Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-3

 

அவள் அறையில் இருந்து வெளியேறியதும் விஜய்க்கு அவனின் நிலையினை அவனாலே அறிய முடியவில்லை…தாம் எந்த மாதிரியான உணர்வுக்கு ஆட்படுகிறோம்,மனம் என்ன எண்ணுகிறது என ஏதும் அவனுக்கு புரியவில்லை…

 

ஆனால்இருந்தும்அவன் ஆழ்மனது மிகவும் சந்தோசத்துடன் இருப்பது அவனுக்கு புரியத்தான் செய்தது…அதை அவன் மூளை தவறு என சொன்னாலும் மனது அதை ஏற்க மறுத்தது… மதில் மேல் இருக்கும் பூனை நிலைபோல்  இருக்கும் தன்னையே வெறுத்து, இருக்கும் முக்கியமான வேலைகளை எல்லாம் செய்யாமல் எதில் இருந்தோ தப்பிப்பது போல அந்த அறையினை விட்டு அவசரமாக எங்கோ வெளியேறினான்…

 

அவன் அறையினை விட்டு வேகமாக வெளியெறுவதை கண்ட ஸ்ரீ “யாருக்கு பயந்துட்டு ஓடுற ஜெய்…ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ என்னை புரிஞ்சிப்ப..அப்ப நீ இந்த மாதிரி ஓட மாட்ட…காலம் உன்னை விட்டு ஓடி இருக்கும்…சீக்கிரம் நீயும் என்னை புரிஞ்சிப்ப ஜெய்..என்னை நீ என்ன காரணத்துக்காக நிராகரித்தாலும் அதை எல்லாம் தவிடு பொடியாக்கி உன்னை நான் சேர்ந்தே தீருவேன்… உன்னை என் கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது..” என மனதில் உறுதி கொண்டாள்…

 

ஒரு நாள் இந்த மன உறுதியும் இல்லாமல், அவனை தானே விட்டு விலகிச் செல்வோம் என அவள் அறிய வாய்ப்பில்லை தான்…அறையை விட்டு வெளியேறியவன் நேராக கேன்டீன் சென்றான்…அங்கு ஒரு கப் காபியினை வாங்கி,அருகில் உள்ள மேசையில் சென்று அமர்ந்தான்… வாங்கியவன் சிறிதும் பருகாமல் அந்த காபியில் இருந்து ஆவி பறப்பதையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான்… எதை நினைக்க கூடாது என எண்ணி அறையை விட்டு வெளியேறி வந்தானோ மனம் அதையே எண்ணி எண்ணி அவனை இம்சைக்கு உள்ளாக்கியது…

 

அவனின் வருத்தத்தை போக்கவும்,அவன் மனம் சிந்தனையில் இருந்து விடுபடவும்விஜயின் நண்பன் பிரபு வந்து சேர்ந்தான்… வந்தவன் கனவுலகில் இருந்த விஜயின் முதுகின் மேல்ஒரு அடியினை வைத்து அவன் அருகில் அமர்ந்தான்…

தன் மேல் விழுந்த அடியின் மூலம் நினைவிற்கு வந்தவன் யார் என  கோவமாக திரும்பியவன் முகத்தில் பிரபுவினை கண்டதும் புன்னகை அரும்பியது… “ஹே மாப்பிள்ளை வாடா  வாடா …எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து ,எப்படி இருக்க ?? “என்றான்விஜய்.

 

“டேய் துரோகி எதுவும் பேசாத,நான் உன் மேல கொலை வெறியில இருக்கேன்..” என்றான் பற்களை நறநறவென்று கடித்து கொண்டுபிரபு….

 

அவனின் பற்கள் அடிபடுவதை பார்த்து அவன் எவ்வளவு கோவமாய் இருக்கிறான் என அறிந்துகொண்டவன் அவனை அமைதிபடுத்தும் வேலையில் ஈடுபட்டான்

 

“டேய் என்னடா மாப்பிள்ளை இப்படி கோச்சிக்குற..நீயே கோவப்பட்டா எப்படி சொல்லு…வா வந்து ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடி ,கோவம் எல்லாம் இருக்குற இடம் தெரியாம காணாம போய்டும்..என்றவன் “ராம் அண்ணா,பிரபுக்கு ஒரு ஜூஸ் ,ஐஸ் கொஞ்சம் ஜாஸ்தியா ,அய்யா கோவமா இருக்காரு,அவனை உங்க ஜூஸால குளிர வைங்க..” என்று அவரிடம் சொன்னவன் பிரபுவினை நோக்கி தன் பார்வையை செலுத்தினான்.

 

அவன் முகம் இன்னும் கோவத்தால் சிவந்து போய் இருந்தது..அதை கண்ட விஜய் “பையன் ரொம்ப கோவமா இருக்கான் போலவே,நாம்ப அதை கவனிக்காம அவனை இன்னும் வெறுப்பு ஏத்திட்டு இருக்கோம்..விட்டா என் ஒட்டு மொத்த சதையையும் கடிச்சு கொதற நாய் நிலைமையில இருக்கான்..விஜய் அடக்கி வாசிடா “ என அவன் மனசாட்சி இடிக்கவும், பிரபுவினை பார்த்து ஒட்டு மொத்த தன் பற்களையும் காட்டினான்…

 

விஜயின் இச்செய்கையை கண்ட பிரபுவிற்கு சிரிப்பு தான் வந்தது…எல்லோரிடமும் இறுகிய முகத்தினை காட்டும் விஜய்,பிரபுவிடம் மட்டுமே அவனின் சாந்தமான,சந்தோஷமான முகமும் செய்கையும் வெளிப்படும்..பிரபுவும் இதை அறிந்தவனே,பிரபுவும் விஜய்  உடன் இருக்கும் போதெல்லாம் அவனுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்வான்…இதனாலே விஜயும் பிரபுவிடம் மட்டுமே மனம் விட்டு பேசுவது,சிரிப்பது எல்லாம்…

விஜய் வெளியில் இறுகிய முகத்துடன் மட்டுமே காட்சி அளிப்பான்..அது எல்லாமே விஜயே தன்னை அப்படி காட்டி கொள்வது,அனைத்தும்  வெறும் நாடகமே..நாடகத்தின்முக்கியமான காரணம் ஸ்ரீ அறியும் போது அவளின் நிலை என்னவாக இருக்கும் என்பது யாம் அறியேன்…

 

விஜயின்  இச்செய்கையை எல்லாம் துல்லியமாக அறிந்த ஒரே ஆள் பிரபு மட்டுமே…பிரபுவினை தவிர வேறு எவருக்கும் விஜயின் இந்நிலைக்கான காரணம் தெரியாது..மிருணாவும் விஜய் இப்படி இருப்பதை பார்த்து பிரபுவிடம் அதிக முறை கேட்டு இருக்கிறாள் “ஏன் இவர் இப்படி இறுகிய எஃகாய் இருக்கிறார்..” என்று…அதற்கு பிரபுவின் விடை “அவன் அப்படித்தான்…”என்று ஒரு வரியோடு முடித்து விடுவான்..அதற்கு மேல் மிருணாவும் அவனை பற்றி கேட்கமாட்டாள்… அவனை பற்றி யோசனையில் இருந்தவனை விஜயின் அழைப்பு மீட்டது…

 

பிரபு “ஹ்ம்ம் சொல்லு டா, அப்புறம் எப்படி இருக்க,எப்போ வந்த..ஆளையே பார்க்க முடியல…”.

 

விஜய் “எனக்கு என்னடா…நான் நல்ல இருக்கேன், வந்து ஒரு வாரம் ஆச்சு,நீ எப்படி இருக்க..”. என கேள்வியினை கேட்டவன் ,”உனக்கு என்ன புது மாப்பிள்ளை,எப்படி இருப்ப,நல்லா ஜகஜோதியா ஜொலிப்பையே..”என பதிலும் அவனே சொன்னான்..அவனின் பதிலில் ஆச்சர்யமடைந்த பிரபு “உனக்கு எப்படா தெரியும்…”என்றான்.

 

விஜய் “எப்படான்னு கேட்காத,எப்படின்னு கேளு..மூணாவது மனுஷன் மூலியமா உன்னோட கல்யாணத்தை தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு..நீ எல்லாம் என் ப்ரெண்ட்ன்னு வெளிய சொல்லாத,நானும் சொல்ல மாட்டேன் “என்றான் அடக்க பட்ட கோவத்துடன்..

 

பிரபு “மச்சி என்னடா..இப்படி எல்லாம் கோச்சிக்குற…நானும் உனக்கு சொல்லணும்ன்னு எத்தனை முறை போன் பண்ணேன்தெரியுமா..உனக்கு போன் பண்ணா லைன் கிடைக்கல… நீயும் இல்லாம நான் எவ்வளவு கஷ்ட பட்டேன் தெரியுமாடா…”என்றான் வருத்தமான குரலில்.

 

பிரபுவின் வார்தையில் வெளிப்பட்ட வேதனையை கண்டு விஜய் துணுக்குற்றான்…இருந்தும் ஆறுதலாக அவனின் கையினை பிடித்து அழுத்தியவன் மேலே சொல்லுமாறு கண் அசைத்தான்…அவனின் கண்ணசைவை கண்ட பிரபுவும் இத்தனை நாள் தனி மரமாய் இருந்து இரு மரமாய் மாற தான் பட்ட கஷ்டத்தை, தன் தோழனிடம் சொல்ல தொடங்கினான்…

 

பிரபு  “நாம்ப வேலைக்கு சேர்ந்து ஒரு ஆறு மாசம் கழிச்சு தான் மிருணா,வேலைக்கு சேர்ந்தா உனக்கு தெரியும் இல்ல…”..

 

விஜய்  “ஹ்ம்ம் ..தெரியும் ..”

 

பிரபு “அவ நம்பகூட வேலை பாக்குற சாரதி இருக்கான் இல்ல…அவன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற ஹாஸ்டல்ல தான் இருந்தா..ஒரு முறை நான் சாரதியை பார்த்துட்டு திரும்ப வரும் போது அவளை அங்க வழியில பார்த்தேன்…அதுக்கு முன்னாடி நம்ப டீம் சேரும் போது ஸ்ரீகாந்த் இன்ட்ரோ கொடுக்கும் போது பார்த்தது தான்…பிறகு வழியில பார்க்கவும்…”

 

“நம்பக்கூட ஒரே கம்பெனியில வேலை பாக்குற பொண்ணாச்சேன்னு,நானே போய் ஒரு ஹாய் சொன்னேன்…அவளும் முகம் திருப்பமா நல்லா தான் பேசினா,அப்புறம் அப்போ அப்போ ஆபீஸ்ல பார்க்கும் போது இரண்டு பேரும் பார்த்து சின்னதா ஒரு ஸ்மைல் பண்ணிப்போம்…கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நாள் மால்ல பார்த்தேன்..தனியா முழிச்சிட்டு இருந்தா,…” என்றவன் அந்நினைவில் மூழ்கினான்…

*************

பிரபு “ஹாய் மிருணா..இங்க என்ன ஆடு திருடன மாதிரி முழிச்சிட்டு இருக்கீங்க…”

 

“எப்படி சார் கரெக்ட்டா சொன்னீங்க…இவங்க ஆடு திருட வரல…டிரஸ் திருட வந்து இருக்காங்க… இப்ப எல்லாம் மாடர்ன் பொண்ணுங்களையும் நம்ப முடியல..எல்லாம் கலிகாலம்,எப்படி எல்லாம் மற்றவர்களை ஏமாத்த தெரிஞ்சு வச்சி இருக்காங்க..”என்றான் பில் போட்டு கொண்டு இருந்த வேலையாள் கன்னடத்தில்மிருணாவிற்கு புரிய கூடாது என……

 

அவன் சொல்வது புரியாமல் மிருணா முழிக்கவும் பிரபுவிற்கு புரிந்தது இவளுக்கு கன்னடம் தெரியாது என…

 

பிரபு “என்னங்க ..இப்படி சொல்றீங்க ..என்ன ஆச்சு…இவங்க அப்படி பட்டவங்க இல்ல…”என்றான் மிருணாவிற்கு பரிந்து கொண்டுஅவனும் கன்னடத்தில்….இவர்கள்  இருவரும் பேசுவதை ஏதோ ஊமை படம் பார்ப்பது போல் பார்த்து கொண்டு இருந்தாள் மிருணா.

 

பிரபு  “என்ன மிருணா என்ன ஆச்சு ???…”

 

மிருணா “பஸ்ல வரும்போது யாரோ பர்சை எடுத்துட்டாங்க..அதை நான் கவனிக்கல…இங்க டிரஸ் எல்லாம் எடுத்துட்டு பில் போடும்போது தான் பார்த்தேன்.. ப்ர்ண்ட்க்கு போன் பண்ணி இருக்கேன்..அவ வெளியில இருக்கலாம்..அதான் அவ வர வரையும் இங்க வெயிட் பண்றேன்…” என்றாள். அவள் சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் உற்பத்தியாகி கொண்டு இருந்தது…வெளிவரும் கண்ணீரை பிரபுவிற்கு தெரியா வண்ணம் மறுபக்கம் திரும்பி துடைத்து கொண்டாள்….

 

அந்த வேலையாள் அவளை ஒரு நம்பாத பார்வை பார்த்தான்…பிரபுவும் மிருணாவின் நிலை புரிந்து அவளுக்கு உதவினான்… அவனால் மிருணாவின் நிலையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது

 

அவனே மிருணாவின் பில்லை கட்டிவிட்டு அவளை வெளியில் அழைத்து சென்றான்… மிருணாவும் எதுவும் பேசாமல் அவனோடு சென்றாள்…அவளை அழைத்து கொண்டு ஒரு காபி ஷாப்பிற்கு சென்றான்…இவளும் அமைதியாக அவன் அமர்ந்த மேசையின் மற்றொரு நாற்காலியில் அமர்ந்தாள் …

 

பிரபு இருவருக்கும் சேர்ந்து இரண்டு கப் காபியினை வாங்கி வந்தான்… அவனுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு மற்றொன்றை அவளுக்கு கொடுத்தான்…

 

அவள் அதை தொடாமல் அமைதியாய் இருப்பதை பார்த்தவன் “என்னங்க இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கீங்களா..விடுங்க போன போகுது…ATMகார்டு மட்டும் பேங்க்லசொல்லி பிளாக் பண்ணிட்டு இன்னும் ஒன்னு புதுசா வாங்கிக்கோங்க…இதுக்கு போய் இப்படி வருத்தப்பட்டுட்டு “என்றான் ஆறுதலாக..

 

மிருணா “ரொம்ப தேங்க்ஸ்ங்க…நீங்க மட்டும் வரலனா எல்லோரும் என்னை திருடி ரேஞ்சுக்கு பார்த்து இருப்பாங்க…பார்த்து இருப்பாங்க என்ன,ஒரு சிலர் என்னை அப்படி தான் நினைச்சாங்க…என்னோட எதிரிக்கு கூட இந்த மாதிரியான ஒரு அவமானம் ஏற்பட கூடாது… நாலு பேர் முன்னாடி அப்படி ஒரு பட்டம் வாங்கி இருந்தா எவ்வளவு ஒரு அவமானம்,அதை என்னால என்னைக்கும் மறக்க முடியாது…”

 

“அதே போல தக்க சமயத்துல வந்து எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க…இன்னும் இரண்டு நாள்ல நீங்க கொடுத்த பணத்தை கொடுத்துடறேன்..என்னை தப்பா நினைச்சுக்காதீங்க…”என்றாள் அவனை இவ்வளவு சிரமத்திற்கு உள்ளாக்கி விட்டோமே என்ற குற்றவுணர்வுடன்

 

பிரபு ”ச்ச என்னங்க இது சாரி எல்லாம் சொல்லிட்டு,நான் எதுவும் தப்பா எல்லாம் நினைக்கலைங்க,நீங்க எதை நினைச்சும் குழம்பிக்காதீங்க,வாங்க நான் உங்களை ஹாஸ்டல்ல விட்டுட்டு நான் போறேன் “என்று எழுந்தான்…

 

மிருணா ”இல்லைங்க,உங்களுக்கு எதுக்கு இன்னும் சிரமம்,நா….னேபோய்க்கிறேன் “என்றாள் இன்னும் சிரமம் கொடுப்பதா என எண்ணி…பிரபு அவள் பேசுவதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவளை வற்புறுத்தி ஹாஸ்டலில் விட்ட பிறகே சென்றான்…அதன் பிறகு தினமும் கம்பெனியில் எதற்சையாக பார்க்கும்போது குட் மார்னிங் சொல்லிக்கொள்வர் இருவரும்…இப்படியாய் இருந்த அவர்கள் பழக்கம் போனில் மூலம் இன்னும் நன்றாக தொடர்ந்தது…

 

நாளுக்கு நாள் அவர்களிடம் பழக்கம் இறுகியதே தவிர குறையவில்லை..தினமும் அவர்களை பற்றி பகிர்ந்து கொண்டு ,பிடித்தது பிடிக்காததை தெரிந்து கொண்டுஒரு சுமூகமான உறவினை வளர்த்து கொண்டனர்…பிறகு தொலைபேசியின் மூலம் அவர்களின் பேச்சுகள் வளர்க்கப்பட்டது..ஒருவருக்கு மற்றொருவரின் மேல் நற்மதிப்பையும்,ஒரு உரிமை உணர்வினையும் தோற்றுவித்தது…

 

இப்படியே பேச்சின் மூலம் அவர்களுக்குள் காதலும் தோன்றியது…காதலை முதலில் சொல்லியது பிரபு தான்…மிருணாவிற்கு பிரபுவினை பிடித்து இருந்தாலும்,ஏதோ ஒன்று அவளை அவனிடம் மனம் திறந்து பேசவிடவில்லை.. அதே போல் அதனை ஏற்கவும் விடவில்லை…

 

மிருணாவின் சொந்த ஊர் மதுரையில் உள்ள முள்ளிபள்ளம் எனும் கிராமம்…அப்பா ராமைய்யா ஒரு விவசாயி,அம்மா கமலா குடும்ப தலைவி,வீட்டின் ஒரே ஒரு பெண் மிருணா..

 

அப்பா ராமைய்யா ஜாதி அதிகம் பார்க்க கூடியவர்…அந்த கிராமமே அப்படிபட்ட பழக்க வழக்கங்களில் தங்களை முழுதுமாய் ஆட்படுத்திகொண்டுள்ளனர்..மற்ற ஜாதியர்கள் அனைவரும் அவர்களுக்கு கீழ் தான் இருக்க வேண்டும் …குடிக்கும் தண்ணியை கூட கீழ் ஜாதியினற்கு அவர்கள் வழங்கமாட்டார்கள்…

 

இப்படி ஜாதி வெறியினை கொண்டு உள்ளவர்கள் தன்னோட மகள் வேறொரு ஜாதிக்காரனை காதலித்து அவனை திருமணம் செய்ய விருப்பம் கொண்டு உள்ளாள் என்பதை அறிந்த ராமைய்யா மிருணாவினை மாட்டினை கட்டும் கயிற்றினால் அடி பின்னி எடுத்துவிட்டார்…மிருணாவிற்குவலி உயிர் போனது …

 

ராமைய்யா “கழுத நாயே,எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா,நான் ஒருத்தனை விரும்புறேன்னு என்னண்ட வந்து சொல்லுவ,வெளியில படிச்சு வேலைக்கு போற இல்ல,அந்த கொழுப்பு தான் உனக்கு,இதுவே வீட்ல இருந்து கண்டிச்சு வளர்த்து இருந்தா இப்படி உன் புத்தி போகுமா,என் ஜாதி ஜனத்து முன்னாடி நான் இனிமேல் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா…”

“ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்தது எவ்வளவு தப்புன்னு இப்போ புரிய வச்சிட்டியே மூதேவி,உன்னை எல்லாம் வெட்டி போட்டா கூட என் ஆத்திரம் தீராது…”என வார்த்தைக்கு வார்த்தை அவளை திட்டிக்கொண்டே அடித்து அவளை உயிருள்ள பொணமாய்மாற்றிக்கொண்டு இருந்தார்…

 

மிருணாவின் அம்மா கமலா “என்னங்க,வயசுக்கு வந்த பொண்ணை இப்படி போட்டு அடிக்கிறீங்க…வேண்டாங்க விட்டுடுங்க,பாவங்க நம்ப பொண்ணு “என கண்ணீர் குரலோடு அவரை தடுத்து பார்த்தார்…

 

ஆனால் ராமைய்யா  “ஹேய்,என் கிட்ட வந்த உன்னையும் பொலி போற்றுவேன்,இப்படி பட்ட புள்ளையை வளர்த்ததுக்கு உனக்கு தான் எல்லா அடியும் விழுந்து இருக்கணும்,உடம்பு சரியில்லன்னு உன்னை விட்டு வச்சு இருக்கேன்,வீணா என் கையாள அடி வாங்கி சகாத..”என உருமியவர் மிருணாவினை பார்த்து

 

“காதல் கன்றாவி எல்லாத்தையும் விட்டுட்டு,ஒழுங்கா  நான் பாக்குற பையனுக்கு கழுத்தை நீட்டுற,இல்ல உன் கழுத்தை நான் எடுத்துடுவேன் ஜாக்கிரதை,வேற ஏதாவது  தகிடுத்தணம் பண்ணனும்ன்னு நினைச்ச அப்புறம் என்னை மனிஷனா பார்க்கமாட்ட   “என்று அவளிடம் எச்சரிக்கை விடுத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்..

 

அடிவாங்கி அடிவாங்கி உடம்பு எல்லாம் புண்ணாய் போனதற்கு அவளின் அம்மா கமலம் மருந்து தடவினார்…பெற்ற பிள்ளை அடிவாங்கும் போது தடுக்க முடியாத பாவியானதை எண்ணி தாயின் உள்ளம் வேதனையில் வதங்கியது…

 

அவரின் கண்ணிலும் மகளின் இந்நிலையை எண்ணி தார தாரையாய் கண்ணீர் பொழிந்தது… புண்ணில் மேல் கண்ணீர் சிந்தவும் அது இன்னும் எரிந்தது..மிருணா தன் தாயினை கண்ணீரோடு நோக்கினாள்

 

கமலம் “ஏன் டா..ஏன் இப்படி பண்ணின…நல்லா தான இருந்த,உனக்கு ஏன் புத்தி இப்படி தறிகெட்டு போச்சு,உன்ன இப்படி பாக்க தான் நான் உயிரோட இருக்கேனா…ஐயோ பாவி மனுஷன் எப்படி எல்லாம் என்னோட பூவை இப்படி கசக்கி இருக்கார்…”என தன் மகளை கட்டி கொண்டு கண்ணீர் வடித்தார்…

 

மிருணாவும் தன் அன்னையை கட்டிக்கொண்டு கதறி தீர்த்தாள்…கமலமும் மகளுடன் சேர்ந்து “தன் மகளுக்கு இப்படி ஒரு நிலை வந்தது எண்ணியும்,இனி எப்படி இவள் வாழப்போகிறாள்..” என எண்ணியும் கண்ணீர் வடித்தார்…

 

மிருணா “அம்மா என்னை மன்னிச்சுடுங்க அம்மா,மனசுக்கு புடிச்சு போச்சு,நான் என்ன அம்மா பண்ணுவேன்,பண்ண கூடாத கொலை குற்றம் பண்ண மாதிரி பேசுறீங்களே,காதல்னா அவ்வளோ பெரிய தப்பா,அது யாரும் செய்ய கூடாத செயலா,ஏன் மா எல்லோரும் இப்படி இருக்கீங்க..எனக்கு பிடிச்சவனை தேர்தெடுக்க கூடிய உரிமை எனக்கு இல்லையா அம்மா, அப்பா தான் என்னை புரிஞ்சிக்கல,நீங்களுமா…” என்றாள் கண்ணீரோடு.

 

கமலம் “என்ன மா ,நீ இப்படி எல்லாம் பேசுற,உங்க அப்பாக்கு தெரிஞ்சது ,என்னை தான் குத்தம் சொல்லுவாங்க, நான் தான் நீ செய்யறதுக்கு எல்லாம் துணை அப்படின்ற மாதிரிசொல்லுவார்,வேண்டாம் மா,எதையும் நினைச்சு குழம்பிக்காத,நான் காதலுக்கு எதிரி இல்ல,ஆனா உங்க அப்பாக்கு பொண்டாட்டியா இருந்துட்டு என்னால அவருக்கு எதிர பேச என்ன,சிந்திக்க கூட என்னால முடியாது டா..”

 

“தயவு செய்து அப்பாக்கு எதிரா எதையும் செய்யாத,அவரு சொல்றபடி நடந்துக்கோ,பொண்ணா பொறந்தா எல்லாத்தையும் நாம்ப அனுசரிச்சு தான் போகணும்.அது நம்ப தலை எழுத்து,நான் சொல்றது உனக்கு புரிஞ்சி இருக்கும்ன்னு நினைக்குறேன்…அழுது அழுது இன்னும் உடம்பை கெடுத்துக்காத “என்றவர் கணவர் வரும்முன் இரவு சாப்பட்டினைதயாரிக்க சென்றார்..இல்லையேல் அதற்கும் அவரிடம் வாங்கி கட்ட வேண்டும்…

 

பெண்களின் இந்நிலை எப்பொழுது தான் மாறுமோ என்ற எண்ணம் அவரின் மனதிலும் இருக்க தான் செய்தது…ஒரு ஆண்  ஒரு பெண்ணை அடிக்கும் போது அந்த பெண் எதுவும் எதிர்த்து பேசாமல் அவன் குடுப்பதை வாங்கி கொள்ள வேண்டும்…அதே ஒரு பெண் அந்த ஆணை எதிர்த்து பேசினால் அவளுக்கு வரும் பெயர்கள் “அடங்காபிடாரி,திமிர்பிடிச்சவ,பிசாசு,குடும்ப மானத்தை அழிப்பவள், கேடுகெட்டவ…” என இன்னும் ஏராளம்…

 

மிருணாவின் மனம் வேதனையிலும்,உடல் வலியிலும் துடித்தது…எப்படி இவர்களால் இப்படி நினைக்க முடியுது…ஒருத்தனின் நினைவுகளை மறப்பது அவ்வளவு எளியதா …??…ஏன் பெண்களுக்கு மட்டும் இப்படி பட்ட ஒரு சூழ்நிலை  இருக்கிறது….தனக்கு பிடித்த ஒருவனை தேர்ந்தெடுப்பது அவ்வளவு தவறா..??….கடவுளே இந்த பெண் குலத்திற்கு எப்போது விடிவு தருவாய்…என்ன தான் காலம் மாறிக்கொண்டு இருந்தாலும் ஜாதி வெறி கொண்டு இருக்கும் மனிதர்களை யாராலும் மாற்ற முடியவில்லையே…

 

எனக்கு இதற்கு விடிவு காலம் வராதா..??சத்தியமா என்னால பிரபுவை தவிர வேற யாரையும் கணவன் என்ற ஸ்தானத்தில வைக்க முடியாது…என்னால் வேறு ஒருவனுக்கும்,என் பிரபுவிற்கும் துரோகம் செய்ய முடியாது… கடவுளே தயவுசெய்து என்னை என் பிரபுவோடு சேர்த்துவிடு…”என மனம் அரட்டிகொண்டு இருந்தது… அவளின் இந்த வேண்டல் நிறைவேறுமா???….

நிலவு இரவை

விலகி சென்றாலும்

சூரியன் பகலை

விலகி சென்றாலும்

நீ என்னை

விலகி சென்றாலும்

நான் உன்னை என்றும்

விலகமாட்டேன்……

 

விலகல் தொடரும்…

 

Advertisement