Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??  – 31

 

“மாமா…”என அதிர்ச்சி விலகி ராமைய்யாவை அழைத்த பிரபுவினை,ராமைய்யா பார்த்த பார்வையில் எதுவும் பேசாமல் அப்படியே அமைதியாய் நின்றுவிட்டான்…

ஸ்ரீகாந்தையும் , பிரபுவினையும் ஒரு முறை பார்த்தவர் “நீங்க ஏதோ தப்பான வீட்டுக்கு வந்து இருக்கீங்க…எங்களுக்கு பொண்ணே இல்ல..நாங்க ரெண்டு பேரும் யாரும் இல்லாத அனாதைங்க…இதுல நீங்க வேற புதுசா ஏதோ ஒரு பொண்ணு பேரு சொல்லிட்டு வந்து கேட்டுட்டு இருக்கீங்க…சாரி அப்படி யாரும் இல்ல…நீங்க போலாம்…”என முன்னால் இருந்த கோவத்திற்கு எதிர்மறையாக அமைதியாய் அதே நேரம் அழுத்தமாய் வெளிவந்தது அவரது குரல்…

 

பிரபு “இல்ல மாமா,நான் என்ன சொல்ல வரேன் அப்படின்னா…”என அவன் அவரிடம் தன் நிலையை புரியவைக்க முயல..ராமைய்யாவோ எதற்கும் பிடிகொடுக்காமல் “நீங்க புறப்படுங்க…”என தனது கையினை வாசலை நோக்கி காட்டியவர் “என்ன கமலம்..என்ன நின்னுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க…எனக்கு சூட ஒரு டீ போட்டு எடுத்துட்டு வா…”என்றவர் அங்கு இரண்டு ஜீவன்கள் இருப்பதை சட்டை செய்யாமல் செய்திதாளில் மூழ்கினார்…

 

கணவரின் பேச்சினை தட்டாத மனைவியாய், சமையல் அறைக்குள் நுழைந்து டீ தாயாரித்துக்கொண்டு வந்து கொடுத்த டீயினை தன் கைகளில் எடுத்துக்கொண்டவன்,சுவாதீனமாக ராமைய்யாவின் பக்கத்தில் ஒரு நாற்காலியினை இழுத்து போட்டுக்கொண்டு அமர்ந்தான்…

 

ராமைய்யா “கமலம் என்ன இது…”என கமலத்திடம் திரும்பி உறும,கமலம் பாவமாய் தனது மருமகனையும்,தனது கணவனையும் மாறி மாறி பார்த்தாள்…

பிரபு “டீ எடுத்துகிட்டது நானு…நீங்க எதுக்கு மாமியை கோச்சிக்குறீங்க…டீ வேணும் அப்படின்னா என்ன  கேளுங்கோ மாமா…”என சொன்னவன்,தன் கையில் இருந்த டீயினை உறிஞ்சியவன் “வாவ்….பேஷ்…பேஷ்….ரொம்ப நன்னா இருக்கு மாமி….”என அய்யர் வீட்டு பையன் போல பேசினான்…

 

“யாருக்கு யாரு மாமா…போற வரவனுக்கு எல்லாம் நான் மாமானும் இல்ல…கண்டவன் எல்லாம் என்னோட மருமகனும் இல்ல…”என ஆங்காரமாய் சொல்ல….பிரபுவின் முகம் ஒரு நிமிடம் அவமானத்தால் சுருங்கி பின் சரியானது…

 

கமலம் அவனை பாவமாய் பார்த்துக்கொண்டு இருக்க,ராமைய்யா இன்னும் அவனை உறுத்து விழித்தபடி கோவத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தார்…

 

ராமைய்யாவோ கோவத்தின் உச்சியில் இருந்தார்…”என்ன ஒரு திணக்கம் இருந்தா…மாமன் முறை கொண்டாடிட்டு வந்து இருப்பான்…”….என உள்ளுக்குள் பொறுமிக்கொண்டு இருந்தார்….கமலமோ அடுத்து என்ன நடக்குமோ என பயத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்…

 

கமலத்தின் மனமோ “மிருணா வந்து இருப்பாளோ…” நொடிக்கொரு முறை கண்கள் வாசலை மீண்டு வந்தது…அதனை கண்ட பிரபு “மிரு வரலை அத்தை…நான் மட்டும் தான் வந்தேன்…”என்றான் அவரிடம்…அவரின் முகம் நொடியில் வாடிப்போக,பிரபுவின் பதிலில் கமலத்தை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தார் ராமைய்யா….

 

பிரபு “சார் நாங்க செஞ்சது தப்பு தான்…ஆனா நாங்க ஏன் அப்படி செஞ்சோம்..சாரி செஞ்சேன் அப்படின்னு கொஞ்சமாச்சும் யோசிச்சி பார்த்தீங்களா….நானும் மிருணாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்பினோம்…உங்க ஆசிர்வாதத்தோடு கல்யாணம் பண்ணணும் அப்படின்னு நினைச்சோம்…ஆனா நீங்க ஒத்துக்கல…உங்க பொண்ணை… என்னோட காதலியை வேறு ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டீங்க…எங்களோட மனசு அதுனால எவ்வளவு கஷ்டப்படும் அப்படின்னு நீங்க நினைச்சி பார்த்தீங்களா….”

 

“எனக்கு புரியிது சார்….பெத்தவங்களுக்கு எப்பவும் தன்னோட பொண்ணுக்கு ,தானே ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படின்னு தான் நினைப்பாங்க…நீங்களும் அப்படித்தான்…ஏன் என்னோட அப்பா அம்மாகூட அப்படி தான் ஆசைப்பட்டாங்க…நான் மிருணாவை விரும்புறேன்,அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்றேன் அப்படின்னு சொல்லும் போது அவங்க ஒத்துக்கல…”

 

“ரொம்ப கத்துனாங்க, திட்டுனாங்க…வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சாங்க….எனக்கும் எல்லாம் புரியுது சார்….ஆனா அது எல்லாம் நடந்து முடிஞ்சது….நடந்த எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் சார்…மன்னிப்பு அப்படின்ற ஒரு வார்த்தை நீங்க அனுபவிச்ச கஷ்டத்தையும், அவமானத்தையும் ,வேதனையையும் எப்பவுமே குறைச்சிடவோ, மறைச்சிடவோ முடியாது…அது எனக்கு நல்லாவே தெரியும்…”

 

“இருந்தும் அப்போ எனக்கு வேற வழி தெரியல சார்…மிருணாவை உயிராற காதலிச்சிட்டு அவளை வேற ஒருத்தனுக்கு விட்டு கொடுக்க என்னால முடியல…மிருணாக்கும் அன்னைக்கு நடந்ததுக்கும் எந்த ஒரு சம்மதமும் இல்ல சார்…எல்லாமே என்னால தான்…எல்லாத்துக்கும் நான் தான் காரணம்…” என சொல்லியவன் ராமைய்யாவின் முகம் பார்த்தான்…

 

எந்த ஒரு சலனமும் இல்லாமல் “நீ சொல்ல வந்ததை சொல்லிவிட்டு கிளம்பு…”என்ற ரீதியில் அமர்ந்து இருந்தார்..பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் மீண்டும் தொடர்ந்தான்..

 

“நீங்க எந்த ஒரு தண்டனை குடுக்குறது இருந்தாலும் எனக்கு குடுங்க…ஆனா உங்க பொண்ணு பாவம் சார்..தினம் தினம் நைட் நான் தூங்கன பிறகு அவ கஷ்டப்படறது பார்க்க முடியல…என்ன தான் நான் அவளை தாங்கு தாங்குன்னு தாங்கினாலும், அவளுக்குள்ள உங்களுக்கு அப்படின்னு இருக்குற இடத்தை என்னால எப்பவும் நிரப்ப முடியாது….காதலிச்சி கல்யாணம் பண்ணாலும்,அவ என் கூட சந்தோசமா சிரிச்சிட்டு வீட்ல வளைய வந்தாலும்..அவ முகத்துல நீங்க கூட இல்லாத சோகம்,நீங்க அவகிட்ட பேசி அவளை அன்பா நாலு வார்த்தை விசாரிக்காத சோகம்,ஏக்கம் எல்லாம் இன்னும் இருக்கு சார்….”

 

“ப்ளீஸ் சார்…உங்களை கெஞ்சி கேக்குறேன்….நான் உங்களோட மருமகன் இல்ல மகன்…இந்த மகன் செஞ்ச தப்பை தயவு செஞ்சு மன்னிச்சி எங்களை நீங்க ஏத்துக்கணும்…மிருணாவுக்குள்ள இருக்குற அந்த சோகம்,ஏக்கம் எல்லாம் நீங்க கூட இருந்தா கண்டிப்பா போயிடும்…எங்க வாழ்க்கை நல்லப்படியா உங்க ஆசியால ஆரம்பமாகணும்…”என உருக்கமாய் தன்னில் இருந்ததை எல்லாம் அவன் சொல்ல…

 

இது வரை எல்லாவற்றையும் பொறுமையாய் ஏனோ தானோ என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்,அவனின் கடைசி வார்த்தையில் அதிர்ந்து போய் அவனை பார்த்தார்…”என்ன சொல்றீங்க…”என இன்னும் அதிர்ச்சி மீளாமல் கேட்க…

 

பிரபு “ஆமாங்க சார்…நாங்க இன்னும் எங்களோட வாழ்க்கையை ஆரம்பிக்கல….இரண்டு பேரும் ஒரு நல்ல நண்பர்களை போல தான் வாழ்ந்துட்டு வரோம்…உங்களோட ஆசியும் என்னை பெத்தவங்க ஆசியும் இல்லாம எங்க வாழ்க்கையை துவங்குறதுல மிருணாக்கும் எனக்கும் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை…”என்றான் அமைதியாய்…

 

அவனை ஒரு முறை பார்த்தவர் கண்களில் கண்ணீர் வழிந்தது…என்ன தான் இரும்பு மனிதனாய் இருந்தாலும்,வெளியில் கட்டுக்கோப்பான ஆளாய் கரடு முரடான மனிதனாக,ஜாதி வெறி பிடித்தவராக இருந்தாலும்,உள்ளுக்குள் அவரும் இளகிய மனம் படைத்தவரே என்பது கமலம் மட்டும் அறிந்த ஒன்றே…

 

ஒற்றை மகளாய் பெற்று வளர்த்து ஆளாக்கி,அவனை ஒரு நல்லவன் கையில் ஒப்படைத்து,சீர் செய்து,பேரன் பேத்தி பார்த்து அவர்களுடன் விளையாடி தனது முதிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த ஒரு பெற்றோரும் ஆசைப்படாமல் இல்லை…ராமைய்யாவும் அதற்கு விதி விளக்கல்ல…

 

அவரது ஆசையில் மகள் மண்ணை போட,ஜாதியை பின்பற்றி பழங்காலமாய்  வாழ்ந்து வந்தவர்,மகள் வேறு ஜாதிகாரனை விரும்புகிறாள் என்ற செய்தி அறிந்தவுடன் வெகுண்டார்,மகளை வற்புறுத்தி, துன்புறுத்தி வேறு ஒருவனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்து இருந்தார்…

 

ஆனால் கடைசில் நடக்க கூடாதுதது எல்லாம் நடந்து அவரை உருக்குலைக்க வாழ்க்கையையே வெறுத்து போனார்…கண்முன்னே மகளை ஒருவன் தூக்கிக்கொண்டு போக,அதனை தட்டி கேட்காமல், தட்டி கழித்து சென்ற வருங்கால மருமகனை நினைத்து அவர் மனம் கசந்து போனது…இவனை நம்பியா தனது மகளை அவனுக்கு கட்டிகொடுக்க நினைத்தோம் என அவர் கூனி குறுகினார்…

 

மிருணாவின் வாழ்க்கை அவள் இஷ்டப்படி அமைந்து எங்கோ கண்காணாத இடத்தில் அவள் நிம்மதியாய் வாழ்வாள் என எண்ணி பெற்றவர்களின் மனம் உள்ளுக்குள் பலமுறை நிம்மதி அடைந்து போனது யாருக்கும் தெரியாமல்…

 

ஆனால் அவர்களின் நினைப்பு எல்லாம் பொய்யாய் போக,அவர்களின் மகள் இன்னும் அவர்களின் மகளாகவே,வாழ்க்கையை துவங்க தங்களது ஆசிக்கு காத்துக்கொண்டு இருப்பதை கேட்ட நொடி அவரது நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது…அவரால்  பிரபு சொன்னதை கேட்டு சந்தோசப்பட முடியவில்லை…

 

தன் மகள் வாழ்வு தழைக்காமல் தன்னால் தடைபட்டு இருக்கிறது என செய்தி கேட்டு வெட்கி போனார்…தன் முன்னால் மன்னிப்பு வேண்டி அமர்ந்த இருந்தவனை கண்டு அவருக்கு மனதில் சொல்ல முடியாத நிம்மதியும்,அமைதியும் குடிக்கொண்டது…மகள் நல்ல ஒரு துணையை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என எண்ணி…

 

பிரபு அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க ,கமலத்திடம் திரும்பியவர் “என்ன கமலம் நின்னுட்டு இருக்க…மருமக பிள்ளைக்கு கோழி அடிச்சி குழம்பு வை…”என சொல்ல…அங்கு யாருக்கு இது அதிகப்பட்ச சந்தோசம் என சொல்ல முடியாமல் போனது…

 

“சார்……”என பிரபு சந்தோசமாக அழைக்க….”அது என்ன சார் மோர்ன்னு வேத்து ஆளு மாதிரி அழைச்சிட்டு…மாமான்னு முறையோட கூப்பிடுங்க மாப்பிள்ளை……”என அவனின் தோள் தட்டி அதிகாரத்தோடு சொல்ல….

 

கண்களில் கண்ணீர் வழிய அவர்களை பார்த்த கமலம் விருந்து ஏற்பாடு செய்ய சமையலறைக்குள் சென்றார்….”மா….மா….நிஜமா தான் சொல்றீங்களா…என்னால நம்பவே முடியல…”என பிரபு தழுதழுப்புடன் கூற…

 

அவனை பாசத்துடன் பார்த்தவர் “என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை…கொஞ்சம் இல்ல ரொம்பவே கேவலமா பேசிட்டேன் உங்களை….”என அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மன்னிப்பு கோர “மாமா…என்ன இது….நீங்க போய் என்கிட்ட….நீங்க பெரியவங்க….” என  பிரபு பதற…

 

ராமைய்யா “தப்பு யாரு செஞ்சா என்ன மாப்பிள்ளை…மன்னிப்பு கேட்க்குறது தான் முறை…என்னதான் மனசுக்குள்ள கோவம் இருந்தாலும்,நடந்தது எல்லாம் பார்த்த பிறகு மனசு வெறுத்து போச்சு மாப்பிள்ளை…உங்களை தேடி வர ஏதோ ஒண்ணு தடுத்தது…நீங்க எல்லாத்தையும் சொல்லும்போது கூட எனக்கு மனசு இளகல மாப்பிள்ளை…என் பொண்ணும் நீங்களும் இன்னும் வாழ்க்கையை எங்களோட ஆசிக்காக ஆரம்பிக்காம இருக்கீங்க அப்படின்னு சொன்னீங்க பாருங்க…”

 

“சத்தியமா சொல்றேன் மாப்பிள்ளை அந்த ஒரு விஷயம் என்னை ரொம்ப கஷ்டப்பட வச்சிடுச்சு…என் பொண்ணு வாழ்க்கை எங்களால தழைக்காம இருக்குறது எந்த ஒரு பெத்தவனுக்கும் ரொம்ப பெரிய தண்டனை…அப்படின்னு தான் நான் நினைக்குறேன்…எல்லாத்துக்கும் மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை….”என ராமைய்யா குற்றயுணர்வோடு மீண்டும் மன்னிப்பு கேட்க

 

பிரபு “ஐயோ மாமா…நான் தான் மன்னிப்பு கேட்கணும்…நான் தான் எல்லாத்துக்கும் ஒரு வகையில காரணம்….நீங்க தான் என்னை மன்னிக்கணும்….என்னை மன்னிச்சிடுங்க மாமா…”என மன்னிப்பு கோர….

 

“கடவுளே இவங்க மன்னிப்பு கேட்டுக்கிட்டே நேரத்தையும்,நாலையும் ஓட்டிடுவாங்க போலவே…மாமி வக்கிற கோழி குழம்பு வாசனை இங்க வரைக்கும் ஆளை தூக்குது….இவங்க வேற நேரம் காலம் தெரியாம மன்னிப்பு மழை பொழிஞ்சிட்டு….”என  ஸ்ரீகாந்த் சத்தமாய் அலற…

 

அவனின் அலறலில் சிரித்த ராமைய்யா “தம்பி தமாஷா பேசுறார்…யாரு…??”என பிரபுவினை பார்த்து கேட்க…”இது என்னோட ப்ரண்ட் ஸ்ரீகாந்த் மாமா…என் கூட தான் வொர்க் பண்றான்…”என்று அவனை அவருக்கு அறிமுகப்படுத்தினான்…

 

அதன் பின் மாமனாரும்,மருமகனும் சிறிது நேரம் தீவரமாய் பேச ஆரம்பிக்க ஸ்ரீகாந்தோ கோழி குழம்பு வாசத்தினை முகர்ந்துகொண்டு சமையற்கட்டில் கமலத்திடம் சலசலக்க துவங்கிவிட்டான் சில பல கோழி துண்டுகளை ஸ்வாக செய்துக்கொண்டு கமலத்தின் புண்ணியத்தில்…

 

அதன் பிறகு சிறப்பான விருந்தினை முடித்தவர்கள் ரமைய்யாவினையும் கமலத்தையும் அழைத்துக்கொண்டு செல்ல முயல…”இல்ல மாப்பிள்ளை நீங்க முன்னாடி போங்க…நானும் கமலமும் ஒரு நாள் கழிச்சி வரோம்…”என சொல்ல…பிரபு எவ்வளவு முயன்றும் அவர்கள் தனியாய் வருவதாய் திட்டவட்டமாய் தெரிவித்துவிட அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் பிரபுவும் ஸ்ரீகாந்த்தும் அன்றே பெங்களூர் புறப்பட்டனர்…

 

சீராய் கார் பெங்களூரை நோக்கி விரைந்து கொண்டு இருக்க உல்லாசமாய் விசிலடித்தப்படி பிளேயரில் ஓடிக்கொண்டு இருந்த

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்

மெல்லிய காதல் பூக்கும்

காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி

அதை வானம் அண்ணாந்து பார்க்கும்

தூரத்தெரியும் வானம்

பாடலை முணுமுணுத்தப்படி காரை இயக்கிக்கொண்டு இருந்த பிரபுவினை புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டு இருந்தான் ஸ்ரீகாந்த்…

 

அவனின் சிரிப்பினையும் பார்வையையும் உணர்ந்த பிரபு “என்னடா ஏதோ ஒரு மார்க்கமா என்னைய ஏதோ வேற்று கிரகவாசியை பாக்குறது போல பாக்குற…என்ன…?? ” என ஸ்ரீகாந்தை பார்த்து கேட்க…

 

மீண்டும் அவனை புன்சிரிப்புடன் பார்த்த ஸ்ரீகாந்த் ஒன்றும் சொல்லாமல் சிரித்தான்…அவனின் சிரிப்பில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் “டேய் என்னடா ஒரு மார்க்கமா பார்த்து சிரிச்சு வைக்கிற…என்ன விஷயம் சொல்லு…” என்றான் மீண்டும் அவனிடம் சற்று அழுத்தமாய்…

 

ஸ்ரீகாந்த் “அது ஒண்ணும் இல்லடா…உன்னோட மாமனார்,மாமியாரை எப்படியோ பேசி சமாளிச்சிட்ட…ஆனா உன்னோட சகதர்மினி என்னோட தங்கச்சி மிருணாவை எப்படி நீ சமாளிக்க போற அப்படின்னு நினைச்சேன்…சிரிச்சேன்….”என்றவன் கடைசியில் பிரபுவின் முகம் போன போக்கை பார்த்து வாய்விட்டு சிரித்தான்…

 

பிரபு “டேய் கிராதகா..சிரிச்சு தொலையாத டா…எனக்கு எரிச்சலா  இருக்கு…இதுல என்ன சிரிக்க வேண்டி இருக்கு உனக்கு…ஓ….நான் அவகிட்ட நொந்து நூடுல்ஸ் ஆகப்போறதை நினைச்சா உனக்கு இப்பவே குதூகலமா இருக்கோ…”என முறைப்போடு கேட்க…

 

“ஹ்ம்ம்…அதே அதே…”என்றான் ஸ்ரீகாந்த் சந்தோசமாக உல்லாச குரலில்…

 

பிரபு “பாவி சண்டாளா…உனக்கு இருக்கு இருடி…எப்படி என்னோட சகதர்மினி உன்னோட அன்பு தங்கச்சியை எப்படி வழிக்கு கொண்டு வரணும் அப்படின்னு எனக்கு தெரியும்…நீ வாயை மூடிக்கிட்டு இப்போ வர…சிரிச்சி என்னைய எரிச்சல் கிளப்பன மவனே உன்னைய இங்கவே இறக்கிவிட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்….நீ நட ராஜா சர்வீஸ்ல தான் பெங்களூர்க்கு வந்து சேரணும்…அய்யாக்கு வசதி எப்படி…??…”என அஷ்திரியத்தை பயன்படுத்த….

 

ஸ்ரீகாந்த் “ஹ்ம்ம் உனக்கு துணைக்கு வந்தேன் பாரு…எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும்…நீ செஞ்சாலும் செய்வடா…எனக்கு எதுக்கு வீண்தண்டனை….நீ என் தங்கச்சி கிட்ட அடி வாங்கினா என்ன..?? இல்ல கும்மாங்குத்து வாங்கினா என்ன….??..ரெண்டுல எது வாங்கினாலும் எனக்கு சந்தோசம் தான்…”என மீண்டும் பிரபுவினை செவ்வனவே எரிச்சல் படுத்திவிட்டு எதுவும் தெரியா பிள்ளை போல அமைதியானான்…

 

இதுவரை ஸ்ரீகாந்த் சொன்ன கோணத்தில் சிந்தித்து பார்க்காதாதால் மிருணாவினை எப்படி சமாளிப்பது,வீட்டினரிடம் என்ன சொல்வது என சிந்திக்கலானான்…

 

வீட்டினரிடம் விஷயத்தை சொல்லலாம் என நினைத்தாலும் வெண்ணிலா சந்தோசப்படும் அளவுக்கு அவனின் அன்பு தந்தை சுந்தரம் சந்தோஷ அடையமாட்டார்…அடுத்த நொடியே வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்….பாவம் அம்மா எனக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போகிறார்….என்ன செய்யலாம்,பேசாமல் வீட்டுக்கு சொல்லாமல் விட்டுவிடலாமா…??…அத்தை, மாமா இருவரும் நேரில் வந்த பிறகு அவர்களுக்கு தெரியட்டும்…

 

அப்படி தெரிந்த அடுத்த நொடி சுந்தரம் எப்படி நடந்துகொள்வார்…மாமாவை அவமானப்படுத்தினால் மிருணா அதனை தாங்குவாளா…??,இல்லை மாமா அத்தையால் தான் அதனை தாங்கிகொள்ள முடியுமா…??..கடவுளே…என்ன இது…எப்படி யோசிச்சாலும் என்ன செய்யறது அப்படின்னு ஒண்ணும் விளங்கமாட்டேன்னு இருக்கு…என புலம்பி தவித்தான் அடுத்து என செய்வது என தெரியாமல்…

 

********************

 

தனக்கு தெரிந்த அனைத்து அலுவலக நண்பர்களிடமும் விசாரித்து பார்த்தவனுக்கு எந்த ஒரு பதிலும் சாதகமாக இல்லை…இவன் அழைத்து கேட்டால் அனைவரும் “என்ன விஜய் உனக்கு தெரியாதா பிரபு எங்க இருப்பான்னு…என்னை போய் கேட்குற…நீ சொல்லு அவன் எங்க இருக்கான்…போன் பண்ணா லைன் கிடைக்கல…கொஞ்சம் அவன்கிட்ட பேசணும்….” என்று அவனின் அலுவலக நண்பர் ஒருவர் அவனிடமே திருப்பி கேட்க….

 

என்ன பதில் சொல்லி சமாளிப்பது என தெரியாமல் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளித்துவிட்டு பிறகு அழைப்பதாக சொல்லி இணைப்பை துண்டித்தான்…

 

“எங்க போய் இருப்பான்…கம்பெனி விஷயமா மும்பைக்கு போறேன்ன்னு சொல்லிட்டு போய் இருக்கான்..ஆனா ஆபீஸ்ல மறைமுகமா விசாரிச்சி பார்த்த வரைக்கும் அப்படி எந்த ஒரு விஷயமும் இல்ல…வேற ஏதாவது பெரிய பிரச்சனையா…???…”

 

“சொல்ல முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை அவனுக்கு….முன்னாடி சுபா வீட்டுக்கு போகும்போது கூட என்கிட்ட அதை பத்தி ஒரு வார்த்தை சொல்லலையே….என்னவா இருக்கும்…”என எண்ணிக்கொண்டே தனது மொபைலில் இருந்த கான்டேக்ட் எண்களை பார்த்துகொண்டு வந்தவன்…ஸ்ரீகாந்த்தின் எண்ணை அவனுக்கு தொடர்பு முயன்றான்…

 

என் ப்ரண்ட போல யாரு மச்சான்

யாரு மச்சான் யாரு மச்சான்

அவன் ட்ரண்டை எல்லாம் மாத்தி வச்சான்

மாத்தி வச்சான் மாத்தி வச்சான்

நீ எங்க போன எங்க மச்சான்

எங்க மச்சான் எங்க மச்சான்

 

என காரில் ஒலிந்த முந்தைய மெல்லிசைக்கு போட்டியாக துல்லிசை ஒலிர அதனை பார்த்தவன் “விஜய்…” என திரையில் ஒளிர்ந்த பெயரில் அதனை ஏற்காமல் யோசனையாய் அதனையே பார்த்தவண்ணம் இருந்தான் ஸ்ரீகாந்த்…

 

அழைப்பை ஏற்காமல் அதனையே பார்த்துக்கொண்டு இருந்த ஸ்ரீகாந்த்தை உலுக்கி “யாருடா…போன்ல…ரிங் ஆகிட்டு இருக்கு பாரு…அட்டென்ட் பண்ணு…”என சொல்ல…திரையில் ஒளிர்ந்த பெயரை பெயரை பிரபுவிடம் காட்டினான்…

 

அவன் காட்டிய திரையில் ஒளிர்ந்த விஜயின் பெயரை கண்டவுடன் காரை அவசரமாக ஒரு ஓரத்தில் நிறுத்தினான்….பின் “என்னடா விஜய் கூப்ட்றான்…ஒரு வேலை மிருணாக்கு ஏதாவது ஆகி இருக்குமோ…”என முதல் முறையாய் பயத்தில் அலறியப்படி கேட்க..

 

பிரபுவினை பார்த்து தன் தலையில் அடித்துக்கொண்டவன் “டேய் வெண்ண…நல்லா என் வாயில வந்துடும்…அவன் எதுக்கு கூப்ட்றானோ…நீயா எதுக்கு நெகடிவ்வா திங் பண்ற….கொஞ்சம் பொறு என்னன்னு கேட்போம்…”என்றவன் அழைப்பினை ஏற்று அதனை ஸ்பீக்கரில்  போட்டவன் “சொல்லு விஜய்…எப்படி இருக்க….என்ன இந்த நேரத்துல…”என்றான் அமைதியாய்…

 

விஜய் “நான் நல்லா இருக்கேன் ஸ்ரீ…நீ எப்படி இருக்க…”என பதிலுக்கு நலம் விசாரித்தான்…

 

ஸ்ரீகாந்த் “ நானும் நல்லா இருக்கேன் விஜய்..அப்புறம் சொல்லு..என்ன இந்த நேரத்துக்கு போன் பண்ணி இருக்க…ஏதாவது முக்கியமான விஷயமா…??”  என்றான் அமைதியாய்…

 

விஜய் “ஹ்ம்ம்….முக்கியமான விஷயம் தான் ஸ்ரீ….பிரபு எங்க போய் இருக்கான்னு ஏதாவது சொன்னானா…கொஞ்சம் டென்ஷன்ல நான் அவன்கிட்ட பேசவே இல்ல…அவனும் போன் பண்ணல….”என கேட்க..

 

ஸ்ரீகாந்த்திற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை…அவன் அமைதியாய் என்ன பதில் சொல்வது என தெரியாமல் பிரபுவினை கேள்வியாய் நோக்க..பிரபுவோ அதிர்ச்சியோடும்,மிருணாவிற்கு ஏதாவது ஆகிவிட்டதா என்ற பதற்றத்தோடும் மனதிற்குள் அலறியவன் “விஜய்…என்னடா என்ன ஆச்சு…மி….ரு…மிருக்கு ஒண்ணும் இல்லையே…அவ நல்லா தான இருக்க…”என படபடப்பாய் பதற்றத்தோடு கேட்க…ஸ்ரீகாந்த் தலையில் அடித்துக்கொண்டான்…

 

விஜய் “டேய் பிரபு… எங்கடா இருக்க…எங்க போய் தொலைஞ்ச… பாவி… போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்லிட்டு போக மாட்டியா…அங்க போயிட்டு ஒரு போன் பண்ணி மிருணாகிட்ட பேசி இருக்கலாம் இல்ல…அவங்க கூட பேசகூட முடியாத அளவுக்கு அப்படி என்ன உனக்கு தலை போற வேலை…பாவம் அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா…உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையாடா….நீ மட்டும் என் கண்ணு முன்னாடி இப்போ இருந்த என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…மனுஷனா இல்ல மிருகமா நீ…”என அதிகபட்ச கோவத்தோடு அவனை சாடத்துவங்க…

 

பிரபு “விஜய் ப்ளீஸ் டா கோவப்படாத…நான் என்ன சொல்ல வரேன்ன்னு கொஞ்சம் பொறுமையா கேளு டா….”என விஜயின் கோவத்தை தணிக்க முயல…

 

விஜய் “நீ தயவு செஞ்சு வாயை தொறக்காத டா…அப்புறம் நான் கொலைவெறிக்கு ஆளாகிடுவேன்….”என கோவத்தில் கத்த..

 

பிரபு “ ப்ளீஸ் டா…கோவப்படாத…நான் ஏன் மிருணாகிட்ட சொல்லிட்டு போல அப்படின்னா….”என்றவன் நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் பகிர்ந்தவன் “ அவளுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் அப்படின்னு தான் நான் எதுவும் சொல்லல டா….இருந்த டென்ஷன்ல திரும்ப வீட்டுக்கு என்னால போன் பண்ணியும் பேச முடியல….நீ வேற ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போய் இருந்த,உன்னைய எதுக்கு டிஸ்டர்ப் பண்ணணும் அப்படின்னு தான் நான் வேற எதுவும் சொல்லல….சாரி டா….”என உண்மையான வருத்தத்துடன் கேட்க…

 

விஜய் “பரவாயில்ல டா…நானும் என்னன்னு விசாரிக்காம ரொம்ப  கோவமா பேசிட்டேன்…சாரி….பாவம் டா மிருணா ரொம்ப அழுதாங்களாம்,ஜெய் சொன்னா…கேட்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது…”என அவன் வருந்த…

 

பிரபு “ஹ்ம்ம் எனக்கு புரியுது டா…இனிமேல் எல்லாம் சரியாகிடும்…நான் பாத்துக்குறேன்….வேற எந்த பிரச்சனையும் இல்லையே…மிரு நல்லா இருக்கா இல்ல…”என தயக்கத்துடனும் ஏக்கத்துடனும் இருக்க…

அவனின் வார்த்தையில் இருந்தே புரிந்து கொண்டவன் ,மேலும் தேவையானவற்றை சொல்லி அவனை கலங்கடிக்க விரும்பாமல் “ஹ்ம்ம் நல்லா தான் டா இருக்காங்க….அழுதுட்டு தான் இருந்து இருப்பாங்க போல இருக்கு..மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்ல…ஒண்ணும் கவலைப்படாத…”என ஆறுதல் அளித்தான்….

 

விஜயின் வார்த்தைகள் அவள் நிறைய அழுது இருக்கிறாள் என மனதிற்கு சற்று வருத்தத்தையும், அதனை தவிர வேறு ஏதும் பிரச்சனை இல்லை என இதம் தர “தேங்க்ஸ் டா…நாளைக்கு காலையில ஆபீஸ் வந்துடுவேன்…நீ எப்படி ஆபீஸ் வருவியா,இல்ல லீவ்வா…”என்றான் பிரபு…

 

விஜய் “ஹ்ம்ம் மோஸ்ட்லி வந்துடுவேன் பார்ப்போம்…சரி டா…ஹாவ் அ சேப் ஜர்னி….டேக் கேர் டா…பார்த்து மிருணாவை ஹாண்டில் பண்ணு…”என்றவன் அதன் பிறகு சிறிது வார்த்தை ஸ்ரீகாந்துடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்….

 

பின் ஜெயஸ்ரீக்கு அழைத்தவன் பிரபுவிடம் பேசியது,என்ன காரணத்திற்காக அவன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றது என அனைத்தையும் பகிர்ந்து கொண்டான்…

 

ஜெயஸ்ரீ “என்ன ஜெய் இது ரொம்ப அநியாயம் விஜய் அண்ணா பண்ணது….கொஞ்சம் கூட அவருக்கு மனசாட்சியே இல்லையா…??…ச்ச பாவம் மிருணா அண்ணி எவ்வளவு கஷ்டபட்டாங்க தெரியுமா…”என முதலில் கோவத்தில் ஆரம்பித்தவள் கடைசியில் வருத்தத்தில் முடித்தாள்…

 

அவளின் வார்த்தையின் மூலம் வெளிப்பட்ட ஆதங்கமும்,கோவமும்,வருத்தமும் அவனுக்கு நன்கு புரியே செய்தது..இருந்தும் என் செய்ய..??…பிரபு எண்ணி செயல்பட்டது சரியே…ஆனால் அவன் மிருணாவிற்கு தெரியாமல் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என மறைத்ததும் விஜயினை பொறுத்தவரை சரி என ஒத்துக்கொள்ளகூடியதே….அனைவருக்கும் அந்நிலையில் அப்படி தான் செய்ய தோன்றும்…பிரபுவும் அப்படியே நினைத்தது ஒன்றும் தவறல்ல தான்…

 

ஆனால் அதனால் மிருணா பட்ட துயரம், வேதனை,அவனின் குடும்பத்தினர் பட்ட கஷ்டம் அனைத்தும் நினைக்கும்போது தவறு எனத்தான் அவனுக்கும் படுகிறது…இருந்தும் என்ன செய்ய…???…என அவன் யோசித்துக்கொண்டு இருக்க…

 

லைனில் “ஜெய்….ஜெய்….”என இரு முறை ஜெயஸ்ரீயின் அழைப்பில் தன் சிந்தனையில் இருந்து கலைந்தவன் “ஹ்ம்ம் சொல்லு டா…லைன்ல தான் இருக்கேன்…நீ சொன்னதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்….சரி விடு நடந்தது எல்லாம் நடந்துபோச்சு….மிருணாவும் அவங்களோட அப்பா,அம்மாவை பார்க்கும்போது கண்டிப்பா சரி ஆகிடுவாங்க…”என அவளுக்கு சமாதானம் சொன்னான்…

 

ஜெயஸ்ரீ “நீங்க சொல்றது எனக்கும் புரியுது ஜெய்…ஆனா பாவம் மிருணா அண்ணி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க…அது தான் நினைக்கும் போது வேதனையா இருக்கு…நீங்க சொல்ற மாதிரி மிருணா அண்ணி அவங்களோட அப்பா,அம்மாவை பார்த்தா கண்டிப்பா மனசு மாறிதடுவாங்க…பிரபு அண்ணா மேல இருக்குற கோவம் வருத்தம் எல்லாம் சரியாகிடும்…இருந்தும் பிரபு அண்ணா எப்படி அண்ணியை சமாளிக்க போறாங்க அப்படின்னு நினைச்சா தான் எனக்கு அப்படியே கலக்கமா இருக்கு…”என தனது கலக்கத்தை சொல்ல…

 

விஜய் “அது எல்லாம் ஒண்ணும் ஆகாது டா..அவன் சமாளிச்சிப்பான்…இத்தனை நாள் எப்படி சமாளிச்சானோ அதே மாதிரி தான்…யு டோன்ட் வொர்ரி…”என அவளுக்கு சமாதானம் சொன்னவன் “ஹே நான் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்…அம்மாகிட்ட சுபாவை பத்தி எல்லாமே சொன்னேன்…அவங்க அவங்களோட ப்ரண்ட் சகுந்தலா ஆன்ட்டிகிட்ட பேசிட்டு மேற்கொண்டு என்ன பண்றது அப்படின்னு பேசறேன்னு சொல்லி இருக்காங்க…எனக்கு என்னவோ இதுல ஹோப் இருக்கு….கண்டிப்பா இந்த முறை சுபா சரியாகிடுவான்னு தோணுது….”என அவன் பகிர்ந்து கொள்ள…

 

அவனின் நம்பிக்கை அவளுக்கு சந்தோசமாக இருந்தாலும்,ஏனோ ஜெயஸ்ரீக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை…பார்க்காத டாக்டர் இல்லை,போகாத ஹாஸ்பிடல் இல்லை,ஆனால் சுபாவின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாய் அப்படியே இருப்பது ஜெயஸ்ரீயின் நம்பிக்கையில் ஆட்டம் காண வைத்தது…

 

ஆனால் விஜய்க்கும் நவீனுக்கும் இருக்கும் நம்பிக்கையை நினைத்து அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது…அவனின் நம்பிக்கையை குலைக்க மனம் வராமல் “அப்படியா ஜெய்…கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு…கூடிய சீக்கிரம் நல்ல ஒரு பதிலை அவங்ககிட்ட இருந்தும்,உங்க கிட்ட இருந்தும் எதிர்பார்க்குறேன்…”என்றாள் அவனுக்கு தெம்பூட்டும் விதமாக…

 

விஜய் “கண்டிப்பா டா…அம்மா ஆன்ட்டிகிட்ட பேசிட்டு சொல்றேன் அப்படின்னு சொன்னாங்க…அதுக்கு பிறகு சுபாவோட ரிப்போர்ட் காட்டலாம்…ஹோப் பார் தி பெஸ்ட்…”என்றான் அமைதியாய்…

 

ஜெயஸ்ரீ “ஹ்ம்ம்…கண்டிப்பா ஜெய்…எல்லாம் நல்லதாவே நடக்கும்…டோன்ட் வொர்ரி…”என்றவள் பின் நினைவு வந்தவளாக “ஆமா உங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போன விஷயம் என்ன ஆச்சு…”என்றாள் அவனிடம்…

 

நடந்ததை அவளிடம் பகிர்ந்து கொண்டவன் “இனி எப்படி பேசி அவனை சமதானப்படுத்துறது அப்படின்னே புரியல…என் ப்ரண்ட் சுரேஷோட நம்பர் உன்னோட அத்தை பையன் நந்துகிட்ட தான் கேட்டு இருக்கேன்….சார் விசாரிச்சி சொல்றேன் அப்படின்னு சொன்னார்…ஆனா இன்னும் எந்த தகவலும் இல்ல…”என்றான் பெருமூச்சை வெளியேற்றியப்படி…

 

அவன் சொன்னதை எல்லாம் அமைதியாய் கேட்டவளுக்கு சுரேஷ் சொன்ன விஷயங்களும்,விஜய் சொன்ன விஷயங்களும் ஒன்றை ஒன்றை ஒத்துபோனது அதிர்ச்சியாகவும்,அதே நேரம் ஆச்சர்யமாகவும் இருந்தது…இது எப்படி சத்தியமா ஆகும் என அவள் மூளையை கசக்கி ஆராய்ந்துக்கொண்டு இருக்க…விஜயின் “ஜெய்…”என்ற அழைப்புக்குரல் அவளின் ஆராய்ச்சிக்கு தடை விதிக்க….

 

“ஹ்ம்ம் சொல்லுங்க ஜெய்…”என்றாள் ஆராய்ச்சியை விடுத்து…”என்ன ஆச்சு சட்டுன்னு அமைதியா ஆகிட்ட…”என்றான் கேள்வியாய்….

 

ஜெயஸ்ரீ “ஒண்ணும் இல்ல ஜெய்…எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…நான் அப்றமா பேசுறேன்…”என்றவள் அவனின் பதிலை கூட எதிர்பாராது அழைப்பை துண்டித்தாள்…

 

“சட்டுன்னு என்னாச்சு இவளுக்கு…ஏதாவது ப்ராப்ளமா…அப்படி இருந்தா என்கிட்ட சொல்லி இருப்பாளே….என்னவா இருக்கும்…”என எண்ணியவனுக்கு ஒன்றும் ஊகிக்க முடியவில்லை…

நந்துவிடம் சுரேஷின் எண்ணை பற்றி கேட்டதற்கு இன்னும் எந்த ஒரு பதிலும் வரவில்லை என நினைத்தவன் அவனுக்கு அழைத்தான்…”ஹலோ சொல்லுடா…”என கம்பீரமாக அந்த பக்கம் இருந்து நந்துவின் குரல் கேட்க….

 

ஒரு நிமிடம் இது நந்து தானா என அவனுக்கே ஆச்சர்யமாய் ஆனது…. ”டேய்…வரு…என்னடா லைன்ல இருக்கியா…என்னடா பண்ற….சொல்லுடா….”என நந்து அந்த பக்கம் கத்த…

 

விஜய் “ஹ்ம்ம் இருக்கேன் டா…உன்கிட்ட சுரேஷோட நம்பர் கேட்டு இருந்தனே என்ன ஆச்சு…கண்டுபுடிச்சியா….???…”என்றான் அவனிடம்…

 

நந்து “ஓ..சாரி டா…அர்ஜென்ட்டா ஒரு கொலை கேஸ் விஷயமா நான் டெல்லி வந்துட்டேன்…என்னோட ப்ரண்ட்கிட்ட சொல்லி இருந்தேன்…அவன்கிட்ட இருந்து எந்த ஒரு பதிலும் இல்ல…ஒரு நிமிஷம் இரு…நான் அவன்கிட்ட கேட்டு சொல்றேன்…”என்றவன் அழைப்பை துண்டித்தான்…

 

சுரேஷிடம் விஷயத்தை எப்படி சொல்லி அவனுக்கு புரியவைப்பது என சிந்தனையில் ஆழ்ந்தான்…அப்படியே ஒரு பத்து நிமிடம் கழிந்து இருக்க போனில் வந்த அழைப்பு அவனின் சிந்தனையை தடை செய்தது…திரையில் ஒளிர்ந்த எண்ணை கண்டவன் குழப்பமான முகத்துடனே அதனை ஏற்று காதில் வைத்தான்…

 

“சொல்லு ஜெய்..இப்போ தான போன் பண்ண…அதுக்குள்ள திரும்ப பண்ற…என்ன…??..”என சொன்னவன் குரல் வழக்கத்திற்கு மாறாக வேறுபட்டு இருந்தது ஜெயஸ்ரீக்கு தெளிவாய் தெரிந்தது…

அதனை அவனிடமே கேட்கவும் செய்தாள்…”என்ன ஜெய்…என்ன ஆச்சு..குரல் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு…”என அக்கறையோடு கேட்க…

 

அவளின் அக்கறையில் நெகிழ்ந்தவன் தனது மனதிற்குள் ஓடும் எண்ணங்களை அவளிடம் மறைக்காமல் ஒரு சலிப்புடனே பகிர்ந்து கொள்ள…அவன் சொன்னதை கேட்டு “ஹா..ஹா…” என ஜெயஸ்ரீ சிரிக்க ஆரம்பிக்க…விஜய் குழம்பி தான் போனான்…

 

“என்ன நான் சொன்னது உனக்கு சிரிப்பா இருக்கா…நானே என்னடா பண்றதுன்னு முழிச்சிட்டு இருக்கேன்…நீ கிண்டல் பண்ணி சிரிக்கிற…”என சற்று பொய் கோவத்துடனே சொல்ல…

 

மேலும் சிரித்து அவனின் கோவத்தினை அதிகரிக்க விரும்பாமல் “சரி…சரி…கோவப்படாதீங்க…நான் உங்களுக்கு சந்தோஷமான விஷயத்தை சொல்ல போறேன்…”என்றவள் “உங்களோட அண்ணாக்கு பொண்ணு பார்க்க போனீங்க இல்ல..அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா…?? “என கேட்க…

 

விஜயிடம் இருந்து “தெரியாது…”என்ற பதில் வந்தது…”அது எனக்கு தெரியுமே…உங்க அண்ணாக்கு பார்த்து இருந்த பொண்ணு வேற யாரும் இல்ல ஜெய்…வீணா தான்…”என்றாள் சந்தோசமாக…

 

ஜெயஸ்ரீ சொன்னதை நம்பமுடியாமல் சிறிது நேரம் சிலை என இருந்தவன் பின் “ஹே நீ என்ன சொல்ற…உண்மையாவே வா…விளையாடலையே…??…”என எதிர்பார்ப்பு மற்றும் அவநம்பிக்கையுடன் கேட்க…

 

ஜெயஸ்ரீ “என்ன ஜெய்..நான் இந்த விஷயத்துல போய் காமெடி பண்ணுவேன்னா…சத்தியமா நான் சொல்றது உண்மை…உண்மையை தவிர வேறொன்றும் இல்லை…வேணுன்னா உங்களோட அம்மாகிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணிக்கோங்க….சுரேஷ் அண்ணாவும் வீணாவோட அண்ணாவும் க்ளோஸ் ப்ரண்ட்ஸ்…”

 

“கண்டிப்பா சுரேஷ் அண்ணா அவங்க தங்கச்சியை உங்களோட அண்ணாக்கு கல்யாணம் பண்ணிவைக்க கண்டிப்பா சம்மதிப்பாங்க…நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க…நான் சுரேஷ் அண்ணாவோட நம்பர் அனுப்புறேன் அவங்ககிட்ட பேசி பாருங்க…”என சொல்ல…

 

மகிழ்ச்சியின் பிடியில் இருந்த விஜய்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…”எனக்கு எப்படி சொல்டறதுன்னே தெரியல…ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஜெய்…பாவம் யாதவ்,என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தான்…அம்மாக்கு கூட எப்படி இந்த விஷயத்தை ஹாண்டல் பண்றது அப்படின்னு ரொம்ப குழப்பம்…”

 

“நந்து கிட்ட தான் சுரேஷோட நம்பர் கேட்டு இருந்தேன்…அவன் இன்னும் தரல…நீ முதல்ல சுரேஷோட நம்பர் அனுப்பு…நானா அவன்கிட்ட பேசுறேன்….முதல்ல இதை அம்மாகிட்ட சொல்றேன்…”என்றவன் அவளிடம் இருந்து சரி என பதில் வந்த பின்னர் அழைப்பை துண்டித்துவிட்டு அவனின் அம்மா சாரதாவினை  காண விரைந்தான்…

 

வெளியில் உள்ள செடிகளின் அருகில் எதனையோ செய்துக்கொண்டு இருந்தவர் “அம்மா…”என்ற வருவின் அழைப்பில் “என்ன வரு…நான் இங்க இருக்கேன்…”என அவனை அழைக்க…

 

மூச்சு வாங்கியபடி அவரின் முன் நின்றவன் “உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல போறேன்…அன்னைக்கு நீங்க பொண்ணு பார்க்க போனீங்களே…அந்த பொண்ணு பேரு என்ன..??..”என கேட்க…

 

இப்போ எதற்கு அது என்பது போல சாரதா அவனை நோக்க…”நீங்க சொல்லுங்க மா…நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்றேன்…”என அவரை அவசரப்படுத்த…

 

“அந்த பொண்ணு பேரு வீணா..பெங்களூர்ல ஏதோ சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறதா சொன்னாங்க…ஏன் வரு…எதுக்கு இப்போ இது எல்லாம்…?? “என சாரதா புரியாமல் எதிர்கேள்வி கேட்க…

 

அவரின் பதிலில் சந்தோசம் அடைந்த வரு “அம்மா நிஜமா…நீங்க சொல்றது…கரெக்ட்டா சொல்லுங்க…அந்த பொண்ணு பேரு வீணா தானா…??…உங்களுக்கு நூறு சதவீதம் உண்மையா தெரியுமா…??..”என கேட்க…

 

அவனின் கேள்வியில் நீ என்ன லூசா என்பது போல பார்த்தவர் “எனக்கு நல்லா தெரியும் வரு…அந்த பொண்ணு பேரு வீணா தான்…அவளோட அண்ணா பேரு மாதவன்…நூத்துக்கு இருநூறு சதவீதம் தெரியும்…அது சரி நீ எதுக்கு இப்போ இதைபத்தி கேட்குற…”என எதிர்கேள்வி கேட்க…

 

அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “அம்மா ஒரு நிமிஷம் நான் யாதவை அழைச்சிட்டு வந்துட்றேன்…உங்க ரெண்டு பேருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றேன்…”என்றவன் “யாதவ்..யாதவ்…இங்க கொஞ்சம் வா…”என யாதவனை உரத்த குரலில் அழைத்தான்…

 

அதன் பின் யாதவ் வந்து சேர,சாரதாவிடமும் யாதவனிடமும் வீணா தான் தன்னோடு பணிபுரிகிறவள் என்றும்,அவளைத்தான் யாதவனுக்கு பெண் பார்த்தவள் என்றும் சொன்னவன்,வீணா என்னுடன் பணிபுரியும் பிரதீப்பை தான் விரும்பிகிறாள்..இது சுரேஷுக்கும் தெரியும்…அவன் பிரதீப்பை பெண் கேட்டு வீணாவின் வீட்டிற்கு வரசொல்லி இருப்பதாகவும் என அவன் விஷயத்தை பகிர்ந்து கொள்ள…

 

யாதவனும் சாரதாவும் அவனை அதிர்ச்சியோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக்கொண்டு இருந்தனர்….”என்ன வரு…நீ சொல்றது உண்மையா…”என யாதவ் கேட்க…

 

“ஆமா யாதவ்..உண்மை தான்…ஜெயஸ்ரீ தான் சொன்னா…சுரேஷ் ஜெயஸ்ரீகிட்ட போன் பண்ணி சொன்னானாம்…அவ சுரேஷ் நம்பர் அனுப்பி இருக்கா…கண்டிப்பா சுரேஷ் புரிஞ்சிப்பான்…நீ ஒண்ணும் கவலைப்படாத…”என்றவன் ஜெயஸ்ரீ அனுப்பிய சுரேஷின் எண்ணிற்கு அழைத்தான்…

 

இரண்டே ரிங்கில் அழைப்பை ஏற்ற சுரேஷ் “ஹலோ…யாரு…”என கேட்க…”டேய் சுரேஷ் நான் தான்டா…வரு பேசுறேன்…எப்படி இருக்க…”என ஆனந்தமாய் நண்பனை வரு விசாரிக்க…

 

“டேய் வரு…நான் நல்லா இருக்கேன் டா…நீ எப்படி இருக்க…”என பதிலுக்கு நலம் விசாரித்தவன் “போடா…நான் உன் மேல ரொம்ப கோவமா இருக்கேன்…கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம எங்ககூட சொல்லாம கொள்ளாம போயிட்ட…எத்தனை முறை உனக்கு தாமஸ்,சஞ்சீவ் ,நானு, எல்லாம் காண்டக்ட் பண்ண ட்ரை பண்ணோம் தெரியுமா…??…”என செல்லமாய் முறுக்கி கொள்ள…

 

அவனின் பாசத்தில் நெகிழ்ந்தவன் “சாரி டா..சந்தர்ப சூழ்நிலை அப்படி நடந்துக்க வேண்டியதா ஆகிடுச்சு…வேற ஒண்ணும் இல்ல..”என அவனை சமாதானபடுத்தியவன் சிறிது நேரம் பேசிவிட்டு,யாதவன் சரண்யாவை விரும்புவதையும்,அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும்,எங்கள் வீட்டில் அனைவருக்கும் இதில் மனப்பூர்வமான சம்மதம் எனவும் தெரிவித்தவன் சுரேஷின் சம்மதத்திற்காக காத்திருந்தான்….

 

வரு சொன்னதை எல்லாம் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தவன்,”என்னத்த சொல்லடா…எனக்கு நீ சொன்னதை கேட்டு ரொம்ப சந்தோசமே…ஆனா இதுல சரண்யாவோட சம்மதம் ரொம்ப முக்கியம்…நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்…”என சொல்ல…

 

சுரேஷ் எதிர்மறையாக எதுவும் சொல்லாமல் சம்மதத்தின் அறிகுறியோடு சொன்னதை கேட்டு சந்தோசமடைந்தவன் “தேங்க்ஸ் டா…சீக்கிரம் நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம்…”என சொல்லி அழைப்பை துண்டித்தவனை ஆவலாய் யாதவன் பார்த்துக்கொண்டு இருந்தான்…

 

யாதவனின் ஆவலான முகத்தை கண்டு வருவின் முகம் இன்னும் கனிய “அண்ணா சீக்கிரம் நம்ப வீட்ல கெட்டிமேளம் சத்தம் கேட்கும்…நோ வொர்ரீஸ்…சுரேஷ் வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்கான்…”என சொல்ல…

 

அதன் சந்தோசத்தில் தம்பியை கண்டிக்கொண்ட யாதவனின் அணைப்பில் வரு சந்தோசத்துடனே ஐக்கியமானான்…ஆனால் தன் மனம் கவர்ந்தவளால் தான் நிராகரிப்படும் போது யாதவனின் காதல் கொண்ட மனம் என்ன பாடுபடும்  என சுரேஷால் எண்ணி பார்க்க முடியவில்லை…

 

அவனுக்கு அவனின் தங்கையை பற்றி நன்கு தெரியும்…அதுவும் வீணாவினை பெண்பார்க்க வந்த யாதவ் குடும்பத்தினர் எதுவும் சொல்லாமல் போனதும் அல்லாமல்,சில நாள் கழித்து ஏதோ சப்பை காரணம் சொல்லி நிராகரித்தது வீணாவினை விட சரண்யாவிற்கு தான் அதிக கோவத்தினை யாதவனின் மேல் உண்டாக்கியது…

 

ஆனால் எதையும் அறியாத யாதவ் சரண்யாவுடன் நடக்க போகும் கல்யாண கனவுகளில் தன்னை முழுதும் மூழ்கடித்துக்கொண்டான்…கல்லூரியில் சரண்யாவினை கண்டதை ஒரு முறைக்கு ஆயிரம் முறை நினைத்து பார்த்தான்…அவளிடம் எப்படி பேச வேண்டும்,எப்படி பழக வேண்டும்,என்ன என்ன அவளுக்கு பிடிக்கும்..என ஒரு பெரிய பட்டியலையே போட ஆரம்பித்தான்…

 

எல்லாம் சரியாகும் என எண்ணி

இருந்தேன் நமக்குள்

நாள்கள் வேகமாய் சென்று இருக்க

இடைவெளிகளும் வேகமாய்

வளர்ந்து விட்டு இருந்தன நமக்குள்

விலகியது நானா…??

அல்லது விலக்கியது நீயா…??

விரைந்து வந்துவிடு என்னிடம்

நமக்குள் இருக்கும் விலகளை

குறைத்து நெருக்கத்தை என்றும்

நமக்குள் ஏற்படுத்திட…

 விலகல் தொடரும்…

 

Advertisement