Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-14

 

சுஜாவுடன் பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதை உணர்ந்து “சரி சுஜா,ரொம்ப நேரம் ஆச்சு…நான் தூங்க போறேன்…நீயும் தூங்கு,,நாளைக்கு காலையில காலேஜ்ல பார்க்கலாம்…குட் நைட் சுஜா…”என்றாள்…

 

சுஜா “சாரி ஜெயா..ரொம்ப நேரம் ஆச்சு…இரு நான் உன்னோட ரூம்க்கு வந்து விட்டுட்டு வரேன்…வெளியில எல்லாம் இருட்டா இருக்கு…”

 

ஜெயஸ்ரீ “ஹே சுஜா,என்னைய என்ன சின்ன பிள்ளை அப்படின்னு நினைச்சியா,துணைக்கு வரேன்னு சொல்ற…நானே போகிடுவேன்..ஒரு 5 ரூம் தள்ளி இருக்குற ரூம்க்கு நீ எதுக்கு…நீ போய் தூங்கு,நான் போறேன்…”என்றவள் சுஜா சொல்வதை ஏதும் கேட்காமல் வந்துவிட்டாள்…

 

(உனக்கு பயம் னா என்னனு தெரியாதா…நீ பெரிய பொண்ணா…தோழிகளே ..இந்த அண்ட புழுகை கேளுங்க…)

 

வெளியில் முழுதும் விளக்குகள் எல்லாம் அணைத்து,இடமே கருமை கொண்டு இருந்தது…இருட்டினை பார்த்த ஜெயஸ்ரீயின் கால்கள் நகர மறுத்தது,கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன…

 

(இந்த வெட்டி பந்தா..உனக்கு எதுக்கு??…அவ கூட வந்து இருக்கலாம்…)

 

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்ணில் யாருமே படவில்லை…”என்ன எல்லோரும் இவ்வளவு சீக்கிரமே தூங்கிட்டாங்க…”என எண்ணியவள் மனமோ “என்னது இவ்வளவு சீக்கிரமா??..மணி என்ன தெரியுமா நைட் 11,இது உனக்கு சீக்கிரமா…விட்ட இப்போ பேய் ஒரு உலா வர ஆரம்பிக்கும்…”என முறைத்துக்கொண்டே சொல்லவும்..அதனின் பதில் திகில் அடைந்தவள் “என்ன பேய் உலா வருமா,இந்த நேரத்துக்கா,நீ வேற ஏதாவது சொல்லி என்னை பயப்பட வைக்காத,ஒழுங்கா அடங்கிட்டு ஒரு மூலையில உட்காரு…”என அதனின் தலையில் ஒரு தட்டுதட்டினாள்…

 

“நீ எப்படியோ போ,எனக்கு என்ன வந்தது…”என அதுவும் மூலையில் அமர்ந்து கொண்டது…

 

நகர மறுத்த கால்களை மிகவும் கஷ்டப்பட்டு நகர்த்தி ஒவ்வொரு அடியாய் நகர்ந்தாள்…மனமோ “திக்,திக்,திக்…”என அடித்து கொண்டது…”பேசாம சுஜாவை வரசொல்லி இருக்கலாம்..வெட்டி பந்தா பண்ணிட்டு,நானே போய்டுவேன்னு சொல்லி..இப்படி ஆகிடுச்சே…”

புலம்பியவள் கையில் இருந்த அலைபேசி தீடிரென்று அலறவும் பயத்தில் “ஆஆஆஆ…”என கத்தியவள் கையில் இருந்த அலைபேசி எங்கோ சென்று விழுந்து அலறிக்கொண்டு இருந்தது…

   

இவளின் அலறலில்,பக்கத்தில் அறையில் இருந்தவர்கள் எழுந்து வந்து “என்ன …என்ன ஆச்சு..நீ தான் கத்தினையா…??…என்ன…?”என்று கேள்வி கேட்கவும்…

 

அவர்களை பார்த்து விழித்தவள் “ஹ்ம்ம்…ஆமா…கரப்பான்பூச்சி மேல வந்து விழுந்துடுச்சி,அதான் பயத்துல கத்திட்டேன்…”என்றாள் பயத்தோடு…

 

“நல்லா பயந்த போ,எங்க தூக்கத்தை கெடுத்துட்டு…”என திட்டிக்கொண்டே அவர்கள் அறைக்கு உள்ளே சென்று தாளிட்டுகொண்டனர்…

 

பயத்தில் வெலவெளுத்து போய் நின்று இருந்தவளை அவளின் அலைபேசியின் அலறல்,மீட்டு கொண்டு வந்தது…அதன் அலறலில் அதை தேடியவளுக்கு அதன் வெளிச்சம் தான் இங்கே இருக்குறேன் என்பதை காட்டிகொடுத்தது….

 

அதனை எடுத்தவள் பெருமூச்சுகளை எடுத்து தன்னை சீராக்கி கொண்டவள் “ஹல்லோ…”என்றாள் மெதுவாக…

 

“ஹல்லோ ஸ்ரீ,எப்படி இருக்க…சாப்பாடு எல்லாம் நல்லா இருந்ததா..ஹாஸ்டல் பிடிச்சு இருக்கா…எந்த ஒரு பிரச்சனையும் இல்லையே…”என்றது ஒரு ஆண் குரல் வித்தியாசமாக..

 

அக்குரல் அவளுக்கு புதிதாக இருக்க “யாரு …”என்றாள் எழும்பாத குரலில்…

 

“என்ன ஸ்ரீ…அதுக்குள்ளே மறந்துட்ட…இது எல்லாம் நியாயம் இல்ல…”என்றது அப்பக்க ஆண் குரல்…

 

“யாரு…நான் என்ன மறந்துட்டேன்…பேர் சொல்லாமே பேசினா எப்படி..எனக்கு என்ன X-ray கண்ணா இருக்கு..உங்க முகத்தை போன் மூலியமா பார்த்து சொல்ல…பேர் சொல்றீங்களா..இல்லையா..”என்றாள் சிறுகோவத்துடன்…

 

அவளின் கோவத்தில் சிரித்தவன் “ஷ்ஷ்ஷ்…அப்பா..என்ன ஒரு சூடு…இங்க என் காது வரையும் கொதிக்குது…கொஞ்சம் கோவத்தை குறைச்சிக்கோ மா…வருங்காலத்துக்கு எல்லாம் நல்லது இல்ல…”என்றான் கிண்டலோடு..

 

“என் வருங்காலத்துக்கு எது நல்லது,எது கெட்டது அப்படின்னு எனக்கு தெரியும்..நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்…இப்போ நீங்க யாருன்னு சொல்ல போறீங்களா..இல்லையா…தேவையில்லாம என்னை கடுப்பேத்திட்டு…”என்று பொரிந்தாள்…நடு கூடத்தில் நின்று கொண்டு இருட்டில் பேசுவது அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது…நடக்கலாம் என்று பார்த்தாலும்,இருட்டில் ஒன்றும் தெரியவில்லை…போனில் உள்ள டார்ச் பயன்படுத்தி செல்லலாம் என்றாலும் இவன் விடாமல் பேசிக்கொண்டு இருக்கிறான் என்ற கோவம் அவளுக்கு…

 

அவளின் கோவத்தினை ரசித்தவன் “அய்யோ…எதுவும் திட்டிடாத மா,நான் தான்…”என்றான் உள்ளடங்கிய சிரிப்போடு..

 

“நான் தான் னா,உனக்கு பேரே நான் தானா….வேற பேரு எல்லாம் இல்லையா…ஹே என்னை கடுப்பேத்துன…அவ்வளவு தான்…நானே ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்…இன்னும் என்னை கோவப்பட வைக்காத,போனை வை…”என்று எல்லா கோவத்தினையும் ஒட்டுமொத்தமாய் தன் வார்த்தையில் காட்டி கத்தினாள்…

 

அவளின் கத்தலில் சில நிமிடம் திகைத்தவன் “ஸ்ரீ,என்ன ஆச்சு..எதுக்கு இப்போ இவ்வளவு கோவம்…எதுக்கு இப்படி போட்டு தாக்குற…”

 

“ஹே…வார்த்தையை மட்டும் இல்லை,இப்போ இருக்குற கோவத்துக்கு நீ என் முன்னாடி இருந்தா கூட உன்னை போடுவேன்…”என்று கடிந்து துப்பினாள் வார்த்தைகளை…

 

“அம்மா தாயே..அப்படி எல்லாம் பண்ணிடாத,இனிமேல் இப்படி எல்லாம் பண்ணமாட்டேன்..நான் தான்டி என் மாமன் மகளே..உன் அத்தை மகன் நந்து…”என்றான்..

 

அவனின் பதிலில் திகைத்தவள் “ஏன் டா,பன்னி..உனக்கு என்ன நல்லா தான இருந்த,என்னைக்கும் இல்லாம,இன்னைக்கு எதுக்கு இப்படி போன் பண்ணி என்னை டார்ச்சர் பண்ண,ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்…இப்படி தான் பண்ணுவியா,உனக்கு எல்லாம் அறிவே இல்லை,உனக்கு இருக்கு இருடா…நான் அப்புறமா பேசுறேன்..புது நம்பர்ல இருந்து கூப்பிட்டு என்னையே கலாய்க்குறியா..உனக்கு அப்புறம் இருக்கு கச்சேரி…”என அவனிடம் பொரிந்தவள் அவன் “சாரி ஸ்ரீ…இனிமேல் இப்படி எல்லாம் பண்ணமாட்டேன்…”என அவன் கெஞ்சியதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அழைப்பை துண்டித்தாள்…

 

பிறகு அலைபேசியின் டார்ச்சை பயன்படுத்தி அறைக்கு சென்றாள்…அறை பூட்டாமல் இருக்கவும்..அதனை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் வேகமாக உடையினை மாற்றிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவள் தன் இஷ்ட தெய்வமான சாய்பாபாவினை மனமுருக வேண்டிக்கொண்டு கட்டிலில் விழுந்தாள்..

 

படுத்தவள் மனதில் காலையில் இருந்து இந்த நொடி வரை நடந்தது எல்லாம் மனதில் வலம் வந்தது..ஒரு நாளில் தன் வாழ்க்கை முறை மாறியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது…ஏற்பட்டது என மாறியது உண்மை தானே என்றது அவள் மனது…

 

என்றும் இரவில் சீக்கிரமாக உறங்கும் விழிகள்,இன்று நடுநாசி ஆகியும் உறங்காமல் விழித்து இருக்கிறது…என்றும் போனையே தொட்டிராத விரல்கள் இன்று அதனில் விளையாடி பார்க்கிறது…ஏதோ ஒரு புது உலகில் இருப்பது போல் தோன்றியது போல் இருந்தது அவளுக்கு…

 

உறங்க விழிகள் மூடியவளை மீண்டும் அலைபேசி எழுப்பியது..எடுத்து பார்த்தவள் புது எண்ணாக இருக்க எரிச்சலோடு எடுத்தவள் “என்னடா இப்போ எதுக்கு போன் பண்ண,நந்தி பன்னி,நான் தூங்கனும்..

நாளைக்கு காலையில காலேஜ் போகணும்..தூங்க விடு..”என அப்பக்கம் பேச வாய்ப்பு கொடுக்காமல் பொரியவும்..

 

“என்னங்க….நான் நந்து இல்ல…நான் வரு…”என்றான்.

 

“என்னது….”என்று அதிர்ச்சியோடு நினைத்தவள் வாயும் அதனையே வெளியிட்டது…இருபக்கமும் அமைதி நிலவ வரு தான்,பேசினான் “என்னங்க..நந்து ஏதாவது கடுப்பேத்திட்டானா…இவ்வளவு சூடா இருக்கீங்க…”என்றான் சிரிப்போடு…

 

அவனின் சிரிப்பில் மனதிற்குள் நிம்மதி அடைந்தவள் “சாரி…புது நம்பர்ல இருந்து போன் பண்ணி,காலாய்ச்சிட்டான்..அதான் அந்த கோவத்துல,மீண்டும் புது நம்பர்ல இருந்து வரவும்,அவனோன்னு நினைச்சு திட்டிட்டேன்..சாரி…”என்றாள் கொஞ்சம் குற்றவுணர்வோடு..

 

அவளின் மன்னிப்பில் சிரித்தவன் “பரவாயில்லீங்க…இதுக்கு எதுக்கு இப்படி வருத்தபட்றீங்க…தெரிஞ்சா திட்டினீங்க..தெரியாம தான நந்துனு நினைச்சு திட்டினீங்க,…”என்றான் ஆறுதலோடு…   

 

“ஹ்ம்ம்…ஆமா…மீண்டும் அவனா இருந்து இருந்தா,அதிகமா திட்டுவாங்கி இருப்பான்..ஆனா இப்போ கோவம் போச்சு…பாவம் ரொம்ப கோவமா திட்டிட்டேன்…அவன் கிட்ட சாரி கேட்கணும்…”

என்றாள் வருத்ததோடு..

 

“அப்படியா…செல்லம் அப்போ சாரி கேட்டுடு…”என்று ஆர்ப்பாட்டமாய் இடையில் நந்திவின் குரல் கேட்க ஜெயஸ்ரீ அதிர்ச்சியோடு இருக்க,அவளின் நிலை புரிந்த வரு “ஜெயா…பாவம் மா..பையன்..

ரொம்ப வருத்தபட்டான்…உன்கூட பேசணும்ன்னு சொன்னான்..அவன் தான் நம்பர் கொடுத்து கூப்பிட சொன்னான்…உன்னோட கோவம் தான் போய்டுச்சே…கொஞ்சம் பேசுமா அவன் கூட..இல்லனா புலம்பியே என்னோட காதுல ரத்தத்தை வரவச்சிடுவான்…ப்ளீஸ் மா”என வரு கெஞ்சவும்..

 

இடையில் “ஆமா டா…நீ திட்டினது கூட எனக்கு வருத்தம் இல்ல..ஆனா கோவமா இருந்தியா..அது தான் டா..எனக்கு கஷ்டமா இருந்தது..

உன்னை ஹர்ட் பண்ணிட்டேன் போல..சாரி டா…”என்றான் நந்து மிகவும் வருத்தத்துடன்…

 

“ஹே நந்தி போதும்…ரொம்ப சோக கீதம் வாசிக்காத,தாங்கல…ஏதோ கோவம் அது தான் அப்படி கத்திட்டேன்..சாரி நந்தி..இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன்..என்னை மன்னிச்சிடு…”என்றாள் அவளும் அவனை வேதனைபடுத்தி விட்டோமே என்ற வருத்ததோடு…

 

“அது எல்லாம் விடுடா..உனக்கு இல்லாத உரிமையா..??..என்னை திட்ட…இன்னைக்கு எப்படி போச்சு…நல்லா இருந்ததா,,சாப்பாடு எல்லாம் பரவாயில்லையா…அம்மா கிட்ட நீ கேட்டதை சொன்னேன்..உன் அத்தை ,ஏன் என் மருமக புள்ள கேட்டதை நீ செய்யமாட்டேன்னு சொன்ன அப்படின்னு என்னை பிடிபிடினு பிடிச்சுகிட்டாங்க…அவங்களை சமாளிக்க நான் படாதபாடு பட்டேன்…”என்றான் சோகத்தோடு…

 

அவனின் சோக குரலில் வாய்விட்டு சிரித்தவள் “யாரு ..நீ…பாடாத பாடு பட்ட..இதை நான் நம்பனும்…எனக்கு தெரியாத உன்னை பத்தி..

அத்தையை எப்போ எப்படி தாஜா பண்றதுன்னு தெரிஞ்சி,அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்குற ஆள் நீ…நீ ரொம்ப பட்டையாக்கும்…இதை எல்லாம் நம்ப உன் மாமன் மக நான் ஒன்னும் காது குத்தாம இல்ல…தெரிஞ்சிக்கோ…”என்றாள் கிண்டலோடு…         

 

“சரி சரி…ரொம்ப புகழாத..எனக்கு வெட்கமா இருக்கு…” என்று வெட்கபடுவது போல பேசினான்..

 

அவனின் இந்த பேச்சில் இன்னும் எரிச்சல் அடைந்தவள் “ஹே ..ரொம்ப பண்ண…என் அப்பா கிட்ட சொல்லிடுவேன்…ஒழுங்கு மரியாதையா அடக்கிவாசி…”என்று எச்சரித்தாள்…

 

அவளின் எச்சரிக்கையை கேட்டவன் “இந்த பிசாசு செஞ்சாலும்,

செஞ்சிடும்… ஆனா எப்போ பார்த்தாலும் என் மாமனை வச்சே என்னை கவுத்துட்றா…எதுக்கு டா,நந்தா உனக்கு வேண்டாத வேலை,அவ போற வழியிலே நீயும் போய்டு…”என அவனின் மனம் அவனுக்கு அறிவுரை வழங்க அவனும் அதை ஆமோதித்து “ஹே..ஸ்ரீ..இதுக்கு எல்லாம் எதுக்கு பிஸியா இருக்குற மாமாவை நீ டிஸ்டர்ப் பண்ற..பாவம் அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும்,இது எல்லாம் நாம்பளே பேசி தீர்த்துக்கலாம்…என்ன நான் சொல்றது சரி தான…”என்றான் பவ்யமாக…

 

ஜெயஸ்ரீ “ஹ்ம்ம்…அது அந்த பயம் இருக்கட்டும்…ஆனா கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலன்னு,நீ பண்றதை பார்த்து தெரிஞ்சிக்கலாம்…என்ன ஒரு பாவ்லா காட்ற…”என சிரிப்பு மற்றும் கேலியோடு சொன்னவள் “ஆமா..எங்க உன் ப்ரிண்ட் பேச்சே காணோம்…”என்றாள் எங்கே வரு தான் பேசியதை எல்லாம் கேட்டு இருப்பானோ என எண்ணியவள் அவன் லைனில் இருக்கிறானா என்பதை உறுதிபடுத்திகொள்ள அவனிடம் கேட்டாள்…

 

“இல்ல ஸ்ரீ..அவன் அப்பவே தூங்க போய் இருப்பான்…ரொம்ப லேட் ஆகிடுச்சே…”என்றவன் “சரி நீயும் தூங்க போ…நான் வச்சிடறேன்…குட் நைட்…”என்று அழைப்பை துண்டிக்க சென்றவனை நிறுத்தி “அது எப்படி,அவர் போன்ல தான பேசுன..அவங்க கட் பண்ணாம..நீ மட்டும் எப்படி என் கிட்ட பேசிட்டு இருக்க முடியும்…”என்று கேள்வியோடு அவள் இழுக்க…நந்தலனும் எதுவும் நினைக்காமல் “நீ என் மேல கோவமா இருந்தியா…நான் தான் அவன் கிட்ட உன் நம்பர் கொடுத்து கால் பண்ண சொன்னேன்…உனக்கு கூப்பிடறதுக்கு முன்னாடியே நான் கான்பிரன்ஷ்ல போட்டுட்டு,அதுக்கு அப்புறம் தான் உன்னை கூப்பிட்டான்…அவன் கூட உன்கிட்ட சொன்னானே..”என்றான் விளக்கமாக…

 

அவனின் விளக்கத்தினை உள்வாங்கி கொண்டவள் “ஓ..சாரி நந்தி மறந்துட்டேன்…சரி நந்தி…நானும் தூங்க போறேன்…குட் நைட்…”என்று அவனிடம் சொல்லிக்கொண்டு அழைப்பை துண்டித்தாள்…

 

கட்டிலில் படுத்து இருந்தவள் கண்களோ நித்திரை கொள்ளாமல் வருவினை பற்றி சிந்தித்து கொண்டு இருந்தது…அவன் நடந்து கொண்ட முறை அவளை மிகவும் கவர்ந்து இருந்தது…தானும் நந்தலனும் பேசுவதற்கு இடையில் இடைஞ்சல் இல்லாமல்,தாங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்,அவரே எதுவும் சொல்லாமல் போனை அப்படியே வைத்துவிட்டு சென்ற விதம் அவனின் நற்குணம் பற்றி சொல்வதாய் அவளுக்கு தோன்றியது…   

இப்போ இருக்ககூடிய சிலர்கள்,தங்களோட நண்பர்களுக்கு அத்தை மகள்,அல்லது தங்கை என அறிமுகபடுத்தினாலே,வழிந்து கொண்டு பேசுவார்கள் என தன்னோட தோழிகள் சொல்லி கேட்டு இருக்கிறவள்..வரு அப்படி எதுவும் நடந்து கொள்ளாமல்,கண்ணியமாய் அவளிடமும்,சுபாவிடமும் நடந்துகொண்டது அவளுக்கு அவன் மேல் ஒரு நற்மதிப்பினை ஏற்படுத்தியது…   

 

புது இடமும்,வருவினை பற்றிய சிந்தனையில் இருக்க தூங்காமல் புரண்டு புரண்டுபடுத்தாள்..சிந்தனைகள் எல்லாம் சங்கிலித்தொடராய் பயணிக்க அதோடு சேர்ந்து அதன் நினைவில் பயணித்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியாமல் உறங்கியும் போனாள்…

 

காலை வேலையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டு விழித்தவள்,தனது அலைபேசி மூலம் நேரத்தை கண்டவள் அது நேரம் 8.30 என காட்டவும்,அடித்து பிடித்து எழுந்து சுபாவினை தேடினாள்…அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் கல்லூரிக்கு புறப்பட்டு செல்ல தாயராகிகொண்டு இருந்தாள்…

 

அவளை கண்டவள் “என்ன சுபா,ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல,கொஞ்சம் எழுப்பி இருக்ககூடாதா,..”என அவளிடம் பேசிக்கொண்டே குளிக்க தேவையான சாமான்களை எல்லாம் எடுத்து வைத்தாள்…

 

“எனக்கு இது தான் வேலையா…மகாராணி நல்லா தூங்குவீங்க..நான் உங்களை பெட் காபி குடுத்து “எந்திரிங்க…மாகராணி..”அப்படின்னு சொல்லி எழுப்பணுமா…”என கோவமாக கேட்கவும்..

 

அவளின் கோவத்தில் ஜெயஸ்ரீயின் கைகள் அப்படியே அதிர்ந்து நின்றது…கலக்கமாய் அவளை நோக்கியவள் “என்ன சுபா,எதுக்கு இப்படி கோவப்பட்ற,நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..

ஏதோ அசந்து தூங்கிட்டேன்..எழுப்பி இருக்கலாமே அப்படின்னு தான சொன்னேன்..இதுக்கு ஏன் கோச்சிக்கிற…”என பொறுமையாய் கேட்கவும்…

 

“என்னது அசந்து தூங்கிட்டியா..நல்ல காமெடியா இருக்கே…ஹ்ம்ம்…நீ பண்ற தகிடுதனம் எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைக்குறையா..”

என அவள் ஆங்காரமாக கத்தவும்…

 

இப்போது ஜெயஸ்ரீ அதிர்ச்சியில் உறைந்தவள் “என்ன சுபா என்ன என்னவோ சொல்ற…நான் என்ன பண்ணினேன்…”என்றாள் அதிர்ச்சியோடு அவளுக்கு சுபா எதை குறிப்பிடுகிறாள் என சத்தியமாய் புரியவில்லை…

 

“ஹ்ம்ம்…பண்ணது எல்லாம் பண்ணிட்டு,இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற…ஹாஸ்டல் வந்து ஒரு நாள் கூட முழுசா முடியல..அதுக்குள்ளே நைட் புல்லா உன் லவர் கூட அப்படி கொஞ்சி கூலாவிட்டு இருக்க…இது மட்டும் உன் அப்பாக்கு தெரிஞ்சது என்ன ஆகும் தெரியுமா…”என சுபா கோவமாய் கேட்கவும்…

 

“போதும்ம்ம்…நிறுத்து சுபா…இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன…நான் மனிஷியா இருக்க மாட்டேன்…ச்ச…நீ இவ்வளவு கேவலமா என்னைய நினைச்சு இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல..”என அவளை விட கோவமாய் கத்தியவள் “என்ன பத்தி இத்தனை நாள் ரொம்ப நல்ல அபிப்ராயம் வச்சி இருக்க…ரொம்ப ரொம்ப நன்றி..ஆனா உன்னோட தேவை இல்லாத சந்தேகத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல…நான் நல்லவ அப்படின்னு உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல…” என நிறுத்தியவள் நேராய் அவளை நோக்கியவள் “நைட் போன் பேசுறவங்க எல்லாம் காதலிக்கிறவங்கன்னும்,போன் பேசாம இருக்குறவங்க எல்லாம் காதலிக்கலன்னும் அர்த்தம் இல்ல..உன்னை போல…நானும் உன் அப்பா கிட்ட சொல்ல நிறைய நேரம் ஆகாது..”என மறைமுகமாக அவளை மிரட்டியவள்,அவள் பதிலை எதிர்பார்க்காமல் குளிக்க குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்…

 

ஜெயஸ்ரீயின் கடைசி வாக்கியத்தினை கேட்ட சுபா இப்போது உறைந்து நின்றாள்…குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும் என பெரியவர்கள் சொல்வது போல சுபா செய்யும் தப்பு,ஜெயஸ்ரீயின் மூலம் அவள் கேட்க நேரிட்டது அவளுக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது..

 

இவளுக்கு எப்போது தெரிந்தது..தெரிந்தும் தெரியாதது போல இருந்து இருக்கா ஊமை கொட்டான்..நல்ல வேலை அப்பா கிட்ட சொல்லல…சொல்லி இருந்தா எனக்கு இப்படி ஒரு சுதந்திரம் கிடைச்சு இருக்குமா…ஆனா உனக்கு கொழுப்பு அதிகம் ஆகிடுச்சுடி,என்னையே மறைமுகமா மிரட்டுறியா…உனக்கு இருக்குடி..

 

“நான் என் அப்பா கிட்ட மாட்றத்துக்கு முன்னாடி உன்னைய மாட்டி,உன்னை என்ன பண்றேன் பாரு..”என மனதிற்குள் கருவியவள் தாக்க சமயம் எதிர்பாத்து காத்திருக்க முடிவு செய்தாள்…

   

 

அந்த காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது என இருவருக்கும் தெரியவில்லை…

 

உன்னையே உயிர் தோழி

என மற்றவர்களிடம்

சொல்லி பெருமை கொண்டேன்…

என் அன்புக்கு அரணாய்

உன்னையே எண்ணினேன்…

துன்பத்தில் உன் தோள்

சாய்ந்து கண்ணீர் விட

ஆசைப்பட்டேன்…

உனக்கென உயிரையையும்

கொடுக்க துணிந்தேன்…

உற்ற தோழிகளை

உன்னால் இழந்தேன்…

உள்ளுக்குள் நீ என் தோழி

என சொல்லி சிலாகித்தேன்…

உன்னை போல் வேறு

எவரும் இல்லை என

எண்ணி பூரிப்படைந்தேன்…

உன்னை போல் சிறந்தவள்

இல்லை என எண்ணி

கர்வம் கொண்டேன்…

எல்லாம் சில்லு சில்லாய்

கண்ணாடி துகள்களை போல

என் கண் முன்னே

உடைந்து சிதறியது என்ன!!!

இது எல்லாம் நான்

வாங்கி வந்த சாபமா…

இல்லை நீ எனக்கு

கொடுத்த சாபமா…

உன்னுள் என்ன இப்படி

ஒரு தீடிர் மாற்றம்…

மாற்றம் நல்லதே..

நீ இப்படி மாறி போனது

தான் என் கவலையே…

என் இதயம் உடைந்தது

கூட எனக்கு வலியில்லை…

நான் உன் மேல் வைத்து

இருந்த அன்பு,நட்பு

எல்லாம் உன்னிடம் தோற்று

போனதே எந்தன் வலி…

இவ்வலி கூட எனக்கு

சுகமே…

உன் நட்பை சுமந்த

எனக்கு இவ்வலி

பெரும் சுகமே தோழியே..

 

                           

விலகல் தொடரும்…

Advertisement