வீரா காத்திருந்தான், சுபியும் தன் பெரியப்பாவும் வரும்வரை. இப்போது இருவரும் வந்தனர். சுபி தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
வீரா பெரியப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவரோ ஏதும் பேசவில்லை யோசனையில் இருந்தார்.
மறுநாள் வீரா நேரமாக எழுந்துக் கொண்டான்.. விசாகனை பள்ளிக்கு நானே விட்டு வருவேன் என்றான். சுபி பேசவேயில்லை யாரிடமும். வினு “வேண்டாம் வீரா, அவ பார்த்துப்பா.. நீ சாப்பிடு வா” என தன்மையாகவே சுபியின் சார்ப்பாக பேசினாள்.
ஆனால், வீரா கேட்கவேயில்லை.. “ரெஸ்ட் எடுக்கட்டுமே, நான் இருக்கேனே போறேனே” என்றான்.
சுபியை பார்த்தாள் வினு. சுபி தன் மாமனாரை பார்த்தாள். அவரோ ஏதும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டார்.
நேற்று இரவு காரில் வரும் போதே பேசியிருந்தார் மருமகளிடம் “முன்னபோல காலம் இல்லைம்மா.. கண்டிப்பா உனக்கும் உன் மகனுக்கும் துணை வேணும், மனசில் வைச்சிக்கோ.. யோசிம்மா. நம்ம பையனாக இருந்தால்.. நம்ம பேச்சினை கேட்டுட்டு இருப்பான். புரிஞ்சிக்கணும் நீ” என்றார்.. அவருக்கு மருமகள் கண்ணெதிரே இருக்கவேண்டும்.. பாதுகாப்பாக இருக்க வேண்டும்.. பேரனுக்கு அந்த பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.. சின்ன பெண்.. மாசிலாமணி பார்த்து மறுதிருமணம் என சொல்லி.. வேறு ஏற்பாடு செய்துவிட்டால்.. பேரன் பாவம். நம்ம குடும்பமாக இருந்துவிட்டால் நல்லது என பல யோசனை. இருக்கத்தானே செய்யும் பெரியவர்களுக்கு.
இப்போது சுபிக்கு கோவமே, ‘முடியாது’ என சொல்லும் போது பெரியவர் ஏன் கேட்கவில்லை என கோவம். வேகமாக சுபி “வீரா, இவன் என் பையன். நான் பார்த்துக்கிறேன். நீங்க என் மாமனாரின் சொந்தம், வந்தீங்களா.. சாப்பீட்டீங்களா கிளம்புங்க..” என சொல்ல சொல்ல மாமனார் “சுபிம்மா” என்றார் அதட்டலாக.
சுபிக்கு என்ன பேசுவது என தெரியவில்லை.. அமைதியாக மகனை கையில் பிடித்துக் கொண்டு கிளம்பினாள்.
வீரா, ஏதும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டான்.
லக்ஷ்மிகாந்தனின் சித்தப்பா பையன் வீரா. திருமணத்திற்கு பார்த்துக் கொண்டிருந்தனர். பெரிதாக படிக்கவில்லை. இவர்கள் துணிகடையில்தான் வேலை பார்க்கிறார். வீராவின் பெற்றோர் எல்லோரும் வேலை.. மகன் இப்படி ஆகிவிட்டானே என கவலை. இப்போது, சுபியை கட்டிக் கொண்டால்.. கடையில் பங்கு கிடைக்கும்.. வேலையும் இருக்கும் என கணக்கு போட்டு.. ஒன்றும் சொல்வதில் வீராவின் எண்ணத்திற்கு. வீராவிற்கு, இந்த எண்ணம் பெரியப்பாவின் தூண்டுத்தளால்தான் வந்தது என சொல்லவும் வேண்டுமோ.
லக்ஷ்மிகாந்தன் இறந்த முதல்வருட திவசத்தின் போதே, சுபியின் மாமனார் இதை சொல்லிவிட்டார் ஜாடைமாடையாக. எங்க மருமகள் எங்கள் பொறுப்பு என.. ஒருமாதிரி கட்டளையாகவே சொல்லிவிட்டார்.
கணவன் இறந்து மூன்றுமாதங்கள் அங்கேதான் இருந்தாள் பெண். அதன்பிறகு, தன்னைத்தானே தேற்றிக் கொண்டு.. நிமிரும் போது.. மாமனார் நீ கடையில் இரும்மா.. நீ இங்கேயே இரு என்றார். சுபிக்கு நாட்கள் செல்ல செல்ல பிடிக்கவில்லை. என்னமோ எல்லோரும் தன்னை காக்கிறேன் என அதிக கவனம்.. அதிக அக்கறை.. அதிக பாசம்.. என தன்னை ஏதும் செய்ய விடுவதில்லை. அத்தோடு வீரா அவள் எங்கு போனாலும்.. வந்தாலும்.. கூடவே பிள்ளையை வைத்துக் கொண்டு நிற்க என.. என்னமோ தன்னை சுற்றி எதோ ஒருமாதிரி விளங்கு இருப்பதை உணர்ந்தாள் பெண்.
சென்னை செல்ல வேண்டும் என்றாள் சுபி.. இன்னும் அதிகமாக கவனித்துக் கொண்டனர் அவளையும் பிள்ளையையும். என்ன வேண்டுமோ செய்தனர்.. ஆனால், பெற்றோர் வீட்டிற்கு அனுப்பவில்லை.
விசாகன் இரண்டு வயதை நெருங்கும் நேரம் பிள்ளைக்கு டெங்கு வீவர். இங்கே வைத்தியம் பார்க்கத்தான் மாமனார் எல்லா செய்தார்.
சுபி, அழுது.. சத்தம் போட்டு.. கத்தி சண்டையிட்டு.. என பலவையாக போராடி ‘என் பிள்ளையோடு, நான் எங்க வீட்டிற்கு சென்றுதான் வைத்தியம் பார்ப்பேன்’ என போராடி சென்னை வந்தாள்.
லக்ஷ்மிகாந்தனின் அண்ணனுக்கு, வினு சொல்லி புரியவைத்தாள்.. எதற்கு அவளை இப்படி எதோ ஜெயிலில் இருப்பது போல வைச்சிருக்கீங்க.. என்ன பிரச்சனை உங்களுக்கு.. அவள் மனசு போல வாழட்டுமே.. என்ன இருக்கு அவளுக்கு இங்கேன்னு.. அடைத்து வைக்கிறீங்க.. என கணவனிடம் சண்டையிட்டாள். அப்போதுதான் புரிந்தது.. சுபிக்கு தேவை மனநிம்மதி மட்டுமே.. இப்போது அவளிடம் நாங்கள் எங்களின் அன்பு ஆளுமையை காட்ட கூடாது என புரிந்தது போல.. தந்தையிடம் பேசி.. அவளை சென்னை அனுப்பினான் உடனேயே.
அதன்பிறகு, சுபி அந்த பாசசிறையில் கட்டுபடுவதேயில்லை. அவர்களுடையதும் அன்புதான்.. மகன் இறந்துவிட்டான் விபத்தில்.. பின் அவனின் மனைவிக்கும் மகனுக்கும் தார்மீக பொறுப்பேற்க வேண்டியது நாங்கள்தானே என்ற கடமை அவர்களுக்கு. ஆனால், அந்த கடமையும் பாசமும் அவளை அழுத்தி அடக்கி மூச்சுமுட்ட வைப்பதாக அவளிற்கு தோன்றுகிறது. சுதந்திரமாக சிந்திக்கும் பெண்ணுக்கு.. இந்தமுறை பிடிக்கவில்லை, அதனால் வந்துவிட்டாள். அதன்பிறகு, அங்கே செல்லவில்லை.. ஏதேனும் விழா என்றால் சென்றுவிட்டு வந்துவிடுவாள்.
இப்போது சுபி, கிளம்பியதும் வீரா மேலே சென்று கிளம்பினான். கடகடவென கீழே வந்தான்.
சுபியின் மாமனார் மேலே செல்ல.. வீரா கீழிறங்கினான். அவர் “என்ன அப்பா, எங்க கிளம்பிட்ட” என்றார்.
வீரா “பெரியப்பா நான் ஊருக்கு கிளம்பறேன். நீங்க பொறுமையா வாங்க” என்றான்.
என்ன நினைத்தாரோ “இருப்பா, நானும் வரேன்” என்றார்.
இருவரும் கிளம்பிவர, சுபியும் மகனை பள்ளி விட்டு, தயாராகி வந்தாள்.. மாமனாரை பார்த்தவள் “வாங்க சாப்பிடலாம் மாமா” என்றாள்.
மாமனார் கோவமாகவே அமர்ந்து உண்டார்.. வீராவும் அப்படியே. சுபி என்ன ஏதென கேட்டுக் கொள்ளவில்லை.
மாமனார் “நாங்க கிளம்புகிறோம் சுபி, ஜாக்கிரதையா இரு” என்றவர்.. எப்போதும் கொடுக்கும் பணம் ஏதும் கொடுக்கவில்லை. அமைதியாக கிளம்பிவிட்டார்.
சுபியும் ‘ஏன் மாமா உடனே கிளம்புறீங்க, இருங்கள்’ என ஏதும் சொல்லவில்லை.
வினுவிடம் சொல்லி சென்றார் “உன் புருஷனை வந்து கூட்டிட்டி போக சொல்லு உன்னை. நாங்கள் காரெடுத்து போறோம்” என.
வினு சிரித்துக் கொண்டாள்.. என்னமோ இவர் வேறு எங்கோ போவது போல சொல்கிறார் என.
சுபிக்கு, சங்கடமாகதான் இருந்தது.
வினுதான் “மாமா அப்படிதான், அத்தை போயிட்டதிலிருந்து நம்மை யாரும் மதிக்கலையோ.. என எண்ணம், வீரா கூடவே இருக்கானில்ல.. அவனுக்கு நல்லது செய்யனும்ன்னு எண்ணம். அதுவும் சின்ன மாமா வீட்டில் கொஞ்சம் நெருக்கடி தராங்க போல.. வீராவிற்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. வேலையில்லை என. அதில், இவருக்கு நிறைய யோசனை.. ஏதாவது இப்படிதான் ஒன்னுகிடக்க ஒன்னு செய்கிறார். நீ அவரை ஏதும் தப்பா நினைக்காத விடு பார்த்துக்கலாம்.. ” என தேற்றினாள்.
சுபி, சென்டர் கிளம்பினாள்.
மறுநாள் இரவு சுபிக்கு, சங்கீதா அழைத்து அம்மா அப்பா நல்லபடியா வந்து சேர்ந்தனர் என்றாள். எல்லோரும் வீடியோ காலில் பேசினார். சங்கீதாவின் கணவர் கார்த்திக் “சுபிம்மா.. உன்னோட கிப்ட் சூப்பர். பாரு.. நல்லா இருக்கா” என்றார் அவள்வாங்கி அனுப்பிய வெள்ளி ருத்ராட்சமாலையை அணிந்துக் கொண்டு, சுபியை புகழ்ந்துக் கொண்டிருந்தார். அவருக்கு பக்தி அதிகம். இப்படி பேச்சுகள் நீண்டது.
வினு இங்கிருந்த நான்கு நாட்களும்.. சுபி அவர்களை நன்றாக பார்த்துக் கொண்டாள். நிறைய பேசினர்.. பிள்ளைகளை கூட்டிக் கொண்டு மாலையில், பார்க்.. உணவு உண்ண என வெளியே சென்றனர்.
அந்த வார இறுதியில் ஸ்ரீதர் வந்தார்.. எல்லோரும் தியேட்டர் கோவில் என சென்று வந்தனர். ஞாயிறு மாலை கிளம்பும் போது சபரியும் விசாகனும் அழுகை. இது எப்போதும் நடப்பதுதான். சமாதானம் செய்தனர் பெற்றோர்.
சுபிக்கு, பெரிதாக வேலை என இல்லை.. சமையல் இவள் செய்திடுவாள். சுற்று வேலைக்கு என ஒரு பெண்மணியை அவளின் அன்னை ஏற்பாடு செய்துதான் சென்றார். அதனால், சுபி சமாளித்துக் கொண்டாள்.
விசாகன், மாலையில் பள்ளி விட்டு நேராக சென்டர் வந்துவிடுவான்.. அங்கேயே இவள் இருந்தாலும் இல்லை என்றாலும் ஹோம் வொர்க் செய்து விளையாடி என இரவு எட்டுமணிக்குதான் அம்மாவோடு வீடு வருவான் விசாகன்.
ஒரு இரண்டு வாரம் விசாகனும் குருவும் பார்த்துக் கொள்ளவில்லை.
இப்படியே நாட்கள் நகர்ந்தது.
ஒருமாலை வேலை.. தலைவலியோடு சுபி ஒரு காபி ஷிப்பில் அமர்ந்தாள். அம்மா போன் செய்திருந்தார்.. இப்போது. அன்று தன் மாமனாரிடம் ஏதும் பேசாமல் இருந்தது.. அவரை நடத்தியவிதம்.. பற்றி திட்டி தீர்த்துவிட்டார். ம்.. சுபியின் மாமனார்.. கார்த்திக்கிடம் சொல்லி வருத்தப்பட்டாராம். சுபிக்கு நிறைய திட்டு. பெரியமாப்பிள்ளைக்கு வருத்தமாம்.. எனவும் சொல்லி இன்னமும் திட்டினார் அன்னை.
பெண்ணவளுக்கு அதில்தான் தலைவலி காபிஷாப் வந்து அமர்ந்தாள் பெண். தனக்கு தேவையானதை ஆட்டர் செய்து அமர்ந்திருந்தாள். மனதில் இன்னமும் கார்த்திக் மாமா.. தன் மாமனார்.. வீரா.. என எல்லோரின் பேச்சுகளும்.. செய்கைகளும் ஓடிக் கொண்டிருந்தது.
சுபி, தன் கிளினிக்கில் பணிபுயரியும் பெண் “மேம் விசாகன் வந்துட்டான்” என சொல்லி ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிந்தார், அதை பார்த்துவிட்டு திரும்ப.. அங்கிருந்த பாண்டரி’யிலிருந்து கருணாவும் இன்னொருவரும் பேசிக் கொண்டே வெளியே வருவது தெரிந்தது.