Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -23

 

பிரபுவும் அவன் அம்மா சித்ராவும் பேசிக்கொண்டு இருக்க,மிருணாவும் ஜெயஸ்ரீயும் அமைதியாய் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தனர்…பின் நேரம் ஆவதை உணர்ந்து மிருணா “அத்தை சாப்பிடலாம் நேரம் ஆச்சு..இன்னும் மதிய சாப்பாடு சாப்பிடல…விட்டா இப்படியே பேசிட்டு நைட் சாப்பாடு தான் சாப்பிடுவீங்க போல…”என சின்ன சிரிப்போடு சொல்ல…

 

அவளை பார்த்து மென்மையாக சிரித்தவர் “ரொம்ப நாள் கழிச்சு பையன் கிட்ட பேசுறேன் இல்ல..எனக்கு பசிகூட தெரியல மா…”என சொல்ல…”பேசலாம் அத்தை சாப்பிட்டு பேசுங்க…வாங்க சாப்பிடலாம்..”என்றாள் மிருணா…

பிரபு “அம்மா சாப்பிட போலாம்..இல்ல உங்க மருமக நம்பளை கரண்டி எடுத்து விரட்ட ஆரம்பிச்சிடுவா..”என அவனும் கிண்டல் மற்றும் சிரிப்போடு சொல்ல மிருணா அவனை பார்த்து முறைக்க ஆரம்பித்தாள்…

 

சட்டென்று தன் வாயினை மூடிக்கொண்டவன் அவன் அப்பாவை சாப்பிட அழைக்க அவர்களிடம் சென்றான்…”அப்பா சாப்டலாம்..வாங்க..”என அழைக்க அவரோ அவன் அழைப்பதை ஒரு பொருட்டாய் கூட மதிக்காமல் விஜயிடம் அப்போது தான் தீவிரமாய் நாட்டு நடப்பை பற்றிய அலசலில் இறங்கினார்…

 

“அப்பா…அப்பா…”என இரு முறை அவன் அழைக்க அவனை ஒரு முறை திரும்பி பார்த்து முறைத்தவர்,மீண்டும் விஜயிடம் பேச ஆரம்பித்தார்…பிரபு விஜயினை பாவமாய் பார்க்க,தான் பார்த்து கொள்வதாக கண்களாலே சொல்லியவன்,சிறிது நேரம் அவரின் பேச்சிலேயே தானும் பேச்சை வளர்த்தான்…பிரபு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்…

 

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த விஜயும் “சரி அங்கிள்..சாப்பிட போலாம் வாங்க..”என அழைக்க எதுவும் பேசாமல் அமைதியாய்

அவனுடன் வந்தவர் டைனிங் டேபிளில் அமர்ந்தார்…

 

மிருணா பரிமாற ஆரம்பித்தாள்..ஜெயஸ்ரீயினையும் மிருணா அமர சொல்ல விடாபிடியாய் அவள் வேண்டாம் என சொல்லி மறுக்க,ஜெயஸ்ரீயினை மனத்திற்குள்ளே “மரமண்டை..”என திட்டி தீர்த்தவள் வம்படிடாய் அவளை விஜயின் பக்கத்தில் அமர வைத்துவிட்டு அனைவருக்கும் உணவினை பரிமாற ஆரம்பித்தாள்…

 

ஜெயஸ்ரீ அதிர்ந்து மிருணாவினை நோக்க அவளோ யாருக்கும் தெரியா வண்ணம் கண்ணடித்து விஜயினை காட்டிவிட்டு அமைதியாய் பரிமாறினாள்…

 

“அய்யோ…இப்படி வெளிப்படையா தெரிய மாதிரி அவனை பார்த்து வச்சோம்…இந்த அண்ணி மட்டும் பிரபு அண்ணா கிட்ட சொல்லுச்சு,

அவன் என்னைய ஓட்டியே எடுத்துடுவான்…கடவுளே எவ்ளோ சீக்கிரம் முடியுமோ..அவ்ளோ சீக்கிரம் ஹாஸ்டல் போகணும்..”என நினைத்தவள் அமைதியாய் உண்ண ஆரம்பித்தாள்…அவளுக்கு தான் இப்போது தன்னவனின் அருகில் அமர்ந்து உண்ணுவதுகூட உரைக்கவில்லை…

 

அவளின் மன்னவனோ,ஒவ்வொரு நொடியும் ரசித்து ,தன் மனம் எனும் பெட்டகத்தில் செவ்வனே சேமிக்க ஆரம்பித்தான்…தன்னவளை இவ்வளவு அருகில் ஏதோ கல்யாணம் ஆகி மறுவீட்டிற்கு அவளும் அவனும் பிரபு வீட்டிற்கு விருந்து உண்ண வந்தது போல அவனது கற்பனை குதிரை கழன்று ஓடிக்கொண்டு இருந்தது…

 

அந்நினைவு வர அப்படிப்பட்ட ஒரு நாள் எப்போது வரும் என அவன் மனம் ஏங்கவும் செய்தது…ஏக்கங்கள் இருந்து என்ன பயன் அதனை நடைமுறைபடுத்த அவனுக்கு சிறிதும் தெரியவில்லை…இறந்த காலத்தையும்,எதிர் காலத்தையும் எண்ணி சுகமான நிகழ்காலத்தை அவன் சிறிதும் இழக்க விரும்பவில்லை….

 

எனவே இப்போதைக்கு மற்றதை எல்லாம் டீலில் விட்டவன் ஸ்ரீயுடன் இருக்கும் நேரத்தை ரசிக்க ஆரம்பித்தான்…சாப்பிட்டுக்கொண்டே தன் அருகில் இருந்தவளை ஓரக்கண்ணால் காண ,அவளோ ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பது அவளின் முகத்தில் இருந்தே கண்டுபிடிக்க முடிந்தது…

 

குழப்பத்தில் உழன்று கொண்டு இருந்தவளோ சுற்றி நடப்பதை எதையும் கண்டுகொள்ளாமல் தட்டில் இருப்பதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்…

 

மிருணாவிற்கு ஜெயஸ்ரீயின் முகம் வாடி இருப்பதை கண்டு என்னவாக இருக்கும்,ஜெயஸ்ரீயின் மனதில் என்ன நினைக்கிறாள் என ஓர் அளவிற்கு ஊகிக்க முடிந்தது..  

ஜெயஸ்ரீயிடம் தெளிவாய் பேசிய பிறகே,பிரபுவிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டாள்…

 

எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க,விஜயோ எப்படி ஜெயஸ்ரீயினை தன் பக்கம் திசை திருப்புவது என்று தீவர யோசனையில் இருந்தான்..எப்போதும் பேசி வளவளத்துக்கொண்டு,

தான் இருக்கும் இடத்தை ஒரு நிமிடத்தில் கலகலப்பாக மாற்றிவிடும்  அவனின் ஜெயா இன்று எதுவும் பேசாமல் அமைதியின் திருவுருவாய் அமர்ந்து இருப்பது ஏனோ அவனின் மனதிற்கு மிகவும் வேதனையை கொடுத்தது…

 

இங்கு வந்து இருந்த போது அவளிடம் ஒரு நிமிடமாவது முகம் கொடுத்து பேசி இருக்க வேண்டுமோ என எண்ணியவனுக்கு இப்போது  என்ன செய்வதென்று தெரியவில்லை…உண்டு முடித்தவள் அமைதியாய் எழுந்து கை கழுவ செல்ல,தானும் உண்டு முடித்து எழுவது போல விஜயும் எழுந்து அவளின் பின்னே சென்றான்…

 

ஜெயஸ்ரீ கையை அழம்பிவிட்டு திரும்ப இரண்டு அடி எடுத்து வைக்க,அவளின் அருகில் மிகவும் நெருக்கமாக நின்றுக்கொண்டு இருந்தான் விஜய்..சட்டென்று அவனை அவ்வளவு அருகில் எதிர்பார்த்திடாத ஜெயஸ்ரீ அதிர்ந்து போய் பின்னே நகர,தரையில் இருந்த தண்ணீரில் கால்வைத்துவிட, “ஹே ஹே…பார்த்து பார்த்து ”என விஜய் அவளை பிடித்து நிறுத்த முயல,அவன் பிடிக்கும் முன்னரே அப்படியே வழுக்கி கீழே விழுந்தாள்…

 

“அம்மாமாமா…”என்ற கூச்சலோடு அவள் விழ,விஜய் பதறி அடித்துக்கொண்டு அவளின் அருகில் சென்று அவளை தூக்கி நிறுத்தினான்…அவளின் கத்திய சத்தம் கேட்டு எல்லோரும் வந்து பார்த்தவர்கள் “அய்யோ..ஸ்ரீ என்ன ஆச்சு…”என பிரபுவும் மிருணாவும் பதறி கேட்டுக்கொண்டு அவளை நெருங்கினர்…“என்ன அம்மா,என்ன ஆச்சு..”என சித்ரா அம்மாவும் கேட்டுக்கொண்டு எல்லோரும் அவளை நெருங்கினர்…

 

அதற்குள் விஜயின் உதவியுடன் அவள் எழுந்து நிற்க முயன்று கொண்டு இருக்க,மிருணா அவளுக்கு உதவி செய்தாள்..பிரபு “எப்படி விழுந்த ஸ்ரீ..”என கேட்க,விஜயினை பார்த்து முறைத்தவள்,”தெரியாம தண்ணி மேல கால வச்சிட்டேன்,அண்ணா,அது வழுக்கி விட்டுடுச்சு..”என வலியின் ஊடே சொன்னவள்,ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து நடக்க முயன்றாள்…

 

“ஷ்ஷ்…அப்பா,அம்மா..”என ஒவ்வொரு அடிக்கும் அவள்  முனங்கிக்கொண்டே நடக்க,அவள் வலியில் துடிப்பதை பொறுப்பதை காண முடியாத விஜய் “இப்போ அவசியமா நடந்து தான் ஆகணுமா….

கொஞ்சம் அப்படியே தான் நில்லேன்..”என கோவமாய் சொல்ல,

அவள் அவனை திரும்பி பார்க்க “எல்லாம் உன்னால் தானே..”என சொல்லாமல் சொன்னது அவளின் பார்வை…

 

கை தாங்கலாக அவளை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தவர்கள்,அவளுக்கு முதலுதவி செய்வதில் முனைந்தார்கள்..

ஜெயஸ்ரீ வலி பொறுக்காமல் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வர,விஜயிற்கு அதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை…

சித்ரா எண்ணையை வைத்து சுளிக்கி இருந்த இடத்தினை நீவ ஆரம்பிக்க,ஜெயஸ்ரீயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய துவங்கியது…அத்தனை கலவரத்திலும் ஜெயஸ்ரீ பிடித்த விஜய் கையினை விடவே இல்லை..விஜயும் அப்படியே…

 

“அம்மா…”என மீண்டும் வலியில் முனக, “ஆன்ட்டி விடுங்க,நான் இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்..ரொம்ப வலியில கஷ்டபட்றா…”என சொன்னவன் “ஹே..நீ எழு..நாம போய் டாக்டர்கிட்ட ஒரு டைம் காட்டிட்டு வரலாம்..ஊசி போட்டா வலி எல்லாம் சரியாகிடும்…”என்றவன் அவளை எழுப்ப முயன்றான்….

 

ஆனால் அவளோ ஊசி என்றதும் மிரண்டு போய் அவனை பார்த்தவள் “ம்க்கும்…வேண்டாம்…”என சின்ன புள்ளையை போல வரமாட்டேன் என அடம்பிடிக்க,விஜய் கோவத்தை கட்டுபடுத்திக்கொண்டு நின்று கொண்டு இருந்தான்…

விஜயின் இப்புதிய பரிமாணத்தை கண்டு பிரபு குழப்பத்தோடு நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்…

 

மிருணா “ஸ்ரீ ரொம்ப வலிக்குதா..ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாமா…கிருப் பேண்ட் போட்டுக்குறியா..”என கேட்க…ஜெயஸ்ரீ பதிலேதும் சொல்லாமல் விஜயினை பார்த்தாள்..அவன் முகமோ கோவத்தால் சிவந்து,இறுகி போய் இருந்தது…

 

ஜெயஸ்ரீ “சரி அண்ணி ஹாஸ்பிடல் போகலாம்..”என சொல்லி விஜயினை பார்க்க அப்போதும் அவன் முகம் அப்படியே தான் இருந்தது..”அய்யோ வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சு போல…ஸ்ரீ நீ தான் ஏதாவது பண்ணனும்..”என மனதிற்குள் சொல்லியவள் அமைதியாய் இருந்தாள்…

 

“சரி பிரபு,அவளை பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போயிட்டு வா..”என சித்ரா அம்மா சொல்ல அதிர்ந்த மிருணா “அத்தை நாம்ப விஜய் கூட அனுப்பலாம்..நீங்க ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க..நீங்க இவர் பேசிட்டு இருங்க..என்ன விஜய் அண்ணா ஜெயஸ்ரீயை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறீங்களா,இல்ல இவரை அழைச்சிட்டு போகட்டுமா..”என கேட்க…

 

ஜெயஸ்ரீயினை ஒரு பார்வை பார்த்தவன்,”அவங்களுக்கு என் கூட வர விருப்பம் இருந்தா நான் அழைச்சிட்டு போறேன்…”என சொல்ல,

மிருணா ஜெயஸ்ரீயினை பார்த்தாள்…“சரி…”என ஜெயஸ்ரீ தலை அசைக்க,மிருணா ஜெயஸ்ரீயினை விஜயோடு ஹாஸ்பிடல்க்கு அனுப்பி வைத்தாள்…

 

சுந்தரத்தையும்,சித்ராவையும் ஓய்வு எடுக்க சொல்லி மற்றொரு அறையை அவர்களுக்கு தயார்படுத்தி குடுத்த மிருணா,இருவரும் உறங்க போக,தன்னுடைய அறைக்கு சென்றாள்…பிரபு அவளின் பின்னே உள்ளே நுழைந்தான்…மிருணா அவனை கேள்வியாய் நோக்க,அவளின் அருகில் வந்தவன் அவளின் காதினை திருகி “என்னடி பண்ணிட்டு இருக்க நீ..என்ன பிராடு தனம் பண்ற எனக்கு தெரியாம ”என கேட்க,”அய்யோ..அம்மா..காது வலிக்குது..அய்யோ காத விடுங்க,..விடுங்கன்னு சொல்றேன் இல்ல…”என வலியில் அலற அவனோ இன்னும் திருகிய நிலையிலேயே இருந்தான்….

 

“அய்யோ..விடுங்க..சொல்றேன்..”என சொல்லவும் அவளின் காதினை விட்டவன், “சொல்லு..”என கேட்டு மெத்தையின் மேல் அமர,காதினை தேய்த்துவிட்டு அவனை முறைத்தவள் தனக்கு தெரிந்தவற்றை அவனிடம் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்…

 

“ஓ கதை இப்படி போகுதா,பாவி ஒரு வார்த்தை என் கிட்ட இதப்பத்தி அவன் மூச்சு விடலையே,இருக்குது அவனுக்கு..”என சொன்னவன்,

”இதெல்லாம் சரி,எதுக்கு தேவையில்லாம இப்போ அவங்களை ஒண்ணா அனுப்பி இருக்க…”என புரியாமல் கேட்க,

 

தன் தலையில் அடித்துக்கொண்ட மிருணா “ஏதோ அவங்களுக்குள்ள சரியில்ல,ஆபீஸ்லயும் பேசிக்கிற மாதிரி தெரியல,சரி இப்போவாவது ரெண்டு பேரும் அவங்களுக்குள்ள பேசி ஏதாவது ஒரு முடிவுக்கு வரட்டுமே, ஜெயஸ்ரீ வீட்ல தீவரமா மாப்பிள்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க,எவ்ளோ நாள் தான் அவளும் அவளோட அப்பாகிட்ட பொய் சொல்லி தட்டி கழிப்பா…”என சொல்ல பிரபுவிற்கும் அவள் சொல்வது சரி எனப்பட்டது…எனவே அவன் எதுவும் சொல்லவில்லை…

 

ஜெயஸ்ரீ அமர முடியாமல் வலியினை பொறுத்துக்கொண்டு அமர்ந்து வர,விஜய் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக மருத்துவமனையினை நோக்கி இயக்கிக்கொண்டு இருந்தான்..சிறிது தூரத்திற்கு ஒரு முறை வண்டியினை நிறுத்தியவன் “வலிக்குதா..”என கேட்டுக்கொண்டே வந்தான்…அவளை விட அவனே அதிகம் துடித்து போனான்…வண்டியில் பயணித்துக்கொண்டு இருந்த இருவருக்கும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ஆட்கொண்டு இருந்தது…

இருந்த வலியெல்லாம் காணாமல் போக,இப்படியே இப்பயணம் இவனுடன் நெடுந்தூர பயணமாய் இருக்காதா என அவள் மனம் ஏங்கி தவித்தது…

அவளின் ஏக்கங்களை அறிய வேண்டியவனோ,வெகு வேகமாய் வண்டியினை இயக்கிக்கொண்டு இருந்தான்..மருத்துவமனை வந்து சேர வண்டியினை ஒரு ஓரமாய் நிறுத்தியவன்,அவளை கை தாங்கலாய் உள்ளே அழைத்து சென்று அமர வைத்தான்…அவள் உக்கார முடியாமல் வலியில் மீண்டும் “ஷ்ஷ்..”என முனக, “என்ன ஆச்சு வலிக்குதா,இரு இப்போ டாக்டரை பார்த்துடலாம்..”என்றவன் அங்கு இருந்த ரிசெப்சன் பெண்ணிடம் அப்பாயின்மென்ட் வாங்கினான்…

 

வலியினை பொறுத்துக்கொண்டு அமர்ந்து இருந்தவளை கண்டு விஜய்க்கு மிகவும் வேதனையாய் இருந்தது..அவனினுள் எல்லாம் “தன்னால் தான் இப்படி..” என்ற எண்ணம் வந்து அவனை மிகவும் வதைத்தது…

 

மருத்துவர் அழைக்க,உள்ளே அவளை அழைத்து சென்றவன்,அவளை அமர வைத்தான்..வலியை பொறுத்துக்கொண்டு அமர்ந்தவள் “என்ன ஆச்சு..”என கேட்க,”தண்ணி மேல காலை வச்சு,வழுக்கி விழுந்துட்டா…

கால்ல சுளுக்கிகிச்சு போல,ரொம்ப வலிக்குதுன்னு சொல்ற..”என சொல்ல,”சரி நீங்க வெளிய இருங்க…நான் என்னன்னு பாக்குறேன்..”

என சொல்ல…”கால்ல தான டாக்டர் சுளுக்கு,அதுக்கு எதுக்கு என்ன வெளிய இருக்க சொல்றீங்க..நானும் இருக்கேன்,நீங்க என்னன்னு பாருங்க…”என அவன் வெளியேறாமல் அப்படியே அமர்ந்து இருக்க…

 

மருத்துவர் “நீங்க என்ன ஆகணும் இவங்களுக்கு,ஹஸ்பன்ட்டா…”என சிரிப்புடனே கேட்க,இருவரும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர்…

 

விஜய் “இல்லை..”என தலை அசைக்க,மருத்துவர் இருவரையும் மாறி மாறி பார்த்தார்…ஜெயஸ்ரீ “இவர் என்கூட வொர்க் பண்றவர் டாக்டர்…”என சொன்னவள், கொஞ்சம் நீங்க வெளிய இருங்க..”என்றாள் கடிந்த பற்களுக்கிடையே அழுத்தத்துடன்..அவளை பார்த்தவன்,எதுவும் சொல்லாமல் வெளியேறினான்…

 

அதன் பின் டாக்டரை பார்த்து மென்மையாய் சிரித்தாள்….டாக்டர் அவளை பரிசோதிக்க திரைக்கு உள்ளே அழைத்து சென்றவர் அவளை படுக்க வைத்தார்,சுளுக்கிய இடத்தை அவள் காட்ட,சிறிது கை வைத்து எங்கு வலிக்கிறது என பார்த்தவர்,வலி தெரியாத அளவிற்கு இருக்க கூடிய ஒரு ஊசி போட்டவர்,நான் மாத்திரையும்,ஒரு ஆயிலும் தரேன்,நைட் படுக்கும்போது அதை அப்ளை பண்ணிட்டு படுங்க..”என சொல்ல சரி என தலை அசைத்தவள் அவர் எழுதி தந்த மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு,நன்றி தெரிவித்து வெளியே வந்தவள்,

அங்கே அமர்ந்து இருந்த விஜயின் அருகில் சென்று நின்றாள்…

 

தன்னருகில் வந்து நின்ற ஜெயஸ்ரீயினை நிமிர்ந்து பார்த்தவன்,”இப்போ வலி பரவாயில்லையா..”என கேட்க,”ஹ்ம்ம்..இப்போ பரவாயில்லை..”

என சொல்ல,”சரி போலாமா..”என்றவன் அவளை கை தாங்கலாய் அழைத்து செல்ல,அவனின் கையை நீட்ட “இல்ல நானே வரேன்..”என முணுமுணுத்தவள் முன்னே மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்…

 

“சரி..”என்றவன் தோளை குழுக்கிவிட்டு யோசனையுடனே முன்னே நடந்தான்..அவளும் எதுவும் பேசாமல் அவனை பின் தொடர்ந்தாள்.

தனது வண்டியினை ஸ்டார்ட் செய்தவன்,அவள் அமர்ந்த பின் செலுத்த ஆரம்பித்தான்….

 

அமைதியாக மீண்டும் அப்பயணம் தொடர,இருவருக்குள்ளும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை…முதலில் விஜய் தான் பேச ஆரம்பித்தான்..”பிரபு வீட்டுக்கு போறியா,இல்ல ஹாஸ்டல்ல விடட்டுமா..”என கேட்க,”ஹாஸ்டல்க்கு போங்க..நான் அவங்க கிட்ட போன் பண்ணி சொல்லிக்கிறேன்..”என அவள் சொல்லி முடிக்கவும்,மிருணா அவளுக்கு போன் செய்யவும் சரியாய் இருந்தது..

 

அதனை ஏற்றவள் “இப்போ பரவாயில்ல அண்ணி,நான் அவர்கூடவே ஹாஸ்டல் போயிக்கிறேன்…ஏதாவது ப்ராப்லம் அப்படின்னா நான் கண்டிப்பா கால் பண்றேன்…ஹ்ம்ம் சரி அண்ணி..கண்டிப்பா..ஹ்ம்ம் சரி அண்ணி..”என பேசி முடித்தவள் அணைப்பை துண்டித்தாள்…

 

ஆனால் அவனோ பேச்சிற்கு அவளிடம் அப்படி கேட்டவன் வண்டியினை அவளின் ஹாஸ்டல் நோக்கி செலுத்தாமல்,வேறு வழியில் வண்டியினை செலுத்திக்கொண்டு இருந்தான்…முதலில் அதனை கவனிக்காத ஜெயஸ்ரீ, பின் செல்லும் வழியினை கண்டு “எங்க போறீங்க..என்னோட ஹாஸ்டல் இந்த பக்கம் இல்ல..”என சொல்ல,விஜயிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை…

 

“அய்யோ..வழி மாறி போறீங்க,என்ன ஹாஸ்டல் இந்த பக்கம் இல்ல…”என மீண்டும் அவனை குழுக்கி சொல்ல,”எனக்கு தெரியும்,நீ கொஞ்சம் அமைதியா வா…”என சொல்ல…”என்ன எங்க அழைச்சிட்டு போறீங்க…நான் எங்கவும் வரமாட்டேன்,என்னை ஹாஸ்டல் அழைச்சிட்டு போங்க…”என கோவமாய் சொல்ல,அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் விஜய் இல்லை…

 

“சொல்றேன் இல்ல..வண்டியை நிறுத்துங்க முதல்ல,நிறுத்துங்க…”என அவள் கோவமாய் சொல்ல,அவன் வண்டியினை ஒரு வீட்டின் முன் நிறுத்தியவன்,அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அழைப்பு மணியினை அழுத்தினான்…அவளும் கோவத்துடனே அவனின் பின்னே சென்று நின்றாள்…

 

விஜயின் வயதினை ஒத்த ஒருவன் வந்து கதவினை திறந்தவன் “வா வரு..எப்படி இருக்க..”என சொன்னவன், “வாங்க ஜெயஸ்ரீ..எப்படி இருக்கீங்க..”என கேட்டுக்கொண்டு அவளை உள்ளே வரவேற்றான்…

 

விஜய் “இது நவீன்..என்னோட காலேஜ்ல படிச்சவன்,வேற டிபார்ட்மெண்ட்..”என ஜெயஸ்ரீயிடம் சொன்னவன்,வேறதும் சொல்லாமல் உள்ளே சென்றான்…

 

ஜெயஸ்ரீ இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கோம் என்றது போல பார்த்தவள் குழப்பான முகத்துடனே உள்ளே சென்றாள்….”இரண்டு பேரும் உட்காருங்க இதோ நான் வரேன்..”என்றவன் இருவருக்கும் காபி எடுத்துக்கொண்டு வர உள்ளே சென்றான்…விஜய் ஏதாவது சொல்வான் என அவனின் முகத்தினை நோக்க அவனோ தன்னை மிக முக்கியமாக மேகசீன் உள்ளே நுழைத்து கொண்டான்…

 

அவனின் மேல் ஏற்கனவே கோவம் கொண்டு இருந்தவளுக்கு, இவனின் இச்செயலும் எரிச்சலை கொடுக்க,வீட்டை பார்ப்பது போல தன் முகத்தை திருப்பிக்கொண்டாள்…அந்த வீடு சிறிதாய் இருந்தாலும்,பார்ப்பதற்கு மிகவும எளிமையான அழகுடன் வெகுவாய் அவளை கவர்ந்தது…விஜயின் நண்பன் காபி எடுத்துவந்து குடுக்க “தேங்க்ஸ் ..”என சொல்லி வாங்கி கொண்டவள்,அதனை குடிக்க ஆரம்பித்தாள்…

 

அதன் பின் விஜயும்,நவீனும் பால்கனியில் நின்று ஏதோ காரசாரமாக விவாதித்துக்கொண்டு இருப்பது அவளுக்கு தெரிந்தது…விஜய் ஏதோ சொல்ல,அதற்கு நவீன் மறுப்பு தெரிவிப்பதும்,விஜய் கோவமாய் நவீனை திட்டுவதும்,அதற்கு நவீன் விஜயிடம் கெஞ்சுவதும் போல தோன்ற,என்ன நடக்கிறது என புரியாமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்…

 

கத்திரிக்காய் முத்தினா கடைவீதிக்கு வந்து தான ஆகனும்,என்று அவளால் அமைதியாய் இருக்க முடியவில்லை..அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கவும் அவளுக்கு விருப்பமில்லை…என்னவாய் இருக்கும் என யோசனையில் இருந்தவளை,கலைத்தது நந்துவின் அழைப்பு…

 

இருக்கும் குழப்பத்தை எல்லாம் ஒதுக்கி வைத்தவள் அழைப்பை ஏற்று காதில் கொடுத்தவள்,எந்த ஒரு விதமான சந்தோசமும் இல்லாமல்,

”சொல்லு நந்து..”என கேட்க,அவளின் நந்து என்ற அழைப்பில் இருந்தே ஏதோ சரியில்லை என உணர்ந்தவன் “என்ன டா,என்ன ஆச்சு,குரலே ஒரு மாதிரி இருக்கு,எங்க இருக்க…”என அவள் எங்க இருக்கிறாள் என தெரிந்து கொண்டே தெரியாதது போல கேட்டான்…

 

ஜெயஸ்ரீ “ஒண்ணும்மில்ல நந்து,நான் நல்லா தான் இருக்கேன்…நான் இங்க ஜெய் கூட அவரோட ப்ரண்ட் வீட்டுக்கு வந்து இருக்கேன்…”

என்றாள்..அவளின் பேச்சில் இருந்தே இன்னும் அவளுக்கு விஷயம் தெரியவில்லை என அறிந்தவன்,ஏதுவும் பேசி குழப்பத்தை உண்டு பண்ண வேண்டாம்,எதுவாய் இருந்தாலும்,விஜயே பேசிக்கொள்ளட்டும் என நினைத்தவன் ,”அப்படியா…பார்றா…உங்க ஆள் கூட சேர்ந்து ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டீங்க…என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல நீ…நீ ரொம்ப மோஷம் ஸ்ரீ..போ நான் உன்கூட பேசமாட்டேன்…”என பொய்யாய் முறுக்கி கொள்ள…..

 

ஜெயஸ்ரீக்கு எங்காவது சென்று இடித்துகொள்ளலாம் போல இருந்தது…அவள் அவனுடன் ஊர் சுற்றுகிறாளாம்,எங்கே சென்று சொல்வது இந்த கொடுமையை என்ற எண்ணம் தான் அவளுக்கு முதலில் வந்தது…என்ன இங்கு அழைச்சிட்டு வந்துவிட்டு,ஏதோ இந்தியா-பாகிஸ்தான்க்கு தூது போறது போல விவாதம் நடந்திட்டு இருக்கான்…இதுல இவன் கூட நான் ஊர் சுத்தாது தான் பிரச்சனை,பக்கி ஒரு வார்த்தை பேசமாட்டன்னு இருக்கு,இவன் கூட மல்லுகட்டியே நான் செத்துடுவேன்…..இதுல இவன் கூட கல்யாணம் ஆகறதுக்குள்ளே,நான் கிழவி ஆகிடுவேன் போல…”என மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தவளை,கலைத்தது நந்துவின் “ஸ்ரீ…..ஸ்ரீ…”என்ற அழைப்பு…

 

“ஹாங்…சாரி நந்தி சொல்லு…”என சொல்ல, “ம்க்கும்…உன்னோட டூயட்டை அப்புறம் பாடிக்கோ,கொஞ்சம் நான் பேசறதை கவனி,எப்போ வீட்டுக்கு வர…”என கேட்க, “தெரியல ஸ்ரீ…இன்னும் கொஞ்ச நாள் ஆகும்ன்னு நினைக்குறேன்…”என்றவள் விஜய் அவளை நோக்கி வருவதை கண்டு “சரி நந்தி நான் அப்புறம் பேசுறேன்…”என அவனின் பதிலை எதிர்பார்க்காமல் துண்டித்துவிட்டாள்…

 

எதுவும் சொல்லாமல் அவன் வெளியேற,நவீனின் முன்னால் தன் கோவத்தை காட்ட முடியாதவள்,அமைதியாய் “வரேன்..”என்று நவீனிடம் சொல்லியவள் விஜயினை தொடர்ந்து பின்னே நடந்தாள்..அவளுக்கு கால் வலி வேற ஜிவ்வென்று வலித்தது…அவன் எதையும் கண்டுகொள்ளாமல் செல்வது வேற அவளுக்கு இன்னும் கோவத்தினை கொடுத்தது…

“என்னதான் நினைச்சிட்டு இருக்கான் இவன் மனசுல,நேரா ஹாஸ்டல் கூட்டிட்டு போ அப்படின்னா,இங்க கூட்டிட்டு வந்துட்டு,எதுக்கு வந்தோம்ன்னு சொல்லவே இல்ல,அவன் வரணும் அப்படின்னா வந்துட்டு போக வேண்டியது தான,என்னை எதுக்கு தேவையில்லாம இங்க அழைச்சிட்டு வரணும்,இவனை என்ன செய்யுறது..”என நினைக்க நினைக்க அவளுக்கு கோவம் பொத்துக்கொண்டு வந்தது…

 

கோவமாய் அவனின் அருகில் அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை,விஜய் அதனை கவனிக்கும் நிலையில் இல்லை..

அவனின் மனமெல்லாம் நவீன் பேசியதிலே இருந்தது…எப்படி தான் எல்லாவற்றையும் தீர்க்க போகிறோம் என தெரியாமல் கலங்கி போய் இருந்தது அவன் மனம் முழுதும்…

 

ஜெயஸ்ரீயிடம் நடந்தவற்றை எப்படி சொல்வது என தெரியாமல்,அவன் மனம் படும்பாடு அவனால் தாங்கிகொள்ள முடியாததாய் அவனுக்குள் மிகப்பெரிய துயரத்தை கொடுத்தது…அதன் விளைவால் அவனின் கையில் லாவாக சென்றுக்கொண்டு இருந்த வண்டி,சற்றே அவனின் கையில் இருந்து கட்டுக்குள் அடங்காமல் ஆட்டம் காட்டியது…நிலை தடுமாறியவன் சட்டென்று பிரேக் போட்டு அதனை கட்டுக்குள் கொண்டு வந்தான்…

 

சட்டென்று இப்படி நடந்திடும் என எதிர்பாராதவள்,பிடிமானத்திற்காய் கம்பியினை பிடித்து இருந்தவள்,சற்று தடுமாறி விஜயின் இடுப்பினை பிடித்தாள்…

 

பல்வேறு சிந்தனையில் தவித்துக்கொண்டு இருந்தவனுக்கு ஜெயஸ்ரீயின் அந்த ஒற்றை பிடி மிகவும் சுகமாய் இருந்தது..அவனுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் காற்றோடு கரைந்து போன்றது போல தோன்றியது..தன் நிலையை உணர்ந்து ஜெயஸ்ரீ கையினை எடுக்க,அவளின் கையின் மேல் தன் கையினை வைத்து அவள் எடுக்காவண்ணம் பிடித்துக்கொண்டான்…ஜெயஸ்ரீ கையினை உருவ, அவளை திரும்பி “வாழ்நாள் முழுக்க எனக்கு இந்த கையை பிடிக்க பாக்கியம் கிடைக்குமான்னு எனக்கு தெரியல,ஆனா இருக்குற கொஞ்சம் நேரம் ஆவது உன்னோட கையை பிடிக்கிற பாக்கியத்தை எனக்கு குடு ஜெயா..”என சொல்லியவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனையை சுமந்து இருந்தது…

 

அவனை அணைத்து “உனக்கு நான் இருக்கேன்டா…நீ எதுக்கு கஷ்டப்பட்ற..வாழ்நாள் முழுக்க என் கை உனக்குள்ள மட்டும் தான் அடங்கி இருக்கும்…”என சொல்ல துடித்த நாவினை அடக்கியவள்,ஏதும் சொல்லாமல் அவனின் கைக்குள் தன் கையினை சந்தோசமாய் அடக்கிகொண்டாள்…அவனும் அவளின் கையினை அழுத்தி பிடித்துக்கொண்டு வண்டியினை இயக்கினான்…

 

அதன் பின் அவர்கள் இப்பயணம் வாழ்வில் மறக்க முடியாத பயணமாய் இருக்க,இருவரும் சந்தோஷமான மனநிலையிலே பயணித்தனர்…நேரம் ஆக ஆக மருந்தின் வீரியத்திலும்,விஜய் பக்கத்தில் இருக்கிறான் என்ற எண்ணத்திலும்,நிம்மதிலும் ஜெயஸ்ரீ விஜயின் தோலின் மீதே சாய்ந்து உறங்கிவிட விஜயோ வானில் பறக்க ஆரம்பித்தான்…அவளை இப்படியே தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு எழுந்து அவனின் முன் பேயாட்டம் ஆடியது…

 

தனக்குள் ஏற்படும் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறினான்…அவள் புடவை கட்டி இருப்பதால்,சேலை ஏதாவது வண்டியில் மாட்டினால் என்ன ஆவது என்று அவனுக்கு பயத்தை கொடுக்க,அவளை எழுப்ப மனமும் வராமல்,அப்படியே விடவும் முடியாமல் இரண்டிற்கும் இடையில் சிக்கி தவித்தான்…கடைசியில் அவனின் உணர்வுகள் கலைந்து போய்,ஜெயஸ்ரீயின் உயிரை பற்றிய பயமே அவனை வென்றது…வண்டியினை ஓரமாய் நிறுத்தியவன்,

பின்னால் திரும்பி அவளை எழுப்ப ஆரம்பித்தான்..

 

“ஜெயா,ஜெயா..எந்திரிடி,புடவை கட்டிட்டு பயமே இல்லாம எப்படி உன்னால இவ்வளவு நிம்மதியா தூங்க முடியுது…மனுஷன் இங்க நிம்மதி இல்லாம இருக்கேன்..”என எழுப்ப, அவளோ “ச்சு…அமைதியா இருங்க..”என சொல்லிவிட்டு அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு வாகாய் அவன் மீது சாய்ந்து துயில் கொள்ள ஆரம்பித்தாள்…

 

அவள் அருகில் இருக்கும் அந்த நேரத்தை அவன் ரசித்துக்கொண்டு இருக்க,நந்துவிடம் இருந்து வந்த அழைப்பு அவனை கலைத்தது..

அதனை ஏற்றவன் “சொல்லுடா…எங்க இருக்க…”என்றான் அமைதியாய்…ஹாரன் ஒலியில் தூக்கம் கலைந்த ஜெயஸ்ரீ, அவனை விட்டு பிரிய மனம் இல்லாமல் மீண்டும் தூங்குவதை போல விஜயினை கட்டிக்கொண்டு நடிக்க ஆரம்பித்தாள்…

 

“நான் ஸ்டேஷன்ல தான் டா..என்ன ஸ்ரீகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டியா…என்ன சொன்னா..”என கேட்க, “இன்னும் இல்லடா..அவ கிட்ட எனக்கு சொல்றதுக்கு ஒரு மாதிரி இருக்கு,எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல..உண்மை மட்டும் அவளுக்கு தெரிஞ்சது அப்படின்னா அதுக்கு அப்புறம் என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலடா..”என விஜய் வருத்தமாய் சொல்ல…

 

“எனக்கு உன்னோட நிலைமை புரியுதுடா…ஆனா எப்படி இருந்தாலும் நீ சொல்லி தான் ஆகணும்,வேற வழி இல்ல…எத்தனை நாளைக்கு உண்மையை மறைச்சி வைக்க முடியும்,நீ சொல்லிடு அதுக்கு அப்புறம் ஸ்ரீ எப்படி எடுத்துக்குறாளோ அது அவளுடைய இஷ்டம்,அவ எங்க இருக்கா,ஹாஸ்டல்ல விட்டுட்டியா..”என கேட்க…

 

தூங்கி கொண்டு இருந்த ஜெயஸ்ரீயினை திரும்பி பார்த்தவன்,அவள் நல்ல உறக்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு நந்துவிடம் மீண்டும் பேசலானான்.. “இல்ல டா..என் கூட தான் இருக்கா,நல்லா தூங்கிட்டு இருக்கா..இன்னும் ஹாஸ்டல்ல விடல…நவீன் சொல்ல சொல்லி ரொம்ப கம்பல் பண்ணான்,ஆனா எனக்கு சொல்ல மனசு வரல டா,எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டணும்…”என சொல்லியவன் மனதில்,சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியும் பூண்டது அவனிள்…

 

அதன் பின் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்…திரும்பி ஜெயஸ்ரீயினை பார்க்க அவளோ இவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்..”பேசனதை எல்லாம் கேட்டு இருப்பாளோ..”என மனம் ஒரு முறை திக்கென்று அடித்துக்கொள்ள,அதனை முகத்தில் காட்டா வண்ணம் மறைத்தவன் “என்ன மேடம்,நல்ல தூக்கமா..”என கிண்டலாய் கேட்டு அவளை திசை திருப்ப முயன்றான்…

 

“உங்க ரூம்க்கு வண்டியை விடுங்க..”என சொல்ல, “ஹேய்ய்ய்..என்னடி ஆச்சு உனக்கு,என்னோட ரூம்க்கு வண்டியை விட சொல்ற,ஏன் ஹாஸ்டல் போக விருப்பம் இல்லையா,என் கூடவே இப்படியே வறியா..ஹை..ஜாலி..”என அவன் துள்ளாத குறையாக துள்ளலோடு பேச,ஜெயஸ்ரீ எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்…

 

அவளிடம் இருந்த மாற்றத்தை மனதினில் குறித்துக்கொண்டவன்,

அவள் கேட்க போகும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதத்தில் தன்னை தாயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது புரிய,அவளது கூற்றுப்படி வண்டியினை அவனது வீட்டிற்கு விட்டான்…

 

நேரத்திற்கு ஒரு முறை இருவருக்கும் பயணம் மாறிக்கொண்டே இருப்பதை உணர்ந்த விஜய்க்கு இப்பயணத்தின் முடிவில் என்ன ஆகும் என்பது அறியமுடியவில்லை…  

 

அவன் வண்டியினை வீட்டின் முன்னால் நிறுத்தியவன்,கதவினை திறந்து அவளுக்கு வழிவிட்டான்..எதுவும் பேசாமல் அமைதியாய் அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தவளின் முகம் என்றும் இல்லாத புதிதாய் இறுக்கத்தோடு காணப்பட்டது…

 

விஜய் அமைதியாய் அவளின் பக்கத்தில் அமர்ந்தான்…சிறிது நேரம் அவ்விடம் அமைதியில் கழிந்தது…அவளது கையோடு தனது கையினை கோர்த்துக்கொள்ள அவன் முயல,அவளோ கையினை உருவிக்கொண்டு சென்று ஒரு ஓரத்தில் நின்றுகொண்டாள்…

 

“ஏன் ஸ்ரீ இப்படி பண்ற….இபோ எதுக்கு இப்படி பண்ற”என அவன் வருத்தமாய் கேட்க..அவனை பார்த்து முறைத்தவள் “பண்ணினது எல்லாம் நான் தான்,எல்லா தப்பும் என் மேல தான்,உங்கள விரும்புனேன் பாருங்க அது நான் செஞ்ச முதல் தப்பு,ஏன்னு காரணம் சொல்லாமலே நீங்க என்னை விட்டு விலகி போனப்போ,உங்க பின்னாடியே நாய் மாதிரி சுத்தி வந்தேன் பாருங்க,அது என்னோட ரெண்டாவது தப்பு,நான் வேண்டாம்ன்னு என்னைய தவிக்கவிட்டுட்டு நீங்க இங்க வந்து வேலைக்கு சேர்ந்த பிறகும்,உங்களை விடாம வந்து வெட்கம்,மானம்,சூடு,சுரணை இல்லாம உங்க பின்னாடியே சுத்திட்டு இருந்தேனே அது என்னோட மூணாவது தப்பு,எல்லா தப்பும் நான் தான் செஞ்சேன்,நீங்க எந்த ஒரு தப்புமே செய்யல…அது தான் தப்பு செஞ்ச எனக்கு கொடுக்க வேண்டிய தண்டனை எல்லாம் குடுத்துட்டீங்களே…”

 

“நானே ஒழுங்கா இல்லாத போது,உங்களை போய் நான் ஏதாவது சொல்ல முடியுமா..சொல்லுங்க..”என ஏளனமாய் அவனை பார்த்து கேட்க,அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…

 

அவள் சொல்வதில் எதுவும் தவறு இருப்பதை போல அவனுக்கு தெரியவில்லை..எல்லா பிரச்சனையும் தன் பக்கம் இருக்க,அதனை அவளுக்கு எடுத்துரைக்காமல் விலகி வந்து அவளுக்கு எவ்வளவு பெரிய ஆறாத வலியையும்,வேதனையையும் தந்து இருக்கிறோம் என அவனுக்கு நன்றாகவே புரிந்தது….தான் செய்த தவறு அவனுக்கு இப்போது நன்கு விளங்கியது…

 

கோவத்தில் தான் எடுத்த முடிவு எவ்வளவு பெரிய தப்பான முடிவு என்பது அவனுக்கு நவீனிடம் பேசிய பிறகு தான் புரிந்தது…நவீன் மட்டும் மருத்துவனையில் இருக்கும் போது தன்னிடம் போன் செய்து சொல்லாமல் இருந்து இருந்தால்,ஜெயஸ்ரீயுடன் தான் சகஜமாய் பேசி இருப்போமா என்பது அவனுக்கு சந்தேகமே…அவன் மருத்துவனையில் இருக்கும்போது நவீன் அவனிடம் பேசியதை நினைத்து பார்த்தான்…

 

ஜெயஸ்ரீ உள்ளே பரிசோதனையில் இருக்க,வெளியே அவளுக்காக காத்திருந்தவன் அமைதியாய் மருத்துவமனையினை நோட்டமிட ஆரம்பித்தான்…அப்போது புது எண்ணில் இருந்து அழைப்பு வர,அதை ஏற்றவன் “யார் ..”என கேட்க…அப்பக்கம் இருந்து “நவீன்..”என்று பதில் வந்தது…

 

விஜய் “எந்த நவீன்…”

 

நவீன் “வரு நான் தான் நவீன்…உன்கூட ஒண்ணா காலேஜ்ல படிச்சனே,CSE டிபார்ட்மெண்ட்,மறந்துட்டியா..”

 

விஜய் “ஹே..நவீன் எப்படி இருக்க,ரொம்ப நாள் ஆச்சு பேசி,ஆமா நீ ஏதோ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டியாமே ,எப்படி போகுது

உன்னோட காதல்-கல்யாண வாழ்க்கை..”என சின்ன சிரிப்புடன் கேட்க…

 

“நீங்க சந்தோசமா இல்லாத போது எங்களோட வாழ்க்கை மட்டும் எப்படி இருக்கும் வரு…”என அவன் போனில் குழுங்கி குழுங்கி அழ,விஜய்க்கு ஒன்றுமே விளங்கவில்லை…

 

“டேய் என்னடா என்ன ஆச்சு..என்ன என்னவோ பேசுற,எனக்கு ஒண்ணுமே புரியல..நாங்க சந்தோசமா இல்லாததுக்கும்,நீ இப்போ கஷ்டப்பட்றதுக்கும் என்ன சம்மதம்..”என கேட்டுக்கொண்டே சென்றவனுக்கு கடைசியில் “நாங்க சந்தோசமா இல்ல அப்படின்னா,யாரு…நானும் ஜெயாவும்..அப்போ எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற இந்த விரிசலுக்கு நவீனும் ஒரு காரணமா எப்படி…”என யோசித்தவனுக்கு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் மண்டை வெடிக்கும் போல இருந்தது…

 

விஜய் “நவீன் நீ எனக்கு சொல்றது ஒண்ணும் முழுசா புரியல..”என சொல்ல…

 

நவீன் “ஹ்ம்ம் என்னால புரிஞ்சிக்க முடியுது விஜய்…நானும் பெங்களூர்ல தான் இருக்கேன்..நீ நேர்ல வா..நான் எல்லாத்தையும் சொல்றேன்..”என சொல்லி அவனின் வீட்டு விலாசத்தை சொல்ல  “இல்ல நவீன் ,என் கூட ஜெயஸ்ரீ இருக்கா,நாம்ப இன்னொரு நாள் பேசலாம்..”என சொல்ல,

 

”இல்ல வரு..நீ கண்டிப்பா வந்தே ஆகணும்..எங்களுக்கு இருக்குற குற்றயுணர்வை நீ தான் போக்கணும்…உன்னோட வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு…ப்ளீஸ் வரு வா..ரொம்ப நாள் கடத்த வேண்டாம்..

எல்லாத்துக்கும் ஒரு முடிவு எடு…”என நவீன் கெஞ்ச,மறுக்க முடியாத விஜயும் ஜெயஸ்ரீயினை அழைத்துக்கொண்டு அங்கு சென்றான்…

 

பால்கனியில் நின்று இருவரும் பேச,நவீன் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்ட விஜய்க்கு ரத்த அழுத்தம் எகிறிக்கொண்டே சென்றது….விஜய் கண்டபடி திட்ட எல்லாவற்றையும் எதிர்த்து பேசாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டான் நவீன்…விஜய்க்கும் புரியத்தான் செய்தது தவறு நவீன் மீது இல்லை என்று..தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,நவீனிடம் எதுவும் சொல்லாமல் வெளியேறினான்…

 

அந்நினைவுகளில் இருந்தவனை “நான் காட்டு கத்து கத்திட்டு இருக்கேன்,நீங்க என்னவோ புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க..”என்று அவனை இடித்தாள்…

 

அவள் இடிக்கவும்,அவளை நோக்கியவன் “ஒரு நிமிஷம் இரு,உனக்கு தெரிய வேண்டியது எல்லாம் இன்னைக்கே தெரியட்டும்,ரொம்ப நாள் இதை மறைச்சி வச்சு,ரெண்டு பேருக்குமே கஷ்டம்..எல்லாத்துக்கும் இன்னைக்கே முடிவு கிடைக்கட்டும்..”என சொன்னவன்,அவளின் தங்கை ஜீவாவிற்கு அழைத்தான்…

 

ஜெயஸ்ரீ நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள்…ஜீவா வரு அழைத்ததும்,சந்தோசமாய் எடுத்தவள் “மாமா சொல்லுங்க..எப்படி இருக்கீங்க..”என்றாள்…“நான் நல்லா இருக்கேன் ஜீவா..நீ எப்படி இருக்க..படிப்பு எல்லாம் எப்படி போகுது…”என கேட்டவன் ஜெயஸ்ரீயும் தங்கள் பேச்சு வார்த்தையை கேட்கட்டும் என்று ஸ்பீகரில் போட்டான்…

 

“நான் நல்லா இருக்கேன் மாமா,எனக்கு படிப்பு நல்லா போகுது…சாரி மாமா,நான் அப்படி பேசி இருக்க கூடாது,ஏதோ அக்கா மேல இருந்த பாசத்துலையும்,சுபா சொன்னதையும் கேட்டு லூசு தனமா நடந்துகிட்டேன்…என்னை மன்னிச்சிடுங்க மாமா..அக்கா உங்க மேல உயிரே வச்சு இருக்கா,உங்க நிலைமையில இருந்த யாரா இருந்தாலும் இப்படி தான் நடந்து இருப்பாங்க…ஆனா அதை எல்லாம் யோசிக்காம நான் அவங்க சொன்னதை வச்சி உங்கள ரொம்ப கேவலமா திட்டிட்டேன்…”என பேசிக்கொண்டே சென்றவள்,அன்று நடந்ததையும் சொல்ல ஆரம்பித்தாள்….

 

அவள் சொல்ல சொல்ல விஜய் அன்று நடந்த அந்த கொடுமையான தினத்தை கண் முன்னே கொண்டு வந்தான்…அன்று நடந்தது இது தான்…

 

நடந்தவற்றை வைத்து ஜீவாவிற்கு நன்கு தூபம் ஏற்றிய சுபா நைசாக அங்கு இருந்து கிளம்பினாள்…ஜெயஸ்ரீயினை காண அவன் அங்கும் இங்கும் அழைந்துக்கொண்டு இருந்த நேரம் ஜீவா அவன் முன்னால் சென்று நின்றாள் கோவமாக…

 

ஜீவாவினை கண்டதும்,சந்தோசமானவன் “ஹாய் ஜீவா..என்ன இந்த பக்கம்..”என்றான்..”உங்களை பார்க்க தான் வந்தேன்,”என்றாள் கடிந்த பற்களுக்கிடையே…அவள் வார்த்தையில் இருந்த கோவத்தை கண்டவன் குழப்பமாய் அவளை பார்த்தான்..

 

“என்ன ஜீவா..ஏதோ மாதிரி பேசுற..என்ன விஷயம்..”என அவளை பார்த்து கேட்க…அவனை ஏளனமாய் பார்த்தவள் “உங்களுக்குள்ள இப்படி ஒரு கேவலமான புத்தி இருக்கும் அபப்டின்னு நான் என்னைக்குமே நினைச்சி பார்த்தது கிடையாது..என் அக்காவை நீங்க லவ் பண்றீங்களாமே..அப்படியா..”என கேட்க…

 

விஜயின் தலை குழப்பத்துடனே “ஆமாம்..”என்பது போல ஆட்டியது…

 

“ஹா ஹா ஹா..”வாய்விட்டு சிரித்தவள் “எப்படி எப்படி உங்களுக்கு என்னோட அக்கா கேட்க்குதா,தங்க சிலை போல இருக்குற அவ எங்க….தங்கத்துக்குகூட சேர நினைக்குற தகரம் நீங்க எங்க…எல்லா பொண்ணுங்க போல என்னோட அக்காவை நினைச்சிடாதீங்க,நீங்க விளையாற்றதுக்கு என் அக்கா வாழ்க்கை தான் கிடைச்சதா,ஏற்கனவே ஒரு பொண்ணோட வாழ்க்கையில நீங்க விளையாடினது போதும்…

காதல் அப்படின்ற வார்த்தையை சொல்லி என் அக்காவோட வாழ்க்கையில விளையாடுனீங்க நான் மனிஷாவே இருக்க மாட்டேன்…”என அவள் திட்டிக்கொண்டே செல்ல,அவ்வழியே சென்ற ஒரு சிலர் இவனை பார்த்துக்கொண்டு சென்றனர்…ஒரு சிலர் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க,ஒரு சிறு பெண்ணிடம் இருந்து பொறுக்கி போல மற்றவர்கள் முன் திட்டு வாங்கிக்கொண்டு இருப்பது அவனுக்கு மிகவும் அவமானமாய் இருந்தது….

 

ஜீவாவோ அவள் அக்காவின் மேல் உள்ள பாசத்தில்,சுபா சொல்லியதை எல்லாம் சிந்திக்காமல் அப்படியே பேசிக்கொண்டு இருந்தாள்…”இனிமேல் நீங்க என் அக்காவை காதலிக்கிறேன்னு பினாத்திட்டு வந்தீங்க,அப்புறம் நீங்க ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்ததை சொல்லிடுவேன்…இப்போ மட்டும் ஏன் சொல்லாம இருக்கேன்னு பாக்குறீங்களா,உங்கள மாதிரி ஒரு பொறுக்கியை அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி அவங்களோட வாழ்க்கை பாழாககூடாது பாருங்க அந்த ஒரு எண்ணத்துல தான் உங்களை சும்மா விட்றேன்…”

 

“என் அக்காகிட்ட மட்டும் உங்களை பத்தியும்,நீங்க நடந்துகிட்ட முறை பத்தியும் சொன்னேன்னு வச்சிகோங்க,அவ நீங்க இருக்குற பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டா…அவளா உங்களை விட்டு விலகி போறதுக்கு பதிலா,நீங்களே விலகி போயிட்டீங்க அப்படின்னா இருக்குற கொஞ்ச நஞ்ச மானமும் உங்களுக்கு மிச்சம் ஆகும்…ஒரு சின்ன பொண்ணு நான் உங்களுக்கு இதுக்கு மேல சொல்ல வேண்டியது இல்ல,அதுவும் இல்லாம நானே இவ்வளவு கேவலமா திட்றேன் அப்படின்னா,

உங்களை காதலிச்ச என் அக்காக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது,அவ மனசு என்ன பாடுபடும்,அந்த பொண்ணோட பேரு வெளிய வந்திட கூடாது அப்படின்னு தான் நான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்…இனிமேல் என் அக்கா வாழ்க்கையில நீங்க வரகூடாது…”என கோவத்தில் வார்த்தைகளை விட்டவள்,விஜய் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க ஒரு நிமிடம் கூட அனுமதிக்கவில்லை…”

 

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்த வருவிற்கு மிகவும் அவமானமாய் இருந்தது..எப்படி எல்லாம் பேசுகிறாள் இவள்…நான் என்ன அவ்வளவு கேவலமானவனா,என்னால் அவளின் அக்காவின் வாழ்க்கை அழிந்துவிடும் என்பது போல அல்லவா பேசுகிறாள்..

அதுவும் இல்லாமல் என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிந்து போய்விட்டது போல அவள் பேசியது அவனின் தன்மானத்திற்கு இழுக்காய் நினைத்தான்…

 

“இனிமேல் நான் ஒரு பொண்ணு பின்னாடி சுத்த மாட்டேன்,ரொம்ப ஓவரா பேசிட்ட நீ,இதுக்கு மேல ஏதாவது ஒரு வார்த்தை பேசுன,நான் மனுஷனா இருக்க மாட்டேன்,என்னடி என்னவோ நான் ஒரு பொறுக்கி போல பேசிட்டே இருக்க,இனிமேல் உன் அக்கா இருக்குற பக்கம் நான் திரும்பிகூட பார்க்க மாட்டேன்,அதுக்காக நீ பேசினது எல்லாம் உண்மைன்னு நினைச்சுக்காத, தப்பே பண்ணாத போது அதை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்ல,என்னால உன் அக்காவோட வாழ்க்கை அழிஞ்சி போயிடும் அப்படின்னு நீ பீல் பண்ணா,உனக்கு இனிமேல் அந்த கவலை தேவையில்ல…இனிமேல் நான் அவகூட பேசமாட்டேன்…ஆனா என்னோட காதல் எப்பவும் பொய் ஆகாது..நான் உன் அக்கா மேல வச்சு இருக்குற காதல் உண்மை…”என வலி நிறைந்த குரலோடு சொல்லியவன்,கலங்கிய கண்களோடு அங்கு இருந்து நகன்றான்…அவன் வலி நிறைந்த குரலோடு பேசியது எல்லாம் கோவத்தில் இருந்த ஜீவாவிற்கு நாடகம் போல தோன்றியது…

 

இவர்களுக்கு நடந்த பேச்சு வார்த்தையை சுவரின் மறைவில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த சுபாவிற்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது…நெடுநாள் கழித்து தான் நினைத்தது,தன் கண் முன்னே நடந்தது அவளுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்தது…அவள் செய்வது எல்லாம் தவறு என்று அவளுக்கு எப்போதும் தோன்றவில்லை…

 

ஜீவாவும் எதுவும் சொல்லாமல் “நீ போனா போ..”என்ற ரீதியில் அதனை டீலில் விட்டவள்,சுபா சொன்னப்படி நடந்தவட்டறை பற்றி சிறிதும் யாரிடமும் மூச்சு விடவில்லை…எப்போதும் போல சாதாரணமாகவே நடந்துக்கொண்டாள்…

 

இவள் செய்தததின் விளைவாய் வரு,ஜெயஸ்ரீயிடம் பேசுவதை அறவே தவித்தான்..ஜெயஸ்ரீ அழைக்கும் எந்த ஒரு அழைப்பிற்கும் அவனிடம் இருந்து பதிலில்லை…

 

தினமும் காலையிலும்,மாலையிலும் அவனுக்கு அழைத்து அழைத்து அவளின் கை ரேகை தேய்ந்தது தான் மிச்சம்..கல்லூரியிலும் அவனை பார்க்க முடியாமல் தவித்து போனாள்…சுஜாவும் அவளின் மாமாவிடம் பேசுவதில் நேரத்தை கழிக்க,அவளுக்கும் ஜெயஸ்ரீ படும் அவஸ்தை தெரியாமல் போய்விட்டது..

 

ஜெயஸ்ரீ நந்துவிடமும் கேட்டு பார்க்கலாம் என நினைத்தால்,அவனோ டெல்லிக்கு போலீஸ் பயிற்சிக்காக சென்றுவிட அவனிடமும் கேட்டு தெரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள்…

 

நாளுக்கு நாள் அவளுக்குள் அவனிடம் பேச வேண்டும் என்ற ஆசையும்,ஏக்கமும் போட்டி போட்டுக்கொண்டு அவளை பாடாய் படுத்த,அதனை தடுக்க வழி தெரியாமல் விழிக்க ஆரம்பித்தாள்…

 

இவள் இப்படி தனக்குள் தவித்துக்கொண்டு இருக்க,வருவோ யாரிடமும் பேசாமல் எந்நேரமும் தனிமையை நாடினான்…மறக்க எண்ணி அவன் தனிமை நாட,ஆனால் அவனால் ஒரு நிமிடம் கூட அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை…தன்னால் அவளை மறக்க முடியுமா என நினைத்தவனின் முன் ஜீவாவின் ஒவ்வொரு பேச்சும் அவனை இன்னும் இறுக்கமாய் மாற்றியது…

 

அவனின் ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருக்க,அவனின் கல்லூரிக்கு பெரிய பெரிய நிறுவனம் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தியது…அதில் கலந்து கொண்டவனுக்கு,அவனின் திறமையை கண்டு நல்ல சம்பளத்தில் வேலையை தர அத்தை ஏற்று கொண்டவன்,பெங்களூர் பிராஞ்சில் கேட்டு வேலையை மாற்றிக்கொண்டான்…

 

நண்பர்களிடமும் அவன் சிறிது சிறிதாக விலகி,தன்னை தனிமைபடுத்திகொள்ள முயன்றான்…தாமஸ் மற்றும் சுரேஷ்,சஞ்சீவ் என்ன என்று பல முறை கேட்டும் அவனிடம் எந்த ஒரு பதிலும் இல்லை…

 

இதற்கிடையில் சஞ்சீவ் ஜெயஸ்ரீயினை பார்த்து பேச முயல,அவளோ இவனை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்றாள்…

 

வரு ப்ராஜெக்ட் முடித்த இரண்டாவது நாள்,அவனின் நண்பர்களிடம் கூட சொல்லாமல் வேலையில் சேர பெங்களூருக்கு சென்றுவிட்டான்..அவனை தொடர்பு கொள்ள முயன்ற ஸ்ரீக்கும் சரி,அவனின் நண்பர்களுக்கும் சரி சுவிட்ச் ஆப் என்ற பதிலே கிட்டியது…

 

அவர்களால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நண்பர்களுக்கு அவன் வேலை செய்யும் இடம் தெரிந்தாலும்,

வருவினை அவர்கள் எதுவும் கேட்டு கொள்ளவில்லை…சொல்ல வேண்டிய விஷயம் என்றால் சொல்லி இருப்பான் என எண்ணியவர்கள் அவன் தொடர்பு கொள்வான் என்ற நம்பிக்கையில் மேற்கொண்டு எந்த ஒரு செயலும் செய்யவில்லை…  

 

ஜெயஸ்ரீயின் கல்லூரி வாழ்க்கை வருவின் நினைவுகளிலே தொடர,தினமும் ஏனோ தானோ என்று கல்லூரிக்கு சென்று வந்தாள்.. நாட்கள் வாரங்களாகி,மாதங்களாகி,வருடங்களாகின…அப்போது ஜெயஸ்ரீ 4 வது ஆண்டு படித்துக்கொண்டு இருந்தாள்…ஓர் அளவிற்கு அவனின் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தாலும் அவளால் முழுதும் அவனை  மறக்க முடியவில்லை…

 

சுபா காதலிப்பது யாருக்கும் தெரியாததாய் இருந்தது..தீடிரென்று ஒரு நாள் “என்னோட வாழ்க்கையை எனக்கு பிடித்தவருடன் வாழ போகிறேன்…”என சுபா கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி ஹாஸ்டல்விட்டு சென்றுவிட்டாள்…கலங்கி போய் இருந்த ஜெயஸ்ரீக்கு இச்செய்தி பெரிய அதிர்ச்சியை தர அவளால் எதிலும் கவனம் செல்ல முடியாமல் தினறினாள்..சுஜா தான் அவளுக்கு பக்க பலமாய் இருந்தாள்…

 

நந்துவிற்கு செய்தி தெரிந்து,அவனும் வருவின் கம்பனிக்கு அழைத்து அவனிடம் பேச முயற்சி செய்ய,அவர்களோ அவனின் எண்ணை கொடுக்க முன் வரவில்லை..இவனாலும் அவனை சென்று காண முடியவில்லை…

 

ஜெயஸ்ரீயின் வாழ்க்கை இப்படியே கிணற்றில் போட்ட கல்லு போல எந்த ஒரு விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது…

அவள் ஒரு கான்பிரன்ஸிற்கு போகும் வரை…     

 

உன்னை பார்க்க எந்தன்

விழி துடிக்க

உன்னை எண்ணி எந்தன்

நெஞ்சம் துடித்தது….

விம்மல்கள் எல்லாம்

விஸ்வரூபம் எடுக்க

உள்ளமும் விம்மி தவித்தது…

உன்னை எந்நேரமும் எண்ணி…

உன் பார்வை எழுதும் கவிதையை

படித்துக்கொண்டே இருக்க விளைகிறேன்…

 

காதல் கவிதையை உன்னிடம்

பேசிய என் மை விழிகள்…

நீ பிரிந்த நொடி முதல்

கண்ணீர் கவிதைகளையே

சிந்துகின்றது…

மழைநீரும் எந்தன் கண்ணீரோடு

சங்கமிக்க..

மண்ணுக்குள் புதைந்து கொண்டது

இரண்டும் கடைசியில்….

 

என் கை விரல்கள்

உன் கைவிரலோடு பிணைய

ஊற்கின்றது எந்நொடியும்…

உறைந்து போன எந்தன் உள்ளம்

உன்னாலே உயிர்த்தெழும்

என்றென்றும்…

 

பயணப்படுகிறேன் உன்னை காண

எந்தன் கண்ணுக்கு விருந்தாய்

அமைந்திடுவாய் என ஆசைகொண்டு…

இருந்தும் முட்டாள் மனதிற்கு

தெரியவில்லை நீ என்னை விட்டு

விலகி சென்று வெகு நாட்கள்

ஆகிறது என்று…

 

விலகல் தொடரும்…

 

Advertisement