Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??-10

 

வீணா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன்னை செருப்பால் அடித்தது போல உணர்ந்தான் பிரதீப்…வீணா சொல்வதும் சரி தானே அவள் எந்த ஒரு தப்பு செய்யாத போதும்,நான் ஏன் இப்படி கேவலமாய் நடந்து கொண்டேன்…வீணா வந்த நாள் முதலில் இருந்தே அமைதியாய் யாரிடமும் தேவைக்கு அதிகமாய் பேசாத குணம் கொண்டவள் தான்,அது எனக்கு தெரிந்தும்,நான் அவளிடம் சதா எரிந்து விழுந்து கொண்டும்,திட்டிக்கொண்டும் இருந்தேன்,இதெல்லாம் விட இம்முறை கண்டிப்பாய் அவளை அழ வைக்க வேண்டும் என எவ்வளவு கேவலமாய் எண்ணி இருக்கிறேன்….நான் அவளை பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்து கொண்டது ஏன்,என்ன ஒரு கீழ்த்தனமான செயலை செய்து இருக்கிறேன்,எனக்கு ஏன் இது என்னோட மரமண்டைக்கு உரைக்காமல் போனது…என தான் செய்த செயலின் காரணத்தினால் ஏற்பட்ட கலிவிரக்கத்தினால் பிரதீப் மிகவும் வருத்தம் அடைந்தான்…

 

இத்தனை நாள் தான் உணராத விஷயம்,தான் செய்த செயலின் விளைவு இன்று அவனுக்கு புரிந்தது…தான் செய்தது எல்லாம் தவறு என்று அவனின் மனசாட்சி இன்று தான் அவனுக்கு எடுத்துரைத்தது…

வீணாவிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்..

 

எந்த முகத்தினை வைத்து அவளிடம் தான் மன்னிப்பு கேட்க முடியும் என தன் சிந்தனையில் உழன்று கொண்டு இருந்தவனை “பிரதீப்..”என்ற ஸ்ரீயின் வருகை கலைத்தது…

 

அவளை பார்த்ததும் மெல்லிய சோக புன்னகையை அவளை நோக்கி வீசியவன் “சொல்லு ஸ்ரீ…என்ன என்னை தேடி வந்து இருக்க…”என்றான் கேள்வியாய்..

 

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் பிரதீப்,நீ இப்போ ப்ரீயா..இல்லை ஏதாவது வேலை இருக்கா,நான் வேணுன்னா அப்புறம் வரேன்…”ஸ்ரீ.

 

பிரதீப் “ச்ச…எந்த ஒரு முக்கியமான வேலையும் இல்லை ஸ்ரீ,சும்மா தான் உட்கார்ந்துட்டு இருந்தேன்…நீ வந்த விஷயத்தை சொல்லு…”என ஸ்ரீயினை சொல்ல வந்த விஷயத்தினை சொல்லுமாறு ஊக்கினான்..

 

ஒரு சில நிமிடங்கள் மௌனமாக இருந்தவள் பிரதீபினை நேராக நோக்கினாள்..அவளின் பார்வையின் அர்த்தம் புரியாது நோக்கினான் பிரதீப்..

 

“என்ன ஸ்ரீ அப்படி பாக்குற நீ என்ன சொல்ல வந்தியோ,அதை சொல்லு…”பிரதீப்..

 

ஸ்ரீ “உனக்கு வீணா மேல என்ன கோவம் பிரதீப்,அவளை ஏன் இப்படி எல்லாம் கொடுமைபடுத்துற,அவ உனக்கு என்ன பாவம் பண்ணா,அவ ஒழுங்கா வேலை செய்யலை அப்படின்னா,நீ என்ன வேணும்ன்னாலும் திட்டலாம்,ஆனா அவ ஒழுங்கா வேலை செஞ்சாலும்,நீ எப்போ பாரு பிடிக்காதா மருமக கை பட்டாலும் குத்தம்,கால் பட்டாலும் குத்தம் அப்படின்ற மாதிரி அவ எது செஞ்சாலும் திட்டிக்கிட்டே இருந்து இருக்க,அப்போ எல்லாம் நான் இது போக போக சரியா போகும் ,அப்படின்னு நினைச்சு தான் எதுவும் பேசல,வீணா ரொம்ப நல்ல பொண்ணு,எதுக்கும் தேவையில்லாம மற்றவங்களோட விஷயத்தில தலையிட்ற பொண்ணு கிடையாது,நான் உனக்கு இதை எடுத்து சொல்லி புரிய வச்சு இருக்கலாம்,ஆனா உனக்கு அதுவுமே வீணா மேல தான் தப்பா காட்டும்,நீ எதை மனசுல வச்சிட்டு இப்படி எல்லாம் நடந்துக்குற அப்படின்னு தெரியல,ஆனா கண்டிப்பா தப்பு அவ பக்கம் இருக்காது,உன் மனசுல தான் ஏதோ ஒரு விதமான தப்பான எண்ணம்,இப்போ எல்லாம் உன் மனசுல அழுக்கு மண்டிபோச்சு பிரதீப்,இதுவே நீ வீணா கிட்ட நடந்துகிட்டது கடைசியா இருக்கட்டும்,இதுக்கு மேல நீ அவ கிட்ட இதே மாதிரி நடந்துகிட்டா,நான் மேனேஜ்மென்ட் கிட்ட சொல்லி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்..அந்த லூசு எல்லாம் இந்த மாதிரி பண்ண மாட்டா,ஆனா அவளோட சார்பா நான் பண்ண வேண்டி இருக்கும்…இனிமேல் பார்த்து நடந்துக்கோ…”என எச்சரிக்கை செய்தாள் ஸ்ரீ….

 

ஸ்ரீ பேசியதை பொறுமையாய் கேட்ட பிரதீப் “சாரி ஸ்ரீ,நான் ஏன் இப்படி நடந்துகிட்டேன் அப்படின்றது எனக்குமே புரியல,யாருக்கிட்டையுமே நான் இந்த மாதிரி எப்பவுமே நடந்தது இல்லை,வீணா கிட்ட மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடந்துகிட்டேன் அப்படின்றது எனக்கே தெரியல..அவ உன்னோட சிரிச்சு பேசும்போது,என் கூட இவ இப்படி சிரிச்சு பேச மாட்டன்னு இருக்கா அப்படின்ற கோவம்,நான் போய் அவ கிட்ட பேசும்போது ,அவ விலகி போறதுனால வர வருத்தம்,அப்படி என்ன நான் கேவலமாய் போயிட்டேன் அப்படின்ற ஒரு இயலாமை இது எல்லாம் தான் என்னை வீணா கிட்ட இப்படி நடக்க வச்சு இருக்கு…”என்றவன் மீண்டும் தொடந்தான்..

 

“இது எல்லாம் விட பொறுமையா பேசாம அவ கிட்ட கத்தி,திட்டி தான் நான் வேலை வாங்கி இருக்கேன்,அவ நான் திட்டும் போது அவ பாக்குற மிரட்சி பார்வை எல்லாம்,அவ மேல எனக்கு பரிதாபத்தை உண்டாக்காம கோவத்தை தான் உண்டாக்குச்சு…இது ரொம்ப சில்லியான விஷயம் தான்..ஆனா என்னோட எண்ணங்கள் எல்லாம் அவளை சுத்தி இருந்ததுனால ,நான் செய்யறது தப்பா இல்லையான்னு நான் யோசிச்சது இல்லை,நான் செய்து எல்லாம் அவளை எவ்வளவு காயபடுத்தும் அப்படின்னு நான் நினைச்சது கூட இல்லை,ஒரு சில சமயம் கோவம் கூட எனக்கு பழி உணர்வா மாறி இருக்கு ஸ்ரீ,அப்போ எல்லாம் எனக்கு எதுவுமே தப்பு அப்படின்னு தோணினது இல்லை…ஆனா இன்னைக்கு வீணா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு யாரோ என்னை செருப்பால் அடிச்சதுபோல் இருந்தது ஸ்ரீ,நான் ஏன் ஸ்ரீ இப்படி மாறி போனேன்…அவ என் கூட பேசி சிரிக்கல அப்படினா என்ன…எனக்கு எதுவுமே புரியல ஸ்ரீ….”என சொன்ன பிரதீப்பின் வார்த்தையில் ஸ்ரீ சம்பித்து போய் நின்றாள்…

 

பிரதீபினை நெருங்கியவள் அவனின் தோலை உழுக்கி “பிரதீப்…நீ…நீ…வீணாவை விரும்புறியா…???…”என்றாள் பரவசத்தோடு….

 

ஸ்ரீயின் கேள்வியில் சட்டென அவளை நிமிர்ந்து நோக்கியவன் “தெரியவில்லை..”என்பது போல் தலையை அசைக்கவும்….நங் என்று அவனின் தலையில் கொட்டியவள் “டேய் மடையா…??…அவ உன் கூட பேசல அப்படின்னு நீ எதுக்கு கஷ்டபடற…அவ யார் கூட சிரிச்சு பேசுனா உனக்கு என்ன??..இது எல்லாம் நீ யோசிச்சு பார்த்தது இல்லையா…??…கோவம் என்பது எப்போ வரும் ஒருத்தர் மேல அதிக அளவு அன்பு இருக்கும் போது வராது தான்,கோவம் கூட அதிக அன்போட வெளிப்பாடு தான்….இப்பவுமா உனக்கு புரியல…”

 

பிரதீப் “ஸ்ரீ நான் வீணாவை விரும்பறனா…எனக்கு தெரியல ஸ்ரீ..அவ என் கூட பேசிட்டே இருக்கணும்,அவ என்னைவிட்டு யார்கூடயும் பேச கூடாது…அவளோட அமைதியான குணம் எல்லாம் எனக்கு எப்பவுமே நடிப்பா தான் தெரிஞ்சது…நான் அவளை எப்பவும் நல்லவள் அப்படின்னு நினைச்சது இல்லை,…இதுல நான் எப்படி அவளை லவ் பண்றேன் அப்படின்னு சொல்ற…எனக்கு மண்டையே வெடிக்குது ஸ்ரீ….”

“ஆனா நான் ஒண்ணு செய்ய போறது மட்டும் உண்மை,அவ கிட்ட கையில,கால்ல விழுந்தாவது நான் மன்னிப்பு கேட்பேன்,இதுல எந்த ஒரு மாற்றமும் இல்லை…அவ என்னை மன்னிச்சாலும் சரி,மன்னிக்கலனாலும் சரி…”என்றான் உறுதியோடு….

 

பிரதீபின் பேச்சை கேட்ட ஸ்ரீ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்…இவனை என்ன செய்தால் தகும் என்ற எண்ணமாய் இருந்தது ஸ்ரீக்கு…

 

“சரி பிரதீப்,நீ யோசி…நான் கிளம்புறேன்…போறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லிட்டு போறேன்…இனிமேல் வீணா கிட்ட இன்னும் ஒரு முறை இப்படி பைத்தியக்காரனா நடந்துகிட்ட,அப்புறம் நடக்குற எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது…”என்றவள் அறையை விட்டு வெளியேறினாள்…

 

ஸ்ரீ வெளியேறியதும் தலைக்கு கை கொடுத்து அமர்ந்து யோசித்து கொண்டு இருந்தவன் மனதில் ஸ்ரீ சொல்வது போல இருக்குமோ என்ற எண்ணம் வந்து போனது….ஆனால் இன்னொரு மனமோ “அப்படி இருக்காது,எப்பவும் அவளை கஷ்டபடுத்த வேண்டும் என்று நினைக்கும் நீயா???…இல்ல நீ அவளை விரும்பல…அவ உன் கூட பேசாம இருந்தது தான் உனக்கு மதிக்காம உன்னை அவ அவமானபடுத்துறது போல ஒரு எண்ணம்,அதுனால தான்,நீ அவ மேல கோவமா இருந்த..” என செவ்வனவே அவனை குழம்ப செய்தது…

 

எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் பைத்தியம் பிடித்தது போல உணர்ந்தான்…மனதில் வீணாவினை இத்தனை படுத்திய கஷ்டத்திற்கு மிகுந்த வேதனையாய் இருந்தது…அவளிடம் கண்டிப்பாக இன்று மாலை மன்னிப்பு கேட்க வேண்டும் என மனதில் உறுதி கொண்டான்…

 

ஆனால் வீணாவின் நிலையோ வேறாய் இருந்தது…இத்தனை நாள் பிரதீப் கோவம் எல்லாம் தான் செய்யும் தவறினால் வருவதே என எண்ணி இருந்தவள்,அவன் அப்படி எல்லாம் எதுவும் இல்லாமல் தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தப்பு கண்டுபிடித்தது,என் மேல் உள்ள வன்மத்தினாலா,அப்படி நான் என்ன செய்தேன் அவருக்கு,என் மேல் இப்படி ஒரு விதமான கோவம்,”என அவளின் மனம் அவன் செய்த செயலினால் மிகவும் காயமடைந்து இருந்தது….

 

இதற்கு மேல் இங்கே இருந்தால் தன்னோட சுயமரியாதை,மானம் எதுவுமே மிஞ்சி இருக்காது,இனிமேல் ஒரு நாள் கூட இங்க இருக்க கூடாது என எண்ணியவள் அலுவலகத்தினை விட்டு செல்வதற்கான வேலையில் ஈடுபட்டாள்..முதலில் ரிலீவிங் லெட்டர் ஒன்றினை தாயார் செய்து விஜயிற்கும்,அவளின் HR மேனேஜர்க்கும் மெயில் அனுப்பினாள்…

 

ஸ்ரீயிடம் கூட அவள் தெரிவிக்கவில்லை…அவளிடம் சொன்னால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டாள்…எப்படியாவது என்னை திட்டி இதனை செய்ய விடாமல் செய்துவிடுவாள்…அவளுக்கு இது தெரியகூடாது..எப்போ தெரியுதோ,அப்போ தெரிஞ்சிக்கட்டும்…

அதுக்குள்ளே அண்ணா கிட்ட ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லணும்…என வீணா தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தவள் அவளின் அண்ணன் மாதவனுக்கு அழைத்தாள்….

 

அந்த பக்கம் அவளின் அண்ணன் மாதவன் “என்ன வீணா,எப்படி இருக்க…?”என்றான்.

 

“நான் நல்லா இருக்கேன்…நீ எப்படி அண்ணா இருக்க…”வீணா….

 

மாதவன் “நான் நல்லா இருக்கேன் மா,சாப்டியா,வேலை எல்லாம் எப்படி போகுது,எந்த ஒரு பிரச்சனையும் இல்லையே…”என பாசத்தோடும் அக்கறையோடும் வந்தது அவனின் குரல் ….

 

அவனின் அக்கறையில் நெகிழ்ந்தவள் கண்கள் கலங்கியது,தொண்டை அடைத்தது,அதை அவனுக்கு தெரியாது தன்னை சிறிது சரி படுத்தி கொண்டவள் “ஹ்ம்ம் சாப்டேன் அண்ணா,நீங்க சாப்டீங்களா..??”என்று எதிர் கேள்வி கேட்டாள்…

 

மாதவன் “நான் இனிமேல் தான் மா சாப்பாடனும்,என்னமா,குரலே ஒரு மாதிரி இருக்கு,உடம்புக்கு ஏதாவது சரியில்லையா??… “என்றான்…

 

வீணா “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா,இங்க குளிர் அதிகமா இருக்கு,அதனால சளி பிடிச்சு இருக்கு,குரல் கொஞ்சம் கம்மி போய் இருக்கு,அது தான் உங்களுக்கு குரல் ஒரு மாதிரி இருக்குற மாதிரி இருக்கும்…நான் நல்லா தான் இருக்கேன் அண்ணா,நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்…”என்றாள் ஆறுதலாக தன் சோகத்தினை எல்லாம் விழுங்கிக்கொண்டு.. அவனுக்கு சொல்ல போன் செய்துவிட்டாள் ஒழிய அவளால் அதனை சொல்ல முடியவில்லை..தொண்டையில் ஏதோ அடைத்தது போல வார்த்தை அவளுக்கு வரவில்லை.

 

மாதவன் “என்னடா,சளி பிடிச்சு இருக்கா,ஏதாவது மாத்திரை போட்டியா..??,பெங்களூர்ல அதிக குளிர் இல்லை இப்போ,உனக்கு ஒத்துக்கல அப்படினா இங்க வந்துடுடா,இங்கவே ஒரு வேலை பார்த்துக்கலாம் இல்லை….”என்றான் கனிவாக..

 

வீணா “நானும் அதை தான் அண்ணா நினைக்குறேன்,அங்கவே வந்திடட்டுமா,எனக்கு உன்கூட இருக்கணும் போல இருக்கு…”என்றாள் தன் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு..

 

மாதவன் “என்னடா என்கிட்டே நீ சம்மதம் கேட்டுட்டு,உனக்கு இங்க இருக்கணும் அப்படினா நீ வந்துட்டே இரு,நீ இங்கவும் வந்து வேலை செய்யணும் அப்படின்னு அவசியம் இல்லை,என் தங்கச்சிக்கு என்னால மூணு வேலையும் நல்லாவே சாப்பாடு போட முடியும்,அத பத்தி எல்லாம் நீ கவலைபடாத,…”என்றான் வருத்தமாக..

 

வீணா “அண்ணா,என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க,உங்களை நான் எதுவும் சொல்லல,எனக்கு என் அண்ணனை பத்தி நல்லா தெரியும்,அவரால எனக்கு மட்டும் இல்லை,என்னை மாதிரி 10 பேருக்கு மூணு வேலை சாப்பாடு போட முடியும்,நான் இங்க வேலை செய்யறதே சும்மா டைம் பாஸ்க்கு தான் உங்களுக்கே தெரியும் இல்லை,அப்புறம் எதுக்கு இப்படி பேசுறீங்க…”என்றாள் சிறு கோவத்தோடு…

 

மாதவன் “எனக்கு தெரியுமா,ஆனா அங்க நீ தனியா எப்படி கஷ்டபட்றியோ எனக்கு எதுவும் தெரியாதே,குளிர் வேற உனக்கு ஒத்துக்கல,அங்கன வேண்டாம் மா,நீ இங்கவே வந்திடு,இங்க வந்து நீ வேலைக்கு போ,இத்தனை நாள் நீ தனியா இருந்தது போதும்,கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி என் கூட கொஞ்சநாள் இரு மா…”என்றான் கெஞ்சலோடு…

 

மாதவனின் கெஞ்சலில் வீணாவின் தொண்டை அடைத்தது,எவ்வளவு பாசமான அண்ணன்,நான் செய்த பாவம் அவனின் பாசத்தினை கூட அனுபவிக்க முடியாத துர்பாக்கியசாலியாய் இங்கு இருக்குறேனே…இருக்கும் கொஞ்சநாள் என் அண்ணனோடு இருந்து அவனுக்கு சேவை செய்யணும்…எனக்காகவே இன்னும் தன் வாழ்க்கை பற்றி சிந்திக்காமல் இருப்பவருக்கு என்னால் முடிந்த அளவு பாரத்தினை குடுக்காமல்,அவரின் பாரத்தினை குறைக்க வேண்டும்….என தன் எண்ணத்தில் மூழ்கி இருந்தாள்…

 

மாதவனின் அழைப்பில் சிந்தனையில் இருந்து வெளியில் வந்தவள் “சாரி அண்ணா,ஏதோ நினைப்புல இருந்துட்டேன்…சொல்லுங்க”

என்றாள்.

 

மாதவன் “நான் என்னமா சொல்லட்டும்,நான் தான் சொல்லிட்டனே,இங்கவே வந்திடு அப்படின்னு,நீ தான் எதுவும் பதில் சொல்லல,உனக்கு என் கூட இருக்க விருப்பம் இல்லையோ…”

 

வீணா “அண்ணா வர வர நீங்க ரொம்ப சிந்திக்கிறீங்க,அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணா,உங்களை விட்டா இந்த உலகத்துல எனக்கு யார் அண்ணா என் சொந்தம்னு சொல்லிக்க இருக்கா,நீங்க சொல்லி நான் செய்ய மாட்டேனா…நான் சென்னையே வரேன்னா…”என்றவள் கடைசியில் உடைந்து அழுதாள்…

 

அவளின் அழுகையை போனில் வழியே கேட்ட மாதவன் அதிர்ந்தான்…”வீணா,என்னடா எதுக்கு அழுவுற,சாரி டா ,நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா,உன்னை கஷ்டபடுத்திட்டேன் போல,என்னை மன்னிச்சுடுடா,உனக்கு எது விருப்பமோ அதுவே செய்,நான் சொல்றதுனால நீ எதுவும் செய்ய வேண்டாம்,உன் விருப்பம் தான் என் விருப்பம்,எனக்கும் உன்னை விட்டா இந்த உலகத்துல சொந்தம்னு சொல்லிக்க யார் இருக்கா,ஏதோ தானியா இருக்கற உணர்வுல,நீயும் என்கூட இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னு சொன்னேன் டா,உனக்கு வர பிடிக்கல அப்படின்னா அங்கவே இரு,எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை,நீ அழுவாத டா,எனக்கு கஷ்டமா இருக்கு…”என சொன்ன மாதவனின் வார்த்தையும் கடைசியில் பிசிறியது…

 

மாதவனின் வருத்தத்தை தாங்க முடியாத வீணா “அண்ணா,சாரி எல்லாம் கேட்காதீங்க அண்ணா,எனக்கு இங்க இருக்க முடியல,நான் அங்கவே உங்க கூட கொஞ்ச நாள் இருக்கேன்,உங்க கூட இருக்கணும் போல தான் எனக்கும் இருக்கு,நான் இன்னைக்கே ரிலீவிங் லெட்டர் கொடுக்குறேன்,இன்னும் ஒரு மாசத்துல உங்க கூட இருப்பேன் அண்ணா,அதுக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சிக்கோங்க,நான் வரும் போது உங்க பேட்சிலர் வீடு எல்லாம் கிளீனா இருக்கணும் சரியா??…அப்படி இல்லனா நான் தங்கமட்டேனாக்கும்….”என்றாள் சின்ன சிரிப்பு மற்றும் கண்டிப்போடு.

 

அவளின் கண்டிப்பில் வாய்விட்டு சிரித்த மாதவன் “ஷ்ஷ்…அப்பா சிரிச்சிட்டியா…இது நல்ல பிள்ளைக்கு அழகு,கொஞ்ச நேரத்துல எப்படி எல்லாம் கதிகலங்க வச்சிட்ட,…”என்றவன் பிறகு “ஹ்ம்ம் ,…கண்டிப்பாடா,எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்றேன்,அப்படி இல்லைனா வேற ஒரு வீடு எடுத்துக்கலாம்,நீ வரதுக்குள்ள எல்லாமே சரியா இருக்கும்,என் வீட்டு ராணி சொன்னா மறுப்பேது…நீங்க இங்க வாங்க,அப்புறம் பாருங்க,உங்க அண்ணனோட சுத்தத்தை பார்த்துட்டு மூக்கு மேல விரலை வைப்பிங்க…”

 

வீணா “ஹ்ம்ம்..அப்படியா,பார்க்கலாம்,பார்க்கலாம்…மூக்கு மேல விரை வைக்கிறேனா இல்லையான்னு…??…”

 

மாதவன் “ஹ்ம்ம்…பாருடா…பாருடா…”என்றவன் “சரிடா,நேரமாச்சு,நீ ரூம்க்கு போயிட்டு எனக்கு போன் பண்ணு…”என்று அவளுக்கு விடைகொடுத்தான்..

 

வீணாவும் “சரி அண்ணா,நான் போன் பண்றேன்..” என்று அவளும் அவனுக்கு விடை கொடுத்தாள்..

 

அழைப்பை துண்டித்துவிட்டு நிமிர்ந்தவள் அங்கு அறையில் தன்னையே வெறித்துக்கொண்டு இருக்கும் பிரதீபினை சற்றும் இப்போது எதிர்பார்க்காதவள் அதிர்ந்து நோக்கினாள்…

 

அவளை பார்த்து கொண்டு இருந்தவன் கண்ணில் என்ன வகையான உணர்வுகள் பிரதிபலிக்கிறது என அவளால் அறியமுடியவில்லை…

 

சிறிது நேரம் அந்த அறை முழுதும் மயமான ஒரு அமைதியே வியாபித்து இருந்தது…யார் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்று இருந்தனர்…ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையே நிலவியது…

 

பிரதீப் தான் தன் தொண்டையை செருமி கொண்டு “வீணா …”என்று அழைத்தான்…

 

அவனின் அழைப்பில் நிமிர்ந்து நோக்கியவள் கண்ணில் கோவம்,வருத்தம் என்று எதுவும் இல்லாமல் ஒரு வெறுமையே குடிக்கொண்டு இருந்தது…அதை பார்த்த பிரதீப்பின் மனம் குற்ற உணர்ச்சிக்கு ஆளானாது…

 

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன் அவளை காணாது வேறு பக்கம் திரும்பிக்கொண்டு “சாரி வீணா,நான் அப்படி நடந்திக்கிட்டேன் அப்படின்னு எனக்கே இன்னும் விடை கிடைக்கல,ஏதோ ஒரு முட்டாள்தனமான சில எண்ணங்கள் எல்லாம் என்னை இப்படி உங்ககிட்ட நடந்துக்க வச்சு இருக்கு,உங்களை நான் ரொம்ப ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்,என்னால உங்க மனசு எவ்வளவு வருத்தமும் வேதனையும் அடைஞ்சி இருக்கும் அப்படின்னு எனக்கு புரிஞ்சிக்க முடியுது,என்னோட ஒரு சாரி உங்க எல்லா வேதனையையும்,

வலியையும் கண்டிப்பா குறைக்காது,ஆனா என்னால சாரி அப்படின்னு கேட்கறது தவிர எனக்கு வேற எந்த ஒரு வழியும் தெரியல,என்னை மனிச்சிடுங்க…”என்றான்..

 

”இல்லை….”என இடையில் பேச வந்த வீணாவினை தடுத்தவன் “நீங்க எதுவும் சொல்லாதீங்க,என் மனசுல இருக்குறதை நான் சொல்லிடறேன்…ப்ளீஸ்..”என்றவன் மேலே தொடர்ந்தான் “எனக்கு நான் செஞ்ச தப்பு எதுவும் எனக்கு அப்போ புரியல,ஏன் உங்களோட வலியை எல்லாம் நான் ரசிச்சு இருக்கேன்,நான் ஒரு மிருக பிறவியா இருந்து இருக்கிறனோ,எனக்கே தெரியல,ஏதோ ஒண்ணு என்னை இப்படி எல்லாம் செய்ய வச்சது ஆனா என்னனு எனக்கு தெரியல,நீங்க பேசின ஒவ்வொரு வார்த்தையும் என்னை செருப்பால் அடிச்ச மாதிரி இருந்தது,நான் பண்ணது எல்லாமே தப்பு தான்,என்னை மன்னிச்சிடுங்க…”என அவளை போலவே கை எடுத்து அவளிடம் கும்மிட்டவன் வெளியேறினான்…

 

பிறகு திரும்ப வந்தவன் “என்னால ஒருத்தர் வேலையை விட்டு போறது இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் அப்படின்னு நான் நினைக்குறேன்,நீங்க வேலையை விட்டு போறதும் என்னால தானா,அதுக்கும் சாரி…இனிமேல் நான் உங்க வழியில குறுக்கிடமாட்டேன்,என்னை மன்னிச்சிடுங்க…”என்று அவளிடம் சொல்லிவிட்டு கலங்கிய தன் கண்களை மறைத்துக்கொண்டு அவளின் கேபினை விட்டு வெளியேறினான்…

 

வீணாவின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது…சிலையென அப்படியே இருக்கும் நிலை மாறாமல் நின்று கொண்டு இருந்தாள்….  

             

 

நான் நினைத்து போல

நீ இல்லையோ…

நீ நினைத்தது போல

நான் இல்லையோ…

நாம் நினைத்தது போல

வாழ்க்கை இல்லையோ….

இதயத்தில் ஓர் வலி

சுண்டி இழுக்கிறது

என்னை…

ஏன் என்று அறியாமல்

கண்ணீரோடு நான்…

எந்தன் கண்ணீருக்கும்

விடை இல்லை…

எந்தன் கேள்விக்கும்

விடை இல்லை…

விடையோடு நீ வருவாய்

என எண்ணி இருந்தேன்…

கேள்வியையே

விடையாய் தந்தாய்…

கேள்விக்குள்

விடை தேடி அலைகிறேன்…

எனக்கு ஒரு விடை கிட்டுமா??

 

விலகல் தொடரும்…

Advertisement