Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-2

 

விலகி விலகி சென்றாலும்

என்னை சுற்றுவது ஏனோ??

விழிகள் என்னை

வட்டமிடுவது ஏனோ???

விலகிச்செல் பெண்ணே!!

என்னை விட்டு தூரச்செல் பெண்ணே…

 

ப்ராஜெக்ட் மேனேஜர் அறை வரவும்மெதுவாக கதவினை தட்டி “மே ஐ கம் இன் சார்“என்றான் பிரதீப்…

 

“எஸ் கம் இன் “என்று கேட்ட கம்பீர குரலை தொடர்ந்து மூவரும் உள்ளே நுழைந்தனர்…உள்ளே நுழைந்தவர்களை கண்டு “ப்ளீஸ் சிட் டவுன் “என்றான் எல்லோராலும் விஜய் என அழைக்கப்படும் விஜயவர்தன்(நம் நாயகன்)…

 

விஜயவர்தன் இருபத்தி ஏழு வயது ஆண்மகன்,6 அடி உயரம்,அதற்கேற்ற உடல்வாகு,அலை அலையான கேசம்,நான் சிரிப்பை துறந்து வெகு நாட்கள் ஆகிறது என சொல்லாமல் சொல்லும் உதடுகள்…கூர்மையாக மற்றவர்களை எடைபோடும் கண்கள்…

 

சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலிங்காவரம்…அப்பா மனோகர் உரக்கடை வைத்துள்ளார்..அம்மா சாரதா பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை…அண்ணன் யாதவன் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியாராக பணிபுரிகிறவன்…

விஜயவர்தனின் அழைப்பை கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த ஸ்ரீ “சிட் டவுன் ஆம்,சிட் டவுன் “என முணுமுணுத்தாள்…அவளின் முணுமுணுப்பை கேட்ட விஜய் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு இல்லை இல்லை முறைத்துவிட்டு “ஓகே கைய்ஸ் கேன் யு கெஸ், ஒய் ஐ கால்ட்யு பீப்புள் “ என்றான்…

 

பிரதீப் மற்றும் வீணா இல்லை என தலையாட்டவும் ஸ்ரீ அமைதியாக விஜயினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்…அவளிடம் என்ன பதில் வரும் என அவளை நோக்கி திரும்பியவன் கண்ணில் தன்னை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டு இருக்கும் அவளை என்ன செய்வது என தெரியாமல் அவளை உறுத்துவிழித்தான்…

 

அதை எல்லாம் அவள் கண்டு கொள்வதாய் தெரியவில்லை…அவள் கண்கள் எல்லாம் விஜயினை மொய்த்ததே தவிர வேறதும் அவள் உற்றுநோக்கவில்லை…. கண் தன் வேலை செய்ய காது அவன் எதற்காக அழைத்தான் என அதை கவனிக்க கூர்மையாய் அதன் வேலையை செய்தது…

 

மீதி இரண்டு பேர் தன் பதிலிற்காக அமைதியாய் அமர்ந்து இருப்பதை உணர்ந்து “ஐ வுட் லைக் டு சே தேங்க்ஸ் டு யு பீப்புள்,பிகாஸ் வீ காட் தி ப்ராஜெக்ட் ப்ரம்தி XY Software Company …”என்றான் மிகவும் சந்தோசமாக…அவனின் சந்தோசம் அனைவரையும் தொற்றிக்கொண்டது

 

ஸ்ரீ “உண்மையா தான் சொல்றீங்களா??,சத்தியமா என்னால நம்ப முடியல…”என்றாள்.

 

“நான் சொல்றதை எதை தான் நம்பி இருக்க,இதை நம்பறதுக்கு”என்றான் கோவமாக இருபொருள் பட…

ஸ்ரீயும் உங்களுக்கு சளைத்தவள் இல்லை நான் என்பது போல் “நம்பும் படியாய் சொன்னால் நம்பலாம்,ஆனா நீங்க தான் பொய்யை மெய்யாக்க பாக்குறீங்க…ஆனா சார் பொய் என்னைக்கும் எத்தனை முறை சொன்னாலும் மெய் ஆகாது..”என்றாள் அவளும் இருபொருள் பட…

 

பிரதீப் மற்றும் வீணா இவர்களின் சண்டையை மாறி மாறி ஒன்றும் புரியாமல் ஊமை படம் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தனர்..அவர்கள் இருவரும் தங்களை மாறி மாறி பார்ப்பதை உணர்ந்து விஜயும் வேறேதும் அவளின் பேச்சுக்கு பதிலேதும் சொல்லாமல்

 

“இந்த ப்ராஜெக்ட் நமக்கு தான்,நம்பளோட பிரசென்டேசன் அவங்களுக்கு பிடிச்சு போச்சு,அதுனால வர புதன்கிழமை குள்ள நம்ப ப்ராஜெக்ட் பத்தி ஒரு டெமோ மாடல் கொடுக்கணும்,சோ நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாடல்-ல வொர்க் பண்ண வேண்டி இருக்கும்,எவ்வளவு சீக்கிரம் முடிக்கணுமோ அவ்வளவு சீக்கிரம் வந்த புது டெக்னாலஜி வச்சி நாம டிசைன் பண்ணனும்…”என்றவன் பிரதீப் மற்றும் வீணாவிற்கு என்ன செய்ய வேண்டும்,எப்படி செய்ய வேண்டும் என விளக்கிகொண்டு இருந்தான்…

 

ஸ்ரீயோ தனக்கு அவன் எதுவும் சொல்லாமல் அவர்களுக்கு விளக்கிகொண்டு இருப்பதை கண்டு நீர் அதிகபட்ச கொதிநிலையில் கொதிப்பதை போல் உள்ளுக்குளே கொதிக்க ஆரம்பித்தாள்…

 

அவர்களுக்கு விளக்கிய விஜய் அவர்களை சென்று வேலையை தொடருமாறு அனுப்பினான்…அவர்கள் வெளியேறவும் ஸ்ரீயும் விஜயின் மேல் உள்ள கோவத்தில் அவனிடம் வேலையை பற்றி எதுவும் கேட்காமல் வெளியேறினாள்…

 

தன் இடத்தில் வந்து அமர்ந்தவளின் வாய் விஜயினை வசைப்பாடிக்கொண்டே இருந்தது…”எவ்வளவு திமிர் அவனுக்கு,எனக்கு ஒண்ணுமே சொல்லல…நான் என்ன ஒழுங்காவா வேலை செய்யல,என் வேலையை நான் என்னைக்கு அப்படியே விட்டு இருக்கேன்,பண்ணட்டும் அவங்களே பண்ணட்டும்,எனக்கு என்ன வந்தது,பிரெசென்டேசன் அப்போ என்னை ஏதாவது கேட்கட்டும் அப்போ இருக்கு அவனுக்கு…”என தனக்குள் புலம்பி கொண்டு இருந்தாள்…

 

அவளின் புலம்பலை தடுப்பது போல் அவளின் மேசையின் மேல்இருந்த போன் அலறியது….எடுத்து பேசியவளை விஜய் தான் தனது அறைக்கு வருமாறு பணித்தான்…மீண்டும் அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டே அவனின் அறைக்கு அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்…

 

இவளை முறைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தவனை கண்டு மனதில் எச்சிலை கூட்டி விழுங்கியவள் அவனின் முன்னால் அவனை விட இன்னும் திமிராக நின்று கொண்டு “இதற்கு தான் என்னை வரச்சொன்னீர்களா??…” என்றாள் மொட்டையாக….

 

விஜயோ புரியாத பாவத்துடன் “எதற்கு “என்றான் குழம்பிய முகத்துடன்… அவனுக்கு அவள் எதைபற்றி சொல்கிறாள் என புரியவில்லை….. .

 

ஸ்ரீ ”ஹீம்ம் எல்லாம் என்னை தனியா சைட் அடிக்கத்தான்…”என்றாள் குறும்போடு கண்ணை சிமிட்டி…அவளின் குறும்பில் இளக தொடங்கிய மனதை கட்டுபடுத்திக்கொண்டு “உன் கற்பனை வளம் எல்லாம் நல்லா தான் இருக்கு,அதை கொஞ்சம் அடக்கி வை,இல்ல கடைசியில ரொம்ப வருத்தப்படுவ…அவ்வளவு தான் நான் சொல்வேன்..”என்றான் இறுக்கமாக…

 

அவனின் இளகிய மனதை கண்டுகொண்டவள் “பார்க்கலாம்,யார் கஷ்டப்பட போகறாங்கன்னு,என் கிட்ட வாயாட தான் கூப்பிட்டீங்களா ஜெய் …”என்றாள் உருக்கமான குரலில்…

 

விஜய் “ச்ச நீ எல்லாம் என்ன பொண்ணு,ஒரு பொண்ணு மாதிரியா நடந்துக்குற…”என்றான் கோவமாக…

 

அவனின் வார்தைகள் கொடுத்த வலியினை அவனுக்கு காட்டாமல்” “வார்தையை அளந்து பேசுங்க,அப்புறம் நீங்களே நினைச்சாலும் அள்ள முடியாது,பிறகு நீங்க பின்னாடி இதுக்கு எல்லாம் சேர்த்து வருத்தப்படவேண்டியது தான்…”என்றாள் அவனுக்கு எச்சரிக்கையாக…

 

விஜய் “நான் முன்னாடி,பின்னாடி கஷ்டப்பட்டா உனக்கு என்ன,முதல்ல நான் இப்போ கொடுக்குற வேலையை பாரு,பிறகு வர பிரச்சனையை பற்றி பேசலாம்…”என்றான் கிண்டலாக…

 

ஸ்ரீ “பாரு பாருன்னா எப்படி சார்,வேலையை பற்றி தான் நீங்க எதுவும் சொல்லலையே “என்றாள் பவ்யமான முகத்துடன்….

 

அவளின் பவ்யமான முகத்தை பார்த்தவன் “இதுலஉன்னோட வொர்க் பத்தி டீடைலா இருக்கும்,படிச்சு பாரு,இது யாருக்கு தெரியக்கூடாது,காண்பிடன்ஷியல்,புரியலன்னா என்னை கேளு,இப்போ நீ போலாம் ..”என்றான் இன்னும் இறுக்கமாக…

 

அவனின் இப்போதைய இறுக்கத்தையும்,முன்னாடி இளகிய அவனின் மனதினையும் அவனின் கண்கள் மூலம் கண்டவள் இப்போது விடுவாளா “சரி சார்…வரேன்…ஆனா போறதுக்கு முன்னாடி ஒண்ணு…நீங்களா விலகி விலகி போனாலும் ,நான் உங்களை எப்போதும் விடமாட்டேன்…வரட்டா..”என்று அவன் கண்களை ஆழ்ந்து நோக்கி சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்…

 

அவள் சென்ற பிறகு விஜய் ஸ்ரீயினை பற்றி தான் நினைத்துகொண்டு இருந்தான்..என்ன மாதிரியான பெண் இவள் எப்போது பதுங்கும் புலியாய் இருக்கிறாள்,எப்போது சீறும் பாம்பாய் இருக்கிறாள்…இவளின் குணம் புரியவில்லையே…அவனுக்கு அவளை பற்றி நினைக்க நினைக்க தலைவலி வரும் போல் இருந்தது…ஒரு கப் டீ குடித்தால் தான் நன்றாக இருக்கும் என எண்ணி டீ வரவழைத்துக் குடித்தான்…

 

குடித்தபிறகு ஓர் அளவிற்கு வலிகுறைந்தது போல் உணர்ந்தான்..பின்னர் தனது தாய் சாரதாவை அழைத்து பேசினான்..“அம்மா,எப்படி இருக்கீங்க…”என்றான் விஜய்…

 

சாரதா “எனக்கு என்னப்பா,நான் நல்ல இருக்கேன்,நீ எப்படி இருக்க..”

 

விஜய் “எனக்கு என்ன அம்மா,நான் நல்லா இருக்கேன்..அப்பா,அண்ணா எல்லாம் எப்படி இருக்காங்க…”

 

சாரதா “எல்லோரும் நல்ல இருக்கோம் பா…அப்புறம் ஒரு விஷயம் அண்ணனுக்கு பொண்ணு பார்த்து இருக்கோம்…பொண்ணு இஞ்சினீரிங் படிச்சி இருக்கா…இப்போ பெங்களூர்ல தான் இருந்து வொர்க் பண்ணுது,நமக்கு சொந்தகார பொண்ணு தான்…நீயும் வந்தீனா,போய் பார்த்துட்டு வந்தடலாம்…என்ன சொல்றப்பா…”.

 

விஜய் “எனக்கு ரொம்ப முக்கியமான வேலை வந்துடுச்சு அம்மா,,என்னால எங்கயும் நகர முடியாது…உங்களுக்கு,அண்ணாக்கு பிடிச்சு இருந்தா போதும்,வேற என்ன வேணும்,எனக்கு ஓகே தான் அம்மா,நீங்களே முடிவு பண்ணிடுங்க..”.

 

சாரதா  “என்னப்பா இது ,ஒரு நல்லது கெட்டதுக்குக்கூட  வரமுடியாத அளவிற்கு என்ன தான் வேலையோ..சரி பா உடம்பை பார்த்துக்கோ…அட்லீஸ்ட் தீபாவளிக்கு ஆவது வந்து சேரு ..”

 

விஜய் “சரி மா …கண்டிப்பா வர பாக்குறேன்…”

 

சாரதா  “வர பாக்குறேன்னு அதுவும் டவுட் தானா…ஏன் தான் இப்படி இருக்கியோ …அப்புறம் உன்  அப்பாக்கும் ,அண்ணனுக்கும்  போன் பண்ணி சொல்லிடு…அப்படி இல்லைனா ரெண்டு பெரும் என்னை பிடி பிடின்னு பிடிச்சுக்குவாங்க ..சரியா “..

 

விஜய் “சரி மா…நான் போன் பண்ணி சொல்லிடறேன் ..இருந்தாலும் நீங்க இவ்வளவு பயப்படக்கூடாது மா…”என்றான் சின்ன சிரிப்போடு…அவனின் சின்ன சிரிப்பினை கேட்ட தாயின் உள்ளம் வேதனையில் துடித்தது…இவன் இப்படி பேசி,சிரித்து எத்தனை வருடங்கள் ஆகிறது…

 

அந்த பக்கம் விஜயின் “அம்மா,அம்மா” என்ற அழைப்பில் தன்னிலை வந்த சாரதா அவனுக்கு நிகராக கிண்டலில் இறங்கினார் …

 

“நான் என்ன பா பண்றது, எனக்கு தான யாருமே சப்போர்ட்க்கு இல்லையே…நீயும் அங்க இருக்க,நான் இவங்களுக்கு பயந்தா தான் எனக்கு சாப்பாடு கிடைக்கும் இல்லைனா ,நான் பட்டினி கிடக்க வேண்டியது தான்…”என்றார் சலிப்பாகவும்,வேதனையாகவும்…

 

விஜய் “அம்மா மறைமுகமா நான் உங்கக்கூட  இல்லைன்னு சொல்றீங்க …எனக்கு உங்க வேதனை புரியுது மா ..இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க …என் செல்ல அம்மா இல்ல ..”

 

சாரதா“இன்னும் கொஞ்ச நாள்ல என்ன பண்ண போற,கல்யாணமா பண்ணிட்டு வந்திட போற ..அடபோப்பா…நீயும் வேஸ்ட் உங்க அண்ணனும் வேஸ்ட்…”என்றார் சலிப்பாக …

 

விஜய் “அம்ம்ம்ம்மா …என்னது இது…இப்படி ஆகிட்டீங்க...இது எல்லாம் சரியில்ல சொல்லிட்டேன் …”

 

சாரதா “நான் மட்டும் என்ன தா பா பண்றது…உங்க அண்ணனுக்கு இருபத்தி ஒன்பதுமுடிய போகுது..பொண்ணு பார்க்கலாம்னு சொன்னா..அப்படியே அலறி அடிச்சிட்டு இங்க இருந்து சென்னை போயிடறான்… நீ என்னடான்னா இந்த பக்கம் தலைவச்சிக்கூட படுக்க மாட்டன்னு இருக்க,உங்க வயசுல இருக்குற பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி இரண்டுகுழந்தை இருக்கு…ஆனா நீங்க இன்னும் வேலை வேலைன்னு அதையே கட்டிட்டி அழுவிறீங்க…நான் மட்டும் என்ன தான் பண்றது…உங்க அப்பாகிட்ட சொன்னா புள்ளைகளை போர்ஸ்  பண்ணாதன்னு எனக்கு ஒரே அட்வைஸ்…”என்று புலம்பி தள்ளிவிட்டார்…

 

அவரின் புலம்பலை கேட்ட விஜயிற்கு அவரின் மனநிலை நன்கு புரிந்தது…”சரி மா ..நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க…நான் யாதவன் கிட்ட பேசுறேன் …அண்ணா கண்டிப்பா பொண்ணு பார்க்க வருவான் …டோன்ட் வொர்ரி அம்மா..அப்பாவை கேட்டதா சொல்லுங்க,.அப்படியே அத்தை,மாமா ,சித்தி ,சித்தப்பா,வாண்டுஸ் எல்லோரையும் ரொம்ப ரொம்ப கேட்டதா சொல்லுங்க … எனக்கு வொர்க் இருக்குமா…நான் ப்ரீ யா இருக்கும் போது போன் பண்றேன் ..வச்சிடட்டுமா ” என்றான்.

 

அவனின் குரலில் இருந்தே அவனின் வேலையின் பளுவினை புரிந்துகொண்ட சாரதா “சரிப்பா,எனக்கும் கிளாஸ்க்கு போகணும்,யாதவ் கிட்ட பேசு,அப்படியே நீயும் முடிஞ்சா வரப்பாரு …எல்லோரும் உன்னை பற்றியும் கேட்பாங்க ,அவங்க கேட்கிற கேள்விக்குஎல்லாம் பதில் சொல்லி மாளாது …”என்று சொன்னவர் அவனிடம் இருந்து “சரி “ என்ற பதிலை கேட்ட பிறகே வைத்தார்…

அவனின் அண்ணனுக்கு போன் செய்து நலம் விசாரித்துவிட்டு சிறிது நேரம் பேசியவன் அவனை பெண் பார்க்க சென்று வரச்சொன்னான்…

 

யாதவ் “ஏன் டா …நீ தான் எதுவும் சொல்லாம இருந்த இப்போ நீயுமா…இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் டா …இப்பவே என்ன அவசரம்,நான் இன்னும் PH.D முடிக்கலாம்ன்னு பாக்குறேன் …கல்யாணம் ஆனா அது எல்லாம் பண்ண முடியாது …நீயாவது என்னை புரிஞ்சிக்கோயேன்…”என்றான் இறைஞ்சலாக…

 

விஜய் “அண்ணா உன் ஆசை நியாயம் தான், நான் இல்லைன்னு சொல்லல,அதற்காக அம்மாவை வருத்தப்பட வைக்கலாமா…நீ சும்மா போய் பொண்ணு பார்த்துட்டு வா… அதற்கு பிறகு உனக்கு பொண்ணு பிடிக்கலன்னு சொல்லி சமாளிச்சிக்கலாம்…அப்புறம் மத்தது எல்லாம் பேசிக்கலாம்….என்ன நான் சொல்றது….ப்ளீஸ் அண்ணா…ஓகே சொல்லு ..அம்மா பாவம் ரொம்ப வருத்தப்பட்டாங்க…”என்றான் கெஞ்சுதலாக..

 

நிறைய நாட்கள் கழித்து தன்னிடம் ஒன்றை கேட்கும் தம்பிக்காக “சரி” என்றான்…தன் அண்ணன் சொன்ன சரி என்ற வார்தையை கேட்டு தான் இருக்கும் நிலை மறந்து குத்தாட்டம் போட்டான்…தன் தாயின் வருத்தத்தை இத்தனை நாள்கள் கழித்து போக்கிய சந்தோசம் அவன் முகத்தில்…

 

அண்ணனிடம் நன்றியினை தெரிவித்துவிட்டு, அழைப்பை துண்டித்துவிட்டு குத்தாட்டம் போட்டுக்கொண்டே திரும்பியவன் கண்ணில் சிலையென தன்னை பார்த்து கொண்டு இருந்த ஸ்ரீயினை கண்டு அவனும் சிலையானான் …

 

இத்தனை நாள் பார்த்திராத அளவு சந்தோசத்தில் துள்ளிய விஜயினை கண்ட ஸ்ரீ சிலையென இருக்க,இப்படி இடம் பொருள்,ஏவல் தெரியாமல் ஆடிய தன்னை நினைத்தே வெட்கி சிலையாய் நின்றான் விஜய்….

 

இரண்டு சிலையில் முதலில் சுயநினைவிற்கு வந்ததுவிஜய் தான்…இவ்வளவு நேரம் இருந்த துள்ளல் எல்லாம் மறந்து என்பதைவிட  மறைத்து “என்ன ” என்றான்  ஒற்றை வார்த்தையாக…

 

ஸ்ரீ “ஒரு டவுட்…நீங்க தான் டவுட் னா உங்களை கேட்க சொன்னீங்களே.. அதான் எனக்கு ஒரு டவுட்…” கிண்டலாக…அவளின் கிண்டலை கண்டு கொண்டவன் “எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு  கூப்பிட்றேன் …அப்போ வா …அது வரையும் உனக்கு வர டவுட் எல்லாவற்றையும் நோட் செய்து வை …நான் சொல்றேன் ..”என்றான்.

 

“ரொம்ப முக்கியமான வேலையோ ஜெய்..அப்படி என்ன வேலை ..குத்தாட்டம் போடறதா…என்ன…??? பொண்ணு எதாவது ஓகே சொல்லுடிச்சா..அதான் அய்யா ஹாப்பி ஆ…ஆனா பாருங்க ஜெய் இந்த சந்தோசம் உங்களுக்கு நிலை இல்ல…ஏன்னா… நான் தான் உங்க லவர்,வைப்,தோழி,எதிரி எல்லாம்…”என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு திரும்பியவள் ,மீண்டும் வந்து அவனின் கண்ணை நோக்கி ” I Love You ஜெய்…”என்று சொல்லும்போது இரண்டு கண்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன …ஆனால் நொடி பொழுதில் விஜயின் கண்கள் விலகி வேறெங்கோ வெறித்தன…

 

கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே…

 

விலகல் தொடரும்…

Advertisement