Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??  – 29

 

இன்று சுபாவின் ரிசல்ட் வருவதாய் இருக்க நவீன் பதட்டத்தோடு விஜயுடன் டாக்டரின் முன்பு அமர்ந்து இருந்தான்..ஆனந்தவள்ளி சுபாவிற்கு துணையாக அவளுடன் இருந்தார்..

 

ரிபோர்ட்டை ஒருமுறைக்கு இரு முறை பார்த்த டாக்டர் சில நிமிடம் அமைதியாய் இருந்தார்..அவரின் செயல் விஜய்க்கும் நவீனுக்கும் கலக்கத்தை உண்டு பண்ண “என்ன டாக்டர் என்ன ஆச்சு..”என நவீன் பதட்டத்தோடு கேட்க..

விஜயும் சிவக்குமாரின் பதிலுக்காக பதட்டமாய் அவரின் முகம் பார்த்து அமர்ந்து இருந்தான்..

 

இருவரையும் ஒரு முறை பார்த்தவர்,நெடிய பெருமூச்செடுத்து தன்னை சமன்படுத்திக்கொண்டு “சாரி கைஸ்..ரிப்போர்ட் படி பார்க்கும்போது மருத்தவ ரீதியா அவங்களுக்கு எந்த ட்ரீட்மென்ட்டும் பண்ண முடியாது..பண்ணாலும் வேஸ்ட் தான்..சுபாக்கு மனநோய் மேஜர் லெவெல்ல இருக்கு…ஏற்கனவே இருக்குற ரிப்போர்ட்க்கும் இப்போ வந்த ரிபோர்ட்க்கும் ரொம்பவே வித்தியாசம்…முன்னவிட இப்போ சுபாவோட நிலைமை மோசமா இருக்கு..“இங்க அந்த அளவுக்கு வசதி இல்ல..நீங்க வேற எங்கவாவது பாக்குறது தான் பெட்டர்…”என  விஷயத்தை இழுக்காமல் நேரடியாக சொல்ல..

 

“என்ன சொல்றீங்க..என்ன விளையாட்றீங்களா…என் சுபாவை உங்களாலையும் சரி பண்ண முடியாதா..அப்புறம் எதுக்கு எங்களை வர சொன்னீங்க…எதுக்கு அவளை சரி பண்ண முடியும் அப்படின்னு நம்பிக்கை குடுத்தீங்க…”என நவீன் அதிர்ச்சி மற்றும் கோவத்தோடு எழுந்து நின்று கத்த ஆரம்பிக்க..

 

விஜய் “நவீன் கொஞ்சம் பொறுமையா இரு….கோவப்படாத..என்னன்னு விசாரிப்போம்..என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்..பர்ஸ்ட் அவர் சொல்றதை கேளு…”என விஜய் நவீனை சமாதனபடுத்தி அமர வைக்க அவனோ கோவத்தின் உச்சியிலும்,அதிர்ச்சியின் உச்சியிலும் இருக்க விஜய் ஆட்டியதற்கு ஏற்ப ஆட ஆரம்பித்தான் பொம்மையாக…

சிவக்குமார் “விஜய் உங்களோட கோவம் புரியுது…பழைய ரிப்போர்ட் வச்சி பார்க்கும்போது சுபாவோட நிலைமை அவ்வளவு கிரிடிகல்லா இல்ல..ஆனா இப்போ வந்த ரிப்போர்ட் எல்லாம் –ve தான்…எங்களால இந்த மாதிரி நோயாளிக்கு எல்லாம் மருத்துவம் பார்க்க முடியாது..அதுக்கு இங்க பெர்மிஷன் கிடையாது…எனக்கு தெரிஞ்சி கொஞ்ச நாள் அவங்க மனசுக்கு புடிச்ச மாதிரி பழைய நியாபகங்களை கொண்டு வாங்க…”

 

“ஏதாவது சேன்ஜஸ் இல்ல,முன்னேற்றம் இருந்தா கண்டிப்பா பார்க்கலாம்..இனி எல்லாமே நீங்க அவங்களை கையாளும் முறையை பொறுத்து தான் இருக்கு..ஒரு கண்ணாடி மாதிரி சுபா…புரிஞ்சிப்பீங்க அப்படின்னு நினைக்குறேன்..ஒரு சில மாத்திரை எழுதி தரேன்..இந்த மாத்திரை எல்லாம் அவங்களோட உடல்ல இருக்ககூடிய வைட்டமின் குறைப்பாட்டுக்கு..சீக்கிரம் சுபா குணமாகணும் அப்படின்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்…”என்று தன் பேச்சை விஜயிடம் முடித்துக்கொண்டவர் நவீனின் பக்கம் திரும்பினார்..

 

சிவகுமார் “நவீன் உங்களோட வேதனை எனக்கு புரியுது..கண்டிப்பா சுபா சீக்கிரம் குணம் ஆகுவாங்க…எனக்கு நீங்க இங்க இருக்குறதுனால ஒரு பிரச்சனையும் இல்ல..உங்க பணமும் நேரமும் தான் விரையம் ஆகும் இங்க..அதுவும் இல்லாம ஒரு குறிப்பிட்ட லெவல்ல இருக்குற நோயாளிங்க மட்டும் தான் இங்க சேர்க்க அனுமதிப்பாங்க…என்ன மன்னிச்சிடுங்க…”என வருத்தம் நிறைந்த குரலில் மன்னிப்பு வேண்ட..

 

அவர் பேச்சில் தன்னுணர்வு அடைந்த நவீன் “நீங்க எதுக்கு சார் சாரி எல்லாம் கேட்குறீங்க..நான் தான் சாரி கேட்கணும்..கோவத்துல ஏதோ தெரியாம பேசிட்டேன்…மன்னிச்சிடுங்க…சுபா குனமாகுற வரைக்கும் நான் ஓயமாட்டேன்…கண்டிப்பா பழைய சுபாவா அவளை மீட்டே தீருவேன்..வரேன் சார்…”என அழுத்தத்துடன் நவீன் சொல்லிவிட்டு வெளியேற அவனின் அதீத நம்பிக்கையை கண்டு அதிர்ந்து நின்றவன் ,சிவகுமாரிடம் விடைபெற்றுகொண்டு நவீனின் பின்னே சென்றான்…

 

நவீன் கார்டனில் இருக்க,அவனின் பின்னே சென்று நின்றவன் “நவீன் மனசை தளரவிடாத,கண்டிப்பா சுபாவை குணபடுத்தலாம்..”என ஆறுதல் அளிக்க..அவனை பார்த்து சிரித்த நவீன் “கண்டிப்பா விஜய்..அந்த நாளுக்காக தான் காத்திட்டு இருக்கேன்…என்னோட பழைய சுபாவா அவ மாறுற வரைக்கும் நான் ஓயமாட்டேன்..”என்றான் கண்ணில் உறுதியுடன்…

 

தனது அலைபேசி அழைக்க அதனை எடுத்தவன் “ஹ்ம்ம் சொல்லுங்க அம்மா..என்ன இந்த நேரத்துல..”என்றான்..

 

சாரதா “என்னடா மறந்துட்டியா..யாதவனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு சொன்னேன் இல்ல…”என கோவமாய் கேட்க..

 

அப்போது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அவனின் அம்மா சாரதா அவனுக்கு அழைத்து ஞாயிற்றுக்கிழமை காலை பெண் பார்க்க சென்னை செல்லலாம் எனவும்,தான் அவசியம் வர வேண்டும் என சொன்னது..

 

சுபாவின் சிகிச்சை பற்றிய பதட்டத்திலும்,வேலையிலும் அவர்களிடம் “அண்ணாக்கும் உங்களுக்கும் பிடிச்சு இருந்தா போதும்..எனக்கு எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை…”என அவன் சொன்னதற்கு “என்னடா நினைச்சிட்டு இருக்க…போன முறை கூப்பிட்டதுக்கும் இப்படியே தான் சொன்ன,இந்த முறையும் இப்படியே தான் சொல்ற…என்ன பண்ணுவியோ தெரியாது..கண்டிப்பா இந்த முறை நீ வரணும்…” என சாரதா உறுதியாய் சொல்ல..

 

விஜய் “அம்மா ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க..பொண்ணு பார்க்க தான போறீங்க…நிச்சயம் எதுவும் பண்ணலையே..கண்டிப்பா நிச்சயதார்த்தத்துக்கு வந்துட்றேன்…புரிஞ்சிக்கோங்க மா..நவீன்கூட நான் கேரளா போறேன்..சுபாக்கு உடம்புக்கு முடியல..”என அவளை பற்றி சிறிது மேலோட்டமாய் சொன்னவன்,பிறகு பேசுவதாக வைத்துவிட்டான்…

 

பால் காய்ச்சி முடித்து பெண் அலங்காரம் நடந்துகொண்டு இருந்தது…நக கணுக்களை கடித்துக்கொண்டு வீணா அறையில் அமர்ந்து இருக்க,சுரேஷின் தங்கை சரண்யா வீணாவிற்கு அலங்காரம் செய்துகொண்டு இருந்தாள்..சரண்யாவும் சரி ,வீணாவும் சரி ஒத்த வயதினர்…. சரண்யா கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறாள்…

 

சரண்யா “என்ன வீணா எதுக்கு இப்போ விரலை கடிச்சிட்டு இருக்க,மாப்பிள்ளைக்கு எல்லாம் உன்னை பிடிக்கும் நீ ஒண்ணும் கவலைப்படாத..”என வீணாவிற்கு ஆறுதல் சொல்ல அது வீணாவிற்கு வயிற்றில் புளியினை கரைத்தது…

 

தன் முகம் மாற்றம் சரண்யாவிற்கு தெரியாவண்ணம் மறைத்து கொண்டாள் வீணா…”மாப்பிள்ளை வீட்டுக்கு காரங்க வந்துட்டாங்க…” என வெளியில் ஒரு பெரியவரின் குரல் கேட்க..மாதவன்,சுரேஷ் மற்றும் சுரேஷ் குடும்பத்தினர் அனைவரும் அவர்களை வரவேற்க வாசல் விரைந்தனர்..

 

ஜன்னல் வழியாய் மாப்பிளையை பார்த்த சரண்யா “வீணா சும்மா சொல்ல கூடாது..மாப்பிள்ளை சும்மா ராஜா கணக்கா இருக்கார்..உனக்கு ஏத்த ஜோடி தன் போ..”என சரண்யா ஜோடி பொருத்தம் பற்றி விவரிக்க வீணாவிற்கு எங்காவது சென்று முட்டிகொள்ளலாம் போல் இருந்தது…

 

மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் அப்பா அம்மா மற்றும் உறவினர் அனைவரையும் வரவேற்று அமர வைத்தனர் மாதவனும் சுரேஷும்…மாப்பிள்ளையை பார்த்த சுரேஷ் “அண்ணா…நீங்க..வருவோட அண்ணன் யாதவ் தானே..நான் சுரேஷ் என்னை நியாபகம் இருக்கா…”என கேட்க..

 

அப்போது தான் சுரேஷை பார்த்த யாதவனும் “ஹே சுரேஷ்..நீ எங்க இங்க…உன்ன போய் மறக்க முடியுமா..??”என சுரேஷிடம் சொன்னவன்,சாரதா மற்றும் மனோகரிடம் சுரேஷை அறிமுகபடுத்தினான்…சில சமயம் விஜயினை கல்லூரியில் காண சென்ற போது யாதவன் வருவின் நண்பர்களையும் பார்த்து இருக்கிறான்…

 

சுரேஷ் “மாதவன் என்னோட வேலை பார்க்குறவர்,என்னோட ப்ரண்ட்..நீங்க இப்போ பொண்ணு பார்க்க வந்து இருக்கீங்களே அது மாதவனோட தங்கச்சி தான்..”என்றவன் சந்தோசமாய் மாதவனிடம் திரும்பினான்..“மாதவா அண்ணா வேற யாரும் இல்ல என்னோட ப்ரண்ட் வரு அப்படின்னு அடிக்கடி சொல்லுவனே அவனோட அண்ணா தான்..”என்றான் மாதவனிடம்..   

 

அதன் பின் அனைவருக்கும் காபி பலகாரங்கள் வழங்கப்பட்டது…யாதவனுடன் வந்து இருந்த பெரியவர் ஒருவர் “சரி நேரம் ஆகுறது பொண்ணை வர சொல்லுங்க..”என சொல்ல..சரண்யா வீணாவினை அழைத்து வந்தாள்..

 

மென்னடையிட்டு பதுமை போல தங்கள் முன் வந்து நமஸ்கரித்த வீணாவினை கண்ட அனைவருக்கும் மிகவும் பிடித்து போனது..யாதவன் பெண்ணை நோக்க,அவளோ சிறிதும் நிமிறாது குனிந்துக்கொண்டு இருந்தாள்..

 

அனைவரும் அதனை வெட்கம் என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர்..சுரேஷ் தான் “அண்ணா பொண்ண நல்லா பார்த்துகோங்க..”என சொல்ல..யாதவன் வேறு பக்கம் திரும்பி கொண்டான்…

 

யாதவன் திரும்பியதை பார்த்து வெட்கம் என நினைத்த சரண்யா அது துளியும் வீணாவிற்கு வரவில்லை என்பது தான் அதிசயம் என்று அவளுக்கு தோன்றியது…பெண்ணை உள்ளே அழைத்து செல்ல சொல்ல,சரண்யா வீணாவினை அறைக்கு அழைத்து சென்றாள்…

 

அதன் பின் சாரதா பேச ஆரம்பித்தார் “எனக்கு இன்னொரு பையன் இருக்கான்..வேலை இருக்குறதுனால வர முடியல…இவன் தான் என்னோட மூத்த பையன்..தரகர் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி இருப்பார்…”என்றவர் யாதவனிடம் திரும்பி “என்ன யாதவ் பொண்ணை பிடிச்சி இருக்கா..”என கேட்க..அவன் மனோகரனை பார்த்தான்…

 

மகனின் ஆசை புரிய “பொண்ணும் மாப்பிளையும் கொஞ்சம் பேசி பார்க்கட்டும்..நீங்க என்ன சொல்றீங்க….”என மாதவனை பார்த்து கேட்க..மாதவன் சுரேஷை பார்த்தான்..சுரேஷ் சரி என்பது போல தலையசைக்க மாதவனும் சரி என்று யாதவன் வீணாவுடன் பேச ஏற்பாடு செய்தான்….

 

அறையில் வீணாவும் யாதவனும் இருக்க,சரண்யா வெளியே இருந்தாள்..சிறிது நேரம் அந்த இடத்தில் ஆட்சி புரிய யாதவன் பேச வாயை திறக்கவும்,வீணா “உங்ககிட்ட பேசணும்..”அப்படின்னு சொல்லவும் சரியாய் இருந்தது..

 

வீணாவினை அதிசயமாய் பார்த்த யாதவ் ஏதும் சொல்லாமல் பேசு என்பது போல கையசைத்து அவளுக்கு அனுமதி வழங்கினான்…தனக்கும் பிரதீப்பிற்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாட்டினையும்,அவன் பேசிய விதத்தையும்,அதனால் கோவம் கொண்டு இங்கு வந்ததையும் அவன் முகம் பார்க்காமல் மென்குரலில் சொன்னவள், “எனக்கு எப்படி சொல்றதுனு தெரியல..நீங்க தான் எப்படியாவது…”என மேலும் சொல்ல முடியாமல் அவள் தயங்கி நிற்க..

 

யாதவன் “எனக்கு புரியுது…மிஸ்..”என யாதவ் இழுக்க, “வீணா…”என எடுத்து கொடுத்தாள்…”நீங்க சொன்னதை கேட்டதும் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு….என்னடா இவன் இப்படி பேசுறான்னு பாக்குறீங்களா..வெளியே இருக்கங்களே சரண்யா அவங்க என்னோட காலேஜ்ல தான் வொர்க் பண்றாங்க…எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு…அவங்களை நான் ஒரு வருஷமா விரும்புறேன்…முன்ன பொண்ணு பார்க்க போனது கூட என்னோட தம்பி ஆசைக்கு தான்…இன்னும் நான் சரண்யாக்கிட்ட கூட சொல்லல..வீட்ல எப்படி சொல்றது அப்படின்னு முழிச்சிட்டு இருக்கும் போது தான் இங்க அழைச்சிட்டு வந்துட்டாங்க…இருந்தும் சரண்யாவை நான் சத்தியமா இங்க எதிர் பார்க்கல…நீங்களும் என்னை மன்னிக்கணும்….”என சொல்ல…

 

வீணா நிம்மதி பெருமூச்சோடு அவனை பார்த்துக்கொண்டு இருந்தாள்…”தேங்க்ஸ் “என இருவரும் தங்களுக்குள்  மாற்றி நன்றியினை தெரிவித்து கொண்டனர்…”வெளிய கேட்டா என்ன சொல்றது …”என வீணா முழிக்க… “நீங்க கவலைப்படாதீங்க..நான் பாத்துக்குறேன்…”என சொன்ன யாதவ் “ஆல் தி பெஸ்ட் பார் யுவர் லவ் சக்சஸ்..”என வாழ்த்திவிட்டு வெளியேறினான்…

 

தன் அருகில் வந்து அமர்ந்த யாதவனை நோக்கிய சாரதா “என்ன யாதவ் உனக்கு ஓகே வா..”என அவனிடம் மெதுவான குரலில் கேட்க…”அம்மா அப்றமா சொல்றோம் அப்படின்னு வாங்க மா..நான் மெதுவா எல்லா விஷயத்தையும் சொல்றேன்…”என தழைந்த குரலில் சாரதாவிடம் சொன்னான்…

 

சாரதா அவனை புரியாத பார்வை பார்த்தவர் மனோகரனை பார்த்தார்…அவருக்கும் யாதவ் சொன்னது காதில் விழ “ஹ்ம்ம் சரிங்க..வீட்டுக்கு போயி  பேசிட்டு ஒரு நல்ல முடிவா சொல்றோம்..தப்பா எடுத்துக்காதீங்க…அப்ப நாங்க கிளம்புறோம்..”என சொல்லி மனோகரன் வேறு எதுவும் பேசாமல் வெளியேற “சரி வாங்க..”என்ற ஒற்றை வார்த்தையுடன் நிறுத்தி கொண்டான் மாதவன்…

 

யாதவன் குடும்பத்தின் இந்த மாதிரியான செயல் அவனுக்கு ஆச்சரியத்தை தர அமைதியாய் யோசனையுடன் இருந்தான்…

 

 

 

அந்த பக்கம் சாரதா “வரு..வரு…”என அழைக்க “ஹ்ம்ம் சொல்லுங்க அம்மா..பொண்ணு பார்த்துட்டீங்களா..”

 

அவன் உறுதியை கண்டு வியந்தவன் அதற்கு பிறகு சுபாவினை சமாதானபடுத்தி,அடுத்த நாள் சுபாவின் விருப்பபடி கேரளாவினை சுற்றி பார்த்துவிட்டு பெங்களூருக்கே பயணம் செய்தனர் சிகிச்சையில் தோல்வியினை தழுவி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்…ஆனந்தவள்ளி கண்ணில் கண்ணீரோடு மகளுக்கு சேவை செய்ய துவங்கினார்..

 

சிறிது நாட்கள் சுபாவினை பார்த்துக்கொள்ள ஆனந்தவள்ளி அங்கே தங்கிவிட சீதாராமன் மற்றும் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் வாரத்திற்கு ஒரு முறை சுபாவினை வந்து பார்த்துவிட்டு சென்றனர்..

 

வீட்டிலே இருந்து வேலை செய்வதற்கு அலுவலகத்தில் அனுமதி வாங்கி இருந்த நவீன் ,அதிக நேரம் சுபாவுடன் செலவளித்தான்..சுபாவும் நவீனை தவிர வேறு யாருடனும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்..நவீன் மட்டுமே அவளிடம் நெருங்குவது..வேறு எவரேனும் நெருங்கினால் சுபா ஆக்ரோசமாக நடந்து கொள்வாள்..எனவே நவீனை தவிர வேறு யாரும் சுபாவின் பக்கம் கூட செல்வதில்லை…

 

கேரளாவில் இருந்து திரும்பி இருந்த விஜய்க்கு வேலைகள் அதிகம் குவிந்து கிடக்க அனைத்தையும் செய்வதில் அவனுக்கு நேரம் விரைந்தது..ஜெயஸ்ரீ மாலை வேலையில் நவீனின் வீட்டிற்கு சென்று ஆனந்தவள்ளிக்கு உதவியாக இருந்தாள்..

 

சிறிது நேரம் சுபாவுடனும் சேர்ந்து நேரத்தை செலவிட முயன்றாள்…ஆனால் சுபா ஜெயஸ்ரீ தன் முன்னால் இருப்பதை கண்டு மிகவும் கோவம் கொண்டு நவீனுடனும் அதே கோவத்துடன் நடந்துக்கொண்டாள்…எனவே ஜெயஸ்ரீ சுபாவுடன் நேரத்தை செலவிடுவதை அறவே நிறுத்திவிட்டு ஆனந்தவள்ளிக்கு தன்னால் முடிந்த அளவு உதவினாள்…

 

ஒரு வாரம் கடந்த நிலையில் யாதவனிடம் எப்படியாவது பேசிட வேண்டும் என முடிவு செய்தவன் சுபாவினை பார்த்துவிட்டு, ஜெயஸ்ரீயிடம் சொல்லிக்கொண்டு தனது ஊருக்கு பயணப்பட்டான்…தன் அண்ணன் தனக்கு வைத்து இருக்கு அதிர்ச்சி விஷயத்தையும்,நாட்கள் தனக்கு வைத்து இருக்கும் ஆச்சர்யத்தையும் அறியாமல்…

 

காலை அலுவலகத்திற்கு வந்த தன்னை முறைத்த ஜெயஸ்ரீயினை கண்ட வீணா அசடு வழிய அவளை பார்க்க “எதுக்கு இப்போ இப்படி அசடு வழியற… சொல்லாம கொள்ளாம ஊருக்கு ஓடிட்ட…என்ன விஷயம்…??..”என ஜெயஸ்ரீ வீணாவினை ஆழம் பார்க்க…

 

வீணா “ஒண்ணும் இல்ல ஜெயா…அண்ணாவை பார்க்கணும் போல இருந்தது…அதான் அவசரமா போயிட்டேன்…”என பொய் சொல்லி நழுவ…

 

“நம்பிட்டேன்…ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லு…நீ சொல்ற பொய்யை எல்லாம் நம்பறதுக்கு நான் ஒண்ணும் முட்டாள் இல்ல…”என ஜெயஸ்ரீ கோவமாய் பொரிய ஆரம்பிக்க…

 

“எதுவா இருந்தாலும் அப்றமா பேசலாம் ஜெயா…எனக்கு நிறைய வேலை இருக்கு…ப்ளீஸ்…சாரி…”என்ற கெஞ்சலோடு விட்டால் போதும் என ஜெயஸ்ரீயிடம் இருந்து தப்பித்துவிட்டு தன் இருக்கையில் பெருமூச்சுவிட்டப்படி அமர்ந்தாள்…

 

அப்படியே நாற்காலியை நகர்த்தி பிரதீப் இருக்கானா என பார்க்க ,அவளை ஏமாற்றாமல் அவன் இருக்கையில் தான் இருந்தான்…தன்னை பார்ப்பான் என எண்ணி சில நிமிடங்கள் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்…பிரதீப்போ அவளின் பக்கம் சிறிது கூட திரும்பாமல் தன் காரியத்தில் கண்ணாய் இருந்தான்…

 

“சார்…ரொம்ப பிஸி போல…ம்க்கும்…”என உதட்டை பிதுக்கியவள் , இருட்ன்ஹா வேலையில் மூழ்கினாள்…பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை அவள் அவன் இருக்கும் திசையில் திரும்பி பார்த்துக்கொண்டே இருக்க ,இதனை எல்லாம் கண்டும் காணாமல் உள்ளுக்குள் ரசித்துக்கொண்டு இருந்த பிரதீப் வீணாவினை சரியாக பார்க்க முடியாமல் தவித்து போனான்….

 

“இத்தனை நாள் சொல்லாம கொள்ளாம போயிட்டு,இப்போ வந்து இந்த பார்வை பார்த்தா ,நான் உடனே பார்க்கணுமா…??..முடியவே முடியாது…போடிடிடி…இத்தன நாள் நான் தவிச்ச தவிப்பை நீயும் கொஞ்சம் அனுபவி…அப்புறம் பேசுறேன் உன்கிட்ட..”என மனதிற்குள் வஞ்சகமாய் முடிவு எடுத்தவன்,குதூகலத்துடன் வேலையினை பார்க்கலானான்…

 

“க்கும்…”என தன் அருகில் கனைத்த குரலில் நிமிர்ந்தவன் , நின்றுக்கொண்டு இருந்த வீணாவினை கண்டு “என்ன…??..” என்பது போல புருவம் உயர்த்தி கேட்க…

 

“ரொம்ப தான் கொழுப்பு…வாயை தொறந்து கேட்டா என்னவாம்…??..”என உள்ளுக்குள் குமைந்தவள் “நீங்க கேட்ட ரிப்போர்ட்…”என வனிடம் ஒரு பைலை நீட்ட….

 

“பரவாயில்லையே…ரொம்ப சீக்கிரம் குடுத்துட்டீங்க….எனிவே தேங்க்ஸ்…” என்ற குத்தல் பேச்சோடு அதனை வாங்கி வைத்துகொண்டவன் மீண்டும் வேலையில் மூழ்கலானான்…

 

“டேய்…ரொம்ப பண்ற டா…”என வீணா மனதிற்குள் கருவ… “ஏதாவது சொன்னீங்களா…???…”என பிரதீப் வீணாவினை பார்த்து கேட்க “இல்லை…”என்பது போல தலையை வேகமாக ஆட்டியவள் , தனது இருக்கையில் வந்து அமர்ந்துக்கொண்டாள்….

 

வீணாவின் செயலையும் அவளையும் ஒரு சேர உள்ளுக்குள் ரசித்துக்கொண்டு வேலையையும் பார்க்கலானான் பிரதீப்…

 

கண்கள் கலங்கி போய் சுவற்றை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தவளை கண்ட வெண்ணிலாவின் மனம் துடிக்க ஆரம்பித்தது…கடந்த இரண்டு நாட்களாக மிருணா இருக்கும் நிலை அவருக்குள் சொல்ல முடியாத துயரையும் வேதனையையும் நெஞ்சுக்குள் திணிக்க அவளின் அருகில் அமர்ந்தார்…

 

அதனை உணரும் நிலையில் கூட மிருணா இப்போது இல்லை… “அம்மாடி மிருணா…இப்படியே இருந்தா எப்படிமா…கொஞ்சம் வந்து சாப்பிடு மா…அவன் வந்துடுவான்…நீ பட்டினி கிடக்குறது பார்த்தா ,அவன் ரொம்ப கஷ்டப்படுவான்…வாம்மா…” என அன்றைய நாளில் ஏழாவது முறையாக அவளிடம் கெஞ்ச துவங்கினார்…

 

அவளோ எதுவும் காதில் வாங்காமல் சிலையென இருந்தாள்…அவளின் நிலையை கண்டு வருந்திய சுந்தரமும் “என்னமா இது சின்ன குழந்தையாட்டம்..அவன் தான் ஏதோ மடத்தனமா பண்றான் அப்படின்னா… நீயுமா…??…எழுந்து வா மா….வந்து சாப்பிடு…”என எப்போதும் அவளிடம் பேசிராத மாமனார் சுந்தரம் அழைக்க…  

 

முதன் முறையாய் தன்னிடம் பேசிய மாமனாரின் பேச்சினை அவமதிக்க முடியாமல் எழுந்து சென்று உணவினை உன்ன துவங்கினாள்…

 

கணவரை கண்ட வெண்ணிலாவிற்கு பெருமையாய் இருந்தது…மருமகளை சாப்பிட வைத்த கணவரை கரை காணாத காதலுடன் நோக்கினார்… வெண்ணிலா பார்ப்பதை உணர்ந்த சுந்தரமும் வெண்ணிலாவிற்கு சற்றும் குறையாத காதலுடன் தன் துணைவியை பார்த்தார்…

சில வாய் உணவினை உண்டுவிட்டு கைகளை அலம்பிவிட்டு அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்த மிருணாவிற்கோ பிரபுவிடம் சில நாட்கள் இருந்த விலகல் இப்போதும் மனதை அறுத்தது…

 

“என்ன தவறு செய்தோம்…”என எண்ணி எண்ணி அவளது மூளையும் மனமும் சோர்ந்து போனது தான் மிச்சம்… எப்போதும் “ மிரு … மிரு … ” என அழைத்துக்கொண்டு பின்னாலே சுற்றி வருபவன்,சில நாட்களாய் இல்லை கடந்த நான்கு நாட்களாய் அவளிடம் இருந்து முற்றிலும் விலகி சென்றதும், தேவைக்கு மட்டுமே இரண்டு வார்த்தை பேசுவதும், எந்நேரமும் மடிக்கணிணியை மடியில் கட்டிக்கொண்டு இருப்பதும் என அவனின் நடவடிக்கைகள் மூலம் தெரிந்த விலகல் எல்லாம் மிருணாவிற்கு தாமதமாய் தான் புரிந்தது…

 

முதலில் இதை எல்லாம் சதாரணமாய் எடுத்துக்கொண்டவளுக்கு மேலும் பாதி நாள் அப்படியே நீடிக்க அவளுக்கு அப்படி சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை…

 

“ஏன் மிபு…என்ன ஆச்சு..ஏன் என்கிட்டே இருந்து விலகி விலகி போறீங்க…”என்ற மிருணாவின் கேள்விக்கு…

 

“ஆபீஸ்ல ஆயிரம் வேலை …ஆயிரம் டென்ஷன் …அதுல நீயும் வேற ஏதாவது பேசி டென்சன் பண்ணாத…போய் படுத்து தூங்கு ….” என எரித்ன்ஹு விழுந்தவனின் பதிலில் அதிர்ந்து தான் போனாள்…

 

அவள் செய்யும் அதே அலுவலகத்தில் , அதே பிரிவில் வேலை செய்யும் அவனுக்கு …அவளுக்கு தெரியாமல் என்ன டென்ஷன் இருக்க முடியும்…அப்படி என்ன பெரிய வேலை…??…” என நினைத்தவள் அவனிடமே அதனையும் கேட்க…

 

“ஓ…நீயும் நானும் ஒண்ணு…உனக்கும் எனக்கும் ஒரே சம்பளம் அப்படின்னு குத்தி காமிக்கிற அப்படி தான…. “ அவளிடம் எகுறியவன்

 

“ச்ச…என்ன வாழ்க்க இது…கொஞ்சம் கூட நிம்மதியே இல்ல…” என ஏதேதோ முனங்கிக்கொண்டே மடிக்கணிணியை அறைந்து மூடிவிட்டு கட்டிலில் கண்மூடி படுத்துக்கொண்டான்…

 

அதன் பிறகு மிருணாவும் எதுவும் தேவையில்லாமல் பேசி பிரபுவின் கோவத்தை அதிகபடுத்தாமல் விலகியே இருந்தாள்…இதனை கண்ட வெண்ணிலாவிற்கு மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் ஏதோ சரியில்லை என எண்ணியவர் அவர்களின் வழியில் குறுக்கிடாமல் தன் எல்லையினை உணர்ந்து  அமைதியாய் இருந்து கொண்டார்…

 

இப்படியே சென்றுக்கொண்டு இருந்த நிலையில் பிரபு மிருணாவிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் இரண்டு நாட்கள் வேலை இருப்பதாக தன் தாயிடம் சொல்லிவிட்டு மும்பைக்கு சென்றுவிட்டான்…மாமியாரின் மூலம் விஷயம் அறிந்த மிருணா அழுக ஆரம்பித்தது தான் இன்று வரை நின்றபாடில்லை…

 

இன்றோடு அவன் சென்று இரண்டு நாட்கள் ஆகிறது…போனதின் பின் வெண்ணிலாவிற்கு தான் வந்து சேர்ந்து சேர்ந்ததையும் திரும்ப வரும் போது அழைப்பதாகவும், அடஹ்ர்கு இடையில் எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்யக்கூடாது என சொல்லி இருக்க,அவனின் கோவத்தினை இன்னும் அதிகரிக்க வேண்டாம் என எண்ணி மிருணா அழைக்கவில்லை…  

 

அதன் நேரம் அவனிடம் பேசாமல் அவனின் “மிரு…” என்ற அழைப்பை கேட்காமல் , அவளால் இருக்க முடியவில்லை…. அவளின் மிபுவினை காண அவளது மனம் மிகவும் ஏங்கி தவித்தது…

 

ஏக்கங்களை அறிய வேண்டியவனோ எடுத்த காரியத்தை முடிக்க எண்ணி காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்தான் ஒரு யுத்த களத்தை நோக்கி…

 

இந்த யுத்த களத்தில் யார் ஜெயிக்க போகிறார்கள் என அவனுக்கும் தெரியவில்லை…இருந்தும் எப்பாடுபட்டேனும் இதில் வெற்றி பெற வேண்டும் அவனின் மிருவிற்காக…அவனின் ஆசை மனைவிக்காக…அவனின் அருமை காதலிக்காக…

 

“ மிரு…” என அவன் உச்சரித்த விதத்திலே ,அவனின் மனதில் உள்ளதை கண்டுக்கொண்ட நண்பன் ஸ்ரீகாந்த் பிரபுவின் தோளினை தட்டிக்கொடுத்தான்…நண்பனை பார்த்து புன்னகைத்தவன் காரின் வேகத்தினை அதிகபடுத்தினான்…

 

சாலையில் போகும் மரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த விஜயின் மனம் முழுதும் அண்ணன் யாதவனையே நினைத்துக்கொண்டு இருந்தது… “அவன் யாரை லவ் பண்றான்…இதை ஏன் முன்னாடியே சொல்லல…யாரா இருக்கும்…??..எதுக்கு சொல்ல ரொம்ப தயங்குறான்…??..”என பல வித கேள்விகளோடு அவன் பயணம் நீள , பஸ் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாப்பில் நின்றது….

 

அங்கு இருந்து அவனின் வீட்டிற்கு ஆட்டோ பிடித்தவன் ,தனது பைகளுடன் அதில் ஏறி அமர்ந்தான்…வீட்டில் அம்மா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவும்,தாய்க்கு இருக்கும் கோவத்தை எப்படி எல்லாம் சரி செய்யலாம் என சிந்தித்துக்கொண்டே வர வீட்டின் முன் ஆட்டோ நின்றது…பணம் கொடுத்துவிட்டு எடுத்து வந்த பைகளுடன் வீட்டுக்குள் சென்றான்…

 

“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க மா…ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க…அப்பா நீங்களாவது அம்மா கிட்ட எடுத்து சொல்லுங்க…ப்ளீஸ் பா…அம்மா ப்ளீஸ் மா…” என யாதவனின் கெஞ்சல் வாசல் வரை கேட்க…

 

“ஆஹா …பையன் ரொம்ப கெஞ்சுறானே…என்ன பண்ணி வச்சானோ…யாருக்கு சப்போர்ட் பண்றது தெரியலையே…அம்மா பக்கம் பேசினா…அண்ணன் கோச்சிப்பான்…அண்ணன் பக்கம் பேசினா , அம்மா கோச்சிப்பாங்க…சோ அப்பா மாதிரி அமைதியா இருக்க வேண்டியது தான்… “ என தனக்குள்ளே பேசி ஒரு முடிவுக்கு வந்தவன் உள்ளே கால் வைக்கவும்…

 

“ அது எப்படி டா… அந்த வீட்ல இருக்குற ஒரு பொண்ணை பார்த்துட்டு வேண்டாம்ன்னு சொல்லிட்டு , அதே வீட்ல இருக்குற வேற பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணி குடுக்கீறீங்களான்னு கேட்க முடியும்…அவங்க நம்ப குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க…அதுவும் வருவோட ப்ரண்ட் சுரேஷோட தங்கச்சியை லவ் பண்றேன்னு சொல்ற… அந்த பொண்ணை மறந்திடு… இது எல்லாம் ஒத்து வராது…வேற நல்லா பொண்ணா பார்க்கலாம்…. “என கறாரான சாரதாவின் குரல் காதில் ரிங்காரமிட …

 

வாசலில் கால் வைத்தவன் , காதில் விழுந்த செய்தியின் விளைவாக அப்படியே  அதிர்ந்து போய் நின்றான்…

 

சொல்லாமல் சென்ற உனக்கும்

கொல்லாமல் கொல்லும்

என் இதயத்திற்கும்

ஏனோ நொடி பொழுதும்

என்னை இம்சிப்பது மட்டும்

தான் குறிக்கோளோ….??

 

விலகல் தொடரும்…

 

Advertisement