Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -27

 

விஜய் ஏற்கனவே பிரதீப், வீணா, ஜெயஸ்ரீ செய்து கொடுத்தவற்றை ஒரு முறை சரி பார்த்தான்.. வீணா விஜய் சொன்னபடி பிரசன்டேசன் செய்ய, பிரதீப்

மற்றும் ஜெயஸ்ரீ மாடுல் வேலை செய்வதில் ஈடுபட்டனர்..எக்காரணம் கொண்டும் தங்களது சொந்த விஷயத்தினை ஜெயஸ்ரீயும் சரி, விஜயும் சரி அலுவலகத்தில் பேச முற்படவில்லை. எப்போதும் அதனை விஜய் விரும்பமாட்டான் என்பது ஜெயஸ்ரீக்கும் தெரிந்த ஒன்றே..

 

ஓரிரு முறை மட்டுமே ஜெயஸ்ரீ விஜயிடம் தங்களது சொந்த விஷயத்தினை பேசி இருக்கிறாள். அதன் பின் எக்காரணம் கொண்டும் அவள் பேசியது இல்லை.. விஜய் பேசவிட்டதும் இல்லை என்பதே உண்மை…விஜய் தன் சார்பில் இருக்கும் வேலையினை முடிப்பதில் மூழ்கி இருக்க, பிரதீப்பும் ஜெயஸ்ரீயும் சேர்ந்து தங்கள் வேலையினை முடிப்பதில் ஈடுபட்டு இருந்தனர்…

 

அனைவரும் தத்தமது வேலையில் இருக்க, வீணாவோ நகம் கடித்துக்கொண்டு விஜய் செய்ய சொன்ன வேலையினை செய்யாமல் கணிணியின்  முன் அமர்ந்து இருந்தாள்… என்னதான் ஜெயஸ்ரீயுடன் சேர்ந்து வேலை செய்துக்கொண்டு அவளுடன் பேசிக்கொண்டு, அவள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருந்தாலும் பிரதீப்பின் பார்வை என்னவோ அடிக்கடி தனக்கு எதிரில் அமர்ந்து இருந்த வீணாவின் புறமே படிந்து மீண்டது…

 

முதலில் இதனை எல்லாம் கண்டிராத ஜெயஸ்ரீ “பிரதீப் என்னன்னு தெரியல.. எப்படி பண்ணாலும், இந்த இடத்துல தப்புன்னு காட்டுது, என்னவா இருக்கும்….” என தன் பாட்டில் பிரதீப்பிடம் தனது சந்தேகத்தை கேட்டுக்கொண்டு இருக்க, அதற்கோ பிரதீப்பிடம் எந்த ஒரு பதிலும் வரவில்லை என உணர்ந்தவள்,அவனை திரும்பி பார்த்தாள்…

 

அவன் வீணாவினையே பார்த்துக்கொண்டு இருக்க, “அடப்பாவி இங்க நான் காட்டு கத்து கத்திட்டு இருக்கேன், இவன் என்னடான்னா சைட் அடிச்சிட்டு இருக்குறது பாரு, வர வர இவன் கொஞ்சம் கூட சரியில்ல. ”என மனதிற்குள் புலம்பியவள், அவன் முன் நின்று வீணாவினை அவன் பார்க்க முடியாத வண்ணம் மறைத்துக்கொண்டு நிற்க,ஒற்றை கையால் அவளை புறம் தள்ளியவன்,வீணாவினை நோக்கலானான்…

 

பிரதீப்பின் செயலில் கோவம் தலைக்கேற, நறுக்கென்று அவனின் கையில் கிள்ளினாள் ஜெயஸ்ரீ… வீணாவினை பார்ப்பதில் சிரத்தையோடு இருந்தவன், ஜெயஸ்ரீ செய்த எதுவும் தெரியாமல் போனது..யாரோ தன் கையில் கிள்ள “ஷ்ஹா….அம்மா…”என அலறலோடு பிரதீப் துள்ளி குதிக்க தன் சிந்தனையில் உழன்றுக்கொண்டு இருந்த வீணா,பிரதீப்பின் அலறலில் இவர்களை நோக்கி பார்வையை திருப்பினாள்…

 

வீணா “என்ன ஜெயா என்ன ஆச்சு…”என பிரதீப்பிடம் கேட்காமல் ஜெயஸ்ரீயிடம் கேட்க, பிரதீப்போ ஜெயஸ்ரீயினை பார்த்து முறைக்க ஆரம்பித்தான்… பிரதீப்பின் முறைப்பு எதற்கு என்பதை உணர்ந்தவள் “அடடா..இந்த கொசுங்க இன்னும் ஒண்ணு கூடலையா, கடவுளே, இதுங்க கிட்ட என்ன சிக்க வச்சிட்டியே.

நியாயமா”என மனதிற்குள் புலம்பியவள்,

 

”அத என்கிட்ட எதுக்கு கேட்குற,யாரு கத்தினாங்களோ அவங்களை பார்த்து கேளும்மா தாயே..” என்றவள் அமைதியாய் தன் வேலையை செய்ய துவங்கினாள்…

 

பிரதீப் வீணாவினை பார்க்க,அவளோ முகத்தை திருப்பிக்கொண்டு வேலை செய்ய தொடங்கினாள். வீணாவின் முகத்திருப்பலை கண்டவனின் மனம் சுருங்க ஜெயஸ்ரீயுடன் வேலையில் ஈடுபட்டான். நால்வரும் அதன் பிறகு முழு வீச்சாய் வேலையில் மூழ்க,எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு சிரமப்பட்டு வேலையை முடிக்க முயன்றனர்…

 

நேரம் விரைந்தோடி கொண்டு இருக்க, வீணா தான் செய்யும் வேலையில் ஏற்படும் சந்தேகத்தை எல்லாம் விஜயிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு செய்துக்கொண்டு இருந்தாள். மிருணாவும் பிரபுவும்கூட விஜய் செய்யும் ப்ராஜெக்ட்டிற்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்து இருந்தனர்…  

 

மாலை மணி 6 ஆகி இருக்க விஜய் – வீணா, ஜெயஸ்ரீ பிரதீப்புடன் ஒரு மீட்டிங்கை அவனது அறையில் ஏற்பாடு செய்து இருக்க,அனைவரும் விஜயின் அறையில் குழுமி இருந்தனர். அவர்கள் செய்து இருந்த வேலைகளை எல்லாம் தொகுத்து,முதலில் அவனது கணிணியில் பதிவு செய்துகொண்டான்.

 

பிறகு ஒவ்வொன்றாய் பார்த்தவன்,எல்லாவற்றையும் ஒன்றாய் தொகுத்தான்…செய்து இருந்த கம்ப்யூட்டர் அப்ளிகேசனை அவன் முயற்சி செய்து பார்த்தவன்,ஒரு சில தவறுகள் வர “என்ன பிரதீப் ,இதுல ஏதோ தப்பு இருக்கு, ப்ரோகிராம் எதுவும் ஒழுங்கா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டன்னு இருக்கு…”என கேட்க…

 

விஜயின் கணினியின் பின் நின்று பார்த்துக்கொண்டு இருந்த பிரதீப், வீணா மற்றும் ஜெயஸ்ரீ எங்கு தவறு என்பதை கண்களாலே ஆராய்ந்தவர்களால் என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்…

 

”எனக்கும் எதுவும் தெரியல விஜய்…நாங்க அங்க செய்து பார்க்கும் போது சரியா தான் வொர்க் ஆச்சு,என்ன ஆச்சோ தெரியலையே..”என தாடையை நீவியபடி கம்ப்யூட்டரையே பார்த்துக்கொண்டு இருந்தான் பிரதீப்…

 

“ஜெய் இந்த லைன் கொஞ்சம் சரி பண்ணி பாருங்க..”என ஜெயஸ்ரீ சுட்டி காட்டிய இடத்தினை, சரி செய்த விஜய், “அப்பவும் வேலை செய்யல.. என்ன ப்ராப்லம் அப்படின்னு தெரியல..”என புருவ சுளிப்புடனே கணினி திரையினை நோக்கியவன் முகம் சட்டென்று ஒளிபெற “யா…ஐ காட் இட் கைய்ஸ்…”என சந்தோஷ கூச்சலிட்டான்…

 

“எங்க சார்… எங்க விஜய்..  எங்க ஜெய்..” என மூவரும் ஒரே நேரத்தில் கேட்க,அவர்களை பார்த்து சிரித்தவன் “ஒரு நிமஷம் பொறுங்க அதுதானா இல்லையான்னு பார்ப்போம்.. எனக்கு என்னவோ ப்லக்இன்(PULG-IN) தான் சப்போர்ட் பண்ணலன்னு தோணுது,”என்றவன் பிரதீப்பின் பக்கம் திரும்பி

 

“பிரதீப் அன்னைக்கு பென்டிரைவ்ல  ஒரு சாப்ட்வேர் காப்பி பண்ணி குடுத்தேன் இல்ல.. அத கொஞ்சம் எடுத்துட்டு வாங்க,..”என சொல்ல.. பிரதீப் அவனது கேபினுக்கு விரைந்தான்…

 

பிரதீப் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்த பென்டிரைவில் இருந்த ஒரு சின்ன அப்ளிகேசனை காப்பி செய்தவன், அவர்கள் செய்து இருந்த ப்ராஜெக்ட் உடன் இணைத்து அதனை சரி பார்த்தான். சிறிது நேரம் எடுத்துக்கொண்டு,அதனுடைய டேட்டாக்கள் ஒன்றன்பின் ஒன்று வர, நால்வரின் முகத்திலும் டென்ஷன் அதிகமாய் இருந்தது….

 

கடைசியில் அவர்கள் எதிர்பார்த்த முடிவும் வந்து எல்லோர் முகத்திலும் புன்னைகையையும்,சந்தோசத்தையும் வாரி இறைத்தது.

 

”ஹே…..ஹூ…”என சந்தோஷ ஆர்பாட்டத்தில் ஜெயஸ்ரீயும், பிரதீப்பும் தங்களையும் மீறி துள்ளி குதித்து தங்களது சந்தோசத்தை வெளிபடுத்த, விஜயும், வீணாவும் புன்சிரிப்போடு அவர்களை பார்த்துக்கொண்டு இருந்தனர்…

 

“வாவ்வ். கலக்கிட்டீங்க ஜெய்… ஷ்ஷ்.. ஷப்பா,எத்தனை டென்ஷன் இதை முடிக்கிறதுக்குள்ள, எப்படியோ நல்லபடியா முடிச்சாச்சு. கன்ங்ராட்ஸ்…”என ஜெயஸ்ரீ விஜயின் கையினை குழுக்கி வாழ்த்து சொல்ல, அவளது கையினை பிடித்து குழுக்கியவன், சிரிப்புடன் தன் முன் நின்றுக்கொண்டு இருந்த ஜெயஸ்ரீயின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்…

 

அவன் கையினை விடுவான் என எண்ணிக்கொண்டு இருந்தவள், விஜய் கையினை விடாமல் அப்படியே பிடித்துக்கொண்டு இருக்க, சங்கடமாய் பிரதீப்பினையும் வீணாவினையும் பார்த்தவள்,சற்று கஷ்டப்பட்டு விஜயின் கையில் இருந்து தன் கையினை உருவினாள்…

 

தன் கையில் இருந்து உருவிய ஜெயஸ்ரீயினை கேள்வியாய் சற்று முகசுளிப்போடு விஜய் நோக்க, அவளை பார்த்தவள் கண்ணால் தங்களின் அருகில் நின்றுக்கொண்டு இருந்த வீணாவினையும் பிரதீப்பினையும் காட்டினாள்..அப்போது தான் அவர்கள் இருப்பதை உணராமல் செய்ததினை உணர்ந்தவன் முகத்தில் அசடு வழிய துவங்கியது…

 

பிரதீப் விஜயினையும், ஜெயஸ்ரீயினையும் மாறி மாறி ஏதோ வேற்று கிரகவாசிகளை  போல பார்த்துக்கொண்டு இருந்தான்..அவனின் செயலில் மூவரும் சிரிக்க,அனைவரும் முறைத்தவன் கண்கள் சற்று கூடதலாய் சில நிமிடம் வீணாவினை முறைத்தது…

 

சட்டென்று தன் சிரிப்பினை நிறுத்தவள் அமைதியாய் முகம் சுருங்க நின்றுகொண்டாள். வீணாவின் சிரிப்பு சட்டென்று உறைந்ததை கண்ட ஜெயஸ்ரீ “இந்த பண்ணாடைக்கு வேற வேலையே இல்ல.. எப்ப பாரு, அந்த புள்ளையை கஷ்டபடுத்திக்கிட்டே இருக்கான்..”என மனதிற்குள் பிரதீப்பிற்கு பெரிய பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டு இருந்தாள்…

 

விஜய் “பிரதீப்,வீணா,ஜெயஸ்ரீ உங்க மூணு பேருக்கும் தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்…நாம்ப எடுத்து செய்ஞ்ச இந்த ப்ராஜெக்ட் கண்டிப்பா ரொம்ப கஷ்டமானது,அதுவும் நாம நாலு பேரும் இவ்வளவு சீக்கிரம் முடிச்சது,ரொம்ப ரொம்ப பெரிய விஷயம்.. உங்களோட ஹார்ட்வொர்க் தான் எல்லாத்துக்கும் காரணம்…தேங்க்ஸ் கைய்ஸ். நாளைக்கு கிளைன்ட் மீட்டிங்க்கு ஏற்பாடு செஞ்சடலாம். நான் மேனேஜ்மெண்ட்கிட்ட சொல்லிடறேன்..”என சொல்ல..

 

”இதுல உங்களோட பங்கும் அதிகமாகவே இருக்கு விஜய்.. நீங்க மட்டும் ஹெல்ப் பண்ணல அப்படின்னா,கண்டிப்பா எங்களால கொஞ்சம் கூட செய்து இருக்க முடியாது…உங்கள மாதிரி ஈகோ இல்லாத,ப்ரன்ட்லியான ஒரு ப்ராஜெக்ட் லீடர் கிடைச்சது நாங்க செய்த புண்ணியம்…தேங்க்ஸ்..”என பிரதீப் தன் மனம் முவந்து சொல்ல,அதனை மற்ற இருவரும் ஆமோதிப்பதாய் தலை அசைத்தனர்…

 

“ஹேய்ய்… போதும் பிரதீப் ரொம்ப ஐஸ் வைக்காத…நீ என்ன வேணுமோ கேளு..செஞ்சிட்றேன்..ஆனா நீ வைக்கிற ஐஸ்ல எனக்கு சளி பிடிச்சிரும் போல இருக்கு…”என விஜய் விளையாட்டாக சொல்லி பிரதீப்பின் தோள் தட்டி கேலி செய்ய…மூவரும் மனம் விட்டு சிரித்தனர்…

 

பிரதீப் “கண்டிப்பா விஜய்… நீங்க எப்போடா சொல்லுவீங்க அப்படின்னு தான காத்திட்டு இருந்தேன் தேங்க் காட் சொன்னீங்க…இல்லன்னா என்னோட நிலைமை என்னவாகி இருக்கும்…”என போலியாய் வருத்தப்படுவது போல நடிக்க…

 

விஜய் “டேய்…ஏதோ பெருசா ஆப்பு வைக்க போற போல இருக்கே. என்ன மேட்டர் நான் வேற உன்னோட நோக்கம் தெரியாம நீ விரிச்ச வலைக்குள்ளே விழுந்துட்டேன் போல இருக்கே…எப்படி தப்பிப்பேன்…”என அலறுவது போல அலற…

 

ஜெயஸ்ரீ “நீங்க எதுக்கு ஜெய்.. கஷ்டப்படறீங்க நான் இருக்கேன் இல்ல… கண்டிப்பா நான் உங்களை காப்பத்துவேன்..”என அவனின் கண்களை பார்த்துக்கொண்டே காதலோடு சொல்ல. விஜயின் அவளின் காதலில் முழுதும் கரைந்துதான் போனான்…

 

“வார்ரே..வா..இத தான் எதிர்பார்க்கவே இல்லையே. பெரிய மீன்க்கு ஜோடியா சின்ன மீனும் வலையில விழுந்துடுச்சு. எவ்வளவு முடியுமோ அவ்வளவும் கறந்திட வேண்டியது தான்…சரி சரி வாங்க கிளம்பலாம்…”என பிரதீப் கைகளை தேய்த்துக்கொண்டு பரபரப்பாய் முன்னே நடக்க. அவனை மூவரும் புரியாமல் பார்த்தவர்கள்,அவர்கள் இடத்தினை விட்டு இம்மியும் நகரவில்லை…

 

முன்னே சிறிது தூரம் நடந்துவிட்டு திரும்பி பார்த்தவன், அவர்கள் அங்கே நிற்பதை கண்டு, “என்னபா நான் சொன்னேன் இல்ல வாங்க போலாம்…”என சொல்ல…

 

”எங்க பிரதீப்…”என்றான் விஜய் அமைதியாய்…

 

“எங்கவா பாஸ் நீங்க தான நான் கேக்குறது எல்லாம் வாங்கி தரேன்னு சொன்னீங்க.. இப்போ என்னடான்னா எங்கன்னு ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்க்குறீங்க…”என சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல,

 

வீணா பிரதீப்பின் ஒவ்வொரு செய்கையையும் தன் ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.. அதனால் அவள் உதடு புன்னகையில் விரிய,எதார்த்தமாய் அவளின் பக்கம் திரும்பிய பிரதீப், அவள் உதட்டில் உறைந்த புன்னகையின் விளைவால் அழகாய் இருந்த அந்த அதரத்தினை அவன் ஏக்க பெருமூச்சோடு பார்க்க, அவனின் முகத்திலும்,அவனது ஏக்க பெருமூச்சிலும் இருந்தே அவனது எண்ணத்தினை புரிந்துக்கொண்ட வீணாவின் முகம் முதன் முதலாய் வெக்கத்தினால் சிவந்தது…

 

ஏற்கனவே அவளின் புன்னகையில் தன்னை துலைத்து இருந்தவன் மனம்,வெக்கமடைந்த காரணத்தினால் சிவந்து போய் இருந்த அவளது முகத்தினை கண்டு தன்னை கட்டுபடுத்தி கொள்ள பெரும்பாடுபட்டான்..

இப்போதே அவளது கழுத்தில் தாலியினை கட்டி அவளை தன்னவளாகவும்,

தான் அவளினவனாகவும் அவனது உள்ளம் மிகவும் பரபரத்தது…

 

ஆனால் இன்னும் தன்னுடைய காதலையே அவளிடம் சொல்லிடாத போது,எப்படி அவளின் கழுத்தில் தாலியினை கட்டி அவளை தன்னுடையவள் ஆக்கமுடியும் என்ற நிதர்சனம் உரைக்க அவன் அமைதியாய் தன்னை கட்டுபடுத்திக்கொண்டான்…

 

பிரதீப்பின் முகத்திலேற்பட்ட கலவையான உணர்வுகளை கொண்டே அவனின் மனதினை அறிந்தவளுக்கோ என்ன செய்வது என்ற புரியாத நிலையில் இருந்தாள்..ஏனென்றால் அவளின் பாச அண்ணன் மாதவன் அவளுக்கு ஒரு வரன் பார்த்து இருப்பதாகவும், அடுத்த வாரம் சென்னை வந்து செல்லுமாறும் அவளை அழைத்து இருந்தான்..அப்படிருக்க வீனாவினால் எப்படி அவளது அண்ணனிடம் தனக்குள் ஏற்பட்டு இருக்கும் இந்த சலனத்தை இல்லை இல்லை காதலை துணிந்து அண்ணனிடம் சொல்ல முடியும் என குழம்பி போனாள்…

 

சலனம் இல்லை தான் காதல் என்பது அவளுக்கு தெளிவாய் புரிந்து போனது…எப்போதும் அதிகம் பேசாத வீணாவின் குணம்,பிரதீப்பின் பால் ஈர்க்கப்பட்டது அவன் அவளிடம் தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து,தான் செய்த தவறிற்கு கண்களில் கண்ணீர் பனிக்க கேட்டது தானா என்பது அவள் அறியாத ஒன்று..ஏதோ ஒன்று அவளை அவன் பால் சாய துணைபோனது…என்னவென்று இந்நாள் வரை அப்பாவையும் அறியாள்..

 

விஜய் “சரி சரி பிரதீப் இதுக்கு எல்லாம் போய் அழலாமா நல்ல பையன் இல்ல நீ…”என பிரதீப்பினை சிறிய பையன் போல பாவித்து பேசிக்கொண்டு இருக்க,ஜெயஸ்ரீ அதனை கேட்டு சிரித்துக்கொண்டு இருந்தாள்..

 

ஆனால் விஜய் பேசுவது, கிண்டல் அடிப்பது எதுவும் அவன் காதில் விழுந்ததாய் தெரியவில்லை…அவன் நினைவு எல்லாம் விணாவினை பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தது…

 

“டேய்…பிரதீப்…”என ஜெயஸ்ரீ அவனை பிடித்து உலுக்க,தன் நிலைக்கு வந்தவன் “ஹாங்…என்ன ஸ்ரீ..என்ன ஆச்சு…”ஏன் பேந்த பேந்த விழித்தப்படி அவளை பார்த்து கேட்க… தன் தலையில் அடித்துக்கொண்டவள் “சொரக்காய்க்கு உப்பு இல்ல…கேக்குற பாரு கேள்வி அப்படியே வர ஆத்திரத்துக்கு உன்னை…”என பல்லை கடித்தவள்

 

“ஜெய் உன்னை எவ்வளவு நேரமா கூப்புட்டுட்டு இருக்காங்க..நீ என்னடான்னா இப்படி எருமை மேல மழை பேய்ற மாதிரி இப்படி நின்னுட்டு கனா கண்டுட்டு இருக்க…”என கோவமாய் கேட்க..

 

அவளின் கோவத்தின் காரணம் புரியாது பிரதீப் விழிக்க ஆரம்பித்தான்…அது ஜெயஸ்ரீக்கு புரிந்து இருந்தாலும்,கோவமாய் திட்டுவதை தவிர அவளால் வேறேதும் செய்ய முடியவில்லை. நடந்து கொண்டு இருந்ததை அவளும் பார்த்துக்கொண்டே தானே இருந்தாள். வீணாவின் நிலை அவளுக்கு நன்கு புரிந்தது…வீணா மனம் படும்பாடு அறிந்து இருந்தவளுக்கு ,வீணாவினை எண்ணி வேதனை கொண்டது அவளது மனம்..அவளும் அந்த நிலையினை தாண்டி வந்தவள் தானே…    

 

“ஹே ஜெயா..இப்போ எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற..அவன் ஏதோ நினப்புல கவனிக்காம இருந்து இருக்கலாம்..அதுக்கு போய் எதுக்கு இப்படி டென்ஷன் ஆகற நீ..என்ன ஆச்சு உனக்கு..ஆர் யூ ஓகே…” என அவளை பார்த்து விஜய் கேட்க..விஜயினை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் சொல்லாமல்,பிரதீப்பினை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாய் நின்றுக்கொண்டாள்…

 

விஜய் “சாரி பிரதீப் அவ ஏதோ கோவத்துல பேசிட்டா..அதை எல்லாம் மனசுல வச்சிக்காத…”என ஜெயஸ்ரீக்காக விஜய் மன்னிப்பு கேட்பதை பொறுக்க முடியாத பிரதீப்

 

“அய்யோ என்ன விஜய் இது,நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்க்குறீங்க. எனக்கு ஜெயஸ்ரீ பத்தி நல்லாவே தெரியும்…அவளுக்கு என் மேலே ஏதோ ஒரு கோவம் அது என்னன்னு நான் கேட்டு சரி பண்ணிக்கிறேன் விஜய்..நீங்க கவலைபடாதீங்க..”என்றான் சமாதானமாய்…

 

அவன் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த விஜய்,கேள் பிரதீப் சொல்வதை என அவன் கண்களாலே ஜெயஸ்ரீயிடம் சுட்டிகாட்ட,அவளோ தோளை குழுக்கிவிட்டு அமைதியாய் வீணாவின் பக்கத்தில் சென்று நின்றுகொண்டாள்…

 

ஜெயஸ்ரீயின் செயல் விஜய்க்கு புதிதாய் இருக்க,இவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என ஒரு நிமிடம் யோசித்தவன்,எதுவாய் இருந்தாலும் அவளிடம் கேட்டு கொள்ளலாம் என முடிவு செய்தவன்..

 

“சரி கைய்ஸ்…நேரத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்..ப்ராஜெக்ட் நல்லபடியா முடிச்சி இருக்கோம்.. இன்னும் பினிஷிங் வொர்க் மட்டும் இருக்கு..அதை நானே முடிச்சிட்றேன்…இதை கொண்டாட எங்கவாது வெளியே சாப்பிட போலாம்,இன்னைக்கு டின்னர் என்னோட ட்ரீட்…”என உற்சாகமாய் சொல்ல…அவனின் உற்காசம் யாரையும் பாதித்ததை போல இல்லை..

 

மூவரும் பல்வேறு சிந்தனையில் மூழ்கி இருக்க,விஜய்க்கு ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பி போனான்…”வீணா,பிரதீப்,ஜெயஸ்ரீ..”என மூவரையும் அழுத்தமாய் அதே நேரம் சற்று சத்தமாய் அழைக்க..தங்கள் நிலையில் இருந்தவர்கள் அப்போது தான் விஜயினை என்ன என்பது போல பார்த்தனர்…

 

அவர்களது கண்ணில் தெரிந்த கேள்வியினை உணர்ந்தவன் “எல்லாம் என் நேரம் டா சாமி..”என மனதிற்குள் சலித்துக்கொண்டவன் “எல்லாம் கிளம்புங்க…ப்ராஜெக்ட் நல்லபடியா முடிச்சதுக்கு,உங்க எல்லாத்துக்கும் என்னோட ட்ரீட்..”என சொல்ல…”இல்ல வேண்டாம்…”என கோரசாக மூவரிடமும் இருந்து ஒரே நேரத்தில் பதில் வர,அவர்களை திரும்பி ஒரு பார்வை பார்க்க..”சரி என தலை அசைத்தவர்கள் கிளம்ப ஆயத்தமாயினர்…

 

விஜயும்,பிரதீப்பும் ஒன்றாய் விஜயின் வண்டியில் செல்ல,ஜெயஸ்ரீயும் வீணாவும் ஜெயஸ்ரீயின பெப்பியில் சென்றனர்…அங்கே அருகில் இருந்த ஹோட்டல் முன்பு சென்று நின்றவர்கள்,நான்கு பேர் சேர்ந்து அமரும் மேசையினை தேர்வு செய்து அங்கு அமர்ந்தனர்…

 

ஜெயஸ்ரீ வீணாவின் பக்கத்தில் அமர செல்ல,யாருக்கும் தெரியாமல் ஜெயஸ்ரீயின் கையினை பிடித்த விஜய் அவளை தன் அருகில் அமரமாறு கண்களாலே கெஞ்ச..அவனின் கெஞ்சலை மறுக்க முடியாதவள்,வீணாவினை எண்ணி ஒரு நிமிடம் தயங்கியவள்,பின் வீணாவிற்கும் பிரதீப்பிற்கும் இருக்கும் விலகல் கொஞ்சம் குறையட்டும் என எண்ணியவள்,அமைதியாய் விஜயின் அருகில் அமர்ந்துகொண்டாள்…

 

ஜெயஸ்ரீயின் செயலை கண்டு கோவமுற்ற வீணா,அவளை முறைக்க துவங்க..ஜெயஸ்ரீயோ வீணாவின் முகம் பார்ப்பதை தவிர்த்து விஜயிடம் பேசுவது போல திரும்பிக்கொண்டாள்.. .பிரதீப்பிற்கு ஜெயஸ்ரீ செய்த செயலின் காரணம் புரிய,அவன் வீணாவினை நோக்க.. அப்போது அவனை பார்த்த வீணா முறைத்துவிட்டு திரும்பிவிட்டாள்…

 

வீணாவின் செயலில் பிரதீப் முகம் கூம்பி போக, தன் அருகில் அமர்ந்து இருந்த பிரதீப்பின் இருப்பினை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டு இருந்தாள் வீணா யாருக்கும் தெரியாவண்ணம். நால்வருக்கும் தேவையானதை ஆர்டர் செய்தவர்கள் சிறிது நேரம் தங்களுக்குள் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர்…

 

அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர,ஆபீஸ் பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் அதன் பின் அங்கு இருந்து வெளியேறினர்….சிறிது நேரம் விஜய் ஜெயஸ்ரீயுடன் தனித்து பேச விருப்பப்பட,அவனுக்கு எப்படி பேசுவது என்று புரியாமல் அமைதியாய் ஜெயஸ்ரீயினை பார்த்து நின்றுக்கொண்டு இருந்தான்…

 

விஜயின் முகத்தினை வைத்தே அவனது மனதினை அறிந்தவள்,அவளுக்கு தற்போது அவனிடம் பேசவேண்டும் என தோன்ற,பிரதீப் மற்றும் வீணாவிடம் எப்படி சொல்வது என தெரியாமல் விழிக்க ஆரம்பித்தாள். விஜயின் செயலில் இருந்தும் ஜெயஸ்ரீயின் செயலில் இருந்தும், ஓர் அளவிற்கு விஷயத்தினை ஊகித்து இருந்தவளுக்கு,இருவருக்கும் உள்ள எண்ணம் தெளிவாய் விளங்கியது.

 

இருவருக்கும் இடையில் இடைஞ்சலை கொடுக்க விரும்பாத வீணா “சரி சார்.. தேங்க்ஸ் பார் தி ட்ரீட்..நாளைக்கு பார்க்கலாம்..” என சொன்னவள் “சரி ஜெயஸ்ரீ…நான் கிளம்புறேன்…”என சொல்லி கிளம்ப எத்தனிக்க…

 

“என்னது இது நீ தனியா போறியா..அது எல்லாம் ஒண்ணும் வேண்டாம்..பிரதீப் நீயும் வீணா தங்கி இருக்குற பக்கம் தான இருக்க,கொஞ்சம் அவளை அவளோட ஹாஸ்டல்ல விட்டுடு…”என சொல்ல…”நான் எப்படி விஜய்..”என்று பிரதீப்பும், “இல்ல அண்ணா வேண்டாம்…ஆட்டோவிலே….” தயங்கியவாறே வீணாவும் ஒரு சேர சொல்ல…

 

இவர்கள் சொல்வதை கேட்ட ஜெயஸ்ரீ “ரெண்டு பேரும் எதுல ஒத்துமையா இருக்காங்களோ,இல்லையோ…தப்பிக்கிறதுல  மட்டும் மகா ஒத்துமை…”என மனதிற்குள் பல்லை கடித்தவள் எக்காரண கொண்டும் பேச வாயினை திறக்கவில்லை…வீணா ஜெயஸ்ரீயினை பாவமாய் பார்க்க,அவளோ தனக்கும் இதற்கும் சம்மதம் இல்லை என்பது போல நடந்து கொண்டாள்…விஜய் இருவரும் சொன்னதை எல்லாம் கண்டுகொள்ளாது, “நீ ஜெயஸ்ரீயோட பெப்பியில போ..நான் ஜெயஸ்ரீயை அவளோட ஹாஸ்டல்ல விட்டுடறேன்…”என சொன்னவன்,

 

பிரதீப் அமைதியாய் அப்படியே நிற்பதை பொருட்படுத்தாது, “சரி மா வீணா…அவன் கூட போ…போயிட்டு ஒரு போன் பண்ணி சொல்லிடுமா எனக்கு…”என்றவன்

 

“வரேன் பிரதீப்,வரேன் வீணா..”என சொன்னவன், “உட்காரு ஜெய்..போலாம்…”என்று ஜெயஸ்ரீயிடம் சொல்ல. அவள் அமர்ந்த பின் “பாய்..” என்று இருவருக்கும் கைகாட்டி விடைபெற்று கொண்டு வண்டியை இயக்க..அது வரை அமைதியாய் இருந்த ஜெயஸ்ரீ “பாய் கைய்ஸ்…சீ யூ டுமாரோ..”என்று கண்ணடித்துவிட்டு விடைபெற,இருவரும் முடிந்த மட்டும் அவளை முறைத்தனர்…

 

ஆனால் அவளோ உல்லாசமாய் விஜயின் வண்டியில் இனிதே பயணம் செய்ய துவங்கினாள். வீணாவும் சரி,பிரதீப்பும் சரி ஒருவரை ஒருவர் பார்க்காமல், அமைதியாய் நின்ற இடத்திலே நின்றுக்கொண்டு இருந்தனர்…

 

நேரம் விரைவதை உணர்ந்த பிரதீப் “ஜெயஸ்ரீயின் பெப்பியினை உதைத்து ஸ்டார்ட் செய்துவிட்டு வீணாவினை நோக்க,அவளோ இன்னும் இருந்த நிலையிலேயே இருந்தாள்…” அவ்வளவுதான் சாமி மலையேறிடிச்சு போல…”என மனதிற்குள் பெருமூச்சு ஒன்றை விட்டவன்,

“வீணா டைம் ஆகுது வாங்க போலாம்…”என சொல்ல…அவளோ திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள்,அவனை முறைக்க துவங்கினாள்…உன் முறைப்பு என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையுடன் பைக்கில்  அமர்ந்து இருந்தான் பிரதீப்…இன்னும் இங்கே நின்றுக்கொண்டு இருந்தால் தாமதம் தான் ஆகும் என்று உணர்ந்தவள்,அமைதியாய் பிரதீப்பினை முறைத்துக்கொண்டே அவனின் பின் அமர்ந்தாள்…

 

அதன் பிறகு எதுவும் பேசாமல் மௌனமாய் அவர்கள் பயணம் தொடர்ந்தது…ஹோட்டலில் இருந்து கிளம்பிய ஜெயஸ்ரீயும் விஜயும் மிகவும் சந்தோசமாய் இருந்தனர்…நீண்ட நாட்கள் கழித்து ஒன்றாய் நேரத்தை செலவு செய்தது அவர்களுக்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது…என்னதான் சுபாவை பற்றிய கவலைகள் அவர்களின் மனதிற்குள் அரித்துக்கொண்டு இருந்தாலும்,ஒரு  இனம் புரியா இன்பம் இருக்கத்தான் செய்தது இன்று…

 

விஜய் “என்ன ஜெய்…எதுவும் பேசாம வர…”என கேட்க…கண்ணாடியின் வழியாக அவனை பார்த்து சிரித்தவள் “எனக்கு மனசுக்கு சந்தோசமா இருக்கு ஜெய்…அதான் அமைதியா வரேன்…கொஞ்சம் நேரம் டிஸ்டர்ப் பண்ணாதீங்க..”என அவனிடம் சொன்னவள் அவனின் தோளின் மீது சாய்ந்துக்கொண்டாள்…அவனும் எதுவும் சொல்லாமல் புன்சிரிப்போடே சரி என்றவன் வண்டியினை பறக்கவிட்டான்…

 

சிறிது நேரம் கண்மூடி அந்த தருணத்தை விஜயினை கட்டிபிடித்துக்கொண்டு ரசித்தவள் “அவனின் காதின் அருகே “ஊ..ப்…”என ஊத கூச்சத்தில் விஜய் தவித்தான்….”அடியேய் என்ன பண்ற…கொஞ்சம் நேரம் சும்மா வா…”என சொல்ல,செல்லமாய் அவனை  முறைத்தவள்..அடுத்த நிமிடம் அமைதியாய் அவனின் மேல் சாய்ந்துகொண்டாள்…பின் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் ஜெயஸ்ரீ “என்ன ஜெய்..வீட்ல இருந்து எல்லாம் வந்துட்டாங்க இல்ல..எப்படி இருந்தது அவங்களோட ரியாக்சன்…”என கேட்க…

 

விஜய் “ஹ்ம்ம்….உங்க அத்தை தான் ரொம்ப அழுதாங்க…உங்க மாமா ஓர் அளவுக்கு மனசை தேத்திக்கிட்டார்…உன்னோட அம்மாவும், அப்பாவும் தான் அவங்களுக்கு ஆறுதலாய் இருந்தாங்க…”என நடந்ததை சொல்ல…நிஜமாலுமா

என்னால நம்பவே முடியல…ராம் அங்கிள் நல்லவர் தான்,ஆனா அவரால சுபா செஞ்சதை தாங்கிக்க முடியல…நவீன் அண்ணா நல்லவர் அப்படின்னு தெரிஞ்சதும்,சரி ஆகிட்டார் பார்த்தீங்களா…”என பெருமையாய் சொல்ல…

 

கண்ணாடியின் வழியாக அவளை பார்த்து ஆம் என்பது போல தலையசைத்தான்…அதன் பின் இருவரும் நாளை நடக்க இருக்கும் ப்ராஜெக்ட் பற்றி பேசிக்கொண்டு சென்றனர்…

 

தன் அருகில் அமர்ந்தவளின் கோவத்தை உள்ளுக்குள் ரசித்தவன், “போலாமா..”என்றான் அமைதியாய் சிரிப்பினை உள்ளுக்குள் அடக்கி..அவனின் கேள்வியில் பல்லை கடித்தவள் “ஹ்ம்ம்..போலாம்..”என்றாள் இறுக்கமாக…

அவளின் இறுக்கத்தை நன்கு உணர்ந்த பிரதீப்பிற்கு எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை…அமைதியாய் சிறிது தூரம் பைக்கினை

இயக்கியவன் “ஏதாவது பேசுங்களேன் வீணா..”என மெதுவாக பேச்சை ஆரம்பிக்க..

 

அவளோ அவனின் பக்கம் கூட திரும்பாது, வேடிக்கை பார்த்துகொண்டு வந்தாள்…”வீணா..”என்று சற்று அழுத்தி அழைக்க, “என்ன..”என்பது போல அவள் அவனை பார்த்தாள்…”ஏன் வீணா,என்னை உங்களுக்கு பிடிக்கலையா…???”என வருத்தம் நிறைந்த குரலில் பிரதீப் கேட்க…

 

“இப்போ எதற்கு இந்த கேள்வி..”என்பது போல அவளை பார்த்தான்…அவளின் கண்ணில் இருந்த கேள்வியினை உணர்ந்து கொண்டவன் “இல்ல நீங்க என்கூட பேசறதுக்கூட இல்ல…”என ஏக்கமாய் சொல்ல…அவனின் ஏக்கம் அவளது நெஞ்சில் நெறிஞ்சி முள்ளாய் குத்தியது…

 

அமைதியாய் அவள் பதில் ஏதும் பேசாமல் வர, “எனக்கும் தெரியும்,உங்களுக்கு என்னை சுத்தமா பிடிக்கல…நான் செஞ்ச செயல் அந்த மாதிரி,உங்களை ரொம்ப அவமானபடுத்தி இருக்கேன் எல்லோர் முன்னாடியும்…உன்கிட்ட ஏற்கனவே நான் மன்னிப்பு கேட்டுட்டேன்…இருந்தும் உங்க கோவம் தீரல அப்படின்னா இன்னும் எத்தனை முறை அப்படின்னாலும் மன்னிப்பு கேக்குறேன்…மன்னிச்சிடுங்க…”என வேதனை குரலோடு சொல்ல…

“வண்டியை நிறுத்துங்க…”என என்றும் இல்லாமல் வீணா கோவத்தோடு கத்த,அதிர்ந்தவன் அப்படியே வண்டியினை சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தினான்…  

 

ஜெயஸ்ரீயின் ஹாஸ்டல் வரவும் விஜய் வண்டியினை ஒரு ஓரமாய் நிறுத்த,அதில் இருந்து இறங்கியவள் அவனின் முன் வந்து நின்றாள்..பின் “சரி நீங்க கிளம்புங்க…”என சொல்ல..அவளை முறைத்து பார்த்தவன் “நான் இங்க இருந்தா உனக்கு என்ன..??”என கோவமாய் கேட்க..இங்க நின்னு வர போற பொண்ணை சைட் அடிக்க நான் விடமாட்டேன்…ஒழுங்கு மரியாதையா கிளம்பிடுங்க..”என விரலை ஆட்டி மிரட்ட…

 

மிரட்டிய அவளது விரலினை தன் கைக்குள் அடக்கிகொண்டான் விஜய்…”ஜெய் என்னது இது..விடுங்க..”என சிணுங்களோடு ஜெயஸ்ரீ அவனின் கையில் இருந்து தன் கையினை விடுவிக்க முயல,அவளது கையினை இறுக்கமாய்  பிடித்துக்கொண்டவன் “இன்னும் கொஞ்ச நாள் தாண்டி,அதுக்கு பிறகு இந்த கையும் நீயும் என்னோட அணைப்புலே தான் இருக்க போறீங்க..”என சொல்ல அவள் முகம் செம்மை நிறம் கொண்டது..அதனை விஜயின் கண்கள் ரசனையோடு பார்த்துக்கொண்டு இருந்தது..

 

ஜெயஸ்ரீ எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, “சுபாக்கு சரியாகட்டும் ஜெய்…நம்பளோட கல்யாணத்தை பத்தி வீட்ல பேசுறேன்..”என்றான் பெருமூச்சை விட்டபடி…அவனின் பெருமூச்சை பார்த்து சிரித்தவள் “சரி ..”என்பது போல தலையசைத்தாள்..

 

பின் நியாபகம் வந்தவளாய் “நாளைக்கு நீங்க நவீன் அண்ணா வீட்டுக்கு போகும் போது,நானு உங்க கூட வரேன்…அப்பா அம்மா,அத்தை மாமாவ எல்லாம் பார்த்த மாதிரி இருக்கும்…அப்படியே சுபாவை பார்த்த மாதிரி இருக்கும்..”என சொல்ல..சரி என தலையசைத்தவன் “நாளைக்கு சீக்கிரம் ஆபீஸ் வா..அங்க பார்ப்போம்…வரேன்..”என்று அவளிடம் விடைபெற்று சென்றான்…

 

மறுநாள் காலை யாருக்கும் காத்திராமல் செவ்வனவே விடிய,அரக்க பறக்க தயாராகி ஆபீஸ் புறப்பட்டு சென்றாள் ஜெயஸ்ரீ..வண்டி வேறு இல்லாததால் ஆபீஸ் போய் சேர சற்று தாமதமாகிவிட…விஜயின் அறைக்குள் சென்றவள் “சாரி ஜெய்…கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா…”என பதட்டத்தோடு கேட்க…அவளை பார்த்து மென்மையாய் சிரித்தவன்

 

“கொஞ்சம் பொறுமையா இரு ஜெய்..எதுக்கு இவ்வளோ பதட்டம்….முதல்ல உட்காரு….எல்லாம் தாயாராகிடுச்சு…நைட்டே உட்கார்ந்து செய்ய வேண்டியது எல்லா வேலையையும் செஞ்சு முடிச்சிட்டேன்…நீங்க எல்லாம் கொஞ்சம் பிரசன்டேசன் பண்ண பிரிபேர் பண்ணிக்கோங்க…அது மட்டும் போதும்…”என்றவன் கணிணியில் தான் செய்தவற்றை அவளிடம் ஒரு முறை காண்பித்தான்..

 

அவளுக்கும் எல்லாம் சரியாய் இருப்பதாய் தோன்ற “எல்லாம் சரியா இருக்கு ஜெய்…இதுக்கு மேல பிரசன்டேசன் பண்ணி முடிச்சா போதும்..எல்லாம் முடிஞ்சிடும்…”என நிம்மதி பெருமூச்சு விட்டவளை பார்த்து சிரித்தான்…அதன் பின் வீணாவும் பிரதீப்பும் வந்து சேர நால்வரும் ஒன்றாய் ஒரு முறை பிரசன்டேசன் செய்ய எல்லாம் சரியாய் இருப்பதாய் பார்த்தவர்கள் எல்லாம் சரியாய் இருக்க,கிளைன்ட் வருகைக்காய் காத்திருக்க ஆரம்பித்தனர்..

 

பதினோரு மணி அளவில் கிளைன்ட் வர,அவர்களை வரவேற்று கான்பிரன்ஸ் ஹாலில் அமர வைத்தவர்கள்,சிறிது அவர்களுக்கு உபசரித்துவிட்டு,அதன் பின் தங்களது பிராஜெக்ட்டை எந்த ஒரு தங்கு தடையும் இல்லாமல்,அவர்களுக்கு புரியும் வண்ணம் அழகாய் ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டு இருந்தான் விஜய்…அதனை மூவரும் சிரத்தையாய் அதனை கேட்டுக்கொண்டு இருந்தனர்..இடையில் கிளைண்டின் சந்தேகத்திற்கு தெளிவாய் விஜய் அவர்களுக்கு புரியும்படி பதில் சொன்னான்..கடைசி உரையை ஜெயஸ்ரீ சொல்லி,தங்களின் ப்ராஜெக்ட்டில் இருக்கும் நிறையினை சுருக்கி சொன்னாள்…

 

கிளைன்டிரற்கு விஜய் குழு செய்த ப்ராஜெக்ட் மிகவும் பிடித்துவிட “எக்ஸ்செலன்ட் கைய்ஸ்…எங்களுக்கு உங்களோட ப்ராஜெக்ட் ரொம்ப பிடிச்சு இருக்கு…கண்டிப்பா இதே ப்ராஜெக்ட்டை நாங்க அக்செப்ட் பண்ணிக்கிறோம்..”என்று சொன்னவர்கள் அவர்களோடு ஒப்பந்தத்தை முடித்துவிட்டு கைகுலுக்கி விடைபெற்றனர்…  

 

ப்ராஜெக்ட் முடித்த சந்தோசத்தில் இருந்தனர் நால்வரும்…தனது தாய் தந்தையை பார்க்க ஜெயஸ்ரீ விஜயோடு புறப்பட்டு செல்ல,வீணாவும் பிரதீப்பும் தனித்தனியாய் தங்களது அறைக்கு சென்றனர்..நவீனின் வீட்டை அடைந்தவள்,சிறிது நேரம் ஆனந்தவள்ளியுடன் நேரத்தை செலவிட்டாள்…அவருக்கு ஆறுதலாய் இருந்து பேசிக்கொண்டு இருந்தவள்,சீதாராமிற்கு தன்னால் முடிந்த தெம்பான வார்த்தைகளை சொல்லி அவரை தேற்றினாள்…அதன் பின் தன் தாய் தந்தையிடம் பேசியவள் சுபாவின் இன்றைய நிலையையும் எடுத்து சொன்னாள்..

 

இன்னும் இரு தினங்களில் சுபாவினை கேரளாவில் உள்ள ஒரு மருத்துவனையில் சேர்ப்பதாய் விஜய் சொல்ல,அனைவரும் ஆச்சரியத்தோடு அவனை பார்த்தனர்…”நீங்க நினைக்குறது புரியுது…எவ்வளவு நாள் இப்படியே இருப்பா சுபா,கண்டிப்பா அங்க அவளை குணப்படுத்திடுவாங்க..எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு..நவீன் தேவையான எல்லாம் ரெடி பண்ணு…”என சொல்ல..

 

“சரி ..” என்றதாய் தலையசைத்தவன் தனக்கும்,சுபாவிற்கான துணிகளையும் மெடிக்கல் ரிப்போர்ட்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தான்..விஜய் நவீன்,சுபா,ஆனந்தவள்ளி நால்வரும் கேரளா செல்வது என்று முடிவானது…

 

மகேஸ்வரனுக்கு டுயூட்டி இருப்பதால் அவரால் போக முடியாமல் போக,தமையந்தியும் மகேஸ்வரனுக்கு  துணையாய் அவருடன் சென்றுவிட்டார்…சீதாராமனுக்கு அலுவலகத்தில் வேலை வந்துவிட பொறுப்புகளை எல்லாம் விஜய் கையில் எடுத்துக்கொண்டான்…ஜெயஸ்ரீயும் அவர்களோட துணைக்கு வருவதாய் சொல்ல,விஜய் வேண்டாம் எல்லாம் தாங்களே பார்த்துகொள்வதாக மறுத்துவிட்டான்…

 

அறையினை அடைந்த வீணாவிற்கு இன்று காலையில் அலுவலகத்தில் பிரதீப் முகத்தினை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தவித்து போனாள்…நேற்று ஹாஸ்டல் வரும் முன்னால் அவளுக்கும் பிரதீப்பிற்கும் நடந்த பேச்சவார்த்தை அவளுக்கு இப்பொழுது நினைத்தாலும் கண்ணீரை வரவழைத்தது…நான் என்ன அவன் வீட்டு வேலைக்காரியா,கொஞ்சம் கூட மனுஷ தன்மையே இல்லாம எப்படி எல்லாம் பேசினான்…

 

இத்தனை நாள் நல்லவன் மாதிரி நடிச்சி இருக்கான்…ஆனா நேத்து அவனோட சுயரூபம் வெளிவந்துடுச்சு… இவன் சொன்னா நான் கேட்கணுமா…இவனை போய் நாம்ப விரும்பினோமே…ஒரு பொண்ணோட மனசை பத்தி கவலைபடதவனை போய் விரும்பினோமே…இப்பவே இப்படி இருக்குறவன் பின்னாடி ஒழுங்கா இருப்பானா…?? நினைத்துக்கொண்டு இருந்தவளின் கண்ணில் தார தாரையாய் கண்ணீர் வழிந்தது….நேற்றைய நடந்ததை நினைவில் கொண்டு வந்தாள்…

 

“நிறுத்துங்க..”என்று தான் கத்திய கத்தலில் அதிர்ந்து வண்டியை நிறுத்திய பிரதீப் அதே அதிர்ந்த பார்வையோடு  வீணாவினை பார்க்க அவளோ உச்சகட்ட கோவத்தில் நின்றுக்கொண்டு இருந்தாள்…

 

“வீணா..”என்று பிரதீப் அழைக்க அவனை பார்த்து போதும் என்பதுபோல கையை உயர்த்தி அவனை தடுத்தவள்,வழியில் வந்த ஆட்டோவினை நிறுத்தி ஏறத்துவங்க…அதிர்ந்து போய் நின்று இருந்தவனுக்கு வீணாவின் செயல் ஆச்சரியத்தையும்,ஒரு சேர கோவத்தையும் கொடுத்தது…

 

தன் நிலையில் இருந்து வெளிவந்தவன் “வீணா..”என கோவமாய் அவள் ஆட்டோவில் ஏற முடியாத அளவிற்கு அவளை பிடித்து நிறுத்தினான்..தன் கையினை பிடித்து இருந்த பிரதீப்பினை பார்த்து முறைத்தவள் “விடுங்க கையை…”என கோவமாய் கடிந்த பற்களுக்கிடையே அவள் வார்த்தையை கடிந்து துப்ப…அது எல்லாம் காதில்  விழாதது போல பாவித்தவன் “அண்ணா..நீங்க போங்க…”என ஆட்டோகாரரை அனுப்பி வைத்தவன், வீணாவின் கையினை பிடித்து பைக்கின் அருகில் இழுத்துக்கொண்டு வந்தான்..

 

“விடுங்க…விடுங்க…சொல்றேன் இல்ல..கையை விடுங்க..”என்றாள் வீணா கோவமாய்…அவளின் கையினை விடுவித்தவன் “என்னடி என்ன ஆச்சு உனக்கு,நானும் பாக்குறேன் ரொம்ப தான் பண்ற..”என உக்கிரமாய் அவளை பார்த்து கேட்க..அவளோ பதில் சொல்லாமல் முகத்தினை திருப்பி கொண்டாள்…

 

அவளின் முகதிருப்பல் அவனுக்கு இன்னும் கோவத்தினை கூட்ட..அவளை வலுகட்டாயமாய் தன் புறம் திருப்பியவன் அவளின் முகத்தினை தன் கைகளால் வழுவாய் அவள் முகம் திருப்ப முடியாத அளவிற்கு இறுக்கி பிடித்தவன் “என்னடி நான் அமைதியா இருந்தா என்னைய என்ன கேனப்பையன்னு நினைச்சியா..நானும் போன போகுதுன்னு பொறுமையா இருந்தா,ரொம்ப தான் முறுக்கிட்டு போற..”என அவன் பேச பேச அவன் கை வீணாவினை வெண்மை முகத்தை சிவப்பாக்கி கொண்டு இருந்தது..வலியில் அவள் துடிக்க அதனை எல்லாம் கண்டு கொள்ளாதவன் மீண்டும் தொடர்ந்தான்…

 

“என்னடி இந்த உலகத்திலையே நீ ஒருத்தி தான் அழகியா..என்னவோ ரொம்ப தான் முகத்தை திருப்புற..பொறுமையை ரொம்ப சோதிச்சிட்ட..இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது…நான் உன்னை லவ் பண்றேன்ன்னு நினைக்கிறேன்..உன்னைய தான் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேன்…யோசிச்சு நல்ல முடிவா சொல்லு…ரெண்டு நாள் தான் உனக்கு டைம்…” என்றவன் ஜடமாய் இருந்தவளை இழுத்து வண்டியில் அமர வைத்தவன் அவள் கீழே விழுந்திடாமல் இருக்க,அவளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு வண்டியினை இயக்கினான்…

 

நடப்பது எதுவும் தெரியாமல் அமைதியாய் ஜடம் போல் அவனின் பின் அமர்ந்துகொண்டு வந்தவளை ஹாஸ்டல் வாசலில் இறக்கி விட்டவன்,”நியாபகம் இருக்கட்டும்…இன்னும் ரெண்டு நாள்ல பதில் சொல்ற..இல்ல…என்னோட முடிவும்,நடவடிக்கையும் வேறவிதமா இருக்கும்..”என்ற எச்சரிக்கை விடுத்துவிட்டே அங்கு இருந்து அகன்றான்…

 

அப்போது வந்து கட்டிலில் விழுந்து கண்ணீரில் கரைந்தவள்,மறுநாள் காலையில் வேலைக்கு செல்வதன் காரணமாய்,தன்னை சமன்படுத்தி கொண்டவள் எக்காரணம் கொண்டும் தன்னுடைய துக்கமும்,வேதனையும் ஜெயஸ்ரீக்கு தெரியாவண்ணம் வெகுவாய் மறைத்துவிட்டாள்…

 

ஆனால் பிரதீப்பின் செயலின் வீரியம் இன்னும் வீணாவினை பாடாய்படுத்திக்கொண்டு இருந்தது…எப்படி எலலம் அவனை நினைத்து இருந்தாள்..நொடி பொழுதில் அவனின் முகம் மாறியதை அவளால் என்ன முயன்றும் ஜீரணிக்க முடியவில்லை…அவள் பேசிய பேச்சை அவளின் காதில் ரீங்காரமிட்டு அவளை துன்பத்தில் ஆழ்த்தியது…என்ன செய்வதென்று தெரியாமல் வெகு நேரம் மீண்டும் கண்ணீரில் கரையலானாள்…

 

சொல்லிய வார்த்தைகளின்

அர்த்தங்கள் அறிவாயா??

பேசிய பேச்சுக்களின்

நியதியை அறிவாயா..??

எந்தன் இதயத்தில் உண்டான

வலியினை தான் நீ அறிவாயா..??

சொல்லாமல் இருந்த காதல்

என்னுள் தித்தித்தது..

நீ சொல்லிய முறைமையை

கண்டு எந்தன் உள்ளம் சுருங்கியது..

காதல் பேசிய எந்தன் மௌனம்

இன்று வேதனையை மட்டும்

தந்தது உன்னாலே..

போதும் கள்வனே என்னை

நீ படுத்திய பாடு…

உந்தன் நினைவு என்னை

படுத்திய பாடு…

வருத்தங்கள் அதிகமாக

வேதனையும் அதிகமாகிறது..

நொடி பொழுதாகிணும் உந்தன்

நினைவில் உருகியவள்..

நீ பேசிய நொடி முதல்

நீ சொன்ன வார்த்தையின்

வீரியத்தில்,அதன் அர்த்தத்தில்

வெந்து உருகுகிறேன்…

உன் பிம்பம் கலைந்து போனதும்

எந்தன் காதல் முகில் கலைந்து

போனது உன்னாலே…

 

விலகல் தொடரும்…

Advertisement