Advertisement

Suganya Vasu’s – இருதயப் பூவின் மொழி

அத்தியாயம் : 8

 

பூக்களை தேடும்

வண்டாய்

அவளின் புன்னகையை

தேடி தொலைந்து

போகிறது என் மனம்…!!!

 

நம்பிராஜன் கத்திய கத்தலில் வீட்டில் உள்ள அனைவரும் ஹாலுக்கு ஓடி வந்தனர்.. அவன் இருந்த நிலையை கண்டு சட்டென்று சுதாரித்த தமிழ்செல்வன் , அவனை தூக்கி அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர வைத்தார்

அக்கா..சீக்கிரம் தண்ணி கொண்டு வா…” என கத்தியவர்ஒண்ணும் இல்ல பாரிலாக்ஸாக இரு..” என்று மென்மையுடன் கூறியவர் ,அவனை உச்சி முதல் பாதம்  வரை அவனை ஆராயத் துவங்கினார்..

பளிங்கு கல் வழுக்கி கீழே விழுந்து இருந்தாலும்,அங்கிருந்த கார்பெட் மேலே விழுந்திருந்தமையால் பெரியதாய் எந்த ஒரு ரத்த காயமும் இல்லைஉள் அடி தான் கொஞ்சம் அதிகம்….எங்காவது வலிக்கிறதா என கேட்கபேலன்ஸ் செய்வதர்காக ,கையை கீழே வைத்திருந்தமையால் சுளுக்கிக்கொண்டு விரல்கள் இரண்டிற்கும் இடையில் வலிப்பதாய் சொன்னவன் ,பின் கணுக்காலில் வலிப்பதாக சொல்லஅனைவரும் இருப்பதை கண்டு தனது இடிப்பிற்கு பின்னால் வலிப்பதை சொல்லவில்லை

அவனின் பேண்டை உயர்த்தி பார்க்க கணுக்காலுக்கு கீழே சற்று வீக்கம் ஏற துவங்கி இருந்தது

பார்த்து நடந்து வர வேண்டியது தானே..என அவனை கடிந்து கொண்டவர்குழல்பேக்ல ஸ்பிரைன் ஸ்ப்ரே இருக்கும் பாரு..சீக்கிரம் எடுத்துட்டு வா..என சொல்லஅப்பப்பாநானெப்படி…” என திக்கி திணறி சொல்லியவளை கண்ட தமிழுக்கு சிரிப்பும் கோபமும் ஒரு சேர மனதில் விளைந்தது..

உன்னைஎன சற்று கோவத்துடன் கூறியவர் ,நீ போய் முகம் கழுவிட்டு வாகுழந்தை பிள்ளை கணக்கா முகமெல்லாம் ஐஸ்க்ரீம் பண்ணி வச்சிருக்க..”என செல்ல கோவத்துடன் அவளை முறைத்தவர் உள்ளே அனுப்பினார்

அதற்க்குள் முத்துவும் நீர் கொண்டு வந்திருக்க,“அக்காஉள்ள ரூம்ல இருக்குற டேபிள் மேலே ஒரு ப்ரௌன் கலர் பேக்ல ஸ்ப்ரே இருக்கும் பாருங்க.. கொஞ்சம் சீக்கிரம் எடுத்திட்டு வாங்க…” என கூற முத்து உள்ளே விரைந்தார்..

சட்டென்று குழலை திரும்பி பார்த்த நம்பிராஜன் ,வந்த சிரிப்பை மடித்து இதழுக்கிடையில் புதைத்துக்கொண்டான்அவன் சிரிப்பதை குழலும் கண்டுக்கொண்டாள்அந்த இடம் விட்டு சீக்கிரம் நகர்ந்தாள்

அந்நியன் ஒருவன் தன்னை பார்த்து சிரிப்பதை கண்டவள் ,”அடுத்தவன் எல்லாம் உன்னை பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கியே குழல்.. நீ பெரிய பொண்ணாகிட்ட,சோ பெரிய பொண்ணு மாதிரி இனி நீ நடந்துக்கணும்.. என்ன..??..” என்று தனக்கு தானே அறிவுரை வழங்கி தோள் தட்டி கொடுத்துக்கொண்டாள்..

அவளின் செய்கையை ஓரக்கண்ணால் கண்டுக்கொண்டு இருந்த நம்பிராஜனுக்கு சிரிப்பை அடக்குவது வெகு சிரமமாய் இருந்தது..தன் முன்னால் இருந்த தமிழுக்கு தெரியா வண்ணம் முகத்தை அமைதியாய் வைத்துக்கொண்டான்

பின்னாடி இருந்து சொறிந்தவரை திரும்பி பார்த்தவனுக்கு பாவமாய் இருந்தது..திருட்டு முழி முழித்துக்கொண்டு இருந்தார் காத்தவராயன்.. பெரிய சண்டிவீரர்..மகனுக்கு தெரிந்தால் ஏக வசவுகளை பெற வேண்டுமே என எண்ணியவர்சொல்லிடாதேஎன கண்ணசைவாலே நம்பிராஜனிடம் சொல்லயோசிப்பது போல பாவனை செய்த நம்பிராஜன்,சண்டிவீரரின் முகம் போக்கை கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டான்

அவனை கண்டுக்கொண்ட காத்தவராயன் ,அவனின் கையில் கிள்ளி வைக்க, “ஷ்ஹஹா….” என்றான் வலி பொறுக்காமல்

தான் அழுத்தியதால் வலித்ததோ என நினைத்த தமிழ்சாரி பா கொஞ்சம் பொறுத்துக்கோஸ்ப்ரே அடிச்சிட்டு,க்ரிப் பேண்ட் ஒண்ணு போற்றலாம்…” என ஆதுரம் சொல்லிக்கொண்டு இருந்தார்ஹ்ம்ம் சரி என்றவன், பின்னால் நின்றிருந்த காத்தவராயனை முறைத்தான்

இதை எல்லாம் முகம் கழுக்கொண்டே கண்ணாடியில் பார்த்த குழலின் புருவங்கள் உச்சி  மேட்டிற்கே சென்று பின் கீழ் இறங்கின..தாத்தாவின் பம்மல் அவளுக்கு வித்தியாசமாய் பட தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தாள்

தாத்தா கெஞ்சியது, அவன் மிஞ்சியது ,ஏதோ ஒன்று இருப்பதாய் அவளுக்கு தோன்றியதுதாத்தாவின் பிடி தன் கையில் கிடைத்தால் ,அவரிடம் எப்படியாவது ஒரு ஐஸ்கிரீம் வாங்கி தர சொல்லி சாப்பிட்டுவிடலாம்.. என மனக்கண்ணில் கனவு காண ஆரம்பித்தாள்….அடி அல்ப….

முத்து வெந்நீர் கொண்டு காலை ஒரு முறை நன்கு நீவிவிட ,ஓர் அளவிற்க்கு வலி குறைந்தார் போல் உணர்ந்தான்

அதன் பின் தமிழ்செல்வன் ,அவனுக்கு ஸ்ப்ரே அடித்து க்ரிப் பேண்டை சுற்றியவர்,ஒரு பெயின் கில்லர் மாத்திரை ஒன்றை கொடுத்து ,வலி அதிகமா இருந்தா போட்டுக்கோ என்றவர் ,அவரின் தந்தையின் புறம் திரும்பினார்

தந்தையின் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்டு ,என்னப்பா என்ன ஆச்சு..முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்குஎன விசாரிக்க..

எனக்கு ஒண்ணும் இல்ல தமிழ்..நான் நல்லா தான் இருக்கேன்கொஞ்சம்.உடம்புக்கு அசதியா இருக்கு ,, என்க

அவரின் கூற்றை நம்பியவர் ,சரி நீங்க இந்த தம்பியை உள்ளே கூட்டிட்டு போங்க.. கொஞ்ச நேரம்,ரெஸ்ட் எடுக்கட்டும்அப்புறமா வீட்டுக்கு போவ..இப்பவே நடந்தா கால் ரொம்ப வீக்கமாகிடும்..”

அப்பா சென்னை கிளம்ப டைம் ஆச்சு ,நாங்க சாப்பிட்டு ரெடி ஆகிறோம்..” என்றவர் நம்பிராஜனிடமும் சொல்லிக்கொண்டு அறைக்கு சென்றார்

தமிழ் சொன்னது போல் அவனை அவரின் அறைக்கு ,கை தாங்கலாக அழைத்து சென்று கட்டிலின் மேல் அமர வைத்தார்..”சாரி டாஇப்படி ஆகும்ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. கொஞ்சம் நீயும் பார்த்து வந்து இருக்கலாம் இல்ல…” என அவனின் அடிபட்ட காலை பார்த்துக்கொண்டே கூற

அவரை மென்னகையுடன் நோக்கியவன் ,நீங்க கவலைப்படாதீங்க தாத்தா.. வீக்கம் தான சீக்கிரம் சரியாகிடும்உங்க மேல எந்த தப்பும் இல்ல,நீங்க ரொம்ப யோசிக்காதீங்க.. என்றவன்

நீங்க கொஞ்ச நேரம் படுத்து தூங்குங்க, நான் இந்த புத்தகத்தை படிக்கிறேன் என்றவன் ஒரு வார நாளிதழை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்து கொள்ள காத்தவராயன் அவனை முறைத்தார்

உறங்காமல் தன்னையே பார்த்திருக்கும் அவரை கண்டு புருவத்தை உயர்த்தியவன் என்னவென்று கண்களே கேட்க,உன்னை தமிழ் ரெஸ்ட் தானே எடுக்க சொன்னான், நீ என்ன இதை விரிச்சி வச்சிட்டு உட்கார்ந்து இருக்க,அவன் பார்த்தா திட்டுவான் என்க..

இதுவும் ரெஸ்ட் தான் தாத்தா,படிச்சா மைண்ட்டும் கொஞ்சம் ரிலாக்ஸ்ஷா இருக்கும்.. எவ்ளோ தான் படிப்பு சம்மந்தப்பட்ட புத்தகத்தை படிக்கிறதுஅதெல்லாம் போர்,இது ஒண்ணும் பெரிய புத்தகம் இல்ல படிச்சா ரெண்டு மூணு நாள் ஆகுறதுக்கு, வார இதழ் தாத்தா, கொஞ்ச நேரம் படிக்கிறேன் என்றவன் அவரின் பதிலை எதிர்பார்க்காமல் அதில் மூழ்கினான்..

அறை வாசலில் நிழலாட காத்தவராயன் திரும்பி பார்க்க அங்கே குழல் நின்றிருந்தாள்..,தன் பேத்தியை கண்டு புன்னகைத்தவர்வா குழல், உள்ள வா,ஏன் வெளியவே நிக்கிற..” என அவளை உள்ளே அழைக்க..

புதியவனை கண்டு உள்ளே செல்ல தயங்கியவள் ,,பரவாயில்ல தாத்தா ,அத்தையும் அப்பாவும் உங்களை சாப்பிட வர சொன்னாங்க, அப்படியே இவங்களால நடக்க முடிஞ்சா இவங்களையும் அழைச்சிட்டு வர சொன்னாங்க,அப்படி இல்லன்னா சாப்பாட்டை இங்கவே கொண்டு வரவான்னு கேட்டுட்டு வர சொன்னாங்கஎன்க..

இவனால நடக்க முடியாதுமா, இங்கவே சாப்பாட்டை கொண்டு வந்திடுங்க, நானும் நம்பியும் இங்கேயே சாப்பிட்டுக்கிறோம்..” என சொல்லியவரை

இல்ல தாத்தா வேண்டாம்,நான் வரும் போது தான் சாப்பிட்டு வந்தேன்,எனக்கு பசிக்கல, நீங்க போய் அங்கவே சாப்பிட்டு வந்திடுங்க, ஆச்சி உங்களுக்காக காத்திட்டு இருப்பாங்க..” என்ற நம்பிராஜனின் குரல் இடையிட்டது

அமைதியா இரு,நீ வரும் போது சாப்பிட்டு வந்தது எல்லாம் எங்களுக்கு தெரியும் என அவனை அடக்கியவர்நீ சாப்பாடு எடுத்துட்டு வாடா ராஜாத்தி,நாங்க இங்கவே சாப்பிட்டுக்கிறோம்,அப்படியே ஆச்சியை சாப்பிட சொல்லிடு,எனக்காக காத்திருக்க போறா என்றவர் நம்பிராஜனை பார்க்க அவனோ அவரை முறைத்துக்கொண்டு இருந்தான்..

ஹ்ம்ம் சரி தாத்தா, என்ற முணகளுடன் குழல் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்..ஐந்து நிமிடத்திற்கு பிறகு வேலையாள் ஒருவரின் உதவியுடன் தட்டு ,தண்ணீர் ,மற்றும் உணவு வகைகளுடன் வந்தவள், அங்கிருந்த டேபிளின் மேல் அனைத்தையும் வைக்க துவங்கியவள்,தட்டில் பரிமாற ஆரம்பித்தாள்..

இருவருக்கும் பரிமாறிவிட்டு வைத்தவள் ,இருவரும் கைகளை அலம்புவதற்கு ஒரு கையில்  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு,மறுகையில் சொம்பு நிறைந்த தண்ணீர் உடன் ,தாத்தாவினை அந்த பாத்திரத்தினுள் கையை அலம்ப செய்தவள், நம்பிராஜனின் பக்கம் நகர்ந்து அவன் கையை கழுவதற்கு தண்ணீர் ஊற்ற துவங்கினாள்

அவளின் முகத்தினை ஓரக்கண்ணால் பார்த்த்துக்கொண்டே கழுவினான். அவன் தன்னை பார்ப்பது உணர்ந்தும், அவனின் முகம் காணாது அவளது வேலையை முடித்தவள், ‘தாத்தா எனக்கு டைம் ஆச்சு,நான் கிளம்புறேன், உங்களுக்கு வேற ஏதாவது வேணும்ன்னா, சுந்தரி அக்காக்கிட்ட கேளுங்க,..’ என்றவள்சுந்தரி அக்காஅக்கா..’ என்ற அவளின் அழைப்புக்குஎன்ன மா குழல்..’ என்றப்படி வந்தவரை கண்டுஇவங்களுக்கு தேவையானதை பார்த்து வைங்க, எனக்கு டைம் ஆச்சு, நான் கிளம்புறேன்என்றவள் தாத்தாவிடம் தலையசைத்து விட்டு வெளியேறினாள்

அங்கே ஏற்கனவே தமிழும், முத்துவும் சாப்பிட்டு கொண்டு இருக்க, அவர்களுடன் சேர்ந்து இணைந்துக்கொண்டவள் வேகமாய் உண்ண துவங்கினாள்..

பார்த்து மெதுவா டா குழல், ஒண்ணும் அவசரமில்ல..’ என்ற தமிழின் குரலும், “எதுக்கு இப்படி அள்ளி வாயில திணிக்கிற, அப்புறம் எப்படி சாப்பாடு உடம்புல ஒட்டும், மெதுவா சாப்பிடு..’ என்ற முத்துவின் கண்டிப்பு கலந்த குரலில்,இருவரையும் பார்த்து லேசாய் புன்னகைத்தவள் உண்ண துவங்கினாள்

குழலும் தேவையான அனைத்தும் காரில் ஏற்றப்பட்டது, துணிகள் அடங்கிய லக்கேஜ் பேக், தலையணை, வாலி ,பற்பசை,பிரஷ், சோப்பு, சீப்பு, கண்ணாடி இன்னும் இன்னும் என சிறு பொருளை கூட விடாமல் மனைவியிடம் ஒரு வாரத்திற்க்கு அலசி ஆராய்ந்து ஒரு லிஸ்ட் போட்டு அனைத்தையும் வாங்கிவிட்டார்

இவரின் அத்தொல்லையாலே வித்யாவிற்க்கு ஜுரம் வந்ததோ என்னவோ, தமிழ் படுத்திய பாடு அப்படிவாங்கியிருந்த அனைத்தையும் ஒன்று விடாது காரில்   ஏற்றிவிட்டு இருந்தார் தமிழ்..

எதுக்குப்பா இதெல்லாம், அங்க போய் கடையில எல்லாம் வாங்கி இருக்கலாம் இல்ல,என்ற குழலின் கேள்விக்குஅப்போ ஒண்ணு ரெண்டு மறந்துட்டா,கடைசியில உனக்கு சிரமம்,அதான் எல்லாமே இங்க இருந்தே மறக்காம வாங்கிக்கிட்டேன்..அந்த இடமே உனக்கு புதுசு.ஏதாவது இல்லன்னா நீ எங்க போய் வாங்குவ. உனக்கு ஒண்ணும் தெரியாது,பேசாம அமைதியா இரு…’ என்று அவளின் வாயை அடைத்துவிட்டார்

மேற்கொண்டு எதுவும் பேச முடியுமா என்ன வாயை மூடிக்கொண்டாள் குழல்மொழி… ‘பொண்ணுக்கு இப்பவே முக்காவாசி சீரை வண்டியில ஏத்திட்ட போலஎன்ற தமக்கையின் கிண்டலை அவர் காதில் வாங்கிக்கொண்டதாய் தெரியவில்லை

அதன் பின் விரைவில் தயாரான மூவரும், அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தங்களது பயணத்தை  சென்னையை நோக்கி துவங்கி இருந்தனர்..

ஓர் அளவிற்க்கு கால் வலி மட்டுப்பட்டு இருக்க,நம்பிராஜனும் காத்தவராயனிடமும், அவரது மனைவி செவத்தாயிடமும் விடைபெற்று வீட்டிற்க்கு கிளம்பினான்

போகும் வழியாவும் தாயை பற்றிய சிந்தனையிலே மனம் லயித்து இருந்தது.. தாய் பிடிக்கும் பிடிவாதம் அவனுக்கு புதிராத புதிராய், நாட்களும் கடந்துக்கொண்டே இருந்தது, இன்றோடு ஒரு வாரம் விடுப்பாகி விட்டது.. தந்தையின் இறப்பை பற்றி அவனின் துறையின் தலைமையருக்கு போனில் தெரிவித்து இருந்தான்

அவரும்சாரி நம்பிராஜன்உங்க அப்பாவோட ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது,ஸ்ட்ரைக்னால ஏற்கனவே நிறைய நாள் காலேஜ் க்ளோஸ்ல இருந்தது.. இப்போ தான் ஓபன் பண்ணி இருக்காங்க.. அதிக நாள் லீவ் கொடுக்க முடியாது..முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வர பாருங்க..” என கூறி இருந்தார்,அவருக்குமே இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்தாக வேண்டும் என கூற சற்று சங்பட்டார் போலும்

எனவே நிலையை எடுத்து கூறி முடிவினை அவனிடம் ஒப்படைத்து விட்டார்தந்தையை இழந்தவன் தாயினை கவனிக்கும் பொறுப்பு இருக்கிறது என எண்ணி தான்  ஐந்து நாட்கள் விடுப்பு வழங்கி இருந்தார், ஆனால் அதையும் தாண்டி விடுப்பு நீண்டுக்கொண்டே செல்ல மனம் தவித்து போனான்

முதலில் நடக்க துவங்கியதும்,தெரியாத கால் வலி,அரை கிலோமீட்டரை கடக்கவும், வலி உயிர் வரை சுண்டி இழுத்ததுகஷ்டப்பட்டு உதடுகளை அழுந்த கடித்தபடி வலியை பொறுத்துக்கொண்டு நடையை மெதுவாய் கூட்டினான்

காத்தவராயனின் பேச்சை கேளாமல் பிடிவாதம் பிடித்து நடந்து வந்ததற்க்கு இதுவும் தேவை இதற்க்கு மேலேயும் தேவை என அவனின் மனம் அவனை சாடத் துவங்கியது..என் அன்னைக்கு இருப்பது போல எனக்கும் அவர்களில் பாதியேனும் இருக்கும் அல்லவா என அதை முறைத்துக்கொண்டு கூறினான்

வறட்டு பிடிவாதம் என சொல்லிய மனது அவனை ஏளனமாக நோக்கியது போன்ற பிரம்மை..இரு முறை தலையை நன்கு திமிறி ,நிலைக்கு வந்தவன், சிறு நொடி வழியில் இருந்த மைல் கல்லின் மேல் அமர்ந்துக்கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்

மூளை வெகு தீவிரமாய் யோசிக்க துவங்கியது, இன்று இரண்டில் ஓரு முடிவு தெரிந்திட வேண்டும் என எண்ணியவன் ,அன்னையை எப்படி பேசி சமாளிப்பது என திட்டம் வகுக்க துவங்கியவன் நொடி பொழுதில் தந்தையை எண்ணிட மனமும் கண்ணும் கலங்கி போனதுகண்ணில் அவனையும் மீறி கண்ணீர் சொறிய துவங்கி இருந்தது

நீங்க இருந்து இருந்தா,எங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்து இருக்குமா பா,உங்களை போல என்னால,அம்மாவை இம்மியும் சமாளிக்க முடியல பா, எனக்கு நல்ல ஒரு சந்தர்ப்பத்தை குடுங்க பா,நீங்களே சொல்லுங்க நீங்களும் நானும் இல்லாம அம்மா எப்படிப்பா இருப்பாங்க, அப்படியே அம்மா இருந்தாலும் என்னால நிம்மதியா அங்க காலேஜ்ல படிக்க முடியுமா பா…’

எனக்கு என்ன செய்றரதுனே புரியல பா…’ என மனதிற்குள் தந்தையிடம் கரைந்துக் கொண்டு இருக்க, அவனின் தலையை பரிவாய் வருடிய கரம், அவனின் கண்ணீரை நடுங்கும் தன் கரங்களால் துடைத்தது

நிமிடத்திற்க்கும் மேலாக அதனின் அதீத பாசமான வருடலில் லயிந்து இருந்தவன், எங்கோ அடித்த பஸ்ஸின் ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தான்தன்னிச்சையாக  கைகள் அவனின் தலை மற்றும் கன்னத்தினை தடவ ,தலையில் இருந்த அந்த கரமும் ,கண்ணீர் துளிகளை துடைத்த நடுங்கும் விரல்களும்,கண்ணீர் துளிகளும் காணாமல் போய் இருந்தன

நனவா..!!கனவா…!!! என ஒரு நிமிடம் புரியாமல் அதிர்ச்சியுடன் சுற்றும் முற்றும் நோக்க, பசுமாடுகளையும்,ஆடுகளையும் தோட்டத்தில் மேய்த்த வண்ணம் ஒரு சிலர் இருக்க,இவனின் கண்கள் நாலு புறமும் கூர்மையாய் அலசியது

தன்னுடைய மன பிரம்மையா இது..!!! இல்லை இல்லவே இல்லை, இது நிச்சயம்  பரிவான ஒருவரின் கரங்களேயார் அது…!!!யாராய் இருக்கும்…!!! …ஒரு நிமிடம் அவனின் மனம் வெகுவாய் பதற்றப்பட துவங்கியதுமனம் படபடவென அடித்துக்கொள்ள ,ஆழ மூச்சுக்களை எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்

காரணமே இல்லாமல் மனம் பதற்றமடைய துவங்கியதுவிரைவாய் அவ்விடமிருந்து எழுந்தவன் வீட்டை நோக்கி நடை போட துவங்கினான்….

கனவுகளில்

உன்னை நிரப்பி

நான் கண்டுவந்த

காட்சிகளுக்கு உயிரூட்டிட

எனது அருகில் என்றும் நீ

வேண்டுமே அப்பா

 

Advertisement