Advertisement

த்தியாயம் 18:-

 

கடந்திடத் தான்

தோன்றுகிறது

அவனின் நினைவை..

மூச்சுமுட்டி திணறுகிறேன்

சுவாசமாகிய  

அவன் நினைவை

கடந்திட வேண்டும்

என்று எண்ணும் நொடி…!!

 

ஆசை ஆசையாய் அவனை காண சென்ற மனது முன்பு போல தன் போக்கில் உள்ளுக்குள்ளே சுருங்கிக்கொண்டது… ஆசை யாரை விட்டதோ….!! என்ற பாடல் வரி என்னவோ தனக்கு இப்போது அப்படியே பொருந்தும் என்ற கசந்த முறுவல் அவளிடம்…

 

இருந்தும் மனதின் வேதனையை யாருக்கும் தெரிந்திடா வண்ணம் முகத்தை எப்போதும் போல் சந்தோஷத்துடன் வைத்திருப்பது இன்னும் கொடுமையாய் இருந்தது…

 

சிறுது முகத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும் உடல்நலக் குறைவோ என எண்ணி கலங்கும் தந்தையையும் ,தாயையும்  கண்டு மனம் கூசிப் போனாள்…

 

அவனை காண முடியாத சோகம் ,  எரிச்சல் மற்றும் கோவம் என அனைத்தும் அவளை உள்ளுக்குள்ளே தின்ன துவங்க , அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் தமிழ்செல்வனை நச்சரித்து கோவைக்கு கிளம்பிவிட்டாள்…

 

அத்தை முத்து இரு தினங்கள் கழித்து வருவதாய் தெரிவிக்க, குழல்மொழியும் தமிழ்செல்வன் மட்டும் கிளம்பினர்…அடிக்கடி தன்னை கவனிக்கும் தந்தை மற்றும் தாயின் பாசத்தில் ‘இவர்களுக்கு தெரியாம தானே அவனை பார்க்க போன…அவ்ளோ முக்கியமா அவன் உனக்கு ‘ என்ற மனதின் குரலில் இன்னும் வெட்கிப்போனாள்…

 

ஆசையாய் அவன் ஒரு வார்த்தை பேசியது கிடையாது, இருந்தும் அவன் மேல் நீ பித்தாகி போனாயோ..!! பித்த பெண்ணே என எண்ணிட மட்டுமே oமுடிந்தது…நினைவுகள் எல்லாம் ஏனோ அவனை நோக்கியே படையெடுக்க துவங்கின…மானங்கெட்ட மனது என வஞ்சனை இல்லாமல்  திட்டிக்கொள்ள மட்டுமே அவளால் அப்போது செய்ய முடிந்த ஒன்றாய் போனது…

 

சோபாவின் மேல் அமர்ந்து எங்கோ வெறித்தப்படி இருந்தவளின் தலையை பரிவாய் வருடிய வித்யா ‘ குழலு உடம்புக்கு முடியலன்னா ஏன் இப்படி உட்கார்ந்துட்டு இருக்க,போய் ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல டா..’

 

‘எக்ஸாம் பத்தி பயமா..??..அதை பத்தி எல்லாம் பயப்படாம கொஞ்சம் ரிலாக்ஸ்சா இரு டா..’ என்ற அன்னையின் பேச்சில் உள்ளுக்குள்ளே மேலும் குற்ற உணர்வாய் போனது…

 

ஹ்ம்ம்ம் சரி மா ..’ என்றவள் அப்படியே சரிந்து அன்னையின் மடிமேல் இரு கைகளையும் தலைக்கு தலையணையாக்கி படுத்துக்கொள்ள ஆச்சர்யத்துடன் பார்த்தவர் சில நொடி அவளை ஆழ்ந்து நோக்கினார்…

 

தாயின் ஆழமான ஊடுருவும் பார்வையில் சற்று பதற்றமேற… ”என்…என்ன…ம்மா….என்ன..?? ஏன் ஒரு வித்தியாசமா பாக்குறீங்க…’ என்றவளின் குரலில் பிசிறிட்ட பயம் லேசாய்….

 

‘வித்தியாசமா தான் டா தெரியுற…’ என மனதில் சொல்லிக்கொண்டவர் ‘ஒண்ணுமில்ல டா சும்மாதான்…ஏன் நான் உன்னை பார்க்க கூடாதா…’ என மறுகேள்வி கேட்க…

 

‘ஏன் பார்க்க கூடாது…நீங்க தாராளமா பார்க்கலாம்…’ என வெளியே பதில் கூறியவள் ‘ ஆனா உங்களோட ஆராய்ச்சி பார்வை தான் உள்ளுக்குள்ள பயத்தை கொடுக்குது மா…’ என மனத்திர்குள் கூறிக்கொண்டாள்…

 

தாய் அறியாத சூலா..??, கடந்த நாட்களை எல்லாம் விட இன்று மகளிடம் கண்ட வித்தியாசம் வித்யாவை யோசிக்க வைத்தது…அதுவே மகளை கண்காணிக்கவும் ஆரம்ப புள்ளியாய் ஆனது…

 

ஒற்றை பிள்ளையான குழல்மொழிக்கு அப்பா என்றால் உயிர்…சரியான அப்பா கோண்டு…பெண் பிள்ளைகளுக்கு எப்போதும் அப்பா தானே எல்லாம்..அதற்க்கு குழல்மொழியும் விதிவிலக்கல்ல….

 

எப்போதும் அன்னையை விட தந்தையையே அதிகம் தேடும் ஆர்ப்பாட்டமான குழந்தை…கண்டிக்கும் அன்னையை விட செல்லம் கொஞ்சம் தந்தை தான் அவளுக்கு உயிர்…

 

தமிழ்செல்வன் வீட்டில் இருந்தால் நிமிடம் கூட அவரை விட்டு பிரியாமல் கம் போட்டு ஒட்டியதை போல அவரை சுற்றியே வலம் வருபவள், தன்னுடைய சுக துக்கங்களை ஒன்றுவிடாமல் தந்தையிடம் ஒப்பிப்பவளிடம் புதியாய் ஒரு கள்ளத்தனம்…

 

காதல் வந்தால் கள்ளத்தனமும் உடன் இனாமாய் வந்து விடுகிறதோ..!!!..

 

அன்னையை எதற்கும் நாட மாட்டாள்…அப்படி அன்னையின் உதவியோடு ஏதாவது செய்ய வேண்டும் என்றாலும் அது தமிழ்செல்வனின் மூலம் தூதாகத் தான் வித்யாவின் காதுகளில் வந்து சேரும். .

 

வித்யாவும் இதை எல்லாம் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் அவளின் போக்கிலே விட்டு அதனை ரசிக்கவும் கற்றுக்கொண்டார்…கண்டிக்க வேண்டிய இடத்தில் வித்யாவின் குரல் சற்று ஓங்கியே ஒலிக்கும்…

 

அப்படிப்பட்ட குழல் ,இன்று அன்னையின் மடியை நாடி இருக்கிறாள் என்பது தான் வித்யாவை சிந்திக்க வைத்தது…ஒரு நாள் பூனை வெளியே வரத்தானே செய்யும் அப்போது பார்த்துகொள்ளாமல் என்று எண்ணி அவரால் விடமுடியவில்லை…தன் மகளையும் இனி கூர்ந்து கவனிக்க வேண்டும் என குறித்துக்கொண்டார்..

 

மறுநாள் அதிகாலை வேளையிலே கல்லூரிக்கு புறப்பட்டுவிட்டான் நம்பிராஜன்…அடுத்த வாரம் எண்ணூர் துறைமுகத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மாணவர்கள் அனைவருக்கும் ஏக சந்தோசம்…துறைமுகத்திற்க்கு சென்று அங்கு இருந்ததை எல்லாம் ரசித்து, அங்கே சுற்றிப்பார்த்தனர்…

 

நல்லதொரு கொண்டாட்டம் ஆரம்பம் ஆக ,மாணவர்கள் அனைவரும் அந்த பயணத்தை மிகவும் ரசித்தனர்…இருந்தும் ப்ராஜெக்ட் ,வைவா , ரெக்கார்ட் கரக்ஷன் , அசைன்மெண்ட் என மூச்சு முட்டும் அளவிற்க்கு எழுதவும் படிக்கவும் இருக்க சில நாட்களுக்கு மிகவும் திணறிபோயினர்…

 

நாட்கள் வாரங்கள் ஆக,வாரங்கள் மாதங்கள் ஆக,மாதங்கள் பல கடந்து வருடத்தை தொட்டு அதன் ஓட்டத்தை ஓடிக்கொண்டு இருக்க…நம்பிராஜனும் எக்ஸாம், அசைன்மெண்ட் , வைவா பிரிபிரேஷன் என அதன் பின்னே தன்னை தொலைத்துக்கொண்டான்…

 

விக்ரமும் சேகரும் கூட முன் போல் இல்லாமல் மிக தீவிரமாக ப்ரொஜெக்ட் செய்வதில் ஈடுபட்டு இருந்தனர்…அனைவரும் தனித்தனியே செய்வதால் அவர்கள் வேலையை செய்யவே அவர்களுக்கு நேரம் சரியாய் இருந்தது…

 

இடையிடையே ஊருக்கு சென்று தாத்தாவை பார்த்து நலன் விசாரித்து வந்தாலும், முன் போல் அடிக்கடி ஊருக்கு செல்ல முடியாமல் கல்லூரியிலேயே துறை ஆசிரியருடன் ப்ரொஜெக்ட் ரிவியூக்கான பிரசன்டேஷன் தாயார் செய்வது என நேரம் அவனை முழுதாய் விழுங்கிக்கொண்டது…

 

நேரமின்மையின் ஊடே தன்னுடைய கல்லூரியில் நேர்முகத்தேர்விற்கு என வந்த கம்பெனிகளின் நேர்காணலில் கலந்துக்கொண்டு வெற்றியும் கண்டான்…அதுவும் சென்னையில் எனும் போது மனம் சற்று வருத்தம் கொண்டாலும், மீண்டும் கோவைக்கு மாற்றலாகி வந்துவிடலாம் என எண்ணி சந்தோசம் அடைந்து வீட்டிற்கு அழைத்து விவரத்தை தெரிவித்தவன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்…

 

சேகரும் ,விக்ரமும் எந்த ஒரு நேர் முகத்தேர்விலும் கலந்துக்கொள்ளாமல் மேற்படிப்பிற்காக விண்ணப்பித்து இருக்க இவனின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இவன் மட்டுமே தேர்வாகி இருந்தான்…

 

இன்னும் மூன்று நான்கு பேர் தேர்வாகி இருந்தாலும்,அவர்களோடு இவனுக்கு எப்போதும் அதிக ஒட்டுதல் இல்லை எனலாம்…முதல் மூன்று மாதம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் ட்ரெய்னிங்கும் அதன் பிறகு அவர்களின் வேலை செய்யும் திறனை பொறுத்து,அவர்கள் விரும்பும் கிளைக்கே மாற்றல் கிடைக்கும் என தெரிவித்து இருந்தனர்…

 

கல்லூரி வாழ்க்கை இனிதே நிறைவு பெற பிரியா விடைபெற்ற தோழர்கள் அனைவரும் கண்ணீர் துளியை மறைத்து கனவின் துளிகளை சுமந்தபடி வருங்காலத்தை நோக்கிய அடுத்த அடியை இனிதே எடுத்து வைத்தனர்…

 

மருத்துவ கல்லூரி வளாகம் :

 

மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் வெள்ளை நிற கோட் , கையில் ஸ்டெத் என வளாகத்தில் அங்கொன்றும் இங்கொன்று வருமாக நடந்துக்கொண்டு இருக்க ,செல்லும் அவர்களையும் ஹாஸ்டலின் வளாகத்தின் வாயிலிலும் ஒரு கண்ணை பத்தித்தப்படி இருந்த நம்பிராஜனின் பார்வை தன் கையில் இருந்த கடிகாரத்தை நொடிக்கொரு முறை திருப்பி பார்த்துக்கொண்டது…

 

நொடி நிமிடமாய் கரைந்தும் வர வேண்டியவள் வராமல் நேரம் தாழ சற்றே எரிச்சல் அடைய துவங்கினான்…பயிற்சி வகுப்பிற்கு வேறு நேரம் ஆயிற்று…காலை பத்து மணிக்கெல்லாம் அலுவலகத்தில் பஞ்ஜ் செய்திட வேண்டும்…

 

மேலும் அவன் எரிச்சல் அடையும் முன்னே அவனின் முன் மூச்சு வாங்கியபடி ஓடி வந்த குழல்மொழி ‘ ஸ்…சா….ர்…ரிரி…ரொம்ப டைம் ஆச்சு….’ என்றப்படி ஆழ்ந்து மூச்செடுக்க முயன்றப்படி கூற…

 

‘லேட்டா வந்துட்டு சாரி வேறயா…அப்படி என்ன தான் மேக்களோ8 போடுவியோ…??..’ என லேசாய் நக்கல் வழிந்தோடிய குரலில் கூற..

 

‘ஹ.. லோ…’என்னை பார்த்தா மேக்கப் போட்ட மாதிரியா இருக்கு…குளிச்சிட்டு அப்படியே தலையை கூட உலர்த்தாம அப்படியே ஓடி வரேன்…’ என்றவள் முடிந்த மட்டும் முறைக்க…

 

‘மேக்கப் போடாமையே என் மொழி அழகு தான்…இன்னும் மேக்கப் போட்டா இன்னும் சூப்பரா இருப்ப…’ என அவளுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் கூற…

 

ஹோய்ய்…இன்னைக்கு ஒன்னும் நீங்க சரியில்ல…வந்த வேலையை பார்த்துட்டு கிளம்புங்க…இப்போ மட்டும் நேரம் ஆகலையா..’ என வெட்கத்தை மறைத்து பொய்யாய் முறைத்தப்படி கண்களால் வினவ…

 

தன்னை கடந்து சென்ற சில மாணவிகளின் மேல் ஒரு முறை பார்வை பதித்து ,பின் அவர்கள் சென்றபின் ‘இப்போ தான் உணக்கு தெரியுதா…சரி சரி எனக்கு டைம் ஆச்சு இந்தா புக்…படிக்கிற பிள்ளைக்கு புக்கு மேல கூட நினைப்பு இல்லாம அப்படி வேற எது மேல தான் நினைப்போ…’என்றவன் அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி கேட்க…

 

‘எதுவா இருந்தா உங்களுக்கு என்ன…??வந்த வேலை முடிஞ்சது இல்ல ,உங்க வேலையை பார்க்க போங்க…’ என்றவள் அவனை முறைத்தப்படி புத்தகத்தை பிடிங்கியப்படி உள்ளே சென்றாள்…

 

போகும் அவளையே சிரிப்புடன் கண்டவன் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தனது அலுவலகம் இருக்கும் அடையார் கிளையை அடைந்தான்…

 

கட்டிலின் மேல் இருந்த அலைபேசியின் அழைப்பில் அதனை ஏற்றவள்என்ன அதுக்குள்ள போன் .’ என சிரித்துக்கொண்டே கேட்க

 

உன்னோட வீட்டுக்கு போன் பண்ணி புக் வாங்கிட்டேன்னு சொல்லிடுசரி எனக்கு டைம் ஆச்சு ஈவ்னிங் பேசுறேன் ..’ என அழைப்பை துண்டிக்க

 

உதட்டில் மெல்லிய புன்னகை தவழ கண்ணாடி முன் நின்றவளை கண்ட அவளின் அறைத்தோழிஎன்ன குழல் இப்போ எல்லாம்  முகம் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் கணக்கா பிரகாசிக்குது…’ என கிண்டல் செய்ய..

 

ஹே..ய்.. அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல பாசும்மா தான்நான் எப்பவும் போல தான் இருக்கேன்.. என்றவள் அவள் அறியா வண்ணம் கண்ணாடியை நோக்க தோழி சொல்வது உண்மை என அவளுக்கும் புரிந்ததுஇருந்தும் வெளிப்படையாய் ஒத்துக்கொள்ளும் துணிவு சிறிதும் இல்லை

 

ஹ்ம்மம்ம்நம்பிட்டோம்..நம்பிட்டோம்காலேஜ் சேர்ந்த புதுசுல இருந்த முகத்துக்கும் இப்போ இருக்குற முகத்துக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியாது பாருஎல்லாம் நம்பி சார். செஞ்ச மாயம்ன்னு நினைக்குறேன் என்றவள் பாத்ரூமிக்குள் புகுந்துக்கொள்ளஅச்சோ இவளுக்கு விஷயம் தெரியுமா…??…கடவுளே அவா வரத்துக்குள்ள கிளம்பிடனும்இல்ல கேள்வி கேட்டே கொன்னுடுவா…!!…’ என நினைத்தவள் ஐந்து நிமிடங்களில் தயாராகி தோழி வருவதற்குள் மெஸ் ஹாலில் இருந்தாள்

 

உணவை அருந்தினாலும் மனமெல்லாம் நம்பிராஜன் உடன் தான் பேசியதையே மீண்டும் ஒரு முறை நினைத்துக்கொண்டது

 

அவனை காண வீடு வரை சென்றும் பார்க்க முடியாத இயலாமை அவளை வதைக்க செய்ய அடுத்த ஒரு வாரத்திற்கு எல்லாம் சென்னை பயணப்பட்டுவிட்டாள்.. மேற்கொண்டு எதையும் சிந்திக்க முடியாத வகையில் தேர்வுகள் நெருங்க அதில் கவனம் செலுத்த துவங்கினாள்..

 

அடிக்கடி தாத்தா கத்தவராயனுக்கு அழைத்து நலம் விசரிப்பவள், திலகவதிக்கும் அழைத்து நலம் விசாரிப்பாள்.. ஊடே சுப்பையாவின் நலன் அறியவும் மறந்ததில்லை..

 

அப்படி ஒரு முறை பேசும்போது அவர் தந்த தகவல் தான் நம்பிராஜனுக்கு சென்னையில் மூன்று மாத ட்ரைனிங்காக ஒரு தனியார் நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளான் எனவும் கூடிய விரைவில் அங்கே வேலையில் சேர்வான் எனவும் சொன்னார்

 

மனது ஆனந்த கூத்தாட அவனின் வருகைக்காய் காத்திருக்க துவங்கியது மனம்ஆனால் அவளே எதிர்பாராத ஒன்று நம்பிராஜனின் அழைப்பு..

 

ஆம் ஊரில் இருந்து புறப்படும் சமயம் அன்னைக்கே தெரியாமல் அவன் சுட்டது குழல்மொழியின் அலைபேசியை தான்..சென்னை சேர்ந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அவளுக்கு இவனே அழைத்தான்

 

புதியதொரு எண்ணில் இருந்து அழைப்பு வர யாராய் இருக்கும் என புருவ மத்தியில் ஏற்பட்ட முடிச்சுடன் ஏற்றவள் சத்தியமாய் நம்பிராஜன் குரலை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் குரலிலே அவனும் கண்டுக்கொண்டான்..

 

நீநீங்நீங்க..நீங்களா…??..’ என கேட்டவள் வார்த்தைகள் அவளை மீறி  திணறிவிட்டது..

 

‘…ஹ்ம்ம்நானே தான்ஏன் என்னை எதிர்பார்க்கலையா…’ என்றான் அவன்..டேய் உனக்கே இது ஓவரா இல்ல அப்படியே இவரு வருஷ கணக்கா பேசி கிழிச்சிட்டார்எதிர்பார்க்கலையான்னு கர்லஸி வேற என மனது இடித்துரைக்க..அதனை கண்டு கொள்ளாது அவளின் பதிலுக்காய் செவி மடுக்க துவங்கினான்..

 

இல்லஎதிர்பார்க்கல…’ என்றவள் மேலே என்ன சொல்வது என தெரியாமல் அமைதியானாள்..

 

ஹ்ம்ம்சரிநான் இங்கே சென்னை அடையார்ல தான் இருக்கேன்அத சொல்லத்தான் கூப்பிட்டேன்..சரி வச்சிற்றேன்என்றவன் அழைப்பை துண்டித்து இருந்தான்..எதற்க்கு அழைத்தான் எதற்க்காக அழைப்பை துண்டித்தான் என அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை

 

ஆனால் இருவருக்கும் அந்த நொடி நேர குரல் கேட்டல் கூட வெகுவாய் பிடிச்சிருந்ததுஇருவரும் அறிந்து தான் இருந்தனர் ஒருவருக்கு மற்றவரை பிடிக்கும் என்று இருந்தும் வார்த்தை பரிமாறப்படாமல் தத்தம் நெஞ்சிலே பூட்டி வைத்துக்கொண்டனர்

 

இருவரும் அலைபேசியில் சில வார்த்தைகள் பேசிக்கொள்ளவும் செய்தனர்இருந்தும் இருவருக்கும் ஏதோ ஒரு தயக்கம் சிறு எல்லை வகுத்து நட்பு ரீதியாகவே அவர்களின் உரையாடல் இருந்ததுஅதை தகர்த்தெரியும் நாளும் வந்தது

 

இருதயப் பூவின் மொழி தொடரும்

 

Advertisement