பாட்டிகள் இருவரும் பேரனை இரண்டு நாட்கள் சீராட்டினார். அடுத்த இரண்டு வாரத்தில் கண்டிப்பா வரணும் எனச் சொல்லிவிட்டு, திங்கள் காலை கீர்த்தி மகனை ஹாஸ்டலில் விட்டுவிட்டு கிளம்பினாள்


முன்பு ஒரு சோம்பேறித்தனம் இருக்கும் விஷாகனிடம், வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட மதிக்க மாட்டான். அவன் அறையிலேயே இருந்து கொள்வான். இப்போது இங்கே ஹாஸ்டல் வந்த பிறகு எல்லாமே மாறி இருந்தது. தந்தை தன் நல்லதுக்குதான் இங்கே அனுப்பி இருக்கிறார் என உணர்ந்து இருந்தான். ஆனால் தந்தையைச் சென்று பார்க்கத்தான் தயக்கமாக இருந்தது. ஆனால் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்றுதான் இருந்தான்


கடலூரில் புயல் வந்து பேயாட்டம் ஆடி இருக்கநிவாரணப் பொருட்கள் கொடுக்கஇந்த முறை நண்பர்களுடன் தர்மாவும் சென்றான். ஒரு காரில் நான்கு பேரும் அதோடு ஒரு வேன் நிறைய நிவாரணப் பொருட்களுடன் சென்றனர்


இவர்கள் சென்று சேர்ந்த பிறகு மீண்டும் ஒரு புயல் வந்து தாக்கமொத்த தொடர்பும் விட்டுப் போயிருந்தது. இங்கிருந்து இவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்கிருந்து அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை


இதில் இன்னொரு விஷயம் என்னெவென்றால்நண்பர்கள் நான்கு பேரும் ஆளுக்கொரு பக்கம் அங்கிருக்கும் தன்னார்வலர்களுடன் சேர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்க தனித்தனியாகச் சென்றிருந்தனர். அப்படித்தான் எப்போதுமே பிரிந்து செல்வார்கள். அப்போது தான் அதிகம் பேருக்கு கொடுக்க முடியும்


தர்மா சென்ற பக்கம் தான் புயல் தீவிரமாக இருக்கதர்மாவின் மற்ற நண்பர்களுக்கே நண்பன் எங்கே இருக்கிறான் எப்படி இருக்கிறான் எனத் தெரியாத நிலை


வீட்டில் நாயகி வேறு முடியாமல் இருக்க, கீர்த்தி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால் அபியை அவள் அப்பாவை தொடர்புகொள்ளச் சொல்லி இருந்தாள்


அபி தர்மாவுக்கு முயன்று பார்த்து, எப்படி எல்லாமோ தொடர்பு கொள்ள முயற்சித்து, கடைசியில் ராஜேஷின் போன் எடுக்க… 


அபி இங்க சிக்னல் இல்லை. சீக்கிரம் சொல்லு. என்றான்


அப்பாகிட்ட கொடுங்க. என்றதற்கு அவன் சரியாகப் பதில் சொல்லாமல் இருக்க… “மாமா ப்ளீஸ் அப்பாகிட்ட கொடுங்க. எனக் கேட்க, இது போல விஷயம் எனச் சொல்லிவிட்டான்


உலகமே ஒரு நொடி நின்றது போல் அபி உணர்ந்தாள். அப்பா எங்கே, எப்படி இருக்கிறார் எனத் தெரியாத நிலை. அதோடு கைபேசி தொடர்பும் விட்டுப் போனது. அவள் பயத்தில் அழுகவே ஆரம்பிக்க… “அப்பா வந்துவிட்டாரா?” என விஷாகன் அழைத்துக் கேட்டான்.

இப்படி என விஷயம் சொல்ல… “அக்கா அம்மாகிட்ட சொல்லிடாதஅப்பா எங்க இருந்தாலும் பத்திரமா இருப்பார். ஆனா அம்மா டென்ஷன் ஆகி அவங்களுக்கு எதாவது ஆகிடப் போகுது. என்றான்


தர்மா மனைவியை எப்படிப் பாதுகாப்பான் எனப் பிள்ளைகளுக்கா தெரியாது


உட்கார்ந்து அழுவதால் மட்டும் ஒன்றும் பயனில்லை. அதுவும் அவள் அப்பாவும் அதை விரும்பவும் மாட்டார் என நினைத்தவள், “சரி நான் அம்மாவை பார்த்துக்கிறேன். என்றாள்


அக்காவிடம் அப்படி சொல்லிவிட்டாலும், அப்பா எப்படி இருக்கிறார் என தெரியவில்லை. உதவி எதுவும் தேவைப்பட்டால் என நினைத்தவன்,   நான் இப்பவே கிளம்பி அப்பாவை போய்ப் பார்க்கிறேன். என விஷாகன் சொல்ல

 
ஏய், நீ போய் நீ எங்காவது மாட்டிக்காத. என அபி சொல்ல…. “எனக்குப் பத்திரமா போகத் தெரியும். என்றவன், உடனே திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தான். அங்கிருந்து அபிக்கு அழைத்து எதாவது தெரிந்ததா எனக் கேட்க, அவள் இல்லையென்றதும், அங்கிருந்தே காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடலூர் சென்றுவிட்டான்.

ஏறும் போதே டிரைவர்கடலூர் பக்கம்தான் புயல். எவ்வளவு தூரம் போக முடியும்னு தெரியலைமுடியும் வரை தான் கொண்டு போய் விடுவேன் எனச் சொல்லித்தான் அழைத்துச் சென்றான்


விஷாகன் அவனது கைபேசியில் எந்தப் பக்கம் செல்வது பாதுகாப்பு, எந்தப் பக்கம் ரொம்ப வெள்ளம் எனப் பார்த்து தெரிந்து கொண்டே தான் சென்றான். அவன் சொல்லச் சொல்ல டிரைவர் வண்டி ஓட்டிக் கொண்டு சென்றான்


அபி மூலம் விஷயம் கேள்விப்பட்ட கார்த்திகேயனும் பதட்டமாக இருந்தான். அவனுக்கும் தந்தையைத் தேடி செல்ல வேண்டும் தான். ஆனால் அம்மாவிடம் என்ன சொல்வது எனத் தெரியாத நிலை


கீர்த்திக் கேட்டதற்கு, “ராஜேஷ் மாமா எல்லோரும் பத்திரமா இருக்கோம். இப்போ சிக்னல் இல்லை அவங்களே கூப்பிடுவாங்க சொல்லி இருக்காங்க மா என எதோ சொல்லி அபி சமாளித்து வைத்திருந்தாள். கீர்த்தியும் கணவனுக்கு விடாமல் அழைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்


விஷாகன் காரில் கடலூர் செல்லரோட்டில் நிறைய மரங்கள் சாய்ந்திருக்கஅதற்கு மேல் காரில் செல்ல முடியாமல் கடலூர் வருவதற்கு முன்பே இறங்கி நடந்து செல்ல ஆரம்பித்தான். மழை இப்போது தூறலாக மாறி இருந்தது


ராஜேஷின் எண்ணிற்கு இப்போதும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் அபி மூலம் அவர்கள் எந்த இடத்திற்குச் சென்றார்கள் எனத் தெரிந்து, வழியில் விசாரித்துக் கொண்டே சென்றான்

மழை நின்ற போது நள்ளிரவாகி விட்டது. இரவில் எங்கே சென்று தேடுவார்கள். நாளை காலை தான் தர்மாவை தேடி செல்ல முடியும். அவன் நண்பர்களும் அதற்குத் தான் காத்திருந்தனர். அப்போது விஷாகன் வந்து நின்றது அவர்களுக்கு அதிர்ச்சியே


காலையில உங்க அப்பாவே வந்திடுவார். அப்படியே போறதா இருந்தாலும், நாம எல்லாம் சேர்ந்து போகலாம்.” என ராஜேஷ் சொல்லி வைத்திருந்தான். ஆனால் அதிகாலை எழுந்தவன், யாரிடமும் சொல்லாமல் தந்தையைத் தேடி விஷாகன் கிளம்பி விட்டான்


வழியில் சென்ற இரு சக்கர வாகனம், மாட்டு வண்டி எனப் பயணித்து, பிறகு கொஞ்ச தூரம் நடந்து என வழியை விசாரித்துத் தந்தை சென்ற இடம் வந்தவன், மோசமாக இருந்த அந்த இடத்தைப் பார்த்து பயந்து போனான். ஆனாலும் செல்லில் தந்தையின் படத்தைக் காட்டி அங்கே இருந்தவர்களிடம் விசாரிக்கஅப்போது ஒருவர், “அதோ தூரத்தில தெரியுதே அந்த வீட்ல போய்ப் பாருங்க. என்றார்


அங்கேயே தந்தை இருந்துவிட வேண்டும் என வேண்டுதலும் ஆர்வமுமாக விஷாகன் கிட்டத்தட்ட ஓடினான்


நள்ளிரவுக்கு மேலேதான் இந்த வீட்டில் தர்மா தஞ்சம் அடைந்திருந்தான். யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் வீட்டிற்கும் தகவல் சொல்ல முடியாமல் போகுமென்று அவன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. 

விடியக்காலையில் கிளம்பி விட வேண்டும் என்று இருந்தவன், அப்போது தான் வெளிச்சம் பரவியிருக்க…. அவன் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே வந்து செல்லில் சிக்னல் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் தன்னை நோக்கி யாரோ ஓடி வருவது போல இருக்கஉற்றுக் கவனித்தால்தன் மகன்களில் ஒருவன் போல இருக்கஅவர்கள் எப்படி இங்கே இருக்காது என அவன் நினைக்கும் போதேவிஷாகன் இன்னும் நெருங்கி இருக்கதன் மகன் தான் எனத் தெரிந்ததும், அவன் உணர்ந்தது என்னவென்று அவனுக்கே தெரியவில்லை


விஷாகன், நீ எப்படி வந்த?” என்றவன், “வீட்ல அம்மா பாட்டி எல்லாம் நல்லாத்தானே இருக்காங்க. என


ம்ம்நான் உங்களைத் தேடி தான் வந்தேன். என்றதும், நம்ப முடியாத ஆச்சர்யத்தில் மகனை அனைத்துக் கொண்டான்.

 
விஷாகனைக் காணாது தர்மாவின் நண்பர்கள் அவனைத் தேடி அங்கேயே வந்துவிட்டனர். “இவன் வந்துட்டானாநேத்து நைட்டே வந்தான். சேர்ந்து போகலாம் சொன்னோம். ஆனா எங்ககிட்ட சொல்லாமலே வந்துட்டான். என்ற ராஜேஷ் தர்மாவிடம் அங்கே பாரு எனச் சொல்லதர்மா பார்க்க கார்த்திகேயனும் வந்து விட்டிருந்தான்


அம்மாவை விட்டு நீயும் ஏன் வந்த?” எனத் தர்மா கேட்க


அம்மாவை அபி அக்கா பார்த்துப்பா…. நான் உங்களைத் தேடிஅப்புறம் இவனையும் தேடி வந்தேன். இவன் பத்திரமா வந்திட்டானா தெரியலை.” என்றான் தம்பியை காட்டி…. தர்மா அந்த மகனையும் அனைத்துக் கொண்டான்

இத்தனை அன்புக்கு தான் தகுதியானவனா என்றுதான் தர்மாவுக்குத் தோன்றியது. இதைவிட ஒருவனுக்கு என்ன வேண்டும்.

இவர்கள் இருவர் அன்புக்கு சற்றும் குறைந்தது அல்ல மகளின் அன்பும் என அவனுக்கு தெரியும். இந்நேரம் அவள் எவ்வளவு தவித்துக் கொண்டிருப்பாள் என அவன் அறியாமல் இல்லை… மனைவிக்கு எந்த தகவலும் சொல்ல முடியவில்லை. அவள் பயந்து போயிருப்பளே  என அவள் நினைவாக வேறு இருந்தது.