Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -22

 

தன் முகத்தில் ஏற்பட்டு இருந்த வெட்க பூக்களை ஓர் அளவிற்கு சமன் படுத்தியவள் கதவினை திறக்க சென்றவர் இன்னும் என்ன செய்கிறார் என நினைத்த மிருணா, “மிபு….என்ன பண்றீங்க… யாரு…”என கேட்டுக்கொண்டே வந்தவளும் அதிர்ந்து போய் “ஸ்ரீ….”என ஆர்பாட்டமாய் அழைக்க…..மிருணாவின் அழைப்பில் நினைவிற்கு வந்த பிரபு வந்து இருந்த ஜெயஸ்ரீயினை ஏற இறங்க ஒரு முறை பார்த்தவன்,அதோடு நில்லாமல் அவளை ஒரு முறை சுற்றியும் வந்தான்…

 

அவனின் செயலில் சிணுங்கிய ஜெயஸ்ரீ “அண்ணி பாருங்க இவரை…”என சொல்ல,அவளோ இன்னும் ஜெயஸ்ரீயை வேற்று கிரகவாசி போல பார்த்து வைத்தாள்…

 

என்ன அண்ணி, என்னைய என்னவோ வேற்று கிரகவாசியை பார்க்குறது போல பாக்குறீங்க,…”என ஜெயஸ்ரீ கேட்க,மிருணாவோ ஜெயஸ்ரீயினை இன்னும் அப்படியே தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்….பின்னே  நல்ல நாளிலே  புடவை கட்டு என்றால் அலறி அடித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு  ஒடுபவள்,எப்போதும் பாவாடை ,ஷார்ட்ஸ் என்று போட்டுக்கொண்டு சுற்றிகொண்டு இருப்பவள்,இன்று அதிசயமாய் புடவை கட்டிக்கொண்டு வந்து இருந்தாள் அவளும் தான் எப்படி  தாங்கி கொள்வாள்…

போங்க எல்லாம் என்னைய ஏதோ பேயை பார்க்குற மாதிரி பார்த்துட்டு  இருக்கீங்க,நான் என்ன அவ்வளவு கொடுமையாவா இருக்கேன்,சரி நான் போறேன்..”என பொய்யாய் முறுக்கிக்கொண்டு அவள் போக முயல எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்று இருந்த பிரபு ஜெயஸ்ரீயினை சமாதானபடுத்த முயன்றான்..

ஹே மிரு என்னது இது, வந்தவளை வான்னு சொல்லாம, இப்படி பேயை கண்ட மாதிரி  நின்னுட்டு இருக்க..”என ஏதோ ஒரு வேகத்தில் சொன்னவன் கடைசியில் தான் சொன்னதின் அர்த்தம் புரிந்து நாக்கை கடித்துக்கொண்டு ஜெயஸ்ரீயினை பார்க்க அவளோ முடிந்த மட்டும் பிரபுவினை முறைத்துக்கொண்டு இருந்தாள்…பின் கோவமாய் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டவள் டிவி பார்க்க ஆரம்பித்தாள்..

இன்னும் அப்படியே நின்றுகொண்டு இருந்த மிருணாவினை ஒரு இடி இடித்தவன் அவளை ஜெயஸ்ரீயின் அருகில் அழைத்து சென்றான்….
அமைதியாய் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்த ஜெயஸ்ரீயின் அருகில் அமர்ந்து அவள் முகத்தினை தன்னை நோக்கி திருப்பினாள் மிருணா…

 

தன் முகத்தை திருப்பிய மிருணாவின் கையினை சட்டென்று தட்டிவிட்ட ஜெயஸ்ரீ  எழுந்து உள்ளே சமையலறைக்குள் சென்று எதையோ உருட்டினாள்.மிருணா பிரபுவினை  பாவமாய் பார்க்க அவனோ எனக்கு எதுவும் தெரியாது, நீயாச்சு அவளாச்சு…” என்று உதட்டை பிதுக்கி சொல்லியவன்,சாவகாசமாய் சென்று சோபாவில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தான்…

 

அவன் செய்கையில் கோவம் கொண்ட மிருணா,அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனின் மேல் வீசிவிட்டு சமையலைறைக்குள் சென்றுவிட்டாள்....அவள்  வீசியதை எடுத்து தனது மடியின்மேல் வைத்துக்கொண்டவன் மீண்டும் டிவி பார்ப்பதில் மூழ்கி போனான்…

உள்ளே சமையலறைக்குள் சென்ற ஜெயஸ்ரீ மிருணா என்ன சமைத்து வைத்து இருக்கிறாள்  என பார்க்க,எல்லா காய்களும் அரிந்து வைக்கப்பட்டு இருந்ததே தவிர ஒன்றும்  செய்து வைக்கப்படவில்லை.

உருளைக்கிழங்கு பொரியல் மட்டும் செய்து  வைத்திருந்தாள் மிருணா…

அதனை சிறிது எடுத்து தனது வாயில் போட்டு சுவைத்தவளின் மனம் மிருணாவிற்கு சலாம் போட்டுக்கொண்டது..அனுபவித்து சுவைத்துக்கொண்டு இருந்த அவளின் பின் வந்து நின்ற மிருணா  
“என்ன ஸ்ரீ நான் சமைச்சது எப்படி இருக்கு..” என ஆர்வமாய் கேட்க, நிதானமாய் அவளின் பக்கம் திரும்பிய ஜெயஸ்ரீயின் முகத்தை கண்ட மிருணாவிற்கு வயிற்றில் புளியினை கரைத்தது…ஜெயஸ்ரீயின் முகம் போன போக்கை கண்டே அது நன்றாக இல்லை போல என மனம் சோர்ந்து போனது..

அது மட்டும் நன்றாக இல்லாமல் போனால் என்ன செய்வது என கையை பிசைந்துக்கொண்டு ஜெயஸ்ரீயினை பார்த்துக்கொண்டு இருந்தாள்…

 

மிருணாவின் அவஸ்தையை பார்த்து உள்ளுக்குள் ரசித்தவள்,”என்ன அண்ணி இவ்வளவு உப்பு போட்டு வச்சு இருக்கீங்க..அண்ணா இதை தான் டெய்லி சாப்ட்றாரா,அய்யோ பாவம்..”என சொல்லி பிரபுவிற்காக பரிதாபப்படுவது போல நடித்தவள்,அங்கு அருகில் இருந்த வாஸ் பேசனில் வாயை கொப்பளிக்க துவங்கினாள்…

 

“ஷ்ஸ்…ஷப்பா ரொம்ப கஷ்டம்…”என சொல்லிக்கொண்டே திரும்பியவள் கண்ணில் கண்ணீர் நிறைந்து காணப்பட்ட மிருணாவினை பார்த்து பதறியவள் “அய்யோ…அண்ணி என்னது இது…எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கீங்க..” என அவளை அணைத்துக்கொண்டு மிருணாவினை வெளியே அழைத்து வந்து பிரபுவின் பக்கம் அமர வைத்தாள்..

 

டிவி பார்த்துக்கொண்டு இருந்த பிரபு, மிருணாவினையும் ஜெயஸ்ரீயினையும் பார்க்க, மிருணா கண்ணீரை ஜெயஸ்ரீ துடைத்துக்கொண்டு இருப்பதை கண்டவன், “ஹே மிரு,என்ன ஆச்சு,எதுக்கு இப்போ அழுவுற,ஸ்ரீ என்ன ஆச்சு..”என பதட்டமாய் கேட்க…ஜெயஸ்ரீயோ மிருணாவினை முறைத்து பார்த்தாள்…

 

பிரபு பதறவும் கண்ணீரை துடைத்தவள் “ஒண்ணும் இல்ல மிபு..”என அவனை சமாதானபடுத்தினாள்..அவனோ அவள் சொல்வதை நம்பாமல் “ஸ்ரீ என்ன ஆச்சு சொல்லு,இப்போ எதுக்கு இவ அழுறா…”என அழுத்தமாய் கேட்க,ஜெயஸ்ரீயோ ஆந்தை முழி முழித்துக்கொண்டு இருந்தாள்…

 

ஜெயஸ்ரீ முழிப்பதை கண்டவன் கேள்வியாய் மிருணாவினை பார்க்க அவளோ ஜெயஸ்ரீயினை பார்த்துக்கொண்டு இருந்தாள்…இருவரையும் மாறி மாறி பார்த்தவன் “இப்போ சொல்ல போறீங்களா இல்லையா..??,ஒழுங்கா சொல்லுங்க..”என சற்று குரலை உயர்த்தி அவன் கேட்க…

 

“அண்ணா இப்போ எதுக்கு உங்களோட எனர்ஜியை இப்படி கத்தி வேஸ்ட் பண்றீங்க..இப்போ என்ன எதுக்கு உங்க அருமை பொண்டாட்டி அழுவுறாங்க அப்படின்னு தெரியனும் அவ்ளோ தான,ஷப்பா ஒரு சின்ன விஷயத்துக்கு உங்களோட பொண்டாட்டி மூக்கை உறிஞ்சிட்டு இருக்காங்க அப்படின்னா,நீங்க ஓவரா கோவப்பட்டுட்டு இருக்கீங்க..இது எல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர்…”என சொன்னவள்,

 

“அம்மா அண்ணி தெய்வமே,தெரியாம நீங்க செஞ்ச பொரியலை நல்லா இல்ல அப்படின்னு சொன்னது தப்பு தான்,மகா தப்பு தான் மன்னிச்சிக்கோங்க..தயவுசெயஞ்சு சிரிங்க,இல்ல உங்களோட ஆசை புருஷன் என்னை அடிச்சே கொன்னுருவாரு…”என கெஞ்சலோடு சொல்ல,அவளின் பாவனைகளை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பிரபு வாய்விட்டு சிரிக்க,மிருணாவோ ஜெயஸ்ரீயின் மீது செல்லமாய் இரண்டு அடி வைத்தாள்…

 

மாலை 5 மணிக்கு தான் பிரபுவின் அப்பா அம்மா வருவதாய் இருக்க,காலை உணவை உண்டு முடித்தவர்கள் சிறிது நேரம் பேசி அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர்…

 

அதன் பின் பிரபு உறங்க சென்றுவிட பெண்கள் இருவரும் மதிய வேலை சாப்பாடு செய்வதில் ஆயத்தமாயினர்….சாப்பிட்டு முடித்து இருவரும் சிறிது நேரம் உறங்கி எழ,பிரபுவோ மதியம் சாப்பிட எழுப்பிய போது கூட எழாமல் அப்படியே தூங்கிக்கொண்டு இருந்தான்…

 

தூங்கி எழுந்து வந்த பிரபு சிறிது நேரம் இருவரிடமும் பேசிக்கொண்டு இருந்தான்….பிரபுவின் அலைபேசி அலற அதை எடுத்தவன் “அப்படியா..ஹ்ம்ம் சரி மா….ஹ்ம்ம்…இல்ல இல்ல,நானே வந்துடறேன்…ஒண்ணும் பிரச்சனை இல்ல மா,நீங்க ஒண்ணும் கஷ்டப்பட வேண்டாம்….ஹ்ம்ம் சரி மா..”என்றவன் அழைப்பை துண்டித்தான்…

 

கேள்வியாய் பார்த்துக்கொண்டு இருந்த மிருணாவினை பார்த்தவன் “அம்மாவும் அப்பாவும் கிருஷ்ணகிரி வந்துட்டாங்களாம்…இன்னும் 30 நிமிஷத்துக்குள்ள பெங்களூர் வந்துடுவாங்க,நான் ஸ்டேஷன்

போய் அவங்களை அழைச்சிட்டு வந்துடறேன்,சரி நான் குளிச்சிட்டு ரெடி ஆகிட்டு வரேன்..”என சொன்னவன் குளிக்க சென்றான்..அவன் உள்ளே குளிக்க செல்ல,மிருணாவும் ஜெயஸ்ரீயும் சமைக்க சமையலறைக்குள் சென்றனர்..

 

.

ஜெயஸ்ரீ “என்ன அண்ணி,என்ன சமைச்சி என்னோட அப்பா அம்மா ரெண்டு பேரையும் கவுக்க போறீங்க..”என கேட்டுக்கொண்டே அங்கு இருந்த கிட்சன் மேடையில் ஏறி அமர்ந்தவள் அருகில் இருந்த கேரட்டை எடுத்து கடிக்க ஆரம்பித்தாள்..

 


“நீ வேற ஏன் ஸ்ரீ..எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல,கை கால் எல்லாம் உதறுது,இவர் வேற அப்பா இப்படி,அம்மா அப்படி,இப்ப நடந்துக்கோ,அப்படி நடந்துக்கோ,நல்லா சமைன்னு நைட் புல்லா ஒரே அட்வைஸ் மழை தான்,அப்போ இருந்து இப்போ வரையும் எனக்கு பயம் போகவே இல்ல,அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்ன்னு ஒரே பயம்…”என சொல்ல,அவளை பார்த்து சிரித்த ஸ்ரீ,”அய்யோ அண்ணி சின்ன புள்ளைங்க எக்ஸாம் எழுத போனா பயப்பட்ற மாதிரி
இப்படி பயப்படறீங்க,அண்ணி நான் இருக்கும் போது எதுக்கு இப்படி பயப்பட்றீங்க…”என தைரியம் சொல்ல,மிருணா அதிர்ந்து போய் ஜெயஸ்ரீயினை பார்த்தாள்…

 

மிருணாவின் அதிர்ந்த முகத்தினை கண்டவள் “அய்யோ அண்ணி,என்னைய பத்தி எனக்கு தெரியாதா,நான் கண்டிப்பா சமைக்க மாட்டேன்..உங்களுக்கு தேவையான காய்கறி எல்லாம் கட் பண்ணி தரேன்..நீங்க சமைங்க..கூட மாட நான் ஹெல்ப் பண்றேன்…”என அவளுக்கு தெம்பூட்டினாள்…

 

ஜெயஸ்ரீ சொன்னதை கேட்டு சரியென தலை அசைத்தவள் “என்ன ஸ்ரீ இன்னைக்கு அதிசயமா புடவை எல்லாம் கட்டிட்டு வந்து இருக்க,என்ன விசேஷம்..”என காய்கறிகளை கழுவிக்கொண்டே மிருணா கேட்க…

 

மிருணாவினை பார்த்த ஜெயஸ்ரீ அவசரமாய் “அது ஒண்ணும் இல்ல அண்ணி,சும்மா கட்டி பார்க்கலாம்ன்னு ஆசையா இருந்தது அதான் கட்டினேன்..”என சொன்னவள்,பின் தண்ணீர் குடிப்பது போல குளிர்சாதன பெட்டியின் அருகில் சென்று நின்று கொண்டாள்…

 

ஜெயஸ்ரீ சொன்னதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாத மிருணாவும் மேற்க்கொண்டு எதுவும் கேட்கவில்லை…பின் இருவரும் பேசிக்கொண்டே சமையல் வேலையில் ஈடுபட்டனர்…

 

பிரபு குளித்துவிட்டு,தயாராகி வந்தவன் “சரி மிரு நான் போய் அப்பா,அம்மாவை அழைச்சிட்டு வந்துடறேன்…சரி ஸ்ரீ நான் வரேன் மா…”என்று மிருணாவிடமும் ஜெயஸ்ரீயிடமும் சொல்லிக்கொண்டு அவனின் அப்பா அம்மாவினை அழைத்து வர ரயில்வே ஸ்டேஷன்க்கு சென்றான்…

 

ஜெயஸ்ரீ காய்கறிகளை நறுக்கி குடுக்க,மிருணா சமைக்க ஆரம்பித்தாள்…சிறு சிறு உதவிகளை செய்து கொண்டு மிருணாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள் ஜெயஸ்ரீ..ஜெயஸ்ரீயிடம் பேசிக்கொண்டே சமைத்தாள் மிருணா…கத்திரிக்காய் துவையல்,சாதம்,சாம்பார்,ரசம் செய்தவள் கூட அப்பளம் பொறித்து எடுத்து வைத்தாள்..

எல்லாவற்றையும் ஜெயஸ்ரீயின் உதவியுடன் முடித்தவள் அனைத்தையும் பாங்காய் டைனிங் டேபிளில் அடுக்கினாள்…       

 

“ஷப்பா…என்ன அண்ணி இப்படி வேலை நெட்டி முறிக்குது  ஒரு வேளை சமைக்கிறதுக்கே,எப்படி தான் மூணு வேளையும் பொம்பளைங்க வித விதமா செய்யராங்களோ…”என வெகுவாய் ஆச்சரியப்பட்டு வியந்தவளை பார்த்து சிரித்தவள்,”நீயும் உன் புகுந்த வீட்ல செய்யும் போது தெரியும்…”என சொன்னவள் பின் தண்ணீர் ஜக்கினையும் எடுத்து வந்து டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டு அவளின் பக்கம் வந்து அமர்ந்தாள்…ஜெயஸ்ரீயோ மிருணா சொன்னதை நினைத்து பார்த்து சிலிர்த்துக்கொண்டு இருந்தாள்…”ஹ்ம்ம் எப்போ அப்படி நடக்குறது…”என நினைத்தவளுக்கு விஜயினை எண்ணி பெருமூச்சு தான் வந்தது..

 

“அண்ணி என்ன ஒரு மார்க்கமா பார்த்து சிரிக்கிறீங்க…என்ன விஷயம் சொல்லுங்க..”என ஜெயஸ்ரீ கேட்க “ஒன்றும் இல்லை..” என்பது போல ,தலையை இடது வலதுமாக ஆட்டியவள்,”சரி ஸ்ரீ நீ சாப்டினா அதுக்கு அப்புறம் நான் அவங்க வரதுக்குள்ள குளுச்சிட்டு வந்துடுவேன்,

சாப்பட்றியா பறிமார்றேன்..”என சொல்ல,வேண்டாம் என்று தலை அசைத்தவள் “நான் அவங்க எல்லாம் வந்த பிறகு சாப்ட்டுக்குறேன் அண்ணி,நீங்க போய் குளிச்சிட்டு வாங்க..”என சொல்ல

 

மிருணாவிற்கும் சரி எனப்பட,”உனக்கு பசிச்சா சாப்புடு ஸ்ரீ, அவங்களுக்காக வெயிட் பண்ண வேண்டியது இல்ல…..”என சொல்ல,”சரி அண்ணி…” என மிருணாவிடம் சொன்னவள்,”சரி சரி நீங்க குளிக்க போங்க..நான் டிவி பாக்குறேன்..”என சொல்லி டிவி பார்க்க ஆரம்பித்தாள்…பின் மிருணாவும் குளிக்க செல்ல ஜெயஸ்ரீ டிவி பார்ப்பதில் மூழ்கி போனாள்…

 

ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்த பிரபு,மதுரையில் இருந்து பெங்களூர் வந்து சேரும் பெங்களூர் எக்ஸ்பிரஸ்க்காக காத்திருக்க ஆரம்பித்தான்…ஒலி பெருக்கியில் மதுரையில் இருந்து பெங்களூர் வரும் பெங்களூர் எக்ஸ்பிரஸ் பிளாட் பாரம் நம்பர் 5-ல் நிற்கும் என ஆங்கிலத்திலும்,கன்னடத்திலும் அறிவிப்பு விடுக்க,பிரபு ரயிலில் வரும் தனது அன்னை மற்றும் தந்தையை காண ஆவாலாய் நின்றுகொண்டு இருந்தான்…

 

பத்து நிமிடம் கழித்து நிலையத்தில் நுழைந்தது பெங்களூர் எக்ஸ்பிரஸ்…எல்லோரும் இறங்கி கொண்டு இருக்க சிறிது நேரம் கழித்து அவர்கள் வந்தது எந்த கோச் என தெரியாத பிரபு ஒவ்வொரு கோச்சாய் சென்று அவனின் அப்பாவினையும் அம்மாவினையும் தேடினான் ஆனால் அவனால் அவர்களை காண முடியவில்லை..

 

அவனின் அலைபேசிக்கு அழைத்த அவனின் அம்மா சித்ரா “பிரபு நாங்க டைம் ஆபீஸ் பக்கத்துல இருக்கோம்,நீ இங்க வா,அங்க தேடிட்டு இருக்காத..”என சொல்ல….”சரி மா..”என்றவன் அங்கு அவர்களை காண சென்றான்…

அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்த தனது தாயையும் தந்தையையும் நோக்கி சென்றான் பிரபு..வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பிரபுவின் அம்மா சித்ரா பிரபு தன்னை நோக்கி வேகமாய் வருவதை கண்டு கண் கலங்க அவனையே பார்த்துக்கொண்டு இருந்தார்..

 

நீங்க நாட்கள் கழித்து பார்க்கும் தன் அன்னையை கண்டு அவனுக்குள் மிகவும் சந்தோசமாய் இருந்தது..வேகமாய் அவரிடம் சென்றவன் அவரை அணைத்து தனது சந்தோஷத்தையும்,பாசத்தையும் வெளிபடுத்தினான்…அவர்கள் இருவரும் பாச மழையில் நனைந்து கொண்டு இருக்க,அவனின் அப்பா சுந்தரமோ இருவரையும் முறைத்துக்கொண்டு இருந்தார்…

 

“இதுங்களுக்கு கொஞ்சமாச்சம் ஏதாவது இருக்கா,ஓவரா தான் பண்றாங்க,நான் இங்க ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன்,எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை என்கிட்ட வந்து கேட்டானா,அப்படியே அம்மாவை கட்டிக்கிட்டு பாச மழை பொழியிறான்..”என மனதிற்குள் குமைந்து கொண்டு இருந்தார்…

 

அவரை மேலும் வெறுப்பேற்றும் வண்ணம் அவரின் ஆசை மனைவி “என்ன கண்ணா இப்படி இளைச்சி போயிட்ட,ஒழுங்கா சாப்டறது இல்லையா..??..”என அவனின் முகத்தை வருடி அவர் கேட்க,”அப்படி எல்லாம் இல்லமா,நல்லா தான் சாப்டறேன்,நீங்க என் கூட இல்லை அப்படின்ற கவலையை விட வேற எனக்கு எதுவும் இல்லை..”என சொல்ல,இவர்களின் சம்பாசனையை கேட்டும் கேட்காதது போல நின்று கொண்டு இருந்த அவனின் அப்பா சுந்தரம் ,”…ம்க்கும்…”தன் தொண்டையினை செருமி தானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதை தெரிவித்தார்…

 

அவர் செருமி பிறகு,அவரின் பக்கம் திரும்பிய பிரபு “அப்பா எப்படி இருக்கீங்க..”என ஆசையாய் கேட்க..அவனை பார்த்து முறைத்தவர் “எவ்ளோ நேரம் இங்கவே நின்னு படம் காட்டிட்டு இருக்க போற..”என தன் துணைவியிடம் எரிந்து விழுந்தார்..

 

அவருக்கு தன் மேல் இருக்கும் கோவத்தின் அளவினை நன்கு புரிந்து இருந்த பிரபுவும் வேறு எதுவும் பேசி அவரின் கோவத்தை மேலும் கூட்டாமல் அவர்கள் கொண்டு வந்து பேக்கை கையில் எடுத்துக்கொண்டவன் “வாங்க போலாம்..”என சொல்லி இருவரையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த டாக்ஸியில் ஏறினான்…

 

டேக்ஸியில் ஒலித்த கன்னட பாடலை தவிர வேற எந்த ஒலியும் சிறிதும்கூட அந்த டேக்ஸியில் இல்லை..மூவரும் அமைதியாய் வந்தனர்..மூவருக்குள் மேற்கொண்டு எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடப்பது போல தெரியவில்லை…

 

பிரபு அப்பாவிடம் மேற்க்கொண்டு எப்படி சுமூகமான நிலையினை உருவாக்குவது என யோசித்துக்கொண்டு வர,வந்து இருக்கும் மருமகள் எப்படி பட்டவளாய் இருப்பாள்,மகாலட்சுமி போல இருப்பாளா என மிருணாவினை  பற்றி அவனின் அம்மா சித்ரா எண்ணிக்கொண்டு வர, எப்போது இங்கு இருந்து மீண்டும் மதுரைக்கு செல்வோம் என வந்த நொடி முதல் ஆயிராவாது முறையாக அவனின் அப்பா நினைத்துக்கொண்டு வந்தார்…மூவரும் வெவ்வேறு மனநிலையில் சிந்தித்துக்கொண்டு இருக்க,வீடும் வந்து சேர்ந்தது…

 

***************

 

மிருணா குளிக்க சென்று 15 நிமிடம் ஆகி இருக்க,இன்னும் என்ன தான் இந்த அண்ணி பண்றாங்க..”என சலித்துக்கொண்டவள்,சேனல் ஒவ்வொன்றாய் மாற்றிக்கொண்டு இருந்தாள்…பின்

 

கண்ணன் வரும் வேளை,அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

சின்ன சின்ன தயக்கம்,சில மயக்கம்

அதை ஏற்க நின்றேன்

கட்டி கடங்கா எண்ண அலைகள்

ரெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்

கூடு பாயும் குறும்பு காரன் அவனே

கண்ணன் வரும் வேளை,அந்தி மாலை

நான் காத்திருந்தேன்

சின்ன சின்ன தயக்கம்,சில மயக்கம்

அதை ஏற்க நின்றேன்..

 

என்ற பாடல் ஒலித்து கொண்டு இருக்க,அதனை வைத்தவள்,மிகவும் ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தாள்..பின் அதனுடன் தானும் பாட ஆரம்பித்தாள்…

 

சிறிது நேரம் கழித்து காலிங் பெல் அடிக்க,,அப்போது தான் குளித்து முடித்து வெளியே வந்த மிருணா “ஸ்ரீ யாருன்னு பாரு,நான் புடவை கட்டிட்டு இருக்கேன்..”என உள்ளே இருந்து குரல் குடுக்க, ”சரி அண்ணி,இதோ பாக்குறேன்..”என்றவள் “கண்ணன் வரும் வேளை அந்தி மாலை,நான் காத்திருந்தேன்…”என்று பாடிக்கொண்டே கதவினை

திறக்க,தன் முன்னால் நின்று கொண்டு இருந்தவனை கண்டு இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்..

 

அவளை அங்கு எதிர்பார்க்காத விஜய் திகைத்து நிற்க,ஜெயஸ்ரீயோ தன்னவனின் அழகில் மதி மறந்து அப்படியே சிலையென அவனையே பார்த்துக்கொண்டு அப்படியே நின்றாள்…வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அவனை மேலும் அழகாய் காட்டியது…

 

“ஐயோ,சும்மாவே இவளை பார்த்தா,மந்திரிச்சி விட்டா கோழி மாதிரி சுத்திட்டு இருப்போம்,இவ இப்படி பார்த்து வைக்கிறாளே,என்னோட நிலைமை என்ன ஆகுறது, அடியே என்ன இப்படி பார்த்து வைக்காதடி, என்னால என்னையே கட்டுபடுத்த முடியாது..”என அவளிடம் மானசீகமாக பேசியவன்,தன்னை சம நிலைக்கு கொண்டு வர முயன்று கொண்டு இருந்தான்…

 

வந்தது அவளின் மாமனார்,மாமியாரா இருக்குமோ எண்ணி அவசர அவசரமாய் புடவையை கட்டிக்கொண்டு வெளியே வந்தவள்,வாசலில் நின்றுக்கொண்டு இருந்த விஜயினை கண்டு “வாங்க,வாங்க..என்ன வெளியிலையே நின்னிட்டு இருக்கீங்க…”என அவனை உள்ளே வருமாறு அழைக்க,ஆத்மாந்தமாய் தன்னை காத்த மிருணாவிற்கு மனதிலேயே நன்றியை தெரிவித்தவன்,ஜெயஸ்ரீயின் புறம் அவளை தெரிந்தது போல ஒரு பார்வையை கூட வீசாமல்,மிருணாவினை பார்த்து புன்முறுவல் பூத்தவன் உள்ளே சென்றான்…

 

விஜய்க்கு காபி தயார் செய்ய மிருணா சமைலறைக்குள் சென்றுவிட,ஸ்ரீ என்ற ஒருத்தி அங்கு இருப்பதை போலக்கூட காட்டிக்கொள்ளாமல் டிவியில் ஒலித்த பாடலை பார்க்க ஆரம்பித்துவிட்டான் விஜய்…தன்னவனை கண்ட சந்தோஷத்தில் இருந்த ஜெயஸ்ரீ,நேரம் ஆக ஆக அவனின் முகம் தன்னை நோக்கி ஒரு முறையும் திரும்பவில்லை என்பது புரிய,இருந்த சந்தோசமெல்லாம் அவளுக்கு வடிய ஆரம்பித்தது…

 

ஒரு முறையேனும் தன்னை திரும்பி பார்க்க மாட்டானா என ஏக்கம் நிறைந்த விழிகளோடு அவனை அவள் பார்த்துக்கொண்டு இருக்க,அதனை எல்லாம் விஜய் உணர்ந்தாலும்,மேலும் அவன் சிறிதும் தன்னுடைய தன் மானத்தை இழக்க விரும்பாதலால்,எதுவும் அறியாதது போல நடந்து கொண்டான் என்பதை விட நன்றாகவே நடித்தான் என்றால் தான் பொருந்தும்…

 

“இந்தாங்க காபி..”என சொல்லி மிருணா அவனுக்கு குடுக்க,அதனை வாங்கி கொண்டவன் ஒவ்வொரு மிருடாய் உறிஞ்சினான்…

ஜெயஸ்ரீக்குள் ஏக்கம்,அவனை ஒன்றும் கேட்காமல் இருக்கும் தன் மேலே வந்த கோவம்,அவன் விலகி விலகி செல்ல,தான் மட்டும் அவனை காலை சுற்றிய பாம்பாய் அவனை சுற்றி கொண்டு இருக்கிறோம் என எழுந்த துயரம்,ஒவ்வொரு நிமிடமும் அவனுக்காக தான் ஏங்குவது புரிந்து கொள்ளாமல் இருக்கிறானே என்று அவனின் மேல் எழுந்த கோவம் எல்லாமே அவளை பாடாய் படுத்தியது..

 

அதுவும் தான் புடவை கட்டி இருப்பதை கண்டு அவனின் கண்ணில் தோன்றும் ஒரு நொடி மின்னலுக்காக காத்திருந்தவளுக்கு,அப்படி எந்த ஒன்றும் நடக்காமல் போனதால் வந்த ஏமாற்றம் அவளை ஒட்டு மொத்தமாய் தவிக்க வைத்தது…

 

தனக்குள் ஏற்படும் தவிப்பை எக்காரணம் கொண்டும் வெளியில்  தெரியகூடாது என அவள் அரும்பாடுபட்டு தன்னை சாதாரணமாய் இருப்பதை போல காட்டிகொண்டாள்…

 

அவள் படும் அவஸ்தையை எல்லாம் பார்த்தும் பார்க்காததும் போல கண்டவனுக்கு தன் மேலே வெறுப்பு வந்தது..ஒரு நிமிடம் எல்லாவற்றையும் மனம் திறந்து அவளிடம் பேசிவிடலாமா என எண்ணியவன்,அந்நிகழ்வை அவளிடம் சொல்லக்கூடிய சக்தியும்,

தைரியமும் தனக்கு சிறிதும் இல்லை என நினைத்தவன் அப்படியே சொல்லும் நினைப்பைய மனதின் அடி ஆழத்தில் போட்டு புதைத்துவிட்டான்..

 

அவன் காபி குடித்து முடித்து கப்பினை கீழே வைக்கவும்,வெளியில் டாக்ஸியின் சத்தம் கேட்கவும் சரியாய் இருந்தது..மாமா,அத்தை எல்லாம் வந்துட்டாங்க போல என சந்தோசமாய் சொல்லிக்கொண்டே மிருணா வெளியேற,விஜயும் அவளின் பின்னே பிரபுவின் அம்மா அப்பாவினை வரவேற்க சென்றான்…ஜெயஸ்ரீயின் மூளைக்கோ அங்கு நடப்பது எதுவும் சென்று பதியவில்லை…

 

“ஏன் தனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது…”என அவள் மனம் தவித்து போனது…அவள் தவிப்பை தீர்க்க வேண்டியவனோ அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல்,பிரபுவின் அப்பா அம்மாவிடம் நலம் விசாரித்துக்கொண்டு இருந்தான்…

 

தன்னால் ஒரு மனம் நிம்மதியின்றி,தூக்கமயின்றி எந்நேரமும் துக்கத்தில் இருக்கிறது என்று அறியாபிள்ளையாய்…அப்படியே அவன் அறிந்தாலும் அதற்கு எல்லாம் அவன் ஏதாவது செய்வான் என்பது கேள்விகுறியே..அப்படி இருக்க ஜெயஸ்ரீயின் கேள்விகளுக்கு அவ்வளவு சீக்கிரம் பதில் கிட்டுமா என்ன…???

 

ஆனால் பதில் தெரியும் வரை அவளும் அவனை விட போவதில்லை என்பது அவனும் அறிந்த ஒன்றே..தானாய் சென்று தனது வேதனையை அவளிடம் இறக்குவதற்கு பதிலாக,அதற்கான நேரம் வரும் போதும்,இக்கட்டான சூழ்நிலை வரும் போதும் சொல்லிக் கொள்ளலாம் என விஜயும் விட்டுவிட்டான்…

 

ஆனால் அவன் அறியாத ஒன்று அச்சூழ்நிலை தனக்கு இன்னும் நரக வேதனையை தரும் என அவனும் அறிந்து இருக்கவில்லை…நடப்பது எல்லாம் தெரிந்துவிட்டால் பிறகேது எதிர்காலம் என்ற ஒன்று…

 

நலம் விசாரிப்புக்கு பின் எல்லோரும் உள்ளே நுழைய ஜெயஸ்ரீயின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை..அவளின் நிலையை கண்ட  மிருணா அவளின் முகத்தை கண்டே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து ஜெயஸ்ரீயின் அருகில் சென்று அவளை இடித்து நினைவிற்கு கொண்டு வந்தாள்..தன் நினைவுகளில் மூழ்கி இருந்தவள்,மிருணா இடித்த பிறகு நினைவுக்கு வந்தவள் அப்போது சுற்றி பார்க்க,அங்கு இருந்த அனைவரும் இவளை தான் ஒரு மாதிரியாய் பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது…

 

என்ன செய்வது என தெரியாமல் அவள் விழித்துக்கொண்டு இருக்க,அவளின் நிலை புரிந்த பிரபு அவளை “அம்மா,அப்பா இது தான் ஜெயஸ்ரீ..என்னோட ஆபீஸ்ல தான் வொர்க் பண்றா….ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருக்கனே..”என சொல்ல,அவன் சொல்வதை கேட்ட அவனின் அம்மா சித்ரா “ஆமா..முன்னாடியே சொல்லி இருக்க…”என சொன்னவர் ஜெயஸ்ரீயினை பார்த்து “எப்படி மா இருக்க..”என விசாரிக்க…

 

அவரை பார்த்து மென்மையாய் சிரித்தவள் “நான் நல்லா இருக்கேன் மா…நீங்க எப்படி இருக்கீங்க…”என்றாள் அமைதியாய்…அவளின் அந்த அமைதியான குணம் அவரை வெகுவாய் ஈர்க்க அவளை பார்த்து நலம் என்பது போல தலை அசைத்தார்…

 

அதுவும் இல்லாமல் அவருக்கு பெண் பிள்ளை இல்லாமல் போக,அவருக்கு பெண் பிள்ளை என்றாள் கொள்ளை பிரியம்..பிரபு பிறந்த பிறகு இரு முறை கருவுற்றவருக்கு கரு அவரின் வயிற்றில் ஜனிக்காமல் கலைந்தது…மூன்றாம் முறையும் அப்படியே நடக்க, மருத்துவரை அணுகிய போது அவர் “இனிமேல் உங்களுக்கு கருவை தாங்கக்கூடிய சக்தி இல்லை..”என சொல்லிவிட ஒற்றை பிள்ளையோடு விட்டுவிட்டனர்..அவர்க்கு மிருணாவினை மிகவும் பிடித்து இருந்தது,ஆனால் அவரால் அதனை சட்டென்று அவரின் கணவனின் முன்பு வெளிக்காட்டவில்லை…

 

அப்படி தெரிய வந்தால் கோவம் முச்சாணியை தொடும் என இத்தனை நாள் அவருடன் நடத்திய வாழ்க்கையின் அனுபவத்தில் அறிந்தவர் அமைதியாய் இருந்தார்…அதன் பின் பெரியவர்களுக்கு காபி போட்டு குடுத்த மிருணா அமைதியாய் ஜெயஸ்ரீயின் அருகில் சென்று நின்று கொண்டாள்..  

 

சிறிது நேரம் அங்கு கனத்த அமைதி நிலவ,மிருணா தான் அதை கலைத்தாள்…”மாமா,அத்தை வேணும்னா நீங்க ரெண்டு பெரும் சாப்புட்டு ரெஸ்ட் எடுங்க..”என சொல்ல,சுந்தரம் முகம் அப்போதும் இருக்கியே இருந்ததே தவிர அவர் வேறேதும் பேசவில்லை…

அவருக்கும் சேர்த்தே சித்ராம்மாவே பேசினார்…

 

“பரவாயில்ல மிருமா…கொஞ்ச நேரம் போகட்டும் அதுக்கு அப்புறம் சாப்ட்டு படுக்கலாம்..”என சொல்லிவிட மிருணாவும் மேற்க்கொண்டு எதுவும் பேசவில்லை…சுந்தரம் பேசிய ஒரே ஒரு ஜீவன் விஜய் மட்டுமே…அவர் வேறு யாரிடமும் பேசவில்லை…சுந்தரமும் விஜயும் பேசிக்கொண்டு இருக்க,மீதி நால்வரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்…

 

என்னதான் ஜெயஸ்ரீ இவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாலும்,

அவளின் கண்கள் அடிக்கடி விஜயினை ஏக்கம் நிறைந்த கண்களோடு பார்ப்பதை,எதற்ட்சியாய் அவளின் பக்கம் திரும்பிய மிருணாவின் கண்களில் இருந்து தப்பவில்லை…

 

சிறிது நேரம் அவளை கவனித்து பார்த்தவளுக்கு அவளின் மனதில் உள்ள எண்ணம் தெள்ள தெளிவாய் விளங்கியது…அவளுக்கு விஜயின் மனதில் உள்ள எண்ணம் பற்றி தெரியாததால் பிரபுவிடம் இதை பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்துகொண்டாள்…ஆனால் மிருணாவிற்கு ஒரு யோசனை எழ அதனை செயல்படுத்த தனது மனதிற்குள் திட்டம் தீட்டினாள் ஜெயஸ்ரீயினையும் விஜயினையும் இணைக்க எண்ணி…

 

மிருணாவின் திட்டம் ஜெயஸ்ரீயினையும்,விஜயையும் சேர்க்க உதவியதா..?? இல்லை இன்னும் அவர்களுக்கு பிளவினை உண்டு பண்ணியதா என்ற விடையை காலம் தான் நமக்கு பதில் சொல்ல வேண்டும்….

 

கண்ணில்கள் தவிப்பில் தத்தளிக்க

உணர்வில்லா உந்தன் பார்வை

என்னை ஒரு நொடி

முழுதும் நொறுக்கியது அறிவாயா..??

நான் செய்த அலங்காரம் எல்லாம்

உன் பார்வை பாடாததினால்

அலங்கோலமாய் ஆனது இன்று….

உன் கை விரலோடு என் கை

விரல் கோர்க்க ஏக்கம்

கொண்டது என் மனது…..

நீ கட்டிய மாங்கல்யத்தை

எந்தன் மார்ப்பில் ஏந்தி

மணவறையை சுற்றிவர…

மணமகளாய் ஆகும் நாளை

எதிர்பார்த்து நான் கண்ட

அக்கனவு உன்னால் கானல் நீராய்

போகிடுமா…??

எந்தன் நெஞ்சம் தவிக்கும் தவிப்பு

தெரிந்தும் தெரியாதது

போல நீ ஆடும் நாடகம் எதற்கோ..??

கண்ணீரை என் இமை தாங்கி நிற்க

என் இதயமோ

முழுதும் உன்னுடைய

நினைவையே தாங்கி நிற்கிறது என்றும்…

மனமெல்லாம் பாரம் இருந்தாலும்

உன்னை பார்க்கும் நொடி

சூரியனை கண்ட பனித்துளி போல

எந்தன் சோகம் எல்லாம்

பறந்து வானம் நோக்கி ஓடிவிடுகிறது…

நீயா எந்தன் அருகில் அன்று

நெருங்கி வந்தது…

நெருங்கங்கள் குறைந்து போக

விரிசல்கள் விரியலாகின

நமக்குள் புது இம்சையாய்

என்னுள் அந்நினைவு இந்நொடி வரை…

 

     
விலகல் தொடரும்…

Advertisement