Advertisement

Suganya Vasu’s இருதயப் பூவின் மொழி

அத்தியாயம்: 4

விண்ணை துளைத்திடும்

கோளோ உனது இரு கரு

விழிப் பார்வை..

 

டாக்டர் சென்றவுடன் அவனை காண இருவரும் அறைக்குள்

நுழைந்தனர்…நுழையும் போதே முறைத்துக்கொண்டே தான் சுரேஷ்

உள்ளே நுழைந்தான்…

 

“பரவாயில்லையே சார் இவ்வளவு நல்ல காரியம்

பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல நாங்க…இல்ல மா

கனி“என அவளையும் துணைக்கு அழைத்துக்கொண்டான்…

 

அவள் மௌனமாய் இருந்தாளே ஒழிய வாயை திறக்கவும்

இல்லை…தலையை அசைக்கவும் இல்லை…” எவ்வளவு

நெஞ்சழுத்தம் இருந்து இருந்தா ,இப்படி ஒரு காரியம் பண்ணி

இருப்ப..” என்றவன் அவனை முறைத்துக்கொண்டே இருந்தான்…

 

“சாரி டா…”என்றானே தவிர வேறேதும் சமாதானம் செய்யும்

பொருட்டு ஒன்றும் சொல்லவில்லை…

 

”உன்னோட சாரியை தூக்கிட்டு போய் கிடப்பில் போடு…பெருசா

சொல்றான் சாரியாம் சாரி…உன்னை அந்த நிலைமையில

பார்க்கும்போது உசுரே போயிடுச்சு…எனக்கே அப்படி

இருந்ததுன்னா ,அம்மா.மட்டும் கூட இருந்து இருந்தா உசுரையே

விட்டு இருக்கும்…” என்றவன் அந்த நொடியை நினைத்து இன்னும்

பயந்தான்…

கொஞ்சம் கூட உனக்கு இது தப்புன்னு தோணலையா…பாவம் டா அம்மா,உன்னை நம்பி இருக்குற ஒரே ஜீவன்,நீயும் தவிக்கவிட்டுட்டு போய்ட்டு இருந்து இருந்தா, அவங்க நடு ரோடிட்ல தான் பிச்சை எடுத்து இருக்கணும்…” என்றான் ஆவேசமாக..

 

அவ்வளவு ஆத்திரம் அவனின் பேச்சில்…கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் கத்திக்கொண்டு இருந்தான்…

 

வேகமாக உள்ளே வந்த செவிலியர் “கனி என்ன நடக்குது இங்க…பேஷண்ட் எல்லாம் இருக்காங்க…கொஞ்சம் அமைதியா பேச முடியாதா…அவங்களுக்கு தான் தெரியல…உனக்குமா தெரியல..டாக்டர் வந்தா என்னை கிழிச்சி தோரணமா தொங்கவிட்டு விடுவார்…”

 

ப்ளீஸ் தயவுசெய்து ரெண்டு பேரும் வெளியில போங்க…ஏதாவது தேவைன்னா நானே கூப்டறேன்.. என்றவர் அவர்கள் இருவரையும் வெளியே தள்ளாத குறையாக அனுப்பினார்…

 

“அண்ணா …நீங்க ரூம் போயிட்டு வாங்க…அது வரையும் நான் இருக்கேன்…நைட் வீட்டுக்கும் போக முடியாது..இங்க தான நீங்க தங்கணும்..நாளைக்கு சாயந்திரம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க அதனால இப்போதைக்கு மட்டும் கொஞ்சமா தேவையானதை எடுத்திட்டு வாங்க..”

என்றவள் .

 

அவளின் கையில் இருந்த கார்ட் ஒன்றினை அவனிடம் தந்தாள்..”என்னமா இது ..”என்றான் கையில் வாங்காமலே..

 

“பிடிங்க அண்ணா சொல்றேன்,”  என வலுக்கட்டாயமாக அவனின் கையில் திணித்தவள் “இதுல கொஞ்சம் பணம் இருக்கும்..பில் எவ்வளவு வரும்ன்னு தெரியல…தேவையானதை இதுல இருந்து எடுத்து கட்டிடுங்க…”என்றாள் அவனிடம்…

 

“அய்யோ..இல்ல மா வேண்டாம்…நான் பார்த்துக்குறேன்…இது எல்லாம் எதுக்கு…ஒண்ணும் வேண்டாம்….நீ முதல்ல இதை பிடி..” என்று அவளின் கையில் மீண்டும் திணிக்க முயல வாங்க மாட்டேன் என மறுத்தவள் “இருக்கட்டும் அண்ணா…எதுக்கும் வச்சிக்கோங்க…நான் பிறகு வாங்கிக்கிறேன்..”என்றாள்..

 

“உன்னோட அப்பா அம்மாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடாத…”என்றான் சிறு கவலையுடன்.. அவளிடம் கார்ட் வாங்குவது ஏனோ ஒரு மாதிரியாய் இருந்தது…

 

“தெரிஞ்சா தானே…நான் சமாளிச்சுக்குறேன்…அப்பா மேக்சிமம் என்னுடைய சம்பள பணத்தை என்ன பண்றேன்னு கேட்க மாட்டார்…ஆனா நானே இரண்டு அல்லது மூணு மாசத்துக்கு ஒரு தடவை அவரு அக்கோவுண்ட்ல கொஞ்சம் பணம் போற்றுவேன்…அதுனால அவர் எதுவும் கேட்கமாட்டார் அண்ணா…”

 

“நீங்க இப்படி எல்லாம் நினைச்சு ,வேற யார்கிட்டயும் கடன் வாங்காதீங்க….எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க…” என்றவள் “சரி நீங்க கிளம்புங்க அண்ணா…நான் பார்த்துக்குறேன்…” என்றபடி இருக்கையில் அமர்ந்தாள்…

 

“சரி மா…நான் வீட்டுக்கு போயிட்டு வந்துற்றேன்…அது வரையும் அவனுக்கு துணையா இரு…ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு மா..,அரை மணி நேரத்துக்குள் வந்துற்றேன்..”என்றவன் வீட்டிற்க்கு கிளம்பினான்…

 

அவன் சென்ற பின் ராபினை ஐசியூ வில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றினர்…கார உணவுகள் குடுக்க கூடாது என்பதால்,சுரேஷ் வாங்கி வந்திருந்த பழங்களை பிழிந்து அவனுக்கு பழச்சாறு எடுக்க  துவங்கினாள் ..

 

ஏதாவது தன்னிடம் பேசுவாள் என எதிர்பார்த்த ராபினுக்கு ஏமாற்றமே…அவள் உண்டு அவளின் வேலை உண்டு என்று இருக்க ராபினுக்கு அவளின் கோவத்தின் அளவு  நன்கு புரிந்தது…

 

இருந்தாலும் அவள் மௌனமாய் இருப்பதும்,தன்னுடன் சண்டையிடாமல் இருப்பதும் அவனுக்கு கஷ்டமாய் இருக்க…அவளுடன் பேசும் பொருட்டு “மக்கும்…” என செருமினான்…

 

அவனின் கையில் ஒரு டம்ளர் தண்ணீரை திணித்தவள்  ,தான் செய்த வேலையை தொடரலானாள்….

 

தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என எண்ணியவன் “ கனி….”என்றான் மெதுவாக…

 

காதில் விழாதது போல பழச்சாறை பிழிந்து ஒரு டம்ளரில் ஊற்றியவள் ,சிறிது சர்க்கரை சேர்த்து கலக்கினாள்….பின் அவனின் கையில் இருந்த தண்ணீர் டம்ளரை வாங்கி கீழே வைத்தவள் “பழச்சாறினை …”அவனின் கையில் திணித்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்…

 

“கனி…”என்றான் மீண்டும் ஆனால் அதே நேரம் அழுத்தத்துடன்…

 

திரும்பி அவனை பார்த்தாலே ஒழிய என்னவென்று அவள் கேட்கவில்லை…அவளின் பார்வையிலும் ,முகத்திலும் தெரிந்த கோவத்தை கண்டு “…சாரி..கனி…” என்றான் சமாதானம் செய்யும் பொருட்டு …

 

நீ என்னவோ சொல்…யாரிடமோ சொல் என்பது போல அதே நிலையில் இருந்தாள்…

 

“கனி ..என்னை பாரு…கனி..ப்ளீஸ் கனி….சாரி கனி…நான் பண்ணது தப்பு தான்…ப்ளீஸ் கனி ,ஏதாவது பேசு…திட்டு இப்படி அமைதியா இருக்காத…கனி …” என கெஞ்ச துவங்கியவனை நோக்கி திரும்பியவள்

 

“எதுக்கு நான் பேசணும்…என்ன பேச வேண்டி இருக்கு…எதுக்கு நான் உன்னை திட்டனும்…நான் ஏதாவது பேசி,இல்ல திட்டி மறுபடியும் நீ இந்த மாதிரி தற்கொலை பண்ணிக்கவா….வேண்டாம் சாமி ,வேண்டவே வேண்டாம்…உன்னோட சங்காத்தமே வேண்டாம்….”

 

“ உனக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தது, நான் குற்ற உணர்ச்சியில செத்தே போய் இருப்பேன்…தெரியாம அன்னைக்கு உன்னை திட்டிட்டேன்…அதுக்கு கோடி முறை உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்…” என்றவள் அவ்வளவு தான் என்பதுபோல் முகத்தை திருப்பி கொண்டாள்…

 

என்ன சொல்றா…இவளால நாம இப்படி பண்ணோமா, லூசா இவ.. இவளை என்ன செய்றது…இவ திட்டினதுக்கு தற்கொலை முயற்சி செஞ்சோமா…ஐயோ கடவுளே, ஏன் இவ புத்தி இப்படி எல்லாம் திங்க் பண்ணுது….அப்படி இவ திட்டறதுக்கு எல்லாம் தற்கொலை பண்ணனும்னு நினைச்சி இருந்தா ஆனா ஆயிரம் டைம் சூசைட் அட்டெண்ட் பண்ணி இருக்கணும்…

 

சொன்னா நம்புவாளா, மனசுல கண்டதையும் யோசிச்சு ரொம்ப குழம்பி இருக்கா…எப்படி இவளை தெளிய வைப்பது என மிகவும் யோசனையாய் இருந்தது…

 

“கனி…நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு…நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை…நீ திட்டினதுக்கு எல்லாம் இப்படி பண்ணல..ரொம்ப ஸ்ட்ரெஸ் ,அதுவும் இல்லாம பெயின் ரொம்ப அதிகமா இருந்தது.. வலி தெரியாம இருக்க தூக்க மாத்திரை எடுத்துக்கிட்டேன்…ரெண்டு, நாலு, எட்டுன்னு எல்லா மாத்திரையும் சாப்பிட்டேன்…

 

நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை…ப்ளீஸ் உன்னை நீயே ரொம்ப ஹர்ட் பண்ணிக்காத…ரிலாக்ஸா இரு…மையிண்ட்ட ப்ரியா வை… தேவையில்லாத எதையாவது நினைச்சு குழம்பாத..என்க

 

அவன் சொல்வதை எதையும் நம்ப முடியாத பார்வை பார்த்தபடி இருந்தாள்…போதும் நீ என்னை சமாதானப்படுத்த சொல்லும் பொய்கள் என்றது அவளின் பார்வை…

 

அவளின் பார்வையை புரிந்துக்கொண்டவன் “நம்பலையா..??..நான் சொல்றது எல்லாம் நிஜம்…சாமி சத்தியம்…”என்றான் அவளிடம்…

 

அவளின் சிறு வார்த்தைகள் அவனின் மனதை காயப்படுத்தியது என்னவோ உண்மை தான்…ஆனால் தற்கொலை முயற்சி என்பது,அவளின் வார்த்தைகளின் வீரியத்தால் அவன் செய்யவில்லை…மன அழுத்தம் ஒன்றே அதற்க்கு முக்கிய காரணம்…

 

இவளை சமாதானப்படுத்திட வேண்டும் என எண்ணியவன் அவளை நம்ப வைக்க முயன்றான்…

 

அவன் செய்த சத்தியம் அவளுக்கு ஓர் அளவிற்க்கு மனதின் இறுக்கத்தையும், கணத்தையும் விலக்குவது போல இருந்தது…அவனுக்கு கடவுளின் மீது அதீத நம்பிக்கை உண்டு…கடவுளின் பெயரை கொண்டு அவன் பொய் சொல்ல மாட்டான் என எண்ணியவள்

 

அப்போ என்ன காரணம்ன்னு ,சொல்லு..என்றாள் பிடிவாதமாக..

 

“நீ காரணம் இல்ல…அது மட்டும் தான் என்னால சொல்ல முடியும்.. மேற்கொண்டு எதையும் கேட்காத…தேவையில்லாம உன்னையே நீ ஹர்ட் பண்ணிக்காத…என்றான் அமைதியுடன்

 

மனம் ஓர் அளவிற்க்கு சமன்பட்டாலும் ,கோவம் என்னவோ குறையவில்லை…இருந்தும் அவனிடம் இன்னும் நலன் விசாரிக்கவே இல்லையே என எண்ணியவள் “இப்போ உடம்புக்கு பரவாயில்லையா..”என்க..(ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட)

 

“இப்போவாவது கேட்கணும்ன்னு தோணுச்சே, இந்த தடிமாடுக்கு..”என மனதில் எண்ணியவன்,வெளியில் “ஹ்ம்ம் பரவாயில்ல…உனக்கு டூயூட்டி இல்லையா..”என்க…

 

“இருந்தது…பர்மிஸ்ஸின் கேட்டுட்டு வந்துட்டேன்…” ,”உன்னோட போன் எங்க இருக்கு” என்றாள் அவனிடம்

 

“ரூம்லயே இருக்கும்…ஆமா சுரேஷ் எங்க,ஆளையே காணோம்…”

 

“ரூம்க்கு போய் இருக்கார்…இப்போ வந்துடுவார்…” என்றவள் “உன்னோட அம்மா நம்பர் சொல்லு..” என்க…

 

“அம்மா நம்பர் எதுக்கு..” என்றான் அவளிடம்

 

“ஹ்ம்ம்…நீ செஞ்சி வச்ச காரியத்தை துளி மிச்சம் இல்லாம சொல்லணும் இல்ல…அதுக்கு தான்…”என்றவள் “ஹ்ம்ம் சொல்லு..” என்றாள் பிடிவாதத்துடன்..

 

“ஏஹ்…நீ என்ன லூசா…புரிஞ்சு தான் சொல்றியா….இல்ல கனி..வேண்டாம்…அம்மாக்கு எல்லாம் சொல்லாத…அம்மா தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாங்க…ஆஸ்துமா பேஷண்ட் வேற….வேண்டாம் …”என்றான் கெஞ்சலுடன்…

 

“மாத்திரை சாப்பிடும் போது அவங்க மேல இல்லாத அக்கறை..உனக்கு இப்போ எதுக்கு…ஆஸ்துமா இருக்குன்னு இப்போ தான் தெரிஞ்சதா…அவங்க மேல ரொம்ப பாசமோ…” என நக்கலாக கேட்டவள்

 

“இப்படி உனக்கு பதர்ற மாதிரி தான உன்னோட அம்மாக்கு தெரிஞ்சா அவங்களும் பதருவாங்க…கொஞ்சம் கூட உனக்கு அவங்களோட நினைப்பே வரல தான…நீயெல்லாம் மனுஷனா…கல் நெஞ்சுக்காரன்…”

 

“உன்னை பத்தி எவ்ளோ உயர்வா நினைச்சி இருந்தேன்….நீ தைரியமானவன், தன்னம்பிக்கை உள்ளவன், எதுக்கும் கலங்காதவன்,இருந்தா உன்னை போல இருக்கணும்ன்னு நானே பலமுறை எனக்குள்ள சொல்லி இருக்கேன்…ஆனா நீ இவ்வளவு கோழையா முடிவு எடுத்து இருக்க…கொஞ்சம் கூட உன்கிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு முடிவை எதிர்பார்க்கல…

 

“இன்னொரு முறை இந்த மாதிரி தப்பான முடிவை எடுக்க நினைச்ச,என் கையால நானே உன்னை கொன்றுவேன்..” என அவனின் கழுத்தை நெறிப்பது போல கைகளை அவனின் கழுத்திடம் கொண்டு சென்றவள் “ச்சை…” என்றுவிட்டு அங்கிருந்த நாற்காலியில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்…

 

சில நிமிடங்களில் ராபினுக்கு தேவையானவற்றுடன் உள்ளே நுழைந்த சுரேஷ் கனி அமர்ந்திருந்த நிலையை கண்டு “ என்னமா கனி…என்ன ஆச்சு…”என்றபடி உள்ளே நுழைய…

 

“அண்ணா…வந்துட்டீங்களா…எனக்கு ரொம்ப தலை வலிக்குது… இருக்கவே முடியல…நான் போறேன்…இதுக்கு மேலையும் என்னால இங்க இருக்க முடியாது.. டூயூட்டியும் இல்ல…இனி இங்க இருக்க அலோவ் பண்ண மாட்டாங்க…” என்றவள்

 

“இப்போ குடுக்க வேண்டிய மாத்திரை எல்லாம் தனியா எடுத்து வச்சு இருக்கேன்.. சாப்பிடறதுக்கு முன்னாடி ரெண்டு மாத்திரை கொடுக்கணும்…கேண்டீன்ல இட்லிக்கு சொல்லி வச்சு இருக்கேன்…இட்லியையும் பாலையும் பிசைஞ்சு குடுங்க..நாளைக்கு காலையில கேண்டீன்ல சொல்லி டிபன் வாங்கிக்கலாம்…”

 

“நீங்களும் அப்படியே ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கோங்க அண்ணா…” என்றவள் “உடம்பை பார்த்துக்கோ…மாத்திரையை ஒழுங்கா சாப்பிடு.” என ராபினின் முகம் பாராது மொழிந்துவிட்டு ,சுரேஷிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டாள்…

 

சுரேஷ் பதில் பேசும் வரை கூட அவள் காத்திருக்கவில்லை…போகும் அவளை பார்த்தவன்,அவள் சென்ற பிறகு அமைதியாய் கண்களை மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்துக்கொண்டான்…

 

“என்னவாயிற்று..” என கேட்க எத்தனித்த சுரேஷ் “ராபின் ..”கண்ணை மூடி படுத்துக்கொள்ள எதுவும் கேளாமல் பழம் பிழிந்த ஜூஸர்யையும்,டம்ளரையும் கழுவி வைத்தான்…

 

மணி எட்டை நெருங்கிக் கொண்டு இருக்க ,சாப்பிடும் முன் தர வேண்டிய மாத்திரையை விழுங்க கொடுத்துவிட்டு ,இட்லி வாங்கி வர கேன்டீன் சென்றான்…

 

சுரேஷும் ராபினிடம் எதுவும் கேட்கவில்லை…கேட்டு எதற்க்காக அவனுக்கு மனஷங்கடத்தை தருவானேன்…கொஞ்சம் தேறி வரட்டும் பின் கேட்டுக்கொள்வோம் என எண்ணி அமைதியாகிவிட்டான்….

 

கண்கள் மூடி படுத்திருந்த ராபினின் நெஞ்சமெல்லாம் பெற்றவர்களையே சுற்றிப்படி இருந்தது…பாசத்தில் குறைவில்லாமல் வளர்த்த பெற்றோரை எப்போதும் அதிகம் நேசித்தவன்..நேசிப்பவன்…

 

பையன் என்றால் எப்போதும் அம்மாக்களுக்கு தான் செல்லம் அதிகம்…ஆனால் நம்பிராஜனின் விஷயத்தில் நேரேதிர்…நம்பிராஜன் அப்பா செல்லம்…அவனின் அப்பா கனகசபைக்கு நம்பிராஜன் என்றால் உயிர்…

 

தாய் திலகவதிக்கும் மகனின் மீது பாசம் இருந்தாலும்,தேவையான இடத்தில் கண்டிப்புடன் இருப்பார்…சிறு விஷயங்களில் கூட அவனின் தவறை பொறுத்துக்கொள்ள மாட்டார்…

 

அவருக்கு மகன் ஒழுக்க ஷீலானாக இருக்க வேண்டும்…அவரின் தாய் அன்னலட்சுமியும் அதே ஊரில் வசிக்கும் வேளையில் ,தன் மகனை பற்றி சிறு குறை சொல்லும் பேச்சு கூட அவர்கள் இடத்தில் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாய் இருந்தார்…

 

அவன் வளர வளர கண்டிப்பும் வளர்ந்ததே தவிர குறையவில்லை…கனகசபை எவ்வளவோ எடுத்து சொல்லியும் திலகவதி தன்னுடைய  கண்டிப்பு தன்மையை குறைத்து கொள்ள வில்லை….

 

அம்மாவிடம் பகிர்வதை விட தந்தையிடமே தன்னுடைய சந்தோஷம் ,துக்கம் ,வெற்றி தோல்வி என அனைத்தையும் பகிர்ந்து கொண்டான்…

 

பண்ணிரெண்டாம் வகுப்பில் பெரிய அளவில் மதிப்பெண் எடுக்கவில்லை என்றாலும், நடுத்தரமான மதிப்பெண்ணை எடுத்திருந்தான்….

 

அவன் இன்ஜினியரிங் சேர வேண்டும் என்று ஆசைப்பட ,”எடுத்த மதிப்பெண்ணிற்க்கு கலை மற்றும் அறிவியல் துறையிலே இயற்பியலையோ, வேதியலையோ எடுத்து படிக்கட்டும்..”என திலகவதி திட்டவட்டமாக கூறிவிட…

 

தனது விருப்பமின்மையை தந்தையிடம் தெரிவித்தவன் ,அம்மாவிடம் ஏதும் எதிர்ப்பு சொல்லவில்லை…

 

அதன்பின் அவனின் தந்தை திலகவதியை சமாதானம் செய்து, அவனின் விருப்ப படிப்பான இன்ஜினியரிங்கில் கோவையின் ஒரு தரமான கல்லூரியில் அவனை சேர்த்தார்..ஹாஸ்டலில் தங்கி படித்தவன், விடுமுறை நாட்களுக்கும், விசேஷ நாட்களுக்கு மட்டுமே   வீட்டிற்கு வருவான்…

 

அப்போது ராபின் கல்லூரி இரண்டாம் வருடம் முடித்து மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்த சமயம்…பைனல் இயர் மாணவன், இரண்டாம் வருட மாணவனை அடித்திட,  ஜூனியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட, கல்லூரியே கலவரமாகியது…

 

அதுவும் அந்த மாணவன் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், போராட்டம் வலுப்பெற்றதே தவிர குறைய வில்லை…பைனல் இயர் மாணவன் சட்டத்துறை அமைச்சரின் மகன் என்பதால் ,அவனின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஜுனியர்களை அடக்குவத்திலே கல்லூரி நிர்வாகம் குறியாய் இருக்க, மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது…

 

கல்லூரிக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்போட்டு, மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினர்…விடுமுறையை தாய் தந்தையுடன் கழிக்க எண்ணி சந்தோசமா ஊருக்கு சென்றான்…விதியின் திருவிளையாடலை அறியாமல்..!!

 

இருதயப் பூவின் மொழி தொடரும்…

Advertisement