Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??  – 32

 

ஸ்ரீகாந்தை அவனது வீட்டில் சென்று விட்டவன், தனது வீட்டிற்கு காரினை செலுத்தினான்…மிருணாவினை எப்படி எதிர்கொள்வது என அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை…விஜய் ஜெயஸ்ரீயிடம் விஷயத்தை சொல்லி இருந்தாலும்,அவள் கண்டிப்பாக மிருணாவிடம் தெரிவித்து இருக்க மாட்டாள் என நூறு சதவீதம் நம்பினான்…

 

காரினை நிறுத்தியவன், அழைப்பு மணியை அழுத்திவிட்டு கதவு திறக்கும் வரை காத்திருந்தான்…தூக்க கலக்கத்துடன் வந்து கதவினை திறந்த வெண்ணிலா பிரபுவினை பார்த்து சில நொடிகளே அதிர்ந்து நின்றவர் “டேய் பிரபு…எங்க டா போய் தொலைஞ்ச…போன் பண்ணா எடுக்கவும் இல்ல ஒண்ணும் இல்ல…”என கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பிக்க…

 

காரில் பயணம் செய்தததில் மிகவும் களைத்துபோய் இருந்த பிரபு “அம்மா ப்ளீஸ்… இப்போ எதையும் உங்ககிட்ட விளக்கற நிலமையில நான் இல்ல…அப்றமா பேசுறேன்….நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்…”என்றவன் அமைதியாய் அறைக்குள் சென்றுவிட்டான்…

 

ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருக்கும் மனைவியை பார்த்தவன், தன்னுடைய பேக்கையும் ,சூவையும் வைத்துவிட்டு அவளின் அருகில் அமைதியாய் படுத்துக்கொண்டான்…மனைவின் அருகாமையில் நிம்மதியாய் படுத்த அடுத்த நிமிடம் உறங்கியும் போனான்…

 

தூக்கத்தில் இருந்து விழித்த மிருணா அப்போது தான் தனது அருகில் இருந்த கணவனை கண்டு ஆச்சர்யமடைந்தாள்…அவள் கண்கள் அவன் நலமாக இருக்கிறானா என தலை முதல் பாதம் வரை ஒரு முறை அளவிட்டது…அதன் பின்னே அவளால் நிம்மதியாய் மூச்சை விட முடிந்தது…இவன் எப்போது வந்தான்…??…வந்தது கூட தெரியலையே….அது கூட தெரியாம நான் தூங்கிட்டு இருந்தோமா..??…என எண்ணியவள் அவனது முகம் பார்த்தாள்…அவனது முகம் மிகவும் களைத்துபோய் வாடி இருந்தது அவளுக்கு நன்கு தெரிந்தது…

 

“இத்தன நாள் சொல்லாம கொள்ளாம எங்க போனானோ…??…என் கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு ஏதாவது பிரச்சனையோ…??..எதுவாக இருந்தாலும் சரி…எழுந்த பின்னாடி இதுக்கு ஒரு முடிவு கட்டணும்…எவ்வளவு திணக்கம் இருந்து இருந்தா…??..எதுவும் சொல்லாம போய் இருப்பான்…”என முதலில் அவனை பார்த்த உடன் இளகி இருந்த மனம் இப்போது கோவத்தால் இறுகி போனது…

 

படுக்கையில் இருந்து எழுந்தவள் பல் துலக்கி, காலை கடன்களை முடித்துவிட்டு நேரே மாமியாரின் அருகில் சென்று நின்றாள்…அவளின் வருகையை அறிந்துகொண்டவர் அவள் கேட்கும் முன்னே “காலையில தான் மா வந்தான்…நான் பேசறதுக்குள்ள, அம்மா ரொம்ப டையார்ட்டா இருக்கு…எதுவா இருந்தாலும் அப்றமா பேசிக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டான்…”என தகவலை சொன்னவர் இருக்கும் வேலைகளை பார்க்கலானார்…

 

அவர் சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாய் சமையலில் ஈடுபட்டவள், அதன் பின் பிரபு எந்திரிக்கும் முன்பே வேலைக்கு கிளம்பி செல்ல வேண்டும் என எண்ணி வேகமாக தயாரானாள்…அவள் கிளம்பும் முன்னே எழுந்த பிரபு “மிரு என்ன ஆபீஸ் கிளம்பிட்டியா…???…”என்ற கேள்வியோடு அவளை பார்க்க…

 

அவனது கேள்வி காதில் விழுந்தாலும், விழாதது போல ஆபீஸ் செல்ல தயாரானவள், சாப்பிடாமல் கூட வெண்ணிலாவிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டாள்…அவள் கிளம்பிய சில நேரம் கழித்து குளித்து முடித்து தயாரானவன், தாய் தந்தையிடம் கூட சொல்லாமல் அலுவலகம் புறபட்டான்…எல்லாவற்றையும் மௌனமாய் பார்த்துக்கொண்டு இருந்த வெண்ணிலாவும் சுந்தரமும் எந்த கேள்வியும் கேட்கவில்லை…   

 

இரண்டு நாட்கள் அதன் போக்கில் செல்ல, பிரபுவும் சரி மிருணாவும் சரி ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே மௌனமாய் இருந்தனர்…பிரபு ஏதாவது சமாதானம் பேச வருவான் என எண்ணி இருந்தவளின் எண்ணத்தை அடியோடு அழிப்பது போல இருந்தது பிரபுவின் செய்கை அனைத்தும்…எதுவும் பேசாமல் அவன் வேலையை அமைதியாய் தொடர, அதனை கண்ட மிருணாவிற்கு தான் கோவம் பன்மடங்காய் நாளுக்கு நாள் பெருகியது…

 

வருவதாக சொன்ன மாமனாரும், மாமியாரும் ஞாயிற்றுக்கிழமை வருவதாய் தெரிவித்துவிட, அவர்கள் வரும் நாளுக்காய் காத்திருக்க துவங்கினான் பிரபு…மிருணாவிடம் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளாமல்….

 

வீணா மற்றும் பிரதீப்பின் காதலை மாதவனிடம் பகிர்ந்துகொண்ட சுரேஷ் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் கேட்க, முதலில் தயங்கிய மாதவன் பிரதீப்பின் நேரடி பேச்சிலும், அவனின் பெற்றோர்களின் பேச்சிலும் மனம் கவர்ந்து வீணாவினை பிரதீப்பிற்கே திருமணம் செய்ய முடிவு செய்தான்…

 

அதுவும் திருமணம் இன்னும் ஒரு மாதத்தில் வைத்துவிட வேண்டும் என்றும் அதன் பிறகு அவனின் கம்பெனியின் கிளை வேலையாக குஜராத்தில் ஆறு மாத காலம் பணிபுரிய வேண்டி இருப்பதாகவும், அதன் பிறகு நிரந்தரமாக அங்கேயே வேலை செய்ய நேரிடலாம் என தெரிவித்தவன், எவ்வளவு சீக்கிரம் கால்யாணத்தை முடிக்க முடியுமோ  அவ்வளவு சீக்கிரம் முடிக்கலாம் என வேண்டுகோள் விடுக்க…இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என முடிவு செய்யப்பட்டது…

 

விரைவில் திருமணம் என எண்ணி பார்த்திராத வீணா மிகவும் பதட்டத்துடனும், பயத்துடணுமே நாட்களை கழிக்க, பிரதீப்பிபோ வீணா தன்னவளாக போகும் அந்த நொடிக்காக காத்திருக்க துவங்கினான்…

 

யாதவனின் கல்யாண பேச்சு அப்படியே கிணற்றில் போட்ட கல் போல எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்க…சுரேஷிடம் பேசிய வருவிற்கு எந்த ஒரு சரியான பதிலும் கிடைக்கவில்லை…யாதவனிடம் எப்படி இதனை தெரிவிப்பது என வரு குழம்பி போனான்…இருந்தும் சுரேஷிடம் அதனை பற்றி விசாரித்துக்கொண்டு இருக்க, சுரேஷிற்கோ “சரண்யாவின் பதிலையும், பெற்றோர்களின் பதிலையும் எப்படி வருவிடம் சொல்வது..”என தெரியாமல் விழிக்க ஆரம்பித்தான்…

 

வரு பேசியதற்கு அடுத்த நாள் தாய் தந்தையரிடம் ,யாதவனின் பெற்றோர் சரண்யாவினை யாதவனுக்கு திருமணம் செய்ய ஆசைப்படுவதாக தெரிவிக்க,சரண்யாவின் தாய் தந்தையரைவிட அதனை மிகவும் எதிர்த்தது என்னவோ சரண்யா தான்…

 

“என்ன நினச்சிட்டு இருக்காங்க அவங்க…??..வீணாவை பார்க்க வந்துட்டு,இப்போ என்ன பிடிச்சு இருக்குன்னு சொல்றாங்க…இப்படி பட்ட ஆளை எப்படி நம்பி கல்யாணம் பண்ண சொல்றீங்க..??…நாளைக்கு என்னையும் இப்படி பிடிக்கலன்னு சொல்லிட்டு போக மாட்டாருன்னு என்ன நிச்சயம்…??..” என அவள் வாதிட ,அதனை ஏற்ற சுரேஷின் பெற்றோரும் “இந்த சம்மதம் வேண்டாம்…” என ஒரே வரியில் முடித்து விட்டனர்…

அதற்கு மேல் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல் விழிக்க ஆரம்பித்தவனுக்கு வருவிடம் இருந்து பதிலை எதிர்பார்த்து போன் கால் வர ஆரம்பித்தன…

 

ஒரே ஒரு முறை போனை எடுத்தவன் “ வரு கொஞ்ச நாள் போகட்டும்…வீணாவோட கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு…அது முடிஞ்சதும் பேசிட்டு சொல்றேன்…”என நாசுக்காக பேசி இப்போதைக்கு அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்…

 

இதனிடையில் சுபாவின் சிகிச்சை பற்றி சாரதாவின் தோழி சகுந்தலா சில சிகிச்சைகளை முறைகளை மேற்கொள்ளும்படி சொன்னதன் பேரில், நவீனிடம் சொல்லி செயல்படுத்தினான்…

 

சில பல தோல்விகளை சந்தித்த நவீனும்,சுபாவினை குணப்படுத்தியே ஆக வேண்டும் என்ற குறிக்கோளின் பேரில் அனைத்தையும் செயல்படுத்த முனைந்தான்…காலை மாலை இரு நேரங்களிலும் அவளிடம் பேச்சு வார்த்தைகளையும், தினமும் நடக்கும் நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்து கொள்பவன்,  ஜெயஸ்ரீயினையும் அவளுடன் பழக வைத்தான்…

 

ஒவ்வொருவரும் அவளுக்கு யார் என்ன உறவு??..என்பதனை சிறு குழந்தைக்கு சொல்வதை போல சொல்லி கொடுத்து,அவர்களிடம் பேச வைத்தான்…ஒரு மாதங்கள் இப்படியே கழிய,நாளுக்கு நாள் சுபாவின் செயலில் இருந்த வேறுப்பாட்டினையும் வித்தியாசத்தையும் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தவர்கள் அவளுக்கு தெரியாவண்ணம் மறைத்தனர்…

 

எப்போதும் அறையிலே முடங்கி இருப்பவள்,தன்னுடைய வேலையை தானே செய்யும் அளவுக்கு அவளிடம் முன்னேற்றம் ஏற்பட்டது…அடுத்தவர்களை யாரோ என்பது போல பார்ப்பவள்,அவர்களின் முகத்தினை பார்த்து மெல்லியதாய் புன்னகைக்க ஆரம்பித்து இருந்தாள்…

 

யாதவனின் கல்யாண விஷயம் அப்படியே நின்றுவிட்டதால் அலுவகத்திற்கு வந்து செல்பவன்,ஜெயஸ்ரீயிடம் சுபாவின் தற்போதைய நிலையை கேட்டு அறிந்து கொள்வான் விஜய்…அன்றும் அப்படி தான் வெளியில் வந்தவளிடம் சுபாவினை பற்றி விசாரிக்க “ஹ்ம்ம்…இப்போ நல்ல முன்னேற்றம் தான்…முன்ன மாதிரி இல்ல அப்படின்னாலும், கொஞ்சம் நல்லாவே பேசுறா…அவளோட வேலையை  அவளே செஞ்சிக்கிறா… சீக்கிரம் சரியாகிடுவா அப்படின்னு ரொம்ப அதிகமா எல்லோருக்கும் நம்பிக்கையே வந்துடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன்…. “என சந்தோசமாய் பகிர்ந்து கொள்ள..

 

விஜய் “கேட்கவே சந்தோசமா இருக்கு ஜெய்…சீக்கிரம் அவ சரி ஆகணும்…நவீன் பாவம் ரொம்ப கஷ்டபட்றான்….” என வருத்தத்தோடு சொல்ல..,ஆமோதிப்பதாய் தலை அசைத்தவள் “கண்டிப்பா ஜெய்…அவ சரியாகிடுவா…நீங்க கவலைப்படாதீங்க…”என்றாள் புன்முறுவலுடன்…

 

விஜய் “அந்த நாளுக்காக தான் நானும் கத்திட்டு இருக்கேன்…அவ சரியான தான உன்னை என்னோட வீட்டுக்கு கடத்த முடியும்…”என சொன்னவன் அவளை பார்த்து கண்ணடிக்க…

 

அவனை பொய்யாய் முறைத்தவள் “ஹ்ம்ம் ஆசைய பாரு…யாதவன் மாமாக்கு கல்யாணம் ஆனா பின்னாடி தான் எல்லாமே…அது வரைக்கும் அமைதி பிள்ளையா இருங்க பாஸ்…”என கிண்டலோடு சொல்ல…

விஜய் “அடிப்பாவி எல்லாத்தையும் ஏற்கனவே பக்காவா பிளான் பண்ணி இருப்ப போலவே….ஹ்ம்ம்…என் அதிஷ்டம் அவ்வளவு தான் போல…”என பெருமூச்சுடன் ஜெயஸ்ரீயினை பார்த்தான்…அவன் விட்ட பெருமூச்சினை கண்டு ஜெயஸ்ரீ சிரித்தாள்…

 

விஜய் “சிரி…சிரி,….உன்ன பார்க்க வேண்டிய நேரத்துல பாத்துக்குறேன்…”என்றவன் ,நினைவு வந்தவனாக “ஆமா வீணா கல்யாணத்துக்கு எப்படி போற…??…”என்றான்

 

ஜெயஸ்ரீ “அது தான் தெரியல…மேரேஜ் சென்னையிலே வச்சிட்டாங்க….ரிசப்ஷன் எதுவும்  வைக்கல போல…எப்படி நம்ப கம்பெனி ஸ்டாப்ஸ் வருவாங்க..அவங்க கூட சேர்ந்து தான் போகணும்…தனியா எல்லாம் அப்பா அனுப்பமாட்டார்….”

 

விஜய் “ஓஹோ…அப்போ கம்பெனி ஸ்டாப்ஸ் கூட தான் போவ…என் கூட வர மாட்ட…” என கோவத்துடன் கேட்க…

 

அவனின் பதிலில் ஆச்சர்யத்துடன் பார்த்த ஜெயஸ்ரீ “என்ன சொல்றீங்க நிஜமாலுமே…நீங்க வரீங்களா..??….நீங்க தனியா போவீங்க அப்படின்னு நினைச்சேன்…அப்படி இல்ல அப்படின்னாலும் ஜென்ட்ஸ் ஸ்டாப்ஸ் நிறைய பேரு வருவாங்க இல்ல…அப்போ எப்படி நீங்க என் கூட வர முடியும்….??…”என்ற கேள்வியோடு அவளை பார்க்க…

 

அவளின் பதிலில் சிரித்தவன் “சின்ன மூளையே இவ்வளவு யோசிக்கும்போது பெரிய மூளை எனது எவ்வளவு யோசிக்கும்…வீணா மோஸ்ட்லி யார் கூடையும் பேச மாட்டா…அவளுக்கு க்ளோஸ் ப்ரண்ட்ன்னு சொன்னா நீ மட்டும் தான்…மத்தப்படி ஒரு சில பேரு மேரேஜ்க்கு வருவாங்களா அப்படின்றது டவுட் தான்…பிரதீப் சைடுல இருந்து பார்த்த ஒரு அஞ்சு ஆறு பசங்க இருக்காங்க…அவங்க எல்லாம் மேரேஜ்க்கு முன்னாடி நாள் நைட் தான் கிளம்புறாங்க…நீயும் நானும் பந்தல் அன்னைக்கே அங்க போறோம்…சோ நீயும் என்கூட வா…டைரக்ட்டா நாம்ப வீணாவோட வீட்டுக்கே போயிடலாம்…சுரேஷ்கிட்ட பேசவும் எனக்கு டைம் கிடைக்கும்…”என சொல்லிவிட்டு ஆவலோடு அவளது முகத்தினை பார்க்க

 

அவன் சொன்னதை எல்லாம் ஒரு முறை சிந்தித்து பார்த்தவளுக்கு,அவன் சொல்வதும் சரி எனப்பட ஒரு மனதாய் சரி என தலையசைத்தாள்…

 

பிரபு-மிருணா வீட்டில்:-

 

வெண்ணிலா “என்னடா பிரபு…நீ செய்யறது வர வர ஒண்ணுமே சரியில்ல…எப்போ போற..எப்ப வர..ஒண்ணுமே தெரியமாட்டேங்குது”…அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வீட்டின் உள்ளே நுழைந்துக்கொண்டு இருந்த பிரபுவினை பார்த்து கோவமாய் பொரிய ஆரம்பிக்க…அவரை நிதானமாக ஒரு பார்வை பார்த்தவன், பதில் ஏதும் பேசாமல் தனது அறைக்கு சென்றுவிட்டான்…

 

வெண்ணிலா “பார்த்தீங்களா… எல்லாம் உங்கள மாதிரியே…ஒரு வார்த்தையாவது கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போறானா…??…”என தனது கணவனிடம் முறையிட…

 

“அடிப்போடி…கூறு கெட்டவளே…அவன் என் புள்ளடி…என்ன மாதிரி இருக்காம…வேற யார மாதிரி இருப்பான்…இதுக்கு எதுக்கு ஆர்பாட்டாம் பண்ணிட்டு இருக்கவ…பாவம் மருமவ புள்ள முகமே ரெண்டு நாளா சரியில்ல…அவகிட்ட ஏதாவது பேச்சு குடுப்பியா…??…என்கிட்ட வந்து வாய புடிங்கிட்டு இருக்க…”என அவரை சுந்தரம் கடிந்து கொள்ள…

 

அவர்கள் ஏலம் பேசுவதை தனது அறையில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த பிரபுவிற்கு மிருணா தன் பெற்றோர்களின் இதயத்தில் எந்த இடத்தில் உள்ளாள் என்பதை அறிந்து மிகவும் சந்தோசமாக இருந்தது…”பலே கில்லாடிடி மிரு நீ…??…இன்னும் ரெண்டே நாள்…அப்புறம் பாரு உன் மிபுவோட பர்பார்மென்சை…அப்படியே நீ அசந்து போய் நிக்க போற…” என மனதிற்குள் சொல்லியவனுக்கு தன் பெற்றோர்கள் மிருணாவின் பெற்றோரிடம் பண்பாக நடந்து கொள்வர் என நம்பினான்…

 

மிருணா பற்றி கவலையுடன் பேசிய சுந்தரம் எழுந்து வெளியில் சென்றுவிட வெண்ணிலா தனது மருமகளை காண மாடிக்கு சென்றார்…பிரபுவிடம் பேசி தங்கள் இருவரையும் இங்கேயே தங்க வைத்த மிருணாவை நினைத்து சுந்தரமும் சரி,வெண்ணிலாவும் சரி அவள் செய்ததை நினைத்து பெருமிதம் அடைந்தனர்…

 

அங்கு இருந்த நிலங்கள் எல்லாம் குத்தவைக்கு விட்டுவிட்டு,அவர்களது வீட்டினை அங்கே ஒரு குடும்பத்தின் பெறுப்பில் விட்டவர்கள் பிரபு மற்றும் மிருணாவுடனே நிரந்தரமாய் தங்கினர்…

 

மாடியில் அமர்ந்து இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தவளை வெண்ணிலாவின் அழைப்பு திசை திருப்ப “என்ன அத்தை….கூப்பிட்டீங்களா…???…”என சாதாரணமாய் வினவ..

 

அவளை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவர் “பிரபு வந்துட்டான் மா..அவனுக்கு தேவையானதை போய் செய்…இங்க இருக்குற வேலையை நான் பாத்துக்குறேன்…”என்றவர் அவளின் பதிலை எதிர்பாராது அவளின் கையில் இருந்த பைப்பை வாங்கி செடிகளுக்கு நீர் பாய்ச்ச ஆரம்பித்தார்…

 

சில நிமிடம் தயங்கியவள் பின்  ஒரு முடிவுக்கு வந்தவளாக கீழே இறங்கி சென்றாள்…அவள் போவதை பார்த்துக்கொண்டு இருந்த வெண்ணிலாவின் மனம் “ரெண்டு பேரும் சீக்கிரம் ராசி ஆகிடணும் ஆண்டவா…”என கடவுளை பிராத்தித்தது…

 

அறைக்குள் நுழைந்தவள் அங்கு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டு இருந்த பிரபுவின் முன் சென்று நின்றவள் “உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்…”என்றாள் அவன் முகம் பாராமல்…

 

அவள் சொன்னதை கேட்டு திரும்பி பார்த்தவன் ,மறுபடியும் புத்தகம் படிப்பதில் தன் கவனத்தை திசை திருப்பினான்…அவன் செயல்களை பார்த்த மிருணாவிற்கு கோவம் தலைக்கேற “உங்க கிட்ட தான பேசிட்டு இருக்கேன்…இப்படி பதில் பேசாம இருந்தா எப்படி…”என அவனிடம் இருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்துவிட்டு முறைக்க…

 

பிரபு “நீ என்கிட்ட தான் பேசிட்டு இருந்தயா…நான் கூட நீ அந்த சுவத்துக்கிட்ட இல்ல பேசிட்டு இருந்தேன்னு நினைச்சேன்…”என கிண்டலாக சொன்னவன் “என்ன பேசணும் என்கிட்ட..சொல்லு….கதை ரொம்ப இன்டரஷ்டிங்கா போச்சு…கிளைமேக்ஸ் படிக்கணும்…”என சொன்னவன் அவளது கோவத்தினை இன்னும் அதிகரிக்க…

 

மிருணா “மிபு ஏன் இப்படி பண்றீங்க…கொஞ்சம் கூட என்னோட கஷ்டம் உங்களுக்கு புரியலையா…???…நீங்க என்ன விரும்பி தான கல்யாணம் பண்ணிகிட்டீங்க…??…இப்போ எல்லாம் நீங்க நடந்துக்குறது பார்த்தா…???…எனக்கு சந்தேகமா இருக்கு…???…என்னோட அப்பா அம்மா இப்போ நம்ப ரெண்டு பேரையும் பார்த்தா…??…என்ன நினைப்பாங்க…??…”என்று அழுகை உடன் சொன்னவளை சலனமில்லாமல் நோக்கிய பிரபு எதுவும் பேசினான் இல்லை…    

 

அவன் அமைதியை கடைபிடிக்க,மிருணாவோ கோவத்துடன் அவனை உறுத்து விழித்தவள் , அமைதியாய் அறையை விட்டு வெளியேறினாள்….கோவமாய் போகும் அவளையே ரசனையோடு பார்த்துகொண்டு இருந்தன பிரபுவின் கண்கள்…

 

கோவமாய் தொப்பென்று சோபாவில் அமர்ந்து இருந்தவளை கலைத்தது வீட்டின் அழைப்பு மணி…யாராய் இருக்கும் என எண்ணி சென்று கதவை திறந்தவளுக்கு தன் கண்களையே நம்பமுடியாமல் கண்ணை மூடி திறந்து  ஒரு முறை மீண்டும் பார்க்க..அவளுக்கு கண்ணில் தெரிந்த பிம்பம் மட்டும் மாறுவேனோ என்றது…???

 

“என்னமா எப்படி இருக்க…??..என்னமா நம்ப முடியலையா…???…நானே தான்…அப்படி என்ன அதிர்ச்சியோடு பார்த்துட்டு இருக்க…??…வந்தவங்களை இப்படி தான் வாசல்ல நிக்க வச்சிட்டு இருப்பியா…இது தான் உன்னோட அம்மா உனக்கு சொல்லி குடுத்த லட்சணமா…??..” என அருகில் இருந்த மனைவி கமலத்தை ராமைய்யா முறைத்து பார்த்த படி கேட்க…

 

அப்போது தான் நினைவு வந்து,தன் கண் முன்னால் இருப்பது தன் தாய் தந்தையர் தான் என்று அவளுக்கு புலப்பட “சாரி பா…சாரி மா…உள்ள வாங்க…நான் நல்லா இருக்கேன் பா….எப்படி இருக்கீங்க பா..??..எப்படி இருக்கீங்க மா…??.உங்களை பார்த்த சந்தோசம் எனக்கு பேச்சே வரல…உட்காருங்க…”என அவர்களை உட்கார வைத்து உபசரித்தவள்… பின் ஒரு நிமிஷம் பா…இதோ வந்துட்றேன்….என்றவள்….

 

“என்னங்க…என்னங்க…”என ஆர்ப்பாட்டமாய் பிரபுவினை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றவளை எதிர்கொண்ட பிரபு “என்ன மிரு….எதுக்கு இப்படி கூப்பாடு போட்டுட்டு வர… என்ன ரொம்ப சந்தோசமா இருக்க…???… என்ன விஷயம்…”என ஆவலுடன் கேட்க…

 

அவனின் மேல் இருந்த கோவம் எல்லாம் இப்போது காற்றோடு பறந்து போய் இருக்க,சந்தோஷமான முகத்துடன் அவனை நோக்கியவள் “யாரு வந்து இருக்காங்கன்னு வந்து பாருங்க…என்னைய விட நீங்க ரொம்ப சந்தோசப்படுவீங்க…வாங்க….”என கையோடு அவனை அழைத்து சென்றவள் தன் தாய் தந்தையரின் முன்பு நிற்க…

 

அவர்கள் வந்து இருந்ததை ஆச்சிர்யத்தோடு நோக்கிய பிரபு “வாங்க மாமா…வாங்க அத்தை…”என இருவரையும் இன்ப முகத்துடன் வரவேற்க…ராமைய்யாவும் கமலமும் அவனை பார்த்து சந்தோசமாய் புன்னகைத்தவர்கள் “எப்படி இருக்கீங்க…”என விசாரித்தவர்களை பதிலுக்கு நலம் விசாரித்த பிரபு சிறிது நேரம் அருகில் அமர்ந்துவிட்டு,மிருணா அவர்களுக்கு உபசரித்து முடித்தவுடன் “நீங்க பேசிட்டு இருங்க..நான் அம்மாவை அழைச்சிட்டு வரேன்…”என்றவன் மாடியை நோக்கி விரைந்தான்…

 

அதன் பின் தாய் தந்தையரிடம் செல்லம் கொஞ்சியவள் ,தந்தையின் மடியில் சாய்ந்துக்கொண்டு “என்ன மன்னிச்சிடுங்க பா…உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் நடந்துடுச்சு…கடைசியில என்ன என்னவோ ஆகிடுச்சு…என்னால உங்களோட உடம்புக்கும் ரொம்ப முடியாம,பாவம் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க…”என்றவள் தாயின் புறம் திரும்பி “அம்மா…என்ன மன்னிச்சிடுமா…நான் செஞ்சது எல்லாம் தப்பு தான்…உங்களுக்கு என்னால எவ்வளவு பெரிய தலைகுனிவு…மன்னிச்சிடு பா…”என தனது பெற்றோர்களிடம் கண்ணில் நிறைந்த கண்ணீரோடு மாறி மாறி மன்னிப்பு கேட்க…

 

அவளின் கண்ணீரை காண சகிக்காத ராமைய்யா “விடுடா…எல்லாம் இப்போ சரியா போச்சு தான…பின்ன எதுக்கு பழசை பேசிகிட்டு…உன்னோட விருப்பப்படியே மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வச்சு இருந்தா…அன்னைக்கு அப்படி எல்லாம் நடந்து இருக்குமா…??…எல்லாம் நடக்கணும் அப்படின்னு விதி இருந்து இருக்கு..நடந்துடுச்சு…அதை விடுடா…”என அவளை சமாதனப்படுத்த…

 

அப்போது தான்  மாடியில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்த வெண்ணிலா “சரியா சொன்னீங்க சம்மந்தி…முடிஞ்சி போனதை நினைச்சு என்ன ஆக போகுது…பேசி என்ன ஆக போகுது…இனி நடக்க வேண்டிய காரியங்களை பார்க்க வேண்டாமா…??…”என சொன்னவர் அவர்களை புன்முறுவலோடு பார்த்தபடி நலம் விசாரிக்க…

 

புன்முகமாய் அவர்களுக்கு பதில் அளித்த ராமைய்யா-கமலம் தம்பதியினருக்கு சில நிமிடங்களிலே வெண்ணிலாவினை மிகவும் பிடித்து போனது…மாமியாரின் கொடுமை எதுவும் இல்லை என பெற்றவர்களின் மனம் குளிர்ந்து போனது…வெண்ணிலாவின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையிலும் மிருணாவின் மேல் உள்ள பாசத்தினை அவர்களால் நன்கு உணர முடிந்தது….

 

திருப்தி உற்றவர்களாய் மன நிறைவுடன் சம்மந்தியிடமும், மருமகனிடமும், மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவர்களை கலைத்தது சுந்தரத்தின் வருகை…வந்தவர் சிறிது நேரம் புதியவர்களை வேற்று பார்வை பார்த்தபடி எதுவும் பேசாமல் இருக்க வெண்ணிலா பதற்றத்துடன் மகனையும் மருமகளையும் மாறி மாறி பார்த்தார்…

 

பிரபும் சரி மிருணாவும் சரி அதே பதற்றத்துடன் சுந்தரத்தை பார்த்தபடி இருக்க,முதலில் மிருணா தான் “மாமா… இது என்னோட அப்பா…இது என்னோட அம்மா…”என அவருக்கு அறிமுகம் செய்து வைக்க…

 

வணக்கம் என பதிலுக்கு வணக்கம் வைத்த ராமைய்யா-கமலம் தம்பதியினரை கண்ட சுந்தரத்தின் கரங்களும் வணக்கத்தினை வைத்தது….”நான் யாருன்னு தெரியாம,என்ன பேசறதுன்னு தெரியாம அமைதியா இருந்தேன்…நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க…”என முதல் முறை சுந்தரம் தனது செய்முறைக்கு விளக்கம் சொல்ல…அங்கு இருந்த மூவரில் யாருக்கு அதிக அதிர்ச்சி என சொல்ல முடியாது…

 

பிரபு தனது அம்மாவினை பார்த்து “எப்படி..இப்படி எல்லாம்??…” என கண்களாலே வினவ அவரோ “எனக்கு தெரியாது…”என்பது போல உதட்டை பிதுக்கினார்…மிருணாவோ தனது மாமனாரை அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் பார்த்துக்கொண்டு இருந்தாள்…

 

இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் சுந்தரம் ரமைய்யாவுடன் வழக்காட ஆரம்பிக்க, கமலம் வெண்ணிலாவுடன் சமையல் அறைக்குள் ஐக்கியமாக பிரபுவும் மிருணாவும் தனித்து விடப்பட்டனர்…மிருணாவின் மனதில் ஆயிரம் கேள்விகள் படையெடுத்து வந்தாலும்,அதற்கு தகுந்த பதில் கிடைக்காமல் விழித்தவள் அமைதியாய் அறைக்கு சென்று முடங்கினாள்…சந்தோசம் ஒரு பக்கம் ,குழப்பம் ஒரு பக்கம் என இரண்டும் அவளை நன்றாகவே வாட்டி வதைத்தது…

அவளின் நிலை புரிந்து பின்னாடியே வந்த பிரபு “என்ன ஆச்சு மிரு…ஏன் ஒரு மாதிரியா இருக்க…??…”என கேட்க…அவனை குழப்பத்துடன் பார்த்தவள் “ஏன் மிபு…நான் உங்களுக்கு என்ன பண்ணேன்…எனக்காக இந்த அளவுக்கு நீங்க இறங்கி போகணுமா….??…”என கண்ணில் கண்ணீர் வடிய அவனை பார்த்து கேட்க…

 

அவளின் கேள்வியில் அதிர்ச்சி அடைந்த பிரபு “எ…ன்ன…என்ன…??…மிரு…என்ன சொல்ற..??…எனக்கு ஒண்ணுமே புரியல…நான் என்ன இறங்கி போனேன்..”என அவள் கேட்பது எதுவும் புரியாதது போல கேட்க…

 

அவனை தாவி வந்து அணைத்தவள் “போதும் மிபு…நடிச்சது எல்லாம் போதும்…இதுக்கு மேலையும் நீங்க நடிக்க வேண்டாம்…நீங்க என்கிட்ட இருந்து விலகி போறது எனக்கு என்னோட உயிரையே யாரோ பறிக்கிற மாதிரி இருக்கு…ப்ளீஸ் மிபு…இனி இப்படி நடந்துக்காதீங்க…என்னோட அப்பா அம்மா இங்க வந்ததுக்கு மூல காரணம் யாரா இருக்கும் அப்படின்னு தெரியாத அளவுக்கு பிரபு பொண்டாட்டி ஒண்ணும் மக்கு இல்ல…”என அழுகையுடனே கிண்டலாக சொல்லியவள் அவனை அணைத்துக்கொள்ள…

 

அவளின் பின் பாதியினை டீலில் விட்டவன் “என்ன மிரு நான் உன்கிட்ட இருந்து எப்போ விலகி இருந்தேன்…என்னோட உடம்பு தான் உன்னைவிட்டு விலகி இருந்ததே தவிர ,என்னோட மனசு எல்லாம் எப்பவும் உன்னைய தான் சுத்திட்டு இருந்தது மிரு…என்னோட பொண்டாட்டி அவ்வளவு மக்கு இல்லன்னு இப்போ தான் எனக்கும் புரிஞ்சது…”என கண்சிமிட்டி சொல்ல…  

 

செல்லமாக அவனது மார்பில் குத்தியவள் “போதும் மிபு…ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க…சரி என்ன பண்ணி என்னோட அப்பா அம்மாவை எப்படி கரெக்ட் பண்ணீங்க..அதை சொல்லுங்க முதல்ல…”என லாவாய் அவனின் தோள் சாய்ந்து கதை கேட்க…

 

சின்னதாய் அவளை நெற்றியில் முட்டியவள் “அது எல்லாம் அப்புறம் சொல்றேன்..முதல்ல என்னோட மாமனார் மாமியாருக்கு சாப்பாட்டை போடுடி…வந்தவங்களுக்கு காபியாவது குடுத்தியா…??..”என கிண்டலுடன் அவளது பேச்சை திசை திருப்ப…

 

அவளும் அதற்கு இணையாய் “அது எல்லாம் குடுத்துட்டேன்…சாப்ட சொன்னேன்…பசியில்ல..நைட் சாப்டறோம்ன்னு சொல்லிட்டாங்க..என்னை என்ன பண்ண சொல்றீங்க…”என சொன்னவள் ,பின் நினைவு வந்தவளாக “ஏங்க பிரதீப் –வீணா கல்யாணம் வர வாரம் இருக்கே..போகலையா…??…”என கேட்க…

 

“ச்ச….மறந்தே போயிட்டேன்….போகணும் மிரு….விஜய் கூட சொன்னான்…நான் சொல்றேன்னு சொன்னேன்..என்ன பண்றது போகணுமே…”என யோசித்தவன் பின் “அத்தை மாமா எல்லாம் வந்து இருக்குற நேரத்துல நாம்ப அவங்களை விட்டுட்டு கல்யாணத்துக்கு போக முடியாது…டூர் போலாம் அப்டின்ற ஐடியா இருக்கு…டூர் போயிட்டு வந்த பிறகு பிரதீப்-வீணாக்கு நம்ப வீட்ல ஒரு விருந்து ஏற்பாடு பண்ணிடலாம் என்ன சொல்ற… ”என்றான் குதூகலாக…

 

அவனின் யோசனை சரியெனப்பட போகலாம் என சம்மதம் தெரிவித்தாள்…பின் இருவரும் ராமைய்யா மற்றும் கமலத்துடன் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்க,சுந்தரம் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தார்…வெண்ணிலா இரவு சமையல் வேளையில் ஈடுபட்டு இருந்தார்…அதன் பின் சுந்தரமும் உறக்கம் களைந்து எழுந்து வர,சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் இரவு உணவினை நிம்மதியோடு முடித்தனர்…

ராமைய்யா எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கத்துடன் அனைவரையும் பார்க்க,சுந்தரம் தான் “என்ன சம்மந்தி ஏதோ சொல்லணும்ன்னு நினைக்கிறீங்க…அப்றமா தயங்குறீங்க…என்ன விஷயம்…???…தயங்காம சொல்லுங்க…”என ஊக்க…மற்ற அனைவரும் அதனையே வலியுறுத்த…

 

“மாப்பிள்ளை சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க…முறைப்படி இன்னும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணல…சின்ன சிறுசுங்க ஏதோ ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி இருந்தாலும்,நாம்ப தான எல்லாத்தையும் முறைப்படி நடத்தனும்…இன்னைக்கும் நாளைக்கும்  நாள் ரொம்ப நல்லா இருக்கு…”என சொல்ல மிருணாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது…

 

அதனை ரசனையுடன் கண்ட பிரபு “மாமா சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…எனக்கு இந்த மாதிரி சடங்கு மூலமா எங்க வாழ்க்கையை துவங்குறதுல இஷ்டம் இல்ல…எப்போ எங்களுக்கு தோணுதோ அப்போ எங்க வாழ்க்கையை நாங்க தொடங்குறோம்…அதைபத்தி நீங்க கவலைப்படாதீங்க….”என்றவன் அமைதியானான்…

 

அவனின் உணர்வுகளும் அவர்களுக்கு தெளிவாய் புரிய “உங்க விருப்பம் எப்படியோ அப்படியே நடக்கட்டும் மாப்பிள்ளை…உங்க ரெண்டு பேரோட சந்தோசம் தான் முக்கியம்…”என ராமைய்யா சொல்ல அதனையே மற்ற மூவரும் ஆமோதித்தனர்…

 

அவர்கள் புரிந்துக்கொண்டது மகிழ்ச்சியை அளிக்க பிரபுவிற்கு மிருணாவிடம் கேட்காமல் சொல்லிவிட்டோமே,அவளது மனதில் ஆசைகள் ஏதாவது இருந்து இருந்தால் என்ன செய்வது என்ற தயக்கத்துடன் மிருணாவினை பார்த்தான்…அவளும் அவளுக்கு இதில் சம்மதம் என்பது போல கண்சிமிட்டி சிரித்தாள்…நிம்மதி பெருமூச்சுடன் அவளை புன்னைகையுடன் பார்த்தவன் மிருணாவிடம் நடந்த விஷயத்தை இன்னும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தான்…

 

அதன் பின் அனைவரும் சந்தோஷ மனநிலையுடன் தூங்க செல்ல,மிருணா ராமைய்யாவிற்கும் கமலத்திற்கும் உறங்குவதற்கான அறையினை ஒதுக்கி  கொடுத்துவிட்டு தனது அறைக்கு சென்றாள்…

 

ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தவனை “மிபு…”என்ற மிருணாவின் அழைப்பு திசை திருப்ப…”சொல்லு டா மிரு….”என புத்தகத்தில் இருந்து தலையை நிமிர்த்தாமல் இருந்த நிலையில் இருந்து மாறாமல் கேட்க…

 

அவனின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் அவனிடம் இருந்த புத்தகத்தை பறித்து மேசையின் மேல் வைத்துவிட்டு “என்ன மிபு…நான் கூப்பிட்டுட்டே இருக்கேன்…அப்படி என்ன புக் படிப்பீங்களே…”என சிறு எரிச்சலுடன் கேட்டவள்…

 

“ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க…எனக்கு எப்படி என்னோட அப்பா ஒத்துகிட்டார் அப்படின்னு நினைச்சாலே மண்டையை பிச்சிக்குது… ப்ளீஸ்.. இன்னும் நேரத்தை கடத்துனா எனக்கு கெட்ட கோவம் வரும்…”என கோவமாய் சொல்ல…

 

“டேய் கூல் கூல் மிரு செல்லம்…உனக்கு என்ன இப்போ…அங்க என்ன நடந்ததுன்னு தெரியனும்…அவ்ளோதான…சொல்றேன் இரு..ஆனா அதுக்கு முன்னாடி உனக்கு எப்படி தெரியும், மாமா இங்க வரதுக்கு நான் தான் காரணம் அப்படின்னு…??…”என்று கேள்வியாய் அவளை பார்த்தான்….

“எல்லாம் என்னோட நாத்தனார் தான் சொன்னா…ஷப்பா…எவ்ளோ டென்ஷன்ல இருந்தேன் தெரியுமா…அவ சொன்ன பிறகு தான் நிம்மதியாவே இருக்க முடிஞ்சது…அது தான் நீங்க வந்த போதும் எதுவும் எனக்கு ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி நான் காட்டிக்கல…அவ நீங்க எங்க வீட்டுக்கு தான் போய் இருக்கீங்க அப்படின்னு மட்டும் தான் சொன்னா…மீதி எல்லாம் நீங்க வந்த பிறகு உங்ககிட்டயே கேட்டு தெரிஞ்சிக்க சொல்லிடுச்சு அந்த ஸ்ரீ பன்னி…” என்றாள் கோவமாக…

 

அவளின் கோவத்தை கண்டு சிரித்தவன் “ஓ….அந்த ஓட்ட வாச்சி உளறிட்டாளா….நான் சொல்ல மாட்டான்னு நினைச்சேன்…பக்கி சொல்லிடுச்சா…”என்று கூறியவன் அன்று நடந்ததை வார்த்தை பிசகாமல் அப்படியே சொன்னவன் மிருணாவினை பார்க்க…அவளது கண்களோ கலங்கி போய் இருந்தன…

 

அதை கண்டு பதறியவன் “என்னடா ….என்ன ஆச்சு…???….எதுக்கு இப்போ அழற…”என பதட்டத்துடன் அவளது கண்ணீரை துடைத்தபடி கேட்க..அவனின் தோளில் சாய்ந்து கண்ணீர் உகுத்தவள் “நாம்ப ரொம்ப தப்பு பண்ணிட்டோமா மிபு….ஏதோ நம்பளோட நல்ல  காலம் நீங்க சொன்னதை புரிஞ்சிகிட்டு என்னோட அப்பா அம்மா நம்பளை ஏத்துக்கிட்டாங்க…அப்படி மட்டும் ஏத்துக்காம போய் இருந்தா…???…நம்பளால நிம்மதியா வாழ்ந்து இருக்க முடியுமா…???…”என ஏக்கம் மற்றும் அழுகை குரலில் கேட்க…

 

அவளின் வேதனை அவனுக்கு இன்னும் வேதனையை தர “சாரி மிரு…எல்லாமே என்னால தான்…முடிஞ்சு போனது பத்தி இப்போ எதுக்கு பேசிட்டு விடு…இனி எல்லாம் நம்ப வாழ்க்கையிலே சுகம்ன்னு நினைச்சு சந்தோசப்படுவீயா,,,,???…இப்போ போய் கண் கலங்கிட்டு…”என அவளது கண்ணீரை துடைத்தவன் மென்மையாய் அவளின் நெற்றியில் முத்தமிட…

அவனின் தோளில் லாவாக சாய்ந்துகொண்டவள் “ஹ்ம்ம் உண்மை தான் மிபு…இனி எல்லாமே நல்லதே நடக்கும் அப்படின்னு நினைப்போம்..”என சொல்லியவள் அவனுக்கும் அவன் அளித்த பரிசினை போல பல பரிசுகளை பஞ்சமே இல்லாமல் வாரி வழங்கினாள்…

 

சமத்தாய் பரிசுகளை பெற்றுகொண்டவன் “நாம்ப பிரதீப்-வீணா மேரேஜ்க்கு முன்னாடி நாள் நைட் போலாம்…பஸ் டிக்கெட் புக் பண்ணிட்டேன்….”என சொல்ல…சரி என்பது போல தலையசைத்தவள் சந்தோசமாக அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்…

 

வீணாவின் வீட்டில்:-

 

ஒரு மாத காலம் எப்படியே நகர்ந்தது என்றே தெரியா வண்ணம் பிரதீப் மற்றும் வீணாவின் திருமண நிகழ்ச்சிக்கான வேலைகள் ஜோராக நடந்தன…சுரேஷிடம் யாதவனின் திருமணத்தை பற்றி பேசவேண்டும் என எண்ணி ஜெயஸ்ரீயும் –விஜயும் பந்தல் அன்றே வீணாவின் வீட்டிற்கு வந்து இருந்தனர்…

 

பிரதீப்பின் குடுமபத்தினர் சேலத்தில் இருந்து சென்னைக்கு திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு நேரடியாக மண்டபத்திற்கு வருவதாய் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது…

 

சுரேஷும் மாதவனும் கல்யாண வேளையில் மிகவும் பிஸியாக இருக்க,விஜய் சுரேஷிடம் பேச பல முறை முயற்சி செய்ய சுரேஷ் அதனை முயன்ற மட்டும் விஜய்க்கு தெரிந்திடா வண்ணம் “விஜய் பின்னாடி இருக்க மாணிக்கம் அண்ணாகிட்ட எத்தனை பேப்பர் தட்டு வேணும்ன்னு கேட்டுட்டு வந்து மாதவன் கிட்ட சொல்லு…எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…நான் வந்துட்றேன்…”என ஏதாவது சாக்கு சொல்லி நழுவிக்கொண்டே இருந்தான்…

 

ஜெயஸ்ரீ-வீணா-சரண்யா மூவரும் சிரித்து பேசிக்கொண்டும்,சரண்யா வீணாவிற்கு தேவையானவற்றை எல்லாம் பேக்கில் எடுத்துவைத்துக்கொண்டு இருந்தனர்…

 

சிறிது நேரம் பொதுப்படையான விஷயங்களை பேசிக்கொண்டும்,வீணாவினை கிண்டல் அடித்துக்கொண்டும் இருந்த ஜெயஸ்ரீ பின் நினைவு வந்தவளாக “ஏன் சரண்யா…யாதவ் மாமாவை நீங்க உங்க காலேஜ்ல பார்த்தது இல்லையா…???…”என கேட்க…

 

சரண்யா “யாதவ்வா…அது யாரு ஸ்ரீ…”என கேட்க…சரண்யாவின் பதிலில் யாருக்கு அதிக அதிர்ச்சி என்று சொல்லி மாளாது…ஜெயஸ்ரீ “சரண்யா…காமெடி பண்ணாதீங்க…”என கிண்டலுடன் சொல்ல…ஜெயஸ்ரீயினை பார்த்த சரண்யாவின் முகத்தில் கிண்டலுக்கான எந்த ஒரு பாவனையும் இல்லாமல் அமைதியாய் இருந்தது..

 

.அதை கண்ட வீணா  “சரு…அவ யார சொல்றான்னு உனக்கு நிஜமாலுமே புரியலையா…???…அன்னைக்கு என்ன பொண்ணு பார்க்க வந்துட்டு போனாரே… யாதவன்…அவரை தான் சொல்றாங்க…அவங்க எங்க பாஸ் விஜய் சாரோட சொந்த அண்ணன்…சுரேஷ் அண்ணாவும் விஜய் சாரும் காலேஜ்ல பெஸ்ட் ப்ரண்ட்ஸ்…”என சொல்ல…

 

“ஓ…அப்படியா…அவர் நான் வொர்க் பண்ற காலேஜ்ல தான் வொர்க் பண்றாரா…??…எனக்கு எதுவும் தெரியாது…அண்ணா அதைபத்தி எதுவுமே என்கிட்ட சொல்லல…எதுக்கு தேவையில்லாம இப்போ அவரோட பேச்சு…”என்றவள் வீணாவின் புறம் திரும்பி “வீணு உனக்கு எல்லாம் சரியா எடுத்து வச்சு இருக்கனான்னு ஒரு முறை செக் பண்ணிக்கோ…”என சொன்னவள் ,அதன் பிறகு யாதவனை பற்றி சிறிதும் பேசவில்லை…அவளின் உள்மனமோ அவனை வறுத்தேடுத்துகொண்டு இருந்தது…

 

அவளின் செயலில் இருந்தே யாதவனின் மேல் அவளுக்கு இருக்கும் கோவத்தினை நன்கு உணர்ந்த வீணா யாதவனின் மேல் சரண்யாவிற்குள் இருக்கும் தப்பான அபிப்ராயத்தை மாற்றுவது தனது கடமை என எண்ணியவள் “சரண்யா கொஞ்சம் இங்க வா…”என அவளை தன் அருகில் அமர வைத்தவள்…

 

சிறிது மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக்கொண்டு “சாரி சரு…”என மன்னிப்பு கேட்டவள் ,சரண்யா குறுக்க பேச வரும் முன் “நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு நீ எது சொல்றது இருந்தாலும் சொல்லு…”என்றவள் “அன்று அவளுக்கும் யாதவனுக்கும் நடந்த பேச்சு வார்த்தை,யாதவன் வீணாவிடம் சொல்லியது,அவன் சரண்யாவினை ஒரு வருடங்களாக விரும்புவது…” என அனைத்தையும் பகிர்ந்து கொண்டவள்…

 

பின் “இனிமேல் எல்லாம் உன் கையில தான் இருக்கும்…இப்போ முடிவு உன் கையில…யாதவன் உண்மையிலே ரொம்ப நல்லவங்க…”இவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்…”என்றவள் ஜெயஸ்ரீயுடன் அறையை விட்டு வெளியேறினாள்…

 

வீணா-பிரதீப் திருமண வைபோகம்…

 

மூகூர்த்த வேளை நெருங்கிக்கொண்டு இருக்க சேலத்தில் இருந்து நேற்று மாலை வந்து சேர்ந்த மணமகன் பிரதீப் அனைத்து சடங்குகளிலும் உதட்டில் நிறைந்த புன்னைகையுடன் செய்தவன், மணவறையில் அமர்ந்து அய்யர் கூறும் மந்திரங்களை சொல்ல முடியாவிடினும்,தன்னால் முடிந்த மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தான்…

 

“பொண்ணை கூப்பிடுங்கோ…”என அய்யர் உரத்த குரலில் அழைக்க…ஜெயஸ்ரீ-சரண்யாவின் உதவியுடன் அடி மேல் அடி வைத்து  மணவறையில் அமர்ந்து பிரதீப்பின் கண்களை பார்த்தவளின் கண்ணில் அத்தனை ஆனந்தம்…

 

அதன் பின் கெட்டிமேளம் முழங்க செல்வி வீணாவினை மாங்கல்யம் அணிவித்து திருமதி வீணா பிரதீப் ஆக ,அந்த அக்னியின் சாட்சியாக என்றும் அவளினவனாய்,அவளை சந்தோசமாக வைத்திருப்பேன் என உறுதிமொழி எடுத்துகொண்டான் பிரதீப்…

 

அன்பான  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலான அனைவரின் வாழ்த்துக்களுடன் திருமணம் இனிதே நடந்து முடிந்தது…அதன் பிறகு மணமகனும் மணமகளும் அக்னியை மூன்று முறை சுற்றி வந்தனர்; சில சம்ரதாயத்தை முடித்த பிறகு அனைவரும் மணமக்களை கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருந்தனர்…

 

அந்த சமயத்தில் விஜய் தனது சகோதரனின் திருமணம் பற்றி சுரேஷிடம் பேச வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருந்தான்…சுரேஷோ விஜயினை கண்டதும் வேலை இருப்பது போல மறைந்துக்கொண்டு இருந்தான்…

 

ஜெயஸ்ரீயிடம் இருந்து விஜய் யாரென்று தெரிந்துக்கொண்ட சரண்யா விஜயினை கண்டு பேசவேண்டும் என எண்ணி விஜயினை பின் தொடர்ந்து செல்ல…அங்கு விஜய் யாரிடமுமோ முதுகு காட்டி பேசிக்கொண்டு இருக்க,சிறிது நேரம் அங்கேயே அவனுக்காக காத்திருந்தாள்….

 

சிறிது நேரம் பேசியவன் விலகிச்செல்ல அவன் நகர்ந்ததும் தன் கண் முன்னால் இருந்த நபரை கண்டு அவளின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய,சரண்யா அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்…வந்தவர் அவளை பார்த்துவிட்டு “எப்படி இருக்கீங்க சரண்யா…”என மென்னகையுடன் கேட்க…அவனை பார்த்து விழித்தவள் “ஹ்ம்ம்…”என்பது போல தலை அவளுக்கே தெரியாமல் அசைக்க,அவனையே பார்த்த வண்ணம் அமைதியாய் நின்றாள்…

 

“என்னங்க ….நான் பாட்டு பேசிட்டே இருக்கேன்…நீங்க பதில் சொல்லாம அப்படியே இருக்கீங்க…”என கையசைத்து அவளை நினவுலகத்திற்கு கொண்டு வர “ஹாங்…என்ன சொன்னீங்க…”என சொல்ல…

 

அவளை மீண்டும் சிரிப்புடனே பார்த்தவன் “என்னை கல்யாணம் பண்ணிக்கீறிங்களா….???…”  என அவளின் கண்ணினை பார்த்து கேட்க…அவனின் முகத்தை பார்க்க முடியாமல் சிவந்தவள், “ஹல்லோ…நீங்க யாரு…முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட எப்படி பேசறதுன்னு தெரியாது உங்களுக்கு…??..”என பொய்யாய் அவனை முறைத்தப்படி கேட்க..

 

அவள் சொன்னதை கேட்டு வாய்விட்டு சிரித்த யாதவ் “யாரு முன்ன பின்ன தெரியாத பொண்ணு…என்னோட மனசையே புல்லா ஆக்கரமச்சி இருக்குற பொண்ணை பார்த்து தான் கேட்குறேன்…”என சொன்னவன் அவளின் முகத்தினை ரசனையுடன் நோக்க

அவனின் பார்வையினால் தந்த கூச்சமும் வெட்கமும்,அவளை பாடாய்படுத்த மென்மையாய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல,யாதவனின் பார்வை அவளையே தொடர்ந்தது ரசனையுடன்…ரசனையின் பிடியில் சிக்கியவனை “ம்கும்…”என்ற விஜயின் கனைப்பு நிகழ்காலத்திற்கு கொண்டு வர “என்னடா…”என்றான் அமைதியாய்…

 

“சீக்கிரம் அடுத்தது உனக்கு தான் டும் டும் போல…”என சிரிப்புடன் சொன்னவன் “சுரேஷ்கிட்ட பேசறதுக்கு பதிலா அவனோட அப்பா அம்மாகிட்ட பேசினேன்… அப்பா அம்மாவும் அவங்க கிட்ட பேசுனாங்க…முதல்ல தயங்குனாங்க…அப்றமா சரண்யாகிட்ட கேட்டு இருப்பாங்க போல…அவங்களும் உங்களோட விருப்பம் அப்படின்னு ஜாடையா கிரீன் சிக்னல் குடுத்துட்டாங்க… இனி உன்னோட காட்ல காதல் மழை தான் யாதவ்…” என கிண்டலில் இறங்க…“போடா….”என யாதவ் வெட்கத்துடன் அங்கு இருந்து நகர்ந்தவன் சரண்யாவினை காண சென்றான்…

 

தொடர்ந்த மௌனங்கள்

சிதறிச்சென்று

உந்தன் சிரிப்பின்

முத்துகளை உதிர்த்துவிட்டு

சென்றது உன்னோடும்

உந்தன் பின்னோடும்…

 

 விலகல் தொடரும்…

Advertisement