Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-11

 

தனக்கு வந்து இருந்த மெயிலினை பார்த்த விஜயின் கண்கள் தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது..அதில் இருந்த வீணாவின் ரிலீவிங் லெட்டரை அவன் எதிர்பார்க்கவில்லை…என்னவாயிற்று இவளுக்கு இப்போ எதுக்கு ரிலிவிங் லெட்டர் கொடுத்து இருக்கா என்ற எண்ணத்தோடு அமைதியாய் அமர்ந்து இருந்தான்…

 

அவனிடம் இருந்து வரும் பதிலுக்காக காத்தியிருந்த ஸ்ரீ,விஜயிடம் எந்த ஒரு பதிலும்,அசைவும் இல்லாமல் கண்களை விரித்து அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து “என்ன ஆச்சு ஜெய்க்கு,இப்போ எதுக்கு இப்படி கண்ணை விரிச்சு வச்சிட்டு இருக்கார்,அப்படி என்ன பாக்குறார்,ஒரு வேலை அந்த மாதிரி எதாவது படமோ…”என அவள் மனம் தறிகட்டு இல்லாமல் ஓட தன்னையே கொட்டிக்கொண்டவள் “மவளே.இது மட்டும் இந்த ஸ்டீல்க்கு தெரிஞ்சது,உனக்கு இருக்கு ஆப்பு,அமைதியா என்ன நடக்குதுன்னு பாரு,அதைவிட்டு இவ்வளவு கேவலமாய் நினைக்காத…”என சொல்லிக்கொண்டவள்…”விஜய்ய்ய்ய்….”

என அவனின் அருகில் சென்று அவனின் காதில் கத்தினாள்..

 

அவள் கத்திய கத்தில் விஜய் அரண்டு எழுந்தான்,எழுந்த நின்றவன் காதில் இன்னும் “கொய்ய்ய்ய்யி……”என்ற சத்தம் இன்னும் கேட்கவும்…தன் விரலைவிட்டு காதினை நன்றாய் தேய்த்தான்…

 

இப்போது ஓர் அளவிற்கு சரியாய் போகவும்,கோவமாக தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய ஸ்ரீயினை தேடினான்..

 

அவளை பார்த்த விஜயிற்கு கோவத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது..பின்னே இருக்காதா,பயத்தில் அங்குள்ள ஒரு மேசையின் மேல் அமர்ந்து தன் கால்களை இரண்டையும் தன் கைகளால் கட்டிக்கொண்டு ஒரு கண்ணை மூடி,மற்றொரு கண்ணை திறந்து அவனின் செயலை பார்த்துக்கொண்டு இருந்தாள்…ஏதோ ஒரு ஆர்வ கோளாரில் செய்து விட்டாளோ ஒழிய,அவளுக்கு அவள் செய்த செயலின் வீரியம் செய்து முடித்த பின் தான் மண்டைக்கு உரைத்தது..

 

பக்கத்தில் இருந்தால் எங்கு அடித்துவிடுவானோ என்று பயத்தில் மேசையின் மேல் அமர்ந்து கொண்டாள்…

 

ஸ்ரீயின் ஒரு சிறு சிறு அசைவும் அவனுக்கு மிகவும் ரசிக்ககூடியாதாய் இருக்கும்…அப்படி இருக்கும்போது இன்று அவளின் இத்தகையை செயல் ஒரே நேரம் சிரிப்பினையும்,அவளின் இச்செயலை ரசிக்கவும் தூண்டியது…

 

இதழுக்கிடையில் உதிர்ந்த சிரிப்பினை அவள் அறியா வண்ணம் மறைத்தவன்,கண்களில் கோவத்தினை காட்டிக்கொண்டு அவளை நோக்கி நகர்ந்தான்..விஜய் கோவமாய் தன்னை நோக்கி வரவும் பயத்தில் என்ன செய்வது என புரியாமல் மேசையின் மேல் இருந்து கீழே குதித்தாள்…குதித்தவளின் காலில் இருந்த செருப்பு அத்தரையில் வழுக்கியது…

 

அடுத்த நிமிடம் அவள் இருந்தது விஜயின் மேல் தான்…அவனும் அவள் கீழே விழாத வண்ணம் தாங்கி கொண்டான் அந்த 50 கிலோ தாஜ்மஹாலை [இது எல்லாம் சும்மா பா…யாரும் என்னை அடிக்ககூடாது..சரியா…]சிறிது நேரத்தில் நடந்துவிட்ட நிகழ்வினை இருவருமே எதுவும் எதிர்பார்த்திராத ஒன்று….

 

சின்னதாய் அவளை சீண்டி பார்க்கலாம் என எண்ணி அவளை நோக்கி முன்னேறியவன் ,தீடிரென்று ஸ்ரீ கீழே குதிப்பாள் என எண்ணியும் பார்க்கவில்லை…ஸ்ரீயும் அவன் வரும் முன் கீழே இறங்கி விடலாம் என எண்ணி குதித்தவள் கடைசியில் செருப்பு பழிவாங்கும் என எண்ணி பார்க்கவில்லை…

 

தன் மேல் விழுந்து இருந்த ஸ்ரீயினை கண்டவன் மென்மையாய் அவளின் காதோர முடியினை ஒதுக்கி “ஸ்ரீ…”என்றான்…

 

அவனின் மூச்சுகாற்று காதில் குறுகுறுப்பை ஏற்படுத்த

”ஹ்ம்ம்…”என்றாள் வெளியில் வாராத குரலில்…அவளின் ஹஸ்கி வாய்சில் தன்னை தொலைத்தவன் கைகள் அவளின் முகத்தில் ஊர்வோலமாய் தனது பயணத்தினை செவ்வனே தொடர்ந்தன…

 

அவனது விரல்கள் அவளது கன்னத்தினை தொடவும் ஸ்ரீ அவனது கையினை தன் கை கொண்டு அழுத்திக்கொண்டவள்,இப்போது நேராய் அவனை நோக்கினாள்…தன் பயணத்தினை தடுத்த ஸ்ரீயினை கேள்வியாய் நோக்கினான் விஜய்…

 

சிறிது நேரம் அவனின் கண்களை நோக்கியவள் “ஏன் ஜெய்,

என்னைவிட்டு விலகி விலகி போயிட்டு இருந்தீங்க…என் மேல அன்பு இருந்தும் அதை வெளிக்காட்டமா,உங்களுக்கே நீங்க ஒரு முகமூடி போட்டுட்டு சுத்திட்டு இருந்தீங்க,நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா…”என கேட்டவளின் கடைசி வார்த்தையில் அவளது இத்தனை நாளாய் காட்டி காப்பாற்றி கொண்டு வந்த தைரியம் எல்லாம் எங்கோ போய் அவனை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்…

தன் தோளில் சாய்ந்து அழும் ஸ்ரீயினை சமாதானப்படுத்தாமல்,அவள் சொன்ன கடைசி வார்த்தையின் தாக்கத்தில் சிலையென நின்று இருந்தான் விஜய்…அவனின் முகத்தில் இருந்து எந்த விதமான பாவனையும் கண்டறிய முடியவில்லை…மென்மையாய் இருந்த முகம் இப்போது இரும்பென இறுகி இருந்தது…

 

தன்னோடு கண்ணீர் அவருக்கு எந்த ஒரு தாக்கத்தையும் தராததை கண்ட ஸ்ரீக்கு நெஞ்சம் விம்மி தவித்தது… நான் என்ன பெருந்தவறை செய்தேன்,என்னை விட்டு இப்படி விலகி செல்வதற்கு ..??,என் கண்ணில் ஒரு துளி கண்ணீர் வந்தாலும் பதறும் ஜெய் எங்கே, இப்போது தான் கதறி அழுதும்,எதுவும் பேசாமல் இரும்பென இருக்கும் விஜய் எங்கே என எண்ணியவள்,அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல்,அழுதுகொண்டே தன் கண்களை துடைத்துக்கொண்டு அவ்வறையை விட்டு வெளியேறினாள்…

 

ஸ்ரீ அறையைவிட்டு வெளியேறவும் தளர்வாய் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடியவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது..அதே நேரம் தன்னோட இருக்கையில் அமர்ந்து அழுதுக்கொண்டு இருந்தவளின் எண்ணமும் பின்னோக்கி சென்றது…

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

“ஹே…ஸ்ரீ…நில்லுடி…நான் சொல்றது கேளு…நீ ஆடறது எல்லாம் போங்காட்டம்…நான் எல்லாம் ஒத்துக்கவே மாட்டேன்….கால் பட்டையில படவே இல்லை…நீ பொய் சொல்ற….”என கத்தி கொண்டு இருந்தாள் 15  வயது நிரம்பி இருந்த சுபஸ்ரீ…

 

“போங்கும் இல்லை…கூங்கும் இல்லை…நான் கரெக்டா தான் பார்த்தேன்,உன் காலு பட்டையில பட்டுடுச்சு,எப்போ பாரு என்னை ஏமாத்துவ இல்லை,இன்னைக்கு உன் பருப்பு எல்லாம் வேகாது,நான் பார்த்துட்டேன்…போ…”என அவளுக்கு நிகராக கத்தி கொண்டு இருந்தாள் அவளை விட ஒரு வயது சிறியவளான 14  வயது நிரம்பி இருந்த ஜெயஸ்ரீ…

இருவரும் படிப்பது 10-ஆம் வகுப்பு ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில்…

சுபாவின் உடல்நலம் குறைவால் அவளின் படிப்பு ஒரு வருடம் 8-ஆம் வகுப்பில் படுக்கை போட்டுவிட,சுபாவின் படிப்பு பின்தங்கியது..

அதன்பிறகு சுபஸ்ரீயும்,ஜெயஸ்ரீயும் ஒன்றாகவே படிப்பினை தொடர்ந்தனர்…

 

சுபஸ்ரீயின் அப்பா சீதாராமன் வருவாய் ஆய்வாளராக சேலம் கிளையில் வேலைபார்த்துகொண்டு இருந்தார்..அம்மா ஆனந்தவள்ளி குடும்பதலைவி…ஜெயஸ்ரீயின் அப்பா மகேஸ்வரன் அப்போது சேலம் கிளையில் காவல் துறை அதிகாரியாய் பொறுப்பேற்று கொண்டு இருந்தார்…

 

என்னதான் காவல்துறையில்,வருவாய்துறையில் வேலை செய்பவர்களுக்கு வீடுகள் வழங்கபட்டாலும்,சீதாராமனும்,

மகேஸ்வரனும் இருவருமே அதை ஏற்றுகொள்ளவில்லை…

 

தனியாய் ஒரு வாடகை வீட்டினை பார்த்து குடிபெயர்ந்த பிறகு,பக்கத்து வீடு என அறிமுகமாய் பேசிக்கொண்டவர்களுக்குள் நாளுக்கு நாள் நட்பு வளர்ந்தது…அன்று முதல் இன்று வரை இரு குடும்பமும் நல்ல நட்போடு பழகிக்கொண்டு இருக்கின்றனர்…

இவர்கள் இருவர் சண்டையையும் சிரிப்போடு பார்த்துகொண்டு இருந்தனர் இருவரின் பெற்றோர்கள்…பெரியவர்கள் சிரிப்பதை பார்த்த சுபஸ்ரீ ,தான் தோற்று போனதால் தான் சிரிக்கின்றனர் என தவறாக எண்ணி மூக்கு விடைக்க,உதடு துடிக்க அழுகையை கட்டுபடுத்திக்கொண்டு தமையந்தியின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்…

 

அவளின் அழுகையை கண்ட தமையந்தி “ஹேய்…ஜெய் குட்டி,சுபா கரெக்டா தான்,காலை வச்சா,நீ ஒழுங்கா பார்க்கல,அவ அவுட் இல்லை,ஒழுங்கா அவ விளையாட விடு…”என கொஞ்சம் கோவமாக தன் மகளான ஜெயஸ்ரீயிடம் கடிந்துகொண்டார்…

   

தன் அன்னை தன்னை கடிந்து கொள்ளவும்,எதுவும் மறுபேச்சு பேசாமல் “அப்படியா மா,நான் தான் ஒழுங்கா பார்க்கலையா…அப்புறம் எதுக்கு இந்த நந்தி என்கிட்டே சுபா அவுட் அப்படின்னு சொன்னான்…”என்றவள் நந்தி எனும் தன் அத்தை மகனை கண்களால் தேடினாள்..அவன் அங்கு இல்லை எனவும் “சாரி சுபா,நான் ஒழுங்கா பார்க்கல போல,நீ வா,வந்து விளையாடு,நாம இன்னைக்கு இந்த நொண்டி விளையாட்டை முடிச்சிட்டு, நாளைக்கு கோலி

விளையாடலாம்….” என தமையந்தியின் அருகில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தவளிடம் சென்று அவளை சமாதானபடுத்தினாள்…

 

இது தான் ஜெயஸ்ரீ ,தன் மீது தவறு என தெரியவந்தால் யாராக இருந்தாலும் மன்னிப்பு கேட்க தவறமாட்டாள்..ஆனால் அதே போல மற்றவர்களின் தவறினை விரைவில் மன்னிக்கவும் மாட்டாள்..

 

ஜெயஸ்ரீ தன்னை வந்து சமாதானபடுத்தவும்,பெரியவர்களை எல்லாம் ஒரு வெற்றி பார்வை பார்த்துவிட்டு ஜெயஸ்ரீயுடன் விளையாட சென்றாள் சுபஸ்ரீ..

 

சுபஸ்ரீயின் கண்களில் கண்ட வெற்றி மிதப்பை யாரும் பெரிதாய் எடுத்துகொள்ளவில்லை என்றாலும்,சுபஸ்ரீயின் தாயான ஆனந்தவள்ளிக்கு அப்படியே விடமுடியவில்லை..அவர் தான் தன் மகளின் குணநலன் பற்றி வெகுவாய் அறிந்தவராயிற்றே…அவருக்கு இப்போதே பயம் சூழ்ந்துகொண்டது…

 

ஆனந்தவள்ளியின் கண்களில் இருந்த கலக்கத்தினை கண்டு கொண்ட அவரின் துணைவர் சீதாராமன் ,அவரை பார்த்து கண்களை மூடி திறந்து தான் பார்த்துகொள்வதாய் சமாதானபடுத்தினார்…

 

ஆனந்தவள்ளியும் சரி எனும் விதமாய் அவரை பார்த்து வெளியில் தலையை அசைத்தவர் மனமோ அவ்வளவு சீக்கிரம் சரியாகாது என்பது மனதில் உரைத்தது என்னவோ உண்மையே….     

 

பிறகு சீதாராமன் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட ஆனந்தவள்ளியும்,தமையந்தியும் சிறிது நேரம் பிள்ளைகள் விளையாடுவதை பார்த்துகொண்டே,தங்களுக்குள்  அளவாடிக்கொண்டு இருந்தனர்…பிறகு பிள்ளைகள் இருவரும் விளையாடி களைத்து போய் வர,அன்னைமார்கள் இருவரும் அவர்களை தத்தம் வீட்டிற்கு அழைத்து சென்றனர்…அதே நேரம் நந்தலன் வரவும் தமையந்தி அவனுக்கும் சாப்பாடு எடுத்து வைக்க உள்ளே சென்றார்…

 

“ஹே நந்தி எதுக்கு பொய் சொன்ன,சுபா அவுட்னு,அவ கால் பட்டையில படலன்னு அம்மா சொன்னாங்க..எத்தனை முறை சொல்லி இருக்கேன் பொய் சொல்லதான்னு ,திருந்தவே மாட்டியா…”என பொரிந்து தள்ளினாள் ஜெயஸ்ரீ..

 

“ஹே ஸ்ரீ..போதும்..ஓவரா பேசாத,வாய் வலிக்க போகுது…நான் கரெக்டா தான் பார்த்தேன்..அத்தை பொய் சொன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்…”என்றான் அவன் கூலாக..

 

“ஹேய்…நீ பொய் சொன்னதும் இல்லாம அம்மா பொய் சொன்னாங்கன்னு சொல்றியா…உன்னை என்ன பண்றேன்னு பாரு…”என அவனை அடிக்க ஓடி வரவும் “அத்தை என்னை காப்பாத்துங்க…ரத்த காட்டேரி என்னை அடிக்க வருது…”என தனது சாப்பாட்டு தட்டினை தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் ஓடினான்…

 

“நானா ரத்த காட்டேரி,கொல்லி வாய் பிசாசு மாதிரி இருந்துட்டு நீ என்னை சொல்றியா…”என அவளும் அவனை விடாது துரத்திக்கொண்டு ஓடினாள்…இருவரும் தமையந்தியை சுற்றி ஓடிக்கொண்டு விளையாடினர்…

 

தமையந்தி நந்தலனை ஸ்ரீ பிடிக்காவண்ணம் அவனை காப்பாற்றிக்கொண்டு இருந்தார்…ஸ்ரீ தமையந்தியை முறைக்கவும்,”விடுடா என்னைக்காவது வர பையன் கூட சண்ட போடணுமா…போ போய் ரெண்டு பேரும் சாப்புடுங்க..”என அவர்களை அனுப்பி வைத்தார்…பின் இருவரும் போட்ட சண்டைகளை எல்லாம் மறந்துவிட்டு தங்களது பள்ளி வாழ்க்கை பற்றியும்,பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தனர்…

சுபஸ்ரீயினை வீட்டிற்கு அழைத்து வந்த ஆனந்தவள்ளி,சுபஸ்ரீ அவளின் அறைக்கு உள்ளே செல்லும்முன் அவளை நிறுத்தி ”என்ன சுபா,இன்னைக்கு எதுக்கு ஜெயா கிட்ட இப்படி நடந்துகிட்ட…”என கோவமாக கேட்கவும்…

 

அவரை கோவமாய் முறைத்தவள் “என்ன அம்மா,நான் என்ன பண்ணேன்..இப்படி மொட்டையா பேசுனா எப்படி,புரியற மாதிரி பேசுங்க,இல்ல ஆளை விடுங்க…எனக்கு கை கால் எல்லாம் வலிக்குது,நான் தூங்க போறேன்,நைட்க்கு எனக்கு சாப்பாடு வேண்டாம்…”என அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்…

 

என்றும் போல இன்றும் சுபாவினை நினைத்து அவருக்கு பெருமூச்சு வந்தது…சுபாவின் இத்தகைய குணங்கள் மாற்றமுடியாது என்பது அவரும் நன்கு அறிந்த ஒன்றே…இவளை என்ன செய்வது என அவருக்கும் விளங்கவில்லை…

 

நாளுக்கு நாள் பெரியவர்களுக்கு இடையே இருந்த நட்பு இறுகியதே தவிர குறையவில்லை..ஆனால் பெரியவர்கள் போல இளையவர்கள் இல்லை…இளையவர்களுக்குள் நாளுக்கு நாள் விரிசல் உண்டானது…என்னவென்றால் என்ன என்பது போல இருக்கும் அவர்களுக்குள்ளான பேச்சுகள்…

 

இப்படி ஒற்றும் பற்றும் இல்லாமல் இருந்த இவர்களின் நட்பு ஜீவாவின் வருகை மூலம் சிறிது பிளவுபட்டது…ஜீவா ஜெயஸ்ரீயின் ஒரே தங்கை..அக்கா என்றால் கொள்ளை பிரியம் ஜீவாவிற்கு..ஜெயஸ்ரீக்கு என்றால் எதையும் செய்பவள் ஜீவா…எப்போதும் ஜெயஸ்ரீயின் பின்னே சுற்றிகொண்டு இருப்பவள்…8-ஆம் வகுப்பு வரை தாத்தா வீட்டில் படித்தவள்..அவள் அங்கு இருந்தது போதும் என்று அதன்பிறகு தன்னோடே அவளை அழைத்துவந்து விட்டார் மகேஸ்வரன்..

 

ஜெயஸ்ரீக்கும் தங்கை என்றால் உயிர்,அவள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவளை தமையந்தியை விட நன்றாக பார்த்து கொள்வாள்…ஜீவா வீட்டிற்கு வரும்போதெல்லாம் ஜெயஸ்ரீக்கும்,

சுபஸ்ரீக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகள் குறையும்..அதை எப்போதுமே சுபா விரும்பியது கிடையாது..

 

சுபாவிற்கு தான் மட்டுமே எல்லோருக்கும் முதன்மையாய் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அடிமனதில் உண்டு..அது ஜீவா வரும்போதெல்லாம் சுபாவிற்கு எட்டி பார்க்கும்..ஜெயஸ்ரீ சுபாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஜீவா வரும்போதெல்லாம் குறையும்..அதுவே ஜீவாவினை அவள் வெறுக்க காரணமாய் அமைந்தது…  

 

இப்படியே நாட்கள் அதன்போக்கில் அதனது ஓட்டத்தை தொடர,ஜெயஸ்ரீயும் சுபஸ்ரீயும் 12-ஆம் வகுப்பு முடித்து கல்லூரி வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தனர்…

 

ஜெயஸ்ரீயின் அத்தை பையன் நந்தலன் தான் இருவரையும் ஓசூர் உள்ள கல்லூரியில் சேர்த்துவிட்டான்…பிள்ளைகள் சற்று வெளி உலகமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற மகேஸ்வரன் மற்றும் சீதாராமனின் ஆலோசனைப்படி ஜெயஸ்ரீயும்,சுபஸ்ரீயும் ஓசூரில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் அட்மிசன் கிடைத்து இருவரும் சேர்ந்தனர்…

 

நந்தலன் ஜெயஸ்ரீயின் அத்தை மலரின் மகன்..மலர் மகேஸ்வரனின் தங்கை..கிருஷ்ணகிரியில் உள்ள புகழ்பெற்ற நகை கடை வைத்திருக்கும் மாணிக்கத்திற்கு தான் மலரை திருமணம் செய்து கொடுத்தனர்…நந்தலன் படித்து வளர்ந்தது எல்லாம் கிருஷ்ணகிரில் தான்..

 

நந்தலனும் விடுமுறை நாளை எல்லாம் சேலம் சென்று தன் மாமாவின் வீட்டில் தான் கழிப்பான்…அதனால் எப்போதும் நந்தலனுக்கும் ஜெயஸ்ரீயிக்கும் இடையில் ஒரு மெல்லிய நட்பு இழையோடி கொண்டு இருக்கும்…

 

குறிப்பாக நந்தலனுக்கு சுபாவின் நடவடிக்கைகள் எப்போதும் பிடிக்காது..ஆனந்தவள்ளி மற்றும் சீதாராமனுக்காக அவர்களின் வீட்டீற்கு செல்லும்போதெல்லாம் ,சுபாவினை கண்டால் ஒரு ஹெல்லோ,ஹாய் அதோடு நிறுத்தி கொள்வான்…

 

சுபாவுமே நந்தலனுடன் பேசும் பழக்கத்தினை கொண்டவள் கிடையாது..நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா என்பது போல் இருக்கும் அவளின் எல்லாவகையான நடவடிக்கையுமே…

 

ஆனந்தவள்ளி அதிக முறை தமையந்திடம் சுபாவினை பற்றி சொல்லி குறைபட்டு கொண்டு இருக்கிறார்..அப்போதெல்லாம் தமையந்தியின் பதில் “சின்ன பொண்ணு தான வள்ளி,போக போக சரியாகிடுவா…

கவலைபடாத,அவகிட்ட அந்த குணம் தவிர வேற என்ன குறை இருக்கு சொல்லு…குத்துவிளக்கு மாதிரி அம்சமான பொண்ணு..அவளை பத்தி குறை கூரறத்தை நீ நிறுத்து…”என செல்லமாய் அவரை கடிந்தும் கொள்வார்..

 

நந்தலனும் தனது மாமனை பின்பற்றி காவல்துறையில் சேர விரும்புவதால் அவன் அதற்கான தகுதி தேர்விற்கு தன்னை தாயார்படுத்திக்கொண்டு இருந்தான்…

 

அக்கல்லூரிக்கு இருவரையும் அழைத்து சென்றவன் “இங்க தான் என்னோட ப்ரண்ட் படிக்கிறான்…நானும் அவனும் சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட்ஸ்,உங்களை பத்தி அவன் கிட்ட சொல்லி இருக்கேன்..படிக்குறதுல ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா அவன் கிட்ட கேளுங்க,அவன் ஹெல்ப் பண்ணுவான்..”

 

“அவனோட  கிளாஸ்மேட் கிட்ட சொல்லி உங்களை பார்த்துக்கவும் சொல்ல சொல்லி இருக்கேன்…எதுவும் பிரச்சனை இருக்காது,அப்படியே எதுவா இருந்தாலும் அவன் கிட்ட சொல்லுங்க அவன் பார்த்துக்குவான்..”

 

“இல்லை அப்படின்னா எனக்கு போன் பண்ணுங்க நான் இங்க வந்து உங்களை வாரத்துக்கு ஒரு டைம் பார்த்துட்டு போறேன்..அப்பா அம்மாவும் பார்க்க வருவாங்க…இதுல அவ்வளவா பார்மாலிடீஷ் இருக்காது..அதான் நான் வந்தேன் இல்லன்னா அப்பா தான் வந்து இருப்பாங்க…”என பேசிக்கொண்டே அவர்களை ஒரு மரத்தின் அருகில் அழைத்து சென்றான்…

 

இருவரும் அங்கு உள்ள புதியவனை பார்த்து பின்தங்கிவிட நந்தலன் தன் நண்பனை கண்டு ஆர்வமாய் அவனிடம் பேச சென்றுவிட்டான்…

பின் தங்கி நின்று இருந்த இரு பெண்களில் ஒரு ஜோடி கண்களோ கல்லூரியையும்,புதுவிதமான மனிதர்களையும் பார்வையிட்டு கொண்டு இருந்தது…இன்னொரு ஜோடி கண்களோ நந்தலனின் நண்பனை அளவிட்டு கொண்டு இருந்தது…

 

தத்தம் நினைவுகளில் மூழ்கி இருந்த பெண்களை நந்தலனின் அழைப்பு கலைத்தது…இருவரும் நந்தலனை நோக்கி சென்றனர்…

 

அவர்கள் இருவரும் அருகில் வரவும் “வரு இது ஜெயஸ்ரீ,

இது சுபஸ்ரீ…”என இருவரையும் அவனிடம் அறிமுகபடுத்தியவன்,ஸ்ரீஸ் என இருவரையும் நோக்கி “இது வரு என்னோட பெஸ்ட் ப்ரிண்ட்…”என அவனின் தோளினை சுற்றி கை போட்டு அணைத்தவாறு அவனை அறிமுகபடுத்தினான்…

 

வரு அவர்களை பார்த்து சிநேகமாக புன்னகைக்கவும்,இரு பெண்களும் அவனை பார்த்து சிநேகமாய் புன்னைகை புரிந்தனர்…

 

புன்னைகை பூவே

இன்று என்னோடு

சேர்ந்து கொண்டாய்…

பூக்களின் தீவே

இனி யாருடன்

சேர்ந்து இருப்பாய்…

மை விழி ஓரம்

சிறிதாய் ஒரு சலனம்…

என்றும் இல்லாமல்

இன்று நெஞ்சுக்குள்

புதியதாய் ஒரு

படபடப்பு…

என்றும் இல்லாமல்

இன்று மெல்லிய

இளஞ்சாரல்…

உன்னை காண

எந்தன்

கண்கள் தவம்

இருந்ததோ

உன்னை காணும் போது

என் கண்கள்

ஒளிர்ந்தது ஏனோ..??

எனக்குள் நீ வந்ததன்

அறிகுறியோ..??

எனக்குள் இன்று நீ

புகுந்து விட்டாய்…

உன்னில் நான்

எப்போது…??

 

விலகல் தொடரும்…

Advertisement