Advertisement

விலகிச்செல்வது ஏனோ..?? -16

 

சிலையென நின்று இருந்த வருவினை கண்ட சஞ்சீவ் “மாப்பு..அவனுங்க எல்லாம் சும்மா சீன் போட்டுட்டு போறாங்க…இதுக்கு போய் இப்படி சிலை மாதிரி நின்னுட்டு இருக்க..வா அவனுங்க கேன்டீன் தான் போய் ஏதாவது முக்கிட்டு இருப்பானுங்க…”என நின்று இருந்த வருவினை அழைத்துக்கொண்டு கேன்டீன் பக்கம் சென்றான்…

 

சஞ்சீவ் சொன்னது போலவே இருவரும் சிரித்து பேசிக்கொண்டு பப்ஸை முழுங்கிக்கொண்டு இருந்தனர்…

 

தாமஸையும்,சுரேஷையையும் இப்படி பார்த்தவன் “நான் தான் சொன்னேன் இல்ல…இவனுங்களுக்கு எல்லாம் கோவம் அப்படின்னா என்னன்னு கூட தெரியாது..உன்கிட்ட அப்படி ஆக்ட் கொடுத்து இருக்கானுங்க…நீயும் அதை நம்பிட்டு…”என சொன்ன சஞ்சீவ்“என்னடா மாப்புஷ்…எல்லாம் சாப்பிட்டு முடிச்சாச்சா…இல்ல இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா,…”என்றான் அவர்களிடம்…

 

சஞ்சீவின் கேள்விக்கு தாமஸ் பதில் சொல்லும்முன் சுரேஷ் முந்திக்கொண்டு “மாப்பு…முட்ட பப்ஸ் காலி…வெஜ் தான் இருக்கு அப்படின்னு மாஸ்டர் சொன்னார்…எனக்கு ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கிட்டுவாயேன்…”என்றான் பப்ஸை வாயில் நன்றாய் துளைத்துக்கொண்டு…

 

இவனின் கேள்வியில் எரிச்சல் அடைந்த வரு “அடிங்க…எவ்வளவு திமிரு உனக்கு…நான் கோச்சிட்டு போயீட்டீங்கன்னு பார்க்க வந்தா,உனக்கு சிக்கன் பப்ஸ்ம்,முட்ட பப்ஸ்ம் வேணுமா…”என அவனை அடிக்க ஆரம்பித்தான்…

 

சுரேஷ் “டேய்…டேய்…விடுடா….எதுவா இருந்தாலும் சாப்பிட்டு பேசலாம்…சாப்பட விடாம டிஸ்டர்ப் பண்ணாத…”என சொல்லியவன் மீண்டும் வரு அடிக்க வரும்முன் தட்டோடு அவ்விடத்தை விட்டு ஓடினான்…

 

இதை எல்லாம் சிரிப்போடு பார்த்துக்கொண்டு இருந்த தாமஸ் வருவின் அருகில் வந்து அவனின் தோளில் கையினை போட்டுக்கொண்டு “மாப்பு…கோவப்படாத…சும்மா தாமாசுக்குடா…உன் மேல கோவம் இருந்தது தான்…இப்பவும் இருக்கு தான்…ஆனா அதுக்காக உன்மேல கோச்சிகிட்டு பேசாம எல்லாம் இருக்க மாட்டோம் டா.அது எங்களால முடியவும் முடியாது…உன்னோட பர்சனல் விஷயத்துல எங்களால ஒரு குறிப்பிட்ட லிமிட்க்கு மேல வர முடியாது..அதுக்கு நீயும் விட மாட்ட…எங்களை பத்தி உனக்கும்,உன்னை பத்தி எங்களுக்கும் நல்லா தெரியும்…அப்புறம் எதுக்கு தேவையில்லாத பேச்சு…”என்றவன் “சரி வா…கிளாஸ்க்கு டைம் ஆச்சு போலாம்…”எனவும் எல்லோரும் வகுப்பிற்கு சென்றனர்…

 

மதிய வேலையில் எல்லோரும் சாப்பிட செல்ல சுபாவும் ஜெயஸ்ரீயும் சாப்பிட செல்ல ஆயத்தமாயினர்….ஜெயஸ்ரீ “சுபா நான் கேட்கணும்னு நினைச்சேன் மறந்தே போயிட்டேன்…ஆமா காலையில எங்க போய் இருந்த…நான் கிளாஸ்ல வந்து பார்த்தேன்..நீயும் இங்க இல்ல…”என்றாள்..

 

பேனாவை பையில் வைத்துக்கொண்டு இருந்த சுபா ஜெயஸ்ரீயின் கேள்வியில் சிறிது அதிர்ந்தவள்,தன்னை சமாளித்துக்கொண்டு “நா…..நான் எங்கவும் போகலையே…ஏன்…ஏன்…அப்படி கேட்க்குற…”என்றாள் திக்கித்திணறிக்கொண்டு…

 

இருவருக்கும் வாக்குவாதம் நடந்தபோது ஏதாவது திணறி சொல்லி இருந்தால் ஆவது ஜெயஸ்ரீக்கு ஓர் அளவிற்கு அதில் கவனம் சென்று இருக்கும்..ஆனால் இப்போது தான் சுபஸ்ரீ, ஜெயஸ்ரீயிடம் மன்னிப்பு கேட்டுவிட்டாளே.. அவளை நம்பிய ஜெயஸ்ரீ ,அவள் திணறியதை தப்பாக எடுத்துக்கொள்ளாமல் என்றும் போல இன்றும் எடுத்துக்கொண்டாள்..அந்த மன்னிப்பு எல்லாம் நாடகம்,இப்போது இருக்கும் சுபஸ்ரீ பொய்யானவள் என தெரிய வரும்போது ஜெயஸ்ரீ அதை எப்படி எடுத்துக்கொள்ளுவாள் என்பது கணிக்கமுடியாத ஒன்றே

ஜெயஸ்ரீ “இல்ல..காலையில நீ முன்னாடி வந்தபோது,நீ இங்க வந்து இருப்பேன்னு நினைச்சேன்,,ஆனா இங்க வந்து பார்த்தா நீ ஆளை காணோம்..ரொம்ப பயந்துபோயிட்டேன்…எங்க போனயோ என்னவோன்னு…”என்றாள்..

 

அவளின் பதிலில் உள்ளுக்குள் கனன்றவள் “நான் என்ன சின்ன பாப்பாவா….தொலைஞ்சி போக…”என பல்லை கடித்துக்கொண்டு கோவத்தினை சிறிதும் ஜெயஸ்ரீ அறிந்து கொள்ளாதவாறு சிரித்துகொண்டே கேட்பது போல் அவளை பார்த்து கேட்டாள் சுபஸ்ரீ…

“ச்ச்ச அப்படி எல்லாம் இல்ல…புது இடம் வேற இல்ல..அதான் பயமா போச்சு…நீ வந்த பிறகு சரியாகிடுச்சு…சரி வா சாப்பிட போலாம்…”என்றவள் அவளுடனே சாப்பிட சென்றாள்…

 

அதன் பிறகு சாப்பிட்டு வகுப்பிற்கு வந்தவர்கள் சிறிது நேரம் தங்களுக்குள் அறிமுகமாகி இருந்தனர்….சிலர் தானாய் ஜெயஸ்ரீயிடமும்,சுபஸ்ரீயிடமும் வந்து அறிமுகமானவர்களை,”அதுக்கு என்ன இப்போ…” என சுபஸ்ரீ பட்டென்று கேட்டுவைக்க அதன்பிறகு ஒருவரும் இவர்கள் இருக்கும் பக்கம் வரவில்லை என்பதை விட திசை பக்கம் திரும்பகூடவில்லை…

 

ஜெயஸ்ரீக்கு சுபஸ்ரீயின் இப்பதில் கஷ்டத்தை கொடுக்க..”என்ன சுபா இது …”என கேட்டவளிடம் “நீ எதுவும் பேசாத,உனக்கு எதுவும் தெரியாது…இவளுங்க கிட்ட எல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்…”என சொல்லி அவளின் வாயினை அடைத்துவிட்டாள்…

 

ஜெயஸ்ரீயும் உரலுக்குள் யார் தலையை விட்டு உலக்கையில் அடிவாங்குவது என எண்ணி அமைதியாய் இருந்துகொண்டாள்…   

 

பிறகு ஒவ்வொருவராய் வகுப்பிற்கு வந்த பேராசிரியர்கள் தங்களை

அறிமுகபடுத்திக்கொண்டு,அவர்களுக்கு இன்று பாடத்தின் சிலபஸ் மட்டும் கொடுப்பதாகவும் போக போக பொறுமையாய் வகுப்பினை ஆரம்பிக்கலாம் என சொல்லிவிட்டு சென்றனர்…

 

மாலையில் வகுப்பு முடிய பட்டாம்பூச்சிகளாய் அனைத்து மாணவ,மாணவிகளும் முதல் நாள் கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை மனதில் சுமந்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறிக்கொண்டு இருந்தனர்…

 

கல்லூரி ஒலிபெருக்கியில் முதல்வருட மாணவர்களை கல்லூரியின் கலைஅரங்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுவிக்க முதல் வருட மாணவர்கள் அனைவரும் கலைஅரங்கத்திற்கு சென்று குழுமியிருந்தனர்…

சிறிது நேரத்தில் கலையரங்கம் அனைத்தும் மாணவர்களின் பேச்சும்,சிரிப்பும்,கிண்டலுமாய் என அல்லோலப்பட்டது….கல்லூரியின் முதல்வர் வர அரங்கமுமே அமைதியானது…

 

எல்லோரையும் ஒரு முறை பார்த்த சிங்காரவேலன்… “என்னதான் எஞ்ஜினியர் காலேஜா இருந்தாலும்..இங்கிலீஷ்ல தான் பேசணும் அப்படின்னு இருந்தாலும்…நாம்ப எல்லாம் பிறந்ததுல இருந்து வளர்ந்தது எல்லாம் நம்ப தாய்மொழி தமிழ்ல தான்…அதையே பேசி என்னோட பேச்சை துவங்குறேன்…நீங்க எல்லாம் என்ன சொல்றீங்க…”எனவும்

 

“பேசலாம்…பேசலாம்…”என தங்களது சம்மதத்தினை தெரிவித்தது பலவேறு குரல்களில் மாணவர்கள்…

“இந்த கல்லூரிக்கு முதல் முதலாய் வந்து இருக்க கூடிய எனது முதல் வருட மாணவர்களை அன்போடு வரவேற்கிறேன்…என்னடா இந்த ஆளு இப்படி பேசுறார்னு பாக்குறீங்களா…நான் கொஞ்சம் வித்தியாசமானவன் தான்….அதுக்குன்னு பைத்தியம்ன்னு நினைச்சிடாதீங்க…”எனவும் அரங்கம் முழுதும் சிரிப்பொலி ஏற்பட்டது…

 

“சில பேர் நினைக்கலாம் இன்ஜினியரிங் படிக்க இங்கிலீஷ் நல்லா தெரியணும்ன்னு…அது உண்மை தான்…நான் இல்லன்னு சொல்லல..தமிழ் படிச்சவங்களுக்கு சட்டென்னு இங்கிலீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்…இங்கிலீஷ் ஒரு மொழி அப்படின்றது மட்டும் நினைப்பு வச்சுக்கோங்க…பிறக்கும்போதே நம்ப என்ன தமிழ் பேசிட்டேவா பொறந்தோம்…அதே மாதிரி தான்…இங்கிலீஷ் நம்பளால படிக்க முடியாத,கத்துக்க முடியாத,தெரிஞ்சிக்க முடியாத மொழி கிடையாது….”

 

“ஆனா அதைவிட ஒரு மனிதனுக்கு எதையும் ஆழ்ந்து நோக்குகிற மனப்பான்மையும்,ஏன் என்ற கேள்வி மூளையில்ல உதிக்ககூடியதா இருக்கணும்…ஏன் என்ற கேள்வி கேட்க்குறவன்..அதற்கான விடைகளை தேடும்போது தான் பல சாதனைகளை புரியறான்…இக்கல்லூரியில் சேர்ந்த எல்லா மாணவர்களும் சாதனையார்களாய் ஆகலைனாலும்,மற்றவர்களை சார்ந்து இல்லாமல் இருக்கவேண்டும் என்பது என்னோட ஆசை..”

 

“ரொம்ப மொக்க போட விரும்பல…உங்களுக்கு என்ன ஒரு உதவி வேணும்ன்னாலும் என்னோட கேபின்க்கு வாங்க…நல்லா படிங்க அப்படின்றதை விட,நல்லா இந்த கல்லூரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க….என்ஜாய் பண்ணுங்க அப்படின்னு சொன்னதுக்காக படிப்பை கோட்டவிட்டுடாதீங்க பசங்களா…படிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம்,என்ஜாய்மென்டும் வேணும்…எல்லாம் குறிப்பிட்ட அளவுக்கு தான் இருக்கணும்…அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது மாதிரி….புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்குறேன்….என்னோட சில அனுபவங்களை உங்களோட ஷேர் பண்ணிக்கணும்னு நினைச்சேன்….தேங்க்ஸ் ஸ்டுடென்ட்ஸ்…ஆல் தி பெஸ்ட் மை டியர் ஸ்டுடென்ட்ஸ்….”  என எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்றார்…

 

ஜெயஸ்ரீக்கு அவரை பார்த்து வியக்காமல் இருக்கமுடியவில்லை…

என்னதான் கொஞ்சம் உளறி பேசினாலும் அவர் பேசியது எல்லாம் உண்மையே..இக்காலங்களில் நிறையே பேர் இப்படி தான் தன்னால் படிக்கமுடியாது…காலேஜ்ல எல்லோரும் இங்கிலீஷ் பேசுறாங்க..என்னால பேச முடியல…என தனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையில் வெந்து சாகின்றனர்…

 

அதேபோல் பெற்றோர்களும் தங்களது விருப்ப படியே தான் பிள்ளைகள் படிக்கவேண்டும் என எண்ணி அவர்களின் மேல் தங்களது விருப்பத்தை திணிக்கவும் செய்கின்றனர்…

 

அதன் பின் அனைத்து மாணவர்களும் ஹாஸ்டல் புறப்பட்டு சென்றனர்…

 

ஒரு வாரம் கடந்த நிலையில் முதல் வருட மாணவர்களுக்கு வெல்கம் பார்ட்டி வைப்பதாக கல்லூரி முடிவெடுத்து அதற்கான வேலையில் ஈடுபட சீனியர் மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு வேலையினை பகிர்ந்து கொண்டனர்…

 

கல்லூரி ஒன்றாக இருந்தாலும் பொறியியல் படிப்பவர்களுக்கென ஒரு வளாகமும்,முதுகலை படிப்பவர்களுக்கென ஒரு வளாகமுமாக கல்லூரி ஒதுக்கி இருந்தது..            

 

வரு முதுகலை படிப்பதால்,பொறியியல் மாணவர்களுக்கான வெல்கம்

பார்ட்டியில்,அனைவரும் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம் ஒழிய ,வேறு எந்த பிரிவினரும் அதில் ஈடுபட கூடாது என்பது

அக்கல்லூரியின் முதல் கட்டளையாக இருந்தது..

 

ஜெயஸ்ரீ கல்லூரி சேர்ந்த இன்றோடு ஒரு வாரம் ஆகிஇருந்தது..ஆனால் இன்று சுஜா ,ஜெயஸ்ரீ ,சுபஸ்ரீ என மூவரும் உற்சாகமாய் காணப்பட்டனர்..பின்னே இருக்காதா என்ன..?? கல்லூரியில் முதன்முதலாய் சேர்ந்த நாள் முதல் இன்று தான் அவர்களுக்கு வெல்கம் பார்ட்டி கல்லூரி சார்பாகவும்,சீனியர் சார்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..

 

அவர்கள் சந்தோசமாக அனுபவிக்க போகும் நாள் அல்லவா இது..? என்று இருந்தாலும் இந்த நாளை அவர்களால் மறக்க முடியுமா என்ன ..??

 

மனம் குதியாட்டம் போட்டுக்கொண்டு இருந்தது…முதல் வருட மாணவர்களை உற்சாகபடுத்தும் வண்ணம் சீனீயர்கள் ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்து இருந்தனர்..முதலில் தொடங்கும் வாழ்த்துமடல் முதல் இறுதியில் கொடுக்கும் தின்பண்டம் வரை  எல்லாமே அமர்களமாய் இருந்தது..அதுவும் பெண்கள் மூவரும் அவர்களது சீனியர்கள் ஆடிய பரதத்தில் தங்களையே தொலைத்தனர் ..அவ்வளவு அருமையாய் இருந்தது அவர்கள் ஆடியது..

 

எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு இருந்தவளை அவளின் அருகிலேயே சிறிது தூரத்தில் நின்றுக்கொண்டு அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான் வரு..அவனுக்கே அவன் செய்வது தவறு என மூளை அறிவுறுத்தினாலும்,அதனை மனம் தான் ஏற்க மறுத்தது..  

 

மனம் அவள்பால் ஓடுவதையும்,கண்கள் அவளையே நோக்குவதையும் அவனால் என்ன முயன்றும் ஒன்றும் செய்யமுடியவில்லை.. இவனின் இம்மோனநிலையை கண்ட நண்பர்கள் குழு “என்னடா இவன் இப்படி எதை இப்படி வெறிச்சி பார்த்துட்டு இருக்கான்..”என்று அவனின் முன் வந்து நின்றனர்..ஆனால் அவர்கள் அவன் ஜெயஸ்ரீயினை வெறித்து பார்த்து கொண்டு இருந்ததை கவனிக்கவில்லை..

 

தான் பார்ப்பதை கெடுக்கும் வண்ணம் யார் அது என பார்த்தவனின் முன் அவனது நண்பர்கள் நின்று கொண்டு இருந்தனர்..அவர்களை பார்த்து இளித்தவன் “என்னடா  இங்க என்ன பன்றீங்க..”என்றான்.. அவர்கள் முறைக்கவும் “ஷோ எல்லாம் நல்லா இருக்கு டா ..அதான் பார்த்துட்டு இருந்தேன்..”என்றான் அவர்களுக்கு சமாதானமாய்..

 

அப்படியா..வெறும் ஸ்டேஜ்ல..உனக்கு மட்டும் அப்படி என்ன ஷோ நடத்துனாங்க..”என துளைக்கும் பார்வையோடு தாமஸ் கேள்வி கேட்க பதில் சொல்ல சற்று திணறித்தான் போனான் வரு..

 

ஏற்கனவே ஜெயஸ்ரீ பற்றி சொல்லாததற்கு பெரிய போரையே நடத்தியவர்கள் இவர்கள் ,தான் ஜெயஸ்ரீயினை பார்த்தது மட்டும் தெரிந்தால் அவளை வில்லியாய் நினைக்ககூட தயங்கமாட்டார்கள்.. என எண்ணியவன்,பிறகு அவர்களிடம் தனக்கு ஜெயஸ்ரீ மீதான நேசத்தினை சொல்லிக்கொள்ளலாம் என  எண்ணியவன் “ஏதோ நினைப்புல..இருந்துட்டேன் டா…”எனவும் “என்ன நினைப்பு..”என சுரேஷ் இப்போ கேள்வி கேட்க “இவனுங்க விடமாட்டாங்க போல் இருக்கே..வைவால சார் கேள்வி கேட்டா மட்டும் அவங்களை திட்டவேண்டியது ..இப்போ இவனுங்க என்ன பண்றானுங்க..என உள்ளுக்குள் சளித்தவன்அண்ணா பத்திதான் நினைச்சிட்டு இருந்தேன் டா …போதும்மா …மீண்டும் கேள்வி கேட்காதீங்க ..நானே அப்புறமா சொல்றேன்..இப்போ டீ குடிக்க போலாம் வாங்க..” என அவர்களை இழுத்துக்கொண்டு மெஸ்ற்கு சென்றான்..

 

டீ எனவும் அவர்களும் எதோ ஸ்டார் ஓட்டலில் விருந்து என்பது போல,நடந்த வாதத்தை எல்லாம் மறந்து அவனோடு சென்றனர்.. இப்போது விட்டால் மீண்டும் நாளை மாலை தான் டீ கிடைக்கும் என்பதால் என்றே இந்த ஓட்டம்.. இது அல்லவோ ஹாஸ்டல் வாழ்க்கை..அவர்களோடு நடந்து கொண்டு இருந்தவனுக்கோ தான் மனதில் எண்ணிய எண்ணம் தோன்றியது..

 

“என்னது இது,நான் ஏன் அப்படி நினைச்சேன்..அப்படினா நான் அவளை நேசிக்கிறேனா..இது எப்போ இருந்து,அவளை பிடிச்சு இருக்கா,எனக்கு அவளை பிடிக்கும் தான்,ஆனா என்னோட எண்ணம்,நான் நினைச்சது எல்லாம் நான் அவளை விரும்புற மாதிரி தான் இருக்கு, இது எல்லாம் சரி வருமா,நந்துக்கு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பான்,’என ஒரு மனம் நினைக்க “அவன் ஏதாவது நினைப்பான் அப்படின்னு தான் நீ நினைக்குறியா..அவன் எதுவும் சொல்லல அப்படின்னா உனக்கு ஓகே வா ..”என கேட்க அவன் என்ன செய்வது என புரியாமல் அவன் குழம்ப முகம் வேர்வையை சிந்தியது..

 

அவனை பார்த்த சஞ்சீவ் “என்னடா மாப்பு,ஏன் ஒரு மாதிரி இருக்க,முகம் எல்லாம் இப்படி வேர்த்து போய் இருக்கு..”எனவும் மற்ற  இவர்களும் இவனை நோக்கினர்...

 

எல்லோருடைய பார்வையும் தன்னை நோக்கி திரும்புவதை உணர்ந்து “என்னன்னு தெரியல டா..தீடீர்ன்னு  தலை வலிக்குது,நான் வேணும்ன்னா ஹாஸ்டல் போகட்டுமா..”எனவும் “என்னடா என்ன ஆச்சு..இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்த,காய்ச்சல் ஏதாவது அடிக்குதா என்ன…”என்று சுரேஷ் அவானின் நெற்றியில் கைவைத்து தொட்டு பார்க்கவும் வருவின் நல்ல நேரமோ என்னவோ,என்றையும் விட இன்று வருவின் உடல்சூடு அதிகமாய் இருந்தது..

 

“ஆமா டா..உடம்பு சூடா இருக்கு..”எனவும் தாமஸ் மற்றும் சஞ்சீவ் தொட்டுபார்த்துவிட்டு “அப்படிதான் இருக்கு..”என சொல்லிவிட்டு அங்கு இருந்த வார்டனிடம் ஒரு தலைவலி மற்றும் காய்ச்சல் மாத்திரையை வாங்கி கொடுத்து “சாப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்கு,எல்லாம் சரியாகிடும்..”என சொல்லி அவனை ஹாஸ்டல்க்கு அனுப்பினர்..

 

ஹாஸ்டல் வந்து கட்டிலில் விழுந்தவனின் கண்களோ மூடாமல் விட்டத்தை வெறித்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தது..அவனுக்கு இனிமேல் என்ன செய்வதென்றே தெரியவில்லை..தான் நினைப்பது எல்லாம் நடக்குமா என மனம் தவித்தது..

 

“நந்துவிடம் நான் எப்படி சொல்வேன்..நான் உன் அத்தை பெண்ணை விரும்பிகிறேன் போல என்று..அவன் என்னை பற்றி என்ன நினைப்பான்..உன்னை நம்பிவிட்டதற்கு நீ செய்யும் உபச்சாரம் இதுதானா..ஏண்டா இப்படி பண்ணின என்று என் சட்டையை பிடித்து கேட்டால் என் முகத்தை நான் எங்கு சென்று வைப்பேன்..இது எதுவும் வேண்டாம்…நான் என் நண்பன் கேள்வி கேட்பது போல் ஒரு போதும் நடந்துகொள்ள மாட்டேன்..எனக்கு எதுவும் வேண்டாம்…இந்த காதல் வேண்டாம்…ஒன்றும் வேண்டாம்…எப்போதும் போல நான் என் வழியிலே போறேன்..இது எதுக்கு எனக்கு புதுசா…இனிமேல் அவளை பார்க்ககூடாது..எனக்கு அவ வேண்டாம்…”என முதலில் பலது எண்ணி குழம்பியவன் கடைசியில் இதயம் கணக்க ஒரு முடிவினை எடுத்த உறுதியோடு கண்களை மூடினான்…

 

ஆனால் இம்முடிவு அவனுக்கு ஒரு நிம்மதியை தருவதைவிட ஒரு விதமான வலியினையே அவனுக்கு தந்தது..

 

அடுத்த 15 நிமிடம் அப்படியே வலியோடு கழிய,அவனது அலைபேசி அலறியது..அதை எடுத்து எடுத்து பார்த்தவனின் உறுதி இறுகியதே தவிர குறையவில்லை..அழைப்பது நந்து தான் என தெரிந்ததும்,அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன் “என்னடா நந்து சொல்லு..எப்படி இருக்க..”என்று நலம் விசரித்தவனுக்கு நந்துவின் பதிலில் “என்னடா என்ன சொல்ற..எனக்கு ஒன்னும் புரியல..”எனவும் நந்து “என்னடா என்ன சொன்னேன்..தமிழ்ல தானே சொன்னேன்…

 

எப்படி இருக்கேன்னு நீயே வந்து நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கோ..”என அவன் சிரிப்புடனே சொல்ல ..அலைபேசியின் வாயிலாக கேட்ட அறிவிப்பு அவன் கல்லூரியில் இருப்பதை தெள்ளத்தெளிவாய் விளக்கியது..   

 

வரு “என்னடா காலேஜ்ல தான் இருக்கியா..எங்க இருக்க சொல்லு நான் வரேன் … இல்லனா ஹாஸ்டல் வந்திடு..என் ப்ரண் டஸ் எல்லாத்தையும் உனக்கு இன்ட்ரோ கொடுக்குறேன்..உனக்கு சஞ்சீவ் மட்டும் தான  தெரியும்..”

 

அதுக்கு என்ன வந்துட்டா போச்சு,ஆனா என்னால இப்போ வரமுடியாது,அப்பா அம்மா,ஜெயஸ்ரீ,சுபஸ்ரீ அப்பா அம்மா,ஜீவா

எல்லோரும் வந்து இருக்காங்க,அவங்க கூட தான் இருக்கேன்…நீ கொஞ்சம் வந்து பார்த்துட்டு போயேன்..”எனவும்

 

வரு “ஓ அப்படியா ..சரி சொல்லு எங்க இருக்க ..நான் வரேன் ..”என்றான்   

 

நந்து “நான் இங்க தான் கேன்டீன் பக்கத்துல இருக்குற மரத்துக்கா..அங்க வந்திடு டா ..”என்றவன் வரு “சரி…” என சொல்லவும் அழைப்பை துண்டித்தான் ..  

 

நந்துவிடம் பேசிவிட்டு வைத்த வருவோ போகலாமா..??வேண்டாமா..??என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருந்தான்..நேரம் ஆனதே தவிர அவனால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை..

 

நேசம் பூத்த அன்றே அதற்கு சமாதி கட்டநேரிடும் என்று அவன் ஒரு போதும் நினைத்தும் பார்க்கவில்லை..அவன் ஒரு மனமோ “எனக்கு எதுக்கு அவ மேல விருப்பம் வரணும்..இப்படி நான் அதை மறைக்கவும்,மறக்கவும் நான் இப்படி பாடுபடணும்..நான் அவளை நேசிப்பதை தெரிந்து ஒரு வேலை நந்து என்னை பார்த்து “நீயும் மற்றவர்களை போல நடந்துகொண்டாயே..”என்றால் என்ன செய்வது..ஒரு வேலை அவன் அவளை விரும்பினால்..”என நினைக்கும்போதே அவனின் கை,கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன..

 

அவனின் மற்றொரு மனமோ “இல்ல,அப்படி எல்லாம் இருக்காது…ஆண்டவா இருக்கவும் கூடாது..”என தீவிர பிராத்தனையும் செய்துக்கொண்டது..

 

அந்நேரம் அலைபேசி அழைக்க எடுத்து பார்த்தவன்,அதில் நந்து என ஒளிரவும்,தன் தலையில் அடித்துக்கொண்டவன் “சாரி டா நந்து,இன்னும் கொஞ்சம் நேரம்   இதோ வந்துட்டே இருக்கேன்…”என்றவன் அடுத்த நிமிடம் அறையைவிட்டு அவனை காண விரைந்து வெளியேறினான்…

 

விழாவினை வெகு உற்சாகமாய் கண்டு ரசித்துக்கொண்டு இருந்தவளை தீடிரென்று ஒரு கரம் பின்னால் இருந்து கண்ணை பொத்த “யாரு…யாரு…’என ஜெயஸ்ரீ அக்கரத்தினை பிடித்துக்கொண்டு கேட்டாள்..

 

யாரென்று சுபஸ்ரீயும்,சுஜாவும் திரும்பி பார்க்க அங்கு ஜீவா தான் ஜெயஸ்ரீயின் கண்ணினை பொத்திக்கொண்டு நின்று இருந்தாள்..

ஜீவாவினை கண்ட சுபஸ்ரீ “ஹேய்ய்….” “……..ஜீவா…”என கத்த போவதற்குள் வேண்டாம் என ஜீவா பலமாய் தலையை ஆட்டவும் சுபஸ்ரீயும் அமைதியாய் வாயினை மூடிக்கொண்டாள்…

 

சுஜாவிற்கு முதலில் அது யார் என்று தெரியவில்லை என்றாலும்,ஜெயஸ்ரீக்கும் அவளுக்குமான உருவ ஒற்றுமை ஒரே போல் இருப்பதை கண்டவள் இது ஜெயஸ்ரீயின் தங்கையாய் தான் இருக்கும் என்பது அவளது ஊகமாய் இருந்தது..அவள் அமைதியாய் எதுவும் பேசாமல் நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…

 

ஜெயஸ்ரீ “ ஹேய்…யாரு பா இது…”என்றவள் “சுஜா என் பக்கத்துல தான இருக்க,யாருன்னு சொல்லேன்டி…”என அவளை திட்டியவள்…பின் சுபா நீ யாரோன்னு சொல்ல வந்தியே…யாருன்னு சொல்லு…”எனவும்

 

சுபஸ்ரீ “எனக்கு எல்லாம் தெரியாது ஸ்ரீ…நீயே கண்டுபிடி..என்னை விட்டுடு…நான் இந்த விளையாட்டுக்கு எல்லாம் வரல சாமி…”என அவள் பின்வாங்கவும் “யாரா இருக்கு…நமக்கும் இங்க யாரும் தெரியாது..அந்த அளவுக்கு ப்ரிண்ட் ஆகல..சுஜாவும் பக்கத்துல தான் உட்கார்ந்துட்டு இருக்கா..வேற யாரா இருக்கும்…சுபா இப்படி அலறி அடிச்சிட்டு பின் வாங்குறானா…யாரா இருக்கும் …”என யோசித்தவள் “ஜீ……வா…..”என கூவிக்கொண்டே மின்னலென திரும்பி அணைத்துக்கொண்டாள் அவளது அன்பு தங்கை ஜீவாவினை…

 

பின் அங்கே பாசக்கடலில் மூழிக்கொண்டு இருந்தனர் சகோதரிகள் இருவரும் நந்து வரும்வரை..இவர்களிடம் வந்த நந்து “ஹேய்ய்ய்….மோகினி பிசாசுங்களா…இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..அங்க எல்லோரும் உங்களை பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..வாங்க போலாம்..”என அழைக்கவும்..

 

“என்னது நாங்க எல்லாம் மோகினி பிசாசுங்களா…அதை ஒரு ஒட்டகசிவிங்கி சொல்ல வேண்டாம்…”என ஜெயஸ்ரீயும்,சுபஸ்ரீயும் ஒரு சேர சொல்ல,ஜீவாவும்,சுபஸ்ரீயும் இப்போது ஹை-பை கொடுத்துக்கொண்டனர்…

 

“பொண்ணுங்க இருக்குற இடத்துல இப்படி சிங்கம் சிங்குலா மாட்டினா

,இப்படி தான் அசிங்கம் படுத்துவீங்களா…அதுனால தான் நான் போகமாட்டேன்னு சொன்னேன்..எல்லாம் இந்த மாமாவை சொல்லணும்..”என முனகியவன் “என்னோட உயிர் தோழன் என்னை உங்க கிட்ட இருந்து காப்பாத்த வருவான்..அப்போ பார்த்துக்குறேன் உங்களை பொடுசுங்களா…”என்றவன் “யாரை பொடுசுன்னு சொல்ற…உன் பிரின்ட் வரட்டும் ..யாருன்னு பார்க்க தான போறோம்…”என அவர்கள் சொல்லிய பதிலை எதுவும் காதில் வாங்காதது போல நடித்துக்கொண்டே அவ்விடத்தைவிட்டு நகர ஆரம்பித்தான்…

 

பிறகு பெரியவர்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்த சிறியவர்கள் தங்களது அப்பா,அம்மா,அத்தை,மாமா என எல்லோரிடமும் செல்லம் கொஞ்சிகொண்டு இருந்தனர்…

 

சிறிது நேரம் இப்படியே கழிய அப்போது தான் சுஜா அங்கு தனியாய் நின்று கொண்டு இருப்பதை கண்ட ஜெயஸ்ரீ “ஹே…சுஜா என்ன அங்க நிக்கிற..இங்க வா…”என அவளை அழைத்து பெரியவர்கள் முன் நிறுத்தியவள் “இது தான் என்னோட ப்ரிண்ட் சுஜா,ஊரு காரைக்குடி…IT டிபார்ட்மென்ட் படிக்கிறா..”என பெரியவர்களுக்கு அறிமுகபடுத்தினாள்..

 

சுஜாவும் பெரியவர்கள் எல்லோரையும் பார்த்து சிநேகமாய் மென்னகை புரிந்தாள்…அவளின் இந்த சாந்த குணம் பெரியவர்களை மிகவும் கவர்ந்தது…பின் சுஜாவிடம் திரும்பிய ஜெயஸ்ரீ “இது என்னோட அப்பா மகேஸ்வரன்,இது என்னோட அம்மா தமையந்தி,இது என்னோட மாமா மாணிக்கம் அதாவது நந்தியோட அப்பா,இது என்னோட கியூட் அத்தை மலர் அதாவது நந்தியோட அம்மா,இது என்னோட மாமா சீதாராமன் அதாவது சுபாவோட அப்பா,இது என்னோட செல்ல    

அத்தை ஆனந்தவள்ளி அதாவது சுபாவோட அம்மா,இது என்னோட செல்ல தங்கை ஜீவா,இது என்னோட நந்தி @ நந்தலன் என் அத்தை பெத்த சொத்த…”என சொல்லிக்கொண்டு வந்தவள் அடுத்து “இது என்னோட…”என ஆரம்பித்தவள் வாயும்,சுட்டிய கையும் அப்படியே அந்தரத்தில் தொங்கின…

 

அவள் அமைதியாய் சிலையென இருப்பதை பார்த்த சுபா என்னவென்று நோக்க அங்கு அவள் சுட்டி காட்டிய இடத்தில் நின்றுகொண்டு இருந்த வருவினை கண்டவள் “ஹேய்ய்…இது யாரு சொல்லு…”என்றவள் “இது என்னோட லவர் வரு அப்படியா…”என அவளிடம் பெரியசிரிப்போடு கேட்டவளை “சுபா…..”என கண்டிக்கும் நோக்கோடு எல்லோரிடமும் இருந்து அவள் பெயர் உச்சரிக்க…ஆனந்தவள்ளியோ “சுபா…என்னடி படிக்கிற புள்ள மாதிரியா பேசுற…இப்படி பேசிட்டு…”என எல்லோர் முன் கோவமாக கண்டிக்கவும்…”சாரி….”என கண்ணில் கலங்கிய நீரோடு சொன்னவள் அமைதியாய் தமையந்தியின் மறுபுறம் சென்று அமர்ந்துக்கொண்டாள்…எல்லோருக்கும் அவள் பேசியது பிடிக்கவில்லை என்பது அவர்களது முகத்தில் இருந்தே அறிந்துகொள்ள முடிந்தது…

 

அதஊவ்ம் ஆனந்தவள்ளி மன்னிப்பு வேண்டும் பார்வையை மகேஸ்வரன் மற்றும் தமையந்தியை நோக்கி வீச “விடுமா…சும்மா விளையாட்டுக்கு தான சொன்னா..விடுங்க…”என்று அதற்கு அத்தோடு முற்றுபுள்ளி வைத்தார்…

 

வரு அப்படியே நிற்பதை உணர்ந்து “நீ வாடா…ஏன் அங்கவே நிக்கிற…”என வருவாய் அழைத்தவன் அதே நிலையில் இருந்த ஜெயஸ்ரீயினை கண்டு “கையை கீழ இறக்கு…இப்படி சிலைமாதிரி நின்னுட்டு இருக்க…எல்லோரும் உன்னை தான் பார்க்குறாங்க…”என அவளது தலையில் ஒரு கொட்டு கொட்டியவன் பிறகு வருவினை அழைத்துக்கொண்டு சென்று அவனின் குடும்பத்தினற்கு அறிமுகபடுத்தினான்…

 

மற்றவர்கள் எல்லாம் இயல்பாய் இருக்க இரு மனங்கள் மட்டும் சுவாசத்திற்கு தவிப்பது போல தவித்துக்கொண்டு இருந்தது…ஒரு மனம் வரு என்பது நான் சொல்லவேண்டுமா என்ன..?? மற்றொரு மனம் அதிர்ந்த நன்ற பேதையே ஆவாள்..ஆம் ஜெயஸ்ரீ தான் அது..என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வில் அவளின் மனம் உணர்ந்தது…ஆனால் ஏதோ ஒன்று நெடுநாள் கிடைக்காமல் இன்று கையில் கிட்டியது போன்ற ஒரு பெரும் நிம்மதி அவளினுள்…ஆனால் இது எல்லாம் தனது கற்பனையா..??அல்லது நிஜமா..??என அவளால் புரிந்துகொள்ள முடியாமல் அமைதியாய் சுஜாவின் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்…

 

வருவின் நிலையோ அந்தோ பரிதாபம்..எது வேண்டாம் என்று எண்ணி ஒரு முடிவினை தீர்மானித்துவிட்டு நந்துவினை காண வந்தானோ,எதற்காக பயந்தானோ..அதுவே இப்போது சுபாவின் வாயினால் கேட்கும்போது,அப்படி ஒன்று நடக்குமா..என்ற ஏக்கம் அவனினுள் பரவுவதை அவனால் என்ன முயன்றும் தடுக்கமுடியவில்லை..இனி அவன் எடுக்கும் முடிவு என்னவாய் இருக்கும்..இவனின் இவ்வுறுதி இனிமேலும் நிலைக்குமா…பதில் அவனிடமே…  

 

மகேஸ்வரனின் கண்கள் அங்கு நந்துவிடம் பேசிக்கொண்டு இருந்த வருவினையே அளவெடுத்துக்கொண்டு இருந்தது…ஜெயஸ்ரீயின் சில நிமிட உணர்வினை துல்லியமாய் கண்டுகொண்டவராயிற்றே…

 

காவலின் கண்ணில் இருந்து ஒரு துரும்பு தப்பமுடியுமா என்ன…என்னதான் அவர் ஒரு கணவனாகவும்,தகப்பனாகவும்,

மகனாகவும் பல்வேறு பரிமாணங்களில் தன்னை சிறிது நேரம் ஆட்படுத்திகொண்டாலும்,அவரினுள் இருக்கும் காவலன் என்ற எண்ணம்,எதற்கும் எச்சரிக்கை என எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்…

 

மகேஸ்வரனும் அப்படிபட்ட ஆளே…அவருக்குள் எந்த ஒருவரை பார்த்தாலும் சந்தேக நோக்கத்துடனே பார்ப்பது அவர்களது இயல்பானது…ஜெயஸ்ரீயினை நோக்கியவர் அவள் இப்போது சிறிது தெளிந்து அமர்ந்து இருப்பதுபோல தோன்ற அவரும்,இனிவருவதை பார்த்துகொள்ளலாம் என எண்ணி அங்குள்ள சீதாராமனிடம் வேலையினை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்…

 

ஆனால் அவர் அறிவாரா ஜெயஸ்ரீ தன் உணர்வுகளை

மறைத்துக்கொண்டு அமர்ந்து இருப்பதை…என்றும் தந்தை பேச்சினை எதிர்த்து பேசிறாத இம்மகள்,தந்தை வைத்த முற்றுபுள்ளியினை வைத்தே,அதை அவள் வாழ்க்கைக்கு தொடக்கபுள்ளியாய் மாற்ற போகிறாள் என அறிவாரா…??அறியும்போது அவர் என்ன செய்வார்..??காலத்தின் கையில் விடைகள்…

 

பெண்ணே உன்னை

கண்ட நாள் முதல்

பித்தனாய் ஆனேன்

காரணம் அறிவாயா..??

பித்தம் பிடித்து போனது

எனக்கா..???என் காதலுக்கா..??

பித்து பிடித்து அலைந்துகொண்டு

இருக்கிறேன் தெருவில்

அன்று உன்னை பார்த்தது முதல்…

பல மருத்துவரை நாடினேன்

பித்தம் தெளிய..

அவன் கொடுத்த மருந்துகள்

எல்லாம் என் உடல் பித்தத்தை

தெளியவைத்ததே தவிர..

என் காதல் பித்தத்தை

தெளியவைக்கவில்லை…

என் காதல் பித்தத்தின் மருந்து

நீ என்பது அவனுக்கு எப்படி தெரியும்..

அவன் பரிசோதித்தது

என் உடலை தானே..மனதை அல்லவே..

என் மனதில் குடிகொண்டுள்ள

நீயல்லவா என் பித்தத்தின்

ஆதிமூலம்…

என் பித்தத்திற்கு மட்டுமா..??

எனக்கும் நீ தானே

இப்போது ஆதி முதல் அந்தம் வரை…

 

விலகல் தொடரும்…

Advertisement