சில்லென புது மழைத்துளி!

8

காலையில் சுபிக்ஷா, கருணா சொன்னது போல தன் அப்பா அம்மாவின் டீட்டைய்ல்ஸ் கொண்ட கோப்பினை.. மகன் எழுந்ததும்.. அவனிடம் கொடுத்து அனுப்பினாள். போன் செய்து கருணாவிடம் விவரமும் சொல்லினாள். அருணகிரி வாங்கிக் கொண்டு.. கருணாவின் அறையில் வைத்தார்.

சாரதா இன்று தன் அம்மா வீடு வருவதாக இருந்தது.. பிரகாஷூக்கு வேலை இருப்பதால் வரவில்லை, அத்தோடு குருவின் பிறந்தநாளுக்கு சேர்த்து வருவதாக சொல்லிவிட்டாள் அன்னையிடம்.

கருணா இன்னமும் முடிவு சொல்லவில்லை.. கருணா இன்னமும் பிள்ளையிடம் பேசவில்லை.. பேசுவதா என யோசனைதான். குழ்ந்தையிடம் இதை கேட்டு செய்யலாமா இல்லை நாமே முடிவேடுத்திடலாமா என யோசனைதான் நேற்று இரவெல்லாம். அவனிற்கு பிள்ளையை கவனிக்கவே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முடிவு உறுதியாக.. சற்று நேரம் கண் அசந்தான்.

பிராக்ஷிடம், இன்று மீண்டும் சாரதாவை அழைத்தான் செந்தூரன். சாரதாவிற்கு அந்த அழைப்பினை ஏற்க பிடிக்கவில்லை.

பிரகாஷ், கருணாவிற்கு அழைத்தான் அடுத்து. கருணா அழைப்பினை ஏற்று.. தானும் இன்னமும் யோசிக்கவில்லை என்றான். ஆனால், அத்தோடு விடாமல்.. தன் தங்கையிடம் போனினை தருமாறு கூறினான். பிரகாஷ் “கருணா, நீ பண்ணிக்கோ.. நான் வெளியே இருக்கேன்” என சொல்லி வைத்துவிட்டான்.

அருணகிரிதான் இன்று பேரனை பார்த்துக் கொண்டார். குரு, உடை எடுக்க பாட்டி ஸ்கூல் விட்டு வந்ததும் போகலாம்.. என்று கூறினார். குருவிற்கு, இது பெரிதான விஷயமல்ல.. டிவியில் எதோ படம் பார்த்துக் கொண்டு அமர்ந்தான். பெரியவர் எதோ புத்தகத்தில் கவனமாகினார்.

கருணா, இன்று தாமதமாகத்தான் கிளம்பினான்.. மகன் டிவியில் மும்முரமாக இருப்பதை பார்த்தவன் “குரு.. வெளிய போலாமா” என்றான்.. மகனிடம்.

மகன் கண்களை டிவியிலிருந்து எடுக்கவில்லை.. “எங்க” என்றான், எந்த அவசரமும் காட்டாமல்.

கருணா, மகனின் அருகே அமர்ந்தான்.. “ஷாப்பிங் போகலாம்” என்றான்.

இப்போதுதான் திரும்பினான் குரு “எங்க போலாம்.. எனக்கு ஷூ வேணும் கிரிகெட் விளையாட” என்றான், அசால்ட்டாக.

கருணா “ம்.. கிளம்பி வா” என்றான், தன் நெற்றி முடியை இரு கைகளிலும் மாறி மாறி கோதிக் கொண்டே எழுந்தான் பிள்ளை. 

தந்தை அவனையே பார்த்தான்.. தன் இடுப்பளவுதான் இருந்தான்.. ‘எத்தனை ஆட்டிட்டியூட் காட்டான் பாரு.. ஏழு வயசில்..’ என எண்ணி கொண்டு “வரும் போது ஹேர் கட் பண்ணிட்டு வரலாம்..” என்றான்.

குரு “விசாகன் மம்மியும் அதான் சொன்னாங்க..” என சொல்லிக் கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டான்.

தன் தந்தை எதோ புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் தானும் பிள்ளையும் வெளியே செல்லுவதை சொன்னான். 

தலையசைத்து கேட்டுக் கொண்டவர் “அப்படியே, சாரதா உன்கிட்ட போசனும்ன்னு சொன்னால் ப்பா.. நீ என்ன முடிவேடுக்குரீயோ சொல்லிடேன். அவங்க, குருவின் பிறந்தநாள் என ஏதாவது கேட்டிருக்கலாம்” என்றார்.

கருணா “ம்..” என்றான் வேறு என்ன சொல்லுவது என தெரியவில்லை. அருணகிரிக்கு அதிருப்தியானது.. மகனின் அமைதியில். ஏதும் பேசாமல் தன் வேலையை பார்த்தார்.

இப்போது, மகன் உடைமாற்றி வரவும் இருவரும் கிளம்பினர். அருணகிரிக்கு, இந்த மாற்றம் நிம்மதியை தந்தது.

முதலில் ஒரு ஸ்போர்ட்ஸ் ஷாப் தான் சென்றனர். குருவிற்கு ஷூ வேண்டும் என தெரிந்தது. ஆனால், அந்த ஷூ எப்படி இருக்கும் என தெரியாதே.. விழித்துக் கொண்டு அங்கே இருந்த பொருட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே நின்றான் குழந்தை.. தந்தை “இங்க வா..” என சொல்லி அமர்த்தி.. அவனுக்கான ஷூக்களை எடுத்து தானாகவே காலில் அணிவித்து அளவு பார்த்து “ஓடு..” என இரண்டு மூன்று ஷூக்களை அணிவித்து, அவனுக்கு கச்சிதமாக பொருந்தியதை.. வாங்கினான்.

பின் தந்தை “பேட் இருக்காடா..” என சொல்லிக் கொண்டே அங்கே செல்ல.

குரு “ஆன்ட்டி பேட் வாங்கிக் கொடுக்கிறேன்னு சொன்னாங்க..” என்றான்.

கருணா “யாருடா..” என விவரம் கேட்க்க.. சுபி சொன்னால் என தெரிந்தது..  ‘அதான் நேற்று பேசிட்டு இருந்தாங்க போல’ என எண்ணிக் கொண்டான்.

கருணா “குரு , பேட் எல்லாம்  அப்படி வாங்க கூடாது. உன் ஹைட் வெயிட் பார்த்துதான் வாங்கணும். சரி, முதலில் கோச்சிங்கிளாஸ் சேர்ந்துட்டு, அப்புறம் இதெல்லாம் வாங்கிக்கலாம்.. என்ன ஒகேவா..” என்றான் மகனிடம்.

இப்போது தந்தை சொல்லுவதை புரிந்தும் புரியாத நிலையில் முதல்முறை குரு தன் தந்தையை குழந்தையாக ஏறிட்டான். கருணா, மகனை புரிந்துக் கொண்டு புருவம் உயர்த்தி “ஓகே.. போலாமா” என்றான்.

குரு காரில் ஏறியதும் பரபரப்பாக இத்தனை நேரமிருந்த அழுத்தத்தை எல்லாம் கலைத்துக் கொண்டு “அப்பா, என்னை கோச்சிங்கில் சேர்த்துவிடுவீங்களா” என்றான் ஆர்வமாக,

கருணா திரும்பி பார்க்கவில்லை மகனை.. சாலையில் கவனம் வைத்துக் கொண்டே “நீ எப்படி விளையாடுறேன்னு பார்த்துட்டு.. உனக்கு இண்ரஸ்ட் இருந்தால் சேர்க்கிறேன்” என்றான்.

குரு “அப்பா, நான் இப்போ ஸ்கூலில் போயிட்டுத்தான் இருக்கேன். ஆனால், ஜஸ்ட் ரன்னிங் மட்டும்தான் கொடுக்கிறாங்க..” என்றான்.

கருணா “ம்.. அதுவும் வேண்டுமில்ல” என்றான்.

குரு “ப்பா, எனக்கு பேட்டிங் வேண்டும்” என்றான்.

கருணா, மகனை இப்போது திரும்பி பார்த்து புன்னகைத்தான்.. “எட்டு வயது இப்போதானே ஆக போகுது. இனிதான் கொடுப்பாங்க.. நீ ப்ராக்டீஸ் பண்ணலாம்” என்றான்.

குரு “நான் நல்லா பேட் பண்ணுவேன்” என்றான்.

தந்தை “ம்.. குட்” என்றான்.

சின்ன அமைதி.

இப்போது ஆர்வமாக தந்தையை பார்த்தான்.. எதோ கேட்க்க வந்தான்.. குரு. மீண்டும் நிமிர்ந்து பார்த்தான்.. தந்தை தன்னை கவனிப்பதை உணர்ந்தவன் அமைதியாகிவிட்டான். 

இதை உணர்ந்த கருணா “என்ன குரு” என்றான்.

குரு “நான், நெக்ஸ்ட் இயர் இங்கேயே ஸ்கூல் சேர்ந்துக்க ஓகேவா.. ப்பா” என்றான்.

கருணா “ம்.. இனி நீ அழமாடல்ல.. யாரையும் தேடமாட்டல்ல” என்றான் விளையாட்டு போன்றதான குரலில்.

குரு, தந்தையை குறுகுறுவென பார்த்தான்.. எதோ கேட்க்க துடித்தன குழந்தையின் உதடுகள்.. 

தந்தை “என்ன.. பதிலே காணோம்” என்றான்.

அதற்குள் மால் வந்துவிட.. கருணா பார்கிங் சென்றான்.

குரு “அம்மாவை பற்றியா” என்றான், தயங்கங்களை மீறிக் கொண்டு கேட்டான் பிள்ளை.

கருணா மகனை திரும்பி பார்த்தான்.. மனதில் அதிர்வு.. ஆனால் அதை பிள்ளைக்கு காட்ட கூடாது என மறைத்தான் தந்தை “ம்..” என்றான் அழுத்தமாக.

குரு “எ..னக்கு.. டௌவ்ட், அம்மா எங்க ப்பா” என்றான்.

கருணா பிள்ளையை பார்த்தான். கண்ணில் கண்ணீர் இப்போவோ அப்பாவோ என நின்றது.. குழந்தைக்கு. தந்தை  “ஏன் தெரியாதா டா.. உன் அத்தை சொல்லலையா” என்றான், குரலில் சின்ன மாறுதல் இல்லை.. நிதானம்தான்.

குரு “அவங்களுக்கு உடம்பு சரியில்லை அதனால், என்னை பார்த்துக்க முடியாதுன்னு ஹாஸ்ப்பிட்டல் போயிட்டாங்களாம்.. அத்தை சொன்னாங்க. ஆனால், பாட்டி சொல்றாங்க, அவங்க இறந்துட்டாங்கன்னு. தாத்தாகிட்ட கேட்டால் பாரின் போயிருக்காங்க.. அங்கதான் வேலை பார்க்குறாங்க, அவங்க வருவாங்க உன் லீவ்குன்னு சொல்றார். அம்மா.. அப்பா” என்றான் கேள்வியோடு.

ஹன்ட்பிரேக் போட்டு காரினை நிறுத்திவிட்டு.. மகனை நோக்கி கருணா மிக சாதரணமாக.. கைநீட்டி தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.. “அப்பா உண்மையை சொல்லவா..” என்றான், மகனின் கண்களை பார்த்து.

இருவருக்கும் இடம் போதவில்லை.. காரில். மகனை தன் நெஞ்சில் கட்டிக் கொண்டு அப்படியே எழுந்து வெளியே வந்தான், கருணா. 

மகனை காரின் மேல் அனாயாசமாக தூக்கி அமரவைத்தான், மகனின் கண்களை பார்த்து “உன் அம்மாவிற்கு, அப்பா” என சொல்லி, தன்னை சுட்டிக்காட்டிக் கொண்டவன் “நிறைய லவ் கொடுக்கலை.. அதனால, அம்மாக்கு என்னை பிடிக்கலை. அம்மா வேற கல்யாணம் செய்துக்கிட்டாங்க” என்றான்.

குருவின் கண்கள் அழுதது.. ஒரு குழப்பநிலை “ம்மாக்கு, உங்களை பிடிக்கலையா.. வர மாட்டாங்களா..” என்றான்.

தந்தை கண்களை துடைத்துவிட்டான்.. “ம்ம்.. உனக்கு, அவங்களை பார்க்கனுமா” என்றான்.

குரு “என்னை பிடிக்குமா பிடிக்காதா” என்றான் எதிர் கேள்வியாக மகன்.

கருணா லேசாக புன்னகைத்தான். காரில் ஊன்றியிருந்த தன் கைகளை நெஞ்சில் கட்டிக் கொண்டு “அது அவங்ககிட்டதான் கேட்க்கனும். அதனால், உன் அம்மா.. இங்கதான் இருக்கா.. அவளுக்கு ஒன்னுமாகவில்லை. நல்லாத்தான் இருக்கா..” என்றான்.

குரு குழம்பிவிட்டான்.. என்ன கேட்பது என குழந்தைக்கு தெரியவில்லை.

கருணா “அப்புறம், உன்கிட்ட அப்பா ஒன்று கேட்க்கனும்.. உன்னை அப்பா, எப்படி பார்த்துக்கணும்ன்னு தெரியுது. ஆனால், ஒன்னு சொல்லு.. உனக்கு ‘வேற’ அம்மா வேணுமா” என்றான்.