Advertisement

இருதயப் பூவின் மொழி

 

அத்தியாயம்: 15

 

விழி எனும் பேனா

கொண்டு உந்தன்

பெயரை எந்தன்

நெஞ்சில் பச்சை

குத்திட்டாயோ..!!

 

சட்டென்று கண்களை அவளின் புறமிருந்து திருப்பி வெளியே பார்வையை ஓடவிட்டான்…

 

அடுத்தடுத்த நிறுத்தத்தில் ஆட்கள் இறங்க ,ஓர் அளவிற்க்கு கூட்டமும் குறைந்தது…இருக்கை இல்லை என்றாலும் நிற்பதற்க்கு இடம் கிடைத்ததே என எண்ணி நிம்மதியானவன் ‘ஏறி உள்ள போ..’ என்றான் குழல்மொழியிடம்…

 

அவன் சொன்னதை ஏற்று உள்ளே ஏறியவள் ,ஒரு சீட்டின் கம்பியை பிடித்துக்கொண்டு நின்றுக்கொண்டாள்…

 

நம்பிராஜனோ மேலே ஏறாமல் படியிலே நின்றுக்கொண்டான்…

நொடிக்கொரு முறை அவனை கண்டவளின் பார்வையை உணர்ந்தானோ என்னவோ ‘என்ன…’ என்றான் அவளினை நோக்கி புருவத்தை இரண்டையும் மேலே உயர்த்தி….

 

‘ம்க்கும்….ஒன்றுமில்லை..’ என்பதை போல தலையசைத்தவள் தற்போது கண்களை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்…

 

அடுத்த பதினைந்து நிமிட பயணத்தின் முடிவில் ஈரோடு பேருந்து நிலையமும் வந்திட, பெரியவரிடம் இருந்து பேக்கை வாங்கிக்கொண்டவன் பேருந்தை விட்டு இறங்க குழல்மொழியும் இறங்கினாள்…

 

பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்து ஒரு ஆட்டோவை பிடித்தவன் , குழல்மொழியினை உள்ளே அமரும்படி சொல்லி, சற்று இடைவெளிவிட்டு அருகில் அமர்ந்தவன் மருத்துவமனையின் பெயரை சொல்லி அங்கு செல்ல சொன்னான்…

 

இந்த முறை கவனமாக பார்வையை அவனின் புறம் சென்றுவிடாமல் வெளியே வேடிக்கை பார்க்க துவங்கினாள்.. அடுத்த இருபது நிமிட பயணத்தில் இருவரும் மருத்துவமனையை அடைந்தனர்…

 

ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்… வேக எட்டுக்களுடன் அவன் நடக்க,அவனுக்கு இணையாக நடக்க முடியாமல் சிறிது ஓட்டத்தினுடனான நடையுடன் அவனை பின் தொடர்ந்தாள்…

 

வரவேற்ப்பில் இருந்து நேராக சென்று வலதுபுறத்தில் திரும்பி மேல் தளத்திற்கு சென்று இடது புறத்தின் வளைவில் நான்காவது அறையில் அவரை அனுமதித்து இருந்தனர்…

 

தமிழ்செல்வன் இருக்கையில் அமர்ந்து இருக்க, திலகவதி நோயாளியின் அறையின் முன்பு நின்றிருந்தார்… இவனை கண்டதும் “வா ராஜா…அம்மா என்ன செய்றாங்க…” என கேட்டுக்கொண்டே இவனை நோக்கி வந்தார்…

 

“ரொம்ப அழுதாங்க மா..என் கூடவே வரேன்னு ஒரு அழுகை…டாக்டர் என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு நாளைக்கு அழைச்சிட்டு போறேன்னு சொல்லி சமாதானம் செஞ்சிட்டு வந்தேன்…” என்றான் அவரின் கேள்விக்கு…

 

பின் “டாக்டர் வந்தாங்களா மா..??..என்ன சொன்னாங்க…’ என்க.

 

‘எங்க எதுவுமே சொல்ல மாட்டேன்னு இருக்காங்க.. அவங்க போக்குல போறாங்க… வராங்க…என்ன கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேன்னு இருக்காங்க…” என கண்ணீருடன் புலம்பியப்படி இருக்கையில் அமர்ந்தார்…

 

“அழாதீங்க அக்கா…டாக்டர் ஏதோ முக்கியமான ஆப்ரேஷன்ல இருக்காராம்… இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுவாங்கன்னு டூயூட்டி டாக்டர் சொல்லிட்டு போனார்…கொஞ்சம் வெய்ட் பண்ணலாம் இருங்க…” என்றார் சமாதானம் செய்யும் விதமாக..

 

“குழலு… அத்தைக்கு தண்ணீ கொஞ்சம் குடிக்க குடு…நான் அவங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்…பார்த்துக்கோ நம்பி… நான் வந்துற்றேன்…’ என அவர் வெளியில் கிளம்ப எத்தனிக்க…

 

“நீங்க இருங்க மாமா …நான் போய் வாங்கிட்டு வரேன்…டாக்டர் வரும்போது நீங்க இருந்து பேசுனீங்கன்னா கரெக்டா இருக்கும்…’ என கூற…

 

‘எனக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம் தம்பி …’என மெலிந்த குரலில் திலகவதி மொழிய..

 

“ஏன் மா…நீங்களும் சாப்பிடாம இருந்து உடம்புக்கு எதையாவது இழுத்து வச்சிக்காதீங்க… நான் போய் உங்களுக்கு சாப்பிட வாங்கிட்டு வரேன் ..” என்றவன்…

 

‘வந்துற்றேன் மாமா…நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க…’ என கூறிவிட்டு வெளியில் சாப்பாடு வாங்க சென்றான்..

 

தனது பையில் இருந்த தண்ணீரை அவருக்கு அருந்த கொடுத்தவள் , பின் ” தாத்தாவை பார்க்க முடியுமா அத்தை…” என்க

 

பதில் தமிழ்செல்வனிடம் இருந்து வந்தது…”இப்போ முடியாது குழல்.. டூயூட்டி டாக்டர் தான் இப்போ வந்து பார்த்துட்டு போனாங்க… சீப் டாக்டர் இன்னும் வரல…ஏதோ ஆப்ரேஷன் நடக்குதாம்…அதை முடிச்சிட்டு தான் வருவாங்க…” என்றார்…

 

ஓஹ்…. என்றதோடு அமைதியானவள் திலகவதியின் அருகிலேயே அமர்ந்துக்கொண்டாள்…

 

அவரிடம் பேசும் ஆர்வம் அதிகமாய் மனதின் உள்ளே இருந்தாலும், அவர் தந்தையை நினைத்து வருந்திக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தான் எதை பேச என்ற யோசனையில் இருந்தவளை கலைத்தது நம்பிராஜனின் வருகை…

 

கையில இருந்த சாப்பாட்டு பார்சலை அன்னையிடம் தந்தவன் “அம்மா நீங்களும் மாமாவும் டாக்டர் வரதுக்குள்ள போய் சாப்பிட்டு வந்திடுங்க…’

 

“இப்படியே நேரா போய் லெப்ட் கட் பண்ணா அங்க ஒரு இடம் இருக்கு மாமா…தண்ணி வசதியும் அங்கே இருக்கு…குடிக்க தண்ணி வாங்கிட்டு வந்துட்டேன்.. கை கழுவ மட்டும் அந்த பைப் தண்ணியை யூஸ் பண்ணிக்கோங்க…” என தமிழிடம் சொன்னவன் அன்னை இன்னும் அசையாமல் அங்கேயே அமர்ந்திருப்பதை கண்டு…

 

‘..ம்ம்மா….ப்ளீஸ் போய் கொஞ்சமாவது சாப்பிட்டு வாங்க.. தாத்தாவை கவனிக்கவாவது உங்களுக்கு உடம்புல தெம்பு வேண்டாமா…’ என்றான் கெஞ்சலுடன்..

 

அது ஏதோ சிறிது வேலை செய்தது… இவ்விடத்தை விட்டு சற்று எழுந்து நின்றார்…

 

‘வாம்மா குழல் மொழி….சாப்பிட்டு வரலாம்…’ என்று அவளுக்கு அழைப்பு விடுக்க..அப்போது தான் அவள் இருப்பதை கண்டவன் ‘ச்சே… இவளை எப்படி மறந்தோம்… காலையிலே சாப்பிட்டாளா..??..என்னன்னு ஒரு வார்த்தை கூட கேட்கலை… இப்போ சாப்பாடும் வாங்கிட்டு வரல…என்னை பத்தி மாமா என்ன நினைப்பார்…???..’ என எண்ணியவன் என்ன செய்வது என யோசித்துக்கொண்டு இருக்கும் போதே…

 

‘இல்ல அத்தை…நான் வரும்போது சாப்பிட்டு தான் வந்தேன்…எனக்கு பசியில்ல… நீங்களும் அப்பாவும் சாப்பிடுங்க…’ என அவள் பதில் சொல்லிக்கொண்டு இருப்பது இவனது காதிலும் விழத்தான் செய்தது…

 

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியானான்..தமிழ்செல்வன் குழலையும் உடன் அழைத்துச் செல்ல மூவரும் சென்றதும் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்…

 

அவர்கள் சென்ற சற்று நேரத்திற்க்குள் சீப் டாக்டர் வர,விரைந்து அவரிடம் சென்றான்…’டாக்டர்….தாத்தாவோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு…’ என்றப்படி அவரை நெருங்க…

 

“ரிப்போர்ட்ஸ் இப்போ தான் பார்த்தேன்… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க பேசண்டை பார்த்துட்டு என்ன கண்டிசன்னு சொல்றேன்… பி ரிலாக்ஸ்…’ என்றவர் அவனின் தோளை தட்டிக்கொடுத்து விட்டு உள்ளே சென்றார்..

 

ஐந்து நிமிடம் ஐந்து யுகங்களாக கழிய பதற்றத்தோடு வெளியில் அறையின் குறுக்கும் நெடுக்கும் ஆக நடந்தான்…ஐந்து நிமிடங்கள் பத்து , பதினைந்து என கரைய துவங்க, உள்ளே சென்றவரோ இன்னும் வெளியில் வந்தப்பாடில்லை…

 

அதற்குள் சாப்பிட சென்ற மூவரும் வர, டென்ஷனாய் நின்றிருந்தான் நம்பிராஜன்…அதீத பதட்டம் அவனின் முகத்தில்… ஏதோ தவறாய் நடக்கப் போவதாய் அவனின் உள் மனம் அறைகூவல் விடுப்பது போல ஒரு மன பிரம்மை தோன்ற தன் நினைவுகளில் இருந்து கட்டாயமாக களைந்தான்…

 

அதற்க்குள் இவனை நெருங்கி இருந்த திலகவதி ‘ராஜா..என்ன ஆச்சு.. டாக்டர் வந்தாங்களா..??..செக் பண்ணிட்டாங்களா..??..என்ன சொன்னாங்க…??…’ என கேட்க துவங்க

 

அன்னைக்கு பதில் சொல்ல எத்தனித்தவன், கதவு திறக்கும் ஓசை கேட்டு பார்வையை அங்கே திருப்பினான்…

 

உள்ளே இருந்து வெளியே வந்த சீப் டாக்டரை கண்ட நம்பிராஜன் அவரின் அருகில் செல்ல, மற்ற மூவரும் அவனை பின் தொடர்ந்தனர்…

 

‘டாக்டர்… தாத்தாக்கு எப்படி இருக்கு….பயப்படும் படி ஒண்ணும் இல்லையே..’ என்க..

 

‘அப்படி ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட முடியாது தம்பி…’ என அவர் கூற…

 

நால்வரும் அதிர்ச்சியோடு அவரை நோக்கினர்… அதில் இருந்து சட்டென்று தன்னை மீட்ட திலகவதி ‘என்ன டாக்டர் என்ன சொல்றீங்க…அய்யோ கடவுளே… அப்பாவை நீ தான் காப்பாத்தனும்…’ என அரட்ட துவங்க….

 

‘அக்கா…கொஞ்சம் பொறுமையா இருங்க, முதல்ல என்ன சொல்றாங்கன்னு கேட்போம்…’ என திலகவதியை அமைதிபடுத்தியவர் ..

 

‘டாக்டர் கொஞ்சம் என்னன்னு தெளிவா சொல்லுங்க…’ என தமிழ்செல்வன் டாக்டரிடம் விவரத்தை அறிய முற்பட..

 

‘நீங்க பேஷன்ட்க்கு என்ன ஆகணும் …’ என்றார் அவர்…

 

‘டாக்டர் நான் அவரோட தம்பி பையன்…’ என்க… ஓஹ் ..அப்படியா..??..என்றவர் ‘நீங்க என்னோட ரூம்க்கு வாங்க…நாம கொஞ்சம் டீட்டைல்லா பேசலாம்…’ என்றவர் முன்னே செல்ல…

 

‘என்ன தம்பி டாக்டர்  இப்படி சொல்லிட்டு போறாங்க…எனக்கு பயமா இருக்கு,அப்பாக்கு ஒன்னும் ஆகாது இல்ல…’ என்று பயத்தில் வெளிறிய முகத்துடன் நின்றபடி கேட்ட திலகவதிக்கு எப்படி சமாதானம் செய்வது ‘ என தெரியாமல் ‘அக்கா பதட்டப்படாதீங்க…நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்…எல்லாம் சரியாகிடும் …’ என்றவர்

‘குழல் அத்தையை  பார்த்துக்கோ..” என்றவர்  ‘நம்பி நீயும் வா….’ என்றப்படி முன்னே செல்ல ,நம்பிராஜனும் அவரின் பின்னே செல்ல டாக்டர் இவன் யார் என்பது போல தமிழ்செல்வனை பார்த்தார்……

 

அவரின் பார்வையை கண்டு ‘பேஷன்ட்டோட பேரன் டாக்டர்…இவனும் வரட்டும், அவரோட எல்லாமே இப்போ இவன் தான்..” என்றார்..

 

ஹ்ம்ம் என்றப்படி அவர் முன்னே சென்று ஒரு அறையினுள் நுழைய,இருவரும் அவரின் பின்னே அந்த அறையினுள் நுழைந்தனர்…

 

கடந்திட வேண்டும்

இதையும்

சட்டென்று வலியை

தகர்த்தெறிந்து

விட்டு

நானும் என் மனமும்…

 

இருதயப் பூவின் மொழி தொடரும்…

 

Advertisement