Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-13

 

நேரம் ஆனதால் பெண்கள் இருவரையும் விடுதியில் விட்டுவிட்டு அவர்களிடம் பத்திரம் என ஆயிரம் முறை சொல்லிவிட்டு,வருவிடம் சொல்லிக்கொண்டு நந்தலன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்…

 

காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்த நந்தலனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை…என்னதான் சுபாவை அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் சுபாவின் மீது அவனுக்கு சிறு பாசம் உண்டு என்பதை அவனால் மறுக்கமுடியாது…

 

ஆனால் இன்று சுபா நடந்துகொண்டு மனதிற்கு அவ்வளவு உவர்பாய் இல்லை என்றாலும்,இது அவளின் குணம் என்பது அவன் அறிந்து இருந்ததே…

 

என்னதான் ஜெயஸ்ரீ,சுபஸ்ரீயின் இக்குணங்களை பொறுத்து போனாலும்,விடுதியில் உள்ள மற்ற பெண்கள் பொறுத்து போவது என்பது எதிர்பார்க்ககூடாத ஒன்று என்று அவனுக்கு புரியவே செய்தது…இதில் அவன் என்ன செய்ய முடியும்…சீதாராமனின் அளவுகடந்த பாசம்,கண்டிப்பு இல்லாமல் வளர்ந்து,தன் செயல் மற்றவர்களை பாதிக்கா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும் என சிந்திக்காமல் தன்னோட விருப்பத்திற்கு நடந்து கொள்பவளை ஆனந்தியால் கூட சிறிதும் மாற்ற முடியவில்லை…

 

பல சிந்தனையில் தன்னை துலைத்து இருந்தவன் எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தான் என்று தெரியாமலே வந்து சேர்ந்தான்..      

 

வந்தவன் சோர்வாய் சோபாவில் கண்களை மூடி அமரவும் அவனின் அம்மா மலர் அவனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர் “என்னடா நந்து,பிள்ளைகளை ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டுட்டியா,ஒன்னும் பிரச்சனை எல்லாம் இல்லையே…”என்றார்…

 

அவரது கேள்வியில் கண்ணை திறந்து அவரை பார்த்தவன் “அப்படி எல்லாம் இல்ல மா,அது தான் ஏற்கனவே எல்லாம் செய்து இருந்தாங்களே என் மாமாக்களும்,அப்பாவும்,சும்மா ஹாஸ்டல் பார்ம் மட்டும் பில் பண்ணிட்டு,கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்தோம்..

எங்களுக்கு அங்க அப்படி எந்த ஒரு பெரிய வேலையும் இல்ல,மகேஷ் மாமா அடுத்த வாரம் ராம் மாமா கூட போய் அவங்களை பார்க்க போறேன்னு சொன்னார்..ஏதோ கேஸ் விஷயமா அழைஞ்சிட்டு இருப்பார் போல…ஜெயா தான் சாப்பாடே பிடிக்கலன்னு சொன்னா..அவளுக்கு இருக்க விருப்பம் இல்ல,ஆனா மாமா பேச்சுக்கு எதிர்த்து பேசக்கூடாதுன்னு சேர்ந்து இருக்கா….”என்றான்..  

 

“பின்ன அண்ணி நிழல்லையே வளர்ந்தவ என் மருமக புள்ள,இப்ப தீடிர்ன்னு எப்படி தனியா இருப்பா,சுபா ஒன்னும் சொல்லலையா??…”

என்று கேள்வியோடு அவனை பார்த்தார்…

 

“ஹ்ம்ம்..அவளுக்கு என்ன ரொம்ப சந்தோசமா இருக்கா,அவளுக்கு எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல..சொல்லபோனா அவ எப்போடா வீட்டை விட்டு இப்படி வருவோம் அப்படின்னு காத்து இருந்தா போல…உங்க மருமக தான் சாப்பாடு நல்லா இல்ல,எனக்கு தினமும் சாப்பாடு எடுத்துட்டு வரியா அப்படின்னு எனக்கு ஓர் குண்டை தூக்கி போட்டா…நான் யாரு அதெல்லாம் முடியாதுன்னு ரொம்ப கறாரா சொல்லிட்டேன்”என்றான் நந்தலன்..

 

அவனின் பதிலில் அவனை முறைத்த மலர் “பாவம் புள்ள எப்படிடா அந்த ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிடும்,வீட்டு சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்த பொண்ணு,நீ ஏன் தர முடியாதுன்னு சொன்ன,தினமும் அவளுக்கு எடுத்துட்டு போலாம் இல்ல,என் அண்ணன் கிட்ட அப்பவே சொன்னேன்,இங்க இருந்து போகட்டும்னு,அவரு எங்க அதெல்லாம் வேண்டாம் ஹாஸ்டல்ல இருக்கட்டும்,அப்படி இப்படின்னு என்ன என்னவோ பேசி கடைசியில புள்ளையை அங்க சேர்த்து இருக்கார்…முதமுறை இருக்க போறா,ஏதாவது கஷ்டபட போராளோ…”என்றார் அவனிடம் சிறுகோவத்தோடு…

 

அவரின் கோவத்தில் உண்டான சிரிப்பினை தன்னுள் மறைத்துக்கொண்டு அவரின் தோளின் மேல் கைபோட்டுக்கொண்டு “அம்மா என்ன இது சின்ன பிள்ளை மாதிரி என் மேல கோவப்படுறீங்க,

இருந்தாலும் நீங்க இவ்வளவு மோசமா இருக்ககூடாது…”என்றான் அவனும் சிறு பிள்ளை கோவத்தோடு..

 

என்ன என்பதுபோல் அவர் பார்க்கவும் “என் மேல கூட நீங்க இவ்வளவு அக்கறை காட்டினது இல்ல நான் ஹாஸ்டல் போய் சேரும்போது,ஆனா இந்த குட்டி பிசாசு மேல உங்களுக்கு இவ்வளவு பாசம் இருக்ககூடாது…என்னமா மாயம் பண்ணா அவ..

மாயமந்திரக்காரி…”என்றான் கிண்டலோடு.

 

அவனின் பேச்சில் அவனை முறைத்தவர் “டேய் புள்ளையை அப்படி எல்லாம் சொல்லாத,எனக்கு பொண்ணு இல்லாத குறையை தீர்த்து வைக்கிறது அவளும்,ஜீவாவும் தான்,எனக்கு ரெண்டு பேரும் மேலையும் பாசம் இருக்கு,நீ பையன் எப்படி வேணும்ன்னாலும் சமாளிச்சிப்ப,ஆனா அவ பொண்ணு டா,அது தான் நான் அபப்டி சொன்னேன்,அதுவும் இல்லாம அவ ரொம்ப பயந்த பொண்ணு,எப்படி ஹாஸ்டல் போறதுக்கே அவ ஒத்துக்கிட்டாளோ தெரியல,காலையில அமைதியா இருந்து இருப்பா,ஆனா நைட் என்ன பண்ண போறாளோ…”என வருத்தமாய் கூறியவர் “என்னடா உன்மேல எனக்கு பாசம் இல்லன்னு சொல்லிட்ட,எனக்கு இருக்குற ஒரே ஒரு பையன் நீ,நீ தான் டா என் உயிர்,நானும் உன் அப்பாவும் வாழ்றதே உனக்காக தான,உன்னை விட அவ மேல பாசம் அதிகம் வச்சிட்டேன்னு கோச்சிக்கிறையே,நான் உன்மேல பாசம் வைக்கலையா டா…நீ இப்படி சொல்லலாமா”என்றார் அழுகுரலில்..

 

அவரது குரலில் பதறியவன் “அம்மா சாரி மா,நான் சும்மா தான் சொன்னேன்,எனக்கு தெரியாத என் அம்மா பத்தி..ப்ளீஸ் ப்ளீஸ் என் செல்ல அம்மா இல்ல,நான் பேசினதும் கேட்டதும் தப்பு தான்,ஆனா எல்லாமே சும்மா லொள்ளுலாய்க்கு…சிரிங்க,ப்ளீஸ் சிரிங்க…”என்று அவரின் தாடையை பிடித்துக்கொண்டு கொஞ்சினான்…

 

அவனின் செயலில் சிரித்தவர் “போடா போக்கிரி,எப்படி தாஜா பண்றதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சு இருக்க,சரி வா சாப்பிடலாம்…” என அவனை அழைத்துக்கொண்டு சென்றார்…

 

அவரின் பின்னாடி சென்றவன் அவர் போட்ட சாப்பிட்டினை எல்லாம் ஒரு பிடிபிடித்தான்…

 

இவன் இங்கு சாப்பாட்டினை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு இருக்க,அப்பெண்கள் விடுதியிலோ ஜெயஸ்ரீ தட்டில் இருக்கும் சாப்பாட்டினை சாப்பிட முடியாமல் அளந்து கொண்டு இருந்தாள்…அவளின் அருகில் அமர்ந்து இருந்த ஜீவனோ இவளை பற்றி எண்ணம் சிறிதும் இல்லாமல் தன் வயிற்றினை நிரப்பிக்கொண்டு இருந்தது….

 

தன் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்து இருந்தவள் எண்ணமெல்லாம் தன் வீட்டினையே சுற்றி வந்தது…அவள் அம்மா ஊட்டிவிட இவள் அமர்ந்து படித்துக்கொண்டு ஒவ்வொரு வாயினையும் சாப்பிட,அவளது தங்கை ஜீவா அதை இடையில் வாங்கிக்கொள்ள,பின் இருவருக்கும் செல்ல சண்டை ஒன்று அங்கு உதயமாக,அதனை தமையந்தி தீர்க்க..என அனைத்தும் அவளின் மனதில் ஊர்வோலமாய் வந்து அவளது கண்ணீரை பெருக்கின…

 

புறங்கையால் தன் கண்ணீரை துடைத்தவள் அமைதியாய் சாப்பிடாமல் அமர்ந்து இருந்தாள்…ஜெயஸ்ரீயின் மற்றொரு புறம் அமர்ந்து இருந்த பெண் இவளை கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்..

 

அவளுக்கு ஜெயஸ்ரீயினை பார்க்க பாவமாகவும்,அதே சமயம் எதை கண்டுகொள்ளாமல் தன் வயிற்றினை நிரப்பும் சுபாவினை பார்க்க கோவமாய் இருந்தது…  

 

சாப்பிட்டு முடித்த சுபா, ஜெயஸ்ரீ சாப்பிடாமல் இருப்பதை கண்டு “இப்போ எதுக்கு இந்த சீன் போட்ற,நான் எல்லாம் சாப்பிடல,சாப்பாடு எல்லாம் நல்லா தான் இருக்கு,இதுக்கு போய் எதுக்கு அழுவற..சரி வா போலாம்..”என சொல்லிவிட்டு தன் தட்டினை எடுத்துக்கொண்டு முன்னே நடந்தாள்..நீ சாப்பிடு என அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லை…

 

சுபாவின் பேச்சில் மீண்டும் அழுகைவர தன்னை கட்டுபடுத்திக்கொண்டு தன்னோட சாப்பாட்டு தட்டினை எடுத்துக்கொண்டு குப்பைதொட்டியின் அருகில் சென்றாள்…அவளால் மனமுவந்து அதனை குப்பை தொட்டியில் போடமுடியவில்லை…

 

அவளின் காதில் ”எத்தனையோ ஏழைகள் சாப்பிட சாப்பாடு கிடைக்காம,எச்சில் இலையில இருக்குற சாப்பாட்டை சாப்பிட்டு உயிர் வாழ்றாங்க..அப்படி இருக்கும்போது,நமக்கு எல்லாம் இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சி இருக்குறது போன ஜென்மத்துல நாம செய்த புண்ணியம் தான்…நீ இப்போ விட்டு போற இந்த சாப்பாடு,ஒரு மனுஷனோட ஒரு நாள் வயித்து சாப்பாடு,ஒழுங்கா சாப்பிடு…”என அவளின் அப்பா மகேஸ்வரன் ஒரு நாள் அவள் சாப்பிடாமல் சாதத்தை வீண் செய்த போது அவளுக்கு சொன்னது …

 

இப்போது என்ன செய்வது என தெரியாமல் நின்று இருந்தவள் அருகில் “சாப்பாட்டை எல்லாம் வேஸ்ட் பண்ண கூடாது,தயவுசெஞ்சு சாப்பிட்டிடுங்க…”என்றது ஒரு பெண் குரல்…அக்குரலில் யார் என திரும்பியவளின் முன்னால் நின்று இருந்தாள் ஜெயஸ்ரீயின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுகொண்டு இருந்த அப்பெண்…

 

அப்பெண் இவளை நோக்கி புன்னகைக்கவும்,ஜெயஸ்ரீயும் சிறிதாய் அவளை பார்த்து புன்னகைத்தாள்…அவளை பார்த்து சிரித்தவள்

“என் பேர் சுஜாதா..எல்லோரும் சுஜா அப்படின்னு கூப்பிடுவாங்க….B.Tech டிபார்ட்மென்ட்… “….என்றவள் ..”நீங்க …”என்றாள்…

 

“நான் ஜெயஸ்ரீ….B.E CSE ”என்றாள் அவளிடம்…  

 

“நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் உங்களை முதல்ல இருந்து, எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கீங்க,நீங்க இது தான் ஹாஸ்டல்க்கு முதமுறையா…??”என்றாள் சுஜா…

 

ஜெயஸ்ரீ “ஆமாம் “என தலையை ஆட்டவும்,அவளை பார்த்து சிரித்த சுஜா “அய்யோ,இவ்வளவு பச்சை பிள்ளையாய் இருக்கீங்களே..இது எல்லாம் ரொம்ப தப்பு…நான் எல்லாம் என் வீட்ல சண்ட போட்டு ஹாஸ்டல் சேர்ந்து இருக்கேன்…இது ஒன்னும் ஜூ இல்ல பா,எல்லாம் பழக பழக சரியாகிடும்…”என்றவள் “நான் விட்டா பேசிட்டே இருப்பேன்..

நீங்க முதல்ல சாப்பிடுங்க..நாம்ப பொறுமையா பேசலாம்..”என்றுவிட்டு அவளை சாப்பிடுமாறு அருகில் உள்ள மேசையில் அமரவைத்தாள்..

 

ஜெயஸ்ரீ “இல்ல வேண்டாம்…”என மறுக்கவும் “ஷ்ஷ்ஷ்…எதுவும் பேசகூடாது..எனக்கு சாப்பாடு வேஸ்ட் பண்ணா பிடிக்காது..எதுவும் பேசாம,தட்டுல இருக்குறது எல்லாம் சாப்பிடணும்..நான் கை கழுவிட்டு வந்துட்றேன்..”என்று விரைந்தாள்…

 

போகும் சுஜாவையே பார்த்து கொண்டு சில நிமிடங்கள் இருந்தவள் சாப்பிட அமர்ந்தாள்…அவள் சாப்பிட தொடங்கவும் “ஹேய்ய்..நீ இங்க தான் இருக்கியா..எவ்வளவு நேரம் வெயிட் பண்றது,சாப்ட்றன்னு ஒரு வார்த்தை வந்து சொல்லி இருந்தா குறைஞ்சா போயிட்டு இருப்ப,உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..நீ இங்க சாப்பிட்டுட்டு இருக்க,சரி நான் ரூம்க்கு போறேன்..நீ சாப்பிட்டு வந்து சேரு…”என ஜெயஸ்ரீயின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அறைக்கு விரைந்துவிட்டாள் சுபா…

 

சுபாவின் பேச்சை கேட்டுக்கொண்டு வந்த சுஜா தான் கேட்டது போல காட்டிகொள்ளாமல் “ஹ்ம்ம்..வெரி குட் கேர்ள்…சொன்ன மாதிரியே சாப்பிட அரம்பிச்சிட்டியே..ஹ்ம்ம்…இப்படி தான் இருக்கணும்”என்றவள் “எனக்கு ங்க எல்லாம் போட்டு அதிகமா பேச வராது,நீயும் நானும் ஒரே ஏஜ்ல தான் இருப்போம்,நான் நீ வா போ-ன்னு பேசுறேன்,நீயும் அதே மாதிரி பேசு…”என்றாள் ஜெயஸ்ரீயிடம்…

 

ஜெயஸ்ரீயும் “ஹ்ம்ம்…”என தலையை உருட்டினாள்…அவளின் உருட்டலில் “ஹேய்ய்…ஓசூர்க்கு எப்படி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வந்தது…”எனவும் ஜெயஸ்ரீ தெரியாமல் விழிக்க “அய்யோ..இது கூட புரியலையா??…நான் உன்னை தான் தலையாட்டி பொம்மைனு சொன்னேன்…இப்படி இருந்தா ரொம்ப கஷ்டம்…எனக்கே பல்பு கொடுத்துட்டியே…”என்றாள் சோகமாக..

 

“அச்சோ..ரொம்ப கஷ்டமா,என்னால இங்க படிக்க முடியாதா,நான் அம்மாகிட்ட சொல்லிடறேன்….”என்றாள் ஜெயஸ்ரீ சிறு பிள்ளை போல..

 

“அய்யோடா…எந்த குருவாயுரப்பா..என்னை காப்பாத்து….ஜெயஸ்ரீ என்கிற வெகுளிபெண்ணே..நான் கஷ்டம்னு சொன்னது இப்படி நீ எதுவும் தெரியாம இருக்குறது தான்,படிப்பை பத்தி இல்ல,உன்னை சீனியர் யாரவது டீஸ் பண்ணா இப்படி தான் மண்டையை மண்டையை ஆட்டிட்டு,அவங்க சொல்றது எல்லாம் செய்வியா…அப்படி எல்லாம் பண்ணகூடாது…என்ன சரியா…”எனவும்..

 

மீண்டும் ஜெயஸ்ரீ மண்டையை உருட்ட போக அவளின் தலையை பிடித்தவள் “இனிமேல் நீ மண்டையை உருட்டுன,நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது…உருட்டகூடாது சரியா..”என சுஜா கேட்கவும் மீண்டும் மண்டையை உருட்ட போனவள் சுஜாவின் முறைப்பில் “சாரி…இனிமேல் பண்ண மாட்டேன்..” என்றாள் சீரியசாக..

 

அவளின் பதிலில் சிரித்தவள் “சரி வா என்னோட ரூம்க்கு போலாம்,நான் தனியா தான் இருக்கேன்,இன்னும் யாரும் ரூம்க்கு வரல…”என்றாள் சுஜா..

 

“ஹ்ம்ம்..சரி…ஒரு நிமிஷம்…நான் ரூம்க்கு போயிட்டு போன் எடுத்துட்டு வரேன்…வீட்டுக்கு பேசணும்…”என அவளிடம் சொன்னவள் அறைக்கு சென்றாள்…

 

அறையில் சுபா அவளது படுக்கையில் படுத்துக்கொண்டு யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்தாள்…ஜெயஸ்ரீ தன்னோட போனை எடுத்தவள் சுபாவின் அருகில் சென்றவள் “சுபா…”என்றாள் மெதுவாக..

 

சுபாவோ இவள் அழைப்பதை கண்டுகொள்ளாமல் போனில் உரையாடிகொண்டு இருந்தாள்..மீண்டும் ஜெயா “சுபா..” என அழைக்கவும்,அவளின் அழைப்பில் “என்ன..” என்பது போல சுபா அவளை நோக்கவும் “பக்கத்து ரூம் சுஜா,அவங்க ரூம்க்கு கூப்பிட்டாங்க…நான் போய் அவங்க கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்…”என்றாள் ..ஜெயஸ்ரீயின் பதிலில் எரிச்சல் அடைந்தவள் “நீ எங்க போனா என்ன,என்னை எதுக்கு தொந்தரவு பண்ற..நீ எங்கவோ போ…என்னை விடு…”என்றவள் மீண்டும் போனில் உரையாட ஆரம்பித்துவிட்டு இருந்தாள் சுபா…

 

சிறிது நேரம் நின்று பார்த்தவள்,எதுவும் பேசாமல் தன்னோட அலைபேசியை எடுத்துக்கொண்டு சுஜாவின் அறையின் வாசலில் சிறு தயக்கத்தோடு நின்றாள்…

 

தன்னோட துணிகளை எல்லாம் எடுத்துவைத்துக்கொண்டு இருந்தவள்,எதற்சியாய் திரும்பும்போது வாசலில் தயக்கமாய் நின்று கொண்டு இருந்த ஜெயாவினை கண்டு “ஹே என்ன அங்கவே நிக்கிற..உள்ள வா..எதுக்கு தயக்கம்…”என அவளை கையோடு அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் சுஜா…

 

அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தவள் சுஜாவினை பார்த்து மெலிதாய் முறுவலிக்கவும்,சுஜாவும் அவளை பார்த்து முறுவலித்தாள்..

 

சுஜா “வீட்டுக்கு பேசிட்டியா…”

 

ஜெயஸ்ரீ “இன்னும் இல்ல,இப்போ தான் பேசணும்..ஒரு நிமிஷம்,நான் பேசிடறேன்…”என்றாள்

 

சுஜா “ஹ்ம்ம்…நீ பேசு,நானும் என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துவச்சிட்டு இருக்கேன்…”என்றவள் அவளோட வேலையை செய்ய ஆரம்பித்தாள்…

 

ஜெயஸ்ரீ அவளது அம்மா தமையந்தியை அழைக்க முதல் அழைப்பிலே அவளது அம்மா எடுத்து “ஸ்ரீ எப்படிடா,இருக்க…”என ஏக்கமாய் வந்தது அவரின் குரல்…

 

அவரின் குரலில் இருந்த ஏக்கத்தையும்,பாசத்தையும் கண்ட ஸ்ரீயின் கண்கள் கலங்க ஆரம்பித்தது,அழுகையில் தொண்டை அடைத்து போனது…இருக்கும் இடம் கருதி தன்னை சமன்படுத்திக்கொண்டவள் “ஹ்ம்ம்…நான் நல்லா இருக்கேன் மா,நீங்க எப்படி இருக்கீங்க,

அப்பா,ஜீவா,ராம் மாமா,ஆனந்தி அத்தை எல்லாம் எப்படி இருக்காங்க….”

 

“ஹ்ம்ம்..எல்லாம் நல்லா இருக்கோம் டா,இவ்வளவு நேரம் ஜீவா ஒரே அழுகை,இப்போ தான் தூங்கனா,அப்பா டுயூட்டில இருக்கார் டா,வீட்டுக்கு வந்ததும்,வந்து உன்னை பார்க்க போலாம்ன்னு சொல்லி இருக்கார்…”என்றார் அவர்…

 

“ஹ்ம்ம்..அப்படியா சரி மா…ஜீவாவை பார்த்துக்கோங்க…”என்றாள் அமைதியாய்…அவளின் குரலில் இருந்த அமைதி தமையந்திக்கு வருத்தமாய் இருந்தது..இத்தனை நாள் என் முந்தியை பிடித்து சுத்திகொண்டு இருந்த பொண்ணை இப்படி தூரமாய் வெளி உலகம் தெரியனும்,தைரியம் வேணும் அப்படின்னு இந்த மனுஷன் புள்ளையை இப்படி தூரமா சேர்த்துவிட்டுடாரே..எப்படி சமாளிக்கபோகுதோ…

இவருக்கு என்ன வேற வேலை இல்ல என தன் கணவரை மனதிற்குள் திட்டியவர் “சாப்பாடு எல்லாம் நல்லா இருக்காடா,நந்து நீ சாப்பாடு நல்லா இல்ல அப்படின்னு சொன்னதா சொன்னான்னு,உங்க அத்தை மலர் சொன்னாங்க…உனக்கு பிடிக்கல அப்படின்னா சொல்லுடா,நான் அப்பா கிட்ட இன்னும் ஒரு முறை பேசிபார்க்குறேன்…இங்கவே ஒரு நல்ல காலேஜ்ல சேர்ந்துக்கலாம்…”என்றார்…

 

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மா,சும்மா நான் நந்திகிட்ட சொன்னேன்,இவன் அத்தைகிட்ட சொல்லிட்டானா,அய்யோ…சாப்பாடு எல்லாம் A1 மா..சாப்பாடு எல்லாம் ஒரு குறையும் சொல்லமுடியாது..

நான் பார்த்துக்குறேன்..நீங்க அப்பா கிட்ட எல்லாம் சொல்லாதீங்க..

போக போக எல்லாம் சரியாகிடும்…”என அவளின் அம்மாவிற்கு சொன்னவள் தனக்கும் சேர்த்து சொல்லி கொண்டாள்…   

 

“சொன்னா மட்டும் அந்த மனுஷன் என் பேச்சை கேட்க போறாரா…அவர் வச்சது தான் சட்டம் வீட்ல…நீ உடம்பை பார்த்துக்கோடா..அடுத்த வாரம் நானு,அப்பா,ஜீவா,எல்லாம் உன்னை பார்க்க வரோம்…நானாவது வந்து இருக்கலாம் உன் கூட,எங்க உன் அப்பா தான் போக கூடாதுன்னு சொல்லிட்டார்..அவர் கூட தான் எங்கவும் போகணும்,தனியா எல்லாம் போக கூடாது…நான் ஏதாவது கேட்டா முறைச்சே என் வாயை அடக்கிடுவார்,,,பரவாயில்ல உன்னையாவது கொஞ்சம் தனியா போக மனுஷன் அனுமதிச்சாரே…என்ன மனுஷனோ…போ…”என அங்கலாய்த்தவர்…   

 

“சரி டா…பத்திரமா இரு,சுபா கூடவே இரு,அவளையும் நல்லா பார்த்துக்கோ,அவ இருந்தா குடு இரண்டு வார்த்தை பேசுறேன்…”என்றார்…

 

“இல்ல மா,நான் இங்க ஒரு பொண்ணு ரூம்ல இருக்கேன்,என் ரூம்க்கு போனதும் கூப்பிட்றேன்..நீங்க அவ கிட்ட பேசுங்க..”என்றாள் ஜெயஸ்ரீ..

 

“அப்படியா சரி…பத்திரமா இருடா…”என அவளுக்கு பல பத்திரம் சொன்னவர்,சிறிது நேரம் கழித்தே போனை வைத்தார்…

 

ஜெயஸ்ரீ “நீ உன் வீட்டுக்கு பேசல….”

 

“நான் எல்லாம் பேசுனா,என் அப்பாவும் அம்மாவும் அலறி அடிச்சிட்டு ஓடுவாங்க…அதான் பாவம்ன்னு விட்டுட்டேன்…”என்றாள் சிரிப்போடு…

 

அவளின் பேச்சில் சிரித்தவள் “ஹ்ம்ம்..அது தான் தெரியுதே….”என்றாள் ஜெயஸ்ரீயும் அதே கிண்டல் மற்றும் சிரிப்போடு…சுஜா அவளை முறைக்கவும்…”ஹே…நான் சும்மா சொன்னேன்..தப்பா எடுத்துக்காத…”

என்றாள் சிறு படபடப்போடு….

 

அவளின் படபடப்பை கண்ட சுஜா “ஹே…ரிலாக்ஸ்…இந்த மாதிரி பேசுறது ஒன்னும் தப்பு எல்லாம் இல்ல…நான் எதுவும் தப்பா எடுத்துக்கல..ஈவன் நீ இப்படி பேசுறது எனக்கு பிடிச்சு இருக்கு…”என்றவள் “நீ இப்படியே சிரிச்சிட்டு இரு…அப்படியே நீ சிரிக்கும்போது உன் கண்ணு ரெண்டும் சிரிக்குது பாரு..அப்பா சான்சே இல்ல…எனக்கு உன் கண்ணு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு ஸ்ரீ…என்ன அழகு தெரியுமா உன் கண்ணு,நான் பையனா இருந்து இருந்தா உன் கண்ணாலே மயங்கி இருந்து இருப்பேன்…”என்றவள் அவளை அணைத்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்….

 

சுஜாவின் பாராட்டில் மற்றும் முத்தத்தில் ஜெயஸ்ரீ வெட்கத்தோடு சிரித்தாள்…அவளின் வெட்கத்தை கண்ட சுஜா அதற்கும் “ஷ்ஷ்ஷ்..அப்பா…நான் சொன்னதுக்கும்,செய்ததற்கும் இப்படி வெட்கபடுற,ஒரு பையன் சொன்னா என்ன பண்ணுவ…”என்றாள் சிரிப்போடு…

 

அவளின் பதில் தன் மனக்கண்ணில் ஒருவன் அவளை கட்டிபிடுத்து முத்தம் கொடுப்பது போல காட்சி தோன்ற ஜெயஸ்ரீக்கு மூச்சு

முட்டியது…சுஜா என்ன என்று கேட்கவும்,தன்னை சரிபடுத்தி கொண்டவள்,அவளை திசை திருப்பும் பொருட்டு “ஹேய்ய்…

சும்மா இரு…கிண்டல் பண்ணிட்டு..”என்றாள் சிணுங்கலோடு…சுஜாவும் ”சரி சரி,பொழைச்சுபோ…என் கிட்ட இன்னும் நீ நிறைய கேட்கவேண்டி இருக்கு,நான் பேச பேச நீ அலறி அடிச்சிட்டு ஓட போற அதுக்கு நான் கேரண்டி…” என்றாள் மீண்டும்…

 

“ஹ்ம்ம் போதும் போதும் மா…என்னால ஒரு நாளே தாங்க முடியல…”என்றாள் ஜெயஸ்ரீ பொய்யாய் அலறலோடு…”ஹ்ம்ம் அது அந்த பயம் இருக்கட்டும்…”என்றாள் சுஜா…

 

ஒரு மணி நேரம் அவர்களுக்கு எப்படி சென்றது என்றே தெரியவில்லை…என்ன என்னவோ பேசினர்,ஒருவரை மற்றொருவர் மாற்றி கிண்டல் அடித்தனர்,காரணம் இல்லாமல் சிரித்தனர்…என்றும் இல்லாமல் இன்று புதிதாய் பிறந்தது போல உணர்ந்தாள் ஜெயஸ்ரீ…

 

அவள் எப்போதும் இருப்பது ஒன்று அம்மாவிடம்,இல்லையேல் சுபாவுடன் ஏதாவது விளையாடிக்கொண்டு இருப்பது,அல்லது ஜீவாவுடன் சிறிது சண்டை போடுவது மட்டுமே…

 

சுபாக்கும் ஸ்ரீக்கும் எப்போதும் ரசனைகள் ஒத்துபோவது கிடையாது..ஜீவாவோ சின்ன பெண்ணாய் இருந்ததால்,அவளிடம் ஜெயஸ்ரீயினால் அதிகமாக ஒட்டுதலாய் இருக்க முடியவில்லை.

ஆனால் இருவருக்கும் அக்கா தங்கை என்றால் உயிர்…

 

முதல் முறையாக தனது ஒத்த தோழியுடன் ,அதுவும் புது தோழி என்ற ஒரு எண்ணமே இல்லாமல்,சிரித்து பேசிக்கொண்டு,கிண்டல் அடித்துக்கொண்டு,ஒரு புதுவிதமான அனுபவமாய் இருந்தது ஸ்ரீக்கு..

 

ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் இருவருக்குள்ளும்,நட்பெனும் மலர் அங்கே மலர்ந்து மனம் வீச தொடங்கி இருந்தது…

 

அன்புள்ள என் தோழியே

உன்னை போல் யாரையும்

நான் இதுவரை கண்டது

இல்லை என் வாழ்வில்..

சில நிமிடங்களுக்குள்

நட்பு எனும் பூ

நம்முள் பூத்தது எப்போது

யான் அறியேன் தோழியே…

என் கண்கள் கலங்கும் போது

உன் கண்ணில் கலங்கும்

கண்ணீரே சொன்னதடி

என் மேல் உனக்கு

இருக்கும் அன்பை…

நான் தவித்து நின்ற போது

எத்தனை மொழிகளும்

வார்த்தைகளும் தராத

ஆறுதலை ஒற்றை உன்

அணைப்பு சொல்லியதடி…

இதை விட வேற என்ன

பெரிய நட்பு வேண்டும் எனக்கு…

ஆயுள் முழுதும் இந்த

நட்பே எனக்கு போதும்…

 

                     

விலகல் தொடரும்…

Advertisement