Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -24

 

நாட்கள் விரைந்தோடி கொண்டு இருக்க,ஜெயஸ்ரீ ப்ராஜெக்ட் செய்ய வேண்டிய  நாளும் வந்தது.. அவளுக்கு யாருடனும் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்ய விருப்பம் இல்லாததால் அவளே,அவளின் பேராசிரியர் லதாவின் உதவியோடு செய்ய ஆரம்பித்தாள்…

 

எந்த மாதிரியான ப்ராஜெக்ட் செய்யலாம் என அவரிடம் கலந்தாலோசித்தவள், அதற்கான வேலையில் முழுதும் ஈடுபட்டாள்…தனியாக ப்ராஜெக்ட் செய்வதால் எல்லாம் வேலையையும் அவளே செய்ய வேண்டியிருக்க,காலை முழுதும் தன்னை ப்ராஜெக்ட் செய்வதில் ஈடுபடுத்திக்கொண்டாள்…விஜயினை நினைக்க கூட அவளுக்கு நேரம் இல்லாமல் போனது.

 

காலையில் ப்ராஜெக்ட் வேலையில் தன்னை தொலைப்பவள்,இரவில் விஜயின் நினைவில் தூக்கத்தை தொலைத்தாள். கண்ணை மூடினால் அவனின் முகமே வந்து அவளை கொல்லாமல் கொன்றது….

 

”ஏன் டா என்னைவிட்டு போன??  நான் உனக்கு வேண்டாமா?? ஆனா நீ எனக்கு வேணுமே. நீ எனக்கு இனிமேல் இல்ல, உன்னை மறக்கணும்ன்னு நினைச்சாவே நெஞ்சை பிளியிற மாதிரி வலி உயிர் போகுதே… நட்டநடு நேரத்துல எழுந்து உன்கிட்ட இருந்து ஏதாவது மேசேஜ் வந்து இருக்கான்னு பைத்தியம் மாதிரி மொபைலையே வெறிச்சி பார்த்துட்டு இருக்கேன்.. ”என மானசீகமாக அவனிடம் சண்டை போட்டாள்…

 

ஆனால் பதிலுக்கு அவளிடம் சண்டை போடவும் , அவளை சமாதானம் படுத்தவும் அவன் இல்லையே என்ற நினைப்பால் தலையணையை அவளின் கண்ணீரால் நனைக்க தொடங்கினாள்….இருபத்தி நாலு மணி நேரமும் சிறிதும் உறக்கம் இல்லாமல், ஒழுங்காக சாப்பிடாமல் நாளுக்கு நாள் மெலிந்து போனாள்..

 

சுஜா “என்ன ஆச்சு ஸ்ரீ, ஏன் இப்படி இருக்க..?? ”என பலமுறை கேட்டும் அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை..மௌனம் மௌனம் மட்டுமே அவளிடம்…கேட்டு கேட்டு சலித்து போன சுஜா நந்துவிடம் புகார் கூறினாள்…

 

நந்துவோ எவ்வளவோ முயன்றும் ஜெயஸ்ரீயினை அவனால் பழைய மாதிரி கலகலப்பாய் மாற்ற முடியவில்லை… வீட்டிற்கு விடுமுறை தினத்தில் செல்பவள் எப்போதும் தோட்டத்தில் அமர்ந்து செடிகளை வெறித்து பார்த்துக்கொண்டு இருப்பாள்….அப்போது ஜீவா கல்லூரி இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருந்தாள்..

 

ஜீவா அவளிடம் பேசினாலும், ஜெயஸ்ரீ பதில் பேசாமல் அமைதியாய் அங்கு இருந்து நகர்ந்துவிடுவாள்…ஜீவாவிற்கும் புரியதான் செய்தது, ஜெயஸ்ரீ வருவின் நினைவில் வாடுகிறாள் என்று. ஆனால் அது அவளுக்கு வருவின் மேல் உள்ள கோவத்தினை இன்னும் அதிகப்படுத்தியது…

 

ஆனால் ஜீவா எக்காரணம் கொண்டும் ஜெயஸ்ரீயிடம் வருவினை பற்றிய பேச்சினை எடுக்கவில்லை. ஆனால் மனதிற்குள் “விஜயவரதன் என்னோட அக்கா உங்க மேல உயிரையே  வச்சு இருக்கா,உங்களை மறக்க முடியாம மறுகி போறா, ஆனா அதுக்கு எல்லாம் நீங்க தகுதியானவங்க இல்ல அப்படின்னு அவளுக்கு தெரியல.. கூடிய சீக்கிரம் அவ உங்களை மறப்பா, மறக்கணும்..”என வேண்டிக்கொண்டாள்.. அவளின் வேண்டுதலை கடவுள் டீலில் விட்டது பாவம் அவள் அறிய வாய்ப்பில்லை…

 

அவளின் பேராசிரியர் லதா அவளை பெங்களூரில் நடக்கும் ஒரு மிகப்பெரிய கான்பிரன்சிற்கு போக சொல்ல “இல்ல மேம் வேண்டாம்…நான் போகல..எனக்கு விருப்பம் இல்ல..”என்றுவிட…

 

அவரோ “என்ன மா இப்படி சொல்ற, தனியா போக ஒரு மாதிரியா இருக்கா,வேணும்னா நானும் கூட வரேன்.. இது ஒரு நல்ல சான்ஸ்.. அதுவும் இல்லாம இப்போ வந்த புது டெக்னாலஜி பேஸ் பண்ணி தான் நீயும் ப்ராஜெக்ட் பண்ற, அந்த கான்பிரன்சிலயும் அப்படி தான்,உனக்கு நல்ல ஐடியா கிடைக்கும்,உனக்கு அது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும், நல்ல வாய்ப்பு அதை மிஸ் பண்ணாத,இந்த கான்பிரன்சில ஸ்டுடென்ட்ஸ் யாருக்கும் மோஸ்ட்லி அனுமதி கிடையாது, என்னோட பிரண்ட் இதுல ஆர்கனைசரா இருக்குறதுனால, இந்த வாய்ப்பு கிடைச்சி இருக்கு, பெங்களூர்ல இருக்குற எல்லா கம்பெனில இருந்தும் வருவாங்க…”என சொல்ல…

 

ஜெயஸ்ரீயின் காதில் அவர் முன்னால் பேசியதை விட கடைசியில் பேசிய “எல்லா கம்பெனில இருந்தும் வருவாங்க…“என்ற கடைசி வாக்கியமே அவளின் காதில் ரிங்காரமிட துவங்கியது…

 

”அவன் அங்கே இருப்பானா,அவனை பார்ப்போமா,..??? ”என அவளின் ஒரு மனம் ஒரு நிமிடம் நினைத்து ஏங்க துவங்கியது…ஆனால் அவளின் மற்றொரு மனமோ “அங்கு இருக்குறது பத்து கோடி மக்கள்,அதுல அவன் அங்கு வருவான்னு எப்படி நீ ஆசைபட்ற, அவன் இன்னமும் அங்கே தான் வேலை செய்யுறான் அப்படின்றதுக்கு என்ன உத்திரவாதம் இருக்கு, உனக்கே இது பேராசையா இல்ல.?? .”என இடித்துரைத்தது…

 

நிதர்சனம் இடித்துரைக்க மனம் கனத்துபோனது…” ஜெயஸ்ரீ, ஜெயஸ்ரீ “ என அவளது பேராசிரியர் அவளை இரண்டு முறை அழைத்து அவளை உலுக்க “ஹாங்..”என அவரை பார்த்து விழித்தாள்…

 

லதா “என்னமா இப்படி முழிக்கிற கான்பிரன்ஸுக்கு போக எல்லாம் ரெடி பண்ணு, வர சனிக்கிழமை போயிட்டு திங்கள்கிழமை காலையில வரலாம். நான் பிரின்சிபல் கிட்ட பேசிட்டு வரேன்..”என சொல்ல,ஜெயஸ்ரீ வேண்டாம் என எவ்வளவு மறுத்தும் அவர் கேட்கவில்லை…

 

அதன் பின் அவளின் அறைக்கு திரும்பியவள், சுஜாவிடம் செய்தியை பகிர அவளோ வானத்திற்கும் பூமிக்கும் குதித்தாள் சந்தோசத்தில்….

 

”ஹே ஸ்ரீ நிஜமாவா, என்னால நம்பவே முடியல, என்னோட DS(Database System) சார் கூட இந்த கான்பிரன்சிக்கு போனா ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் அப்படின்னு சொல்லிட்டு இருந்தார் ஆனா பாரேன் நீ போற…”என அவளுக்கே வாய்ப்பு  கிடைத்தது போல சந்தோசமாய் தன் போக்கில் பேசிக்கொண்டே சென்ற சுஜா ஜெயஸ்ரீயின் முகத்தை தன் பக்கம் திருப்ப, ஜெயஸ்ரீயின் கண்கள் கலங்கி போய் கண்ணீர் கீழே விழவா என்பது போல குளம் கட்டி இருந்தது…

 

சுஜா பதறி “ஸ்ரீ என்ன ஆச்சு, இப்போ எதுக்கு அழற..?? ”என கேட்க,அவ்வளவு தான் “சுஜாஜா…”என கதறிக்கொண்டு அவளின் தோல் சாய்ந்து தேம்பி தேம்பி அழ துவங்கினாள்….

 

சுஜாவிற்கு ஒன்றுமே புரியவில்லை ”என்ன ஸ்ரீ என்ன ஆச்சு..??? இப்போ எதுக்கு இப்படி அழுற…?? சொல்லுடி.. எதுவும் சொல்லாம அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்… எனக்கு பயமா இருக்குடி..சொல்லுடி…” என சொன்ன சுஜாவின்  குரலும் கலங்கி போய் வந்தது என்னவென்று தெரியாமல்…

 

சுஜாவின்  தோல் சாய்ந்து  அழுதுக்கொண்டு இருந்தவள், தேம்பலுடனே  அவளுக்கும், வருவிற்கும் இடையேயான காதலை  சொன்னவள், விஜய் சிறிது நாட்களாக தன்னை தவிர்த்து  வந்ததையும், அதன் பிறகு அவனை தொடர்பு கொள்ள முயன்ற போது,  அவனின் மொபைல் ஏற்காமல் இருந்ததையும், பின் அதனை அணைத்து வைத்ததையும்  ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள்…

 

சுஜா “ஏன்டி  இத என் கிட்ட  முன்னாடியே சொல்லல… அப்படி  என்ன நான் உனக்கு வேண்டாதவளா போயிட்டேன்…நான்  என்ன உனக்கு விரோதியா என்ன… என்கிட்ட சொல்ல உனக்கு  என்ன..”என கோவமாய் கேட்க…சட்டென்று அவளின் வாயினை மூடிய  ஜெயஸ்ரீ “ப்ளீஸ்டி நீயும் ஏதாவது சொல்லி என்னை கஷ்டப்படுத்தாத,  என்னால கண்டிப்பா தாங்க முடியாது..ஒருத்தன் என்னன்னு சொல்லாமலே அப்படியே  தவிக்கவிட்டுட்டு போயிட்டான்…நீ ஏதாவது பேசி தவிக்க வைக்காத, எனக்கு இப்போ  எதையும் தாங்கிக்கிற சக்தி இல்ல…”என கெஞ்சலாய் சொல்ல…

 

அவளை  பார்த்த  சுஜாவிற்கு  பாவமாய் இருந்தது…ஜெயஸ்ரீயினை  ஆறுதலாய் அணைத்தவள் “எதுக்கும் கவலைபடாத  எல்லாம் நல்லதாவே நடக்கும்… கண்டிப்பா நீ  அண்ணாவை பார்ப்ப..”என சொல்ல…அந்த சோகத்திலும் அவளின் வார்த்தை  அவளுக்கு தெம்பை கொடுக்க சுஜாவின் கன்னத்தில் முத்தமிட்டவள்,

நீண்ட  நாட்களுக்கு  பிறகு அவளை பார்த்து  சிரித்தாள்…

 

சுஜா “அண்ணாவை  பார்ப்ப அப்படீன்னு  சொன்னதுக்கு எதுக்குடி  என்னோட கன்னத்தை எச்சில்  பண்ற…”என செல்லமாய் அவளை  திட்டியவள், “இதை எல்லாம் அண்ணாக்கு  குடு,எனக்கு வேண்டாம்..”என்றவளை, அடிக்க துவங்கினாள்  சிவந்த தன் முகத்தினை மறைத்துக்கொண்டு…

 

அதனை  கண்டு கொண்ட  சுஜா “பார்றா… ஸ்ரீ  வெட்கம் எல்லாம் பட்றா…அய்யோ யாராவது  வாங்களேன்…இதை என்னால மட்டும் தனியா பார்க்க முடியலையே..”என  அலற, ஜெயஸ்ரீ “அய்யோ என் மானத்தை வாங்குறாளே..”என திட்டிக்கொண்டே  குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள்…

 

சுஜா  சிரிப்புடனே  ஜெயஸ்ரீ பொருட்கள்  எல்லாவற்றையும் பேக்கில்  எடுத்து வைத்தவள் “எல்லாம் நல்லபடியா  நடக்கணும் முருகா..”என மனமுருக வேண்டிக்கொண்டாள்..  

 

அதோ  இதோ என்று  நேரமும் விரைந்தோட  சனிக்கிழமை காலையும் இனிதே விடிந்தது  அனைவருக்கும்… மனதிற்குள் பெரிய பிரளயமே  உண்டாகிக்கொண்டு இருக்க அதனை தடுக்க வழி தெரியாது  விழித்துக்கொண்டு இருந்தாள் ஜெயஸ்ரீ…

 

பெங்களூர்  கான்பிரன்சிற்கு  செல்வதாய் வீட்டில்  ஏற்கனவே தெரிவித்து இருந்தவள்  கிளம்பும் முன் சிறிது நேரம் வீட்டில்  பேசியவள் சுஜாவிடம் இருந்து விடைபெற்று ஓசூரில்  பஸ் ஏறினாள்…சுஜா “ஆல் தி பெஸ்ட் “என்பது போல கட்டைவிரலை  உயர்த்தி காட்ட “ஹ்ம்ம்…” என்ற தலை அசைப்போடு ஏற்றுக்கொண்டவள்  பஸ்ஸில் ஏறி இருக்கையில் அமர்ந்தாள்…

 

ஜன்னல்  ஓர இருக்கை  கிடைக்க சிறிது  நேரம் லதாவிடம் பேசிக்கொண்டு வந்தவள், அவர்  அசந்து போய் தூங்கிவிட, கடந்து செல்லும் கட்டிடங்களையே  ஜன்னலின் ஓரம் சாய்ந்து வெறித்து பார்த்துக்கொண்டு வந்தாள்…

 

கண்கள்  வெறித்துக்கொண்டு  இருந்தாலும் மனமோ “என்ன  நடக்கும்,அவனை பார்ப்பேனா…” என்ற அலசலில்  இறங்கி இருந்தது… “தான் எங்கு தவறு செய்தோம் “என  நடந்தவட்டறை எல்லாம் ஒரு முறை நினைவு கூர்ந்தவளுக்கும்  தெரியவில்லை தவறு எங்கே எப்படி நடந்தது என்று….கடைசில்  அவனை அவள் பார்த்தது கல்லூரி வாளகத்தில் தான்…

 

அசைன்மென்ட்  சமர்பிக்க அவளது  பேராசிரியர் அறைக்கு  செல்ல நேரும் போது, ஆபிஸ்  அறையில் இருந்து வெளியே வந்த  வருவினை பார்த்தாள்….அவளை பார்த்தவன்  சின்ன சிரிப்போடு அவளை கடந்து சென்றான்…

 

அவளை  கடந்து  போனவன் ஒரு  முறை அவளை திரும்பி  பார்க்க ,அந்நேரம் ஜெயஸ்ரீயும்  அவனை திரும்பி பார்த்தாள்…இருவரும்  சின்ன சிரிப்போடு திரும்பி கொண்டனர்….

 

அதன்  பின் இருவருக்கும்  நேரில் பார்க்கும் சூழ்நிலை  அமையவில்லை என்றாலும்,இருவரும்  போனில் உரையாடிக்கொண்டு இருப்பர்….வருவின் “ஃபேர்வெல் டே..” அன்று  அவனை காண செல்ல அவள் முயன்ற போது,நந்து அவளிடம் அமர்ந்து பேசிக்கொண்டு  இருந்தான்…சரி பிறகு பார்க்க போகலாம் என எண்ணி அவள் அமைதியாகிவிட அதுவே  அவளுக்கு வினையாய் போனது என்று இன்னும் அவள் அறியவில்லை…

 

நடத்துனர் “என்ன மா  இறங்கலையா…”என கேட்க,அப்போது  தான் தாங்கள் வரவேண்டிய இடம் வந்ததை  உணர்ந்து,தூங்கிக்கொண்டு இருந்த லதாவை எழுப்பியவள்  பைகளோடு இறங்கினாள்…

 

பஸ்ஸில்  இருந்து இறங்கிய  லதா “இங்க இருந்து  ஆட்டோ பிடிக்க சொன்னாங்க…கான்பிரன்ஸ்  நடக்குற இடத்துக்கு பக்கத்துலே நமக்கு ரூம்  புக் பண்ணியாச்சு…அதுனால ஒரு பிரச்சனையும் இல்ல…”என  அவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்து அவர் சொல்ல, எதுவும்  சொல்லாமல் சரி என தலையசைத்தாள்…

 

அதன்  பின் இருவரும்  அங்கு இருந்து 20  நிமிட பயணத்தில் உள்ள  கான்பிரன்ஸ் நடக்கும் இடத்தை  அடைந்தனர்..இருவரையும் 50 வயதில் மதிக்கதக்க ஒருவர்  வரவேற்றார்…லதா “இது ராஜாராம்…என்னோட ப்ரண்ட்…”என  ஜெயஸ்ரீக்கு அறிமுகபடுத்த, ஜெயஸ்ரீ “ வணக்கம் “ என சொல்ல ,அவரோ  வாய்விட்டு சிரித்தார்…

 

ஜெயஸ்ரீ “இப்போ  என்ன பெரிய காமெடி  பண்ணிட்டோம்னு இப்படி  அடிபட்ற மாதிரி சிரிச்சு  வைக்கிறார்…”என கடுப்பாய்  மனசுக்குள் அவள் நினைக்க, “கண்டிப்பா  அடிபடாது மா…நான் ரொம்ப ஸ்ட்ராங்காக்கும்…”என  சொன்னவர் பயில்வான் போல கையினை தூக்கி காட்டி ,அவள்  மனதில் நினைத்ததிற்கு அவர் பதில் சொல்ல,ஜெயஸ்ரீ அவரை அதிர்ச்சியோடு  பார்க்க….

 

லதா தான் அவரை அடக்கினார்…”ஹே  ரம்… போதும்.. .பாவம் பயந்துடுவா..

ஏற்கனவே  அரண்டு போய்  பாக்குறா…உன்  சேட்டையை கொஞ்சம்  நிறுத்து….”என அவரை  அடிக்க….”சரி சரி…நான் எதுவும்  இனிமேல் பேசல….”என சொன்னவர் ,”உன் பேர் என்ன…”என்றார்  ஜெயஸ்ரீயிடம்…

 

“ஜெயஸ்ரீ..“ என்றவள் அதன்  பிறகு அமைதியானாள்…”சரி வாங்க  போலாம்…”

என்றவர்  இருவரையும்  ஹோட்டலிற்கு அழைத்து  சென்றார்…இருவருக்கும் ஏற்கனவே  புக் செய்து வைத்து இருந்த அறையின்  சாவியினை வாங்கி கொடுத்தவர், “ரெடி ஆகிட்டு  எனக்கு போன் பண்ணு லதா,நான் வந்து அழைச்சிட்டு போறேன்…”என  சொல்ல “சரி ரம்…” என சொன்ன லதா அறைக்குள்

ஜெயஸ்ரீயுடன்  உள்ளே நுழைந்தார்…

 

“ஷப்ப்பா….ஒரு  மணி நேரம் வந்ததே  ஏதோ ஒரு நாள் பஸ்ல  வந்தது மாதிரி இருக்கு…செம  டையார்டா இருக்கு இல்ல ஜெயஸ்ரீ …”என  அவளை பார்த்து கேட்க….”ஆமா மேம்…”என்றவள். “நீங்க  வேணும்ன்னா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க…”என சொல்ல… “இல்ல  மா..அப்புறம் ரம் போன் பண்ணி கத்த ஆரம்பிச்சிடுவான்…நாம்ப கான்பிரன்ஸ்க்கு  போயிட்டு ஈவினிங்க் ரெஸ்ட் எடுத்துக்கலாம்…நீ ரெடி ஆகுமா…”என சொன்னவர் தயாராக சென்றார்…ஜெயஸ்ரீக்கு  லதாவின் பேச்சு நடவடிக்கை எல்லாம் புதிதாய் இருக்க எதுவும் சொல்லாமல் தயாராக சென்றாள்…

 

ஜெயஸ்ரீயும்  தயாராகி வர அதன்  பின் இருவரும் ராஜாராம்  உடன் சேர்ந்து கான்பிரன்ஸ்  நடக்கும் இடத்திற்கு சென்றவர்கள்  காலை உணவினை அங்கே முடித்துக்கொண்டனர்…ஜெயஸ்ரீயின்  கண்கள் வந்து இருந்தவர்களை எல்லாம் பார்த்தவள் ,”வருவின்  முகம் எங்காவது தெரிகிறாதா..” என கண்களாலே அலசினாள்…ஆனால்  பலனோ பூஜ்ஜியம்…அவன் எங்கும் தென்படவில்லை…

 

ராஜாராம்  இருவரையும்  கான்பிரன்ஸ் ஹாலிற்கு  அழைத்து சென்று இருக்கையில்  அமர வைத்தவர் “நீங்க முடிச்சிட்டு  போன் பண்ணுங்க,நான் சாப்ட்றதுக்கு அழைச்சிட்டு  போறேன்…”என பொதுவாய் இருவரிடமும் சொல்லியவர்,லதா  “நான் போறேன்..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…

ஏதாவது  வேணும் அப்படின்னா  எனக்கு போன் பண்ணு…” என்றவர், ”நான்  வரேன்…வரேன் ஜெயஸ்ரீ…” என்று இருவரிடமும்  சொல்லிக்கொண்டு அங்கு இருந்து நகர்ந்தார்…

 

அவர்  சென்ற சிறிது  நேரத்தில் கான்பிரன்ஸ்  துவங்கி விட,பெரிய பெரிய  கம்பெனிகளில் இருந்து வந்தவர்கள் ஒவ்வொருவறாக அவர்கள்  செய்தவற்றை பற்றியும், அதில் இருந்த நிறைகளை பற்றியும்,அதனுடைய  வேலை நுணுக்கங்களை பற்றியும் தெளிவாக புரியும் வண்ணம் ஆங்கிலத்தில்  எல்லோருக்கும் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர்….அவர்களின் விளக்க படமும்  திரையில் ஓடிக்கொண்டு இருக்க,ஒவ்வொன்றையும் எதிர்கால உபயோகத்திற்கு எப்படி  அமையலாம் என்பதனையும் விளக்கிக்கொண்டு இருக்க…ஜெயஸ்ரீ ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்துகொண்டாள்…

 

முதலில்  ஏனோ தானோ என்று கேட்டுக்கொண்டு  இருந்தவள்,அவர்கள் சொல்லிய விதத்தில்  ஆர்வம் கொண்டு தன்னை மறந்து அதில் மூழ்கி போனாள்…மதிய வேளை ராஜாராம் வந்து  அவர்களை சாப்பிட அழைத்து சென்றவர் “என்னமா ஜெயஸ்ரீ எப்படி இருக்கு…உனக்கு  யூஸ்புல்லா இருக்கா…ஏதாவது தேறுமா…”என சிரிப்புடனே கேட்க…

 

“ஹ்ம்ம்..நல்லா  இருக்கு இன்னைக்கு  நெறைய தெரிஞ்சிக்கிட்டேன்….ப்ராஜெக்ட்  செய்ய புது ஐடியா கூட கிடைச்சி இருக்கு…”என  சந்தோசமாய் சொல்ல

“வெரி குட்..வெரி  குட்…லதா உன்னோட  ஸ்டுடென்ட் உன்ன மாதிரி  தத்தியா இல்லமா டேலேன்ட் போல  இருக்கு…”என கிண்டலாய் சொன்ன ராஜாராமை  பார்த்து லதா முறைக்க ஆரம்பிக்க..அவரோ இன்னும்  சிரித்தார்…லதாவும் விடாமல் ராஜாராமோடு சரிக்கு  சரி வாயடித்துக்கொண்டு இருந்தார்…ஜெயஸ்ரீ அவரை ஆச்சர்யமாய்  பார்க்க…

 

அவளின்  பார்வையை  புரிந்துக்கொண்ட  லதா “எனக்கு புரியுது  ஜெயஸ்ரீ, நீ என்ன நினைக்குறன்னு…நானும்  ரம்மும் காலேஜ் ப்ரண்ட்ஸ்,அதுவும் இல்லாம  இவன் தெலுங்கு,நான் தமிழ், முதல்லா எல்லாம் என்  கிட்ட பேசவே மாட்டான்…”என சொல்ல “ஏன்னா லதா யாருக்குமே  பேச சான்ஸ் குடுக்க மாட்டா…அவ மட்டும் பேசிட்டே இருப்பா….”என  குறுக்கில் ராஜாராம் இடைபுக…”சும்மா இரு ரம்…”என அவரை திட்டிய லதா மீண்டும்  தொடர்ந்தார்….

 

”சாதாரணமா  பேசின நாங்க  கடைசியில நல்ல  ப்ரண்ட்ஸ் ஆகிட்டோம்…

என்னோட  வீட்டுக்காரருக்கு  இவன்னா அவ்வளோ பிடிக்கும்…

எனக்கு  இவனை மரியாதையாவே கூப்பிட  வராது..என் வீட்டுக்காரர் கூட சொன்னார்…மரியாதை கொடுத்து  கூப்பிட்டுட்ன்னு…நான் தான் முடியாதுன்னு சொல்லி கூப்டறது  இல்ல…”என சிரிப்புடனே சொல்ல…இந்த வயதிலும் இருவருக்குள் இருக்கும்  அந்த நட்பினை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை…என்ன ஒரு புரிதல்  இருந்து இருக்கும் இருவருக்குள் என அவள் சிந்தித்துக்கொண்டு இருக்க…

 

“ஜெயஸ்ரீ  உன்னோட மேடம்  இப்படி தான் பீலா விடுவா…நீ அதை  கண்டுக்காத, சாப்பிடு..சாப்பிட்டு என்னோட  ஜூனியர் ஒருத்தன் பேப்பர் ப்ரசென்ட் பண்றான்,

அதை  பார்த்துட்டு நீங்க  ரூம்க்கு போலாம்…”என சொன்னவர்…லதாவிடம்  சிறிது நேரம் தங்களது கல்லூரி வாழ்க்கையின்  பழைய நினைவுகளை அசைபோட,

ஜெயஸ்ரீ  சுஜாவிற்கு  அழைத்து சிறிது பேசியவள் அவளிடம்  “இன்னும் அவனை பார்க்கல” என சோகமாய்  சொல்ல

 

சுஜா “ஹேய்…இன்னும் கிட்டத்தட்ட  அஞ்சு மணி நேரம் இருக்கு..எதுக்கு சொங்கி  போற சோப்பளாங்கி…கண்டிப்பா நீ அண்ணாவை பார்ப்ப,நான்  சினிமா டயலாக் எல்லாம் சொல்லல…உன்னோட இத்தனை நாள் காத்திருப்புக்கு   கண்டிப்பா பதில் கிடைக்கும்,எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு….நம்பிக்கையோட  இரு..”என்றவள் சிறிது நேரம் பேசி அவளை உற்சாகபடுத்தியவள், ஜெயஸ்ரீயினை தெளிய  வைத்த பின்னே அழைப்பை துண்டித்தாள்…

 

சாப்பிட்டு  வந்தவர்களை தன்னுடன்  வேலை பார்க்கும் நபர்களுக்கு  அறிமுகபடுத்தியவர், ஜெயஸ்ரீயிடம்  அமர்ந்து அவள் என்ன மாதிரியான ப்ராஜெக்ட்  செய்ய போகிறாள் என விசாரித்துக்கொண்டு இருந்தார்…சிறிது  நேரத்தில் மேடையில் “குட் ஆப்டர் நூன்…எவெரி ஒன்…”என்ற குரலை  கேட்டு மேடையை பார்த்த அவளின் விழிகள், மேடையில் இருந்தவனையே இமைக்க  மறந்து பார்த்துக்கொண்டு இருந்தது…எங்கே சற்று திசை திருப்பினாலும் அவன்  மாயமாய் மறைந்து போய்விடுவானோ என்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்…     

 

எவ்வளவு  தவித்தாள் இவனை  காணாது..இவன் முகத்தை  பார்க்காது..ஆனால் இவனின்  முகத்தை பார்த்தால் என்னை பிரிந்ததற்கான  வேதனை எதுவும் தெரியவில்லையே…ஒரு வேளை என்னை  மறந்துவிட்டானோ…நான் யார் என்பது அவனுக்கு தெரியுமா…என  கேள்விகள் அவள் மூளையில் உதித்த வண்ணம் இருக்க,எதற்கும் அவளால் பதிலை  ஊகிக்கக்கூட முடியவில்லை…

 

“ஜெயஸ்ரீ…”என  சற்று சத்தமாய் அழைத்து  அவளை தன் திசை திருப்பிய ராஜாராம், “ஸ்டேஜ்ல  இருக்குறது என்னோட ஜூனியர் சொன்னனே…பேரு விஜயவர்தன்..அவனும்  உங்க காலேஜ் தான்…உன்னோட சீனியர் …உனக்கு தெரியுமா இல்லையான்னு  தெரியல,ரொம்ப டேலேன்ட் ஆனா பையன்..”என அவளிடம் சொன்னவர் “லதா உன்னோட பேரை  காப்பத்த ரெண்டு நல்ல ஸ்டுடென்ட்ஸ் இருக்காங்க…”என மீண்டும் அவரை கிண்டல்  செய்வதில் இறங்கினார்…

 

விஜய்  அவன் செய்யும்  ப்ராஜெக்ட் பற்றி  விளக்கம் கொடுத்துக்கொண்டு  வர,ஜெயஸ்ரீ அவனையே பார்த்த வண்ணம்  இருந்தாள்..அவளின் கண்ணில் கண்ணீர் வழிய  அமர்ந்து இருந்தவள்,யாருக்கும் தெரியாவண்ணம்  அதனை துடைத்தவள் முகம் அதன் பிறகு இறுகி போய்  இருந்தது…

 

அனைத்தையும்  விளக்கி முடிக்கவும்,அவனின்  பேச்சையும்,விளக்கத்தையும் கண்டு  அசந்து போனவர்கள் அனைவரும் கைத்தட்ட  அந்த இடமே கைத்தட்டலில் நிறைந்தது…அதன்  பின் இருவரையும் விஜயிடம் அழைத்து சென்றவர் அவனிடம் அறிமுகபடுத்தினார்…முன்பே  ஜெயஸ்ரீயினை பார்த்து இருந்தவன்,தன்னுடைய உணர்வுகளை எல்லாம் தனக்குள் புதைத்து கொண்டான்,எக்காரணம்  கொண்டும் அது ஜெயஸ்ரீக்கு தெரியும் வண்ணம் காட்டிக்கொள்ளவில்லை…

 

மேடை  ஏறும்முன்  ராஜாராம் எங்கு  இருக்கிறார் என தேடியவனின்  கண்ணில் ,அவரின் அருகில் அமர்ந்து  பேசிக்கொண்டு இருந்த ஜெயஸ்ரீ பட சிறிது  நொடி அதிர்ந்து போய் அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்… முதன்முறை  நீண்ட நாட்களுக்கு பிறகு அவளை பார்த்தவனின் கண்கள் அவளையே சிமிட்டாது பருகிக்கொண்டு  இருந்தது… ஆனால் இவள் எங்கே இங்கு என யோசித்தவனை கலைத்தது பிரபுவின் குரல்…பிரபு “என்னடா  இப்படி நின்னுட்டு இருக்க,சீக்கிரம் போ…”என அவனை மேடைக்கு அழைத்து சென்றான்…

 

நகர்ந்து  சென்றவனின்  நினைவில் நடந்தது  எல்லாம் ஒன்றன்பின்  ஒன்றன் நினைவு வர, மனதில் தோன்றிய  உணர்வுகள் அனைத்தையும் நொடி பொழுதில்  

அழித்தவன்,அவளின் கண்ணை  சிறிது நொடியும் சந்திக்காது ப்ராஜெக்ட் பற்றிய  விளக்கத்தை விளக்க ஆரம்பித்து இருந்தான்…

 

ஆனால்  அவன் எதிர்பாராத  ஒன்று ராஜாராமே அவளை  அழைத்து வந்து தன்னிடம்  அறிமுகபடுத்துவார் என்று…சிறிது  விழித்தவன் அதன் பின் முன் பின் ஜெயஸ்ரீயினை  தெரியாதது போலவே நடந்துக்கொண்டான்…லதாவிடம் மட்டும்  விசாரித்தவன், ஜெயஸ்ரீயினை யார் இது என்பது போல பார்த்தான்…

 

லதா “வரு  இது தான் ஜெயஸ்ரீ,உன்னோட ஜூனியர்  தான்..ஆனா இவ இன்ஜினியரிங்…ப்ராஜெக்ட்  பண்ண போறா..அதுக்கு ஒரு ஐடியா கிடைக்குமே  அப்படின்னு இந்த கான்பிரன்ஸ்க்கு வந்தோம்…”என்றார்  அவனிடம்…

 

“ஒஹ்  அப்படியா…ஆல்  தி பெஸ்ட் ஜெயஸ்ரீ…”என  அவன் அவள் கண்களை பார்த்து  எதையோ தேடிக்கொண்டே சொல்ல…ஜெயஸ்ரீயும்  அவனுக்கு சற்றும் சளைக்காமல் பார்த்தவள்  “தேங்க்ஸ் விஜயவர்தன்…”என்றாள் நீளமாக…அவளின்  அழைப்பை கேட்ட விஜய் பல்லை கடித்தான்…

 

அதன்  பின் இருவரும்  பேசிக்கொள்ளவே இல்லை…ராஜாராமும்,லதா மட்டுமே  இருவரையும் அவர்களுது பேச்சுக்குள் இழுத்தனர்…”ஜெயஸ்ரீ  நீ ஏன் என்னோட ஆபீஸ்லையே ப்ராஜெக்ட் பண்ணகூடாது..”என கேட்க…

 

ஜெயஸ்ரீ வெற்றி  பார்வையை விஜயின்  பக்கம் திருப்பியவள் “எனக்கு  அப்படி பண்ணலாமா இல்லையான்னு தெரியலையே  அங்கிள்..”என தெரியாதது போல கேட்க..லதா “அப்படி  பண்ணலாம் ஸ்ரீ,ஏற்கனவே நிறைய பேரு பண்ணி இருக்காங்க…நீ  இன்னும் நிறைய கத்துக்கலாம்….ஆனா உனக்கு ட்ராவெல் பண்ண கஷ்டமா  இருக்குமே..”என நிறையையும் குறையையும் சேர்த்து சொல்ல…

 

சில  நிமிடம் யோசித்தவள்,”நான்  வீட்ல கேட்டுட்டு சொல்றேன்  அங்கிள்..

 

     

 

என்னை கொல்லாமல் கொல்லும்

உந்தன் நினைவுகள்

ஏனோ தொடர்கிறது

தினம் தினம் என்னை…

சிந்தும் மழைத்துளியும்

தீண்டிச்செல்லும் சிறு சாரலாய்

உந்தன் நினைவை எப்போதும்…

காணாமல் இருந்த கண்கள்

இன்று கண்டுகொண்டது

உன்னை இடைவெளியிலும்..

கண்டுவிட்டேன் உன்னை என

என் நெஞ்சம் குதித்தது

சந்தோசத்தில் வானுக்கும் பூமிக்கும்…

என் வாழ்வினை மொத்தமும்

கொண்டவனே நீ தானடா…

உன் கை விரலோடு

கை கோர்க்க

துடித்துக்கொண்டு இருக்கின்றன

எந்தன் கை விரல்கள்…

கோர்த்து கொள்ளடா என்

கை விரலோடு சேர்த்து

என்னையும் உன்னுள்…

       

 


விலகல் தொடரும்…

Advertisement