குரு, விசாகனின் வீட்டில்தான் இருந்தான்.. சுபியின் போனிலிருந்து தந்தைக்கு அழைத்தான்.. அடிக்கடி சுபியின் கிளினிக் சென்றான். சிலநேரம் சுபி “விசா குரு” என சேர்ந்தே இருவரையும் அழைக்கும் அளவிற்கு..  ஒன்றாகவே இருந்தனர். ஆக, மூவரும் எங்கே சென்றாலும் சேர்ந்தே சென்றனர்.. ஒருநாள் ஹோட்டல் சென்றனர்.. ஒருநாள் குருவின் கிரிக்கெட் கிளாஸ் சென்று அவனை கூட்டிக் கொண்டு  வந்தாள் சுபி, இப்படி நிறைய.. சேர்ந்தே இருந்தனர்.

கரண் வீடு வந்தான், சுற்றுலா முடிந்து. முதலில் சுபியைதான் அழைத்தான். மாலைநேரம்.. சுபி தன் கிளினிக்’கில் இருந்தாள்.. அவளுக்கு, குரு நினைவு வந்தது.. எடுக்க தோன்றவில்லை.. ‘நீ நல்ல பதில் சொல்லு’ என சொல்லி சென்றது வேறு நினைவு வர.. அழைப்பினை ஏற்கவில்லை.

கரண் விடுவதாக இல்லை.

சங்கீதாவின் பிள்ளையை பார்க்கவென அவர்களின் வீடு சென்றான். சங்கீதா “வா.. மல்டி மில்லினியர்.. என் பிள்ளையை பார்க்க உள்ளூரிலிருந்து வர இவ்வள்ளவு நாளா?” என்றாள்.. நட்பின் காரநெடி இந்த நேரம். 

சங்கீதாவின் பேச்சுகள் எப்போதும் இப்படிதான் ‘எனக்கு தெரியும்..’ ‘முதலில் நான் சொல்லுவதை கேள்’ என்கிற அதிகார தொனிதான் எப்போதும். முதலில் பிறந்ததால் அப்படி வந்துவிட்டளா என தெரியவில்லை.

கார்த்திக் ஒரு மீட்டிங் முடித்து வந்தார்.. கார்த்திக் “கீதா என்ன இது..” என புன்னகையோடு மனையாளை கடிந்துக் கொண்டே “வாங்க கரண்” என வரவேற்றார்.

கரண் புன்னகையோடு “எப்படி இருக்கீங்க” என்றான்.. அதன்பின் பேச்சுகள் மெதுவாக தொடங்கியது. குழந்தை விழித்துக் கொள்ள.. கரணின் கைகளில் கொடுத்தாள் சங்கீதா.. கரண், மோதிரம் வாங்கி வந்திருந்தான். பிள்ளைக்கு அணிவித்தான். சிணுங்க தொடங்கவும் குழந்தையை சங்கீதாவிடம் கொடுத்தான். சங்கீதா உள்ளே சென்றாள்.

மாலை சிற்றுண்டி என சுபியின் அன்னைதான் கொண்டு வந்து கரணின் கைகளில் கொடுத்தார்.

சங்கீதாவின் மாமியார் மாமனார் ஊருக்கு சென்றுவிட்டனர். மகளுக்கு துணையாக வந்திருந்தனர் இங்கே. கரண் “எப்படி இருக்கீங்க ஆன்ட்டி” என அவரிடம் சற்று நேரம் பேச தொடங்கினான்.

மூவரும் பேசிக் கொண்டிருக்க.. மாசிலாமணி வந்தார் அவரும் கரணை வரவேற்று அவர்களோடு பேச்சில் கலந்தார்.

சங்கீதா பிள்ளையை தூங்க வைத்துவிட்டு வந்தாள்.. பெரியவர்கள் போன் பேச என செல்ல.. கரண் லாப்டாப் எடுத்து பிள்ளை பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார்.

கரண் “சங்கி, உன்கிட்ட ஒன்னு கேட்கனும்..” என்றான் ஹாலில் அமர்ந்துக் கொண்டு.

சங்கீதா “என்ன கரண்” என சாதரணமாக வினவினாள்.

கரணோ “சுபியை நான் கல்யாணம் செய்துக்கனும்ன்னு நினைக்கிறேன்” என்றான், சத்தமே இல்லாமல்.

சங்கீதா சுற்றும் முற்றும் பார்த்தாள்.. “எ..ன்ன” என்றாள்.

கரண் மீண்டும் உதடுகள் பிரிந்து.. அசைகிறதா.. அவன் பேசுகிறானா  என தெரியவில்லை.. ஆனால் வார்த்தைகள் மட்டும் ஸ்பஷ்ட்டமாக வந்தது “எனக்கு சுபியை கல்யாணம் செய்துக்கணும், நான் அவளை விசாகனை பார்த்துக்கிறேன்” என்றான்.

சங்கீதா “என்ன டா இது, அவ.. அவள் சரி சொல்லிவிட்டளா.. அதான், வீரா வேண்டாம்ன்னு சொல்றாளா.. இதானா காரணம். நான்கூட” என தொடங்க.

கரண் “சங்கி, உன் தங்கையை பற்றி உனக்கு தெரியாதா.. இரு இரு.. அவ, என்னை ப்ரென்ட்டா மட்டும்தான் பார்க்கிறா.. என்னால்தான் அப்படி முடியலை” என்றான்.

சங்கீதா “டேய், உனக்கு ஆபரேஷன்.. அதனாலதானே” என தொடங்க.. இப்போது முறைத்தான் தன் தோழியை.. பின் தன்னை இயல்பாக்கிக் கொள்ள தன் கையில் அணிந்திருந்த வாட்ச்’சில் நேரம் பார்த்தான்.. அதனை சரி செய்பவன் போல.. “அதனால்தான், அவ.. க்கும்.. அவ போய்ட்டான்னு  நீயும் நினைக்கிறீயா.. இல்ல, உன் தங்கையை என்னால்.. க்கும் ” என்றவன், எழுந்தான்..

சங்கீதா அவசரமாக “இரு டா.. டேய்.. இரு” என்றவள், அவசரமாக சத்தம் குறைத்து கவனமாக “என்னங்க.. கார்த்திக்..” என அழைத்தாள்.

கரண் “எதுக்கு சங்கி, அவரை கூப்பிடுற” என நெற்றியில் விரல் வைத்து நீவிக் கொண்டே கேட்டான்.

அதற்குள் கார்த்திக் அறையிலிருந்து வெளியே வந்திருந்தார்.. சங்கீதா “சுபி.. க்கும், கார்த்திக்.. கரண் ஏதோ சொல்றான்.. நீங்க கேளுங்க..” என்றாள்.

கரண் அந்தபக்கம் நகர்ந்து சென்றான்.. சங்கீதா “சொல்லு கரண்..” என்றாள்.

கரண் கொஞ்சம் இல்யபாகிக் கொண்டு.. “சுபியை மேரேஜ் பண்ணிக்கணும்.. அவளையும் விசாகனையும் பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறேன்.” என்றான் திடமான குரலில்.

கார்த்திக் கண்களில் அதிர்ச்சி ஆச்சர்யம்.. “சுபி” என்றார்.

கரண்.. தன் தோழியை பார்க்க அவளோ “சொல்லு” என்றாள். 

கரண் “அவ.. அவள் என்னை ப்ரென்ட் மாதிரிதான் பார்க்குறா. சொன்னேன்.. ஆனால், ஒத்துவராதுன்னு சொல்லி.. சொல்லிட்டா. என்கிட்டே பேசுவதேயில்ல இப்போவெல்லாம்..” என்றான். சற்று இடைவெளி விட்டு.. “ஆனால், க்கும்.. மே பீ.. சோஷியல் ப்ரஷர்’ன்னு தோணும். எ.. எனக்கே.. டைம் எடுத்தது.. அவளுக்கு இது ஈசி இல்ல. இப்போ வேற, அந்த வீரா பிரச்சனை.. மாமனார் விசாகனை தூக்கிட்டு போய்.. என நிறைய அவளுக்கு டென்ஷன்.. கண்டிப்பா ஒத்துக்க மாட்டாள். ரொம்ப கஷ்ட்டம்தான்.. ஆனால், என்னால்தான் அவளை பார்த்துக்க முடியும்..” என சொல்லி லேசாக புன்னகைத்தான்.. அது சங்கீதாவின் கண்களுக்கு தெரிந்ததா தெரியவில்லையா.. என நாம் யோசிக்கும் போது.. கார்த்திக்’கின் கண்கள் அதை கண்டுக் கொண்டது.

சங்கீதா “ம்.. பாருங்களேன்.. சுபி நம்மகிட்ட சொல்லவேயில்ல.. அவளுக்கு வேல்யூ ஏறிட்டே போது.. ப்ர்ஸ்ட் மேரேஜ்ல கூட இவ்வளவு” என எதோ சொல்ல வர..  ஆண்கள் இருவரும் முறைத்தார். சங்கீதா புன்னகையோடு “சந்தோஷம்தான் எனக்கு.. எங்களுக்கு. நீயோ மல்டி மில்லினியர்” என்றாள் உதடு பிதுக்கி.

கரண் “சங்கீதா.. சீரியஸ்..” என்றான்.

கார்த்திக் முறைத்தார் மனையாளை.. கரண் அமர்ந்தான் இப்போதுதான்.. இதமான ஆழ்ந்த மூச்சு அவனிடமிருந்து. தண்ணீர் எடுத்து பருகினான்.. “நான் கிளம்புகிறேன், அங்கிள் ஆன்ட்டி கிட்ட சொல்லிடு சங்கி, வரேன் கார்த்திக்” என விடைபெற்று கிளம்பினான்.

அன்று இரவு கார்த்திக்’கு அழைத்தாள் சுபி.

கார்த்திக் “ஹெலோ” என்க.

சுபி “என்ன இது.. எனக்கு எதுக்கு இதெல்லாம்” என்றாள்.

கரண் “இதென்ன.. டூர் போனால் எல்லோரும் வாங்கி வருவதுதானே” என்றான்.

சுபி “அது உங்க வீட்டு ஆளுங்களுக்கு.. எனக்கு எதுக்கு” என்றான்.

கரண் “எல்லாத்துக்கும் ஒரு டிஃபெனேஷன் வேணுமா.. என்  இது.. அவ்வளவுதான். ஏன் நீ பெர்ப்யூம் யூஸ் பண்ணமாட்டியா.. பொய் சொல்ல கூடாது” என்றான்.

சுபி “கரண்..” என பற்களை கடித்தாள் பெண். “நான் முன்னமே சொல்லிட்டேன். இது சரியில்லைன்னு.. இதுக்கு மேல.. என்னால் முடியாது. நான் யாரிடமேனும் சொல்லிடுவேன். எனக்கு வேலை ஓடலை.. நீ கால் பண்ணாதீங்க இனிமேல்..” என்றாள்.

அவனோ “சுபிம்மா.. கம்ப்ளைன்ட் பண்ணுவீயா” பயமாத்தான் இருக்கு.” என்றான் புன்னகையோடு. பின் “ஆனால், எனக்கு உன்னை தனியா பார்க்க முடியலை.. நீ டைம் எடுத்துக்கோ.. நீ என்னை மேரேஜ் செய்துக்கவில்லை என்றால் கூட கண்டிப்பா நான்  உன்மேல் கேர் எடுப்பேன். அஹ.. கொஞ்சம் யோசி.. சிலநேரத்தில், இரண்டாம் வாய்ப்பும் நல்லதாகவே இருக்கும்.. அதுதான் கூடவே வருமாக கூட இருக்கும். இது தவறில்ல.. குற்றமில்ல.. பெருவழி பாதையில்.. உனக்காக நீளும் மற்றொரு கை. புரிஞ்சிக்கோ.. இது நேசம்தான். எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாத.. அதேநேரம்  எல்லா நேரத்திலும் உடன்வர தயாரானவனின்.. நேசம்.. புது நேசம்தான்.. க்கும்..” என நிறுத்தினான்.

சுபியிடமிருந்து பதிலே இல்லை.. ஸ்தம்பித்திருந்தாள்.

“விழிகளில் ஒரு வானவில்..

இமைகளை தொட்டு பேசுதே..

இது என்ன புது வானிலை..

வெயில் மழை தரும்..” என சைந்தவி உருகிக் கொண்டிருந்தார்.. டிவியில்.

கரண் அழைப்பினை துண்டித்துவிட்டான்.

சுபி.. அதை தாமதமாகத்தான் உணர்ந்தாள்.

பத்துநிமிடம் சென்று.. ஒரு செய்தி கரணுக்கு அனுப்பினாள் “டைலாக் நல்லா இருக்கு. இன்ஸ்டா.. யூடியூப்’ல.. பிக்கப் லைன் போல.. தேங்க்ஸ் டூ. ஆனால், வேண்டாம் கரண். என்னிடம் நெருங்காத” என அனுப்பியிருந்தாள்.