Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -20

 

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன் அதற்கு மேல் சிந்தித்து மனதில் ஏற்கனவே ஏற்பட்ட புண்ணை கிளறவிரும்பாமல் அமைதியாய் அந்நினைவுகளை ஒதுக்கினான்…

 

வேலைகள் எல்லாம் சில கிடப்பில் இருப்பதை உணர்ந்தவன்,

ஜெயஸ்ரீயினை அழைத்து “என்னோட ரூம்க்கு வாங்க..”என்று சொல்லிவிட்டு துண்டித்தான்…

 

விஜய்க்கும் அவளுக்குமான அந்த பசுமையான நினைவுகளில் இருந்தவள்,ஜெய் அழைக்கவும் அதில் இருந்து விடுபட்டு,தனது மனதை ஒரு முகபடுத்திகொண்டு தனது குறிப்பேட்டோடு அவனை காண அவனது அறைக்கு சென்றாள்…

 

அனுமதி கேட்ட அவள் உள்நுழைய விஜய் தன்னை முழுதும் மடிக்கணிணியில் புதைத்துக்கொண்டு இருந்தான்..”ஜெய் வர சொல்லி இருந்தீங்க..”என ஸ்ரீ அவனை தன் திசை திருப்ப…மடிக்கணிணியில் இருந்து தன் முகத்தை நிமிர்த்தியவன் “வர சொன்ன எனக்கு தெரியாதா..அதை நீங்க வேற சொல்லணுமா..முதல்ல உட்காருங்க..”என்றவன்..பின் சிறிது நேரம் மடிக்கணிணியில் எதையோ செய்துவிட்டு அவளிடம் திரும்பினான்…

 

விஜய் “உங்களை இப்போ எதுக்கு வர சொன்னேன் அப்படின்னா…வர 15-ந்தேதி நம்பளோட ப்ராஜெக்ட் லைவ் ஆகணும்..அதுக்கு பிறகு நாம்ப ஒரு புல் டெமோ ஒண்ணு கிளைண்ட்க்கு குடுக்கணும்..அதுவும் இல்லாம இப்போ ஹையர் லெவல்ல இருந்து பிரஷர் குடுக்குறாங்கஎப்போ முடிப்பீங்கன்னு…அதுனால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நீங்க நான் குடுக்குற வேலையை முடிக்கணும்..எனக்கு வேற ஒரு மாடுல் இருக்கு,அதை நான் முடிக்கணும்…நீங்க என்ன என்ன பண்ணனும் அப்படின்னு உங்களுக்கு ஏற்கனவே மெயில் பண்ணிட்டேன்..அதை ஒரு முறை பாருங்க..ஏதாதவது சந்தேகம் இருந்தா கேளுங்க…இப்போ நீங்க போலாம்…”என்றான் அமைதி மற்றும் அழுத்தமாய்…

 

அதன்பின் இன்டர்காமில் பிரதீபையும்,வீணாவினையும் அழைத்தான்..இருவரும் அனுமதி பெற்றுகொண்டு ஒருத்தர்பின் ஒருவராய் வந்தவர்கள் விஜய் சொல்ல போகும் செய்திற்காக காத்திருந்தனர்..அவர்களை நோக்கியவன் “எதுக்கு நின்னுட்டு இருக்கீங்க..உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…ரெண்டு பேருமே உட்காருங்க..”என சொல்ல பிரதீப்பும்,வீணாவும் ஆளுக்கொரு நாற்காலில் அமர்ந்தனர்…

 

இருவரையும் சில நொடி பார்த்தவன் பின் ஆரம்பித்தான் “பிரதீப்,வீணா உங்க ரெண்டு பேருக்குமே தெரியும்..நாம்ப இப்போ ஒரு புது ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ணிட்டு இருக்கோம்..அது முடிக்க நமக்கு கிட்டத்தட்ட 3 மாசம் டைம் குடுத்து இருந்தாங்க…ஆனா இப்போ கிளைன்ட் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ,அவ்ளோ சீக்கிரம் முடிச்சு தர சொல்றாங்க…ஹையர் லெவல்ல இருந்தும் பிரஷர் வர ஆரம்பிச்சிடுச்சு..இனிமேல் நாம்ப ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாம வொர்க் பண்ணனும்..இந்த ப்ராஜெக்ட்க்கு நாம்ப சண்டேகூட வொர்க் பண்ண வேண்டியதா இருக்கலாம்..அத பின்னாடி பார்ப்போம்..உங்க ரெண்டு பேருக்கும் என்ன என்ன வொர்க் அப்படின்னு நான் ஆல்ரெடி அலாட் பண்ணிட்டேன்..அதை உங்களுக்கு மெயில் பண்றேன்…நான் இப்போ குடுக்குற வொர்க்யை 7 மணிக்குள்ள நீங்க சப்மிட் பண்ணனும்..

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க…”என்றவன் “உங்களுக்கு எந்த ஒரு ஆட்சபனை இருந்தாலும் சொல்லலாம்…உங்களோட பீட்பேக் சொல்லுங்க…வீணா நீங்களும் தான்”என்றான் இருவரிடமும்…

 

“விஜய் நீங்க அலாட் பண்ணி இருக்குற வொர்க் வச்சு தான் ஏதாவது சொல்ல முடியும்…மெயில் பார்த்துட்டு சொல்றேன்…”என பிரதீப் தன் பங்கிற்கு விஜய்க்கு பதில் சொல்ல வீணா எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள்…

 

விஜய்க்கும் வீணாவின் நிலை புரிய அவளிடம் எதுவும் கேட்காமல் “வீணா நீங்களும் மெயில் பார்த்துட்டு சொல்லுங்க..பிரதீப் நீங்க வீணாக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா செய்ங்க..”என பிரதீப்பை பார்த்து சொன்னவன் “வீணா பிரதீப்பாலாரிகவர் பண்ண முடியாத ப்ராப்லம் மட்டும் என் கிட்ட கொண்டு வாங்க..ஏன்னா நானும் என்னோட வேலையை முடிக்கணும்…எல்லாருக்கும் சேம் டார்கெட் தான்..உங்களுக்கு ஹெல்ப் பண்ண நான் ரெடி,அது பிரதீப் பண்ண முடியாதபட்சதுல…உங்களுக்கு நான் சொல்றது புரியுது தான..”என கேட்க..

 

வீணாவும்”புரியுது சார்…”என ஒரு வரியை உதிர்த்தவள் அதற்கு ஈடாக தலையினை நன்கு ஆட்டினாள்…சில நிமிடம் அவளை நோக்கிய பிரதீப் முகத்தில் எந்த ஒரு பாவனையையும் காட்டாது அமைதியானான்..வீணாவிற்கு தான் மனம் படபடவென்று அடித்துகொண்டது…

 

இருவருக்குள்ளும் ஏற்பட்ட அந்நிகழ்வுக்கு பிறகு ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து பேசுவதையும்,நேராய் பார்ப்பதையும் முடிந்த அளவு தவிர்த்தனர்…வீணா தான் செய்யும் ஒவ்வொரு வேலையை பற்றிய ரிப்போர்ட் எல்லாவற்றையும் விஜயிடமே தெரிவித்தாள்..அப்படியே பிரதீப் மற்றும் ஜெயஸ்ரீயும் கூட…

 

மீண்டும் இருவரும் ஒன்றாய் வேலை செய்ய வேண்டும் என்று விஜய் சொன்னதை கேட்ட வீணாவிற்கு மீண்டும் ஏதாவது சிறு பிசகு ஏற்பட்டுவிடுமோ என்ற பயமாய் இருந்தது அவளினுள்…ஜெயஸ்ரீ அவளுக்கு பக்கபலமாய் எல்லா வகையிலும் இருந்தாலும்,சில சமயங்கள் அவள் சந்திக்கும் நிலைகள் அவளை கோலையாக்கிவிடுகின்றது…

 

தனது பகுதிக்கு வந்த ஜெயஸ்ரீ சிறிது நேரம் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்…அவளின் வாழ்க்கையில் நடக்கும்,நடந்த சில விஷயங்கள் அவளுக்கு புதிராத புதிராய் இன்னும் இருப்பதை அவளால் என்ன முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை…

 

நேரம் ஆவதை உணர்ந்து விஜய் அனுப்பிய மெயிலினை ஓபன் செய்தாள்…அதில் அவள் செய்ய வேண்டிய வேலைகள் அட்டவணை செய்து கொடுக்கப்பட்டு இருந்தது…அதை பார்த்தவளுக்கு முடிக்கும் நேரத்தை காண அது இன்று மாலை 6 மணிக்கே சமர்ப்பிக்கபட வேண்டும் என இருக்க,மலைப்பாய் அதையே பார்த்துக்கொண்டு இருந்தாள்..

 

“என்னது இது,இதை எல்லாம் இப்பவே முடிக்கணுமா,கடவுளே..இந்த ஜெய்க்கு எப்படி மனசாட்சியே இல்லாம எவ்ளோளோளோ வேலையை என் தலையில கட்டி இருக்கார்…நான் எப்படி இத்தனையும் இன்னைக்கு 6 மணிக்குள்ள செஞ்சு முடிப்பேன்…இவரை என்ன பண்றது…”என கோவமாக அவனது அறைக்கு சென்றாள்…

 

தன் வேலையில் மூழ்கி இருந்தவன்,சட்டென்று அனுமதியே இல்லாமல் உள்ளே நுழைந்த ஜெயஸ்ரீயினை கேள்வியாய் நோக்க,அவள் முகம் கோவத்தில் சிவந்து இருந்தது அவனுக்கு நன்கு தெரிந்தது…இருந்தும் எதையுமே தெரிந்தது போல தன் முகத்தில் காட்டாமல் “என்ன வேணும்…”என்றான் அமைதியாக..

 

“என்ன நினச்சிட்டு இருக்கீங்க நீங்க…நான் என்ன மனிஷியா,இல்ல ரோபோட்டா..1 வாரத்துக்கு செய்ய வேண்டிய வேலையை ஒரு நாளைக்கு குடுத்து செய்ய சொன்னா எப்படி,என்னால எல்லாம் செய்ய முடியாது…”என கோவமாய் ஜெயஸ்ரீ பொரிய..

 

“செய்ய முடியல அப்படின்னா வேலையைவிட்டு நின்னுடுங்க..நாங்க வேற ஆளை சேர்த்து வேலையை அவங்க கிட்ட இருந்து நாங்க வாங்கிக்கிறோம்..”என எந்த ஒரு அதிர்ச்சியும் இல்லாமல் மெதுவாய் ஜெயஸ்ரீக்கு அவன் ஒரு குண்டை தூக்கிபோட,ஜெயஸ்ரீ அதிர்ச்சியில் “எ..ன்ன…என்ன…”என திக்கிதிணறி கேட்க,

 

“வேலையை விட்டுடுங்கன்னு சொன்னேன்…”என்றான் விஜய் அழுத்தமாய்..அவன் விளையாடுகிறானோ என எண்ணி அவனது  முகத்தை அவள் உற்றுநோக்க,அதில் மருந்துக்கும் இலகு தன்மையும்,சிரிப்பும் இல்லாமல் அவனின் முகத்தில் அழுத்தமும்,கடினமும் மட்டுமே இருந்தது…

 

ஜெயஸ்ரீ எதுவும் பேசாமல் அதன் பிறகு அமைதியாகிவிட,அவளை சிறு நிமிடம் நோக்கிய விஜய் “என்ன பண்ண போறீங்கன்னு,முடிவு பண்ணி ஒரு 5 நிமிஷத்துல சொல்லுங்க..எனக்கு நிறைய வேலை இருக்கு எல்லாத்தையும் முடிக்கணும்..”என சொன்னவன் ஜெயஸ்ரீயின் பதிலை எதிர்பாராமல் மீண்டும் தன் வேலையினை தொடரலானான்..

 

ஜெயஸ்ரீ மனதிற்குள் குமறிகொண்டு இருந்தாள்“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா போனா போ அப்படின்னு சொல்லுவான்,இவனைஎன்ன பண்ணா தகும்,நான் போயிட்டா இவனுக்கு பரவாயில்லையா,ஆமா இவன் எதுக்கு வருந்த போறான்..ஏற்கனவே என்னை வேணாம்ன்னு விலகி வந்தவன் தான,நாம்ப தான் இவன் பின்னாடியே நாய் மாதிரி சுத்திட்டு வரோம்,நம்பளை எப்பவாவது கண்டுக்குறானா,ஜெயஸ்ரீ இதுக்கு பிறகும் நீ இங்க இருக்கணுமா,

எவனுக்காக வந்தியோ அவனே போ அப்படின்னு சொல்லும்போது உனக்கு என்ன பிரச்சனை கிளம்பு..”என தனக்குள்ளே பேசிகொண்டவள்,பின் ஏதோ ஒன்று தோன்ற வருவினை திரும்பி பார்க்க அவனோ விட்டால் மடிகணிணியை முழுங்கிவிடுபவன் போல அதனினுள் புதைந்து இருந்தான்…

 

அதை கண்ட பிறகு இன்னும் கோவம் தலைக்கேற “இருக்குற எல்லா வேலையையும் என்கிட்டே குடுத்துட்டு,பேஷ்புக்ல யார் கூடவே சேட் பண்ணிட்டு இருக்குறதுக்கு என்ன ஒரு பில்டப் பாரு..”என மனதிற்குள் கருவியவள்..”ஜெய் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..”என்றாள் முன்னால் எதுவும் நடவாதது போல சாதாரணமாக…

 

தன் வேலையில் மூழ்கி இருந்தவன் ஜெயஸ்ரீயின் குரல் கேட்க அவளை பார்த்தவன்,அவளது கேள்விக்கு பதில் சொல்லாது “என்ன முடிவு பண்ணிட்டீங்களா…என்ன முடிவா இருந்தாலும் சொல்லுங்க…நாங்க அதை ஏற்த்துப்போம்…ஹையர் லெவல் மேனஜேர் கிட்ட எல்லாம் பேசிட்டேன்…”என கூலாக அவன் சொல்ல சொல்ல ஜெயஸ்ரீக்கு ரத்த அழுத்தம் கூடிகொண்டே சென்றது..

 

ஜெயஸ்ரீ“ஜெய் நான் கேட்ட கேள்விக்கு நீங்க முதல்ல பதில் சொல்லுங்க..இது தான் உங்களோட பண்பாடா கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம,எதிர் கேள்வி கேட்குறது..”என இளக்காரமாய் அவள் அவனை பார்த்து கேட்க…அவனும் அவளுக்கு சற்றும் குறையாத வண்ணம் “அது எங்க பண்பாடு இல்ல தான்,மன்னிச்சிக்கோங்க அம்மணி தெரியாம சொல்லிட்டேன்..அதே போல குடுக்குற வேலையை முடிக்க முடியாம ஓடுற உங்களை எல்லாம் எங்க ஊர்ல வேற மாதிரி சொல்லுவாங்க..அது என்னனா பயந்தங்கோளி,

உங்களுக்கு இந்த பேரு ரொம்ப நல்லா இருக்கு..நீங்க வேணும்னா ஒண்ணு பண்ணுங்க..ஜெயஸ்ரீ அப்படின்றதுக்கு பதிலா இந்த பேரை வச்சிக்கோங்களேன்..பொருத்துமா இருக்கும்…”என கிண்டலோடு செல்ல…

 

ஜெயஸ்ரீக்கு கோவம் எல்லாம் இருக்கும் இடம் காணாமல் போய் இப்போது அழுகையும் ஆத்திரமும் போட்டிக்கொண்டு வந்தது…”தன்னை இவன் என்ன என்ன பேசுகிறான்..நான் வேலைக்கு பயந்து ஓடிகிறவாளா..ஜெயஸ்ரீ ஒரு போதும் அப்படிபட்ட பெண் அல்ல…இவனை மாதிரி நான் யாருக்கு பயந்துட்டு ஓடணும்..என்னால எதையும் செய்ய முடியும்,இந்த வேல என்ன ஜூஜூபி,நான் செஞ்சுட்டு இவன் முகத்துல கரியை பூசுறேன்..” என உள்ளுக்குள் உறுதிகொண்டவள் “ரொம்ப அதிகமா பேசாதீங்க MR.விஜயவரதன்,

இப்போ என்ன நீங்க குடுத்து இருக்குற வேலையை நான் செய்யணும் அவ்வளவு தான,செஞ்சு முடிக்கிறேன்…”என்றவள் அவனின் பதில் எதிர்பாராது வெளியேறிவிட்டாள்…

 

விஜய்க்கு சிரிதாய் இதழுக்கிடையில் இருந்த புன்னகை பெரிதாய் விரிந்து அவன் முகம் முழுவதும் சிரிப்பால் நிறைந்து இருந்தது பல நாள் கழித்து…

 

”விஜய்ய்ய்…”என ஆர்பாட்டமாய் அழைத்துக்கொண்டு பிரபு உள் நுழைய “என்னடா…என்ன விஷயம் ரொம்ப சந்தோசமா வர..”என விஜய் சிரிப்புடனே கேட்க..

 

“ஆமா டா…ரொம்பபபபப சந்தோஷமா இருக்கேன்…”என விஜய்யை கட்டிக்கொண்டு அவன் கத்த..”டேய் என்னடா என்ன ஆச்சு..சொல்லிட்டு கத்துடா…என்ன மிரு அம்மா ஆக போறாங்களா…”என விஜய் கேட்க…

 

பிரபு ஆடு திருடியவன் போல முழித்தான்..”என்னடா இப்படி முழிக்கிற…உன்னோட முழியே சரியில்ல…”என விஜய் கேட்க…”போடா என்ன வெறுபேத்ததா..அது எல்லாம் ஒண்ணும் இல்ல..எல்லோரும் நீ அப்பாவாக போறியா அப்படின்னு தான் கேப்பாங்க,நீ என்னடானா மிரு அம்மாவாக போறாளான்னு வித்தியாசமா கேட்குற..”என பிரபு புரியாமல் அவனை நோக்கியபடி கேட்க…

 

அவனை பார்த்து சிரித்தவன் “இதுல வித்தியாசம் எல்லாம் எதுவும் இல்ல டா..ஒவ்வொருத்தரும் பார்க்குற விதம் தான் அப்படி மாறிப்போச்சு..”என சிரிப்போடு சொல்ல..”என்னடா குழுப்புற..சத்தியமா எனக்கு புரியல..”என மண்டையை பிய்த்துகொள்ள..

 

விஜய் “டேய்..ரொம்ப குழம்பாத..நான் சொல்றேன்…மிரு உனக்கு யாரு..”என கேட்க..பிரபு அவனை இப்போது முறைத்து பார்க்க…”முறைக்காதடா..பதில் சொல்லு..”என விஜய் கேட்கவும்…பிரபும் குழப்பமான முகத்தோடு “வைப்…”என சொல்ல…விஜயும் ”அதாவது பொண்டாட்டி..கரெக்ட்…”என கேட்க..பிரபு இப்போது கையில் ஏதாவது கிடைத்தால் விஜயையும் நொறுக்கும் அளவிற்கு கொலைவெறிக்கு ஆளானான்..

 

“ஹா ஹா…சாரி டா..சும்மா விளையாட்டுக்கு..”என சிரிப்புடனே சொன்ன விஜய் பின் பிரபுவினை பார்த்து “எப்பவுமே தாய்மையை அடையிற பொண்ணுங்க தான் அம்மா அப்படின்ற பதிவியை முதல்ல அடையுறாங்க..அவங்களுக்கு கிடைக்கிற முதல் அங்கிகாரம்..நான் பார்க்குற விதத்துல தான் அப்படி கேட்டேன்..விளக்கம் போதுமா..இல்ல இன்னும் வேணுமா..”என ராகத்தோடு கேட்க,”டேய் நீ குடுத்த விளக்கமே எனக்கு போதும்..இதுக்கு மேல வேண்டாம்…நான் தாங்க மாட்டேன்,,,,நான் பாவம்..எவ்ளோ சந்தோசமா வந்தேன்..இப்படி பண்ணிட்டியேடா…”என அழாதகுறையாக கேட்க…

 

அப்போது தான் விஜயிற்கு நியாபகம் வந்தது பிரபு ஆர்பாட்டமாய் உள்ளே நுழைந்தது…”சாரிடா பேசிகிட்டே அதை மறந்துட்டேன்…ஆமா என்ன ஒரே சந்தோசமா வந்த,என்னன்னு இன்னும் தெரியல,மிரு அம்மா ஆகல,அப்போ அதைவிட வேற என்ன சந்தோஷமான விஷயம்..”என அவன் தாடையை தடவிக்கொண்டே கேட்க..

 

பிரபு “நீ வேற ஏன்டா அதையே திரும்ப திரும்ப சொல்லி என்னோட வயித்தெரிச்சல கொட்டிக்கிற..”என கோவமாய் அவனிடம் பொரிந்தவன்..”கல்யாணம் ஆகி 1 வருஷத்துக்கும் மேல ஆகி 2 வருஷம் ஆக போகுது,இன்னும் பிரம்மச்சாரி விரதம் இருக்கேன்…இதுல மிரு அம்மாவாவும்,நான் அப்பாவாவும் எப்படி ஆகுறது…”என முணுமுணுக்க..

 

விஜய் பிரபுவின் தோளில் அழுத்தி ஆறுதல்படுத்த,விஜயை நோக்கியவன் “எனக்கு என்னோட மிரு சந்தோசம் தான்டா முக்கியம்..அவளை விட வேற எனக்கு எதுவும் முக்கியம் இல்ல…அவளுக்காக நான் இன்னும் எத்தனை நாள் நாளும் காத்திருப்பேன் டா…”என புன்னகை மற்றும் அதே நேரம் அழுத்ததோடு சொல்ல…

 

விஜய்க்கு பிரபுவினை நினைத்து மிகவும் பெருமையாய் இருந்தது..நண்பனின் எண்ணம் புரிந்தாலும்,அவனுக்கு ஒன்று மட்டும் புதிராத புதிராய் இருந்தது..ஏன் பிரபுவும்,மிருணாவும் விலகி இருக்கின்றனர் என்று…

 

அதை அவன் பிரபுவிடமே நேரடியாய் கேட்க “மிருணாவீட்லயும் சரி,என்னோட வீட்லயும் சரி,எங்களோட கல்யாணத்துக்கு ஒத்துக்கல…மிருக்கூட அவளோட வீட்ல எங்களோட காதலை பத்தி சொன்னா,ஆனா நான் எதையும் வீட்ல சொல்லாம தான் அவளை கல்யாணம் பண்ணிகிட்டேன்..அவளுக்கே எங்களோட கல்யாணம் அந்த மாதிரி நடந்ததுல விருப்பம் இல்ல..

குடும்பத்தோட ஆதரவு இல்லாம நடந்தது அவளுக்கு எப்பவும் வருத்தமா இருக்குது..அவ வீட்லயும் என்னோட வீட்லயும் சேர்த்துகிட்டா தான் சேர்ந்து வாழணும்..அவங்க ஆசிர்வாதத்தோடு தான் வாழணும் அப்படின்னு முடிவு பண்ணிட்டோம்…ஜெயஸ்ரீயும் நம்ப ஆபீஸ்ல இருக்குற மத்தவங்களும் சேர்ந்து ஏற்பாடு பண்ணின ஹனிமூன்க்கு போனது கூடஎல்லாம் அவங்களோட மனநிம்மதிக்காக தான் போனோம் டா…”என மனம்திறந்து பேசினான்…

 

விஜய் “சரி விடு டா…இனிமேல் எல்லாம் சரியா போகிடும்..

தேவையில்லாம எதையும் நினைச்சு மனசபோட்டு குழப்பிக்காத..”என ஆறுதல் சொல்ல..பிரபு “ஹ்ம்ம் சரி டா…உன்கிட்ட சொல்ல வந்ததை சொல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்கேன்..என் வீட்ல இருந்து நாளைக்கு அப்பா,அம்மா வராங்க டா…அம்மா போன் பண்ணி சொன்னாங்க..அப்பாக்கு இப்பவும் கோவம் இருக்குத்தாம்…ஆனா அம்மாவோட வற்புறுத்தல்ல ஞாயிற்றுக்கிழமை பார்க்க வராங்களாம்…”என சொல்ல…

 

விஜய் “ஹேய்ய்…ரொம்ப சந்தோசம் டா…அம்மா போல அப்பாவும் கூடிய சீக்கிரம் உங்களை புரிஞ்சி ஏத்துப்பார் கவலைபடாத…எல்லாம் நல்லதாவே நடக்கும்…”என அவனை தேற்றியவன்…”வொர்க் எல்லாம் முடிஞ்சதா..இல்ல இன்னும் இருக்கா..”என கேட்க…பிரபுவும் “அது எல்லாம் முடிஞ்சதுடா…

உன்கிட்ட சொல்லிட்டு போலாம்ன்னு தான் வந்தேன்…முடிஞ்சா ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வாடா…எனக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்..”என சொல்ல

 

விஜய் “கண்டிப்பா டா…நான் வரேன்…கொஞ்சம் அப்பாக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ..அவர் திட்டினாலும் கேட்டுட்டு அமைதியா இரு..எதிர்த்து பேசாத என்ன…”என அறிவுரை வழங்க…பிரபுவும் எதுவும் சொல்லாமல் “சரி டா…பார்த்துக்குறேன்..உனக்கு இன்னும் வேலை முடியலையா…

“என கேட்க…

விஜய் “இல்ல டா..புது ப்ராஜெக்ட் சீக்கிரம் முடிக்கணும் அப்படின்னு சொல்றாங்க…எப்போ வேணும்னாலும் டெமோ கேட்பாங்க..அதான் வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு…”என சொல்ல “சரி டா…நீ வொர்க் பாரு…மிரு வெயிட் பண்ணிட்டு இருப்பா…அப்போ நான் கிளம்புறேன்”என சொல்லிவிட்டு பிரபுவும் கிளம்பினான்…

 

அதற்குள் பத்து நிமிடம் ஓடி இருக்க,தனது கேபினில் அமர்ந்து விஜய் அனுப்பிய வேலையை பார்த்தவளுக்கு வேலைகூட அவ்வளவு கஷ்டமாய் தெரியவில்லை…விஜய் சொன்ன பிரதீப் உடன் செய்ய வேண்டும் என சொன்னது தான் அவளுக்கு மிகவும் கஷ்டமான வேலையாய் தோன்றியது…

 

விஜய்க்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல்,குழம்பி தவித்தவள் கடைசியில் ஜெயஸ்ரீயின் உதவி நாடி அவளிடம் சென்றாள்…

 

விஜயின் மேல் இருந்த கோவத்தினால் சீக்கிரம் வேலையினை முடிக்க எண்ணி கோவமாய் வேலையினை செய்து கொண்டு இருந்தவள் தனது தோளின் மீது சுரண்டலினை உணர்ந்து  “என்ன வீணுகுட்டி,என்ன பிரச்சனை இப்போ உனக்கு புதுசா…”என திரும்பி பாராமல் கேட்க…வீணாவிடம் இருந்து பதில் வருவதற்கு பதிலாக சுரண்டலே அதிகமானது…

 

“வீணுகுட்டி எனக்கு நிறைய வேலை இருக்கு,எனக்கு இப்போ உன்கிட்ட விளையாடற மூட்ல இல்ல..என்ன விஷயம் சொல்லு…”என மீண்டும் திரும்பாமல் ஜெயஸ்ரீ கேட்க…சட்டென்று ஜெயஸ்ரீயின் முகத்தை தன் பக்கம் திருப்பிய வீணா ஜெயஸ்ரீயினை பரிதாபமாய் பார்க்க…

 

வீணாவினை கண்ட ஜெயஸ்ரீக்கு அவளின் கண்கள் கலங்கி இருப்பது நன்கு அறிய முடிந்தது…சட்டென்று அவளை ரெஸ்ட் ரூமிற்கு அழைத்து சென்றவள் “என்ன வீணா என்ன ஆச்சு..எதுக்கு இப்படி இருக்க..ஏன் கண் கலங்குற…”என சொல்லி அவளது கண்ணீரை துடைத்துவிட..ஜெயஸ்ரீயினை அணைத்துக்கொண்டு சிறிது நேரம் அவள் மௌனமாய் இருக்க,ஜெயஸ்ரீ வீணாவின் முதுகினை வருடிவிட்டாள்…

 

தன்னை சிறிது சமன்படுத்திக்கொண்டவள் ஜெயஸ்ரீயிடம் இருந்து விலகி அவளை பார்த்து சிரிக்க “ஹே சிரிக்காதடி,உன்ன கொன்னுருவேன்…எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா…பிசாசு..”என மென்மையாய் கண்டிக்க…”சாரி டா..ஏதோ ஒரு மாதிரியா இருந்தது..இப்போ நான் நலம்…சரி போலாமா…”சொல்லிவிட்டு வீணா முன்னால் நடக்க,நடந்த வீனாவினை ஜெயஸ்ரீ பிடித்து நிறுத்தினாள்…

 

“ஹேய்..மவளே என் கிட்ட பொய் சொன்ன கொன்னுடுவேன் உன்ன..ஒழுங்கா என்னன்னு சொல்லு என்னோட டைமையை வேஸ்ட் பண்ணாம..6 மணிக்குள்ள நான் ரிப்போர்ட் சம்பிட் பண்ணனும்,இல்ல ஸ்டீல் என்னை திட்டியோ,முறைச்சியோ கொண்ணுடும்…”என புலம்ப..

 

ஜெயஸ்ரீயினை தயக்கமாய் நோக்கியவள் ”ஸ்ரீ எங்களுக்கும் அவர் வொர்க் குடுத்து இருக்கார்..”என சொல்ல..அதை கேட்டு வாய்விட்டு ஜெயஸ்ரீ சிரிக்க..வீணா அவளை புரியாத பார்வை பார்க்க,தன்னோட சிரிப்பை அடக்கியவள் “யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்..”என சொல்லி மீண்டும் பெரிய சிரிப்பு சிரிக்க,வீணா தன் காதினை பொத்திக்கொண்டாள்…

 

வீணா காதை பொத்திக்கொள்ளவும்,சிறு சிரிப்போடு அவளை பார்த்தவள் பின் வீணாவின் கையினை காதில் இருந்து எடுத்தவள் “சரி விடு..சொல்ல வந்த விஷயத்தை சொல்லு..”என சொல்ல..வீணாவும் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவள் தான் நினைப்பதையும் மறைக்காமல் சொன்னாள்..

 

எல்லாவற்றையும் கேட்டவள் “உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு…ஏன் உன்னோட சிந்தனை எல்லாம் இப்படி போகுது..ஒரு சாப்ட்வேர் கம்பெனிஇல வொர்க் பண்ற பொண்ணு மாதிரியா பேசுற..ஏதோ ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்க..நான் இவனுக்கு கீழ வொர்க் பண்ணமாட்டேன்…அப்படின்னுசின்ன குழந்த மாதிரி அடம்பிடிக்கிற..இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல..ஆமா சொல்லிப்புட்டேன்…”என்றவள்,”ஒழுங்கா போய் வேலை செய்யுற வழியை பாரு…ஏற்கனவே பேப்பர் போட்ட உன்னை இங்க தங்க வைக்கிறதுக்கு நான் பாடாத பாடுப்பட்டேன்…மீண்டும் அவன் கூட சண்டை போடாம,முக்கியமா அவன் சண்ட போடாத மாதிரி இரு..எனக்கு வேலை இருக்கு வீணுகுட்டி,ஸ்டீல் என்னை ஆறு மணிக்கு எல்லாம் ரிப்போர்ட் சப்மிட் பண்ண சொல்லுச்சு…நான் அப்புறமா பேசுறேன்…போய் ஸ்டீல்கிட்ட உன்னோட சம்மதத்தை சொல்லிட்டு சமத்து பிள்ளையா வேலை செய்யுவியாம்..டா டா…”என சொல்லிவிட்டு அவளது கேபினுக்கு சென்றுவிட்டாள்…

 

சிறிது நேரம் ஜெயஸ்ரீ சொன்னதை யோசித்தவள்,அவள் சொல்வதும் சரி எனப்பட விஜயிடம் தனக்கு கொடுத்து இருக்கும் வேலையை முடிக்க சம்மதம் என சொல்வதற்கு முன்னால்,என்ன என்ன வேலை அவளுக்கு ஒதுக்கபட்டு இருக்கிறது என அறிய தனது கேபின்க்கு சென்று விஜய் அனுப்பிய மெயிலினை ஓபன் செய்தாள்…

 

பிரதீப் விஜயின் அறைக்குள் நுழைந்தான்..”என்ன பிரதீப் மெயில் பார்த்தீங்களா..”என கேட்க..”ஹ்ம்ம் பார்த்தேன் விஜய்…கொஞ்சம் கஷ்டம் தான் முடிக்க…பட் என்னால முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன்…”என சொல்ல “தட்ஸ் தி ஸ்பிரிட் மேன்…”என சொன்னவன் “ஆல் தி பெஸ்ட்…”என கை குழுக்கி வாழ்த்து சொன்னவன் பின் பிரதீப்பினை தழுவிக்கொண்டான்…

 

சில நொடிகளுக்கு பிறகு பிரதீப்பினை விடுவித்தவன்,”ஓகே பிரதீப்…நீங்க போய் வேலையை பாருங்க…”என சொல்ல,நகராமல் சிறிது தயங்கி பிரதீப் அமைதியாய் நிற்க..”என்ன பிரதீப் ,என்கிட்ட ஏதாவது சொல்லணுமா அதுக்கு எதுக்கு தயங்கறீங்க…ஹ்ம்ம் சொல்லுங்க..”என ஊக்க..

 

சிறிது நேரம் தயங்கிய பிரதீப் பின் திடமாய் விஜயினை நோக்கியவன் “விஜய் எனக்கு என்னமோவீணா என்கிட்ட ரிப்போர்ட் பண்றதுக்கு பதிலா உங்ககிட்டயே பண்ணலாம்னு நினைக்குறேன்…”என சொல்ல…விஜய் கூர்மையாய் அவனையே பார்த்த வண்ணம் நின்று கொண்டு இருந்தான்..

 

விஜயின் பார்வையை நேராய் சந்திக்க முடியாமல்,தன் முகத்தினை வேறு புறம் திரும்பிக்கொண்டான்…சில நொடிகள் அமைதியாய் இருந்த விஜய் “என்ன பிரதீப் நீங்களா இப்படி பேசுறீங்க..என்னால சத்தியமா நம்ப முடியல..எப்பவும் பர்சனல் விஷயத்தையும்,அப்பீஷியல் விஷயத்தையும் தனி தனியா பார்க்குற ஆளு நீங்க..ஆனா இப்போ என்னடான்னா ரெண்டையும் ஒண்ணா பாக்குறீங்க..எப்போ இருந்து இப்படி..”எனபுருவத்தை உயர்த்தி கேட்க…

 

பிரதீப் “அப்படி எல்லாம் எதுவும் இல்ல விஜய்…எனக்கு அவங்க என் கீழ வொர்க் பண்றதுல எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்ல..ஆனா அவங்களுக்கு என் கூட வொர்க் பண்ண கம்பர்ட்டா இருக்காது…அதான் நான் அப்படி சொன்னேன்..மத்தப்படி ஒண்ணும் இல்ல…”என சொன்னவன் மீண்டும் விஜயிடம் இருந்து வரும் கேள்வி கணையில் இருந்து தப்பிக்க “சரி விஜய்..நான் போய் வேலையை பார்க்குறேன்…”என சொன்னவன் விஜயின் பதிலை எதிர்பாராது வெளியேறிவிட்டான்…

 

விஜயிடம் இருந்து வந்து இருந்த மெயிலினை ஓபன் செய்த வீணா அதனை ஒரு முறை படித்தவளுக்கு விஜய் கொடுத்து இருந்த வேலைகள் எல்லாம் சீக்கிரம் முடிக்க முடியாது என்றாலும்,சிறிது கஷ்டப்பட்டேனும் முடிக்கும் அளவிற்கே இருந்தன..விஜயிடம் சென்று வேலையை செய்ய தொடங்குகிறேன்..வேலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என சொல்ல அவனை காண சென்றாள்…

 

அவள் விஜய் அறையினை சென்று அடைந்த  நேரம் பிரதீப் விஜயிடம் வீணாவிற்காக பேசியது எல்லாம் வீணாவிற்கு தெள்ளதெளிவாய் விழுந்தது..அவளின் கண்களில் அவளை அறியாமலே கண்ணீர் குளம் கட்டியது..விஜயிடம் பேசிவிட்டு வெளியில் வந்தவன் சத்தியமாய் வீணாவினை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த முகத்தில் இருந்தே கண்டுகொள்ள முடிந்தது..வீணாவின் கலங்கிய கண்களில் இருந்தே அவள் விஜயிடம் பேசியதை கேட்டு இருக்கிறாள் என்பது பிரதீபினால் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது..

 

சில நிமிடம் சங்கடமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றவன்,பின் ‘வீணா அது வந்து..”அவளிடம அவன் சொல்லி புரிய வைக்க முயல..வீணா எதுவும் பேசமால் அவனை கலங்கிய கண்களால் ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் விஜய்யின் அறைக்குள் சென்றுவிட்டாள்..

 

தன்னை சமன்படுத்திகொண்டு உள்ளே விஜயின் அறைக்குள் நுழைந்தவள்,”சார் எனக்கு வொர்க் பண்றதுல எந்த ஒரு பிரச்சனையும் இல்ல..நான் நீங்க குடுத்த வேலையை நான் செய்றேன் சார்..”என்றாள்…

சொல்ல…விஜயும் எதுவும் சொல்லாமல் “சரி வீணா நீங்க போய் வொர்க் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க…ஏதாவது சந்தேகம் இருந்தா பிரதீப்கிட்ட கேளுங்க..அவர் ஹெல்ப் பண்ணுவார்..”என சொன்னவன் தன் வேலையில் மூழ்கினான்…

 

“ஹ்ம்ம் …அவர் ஹெல்ப் பண்ணிட்டாலும்…”என தனக்குள் நொடித்து கொண்டவள் அவளது கேபின்க்கு சென்றாள்..போகும் வழியில் பிரதீப் அவளையே பார்க்க அதை கண்டுகொள்ளாமல் தனது இருக்கையில் அமர்ந்தவள்,வேலையினை செய்ய ஆரம்பித்தாள்…

 

பிரதீபிற்கு வீணாவின் விலகல் கஷ்டத்தையும்,வீணாவிற்கு பிரதீப்பின் விலகல் கஷ்டத்தையும் அதிகமே கொடுத்தது..இருந்தும் அவ்வலியினை வெளியில் வெளிப்படா வண்ணம் இருவருமே நன்றாகவே தங்களை சமாளித்துக்கொண்டு,சிரித்த முகமாய் எப்போதும் இருப்பது போல் நடித்துக்கொண்டு இருந்தனர்..

 

வீணாவும்,பிரதீப்பும் இப்படி இருக்க,ஜெயஸ்ரீயும் விஜயும் எலியும் புனையுமாய் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டு இருந்தனர்..இருவருக்கும் இடையில் எப்போதும் வாக்குவாதமும்,ஒருவருக்கு ஒருவர் முறைத்துக்கொண்டு நிற்பதுமாய் இருந்தனர்…

 

நால்வரும் தங்கள் வேலைகளை சீக்கிரம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அனைவரும் தத்தம் வேளையில் மூழ்கி இருந்தனர்..

வீணாவும்,பிரதீப்பும் ஓர் அளவிற்கு வேலையினை முடித்து இருந்தவர்கள் விஜயிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு புறப்பட்டனர்..போகும் முன் வீணா ஜெயஸ்ரீயிடம் “ ஸ்ரீ கிளம்பலாமா ” என கேட்க..

 

ஜெயஸ்ரீ “இல்ல வீனுகுட்டி,இன்னும் வேலையை முடிக்கல..6 மணிக்குள்ள முடிக்கணும்..இப்பவே 5 மணி ஆகிடுச்சு…நீ கிளம்பு..நான் வரேன்..”என சொன்னவள் பின் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்..

 

மணி ஏழு ஆகியும் ஜெயஸ்ரீயினால் விஜய் கொடுத்து இருந்த வேலையினை முடிக்க முடியவில்லை..நேரம் ஆனதை உணர்ந்தவள் விஜய்யிடம் இவ்வளவு நேரம் முடித்த வேலையினை பற்றிய ரிபோர்ட் தயார் செய்தவள்,அத்தை எடுத்துக்கொண்டு அவனை காண சென்றாள்…அவனின் அனுமதிபெற்று உள்ளே நுழைந்தவள்,அவனின் முன் தன்னோட ரிப்போர்ட்டை வைத்தாள்..

 

ஜெயஸ்ரீ கொடுத்த ரிப்போட்டை பார்த்தவனுக்கு மிகவும் திருப்தியாய் இருந்தது அவளின் ஒவ்வொரு வேலையும்,ஆனால் பாதி வேலைகள் இன்னும் முடிக்கபடாமல் இருப்பதை கண்டவன் அவளை கேள்வியாய் நோக்கினான்..அவனின் பார்வையில் தெரிந்த கேள்வினை புரிந்தவள் “மீதியை நாளைக்கு செஞ்சுறேன் ஜெய்…”என பாவமாய் முகத்தை வைத்துகொண்டு அவள் கேட்க…”சரி…”என விஜயின் மனம் தவியாய் தவித்தாலும்,அவனால் அப்படி ஏனோ சொல்ல அவனுக்கு வரவில்லை…

 

விஜய்”இல்ல நீங்க இன்னைக்கு முடிச்சு கொடுத்தே ஆகணும்..”என சொல்ல..ஜெயஸ்ரீக்கு விஜயின் மேல் கோவம் கோவமாய் வந்தது..ஜெயஸ்ரீ “அது எப்படி முடிக்க முடியும்..அதுவும் இல்லாம எல்லாருமே வீட்டுக்கு போய்ட்டாங்க..நான் மட்டும் எப்படி அங்க தனியா உட்கார்ந்து வேலை செய்வேன்..”என கோவமாய் கேட்க…”அது தானே பிரச்சனை “என்றவன் அடுத்த நிமிடம் அவளது கணிணியினை அவனது அறையிலே ஒரு ஓரத்தில் இருந்த டேபிளின் மேல் அவளது கணிணியினை அங்கு வைத்தவன்..பின் “இப்ப நீங்க வொர்க் பண்ணலாம் இல்ல…”என புருவத்தை உயர்த்தி அவன் கேட்க…

 

ஜெயஸ்ரீக்கு அவனின் மண்டையிலே நங்கென்று கொட்ட வேண்டும் போல தோன்றியது…பின் உயர்த்திய அந்த புருவங்களை நீவி விட வேண்டும் என பேராசை எழுந்தது..

 

தன்னோட சிந்தனைகள் போகும் திசை சரியில்லை என உணர்ந்து தலையை உலுக்கிகொண்டவள் கணிணி வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்துகொண்டாள்…விஜய் அவளது செய்கையை புரியாவண்ணம் பார்த்துகொண்டு இருந்தான்…

 

மௌனமான  மலரானேன்

அன்று உன்னை கண்ட முதல்…

எந்நாளும்  எந்தன் உள்ளம்

உன்னையே நினைத்து கொண்டு

இருப்பதன் காரணம் என்னவோ!!!

கண் இமைக்குள்  உன்னை

சிறைபிடிக்க ஆசை கொண்டது

எந்தன் பெண் மனம்….

கடைசியில் உந்தன்கண்  சிறைக்குள்

சுகமாய் சிறைகொண்டேன்

உந்தன் பார்வையில்

என்னை வெட்கம் எனும்

போர்வைக்குள் போர்த்திக்கொண்டேன்

என் வாழ்வில் முதன்முதலாய்…

அற்றை நிலவில் காணும்

நிலவின் முகமும்

என் ஓரப்பார்வையில்

தெரியும் உன் முகமும்

ஒன்றாய் தோன்றியது

என்ன வகையான மாயமோ!!!

என்னில் மாயங்கள் செய்தவன்

சில சமயம் காயங்கள்

செய்வது ஏனோ..??

மாயங்கள் சுகமானதாய்

இருக்க..நீ கொடுத்த

காயங்கள்கூட சில சமயம்

சுகம் தான் அது

நீ குடுத்ததினாலோ…

 

விலகல் தொடரும்…

 

Advertisement