Advertisement

விலகிச்செல்வது ஏனோ..??  – 33

 

சந்தோசத்தின் உட்சத்தில் இருந்தனர் யாதவும்,சரண்யாவும்…பிரதீப் மற்றும் வீணாவின் திருமணம் இனிதே நடந்தேறிய தருணத்தில் யாதவுக்கும் சரண்யாவிற்கும் இடையேயான காதலும் திருமணமும் உறுதி செய்யப்பட்டது…

 

திருமணம் முடிந்தவுடன் பிரதீப் – வீணா பெங்களூரிலே ஒரு வாடைக்கு வீடு எடுத்து தங்க,மாதவன் தனது அலுவலக விஷயமாக குஜராத் சென்றுவிட்டான்…வீணா தனது அண்ணன் மாதவனிடம் அவனது திருமண விஷயத்தை பற்றி பேச “ஆறு மாதம் கழித்து,எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்…”என திருமண பேச்சுக்கு முடிவு கட்டிவிட்டு குஜராத் சென்றுவிட்டான்….

 

திருமண தினத்திற்கு முந்தின நாள் இரவு மண்டபத்தில் சரண்யாவிற்க்கும் யாதவ்னுக்கும்க்கும் நலங்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க,முதலில் யாதவனுக்கு நண்பர்களின் கிண்டலின் நடுவே,பெரியவர்களினால் நலங்கு வைக்கப்பட்டது…

 

யாதவனுக்கு நலங்கு  வைத்து முடித்த உடன் சரண்யாவிற்கு நலங்கு வைக்க பெரியவர்கள் சில பேர் வைத்தவுடன் இளையவர்களும் சரண்யாவிற்கு நலங்கு வைத்தனர்..

 

ஐந்து மாத கர்ப்பிணியாக வீணா சரண்யாவிற்கு நலங்கு வைத்தாள்…ஆம் வீணா அவர்களின் இல்வாழ்க்கைக்கு பரிசாய் பிரதீப்பின் மகனை சுமந்துக்கொண்டு பூரிப்புடன் இருந்தாள்…அதனை அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து பிரதீப் ரசனையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்…

 

வீணா வைத்து முடித்தவுடன் விஜய் @ வருவின் காதலி ஜெயஸ்ரீ …ஆம் இன்னும் காதலி தான்…விஜயும் சரி ஜெயஸ்ரீயும் சரி திருமணத்தை இன்னும் ஆறு மாத காலம் கழித்து செய்துகொள்ளலாம் என பெற்றோர்களிடம் திட்டவட்டமாய் தெரிவித்து விட,அவர்களும் முதலில் முரண்டு பிடித்தாலும்,கடைசியில் பிள்ளைகளின் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் பச்சை கோடி காட்டிவிட்டனர்…

 

ஜெயஸ்ரீ நலங்கு வைத்து முடிக்க,அவளின் கண்கள் தனது சகோதரியை தேடியது…”எங்கே போனாள்…இவள்…???…”என எண்ணியவள் சின்ன சிரிப்புடன் சரண்யாவை பார்த்துவிட்டு அங்கு இருந்து சகோதரியை தேடிவிட்டு அகன்றாள்…

 

கால்கள் தன்னால் முன் நகர்ந்து கொண்டு இருக்க கண்கள் சகோதரியை தேடிய வண்ணம் அலைந்துக்கொண்டு இருந்தது….

 

“ச்சீ…..என்னங்க….கொஞ்சம் சும்மா இருங்க..வந்த இடத்துல கையையும்,காலையும் வச்சிட்டு சும்மா இருக்கீங்களா…எல்லோரும் உங்களை மாதிரி தான் சில்மிஷம் பண்ணிட்டு இருக்காங்களா…???…”என தன்னவனின் கைகள் செய்யும் வேலையினை சுபாவின் கைகள் முயன்ற மட்டும் தடுத்துக்கொண்டு இருந்தன…

 

“ச்ச… என்ன சுபா….நீ வர வர ரொம்ப ஆர்டர் போட்ற…நான் பாவம் இல்லையா…அட்லீஸ்ட் ஒரு வெஜ் கிஸ்சாவது குடேன்…”என நவீன் செல்லமாய் சிணுங்கலுடன் ஆசையாய் கேட்க…

 

“அய்யோ…யார் காதுலையாவது விழப்போது…கொஞ்சம் வாயை மூடுங்க…”என கையால் அவனது வாயினை மூடியவள் முகம் வெட்கத்தால் சிவந்தது… பின் “நீங்க முதல்ல ரூமை விட்டு போங்க…”என அவனை கதவை திறந்து அறையில் இருந்து தள்ளிவிட

 

ஜெயஸ்ரீயின் முன்னால் தொப்பென்று விழுந்தான் நவீன்…தன் முன்னால் விழுந்த நவீனை கண்டு அதிர்ந்த ஜெயஸ்ரீ “அண்ணா…என்ன ஆச்சு…”என பதற்றத்துடன் கேட்க…அவனோ “வெஜ்…..”   “ சுபா….” “கிஸ்….”என துண்டு துண்டாக தன்னை மீறி உளறியவனை மேலும் ஏதும் உளறா வண்ணம் அறையில் இருந்து தன்னை சீர்படுத்திக்கொண்டு வெளியே வந்த சுபா…

 

“அது ஒண்ணும் இல்ல ஸ்ரீ….அவர் ஏதோ சும்மா உளறிட்டு இருக்கார்….வா நாம்ப போலாம்…”என சொல்ல….”அவர்களுக்குள் இருக்கும் ரகசிய சம்பாசனைகளை கேட்க விரும்பாதவள் “நானும் உன்னை தான் தேடிட்டு வந்தேன் சுபா….நலங்கு வைக்க தேடனா ஆளையே காணோம்…”என சொல்ல….

 

“அம்மா போன் பண்ணி இருந்தாங்க…அவங்க கூட பேசிட்டு இருந்தேன்…”என பொய்யுரைத்தவள் ஜெயஸ்ரீயுடன் பேசியப்படி செல்ல…நவீனின் கண்கள் போகும் சுபாவினையே தொடர்ந்தன….

 

“எப்படி எல்லாம் கஷ்டபட்டாள்…எதுவும் நியாபகம் வராமல்,வர வைக்க முடியாமல் நவீனும் சரி மற்றவர்களும் சரி அதிகமே கஷ்டப்பட்டனர்…சாரதாவின் தோழி சகுந்தலாவின் அறிவுரைப்படியும், சிகிச்சையின் படியும் சுபாவிற்கு சிகிச்சைகள் வழங்கினாலும்  ஏனோ அவராலும் சுபாவின் மறைந்த நினைவுகளை என்ன முயன்றும் கொண்டு வர முடியவில்லை…

அவற்றின் மருத்தவ சேவையின் காலத்தில் முதன்முறையாய் அவருக்கு சுபாவின் கேஸ் அதிக சவாலாகவே இருந்தது…

 

இருக்கும் எல்லா வகையான மருத்துவ முறைகளையும் மேற்கொண்டும் எந்த பயனும் இல்லாமல் போக நவீனுடன் கலந்து ஆலோசித்தவர் “நவீன் சுபாக்கு பழைய நினைவுகளை கொண்டு வரது எங்களுக்கே ரொம்ப சவாலான விஷயமா இருக்கு…எல்லாம் முறையையும் நாங்க பயன்படுத்திட்டோம்…ஆனா அவங்களுக்கு பழசு எதுமே நியாபகம் வரல…”என சொல்ல…

 

அவரை அதிர்ச்சியுடன் பார்த்த நவீன் “டாக்டர்…நீங்களே இப்படி சொன்னா எப்படி…உங்களை நம்பி தான் இருந்தேன்…இப்போ இப்படி பெரிய குண்டை தூக்கி போட்றீங்களே..என்னோட சுபா எனக்கு கடைசி வரைக்கும் கிடைக்கவே மாட்டாளா…??…” என ஏக்கத்துடன் கேட்டவனின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிக்க..

 

அவனை இறக்கத்துடன் பார்த்தவர் “சாரி நவீன்…சொல்ல கஷ்டமா தான் இருக்கு…பட் வேற வழி இல்ல…அவங்களுக்கு பழைய நினைப்பு வர வைக்க எங்களால முடியல…”என சொன்னவர் “ஆனா வேற வழி ஒண்ணு இருக்கு…”என சொல்ல…

 

அவரது முகத்தை பிரகாசத்துடன் பார்த்தவன் “சொல்லுங்க டாக்டர்..என்னோட சுபா எனக்கு திரும்ப கிடைக்க ,என்ன வழி சொல்லுங்க…”என பரபரப்புடன் கேட்க…

 

அவனை மென்னகையுடன் பார்த்தவர் “அவங்களுக்கு பழைய நியாபகம் தான் வராது..ஆனா புதுசா சொல்றது எல்லாம் அவங்களால ஏத்துக்க முடியும்….”என சொல்ல…

 

நவீனுக்கு அவர் சொல்வது சத்தியமாய் புரியவில்லை ,என்ன சொல்ல வராங்க…என்பது போல முழித்தவன் அதையே அவரிடமும் கேட்க…

 

“ஐ மீன்…ஒரு சின்ன குழந்தைக்கு நாம்ப அப்பா அம்மா சொல்லி குடுப்போம் இல்ல…அந்த மாதிரி இப்போ சுபாவும் சின்ன குழந்தை தான்…இவங்க வளர்ந்த குழந்தை…இந்த குழந்தைக்கு தினமும் நடக்குற வழக்கம் அத்துப்படி ஆகணும்…உங்களோட முக்கியத்துவம் தெரியனும்…உங்களோட அப்பா அம்மா,சுபாவோட அப்பா அம்மா,அவங்களை சார்ந்தவங்க எல்லாரோட பழக்கமும் ஏற்படணும்…அவங்க மனசுல அது பதியனும்…”என்றவர் மீண்டும் தொடர்ந்தார்…

 

“அப்படி மட்டும் அவங்களால நடக்குறதை,சொல்றதை புரிஞ்சிக்க முடிஞ்சி,ஏத்துகிட்டா…அதுவே நமக்கு பெரிய சக்சஸ்…உங்களுக்கு இது ஓகே அப்படின்னா…இதையே பாலோ பண்ணலாம்…”என சொல்ல…

 

“எனக்கு என்னோட சுபா திரும்ப கிடைச்சா போதும்…அது எப்படி இருந்தாலும் எனக்கு கவலையில்ல…”என சொல்ல…அதன் பின் சகுந்தலாவின் அறிவுரைப்படி சுபாவுக்கே தெரியாமல் எல்லாவற்றையும் நடத்தினான்…

 

அதன் பிறகு நாளுக்கு நாள் சுபாவின் பேச்சிலும்,நடவடிக்கையிலும் மகிழ்ச்சிக்குறிய மாற்றமே…நாள் போக்கில் சுபா எல்லோரிடமும் அதிக ஒட்டுதலுடன் இல்லை என்றாலும் புன்னகையுடன் அனைவரையும் ஏற்கொண்டாள்…

 

சுபாவின் மாற்றத்தை கண்டு அனைவரும் மிகுந்த சந்தோஷமடைந்தனர்…நவீனின் மூலம் ஜெயஸ்ரீ மற்றும் வருவின் வாழ்க்கையில் தான் நிகழ்த்திய நிகழ்வுகளின் பேரில் அவர்கள் பட்ட பாட்டினை அவளுக்கு சொல்லி புரிய வைத்தவன் சுபாவினை ஜெயஸ்ரீ மற்றும் விஜயிடம் மன்னிப்பும் கேட்க வைத்தான்…

 

நவீன் சொன்னதை கேட்டவள் தான் இவ்வளவு இழிவாக நடந்து கொண்டு உள்ளோமா என எண்ணி வெட்கி அவர்களிடம் மன்னிப்பும் கேட்டாள்…அதுவும் ஜெயஸ்ரீயும் விஜயும் தனக்கு தன்னோட உடல்நிலை குணமாகும் வரை திருமணத்தை கூட தள்ளி போட்டு இருப்பதை நவீனின் மூலம் தெரிந்துக்கொண்டு இன்னும் அதிகம் வெட்கப்பட்டவள் இருவரிடமும் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டாள்….

 

ஜெயஸ்ரீயும் சரி,விஜயும் சரி…அதனை எல்லாம் ஒரு பொருட்டாகவே பார்க்காமல் மென்னகையுடன் இருந்தனர்….அவளது குற்ற உணர்வு நீங்க வேண்டும் என்றே அந்த அமைதியும் கூட….

 

பழைய நினைவுகளில் இருந்தவனை யாரோ அழைக்க அங்கு விரைந்தான்…மறு நாள் காலை விடிய கல்யாண பரப்பில் இருந்தனர் ஒவ்வொருவரும்…

 

மிருணா – பிரபு தம்பதியினருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் அழகான பெண் குழந்தை பிறக்க,அதனால் திருமணத்திற்கு வர முடியாத சூழல் அவர்களுக்கு…

 

கெட்டிமேளம் முடிந்து கிண்டல் கேலியுடன்,நண்பர்களின் பரிசுகளையும்,வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு புன்னகையுடன் எதிர்க்கொண்டனர் அனைவரும்…

 

“ச்ச…ஏன் தான் கல்யாணத்தை தள்ளிபோட்டோமோன்னு இருக்கு ஜெய்…”

 

“என்னவோ இன்னைக்கு என்னோட கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியுற….”

 

“இப்பவே கடையில போய் ஒரு தாலி வாங்கி வந்து உன்னோட கழுத்துல கட்டிடட்டுமா…”

 

“நான் தப்பு பண்ணிட்டனோ…என்னோட அண்ணன் மாதிரி நானும் கல்யாணம் பண்ணி வைங்க அப்படின்னு சொல்லி இருக்கணுமோ…”

 

“இன்னும் ஆறு மாதத்துல நீயும் நானும் இப்படி தான் மேடையில நிப்போம்…”என ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமாக ஜெயஸ்ரீயின் முகத்தை தன்னால் முயன்ற மட்டும் மென்குரலில் சொல்லி சிவக்க வைத்துக்கொண்டு இருந்தான் அவளின் காதலன்…

 

அவனுக்கு இணையான காதலுடன் அவனை பார்த்தவளின் கண்களும் அதே செய்தியை அச்சு பிசகாமல் வெளியிட,அதை கண்ட விஜயின் நிலை தான் இன்னும் மோசமாகியது…

 

அவனை இன்னும் அல்லல் பட வைக்காமல் “வரு வழிஞ்சது போதும் போட்டோ எடுக்க வா ”என நந்துவின்  குரல் அழைக்க…

 

சட்டென்று நிலைக்கு வந்தவன் அங்கு இருந்த நந்துவினை பார்த்து முடிந்த மட்டும்ம் முறைக்க ,நந்துவின் பின்னே இருந்த அனைவரும் வருவினை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தனர்…

 

அப்போது தான் எல்லோரும் அருகில் இருப்பதை உணர்ந்து வரு அசடு வழிய ஜெயஸ்ரீ மற்றவர்களின் முகம் பார்க்க வெட்கி வருவின் நெஞ்சிலே தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்….சுகமாய் தன் மேல் சாய்ந்த மலர் குவியலை ஆசையாய் அணைத்துக்கொண்டான் அந்த காதலன்…. விலகலே விலகி போனது அவர்களின் காதலை கண்டு….

 

இனி வரும் காலம் இந்த காதல் ஜோடிகளும்,காதல் வாழ்வில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சிறகை விரித்து பறந்து ஒருவரை ஒருவர் விலகிச்செல்லாமல் தன் இணை அருகே ஆயுள் முழுதும் அருகே இருத்தி காதலை ரசித்து ருசிப்பர் என வாழ்த்தி விடைபெறுவோமாக…

 

❧❧…சுபம்…❧ ❧

 

Advertisement