Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -18

 

தேர்விற்கு நேரம் ஆனதை உணர்ந்து ஜெயஸ்ரீ,சுஜா,சுபஸ்ரீ மூவரும் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்…சுஜா “ஜெயஸ்ரீ,சுபா நீங்க ரெண்டு பேரும் ஒரே எக்ஸாம் ஹால்லா தான் இருக்கும்…எனக்கு வேற ஹால்லா இருக்கும்..நான் என் கிளாஸ் மேட்ஸ்கூட சேர்ந்து போறேன்..நீங்க ரெண்டு பேரும் போறீங்களா…??”.

ஜெயஸ்ரீ “ஹ்ம்ம் சரி சுஜா,நாங்க போறோம்…ஆனா சாப்பிட்டு போலாம் வா…”என சொல்லவும்,சுஜாவும் சரி என்று அவர்களோடு சாப்பிட சென்றாள்..மூவரும் சாப்பிட்டு முடித்து வெளியில் வரவும் அங்கு சஞ்சீவ் வரவும் சரியாய் இருந்தது….

சஞ்சீவ் ஜெயஸ்ரீயினை பார்த்து முறைக்கவும்,தற்செயலாய் அவனின் முகத்தை பார்த்த ஜெயஸ்ரீக்கு அவனின் கோவம் அதிர்ச்சியாய் இருந்தது…இவன் யாரு,எதுக்கு என்னை பார்த்து இப்படி முறைக்குறான்..என நினைத்துக்கொண்டு அவனை கடந்து சென்றாள்…

ஜெயஸ்ரீக்கு அவன் யாரென்று தெரியவில்லை…இதற்கு முன் அவள் அவனை எங்கவும் பார்த்ததும் இல்லை…அவளுக்கு அவன் வருவின் நண்பன் என்றும் தெரியாது..ஆனால் சஞ்சீவ்க்கு ஜெயஸ்ரீயினை நன்கு அடையாளம் காண முடிந்தது…அன்று வருவிடம் பேசியதை நினைவு கூற கூட அவனுக்கு தேவையில்லை..ஏன் எனில் ஜெயஸ்ரீயின் முகம் அவன் மனதில் பதிந்து போனது…அன்று அவளை வருவிடம் சேர்ந்து  பார்த்ததோடு சரி,அதன்பிறகு சஞ்சீவினால் அவளை பார்க்கமுடியவில்லை…

சஞ்சீவிற்கு வரு ஜெயஸ்ரீயினை நேசிப்பது தெரியாது…நந்துவின் அத்தை பெண் என்று அன்று வரு சொன்ன போது தான் அவனுக்கு தெரியும்…ஆனால் அதன் முன்பே ஜெயஸ்ரீயினை சஞ்சீவ் பார்த்து இருக்கிறான்…

சஞ்சீவிற்கு தெரிந்த பெண் தங்கை முறை ஆகுபவள் அதே கல்லூரியில் 3 ஆம் ஆண்டு கலை கல்லூரி படித்துக்கொண்டு இருந்தாள்…அவளுக்கு அவளின் வீட்டில் இருந்து துணியும் பணமும் கொடுத்து அனுப்பி இருந்தனர்…அதை கொடுக்க அவர்களது ஹாஸ்டல் வந்து இருந்தவனின் கண்ணில் முதலில் பட்டது துள்ளிகுத்தித்துக்கொண்டு ஓடி வந்த இரு பெண்கள்…அதில் ஒருவளின் முகம் அப்படியே பதிந்து போனது அவன் அறியவில்லை…

சில நிமிடங்கள் அவளது கள்ளமில்லா முகத்தினையும்,அவள் பேசுவதையும் ரசித்தவன் அதன் பின் தன் நிலைக்கு வந்தவன் அவனின் உறவுக்கார பெண்ணிடம் அவளது பெற்றோர் கொடுத்த துணியினையும் பணத்தினையும் கொடுத்துவிட்டு,அவளிடம் நலம் விசாரித்துவிட்டு ,செல்லும்முன் மீண்டும் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு தான் சென்றான்..  

அதன்பிறகு அவன் அவளை பார்த்தது வருவுடன் பேசும்போது தான்..அவனுக்கு அப்போது வந்த பொறாமைக்கு அளவே இல்லை…அதுவும் இல்லாமல் அவனின் உயிர் நண்பனான வரு எதையும் தன்னோடு பகிர்ந்துகொள்பவன்,முதன் முதலாய் தன்னிடம் ஒரு பெண்ணை பற்றி மறைத்தது அவனுக்கு அவளின் மேல் இன்னும் கோவத்தினை அளித்தது…ஏன் தான் இப்படி நினைக்கிறோம் என்று அவன் எண்ணியும் பார்க்கவில்லை…எதையும் வருவிடம் பகிர்ந்து கொள்ளும் தானும் ஏன் தனக்குள் ஏற்படும் இவ்வுணர்வினை வெளிப்படுத்தாமல் இருக்கிறோம் என அவன் சிறிதும் எண்ணவும் இல்லை…

அப்போதே அவன் எண்ணி பார்த்து இருந்தால்,தன்னால் ஏற்படும் விளைவுகளையும்,பாதிப்பினையும் தடுத்து இருக்க முடியும்…ஆனால் அவன் அதை சிந்திக்காமல் இருந்தது தான் விதியின் சதி வேலையோ??…

கால்கள் தன் பாட்டிற்கு நடந்துகொண்டு இருக்க,மனமோ தன்னை முறைத்தவனை பற்றியே யோசனையில் இருந்தது..கல்லூரி வளாகம் வரவும் சிந்தனையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சுஜாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பிவிட்டு சுபாவும்,ஜெயஸ்ரீயும் தங்களது எக்ஸாம் ஹால் நோக்கி சென்றனர்…

எக்ஸாமிற்கு படிப்பதிலும்,ரெகார்ட் நோட் எழுதுவதிலும் அவர்களுக்கு நேரம் பறந்தோடிகொண்டு இருந்தது..இந்நிலையில் வருவிற்கு ப்ராக்டிகள் எல்லாம் முடிந்து எக்ஸாம் எழுத வேண்டி இருப்பதால் அதற்கான வேலையில் இறங்கி இருந்தான்…

எப்போதும் வரு 24 மணி நேரமும் படிக்கும் மாணவன் கிடையாது..எக்ஸாம் முதல் நாள் இரவு மட்டுமே படிக்கும் மாணவன்,அதைதவிர அவனுக்கு எப்போதும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் செய்யும் ஆசை கொண்டவன்,அரட்டை அடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவன் அவனுடைய மடிக்கணினியில் ஏதாவது ப்ரோக்ராம் செய்து பார்த்து ஏதாவது மாற்றங்களையும் புதுப்புது ப்ரோக்ராம்களை செய்து பார்ப்பான்…

அப்போது சஞ்சீவ் சிறிது கோவமாய் அறைக்குள் நுழைவதை பார்த்தவன் “என்னடா,சாப்பிட போன இப்போ இப்படி கோவமா வர,மாஸ்டர் ஒழுங்கா சாப்பாடு செய்யலையா…”என்றான் கிண்டலோடு…

அவனின் கிண்டலில் சஞ்சீவிற்கு கோவம் வந்தாலும் அதை அவனிடம் காட்டிகொள்ளாது “அப்படி எல்லாம் இல்ல டா..P.E.T மாஸ்டர் கேர்ள்ஸ் ஹாஸ்டல் மெஸ்ல இருக்குறதா சொன்னாங்க,அங்க போனா மனுஷன் எங்கவோ வெளியில போயிட்டாராம்,எத்தனை முறை அவரை பார்க்க நான் அலையிறது..”என அவன் பொய்யான எரிச்சலோடு பேச அவனின் எரிச்சல் உண்மை என நம்பியவன்

“டேய் டென்ஷன் ஆகாத விடு…அவரை பார்த்தே ஆகுணுமா,அவர் வந்த பிறகு சொல்லு,சார் நான் உங்களை பார்க்க வந்தேன்,நீங்க இல்லை அப்படின்னு,அவர் புரிஞ்சிப்பார்…”என்றான் அவனுக்கு ஆறுதலாக…

“ஹ்ம்ம்..அவரு புரிஞ்சிப்பார்டா..ஆனா சிங்கம் புரிஞ்சிக்கணுமே.இப்போ மட்டும் பேர் கொடுக்கல அப்படினா லிஸ்ட்ல சேர்க்க மாட்டாங்க.”என்றான் உண்மையான கவலையில்..அவனின் கவலையை புரிந்த வரு “அவரோட போன் நம்பர் வார்டன் கிட்ட இருக்கும் டா,வாங்கி நீ போன் பண்ணி சொல்லு…அவர் சேர்த்துபார்..”என சொல்ல அவனின் யோசனை சரி எனப்படவும் வார்டன் பார்க்க சென்றான்…

நாட்கள் ஜெட் வேகத்தில் நகர,அனைவருக்கும் செமஸ்டர் எக்ஸாம் முடிந்து வீட்டிற்கு செல்ல அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துக்கொண்டு இருந்தனர் மூவரும்..

சுஜாவை அழைத்து செல்ல சதீஷ் வருவதால் அவள் மிகவும் சந்தோசமாய் இருந்தாள்…அவளின் மோனநிலையை கண்ட சுபாவும்,ஜெயஸ்ரீயும் ஒருவரை ஒருவர் பார்த்து மர்ம சிரிப்பு சிரித்துக்கொண்டு இருந்தனர்…

அவர்களை கவனிக்காமல் தன் நிலையில் இருந்தவள் பட்டென்று தன் முதுகில் அடி விழவும் அதிர்ந்து நோக்கியவள் முன்னால் ஜெயஸ்ரீ சிரிப்போ நின்று கொண்டு இருந்தாள்..   

சுஜா “என்ன ஜெய என்னை எதுக்கு அடிச்ச…”என்றாள் பாவமாய்…

ஜெயஸ்ரீ “நீ மாயலோகத்துல இருந்தது எனக்கு பிடிக்கல அதான் அடிச்சேன்…”என்றாள் அவள் பொய்யான கோவமாய்…

ஜெயஸ்ரீயின் முகத்தினை கண்டு அவள் கோவமாய் தான் பேசிகிறாள் என எண்ணியவள் “ஸ்ரீ அப்படி எல்லாம் எதுவும் இல்ல,சும்மா தான் உட்கார்ந்துட்டு இருந்தேன்…”என்றாள் பாவமாய்…அவளை பார்த்து சுபாவிற்கும் ஜெயஸ்ரீக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வர வாய்விட்டு சிரித்தனர் இருவரும் அவர்களோடு தானும் சேர்ந்து இணைந்துக்கொண்டாள்…

தங்களை மறந்து சிரித்துக்கொண்டு இருந்தவர்களை கலைத்தது ஜெயஸ்ரீ அலைபேசியின் அழைப்பு…யாரென்று எடுத்து பார்த்தவளின் கண்ணில் தெரிந்தது “நந்தி “என மிளிரும் பெயரை கண்டவள் புன்னகையுடனே அதனை எடுத்து காதிற்கு கொடுத்தாள்…

“ஹே ஜெயா,என்ன செய்யுறீங்க இவ்வளவு நேரமும்,நான் வெயிட் பண்றேன் சீக்கிரம் வாங்க…”என்று பரபரத்தான் நந்து..

அவனை மனதிற்குள் அர்ச்சித்தவள் “இதோ 5 நிமிஷம் வந்துடறோம் நந்து,இன்னும் சுஜா மாமா வரல போலவே “என அவள் இழுக்கவும்…

“ஹே அதுக்கு என்ன,கொஞ்சம் நேரம் அவ கூட பேசிட்டு இருக்கலாம்…நீங்க வெளிய வாங்க..உன்னோட வார்டன் என்னை முறைச்சி பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கு..”என அவன் பல்லை கடித்துக்கொண்டு சொல்லவும் அவன் படும் அவஸ்தையை காணாமலே அவளுக்கு சிரிப்பு பொங்கியது…

தான் சிரிப்பது மட்டும் அவனுக்கு தெரிந்தால் கொலைவெறிக்கு ஆகிடுவான் என எண்ணி தனக்குள் புதைத்தவள் வெளியே பவ்யமாக “சரி உடனே வரோம்..”என்று அவனிடம் சொன்னவள் பிறகு இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்..

அவள் வரவும் சுஜாவின் கணவன் சதீஷ் சுஜாவிற்கு அழைக்கவும் சரியாய் இருந்தது..சதீஷின் அழைப்பை கண்டதற்கே சுஜாவின் முகம் சூரியனை போல பிரகாசித்தது..அழைப்பை எடுத்தவள் “ஹெல்லோ மாமா..”என சொன்னவளின் குரலிலிலோ அப்படி ஒரு குழைவு…

அவளினையே வைத்தகண் வாங்காமல் சுபாவும் ஜெயஸ்ரீயும் பார்த்துக்கொண்டு இருந்தனர்…நாம் இத்தனை நாள் பார்த்த சுஜாவா இது என்று அவர்களுக்கு வியப்பாய் இருந்தது..அவளது முகமோ வெக்கத்தால் சிவந்து போய் கன்னங்கள் இரண்டும் செம்மை நிறம் கொண்டது…

“ஒஹ்..அப்படியா…”

“………..”.

“இதோ ஒரே நிமிஷம் நானே வந்துடறேன்…”

“………….”

“அது எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல…”என சொன்னவள் தோழிகளிடம் திரும்பி “ஹே அவங்க கேட் கிட்ட வெயிட் பண்றாங்கலாம்..நீங்க இங்கவே இருங்க..நான் ஒரு நிமிஷத்துல வந்துடறேன்…”என்றவள் அவர்களின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சிட்டாய் பறந்தாள் எதிரில் இருக்கும் நந்துவை கூட கவனிக்காமல்…மற்ற இருவரும் திகைத்துபோய் நின்று கொண்டு இருந்தனர்,,,

அவள் ஓடுவதை கண்டு சிரித்தவன் “என்ன மேடம்ங்களா…பார்த்தீங்களா உங்க ப்ரண்டை..ஷ்ஷ் அப்பா ..பசங்க தான் பிகரை கண்டா ப்ரண்டை கலட்டிவிடுவாங்க அப்படின்னு கேள்வி பட்டு இருக்கேன்..ஆனா இப்போ பொண்ணுங்களும் அப்படித்தான் போல…”என்றான் கிண்டலோடு…அவனை முறைத்து பார்த்த இவர்களும் தன் கைகளில் இருந்த துணி மூட்டைகளை எல்லாம் அவனின் மேல் தூக்கி எரிந்துவிட்டு காரின் அருகில் சென்று நின்றுக்கொண்டனர்…

அவர்களின் இச்செயலை எதிர்பார்க்காத நந்து கொஞ்சம் தடுமாறி தான் போனான் தன் மேல் துணி மூட்டைகள் விழவும்… தன்னை நிதானபடுத்திக்கொண்டு நின்றவன் கண்ணில் காருக்கு அருகில் நின்று கொண்டு இருந்த ஜெயஸ்ரீயும் சுபாவும் தெரிந்தனர்..

அவர்களை பார்த்து கொலைவெறிக்கு ஆளானவன் அவர்கள் போட்ட துணி மூட்டைகளை எல்லாம் அங்கவே போட்டவன் வேகமாக சென்று காருக்குள் அமர்ந்து கொண்டான்..

அவனை பார்த்து அதிர்ந்து நின்றவர்கள் வேறு வழி இல்லாமல் துணி மூட்டைகளை எடுத்து வந்து காருக்கு பின் வைத்தவர்கள் சென்று ஹாஸ்டலின் வாயிலில் அமர்ந்து கொண்டனர்..

அவர்கள் வந்தால் புறப்படலாம் என்று எண்ணி இருந்தவனுக்கு இருவரின் செயல் மேலும் கோவத்தினை கொடுத்தது..எதுவும் பேசாமல் கோவத்தோடு வருவிற்கு அழைத்தான்..

வரு “ஹெல்லோ.நந்து சொல்லுடா..எப்படி இருக்க…??”

நந்து “எனக்கு என்ன கேடு,நான் ரொம்பவே நல்லா இருக்கேன்,நீ எங்க இருக்க “என்று ஜெயஸ்ரீ மற்றும் சுபாவின் மேல் இருந்த கோவத்தினை வருவின் மேல் காட்டினான்..

வருவிற்கும் இப்போது பேசும் நந்துவின் பேச்சு புரியாத புதிராய் இருந்தது..குழம்பி போனவன் “என்னடா,என்ன ஆச்சு,எதுக்கு இவ்வளவு கோவமா பேசுற…”என்றான் பதற்றத்தோடு…என்னவோ ஏதோ என்று நினைத்துக்கொண்டு…

வரு சொல்லியதை கேட்ட பிறகு தான் “தான் அவனிடம் கோவமாக பேசிவிட்டோம்…”என உணர்ந்து தன்னை தானே கொட்டிகொண்டவன் “சாரி டா..ஒன்னும் இல்ல…ஆமா நீ எங்க இருக்க…”என்றான்..

வரு“நான் வீட்டுக்கு போறதுக்கு ரெடி ஆகிட்டு இருக்கேன் டா…ஆமா நீ எங்க இருக்க…”.

நந்து “நான் உங்க காலேஜ்ல தான் டா இருக்கேன்…ஜெயாவையும் சுபாவையும் அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன்..”

வரு “ஓ அப்படியா சரி டா…போகறதுக்கு முன்னாடி முடிஞ்சா ஹாஸ்டல் வந்துட்டு போடா..நானும் கொஞ்ச நேரத்துக்குள்ள கிளம்பனும்…”

நந்து “அப்படியா…சரி நீ வேணும்னா ஒண்ணு பண்ணு…நானும் கிருஷ்ணகிரி வழியாதான போறேன்..அப்படியே உன்னை அங்க விட்டுட்டு போறேன்…”என்றான் உற்சாகமாக…

ஆனால் அவ்வோசனையை கேட்ட வருவிற்கு தான் ஒரு பக்கம் உவர்ப்பாய் இல்லை…அவனுக்கு தெரியும் நந்து வந்து இருப்பது ஜெயஸ்ரீயினையும்,சுபஸ்ரீயினையும் அழைத்து செல்ல தான் என்பது…ஒரு பக்கம் அவளை பார்க்கலாம் என்ற அசையும்,சந்தோசமும் இருந்தாலும் கடைசியில் வேண்டாம் என்று முடிவு எடுத்தவன் “இல்லை நந்து,நான் பஸ்ல போயிக்கிறேன்..உனக்கு எதுக்கு தேவையில்லாத சிரமம் எல்லாம்..”என்றான்..

 

அவனின் பதிலில் கோவம் அடைந்த நந்து “டேய்..என்ன ரொம்ப பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற..எனக்கு எந்த ஒரு சிரமும் இல்லை…என்னோட நண்பனுக்கு ஹெல்ப் பண்ணாம நான் வேற யாருக்கு ஹெல்ப் பண்ண போறேன்…ஒழுங்கா சீக்கிரம் வந்து சேரு..”என்றவன் அழைப்பை துண்டித்தான்…

 

சிறிது நேரம் அழைபேசியை வெறித்த வரு பிறகு பெருமூச்சு ஒன்றை வெளிபடுத்திவிட்டு தன் நண்பர்களிடம் சொல்ல சென்றான்…

 

அங்கே மூவரும் சந்தோசமாய் சிரித்து பேசி,கிண்டலடித்திக்கொண்டு இருந்தனர்…அவர்களின் அருகில் தயக்கமாய் சென்று அமார்ந்தான் வரு…

 

அவனின் முகத்தினை பார்த்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்த சஞ்சீவ் “என்னடா என்ன ஆச்சு,ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..”என்று விசாரித்தான்…

 

மூவரையும் ஒரு முறை தன் பார்வைகளால் வலம் வந்தவன்,தன் தலையினை தொங்க போட்டுக்கொண்டு “ஒண்ணும் இல்ல டா…நந்து வந்து இருக்கானாம் இங்க அவனோட அத்தை பொண்ணுங்களை அழைச்சிட்டு போக,இப்போ தான் போன் பண்ணான்…அவனோட வர சொல்றான்..நான் முடியாது அப்படின்னு சொன்னாலும் கேட்கல..”என்று சொல்லியவன் தயக்கமாய் மூவரையும் பார்த்தான்…

 

மூவர் முகமும் சொல்ல முடியாத வருத்ததினை சுமந்து இருந்தது போல ஒரே ஒரு நிமிடம் அவனுக்கு தோன்றியது..ஆனால் அடுத்த நொடி தான் நினைத்தது தப்போ என்றும் அளவிற்கு அவர்கள் முகம் இயல்பாய் இருந்தது…

 

தாமஸ் தான் முதலில் பேச ஆரம்பித்தான்..”அதுக்கு ஏன் டா முகத்தை இப்படி தூக்கி வச்சு இருக்க..அவன் கூடவே போயேன்..”என்றான் அவனுக்கு சமாதனமாய்…

 

வரு “அது இல்லடா..நம்ப எல்லாம் ஒண்ணா போலாம்னு இருந்தோம் இல்ல…இப்போ நான் மட்டும் எப்படி அவங்க கூட போறது..’என்றவன் பின் முடிவாக “நான் அவன் கூட போகலடா…அவன்கிட்ட நான் சொல்லிக்கிறேன்..நீங்க ரெடி ஆகிட்டா நாம்ப போலாம்..”என்றவன் அவர்கள் மீண்டும் சமாதானபடுத்தும் முன் அங்கிருந்து அகன்றான்..

 

தாமஸ் சஞ்சீவை நோக்க அவனோ எனக்கு தெரியாது என்று உதட்டை பிதுக்கினான்…சுரேஷோ நடப்பவற்றை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தான்..

 

அவனின் தலையில் தட்டிய தாமஸ் “போதும் வேடிக்கை பார்த்தது,ஒழுங்கா எல்லாத்தையும் எடுத்து வை..போலாம் டைம் ஆகுது..”என்றுவிட்டு தன்னோட பொருட்களை அடுக்க ஆரம்பித்தான்…

 

சுரேஷும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்..எல்லோரும் ஒரு மனநிலையில் இருக்க சஞ்சீவோ வேறு விதமான மனநிலையில் இருந்தான்..

 

அவனுக்குள் இருப்பது கோவமா ஏக்கமா ஏதோ ஒன்று அவனை பாடாய் படுத்தியது..என்னவென்று புரியாத வேதனை அவினிள் புதிதாய்…

 

தாயராகி வந்த வரு “டேய் எல்லாம் ரெடியா..கிளம்பலாம்…அப்புறம் பஸ் கிடைக்காது..கூட்டமா இருக்கும்…”என்று தாமஸ்,சுரேஷ் மற்றும் சஞ்சீவ் உடன் ஊருக்கு கிளம்ப எத்தனித்தான்..அவர்கள் கிளம்ப எத்தனிக்கவும் வருவிற்கு நந்துவிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாய் இருந்தது..

 

அழைப்பை ஏற்றவன் பேசும் முன்னரே அந்த பக்கம் இருத்து நந்து பொரிந்து தள்ளிவிட்டான்…”டேய் என்னடா பண்ற இவ்வளவு நேரம்…ஓரு பேக் எடுத்துட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா,இங்க ரெண்டு பிசாசுங்களும் என்னை பிராண்டு,பிராண்டுனு பிராண்டுராளுங்க..ஒழுங்கா 5 நிமிஷத்துல வந்து சேர..இல்ல நீ காலியோ இல்லையோ என்னை இவளுங்க காலி பண்ணிடுவாங்க..ப்ளீஸ் வந்து சேரு டா…”என்று முதலில் பொரிந்து தள்ளியவன் கடைசியில் கெஞ்ச தொடங்கிவிட்டான்…

 

அவனின் இப்பேச்சு அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும்,இப்போது சிரித்தால் அவன் கோவம் அதிகமாக கூடும் என்பதை உணர்ந்து அவனை சமாதானபடுத்தும் வகையில் “டேய் ஏன் டா இப்படி கத்துற..”என சின்ன சிரிப்போடு கேட்டவன் “நந்து சாரிடா,பிரண்ட்ஸ் கூட போகலாம்னு இருக்கேன்..நீ வேணும்னா கிளம்பு..”என்றான்..

 

“டேய் என்னடா இப்படி சொல்ற..இப்போ வந்தவங்க உனக்கு ப்ரிண்ட்ஸ் அப்போ நான் உனக்கு ப்ரண்ட் இல்லையா.??”என அவன் கோவமாக கேட்கவும்..பேச்சு வேறு திசையை நோக்கி செல்வதை உணர்ந்த வரு அவனை சமாதானபடுத்த எண்ணி “டேய் அப்படி எல்லாம் இல்லடா…ஏற்கனவே எல்லோரும் ஒண்ணா போலாம்னு முடிவு பண்ணி இருந்தோம்..நீ தீடிர்னு வந்து வா அப்படினு சொன்னா எப்படிடா வர முடியும்..புரிஞ்சிக்கோடா நந்து..”என எடுத்து சொல்லவும் “ஒஹ்..”என இழுத்தவன் “டேய் இப்படி பண்ணா என்ன…”என ஆர்வமாய் கேட்க…”எப்படி…”என வருவும் ஆர்வமாய் கேட்க “எப்படி இருந்தாலும் எல்லோரும் தனியா போகணும் அப்படின்னு சொல்றீங்க.. ஏன் நீங்க எல்லாம் என் கூடவே வரகூடாது..”என கேட்கவும்..வருவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை….

 

அங்கு அவர்களோடு சென்றால் அவனால் ஜெயஸ்ரீயினை பார்க்காமல் இருக்க முடியாது என்பது அவனுக்கு தெள்ளதெளிவாய் விளங்கியது… ஆனால் நந்து வற்புறுத்தி அழைத்த பிறகும் மறுப்பது அவனுக்கு சரியாய்பட இல்லை..கேள்வியாய் நோக்கிய நண்பர்களை பார்த்தவன் “ஒரு 2 நிமிஷம் டைம் கொடு டா..நான் அவங்க கிட்ட எல்லாம் கேட்டுட்டு சொல்றேன்..”என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு “நந்து தான் டா,இப்போ போன் பண்ணி இருந்தது..நாம்ப எல்லாம் தனியா போறதுக்கு பதிலா அவனோட கார்ல வர சொல்றான்..நான் வேண்டாம்னு சொல்லி பார்த்தேன்,அவன் கேட்க்குற மாதிரி இல்ல..உங்க கிட்ட கேட்டு சொல்றேன் அப்படின்னு சொல்லி வச்சிட்டேன்..நீங்க என்னடா சொல்றீங்க..”என்றான் மூவரிடமும்..

 

மூவர் முகமும் அவர்களின் விருப்பமின்மையை வெளிப்படையாய் காட்டியது…தாமஸ் தான் முதலில் பேச ஆரம்பித்தான்..”வரு நீ சொல்றது எல்லாம் சரி தான்..ஆனா எனக்கு என்னவோ இப்போ வர பிடிக்கல..அதுவும் இல்லாம நந்துவோட அத்தை பொண்ணுங்க இருக்குறாங்க அப்படின்னு சொல்ற..எங்களுக்கும் அவங்களுக்கும் முன்ன பின்ன அறிமுகம் கூட கிடையாது..இதுல நாங்க வேற வந்தா அவங்களால சகஜமா இருக்ககூட முடியாது..ஏன் எங்களுக்கும் அப்படி தான்..நீ அவங்ககூட போடா வரு..நீ அவன் கூட போகல அப்படின்னா,நீ எங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த மாதிரி ஆகிடும்..அந்த மாதிரி எதுவும் வேண்டாம்..நாம்ப இப்போ ஜாயின் பண்ணி போகலனா என்ன..அடுத்த முறை கண்டிப்பா ஒண்ணா போலாம்..நீ அவங்ககூடவே போ வரு..” என்றான் அமைதியாக

 

தாமஸ் பேசியதையே தழுவி சுரேஷும் “எனக்கும் தாமஸ் சொல்றது தான் சரின்னு படுது..நீ என்னடா சொல்ற..”என்று சஞ்சீவை கேட்க அவனும் “ம்ம்..”என்று தலையை ஆட்டினான்..

 

வருவிற்கு செல்ல விருப்பம் இருந்தாலும்,நண்பர்களை விட்டு அவனுக்கு போக விருப்பம் துளியும் இல்லை..அதே நேரம் தாமஸ் சொல்வதும் சரி எனவும் பட்டது..இந்த ஒரு சிறு விஷயத்திற்கு முடிவு எடுக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தான்…

 

அவனின் நிலை புரிந்த தாமஸும் சுரேஷும்,சஞ்சீவிடம் கண் காட்டி அவனுக்கு சொல்ல சொன்னனர்…சஞ்சீவும் வேறு வழியில்லாமல் “டேய் எதுக்குடா,இப்படி போட்டு குழப்பிக்கிற..ஒழுங்கா சொல்றதை கேளு,அவங்க கூட போ..நாம்ப இன்னொரு நாள் போலாம்..”என்றான் அவனிடம்…

 

மீண்டும் நந்து போன் செய்ய அதை ஏற்றவன் “இல்லடா நந்து அவங்க எல்லாம் வரல அப்படின்னு சொல்றாங்க…நான் மட்டும் வேணும்னா வரேன்..எங்க இருக்க நீ..??” என்றான்…

 

நந்து “ஏன் டா..அவங்களும் வரலாம் இல்ல…கார்ல போதுமான இடம் இருக்கு…”என்று மேலும் சொல்லவும் வரு “இல்லடா…நெக்ஸ்ட் டைம் வரேன்னு சொன்னாங்க..”என்றான்…

அதை கேட்ட நந்து “சரி டா…நான் இப்போ காலேஜ் என்ட்ரன்ஸ்ல இருக்கோம்..அங்க வந்துடா…”எனவும் “சரி..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்..

 

தனது பேக்யை தோளில் மாட்டிக்கொண்டவன் நண்பர்களிடம் விடைபெற்றுகொண்டு கல்லூரி வாசலுக்கு விரைந்தான்…அங்கே ஜெயஸ்ரீயும் சுபஸ்ரீயும் நந்துவினை கிளம்ப சொல்லி அவனை வறுத்து எடுத்துக்கொண்டு இருந்தனர்இவர்களின் தொல்லை தாங்க முடியாதவன்டேய் கிராதகா சீக்கிரம் வந்து தொலையேன் டா …”என்று மானசீகமா வருவினை அழைத்துக்கொண்டு இருந்தான்..

 

அவன் அழைத்த நேரமோ என்னவோ வரு நந்துவினை நோக்கி வந்து கொண்டு இருந்தான்…நந்துவினை பார்த்தவன் “ஹாய் டா…”என கை அசைத்து அவனை பார்த்த மகிழ்ச்சியினை வெளிபடுத்தினான்..

நந்துவும் வருவினை கண்டதும் “டேய்…வா டா…வா வா…”என ஆர்பாட்டமாய் அழைத்தவன் அவனை தழுவி கொண்டான்…

 

சிறிது நேரம் கழித்து விடுவித்தவன் “எப்படிடா இருக்க..”

என்றான்…வருவும் அவனை பார்த்து புன்னகைத்தவன் “எனக்கு என்னடா நான் ரொம்ப நல்லா இருக்கேன்..”என்றான் ஓரக்கண்ணால் ஜெயஸ்ரீயினை நோக்கி கொண்டே…

 

ஜெயஸ்ரீயின் முகமோ கடுகை போட்டால் பொரிக்கும் அளவிற்கு கோவத்தில் தகதகத்தது…”கொழுப்பு பார்த்தியா இவனுக்கு,ரொம்ப நல்லா இருக்கானாமே…ஏன் இருக்க மாட்டான்…எத்தனை முறை எக்ஸாம்க்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பி இருப்பேன்..

ஒண்ணுக்கு கூட எந்த ஒரு பதிலும் அனுப்பல…என்னோட நம்பர்னு தெரிஞ்சும் அப்படியே கல்லுளி மங்கன் மாதிரி இருந்துட்டு,இப்போ இங்க வந்து அவர் ரொம்ப நல்லா இருந்ததா,என்ன ஒரு பீத்தல்…இந்த சுபா லூசு செஞ்ச வேலை தான் இத்தனையும்,வாயை வச்சிட்டு சும்மா இருந்து இருந்தா இப்போ இவன் இப்படி எல்லாம் என் கிட்ட முகத்தை திருப்புவானா…”என வருவினை முதலில் சாட தொடங்கி இருந்தவள் இறுதியில் சுபாவிடம் வந்து நிறுத்தினாள்…

சுபா அவளை உலுக்கியவள் “ஹே ஜெயா என்ன அப்படி பெரிய யோசனை,கூப்பிட கூப்பிட அப்படியே உட்கார்ந்து இருக்க…”என கேட்கவும்…தன்னிலை வந்தவள் “உன்னை பத்தி தான் நினைச்சிட்டு இருந்தேன்…”என்று உளறினாள்…

 

“என்னது என்ன பத்தி நினைச்சிட்டு இருந்தியா…அப்படி என்ன என்னை பத்தி நினைச்ச…”ஏன் சுபா கேட்கவும்,தெரியாமல் தான் உளறியதை உணர்ந்தவள் மானசீகமாக தலையில் கொட்டியவள் “அது ஒன்னும் இல்லை சுபா,நீயும் நானும் நந்து வீட்லையே தங்கிக்கிலாமா இல்ல நம்ப வீட்டுக்கு போலாமானு யோசிச்சிட்டு இருந்தேன்,நீ என்ன சொல்லுவியோனு நினைச்சேன்..”என ஏதோ ஒன்றை வாயுக்கு வந்ததை சொல்லி சமாளித்தாள்…

 

சுபாவும் அதை உண்மை என நம்பியவள் “அப்படியா…ஆனா அப்பா,அம்மா எல்லாம் வீட்டுக்கு வர சொன்னாங்க,ஏன் நீ வீட்டுக்கு வரலையா..??”

 

ஜெயஸ்ரீ “நானும் இன்னும் எதுவும் முடிவு பண்ணல…அப்பா வீட்டுக்கு தான் வர சொன்னார்…ஜீவா வீட்ல இல்லையாம்..நந்து வீட்ல தான் இருக்காளாம்..நாம்ப ஒண்ணு பண்ணுவோம் சுபா,நீயும் நானும் அங்கன போயிட்டு அப்புறமா ஜீவாக்கூட சேர்ந்து நாம்ப வீட்டுக்கு போய்டலாம்…நீ என்ன சொல்ற..??”..

 

சுபா “ஹ்ம்ம்…நீ சொல்றதும் நல்ல ஐடியாவா தான் இருக்கு…அப்படியே செய்யலாம்…அது சரி…இப்போ எதுக்கு நந்துவோட ப்ரண்ட் வந்து இருக்காங்க…”என்றாள்..

 

வருவினை பற்றி கேட்டதும் வருவினை கண்டவள் அவன் நந்துவிடம் தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டு இருக்க “அது எல்லாம் எனக்கு எப்படி தெரியும் சுபா,அவங்க எதுக்கு வந்தா நமக்கு என்ன..??..”என்றாள் விட்டேறியாக…சுபா அவளை ஒரு மாதிரியாய் பார்த்து வைக்க முகத்தை வெளியில் பார்ப்பது போல் திருப்பிகொண்டாள்…

நந்துவிடம் பேசிக்கொண்டே ஜெயஸ்ரீயினை கண்ட வருவிற்கு ஜெயஸ்ரீயின் ஒவ்வொரு செய்கையும் சிரிப்பை தான் வரவழைத்தது…  

யாருக்கும் தெரியாவண்ணம் தன் சிரிப்பினை உள்ளுக்குள் விழுங்கியவன் நந்துவோடு சேர்ந்து காருக்கு அருகில் வந்தான்…

 

அதுவரை சுபாவிடம் பேசிக்கொண்டு இருந்தவள் வாய் அவள் அனுமதியே இல்லாமல் கப்பென்று மூடிகொண்டது…நந்துவோடு பேசிக்கொண்டே காருக்கு அருகில் வந்தவன் “ஹெல்லோ..”என்றான் இருவரையும் பொதுவாய் பார்த்து…

 

சுபாவும் பதிலுக்கு “ஹெல்லோ…”என்றாள்..ஆனால் ஜெயஸ்ரீயோ எதையும் காதில் வாங்கியது போல காட்டிக்கொள்ளாமல் சட்டென்று காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்…வருவிற்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது அவளது செய்கை..

 

நந்துவிற்கும் ஜெயஸ்ரீயின் செய்கை சங்கடத்தை கொடுத்தது..வருவின் முன்னால் அவனால் ஜெயஸ்ரீயினை திட்டவும் முடியாமல்,அவள் செய்ததை தடுக்கவும் முடியாமல் இருந்தவன் கடைசியில் அமைதியாய் நின்றுவிட்டான்..பின் வருவிடம் “சாரி டா…”என்று சொல்ல “டேய் என்னடா,நீ எதுக்கு இப்போ சாரி சொல்ற..ஒழுங்கா அமைதியா இரு..”என்றவன் “சரி டா…நானே டிரைவ் பண்றேன்..நீ அமைதியா என் பக்கத்துல உட்கார்ந்துட்டு வா..”என்றான் வரு..

 

நந்துவிற்கும் அவன் தன்னை திசை திருப்பவே இப்படி செய்கிறான் என்று புரியவும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் அவனின் அருகில் அமர்ந்துகொண்டான்…

 

பின் அமைதியாய் காரை வரு இயக்க ஆரம்பித்தான்..வரு காரை இயக்க ஆரம்பித்ததும் ஜெயஸ்ரீ நந்துவினை கேள்வியாய் நோக்கினாள்…

 

நந்து அவள் முகம் பார்க்க விருப்பம் இல்லாமல் முகத்தினை திருப்பிக்கொண்டான்…ஜெயஸ்ரீ வருவினை முறைக்க கண்ணாடியின் வழியாய் அவளை பார்த்தவன் முகம் சிரிப்புக்கு மாறியது…அதுவும் ஜெயஸ்ரீக்கு கோவத்தை வரவழைக்க அமைதியாய் அவனை மீண்டும் முறைத்துவிட்டு சுபாவிடம் பேச ஆரம்பித்துவிட்டாள்…

 

கார் வழுக்கிக்கொண்டு நெடுஞ்சாலையில் சென்றது..

ஜெயஸ்ரீயும்,சுபஸ்ரீயும் பேசுவதை தவிர அக்காரில் வேறு எந்த சத்தமும் இல்லை..ஏனோ நந்துவிற்கு பேசுவதற்கு வார்தைகள் வரவில்லை..வருவும் அப்படியே அமைதியாய் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான்…

 

சிறிது நேரம் அமைதியாய் சாலைகளை வெறித்தவன் கண்கள் சிறிது நேரம் கண்ணாடியில் ஜெயஸ்ரீயினை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கவும் மறக்கவில்லை…

 

சிறிது நேரம் அமைதியாய் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த நந்து அங்கு சூழ்ந்து இருக்கும் அமைதியை இன்னும் நீடிக்க விரும்பாமல்,காரில் ,மியூசிக் ப்ளேயரை ஓடவிட்டான்…

 

கண்கள் இரண்டும் பேசுதே

உள்ளம் உன் வசம் ஆனதே

என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்

கள்ளம் இல்லா பெண் அவள்

கரும் கூந்தல் வாசனை ஆயிரமே

கண்ணுக்குள் கண்பாவை வைரமே…ஓ..ஓ

சொற்கள் யாவும் மின்னுமே

நதியின் அழகை போலவே

 

என காரில் பாடல் தவழ்ந்து கொண்டு இருந்தது…சுபாவிடமே பேசிக்கொண்டு இருந்தவளின் கவனம் சிதறி வருவினை நோக்கியது…

 

அந்நேரம் அவனும் இவளை தான் கண்ணாடியின் வழியாக பார்த்துகொண்டு இருந்தான்…பார்த்தவள் பின் “ம்கும்…”என்ற முனகலோடு முகத்தை திருப்பிக்கொள்ள வரு வாய்விட்டு சிரித்தான்…

 

நந்து அவனை ஒரு மாதிரியாய் பார்க்க ”ஹி ஹி..”என அவனை பார்த்து இழித்தவன் “ஒண்ணும் இல்லடா…சும்மா தான்…”என்று வாயுக்கு வந்ததை உளறினான்..”ஹ்ம்ம் சரி ..”என தலை அசைத்தவன் பாடலில் மூழ்கினான்..

 

காரை இயக்கிக்கொண்டே வரு பின்னால் பார்க்க சுபா ஜெயஸ்ரீயின் மீது சாய்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள்…நந்துவும் அப்படியே காரின் ஜன்னல் மீது சாய்ந்து உறங்கிவிட ஜெயஸ்ரீயும் வருவும் மட்டும் விழித்துக்கொண்டு இருந்தனர்..

 

சிறிது நேரம் அங்கு மௌனம் ஆட்சி புரிய வரு தான் அதை கலைத்தான்…”என்ன ஆச்சு ஸ்ரீ…என் மேல கோவமா என்ன…??..”எனவும்..

 

அவனை சிறிது நேரம் பார்த்தவள் “எனக்கு என்ன நல்லலலலலலா தான் இருக்கேன்….”என்று அந்த நல்லாவில் ஒரு அழுத்தம் கொடுத்து சொன்னவள்,அவனின் மீதி கேள்விக்கு “உங்க மேல கோவப்பட நான் யாரு…”என்றாள் விட்டேறியாக…

 

அவளின் விட்டேறியான பதிலில் இருந்தே அவளின் கோவத்தின் அளவினை புரிந்துக்கொண்டவன் அவளை எப்படி சமாதானம் படுத்துவது என்று தெரியாமல் முழித்தான்..

 

பின் “ஸ்ரீ நான் என்ன சொல்ல வரேன்னா…”என ஆரம்பிக்க அவனை பேசவிடாது “நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்…உங்களுக்கு எல்லாம் என்னை பார்த்தா இழப்பா போச்சு இல்ல…எத்தனை முறை மெசேஜ் அனுப்பி இருப்பேன்…நான் உங்களுக்கு முக்கியமா படல…அப்படி நீங்க நினைச்சு இருந்தா,என்னோட எல்லா மெசேஜ்க்கு பதில் அனுப்புல அப்படின்னாலும்,ஒரு மெசேஜ்க்காவது அனுப்பி இருப்பீங்க..”என இயலாமைவோடு சொன்னவள்,”தேவை இல்லாம இப்போ எதுவும் நீங்க பேசவேண்டாம்…உங்க வழிக்கு இனிமேல் நானும் வரமாட்டேன்,நீங்களும் என்னோட வழிக்கு வராதீங்க…”என்றவள் அமைதியாய் சீட்டின் பின் புறம் சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிகொண்டாள்…

 

கண்ணாடி வழியாய் அவளை பார்த்தவனின் கண்ணில்,கண்ணின் ஓரம் நீர் வழிய சாய்ந்து அமர்ந்து இருந்தவளின் முகமே தெரிந்து அவனை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது…காரை நிறுத்துவிட்டு அவளின் முகத்தினை தன் கைகளில் ஏந்தி “நீ எதுக்கு இப்படி கஷ்டபட்ற..உனக்காக நான் இருக்கேன்…இனிமேல் முன்ன மாதிரி முட்டாளா நடந்துக்கமாட்டேன்…”என்று சொல்ல அவன் மனம் மிகவும் விழைந்தது…

 

சட்டென்று அவனை காரை நிறுத்தவும்,தூக்கத்தில் இருந்து விழித்த நந்து “என்னடா என்ன ஆச்சு…”என பதற்றமாய் கேட்க..தன் நிலை தடுமாறி இருந்தவன் சட்டென்று தன் நிலைக்கு வந்தவன் “சாரி டா..ஒன்னும் இல்ல…கொஞ்சம் பேலன்ஸ் பண்ண முடியல..அதான்..”என்றான் தட்டுதடுமாறி…அவனின் நிலை புரிந்தவன் “வேணும்னா நான் ஓட்றேன்டா…நீ இந்த பக்கம் வா…”என நந்து சொல்ல “இல்ல டா…பரவாயில்ல…இன்னும் கொஞ்சம் தூரம் தான்..நானே ஓட்றேன்…”என்றவன் காரை இயக்க ஆரம்பித்தான்…

 

தான் இருக்கும் சூழ்நிலை எண்ணாமல் தான் ஏன் அப்படி எண்ணினோம் என அவனுக்கு அவன் மேலே கோவம்,ஜெயஸ்ரீயினை காயபடுத்தியதற்காக ஏற்பட்ட வலி,எதுவும் செய்ய முடியாத இயலாமை எல்லாம் அவனுள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது…

 

இப்பயணம் ஒரு சுவாரசியமான பயணமாய் இருக்கும் என எண்ணி இருந்த ஜெயஸ்ரீ,இப்படி ஒரு திருப்பத்தை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை…நந்து வருவிடம் போனில் உரையாடும் போதே கேட்டவள் மனம் வானத்திற்கும்,பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தது…

அவனும் தங்களோடு பயணம் செய்வதை எண்ணி…

 

அவளினுள் அவன் மேல் கோவம் இருந்தாலும் எல்லாம் அவனின் வருகையை எண்ணி மாயமாய் மறைந்துபோனது…

அவனின் வருக்கைகாய் வழி மேல் விழி வைத்து காத்திருந்தவள் அவனை கண்டவுடன் மிகவும் ஆனந்தபட்டாள்..ஆனால் அவளின் சந்தோசம் எல்லாம் வடிந்து போனது வருவின் பாராமுகம்…

 

சில நிமிடம் கழித்து பொதுவாய் “ஹெல்லோ..”என சொல்லவும் அவளுக்கு தானும் சுபஸ்ரீயும் ஒன்றா என்ற எண்ணம் தான் முதலில் வந்தது…இது ஏன் என்று அவளுக்கு புரியவில்லை…வருவினை அவள் தன்னோட சொந்த உரிமை என்றே அவளின் மனம் எண்ண ஆரம்பித்துவிட்டது தான் அதற்கு காரணம் என்று அவள் அறியவில்லை…

 

முகத்தை திருப்பிக்கொண்டு இவள் போக,அதற்கு வருவிடம் எந்த ஒரு சலனமும் இல்லாததே அவளை மிகவும் வேதனையாக்கியது…

உள்ளுக்குள் குமுறிகொண்டு இருந்தவள் வரு பேசவரவும்,தனக்குள் இருந்த உணர்வை இலை மறை காயாய் அவனுக்கு புரியவைக்க முயன்றாள்…

 

ஆனால் அவளின் முயற்சி எந்த அளவிற்கு பயன் என்று அவளால் அறியகூட முடியவில்லை வருவின் முகத்தினை கண்டு…இனியும் தான் இருப்பது சரியல்ல என எண்ணியவள் “எக்காரணம் கொண்டும் வரு இருக்கும் திசை பார்க்ககூடாது..”என்ற உறுதியோடு கண்மூடிகொண்டாள்…ஆனால் அவள் அறிவாளா..ஏற்கனவே வருவும் அம்முடிவனை தான் தழுவி அவனின் ஒவ்வொரு செயலும் இருக்கிறது என்று…அவள் எல்லாம் அறிந்திராத ஒன்று வரு ஜெயஸ்ரீயிடம் வருங்காலத்தில் முகத்தினை கூட பார்க்க பிடிக்காமல் திருப்புவான் என்று…அதற்கு மூலகாரணமாய் தானும்,தன் தங்கையுமாய் இருப்போம் என்று…

 

வருவோ ஜெயஸ்ரீ சொன்னதை அசைபோட்டுக்கொண்டு இருந்தான்…அப்போது தான் அவனுக்குள் தான் செய்தது தவறோ என்ற எண்ணம் உதயமானது…அவளுக்கு ஒரு பதிலாவது அனுப்பி இருக்கவேண்டுமோ என்று தோன்றியது…தோன்றி என்ன பயன் அதை அவனால் செயல்படுத்த முடியவேண்டுமே…

காதல் என்ற கோலம்

என்னுள் புதியதாய்..

மாயம் என்ற சூயை

இன்று வித்தியாசமாய்..

அவனிள் எந்தன் மனம்

என்று எண்ணி இருந்தேன்..

இன்றுவரை மனம் என்ற ஒன்றை

மறந்து போயிருந்தேன்

அவனை இந்நாள் காணும்வரை…

அவனை பார்வையால் தொடர

எண்ணி பார்க்கும் போது

எந்தன் பார்வை மங்கி போனது

எந்தன் கண்ணீரால்..

கண்ணீருக்கு சொந்தகாரியாய்

நான் மாற..

என் கண்ணீருக்கு

காரணகர்த்தாவாய் அவனானான்..

என்னவாயினும் என் மனம்

அவனின் பிம்பத்தை

தொடர்ந்து செல்கிறது…

எந்தன் அனுமதியில்லாமல்

அவனையே  

நினைத்து கொண்டு இருக்கிறது

எந்தன் பித்து மனம்…

பித்தாய் ஆன மனம் இன்று

அவன் மேல் பைத்தியாமாய்

இருக்கிறது அவனிடம் சேர…

வேலிகள் எல்லாம் தகர்த்திட

போராடினேன்….

கடைசியில் அவனே வேலியாவன்

என எண்ணியும் பார்க்காமல்…

விலகல் தொடரும்…

Advertisement