நேசன் மாலைதான் அலுவகலம் சென்றான். இவன் இல்லாததால் உதயகுமார் சைட் விசிட் சென்றிருந்தாராம். கேட்ட நேசனுக்கு, லேசானப் புன்னகை, முகத்தில் தவழ்ந்தது.
அப்பு முன்னமேச் சொல்லி இருந்தார்.. உதயா அப்படிதான் கொஞ்சம் ஈகோ இருக்கும். ஆனால், அவரை மதித்து பார்.. எல்லாம் செய்வார் உனக்கு என சொல்லி தன் மகனை அமைதிப் படுத்தி இருந்தார்.
எனவே, இப்போது அவர் சைட்டுக்கு ‘தான்’ இல்லாதப் போதுச் சென்றது கொஞ்சம் இளக்கியது நேசனை. அவருக்கு அழைத்து பேசினான்.. ‘எங்கு இருக்கீறீர்கள்.. ‘ என பொதுவாக அவருடம் பேசி வைத்தான்.
அப்பு நேசனின் தொழில் குறித்த ஆலோசனையை ஏற்கவில்லை. அதுதான், நேசன் எல்லோரையும் பங்குதாரர்களாகச் சேர்க்கலாம் என்ற யோசனைக்கு அப்பு ‘வேண்டாம்’ என்றுவிட்டார்.
“பார்க்கலாம் நேசா… இது தாத்தாவின் தொழில்.. உனக்கும் கை கொடுக்கும்.. அப்படி சட்டென பொதுவில் வைக்க எனக்கு மனம் வரவில்லை… அளவாக இருக்கட்டும், நமக்கென உள்ளவர்களை கொண்டு செய்.. போதும்.. பிறகுப் பார்க்கலாம் “ என்றார் தன் தனையனிடம்.
நேசனும் ஒன்றும் சொல்லவில்லை… அமைதியாக ஏற்றுக் கொண்டான் தந்தையின் ஆலோசனையை.
இப்போது, ‘ஏதோ வந்து பார்த்தேன்’ என பெயர் செய்து.. மனோ இருந்த சைட்டிற்குச் சென்றான் நேசன்..
ஒரு சுற்று சுற்றி வந்து மனோ நின்ற இடத்திற்கு எதிரே நின்றான்.
மனோக்கு ஆச்சர்யம்… அவளின் கருவண்டு விழி… இன்னும் விரிந்து ‘அவனை எதிர்பார்க்கவில்லை அங்கு’ என கண்களேச் சொன்னது. பொறுமையாகக் காத்திருந்து அவள் வந்ததும் அழைத்துக் கொண்டு வீடு வந்தான்.
இருவரும் சென்றது வீடு வரவும்… பார்த்த தேவிக்கு ‘இது எங்க போய் முடியப் போகுதோ’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை. இருந்தும் ஏதும் கண்டுகொள்ளாமல் அந்த பக்கம் நகர்ந்தார்.
மனோ, இரண்டு நாட்களாக இருந்த கோவம் எல்லாம் அவனின் அன்னை திவசம் என்ற நிலையில் காணாமல் போயிருந்தது. எனவே அமைதியாகவே இருந்தாள்.
தேவி “கொஞ்சம் நாடா பக்கோடா செய்தேன்… உனக்கு பிடிக்குமா” என கேட்டபடியே உள்ளே சென்றார். மனோக்கு காலையில் நடந்தது ஒன்றும் தெரியாதே.. அத்தையையே ஆராய்ச்சியே பார்த்தாள்.. இந்த வார்த்தையில்.
தேவி உண்பதற்கும் குடிக்கவும் கொடுத்தார்…
அப்புவை அழைத்து வந்தாள் ஹாலுக்கு மனோ. தேவியும் அமர நால்வரும் கதையடித்துக் கொண்டிருந்தனர். அவ்வப்போது மனோ தன் ஷிவாவையும், அத்தையையும் பார்த்தாள் ஆராய்ச்சியாக.
யாழினி வர மணி ஏழானது… வந்தவள் இந்த கூட்டணியைப் பார்த்து.. “என்ன, என்ன.. எல்லோரும் வீட்டில் இருக்கீங்க” என சொல்லி அமர்ந்துக் கொண்டாள் அவர்களுடன்.
அப்போது சேகர், சரியாக போன் செய்துவிட்டார் தன் மகளுக்கு, எடுத்தவுடன் ‘நான் அந்த பக்கம்தான் வரேன், ஆபீஸில் தானே இருக்க…’ என்றார்.
மகள் “இல்ல ப்பா, அத்த வீட்டில்” என்கவும் ‘எப்போது வீடு வருகிறாய்‘ என்றார். முகமே வாடிப் போனது மனோக்கு, அனிச்சையாக நேசனை பார்த்தாள் மனோ.
நேசன் கண்களை சுருக்கி யார் என்பதாக கேட்டான்.. என்ன சொல்ல முடியும் மனோ.. அமைதியாக தந்தையுடன் பேசினாள்.
அவனின் இந்த இரண்டு நாள் பிரிவை தாங்கவே முடியவில்லை… என்னோ போல்தான் இருந்தது மனோக்கு.. இன்று எப்படியும் நேசனுடன் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும் என நினைத்திருந்தாள்.. இப்போது தந்தை இப்படிக் கேட்கவும்… உள்ளே எல்லாம் உருகியது மனோக்கு… கண்கள் அவனை அனிச்சையாய் பார்த்தது.
இப்போதுதான் அப்பு கவனித்தார் மனோவையும் நேசனையும். தன் மனைவியையும் பார்த்தார். பெரியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதுவும் அப்புக்கு இந்த செய்தி புதிது என்பதால் தன் மனைவியை கேள்வியாகவேப் பார்த்தார்.
நேசன் எழுந்து மேலே சென்றான். அவனுக்கும் என்னவோ போல் இருந்தது.
மனோவும் யாழினியும் மட்டுமே கீழே இருந்தனர். மனோக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை… எப்போதடா மேலே செல்லலாம் என பார்த்துக் கொண்டே இருந்தாள்.
ஏதோ பேசியபடியே இருந்தாள். யாழினி மேலேச் செல்ல எழவும், மனோவும் எழுந்தாள்.. அவளுடனேயே மேலே வந்தாள்.
நேசனின் அறை திறந்திருக்க சத்தமில்லாமல் உள்ளே சென்றாள்…
இங்கே அப்பு, தன் மனைவியைப் பார்த்ததார் “என்ன தேவி… மனோ.. ஏதாவது” என்றார்.
தேவி.. “ம்…. என்கிட்டச் சொன்னா.. நான்தான் அவனைப் பிடிச்சிருந்தா… பாரு. எதையும் யோசிக்காதச் சொன்னேன். இப்போ, இவங்க அப்பா இப்படி முருக்குவான்னு… தெரியாதே… ச்சு… என்னவோ ஒன்னும் புரியலை…” என்றார்.
அப்புக்கும் யோசனை வந்தது. சுற்றி சுற்றி ஏதோ ஒரு பிரச்சனை… அப்பு லேசாக.. சலித்துக் கொண்டார்.
நேசன் மேலே, அங்கிருந்த டேபிள் மேலிருந்த பெட்டியில் இருந்த, தனதுப் பயண உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
மனோ, சத்தமில்லாமல் உள்ளே வந்தவள், பின்னிலிருந்து அவனை தன் விரல்களால் சுரண்டினால்.. நேசன் திடுக்கிட்டுத் திரும்பினான்.
மனோ, அதை பார்த்துப் பதறாமல் “என்ன ஒன்னும் சொல்லாமல் மேலே வந்திட்டீங்க.. அப்பா வரார்…” என்றாள்.
நேசன் அதையெல்லாம் காதில் வாங்கவில்லை.. “ஏன் இங்க வந்த… போ.. வெளிய போ, மனோ… பேபி எங்க, உன் அத்த எங்க… நீ ஏன் என் ரூமுக்கு வந்த.. போ..” என சொல்லி அவளின் கைப் பிடித்து வெளியேச் சென்று, விட்டான், அவளை.
மனோக்கு புரியவேயில்லை இதெல்லாம்.. என்ன செய்கிறான், வந்தால் என்ன என.. அவன் வெளியே விடவும்.. அவனை மீறிக் கொண்டு உள்ளேச் செல்ல முயன்றாள்.. நேசன் அவளை தன் இடக்கையால் தடுத்தப் படியே ரூம் வாசலிலேயே நின்றான். ஏதோ சொர்க வாசலில் நிற்கும் அசுரனை, உள்ளே விட மறுக்கும் துவாரபாலகன் போல் நின்றான்.
மனோ “என்ன இப்போ, வந்தா என்ன.. எப்போவா இருந்தாலும் நான் வர போற இடம்தானே…” என சொல்லிக் கொண்டு மீண்டும் மீண்டும் உள்ளேச் செல்ல முயன்றாள்.
அப்படியே அவளின் கையைப் பிடித்துக் கொண்டு மேலேறினான் நேசன்.. மேலே வந்தவன் “ஏன் மனோ… என்ன ஆச்சு” என்றான்.
மனோ அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டு, அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்… “ஏன் நான் உங்க ரூம் வரக் கூடாதா..” என்றாள்.
நேசன் அவளைத் தள்ளி நிறுத்தி “ம்..கூம்… கல்யாணத்துக்கு அப்புறம் தான் வரணும்” என்றான் கொஞ்சமாக சிரித்து, நிறைய கோவமாகச் சொன்னான்.
மனோ, மீண்டும் அவனின் நெஞ்சில் சாய முயன்றாள்.. நேசன் கொஞ்சமாக சமாதனாம் ஆகினான் போல.. “ப்ளீஸ் மனு… என்ன சோதிக்காத ப்ளீஸ்” என்றான் குரல் கரகரப்பாக இருந்தது.
மனோ ஏன் என்பதாக பார்த்தாள், நேசனால் அவளை பார்க்க முடியவில்லை எதிர்புறம் உள்ளத் திட்டில் சாய்ந்து நின்றுக் கொண்டான்.
மனோ அவன் பதில் சொல்லாததால்.. “சரி நான் கீழ போறேன்…” என்றாள், முறுக்கிக் கொண்டு.
நேசன் “நில்லு, இப்போ என்ன…” என்றான் அதட்டலாக. என்னவென சொல்லும் பெண் மனம்.. அவனை உணரத்தானே ஆசை கொண்டாள். இப்போது வந்து கேள்வி கேட்பவனிடம் என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றாள்.
நேசன் “சொல்லு டா…” என்றான் கனிந்தக் குரலில்.
மனோ “ச்சு…. அப்பா வரார்… என்னைக் கூட்டிப் போக.. தெரியுமில்ல, அத்தை கிட்டப் பேசறேன் சொன்னீங்க… எதுவுமேப் பேசலை நீங்க.. இப்போ அப்பா என்னை இங்க விடமாட்டார்.. அம்மா வேற, ஏதோ ஜாதகம் பொருத்தம் அப்படின்னுப் பேசிட்டே இருக்காங்க… ஏதோ, அப்பாக்குத் தெரிஞ்சிருக்கு… ச்சு” என சலிப்பாகச் சொல்லி அமர்ந்துக் கொண்டாள்.
நேசனும் அவளின் அருகில் அமர்ந்தான்.. அவள் இயல்பாக அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். நேசன் “ம்… உன் அப்பா பயங்கரமான ஆளு, நம்ம லவ் பண்றதுக்கு முன்னாடியே பிளான் போட்டார் போல… அதான் சுறுசுறுப்பா ஏதோ செய்யறாரு.
நாளைக்கேவா கல்யாணம்… எல்லாம் பேசிக்கலாம். முதலில் பேபி கல்யாணம்.. அப்புறம்தான் நம்ம கல்யாணம்.. சரியா, பொறுமையா இரு… நீ அவர் கிட்ட சண்டைப் போடக் கூடாது… புரியுதா, நான் யாழிம்மா மூலமா பேசுறேன்… சத்தம் போடக் கூடாது” என்றான் மீண்டும் மீண்டும்.
அவன் தோளில் பாந்தமாய் சாய்ந்துக் கொண்டு.. மகுடிக்கு மயங்கும் பாம்பாக எல்லாவற்றுக்கும் ம்.. ம்.. என தலையாட்டினாள் அமைதியாக மனு. பின் ஏதும் பேசவில்லை… அமைதியாகவே அமர்ந்திருந்தாள், அவன் தோள் சாய்ந்து.
நேரம் பத்து… பதினைந்து… என நிமிடங்களாகக் கடந்தது. அவனும் ஏதும் பேசவில்லை.. கால் நீட்டி அமர்ந்து அவளை, பட்டும் படாமல் தோள் தாங்கி.. தொட்டும் தொடாமல் அவள் விரல் கோர்த்து அமர்ந்திருந்தான்.
அவன் பேச்சை கவனித்தாளோ என்னமோ அவனின் அருகாமையை விரும்பினாள்.. மனோ. மெல்ல மெல்ல அவளின் மனமும் சமன்பட்டது. எல்லாவற்றையும் சொற்களால் உஅன்ர்த்திட முடியாது. அதுவும் காதலில் அது சாத்தியமே இல்லையே.. அவனின் உடல்மொழி.. சின்ன அழுத்தத்துடன் தன் விரல்களைப் பிடித்திருக்கும் பாங்கு என எல்லாம் அவளை சமன்படுத்தியது.
நேசன் “மனு… இப்படி எல்லாம் உட்கார்ந்து என்னைப் படுத்தக் கூடாது. நான் ரொம்பக் கவனமா இருக்கேன் உன் விஷயத்தில் சரியா… இந்த ஷிவா பாவம்.. இப்படி கிட்டக் கிட்ட வந்து படுத்தக் கூடாது” என்றான், கொஞ்சம் விளையாட்டுக் குரல்தான் ஆனால், உறுதியாகச் சொன்னான்.
மனோ, வேண்டுமென்றே அவன் முதுகைச் சுற்றி கைப் போட… நேசன் அவளின் கைகளை விளக்கி விட்டு எழுந்து நின்றான். மனோ சிரித்தாள்..
நேசன் “கிளம்பு, கிளம்பு.. கீழப் போ, யாழி தேடுவா உன்னைப் போ” என அவளை அனுப்புவதிலேயேக் குறியாக இருந்தான்.
மனோக்கு இந்த ஷிவாவை அதிகம் பிடித்து.. அவன் தன்னை நெருங்கி இருந்தால் கூட அமைதியாகி இருப்பாள்.. இப்படி அவன் நெளியவும் மனோக்கு ஏனோ விளையாட்டாக இருந்தது.. எழுந்த அவனது முதுகை தொட்டாள்.. நேசன் “மனு… கிளம்பு” என்றான்.
மனு “சரி, ஒரே ஒரு தரவ… ஹக் பண்ணி ஒரே ஒரு கிஸ் பண்ணுங்க போயிடறேன்…” என்றாள்.
நேசன் சிரித்தபடியே “நான் T R ரசிகன் “ என்றான்.
மனோ “ம்.. நான் சில்க்சுமிதா பேன்… “ என சொல்லி அவனை அணைத்தாள்.
நேசன் அணைக்கவில்லை சிரித்தப்படியே நின்றான்.
மனோ “என்ன ஷிவா” என்றாள்.
அவளின் ஷிவா “ம்கூம்… கல்யாணத்துக்கு அப்புறம்தான்.. எல்லாம்… என்னால், யாருக்கும் சங்கடம் வரக் கூடாது. புரியுதா…” என்றவன் அவளை விளக்கி நிறுத்தினான்.
மனோ “ச்சு, அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது. எனக்கு ஷிவா மேல அவ்வ்வ்வ்ளோ லவ்…” என்றாள்.
ஷிவா “போடி… போடி… “ என்றான்.
மனோ மீண்டும் அவனை அணைத்தாள்…”ஷிவா… “ என்றாள். குனிந்து தன்னவளின் முகம் பார்த்தான் நேசன் கண்களில் காதல் வழியத் தன்னை யாசிக்கும் பெண்ணை நேசன் தனக்குள் இறுக்கிக் கொண்டான்… அவள் கேட்டப் படியே, அவள் இதழில் பட்டும் படாமல் முத்தம் ஒன்று வைத்தான்.. பின் மீண்டும், ஒருமுறை அவளின் இதயம் கேட்கும் அளவுக்கு அணைத்து விடுவித்தான் நேசன்.
மனு அதை உணர்ந்து அசையாது நின்றாள் ஒருசில நொடிகள்…
பின் மனு “அத்தைகிட்ட பேசுங்க.. சீக்கிரம் பேசுங்க… பிரச்சனைப் பெருசாகரத்துக்கு முன்னாடி பேசுங்க” என சொல்லி அவனின் கன்னம் நெற்றி.. உதடு என முத்தம் வைத்தாள்..
நேசன் அவளை தள்ளி நிறுத்தி “போடி… போ” என்றான் காதலாக.
மனு “ம்… எங்களுக்கும் நேரம் வரும்.. அப்போ போடாச் சொல்லுவோம்” என்றபடி கீழே இறங்கினாள்.
நேசன் அங்கேயே சிறிது நேரம் நின்றான் ஏதோ அவள் வாசம் அந்த காற்றில் வீசுவதாக ஒரு எண்ணம்.. அதை விட மனதில்லாமல் அங்கேயே நின்றான்.
மனோ, தன்னுடைய லப்டோப் சார்ஜர் எல்லாம் எடுத்துக் கொண்டு, முகம் கழுவி கீழே வந்தாள்.
முகம் தெளிவாக இருந்தது.. சற்று நேரம் முன்பிருந்த கலக்கம் இல்லை இப்போது அவளிடம்..
சேகர், சரியாக வந்துவிட்டார். தன் அத்தானிடம் பேசிவிட்டு, யாழினியுடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
தன் அத்தானிடம் “யாழினிக்கு சீக்கிரம் முடிச்சிடலாம் அத்தான்… மனோக்கு அடுத்து யாழினிக்குதான்..” என சொல்லிக் கொண்டிருந்தார்.
தேவி, வெளியே வரவேயில்லை. கோவம் கோவம் கோவம் மட்டுமே.
சேகர் உள்ளே சென்றார். போகும் போதே ஒரு முடிவோடு உள்ளே போனார்.. இன்று எப்படியும் அக்காவைப் பேச வைத்துவிட வேண்டும் என்ற முடிவோடு உள்ளேப் போனார்.
மனோக்கு, நேரம் நீள நீள சந்தோஷம்… யாழியோடு செஸ் விளையாடத் தொடங்கினாள்.
உள்ளே கிட்செனில் சேகர் “தேவிக்கா…” என தொடங்கினார். “என்ன க்கா, உன் மருமகளுக்கு கல்யாணம் செய்றது உனக்குப் பிடிக்கலையா” என்றார் எடுத்தும்.
தேவி “தப்பு தப்பாப் பேசாத.. எதுக்கு வந்த, பெண்ணை கூட்டிப் போகத் தானே, கிளம்பு.. போ…” என்றார்.
சேகர் “ஆமாம், ஆனா, உன்கிட்டயும் பேசவும்தான் வந்தேன்..” என்றார்.
தேவி ஏதும் சொல்லவில்லை. மசால் தோசை… இன்றைய டிபன். எனவே, தேவையான அளவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார் சுசீலாக்கு.
சேகர் “இங்க வாக்கா…” என அழைத்தார்.
தேவி “என்னடா, அதான் உன் பெண்ணுக்கு கல்யாணம் செய்யனும்ன்னு முடிவுச் செய்திட்டில்ல.. ஏற்பாடுப் பண்ணு. நான் எதுவும் சொல்லமாட்டேன். நீயும் உன் பொண்டாட்டியும் வந்துப் பத்திரிக்கை வைச்சிக் கூப்பிடுங்க, வரோம்… சாப்பிட்டு, வாழ்த்திட்டுக் கிளம்பறோம்… அதானே வேண்டும் உனக்கு, கிளம்பு.. போ… ம்.. வேலையப் பாரு” என்றார் அப்போதும் ஒட்டாமல்.
சேகர் “அக்கா…” என்றார்.
தேவிக்கு கண்ணில் நீர் வந்தது.. “என்ன டா, உங்க அத்தான் இப்படி இருக்கிறதுனால ஏதும் செய்ய முடியாதுன்னு எங்ககிட்ட சொல்லலையா நீ. போட போ.. நீயும் தேவைக்குத்தான் அக்கா அத்தான்னு பேசுவ அப்படிதானே… கிளம்பு… போ” என்றார்.
சேகர் “ஆமாம் இப்போ வந்தவனை எல்லாம் பார்க்கிற… என்னை எங்க நினைக்க நேரமிருக்கு உனக்கு..” என்றார்.
தேவி “அப்படி பேசாத சேகர். அவன் இந்த வீட்டு பையன். நீ சொல்றது எல்லாம் நடந்து முடிந்த விஷயம்.. இதுதான் நிஜம். அதான் பத்திரிகை வை உன் பெண்ணு கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லிட்டேன்னில்ல, கிளம்பு.. போ.. “ என்றார்.
சேகர் அமைதியாக இருந்தார்.
தேவி “என்னடா..” என்றார்.
சேகர் “க்கா, இப்போ என்ன சொல்ல வர…” என்றார்.
“ஒண்ணுமில்ல, நீ கிளம்புன்னுச் சொல்றேன்.” என்றார் அழுத்தமாக.
தேவிக்கு, என்னை நீ விட்டுவிடுவாயா எனற கோவம்.. சேகருக்கு.. அதென்ன அவனை முன்னிறுத்துவது என கோவம். இருவரும் இறங்கி வரத் தயாராக இல்லை. அழகான நீயா நானா சண்டை…
சேகர் பேச்சை மாற்றும் விதமாக “எப்படி வர, திருப்திக்கு… எங்கக் கூட வந்திடு.. எல்லோரும் ஒண்ணாப் போயிடலாம்.” என்றார்.
தேவி “எதுக்கு, நான் நேசன் கூட வந்துக்கிறேன்.. அவன் இருக்கான்.. நான் வந்துக்கிறோம்.. நீ கஷ்ட்டப்பட வேண்டாம்” என்றார்.
சேகருக்கு கோவம், வினையமாகச் சிரித்தபடியே “இத்தனை நாள் நாங்கதான் செய்தோம்.. இப்போ என்ன புதுசா அவன்” என்றார்.
தேவி “ம்ம்ம்.. அதேதான். இத்தனை நாள் நாங்க உனக்கு முக்கியமா தெரிஞ்சோம்.. இப்போ அப்படி இல்லை. இப்பவும் பாரு… நீ தனின்னு காட்டிட்டியே.. அப்புறம் என்ன… வந்துட்டான்… கூட்டிப் போக…” என்றார் சற்று படபடப்பாக… அமர்ந்தார் தேவி ஒரு சேரில்.
சேகர் “என்ன அக்கா பண்ணுது…” என்றார்.
தேவிக்கு ஏதும் சொல்லத் தோன்றவில்லை அமைதியாக இருந்தார். பின் கண்மூடி அமர்ந்துக் கொண்டார்.. தேவிக்கு தம்பியின் முகம் வாடுவது பொறுக்கவில்லைப் போல.. “ஒண்ணுமில்ல BP.. டா” என்றார்.
சேகர் “என்ன பண்றாங்க வீட்டில் எல்லோரும்… உன்னை கவனிக்கிறத விட வேற என்ன வேலை.. வா, ஹோஸ்பிட்டல் போலாம்” என்றார்.
“ம்… நான் வளர்த்த பொண்ணுக்கு மாப்பிள்ளையேப் பார்த்துட்டானாம்.. அதை சொல்லலை யாரும். காலம் போறக் கடைசியில் எனக்கு சேவைச் செய்ய வந்துட்டான்… போடா போ… “ என்றார்.
சேகர் திக்கு முக்காடி போனார். அவருக்கு தெரியும் தன் அக்காவைப் பற்றி.. என்ன ஆனாலும் தன்னை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டாள் எனத் தெரியும். ஆனால் இறங்கிப் பேசினால்… அந்த புதிதாக வந்தவனுக்கு தன் மகளை, திருமணம் செய்யக் கேட்பாள் எனவும் தெரியும்… எனவே ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார் சற்று நேரம் தன் அக்காவைப் பார்த்தபடியே.
தேவி உள்ளே எழுந்து சென்றார்…
தம்பிக்கு இரண்டு தோசை கொண்டு வந்து வைத்தார்… சேகரும் ஏதும் பேசாமல் உண்டார்.
பின் வெளியே சென்றார்.. அத்தானுடன் பேசியபடியே இருந்தார் மகள் கிளம்பும் வரை. மனோ உண்டு வரவும் கிம்பினார்கள் இருவரும்.
அதுவரை நேசன் கீழே வரவில்லை.
அடுத்த நான்கு நாட்களில் தேன்மொழியின் வளைகாப்பு இனிதாக நடந்தது.
நேசன் வரவில்லை என்றான். கார்த்தி, என் அத்தான் சார்பாக நீதான் வர வேண்டும் என அன்புக் கட்டளை இட்டு நேசனை அழைத்துச் சென்றார்.
யாழினியை, மனோ குடும்பத்துடன் அனுப்பினார் தேவி. யாழினி அண்ணைனை விட்டுப் போகமாட்டேன் என கொஞ்சம் முரண்டினாள்… போடி… போ.. என கொஞ்சம் அதட்டி அனுப்பினார்.
நேசன் செல்லுவதால் உதயகுமார் வரவில்லை. அலுவலகத்தை கவனித்துக் கொண்டார்.
எனவே, மீனாட்சி, தேவி, உமா… என பெண்கள் படையை சுமந்து கொண்டு, நேசனின் கார் திருப்தி சென்று வந்தது.