சு மன்னிச்சிடு,இனிமேல் எந்த  ஜென்மத்துக்கும் நான் பொண்ணுங்களை எதுவும் சொல்ல மாட்டேன்…இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடு டா..ப்ளீஸ்….”என கெஞ்சி கொண்டு இருந்தான்….

 

ஆனால் மிருணாவிற்கோ அவனின் சமாதனம் எதுவும் மனதை சமன்படுத்தவில்லை..அவன் சொன்னதே அவளுக்கு மனதில் பாரமாய் இருந்ததுஎன்னதான் அவன் தன்னை குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் ,அவனின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருப்பது அவளிற்கு கஷ்டமாய் இருந்தது….இவனுக்கு இப்பவே இப்படி சலிப்பை இருக்கிறது என்றால் அவருக்கு என் மேல் காதல் இல்லை என்று தானே அர்த்தம்,பொழுதுபோக்கிற்காக தான் என்னை விரும்புவது போல் நடிக்கிறாரா,என்னை ஏமாற்றிவிடுவாரா…என ஒரு நிமிடத்தில் ஓராயிரம் எண்ணங்களில் உழன்றாள்…அதன் தாக்கத்தில் அவனுக்கு பதில் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்

பிரபுபேசுடி தங்கம்…i m so sorry…என்னை ஒரு தடவை மன்னிக்க கூடாதா …இனிமேல் நான் இப்படி பேசமாட்டேன்”

“…………………”.

பிரபுசாரி ,சாரி ,1000 டைம்ஸ் சாரி…”

“…………………….”.

பிரபுமிருருருருரு…”.

“…………………”.

பிரபுமிரு ப்ளீஸ்டி,நா பாவம் இல்ல…”

இவனின் இத்தனை பேச்சிற்கும் அவனுக்கு அவளின் அமைதியே பதிலாய் வந்தது ….தன்னையே நொந்து கொண்டவன் போனை கட் செய்தான்..

 

அவனின் லைன் கட் ஆகவும்  போனையே வெறித்து பார்த்துகொண்டு அமர்ந்து இருந்தாள்…அவளின் மனதில் ஜதித்த எண்ணங்கள் அவளை ,மிகவும் அழைக்களித்தது….

 

10 நிமிடத்திற்கு பிறகு போன் அலறவும் அதனை எடுத்து பார்த்தாள் …அதில் அப்பா என ஒளிரவும் ,அதனை எடுத்து “சொல்லுங்க அப்பா,எப்படி இருக்கீங்க…”

 

ராமைய்யா “எனக்கு என்ன கண்ணு,நல்லா இருக்குதேன்,நீ எப்படி இருக்க…”

 

மிருணா “நானும் நல்ல இருக்கேன் பா,சாப்டீங்களா..??..அம்மா எப்படி இருக்காங்க..??”.

 

ராமைய்யா “இன்னும் இல்லை கண்ணு,இனிமேல் தான் சாப்பிடணும்,அம்மா நல்லா இருக்கா,இரு அவ கிட்ட குடுக்குறேன்…”

 

மிருணா “ஹ்ம்ம்..சரிப்பா…”.

கமலா”கண்ணு,நல்லா இருக்கியா..??”

 

மிருணா”நான் நல்லா இருக்கேன் மா,நீங்க எப்படி இருக்கீங்க…”.

 

கமலா “எனக்கு என்ன கண்ணு குறைச்சல் ,நான் நல்ல இருக்கேன்…”என்றவர் கொஞ்சம் நேரம் அவளின் வேலையை பற்றியும்,அவளின் உடல் நலம் பற்றியும் விசாரித்தவர் “கண்ணு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்…வர மாசம் ஒரு 2 நாள் அதிகமா விடுப்பு சொல்லிட்டு வா கண்ணு….”

 

மிருணா “என்ன மா,என்ன விஷயம்,நம்ப ஊரு கோவில் விசேஷமா என்ன..??”.

 

கமலா “கோவில் விசேஷம்லாம் இப்போ இல்ல கண்ணு,அதுக்கு இன்னும் நாள் கிடக்கு,ஓர் நாலு நல்ல வரன் வந்து இருக்கு,எல்லாமே நல்ல இடம்,அப்பாக்கு பிடிச்சு இருக்கு,ஜோசியர் கிட்ட பார்த்தோம் அதுல 1 வரன் பொருந்தி இருக்கு,வர தை-ல உறுதி பண்ணிட்டு ,பங்குனில கல்யாணம் வச்சிக்கிலாம்னு அப்பா பிரியப்படறார்…மாப்பிள்ளை வீட்டாருக்கும் பிடிச்சு இருந்தா அப்படியே இரண்டு நாள்ல நிச்சியம் பண்ணிடலாம்னு சொன்னார்..அதான் அதுக்கு தோதா,நீ வா கண்ணு….”என்றார் அவளுக்கு அறிவிப்பாக….

 

மிருணா “அம்மா என்னமா என்ன சொல்றீங்க,இப்போ எதுக்குமா கல்யாணம்,இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமா,நான் இன்னும் வேலைக்கு சேர்ந்து 6 மாசம் கூட ஆகல..இன்னும் ஒரு 6 மாசம் போகட்டுமா…ப்ளீஸ் மா..”என்று அவரை சமாதான படுத்த முயன்றாள்….

 

இவர்களின் சம்பாஷனை கேட்டு கொண்டு இருந்த ராமைய்யா “நீ ஒன்னும் வேலைக்கு எல்லாம் போக வேண்டாம்,மாப்பிள்ளை வீட்டிலையும் உன்னை வேலைக்கு அனுப்ப பிரிய படல,எதிர்த்து பேசாம,வந்து சேரு, பங்குனியில பண்ணலைன்ன ,இன்னும் 2 வருஷத்துக்கு கங்கன பொருத்தம் இல்லையாம்,நம்ப ஜோசியர் சொல்லிட்டார்…லீவ்க்கு இப்போவே சொல்லிடு,அப்புறம் கடைசியில லீவ் கிடைக்குலன்னு சாக்கு ,போக்கு சொல்ல கூடாது”என்றார் கறாராக…

 

அம்மாவிடம் கேட்ட அனுமதிகூட மிருணாவால் அவளின் அப்பாவிடம் வாயினை கூட திறக்க முடியவில்லை…அவளுக்கு சிறு வயதில் இருந்தே அப்பா என்றால் பயம்,அதுவும் அவரின் முறுக்கிய மீசை எப்போதும் அவளை அச்சுறுத்தும்,அவர் அவளை சிறு வயதில் தூக்கி கொஞ்சினால் அவரின் மீசை கண்டு அவள் அரண்டு அழுவாள்…அவளை சமாதான படுத்த அவளின் அம்மா கமலா படதாபாடுபடுவார்….வளர வளர அவளிக்கு அப்பாவின் மீதான பயமும் வளர்ந்து கொண்டே தான் இருந்தது…எது வேண்டும் என்றாலும் அவள் கேட்பது அவளின் அம்மாவிடம் மட்டுமே….

 

அவரிடம் எதை எதிர்த்து பேச முடியாமல் தனது கையாலகாத தனத்தை நினைத்தும்,எப்படி அவரிடம் பேசி அவளின் காதலை சொல்லுவது என்றும்,சொன்னால் அவரின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என நினைக்கும் போதே அவளின் மேனி நடுங்கியது…தன் காதல் நிறைவேறுமா??…எப்படி வீட்டில் சொல்ல போகிறேன்…அய்யோ கடவுளே…நீ தான் காப்பாத்தணும்..இப்போவே அவளின் அப்பாவிடம் எப்படி சொல்வது என நினைத்து அவளின் அடிவயிற்றில் புளி கரைத்தது….

 

காரணமே இல்லாமல் கட்டிலில் விழுந்து அழுதாள்…ஏன் அழுகிறாள் என்று அந்த பேதைக்கும் தெரியவில்லை…கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தாள்…

 

அவளின் போன் அலறவும் எடுத்து பார்த்தாள்..அதில்மிபுஎன ஒளிரவும்,அழுதுகொண்டே காதில் எடுத்து வைத்தாள்

பிரபுகீழ வா…”.

மிருணாஎன்ன …”

பிரபுகீழே வாடி…”என்றான் பற்களை கடித்துக்கொண்டு

மிருணாஎங்க இருக்க நீ …” என்றாள் அழுகையுடனே மரியாதையை எல்லாம் காற்றில் பறந்தது..

பிரபுஹ்ம்ம்உன் ஹாஸ்டேல் வெளிய தான்இப்போ வரியா ??…இல்லையா ..??”

மிருணாஉன்னை யாரு, இங்க வர சொன்னதுலூசா நீ …”.என்றாள் அவளின் அப்பா மேல் உள்ள கோவம் எல்லாம் இவனின் மேல் திரும்பியது….

பிரபுஹ்ம்ம்அதை பேசாம இருந்த அப்போ யோசிச்சு இருக்கணும்இப்போ பேசி பயன் இல்லைஒழுங்கா கீழே வந்துடு ,…இல்ல நான் உள்ள வர வேண்டி இருக்கும் …”என்றான் கோவமாக,அவளின் நிலை அறியாமல்

மிருணாஇரு வரேன் ..உள்ள எல்லாம் வந்துடாத…”என்றவள் இவனிடம் இதனை எப்படி சொல்வது,அதற்கு இவனின் பதில் என்னவாக இருக்கும் என பயமாகவும் இருந்தது….

அவசரமாக துணியினை மாற்றியவள் தன்னை கொஞ்சம் சரி படுத்திக்கொண்டு அவனை காண கீழே விரைந்தாள்

வெளியில் சென்றவள் அத்தெருவினை பார்வையால் இரு புறமும் அலசினாள்அவன் எங்கும் இல்லைஅவனுக்கு தொடர்பு கொண்டாள்

மிருணா  “எங்க இருக்க …”

பிரபுவரேன் இரு..”என்றவன்பாவி, வா, போ ன்னு பேசுறா,பிரபு இப்படி ஒரு வசனத்துல  உன்னோட மானத்துக்கு  ,நீயே வேட்டு வச்சிகிட்டியே…”என மனதிற்குள் புலம்பி கொண்டான்.

பிரபு மிருணாவின் பக்கத்தில் வந்து நின்று அவளின் முகத்தினை கூர்ந்து நோக்கினான்அழுது அழுது கண் எல்லாம் வீங்கி இருந்தது….மிருணா அவனின் முகம் பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொண்டாள்

 

ஆனால் மனம் மட்டும் எப்படியாவது சொல்லி,அவனின் வீட்டிடம் பேச சொல்ல வேண்டும்,இல்லன்னா,ராமைய்யா போற அன்னைக்கே எனக்கு அந்த புது மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு….மிபு வீட்ல என்ன சொல்லுவாங்களோ,எங்க காதலை ஏத்துக்குவாங்களா…?..இல்லை அப்பா போல ஜாதி பார்ப்பாங்களா..?.இல்லை மிபு விருப்பத்திற்கு ஏற்றார் போல ,சரின்னு சொல்லுவாங்களா….என எண்ணத்தில் உழன்று கொண்டு பட்டி மன்றம் நடத்தி கொண்டு இருந்தாள்…

 

அவளின் மற்றொரு மனசாட்சியோ “இவன் முதல்ல என்ன சொல்ல போறனோ…இப்போவே கல்யாணமா அப்படின்னு கத்த போறனோ,இல்லை சீக்கிரம் ரூட் கிளியர் அப்படின்னு சந்தோசப்பட போறான்னோ தெரியில,இவனோட ரியாக்சன் என்னன்னு தெரியாம ,நீ அவனோட வீட்டை பத்தி நினைக்குற…உன்னை எல்லாம் என்ன பண்ணலாம்…”என இடிக்கவும்…”ஆமாமில்ல “என தன்னை தானே மானசீகமாக தலையில் கொட்டி கொண்டவள்….

 

மனதில் அவனிடம் எப்படி எடுத்து சொல்வது என்று ஒத்திகை பார்க்க ஆரம்பித்தாள்…இருந்தும் மனதின் ஓரத்தில் “கல்யாணமா,உனக்கும் எனக்குமா,அப்படி எல்லாம் நீ கனவு எல்லாம் கண்டு இருக்கியா,சும்மா டைம் பாஸ்க்கு தான் நான் உன்னை லவ் பண்ணினேன்,உன்னை கல்யாணம் பண்ற ஐடியா எல்லாம் எனக்கு இல்லை “என்று எங்கு அவன் பதில் சொல்லிடுவானோ என்று அவள் மனம் சந்தேகத்தால் அடித்துகொண்டது…அவள் அப்படி நினைப்பதே அவளுக்கு அவளையே நினைத்து வெட்கமாய் இருந்தது…மனம் குரங்கு என்பது இது தான் போல….

 

இன்னொரு பக்கமோ “அவனின் காதலை இப்படி சந்தேக படுறியே,நீ எல்லாம் என்ன நம்பிக்கை வச்சி இருக்க அவன் மேல,அவனுக்கு மட்டும் ,நீ இப்படி அவனை நினைக்கிறது தெரிஞ்சா ,அவன் மனசு என்ன பாடு படும்…முதல்ல நீ அவன் மேல உண்மையான காதலோடு இருக்கியா??”என முதலில் அவளை சாடி பின் அவளை எதிர்கேள்வி கேட்டது,

 

அக்கேள்வியில் “நான் என் பிரபுவை உயிருக்கு உயிரா விரும்புறேன்…”என அவள் அலறவும் ,”நீ எல்லாம்,உயிருக்கு உயிரா விரும்புவ,அவன் உன்னை விரும்ப மாட்டானா,இது எந்த ஊரு நியாயம்…”என அவளை முறைத்து கொண்டு கேட்டது….

 

அக்கேள்வியில் இருந்த உண்மை சுட தன் சந்தேகத்தை எல்லாம் அழித்துவிட்டு அவனிடம் சொல்ல தன்னை ஆயத்துபடுத்தி கொண்டாள்….

 

இதை எல்லாம் அறியாத பிரபு அவளின் முகத்தினையே ஓரப்பார்வை பார்த்தபடி இருந்தான்….

 

என் நெஞ்சை துளைக்கும்

உன் ஓரப்பார்வையை

தாங்க தான் ஒரு கவசம்

தேடி எங்கும் கிடைக்கவில்லை

நான்  உன்னை சந்தேகித்தது

என்  மேல் நீ வைத்த

காதலை எண்ணி அல்ல …

எங்கு நான் உன்னை

இழந்து விடுவேனோ

என்ற பயத்தினாலே…

 

விலகல் தொடரும்..

Advertisement