யாருமில்லாமல் அனாதையாய் நின்ற தன் சகோதரன் மகளை தன்னோடு அழைத்துக்கொண்டார் நீலாவதி, சுதாவின் அத்தை. தங்களுக்கு ஒரு மகள் வேண்டும் என்று எவ்வளவு விரும்பியும் நீலாவதி – சதீஷ் தம்பதியருக்கு ஒரு மகன் மட்டுமே.
சுதா அவள் தகப்பனாரோடு கேரளா வந்த ஒரு சில வாரத்திலேயே, விடுப்பிற்கு வந்திருந்த தீபக் லண்டன் பயணப்பட்டான். மிகவும் மரியாதையோடு பழகுவான். வேண்டாத பழக்கங்களோ தவறான எண்ணங்களோ இருந்தது கிடையாது. ஓரிருமுறை இருவரும் பார்த்துப் பேசியுள்ளார்கள் அவ்வளவே.. ஒரு சில வார்த்தை பரிமாற்றம், எதிரில் பார்க்கும் பொழுது சிரு புன்னகை. படிப்பு தான் அவன் உலகம். வேறு உலகம் தெரிந்திருக்கவில்லை. அவன் நட்பு வட்டாரமும் அப்படியே. அவனைப் பார்த்ததும் பிடிக்கும். பழக இனிமையாய் இருந்தான். வீட்டில் தாய் தகப்பன் பிள்ளையாய் இருந்தவரை!
மகனும் வீட்டில் இல்லாமல் போகவே அந்த வீட்டின் இளவரசியாய் மாறினாள் சுதா. வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபக்கும் வீட்டில் அதிகம் தங்குவதில்லை.
சுதா அங்கு நிரந்தரமாய் வந்தபின் இருமுறை வந்திருந்திருக்கிறான். அவள் அப்பா காலமான பொழுது வந்தான். அவன் தேர்வு நேரம் என்பதால் இரு தினத்தில் சென்றுவிட்டான். அடுத்த முறை வந்த சமயம் வீட்டில் தங்கவில்லை. அவன் துவங்க இருக்கும் தொழில் விஷயமாய் பெங்களூரு சென்று விட்டான். சுதா என்றொருத்தி இருப்பது தெரியும் ஆனால் முகம் கூட நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. அவளை அவன் கவனித்தது கூட கிடையாது. அவர்கள் பழக்கம் அவ்வளவே.
அவளின் மூன்றாம் வருடக் கல்லூரி படிப்பு வரை எல்லாம் சரியாகவே சென்றது. இந்தியா திரும்பிய தீபக் வேலை என பெங்களூரூவில் இருந்து விட்டான். அதே நேரம் மகனுக்குப் பெண்பார்த்துக் கொண்டிருந்த சதீஷின் பாலிய சினேகிதன் கண்ணில் சுதா பட, அவளை அவர் மகனுக்கு மணமுடிக்கக் கேட்டார்.
சொந்த மகள் போலச் சுற்றித் திரிந்த சுதாவைப் பிரிய சதீஷ்கு கொஞ்சமும் விருப்பமில்லை. பெண்ணைப் பெற்றால் தானே பிரிய வேண்டும்.. சுதா அவர்கள் பேராத மகள் தானே, அவளை தங்கள் மகனுக்கு மணமுடிக்க விருப்பா எனக் கேட்க, அவளுக்கு அப்படி எல்லாம் பெரிதாக அபிப்பிராயம் இருக்கவில்லை. மாமா அத்தையோடு இருக்கக் கசக்குமா என்ன? தீபக்கிற்குச் சரி என்றால் அவளுக்கும் சம்மதம் என்று விட்டாள்.
மேசையைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தவள் ஒரு பெருமூச்சோடு அஷோக்கைப் பார்க்க, அவனோ அவள் மேசை அருகே இருந்த சுவரில் ஒரு காலை ஊன்றி கைகளை மார்புக்கு குருக்காய் கட்டிக்கொண்டு வாகாய் சாய்ந்து அமைதியாய் நின்றிருந்தான். தன்னை தவறாக நினைப்பானோ என்ற எண்ணமே.
அவள் அவனைப் பார்க்க ஒருவித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் அவள் கண்களையே பார்த்திருந்தான். அவனை மூழ்கடித்த கொஞ்சும் விழிகள், ஏனோ இன்று அவனோடு கதை பேசவில்லை. ‘ஒருவனுக்குத் திருமணத்திற்குச் சரி சொல்லி பின் இவனிடம் காதல் கொண்டவளை கேவலமாக நினைப்பானோ?’ ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்!
வெளிநாட்டிலிருந்து வந்த தீபக் பாக்க வாட்டம் சாட்டமாக, ஆள் நன்றாகவே இருந்தான். பணமும் பஞ்சமில்லை! சோ.. பணக்கார பையனுக்கு அழையா விருந்தாளியாக பல வேண்டாத நண்பர் கூட்டம் பெங்களூரு வந்த சில நாட்களிலேயே சேர்ந்துவிட்டது. ஏற்கனவே லண்டனில் அவனுக்கு வேண்டாத பழக்கங்களும் வந்திருக்க, இனம் இனத்தோடு சேர்ந்துக் கொண்டது.
வாழ்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கோ திருமண பேச்சு பிடிக்கவில்லை. ‘என் கண்ணு குட்டிய வேண்டாம்னு சொல்லிடானே’ என்று புலம்பிய சதீஷோ, அவன் மாற்றங்கள் தெரியாமல், ‘சுதாவ கல்யாணம் பண்ணினா சொத்து.. இல்ல சல்லிக் காசு கிடையாது, நீ போய் சம்பாரிச்சுக்கோ’ என்று அவன் சொகுசு வாழ்விற்கு செக் வைக்க அவனும் அவளைப் பார்த்துப் பேசாமலே சரி என தலையாட்டி வைத்தான்.
இறுதி தேர்வு முடியவும் திருமணம் எனத் தேதியும் குறிக்கப்பெற்று திருமண வேலையும் துவங்கியது.
சில பல காரணங்களால் கல்லூரியில் அந்த வருடச் சுற்றுலா நாள் தள்ளிக்கொண்டே வந்தது. தேர்வு நெருங்கவும் அதை ரத்து செய்யக் கல்லூரி நினைக்க, மாணவர்களிடம் ஒரே எதிர்ப்பு!
கல்லூரி வாழ்வின் கடைசி வருஷ சுற்றுலா என்பதால் மாணவ மாணவியர் மிகுந்த உற்சாகத்துடனே கிளம்பினர். எங்குச் சென்றால் என்ன? நண்பர் பட்டாளத்துடன் செல்வதே அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது. கூர்க் பயணப்பட்டது அவர்கள் பேருந்து. பாடி ஆடி களைத்துத் தூங்கி விழிக்கவும் குன்னூர் வந்து சேர்ந்தனர். மூன்று நாள் சுற்றுலா அது. நான்காவது நாள் காலை உணவுக்குப் பின் கல்லூரியை நோக்கி பயணம்.
இரண்டு நாட்கள் ஆனந்தமாய் கழிய மூன்றாம் நாளும் துவங்கியது.
சுற்றிவிட்டு அருகிலிருந்த உணவகம் ஒன்றில் மாலை காபி மற்றும் பலகாரம் அருந்திவிட்டு அவர்கள் வந்த வாகனத்தில் ஏறவும் சுதாவின் தோழி, வனஜா ரெஸ்ட் ரூம் ஓடினாள்.
வாஷ் ரூம் சென்றுகொண்டிருந்தவள் காதில் விழுந்தது அந்த கனீர் சிரிப்பு. அதன் சொந்தக்காரனைத் தேட அவள் கண்ணில் பட்டான் தீபக். மனதைச் சுண்டியிழுக்கும் அவன் சிரிப்பும், அவன் அமர்ந்திருந்த தோரணையுமே அங்கிருந்தோரை அவன் பக்கம் திருப்ப போதுமானதாக இருந்தது. கண்ணிருந்த அவளும் அதற்கு விதி விலக்கில்லாமல் போனாள். உணவகம் பின் புரமிருந்த நீச்சல் குளமருகே ஆண் பெண் பேதமில்லா கூட்டத்துடனே அமர்ந்திருந்தான். மது பாட்டில்கள் மேசையை அலங்கரித்திருந்தாலும் அவன் நிதானமாகவே தெரிந்தான்.
ரெஸ்ட் ரூம் கூட்டமாயிருக்கவே, தாமதமாகவும் இருமுறை சுதா செல்லில் அழைத்துவிட்டாள். ஒரு வாழியாய் சென்ற வேலை முடித்து ஓடி வர, அவளை அறியாமலே ஒரு ஆவலில் கண் நீச்சல் குளம் ஒட்டி இருந்த மேசை அருகில் சென்றது. எல்லோரும் வீற்றிருக்க அவன் மட்டுமே அங்கு இருக்கவில்லை.
ஓட்டமும் நடையுமாய் சென்று கொண்டிருந்தவள் சலிப்போடு தலையைத் திருப்பவும் அவள் எதிரில் வந்த தீபக்கின் மேல் மோதவும் சரியாயிருந்தது. அவன் கையிலிருந்த பானம் அவள் மேல் சரிய, “மை மிஸ்டேக். சாரி டார்லிங்க்.. ஆர் யூ ஆல்ரைட்” என அவன் முன் வந்து மன்னிப்பு கேட்க,
அவளோ, “இல்ல நான் தான்.. சாரி.. பாக்காம் வந்துட்டேன்.. என்னால உங்க டீ.ஷர்ட் எல்லாம் ஈரம்.. சோ சாரி.”
“நோ ஒரீஸ்.. இங்க தான் ஸ்டே பண்றேன்.. யூ டேக் கேர்” என்று ஒரு புன்னகையோடு அவன் விடைபெற, சென்று கொண்டிருந்தவன் முதுகையே பார்த்து நின்றவளை, சுதாவின் செல் அழைப்பு விட்ட ஓட்டத்தைப் பிடிக்க வைத்தது.
‘கேம்ப் ஃபையர்’ முன் அமர்ந்திருந்த வனஜா தீபக்கின் புகழ் பாட, கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத் தான் ‘போதும் டா சாமி’ என்றாகி விட்டது. அவன் நற்பண்பும், ஆண்மை ததும்பும் முகமும், வசிகர சிரிப்பும், ஆறடி உயரமும், வாட்டசாட்டமான உடலமைப்பும்.. இன்னும் பல. பார்த்த இரண்டு நிமிடத்தில், ஒரு வழிப் போக்கனிடம்.. இது எப்படி சாத்தியம் என்பது தான் சுதாவிற்குப் புரியவில்லை.
பின் பேச்சு திசை மாற சுதாவின் திருமணம் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. மணமகனைப் பார்க்க வனஜா ஆர்வம் காட்ட, சுதா கைப்பேசியிலிருந்த அவனின் புகை படத்தைக் காட்டினாள். அது அவனோடு விமான நிலயத்தில் அவள் இந்தியா வந்த சமயம் எடுத்துக்கொண்டது. இருவரும் மாறி இருந்தார்கள். அவனின் பராமரிக்கப் பட்ட தாடி புதியது. உடம்பை நங்கு ஏற்றியிருந்தான். முகத்தில் பளபளப்பு கூடி இருந்தது.
சுதா நிறையவே மாறிப் போயிருந்தாள். காது வரை இருந்த குட்டை முடி முதுகு வரை நீண்டிருந்து. புருவத்தின் வடிவு மாரி போனது. பெரிய பெண்ணாய் பார்க்க அழகாகவும் வசிகரமாகவும் இருந்தாள்.
இப்படியாக, வனஜாவால் தீபக் அவர்கள் சென்று வந்த ரெஸார்ட்டில் தங்கி இருப்பது சுதாவிற்குத் தெரிய வந்தது. இவ்வளவு நேரம் தீபக் பற்றித் தான் அவள் கூறிக் கொண்டிருந்தாள் என்பது உணர, அவனைச் சென்று பார்க்கும் ஆவல் எழுந்தது. திருமண பேச்சு ஆரம்பித்தபின் ஒரு தரம் அவன் அவளை கை பேசியில் அழைத்துப் பேசியிருந்தான் அவ்வளவே. அப்போதெல்லாம் இல்லதா அக்கரை இப்போது வனஜாவின் தயவால் வந்து ஒட்டிக்கொண்டது.
சுதாவிற்கு இரவு தூக்கம் பிடிக்கவில்லை. அவன் அருகில் தான் இருக்கின்றான் என்றதும் அவனிடம் பேச விருப்பம் வந்து பாடாய்ப்படுத்தியது. மறுநாள் காலை உணவு முடிந்தும் அவனைச் சென்று பார்ப்பதென்ற முடிவோடு சில பல பொய்களை பேராசிரியரிடம் உதிர்த்துவிட்டு அவன் இடம் நோக்கி அவளும் வனஜாவும் சென்றனர்.
அவனுக்கு இன்ப அதிர்ச்சி தர விரும்பி சென்றவளுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி.
காலைப் பொழுதில் தீபக் தங்கி இருந்த ரெஸார்ட்டில் சென்று விசாரித்து அவன் அறை வரை வந்துவிட்டவளுக்கு, கதவைத் தட்ட ஒரு தயக்கம். “தனியாவா வந்திருக்க.. கூடவே நான் இருக்கேன்ல.. சும்மா தட்டு..” என்ற தோழியின் உந்துதலில் சுதாவும் கதவைத் தட்ட, ஏமாற்றாமல் அவனே வந்து கதவைத் திறந்தான்.
அவன் இருந்த கோலத்தைப் பார்த்த வனஜா, “நான் வெளியில அங்க தோட்டத்தில இருக்கேன். நீ ரெண்டு நிமிஷம் பேசிட்டு கீழ காபி ஷாப் வர சொல்லிட்டு வந்திடு.. இல்ல இங்கையே பேசுரனா ஒரு தெர்ட்டி மினிட்ஸ்ல வந்திடு.. லேட்டாச்சு, கிரிஜா நம்மள விட்டுட்டு போய்டுவா..” என்று மெதுவாய் காதை கடித்து விட்டு ஒதுங்கி விட்டாள்.
‘குளித்துக் கொண்டிருந்திருப்பான் போல’ என்று எண்ண வைத்தது உடலின் ஈரமும், இடுப்பின் கீழ் இறக்கி கட்டி இருந்த துண்டும். அவன் முகத்தில் எண்ணவோட்டங்கள். புருவம் சுருங்க அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் என்ன நினைத்தானோ, “வா” என்ற அழைப்போடு உள்ளே சென்றான். அவனோடு உள்ளே சென்றவள் கதவை மூடாமலே உள் சென்றாள்.
அறை பெரிதாகவே இருந்து. ஹாள், படுக்கை அறை, அடுக்களை எனச் சகல வசதியோடும் தெரிந்து. தயங்கித் தயங்கி ஊள்ளே நுழைந்தவளைப் பார்த்தவன், “என்ன ஃபர்ஸ்ட் டைம்மா?” என
‘கூர்கை கேட்கிறான் போல’ என்று எண்ணியவள், “ம்ம்” என்று கொஞ்சமாய் தலை ஆட்டி வைத்தாள். அங்கு நிற்கவே மனதுக்குப் பிடிக்கவில்லை. அவனிடம் பேச எதுவும் தோன்றவில்லை.
சொல்லிவிட்டுக் கிளம்பிவிடலாம், ஊருக்கு அவன் வந்த பின் பேசிக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டு, பசையால் ஒட்டி இருந்த உதட்டை ஒருவழியாய் பிரித்து அவள் பேசும்முன், “பே..பி.. வரலியா? போதுமா?” என்று நீர் சொட்டச் சொட்ட மார்பைச் சுற்றிய துண்டோடு அறையை ஒட்டி இருந்த ‘ஜக்கூசி’யிலிருந்து வந்தவளைப் பார்த்து சுதா வாய் மீண்டும் பசையால் ஒட்டி கொள்ள அவனைத் தான் பார்த்தாள்.
“ஹேய்.. உள்ள ஈரம் பண்ணாதா. வெளியில போ.. ஈரத்தைத் தொடச்சுட்டு வா..” எல்லாம் ஆங்கில உரையாடல்களே!
புதியவள் பார்வை சுதா மேல் விழ, “உன் டேஸ்ட்டுக்கு இது ஒத்துவராது பேபி… இன்னைக்கும் நான் ஃப்ரீ தான்.. என்ன சொல்ற?”
“எனக்கு என்ன வேணும்னு நீ சொல்ல வேண்டாம். நீ முதல்ல வெளில போ.. ரூம ஈரம் பண்ணாத..” பொறுமையாய் ஆனால் ஸ்திரமாய் வந்தது வார்த்தை.
வெறும் பார்வையாளராய் நின்றிருந்தவளுக்கு நடப்பது மூளையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒன்றும் கூறாமல் வாயிலை நோக்கி நகர்ந்தவள் கையை பற்றி தன் பக்கம் திருப்பியவன், “ஹாய்.. அவ எல்லாம் ஒரு ஆளு? அவ சொன்னத பெருசா எடுத்துகாத..” என
சுதாவிற்கு அடுத்து என்ன கூற வேண்டும் என்று கூட தெரியாமல் அவனைப் பார்த்தாள். அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் புருவம் மீண்டும் சுருங்க யோசனையோடு, “யூ லுக் வெரி ஃபெமிலியர்..” அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே திறந்திருந்த கதவின் வழியாய் அவன் நண்பர்கள் மூவர் வந்து இணைந்து கொண்டனர். அதில் ஒருவன் பார்வையாலேயே அவளை விழுங்க, சுதாவின் கால்கள் வலு இழக்க ஆரம்பித்தது.
‘எதுக்கு இங்க வந்த சுதா’ என்ற எண்ணம் மட்டுமே.
“ம்ம்.. சொல்லு.. இதுக்கு முன்னாடி நம்ம மீட் பண்ணி இருக்கோமா?” அவன் வார்த்தைகள் சாட்டையாய் தைக்க.. ‘யாருனு தெரியலையா? தெரியாம தான் உள்ள கூப்பிட்டானா? அப்போ என்னை யாருனு நினைச்சு கூப்பிட்டான்? ஃபர்ஸ்ட் டைம்மா-னு கேட்டதுக்கு அர்த்தம்?’ அவள் மனக்கேள்வியின் பதிலை உடைமாற்றிவிட்டு எதிரில் வந்து கொண்டிருந்தவள் உணர்த்தினாள்.
“உனக்கு மட்டும் எப்படி டா எல்லா ஃபிகரும் மடங்குது?”
“குடும்ப குத்து விளக்குனு நினைச்சேன்.. உனக்கு வேண்டாம்னா, எனக்கு ஓக்கே மச்சி..”
“இவள நேத்தே பார்த்தேன் டா.. ரெஸ்டாரென்ட்ல. இதோ நிக்கறானே நம்ம நல்லவன், குணா, இவள ஒரச போய் ஒரு அர வாங்கினான். இவ கை அவன் மேல பட்டதுக்கே பய ஆடிப்போய்ட்டான். நீ அசத்து ராஜா! நான் கூட குடும்ப குத்து விளக்குனு தான் நினைச்சேன்..”
நாராசமாய் விழுந்தது அவர்களின் பேச்சு. நிற்க முடியவில்லை அவளால். நரிகளின் நடுவில் மானாய் தனித்து நின்றிருந்தாள். ஆனால் பயம் எல்லாம் வரவில்லை. எரிச்சலும், தன் மீதே கோபமும் வந்தது. ‘நல்லாதானே இருந்தான் எப்போ இப்படி தறுதலையானான்’ பதில் அவனை சுற்றியிருந்தவர்களே!
தீபக் அவன் பங்கிற்கு, “ஹெல்லொ.. என்ன நீ அடிக்கடி கனவு காண போய்டுர? நீயே சொல்லு.. என்ன உன்னை வச்சுக்கவா கட்டிக்கவா?” நக்கலாய் சொல்லிவிட்டு பெரிதாய் சிரித்தவனை பார்க்கவே அருவெருப்பாய் இருந்தது.
அன்பையும் பண்பையும் ஊற்றி அவளை வளர்க்கும் அவள் ‘அத்தை- மாமா’ மகனா இவன்? அவன் பிடித்திருந்த மணிகட்டு எரிந்தது. காலம் முழுவதும் இவனோடா? எண்ணமே கசத்தது. அவன் கேட்ட கேள்வி எரிச்சலைக் கொடுக்க, “ச்சீ..” என்று ஒரே உதறலில் அவனிடமிருந்து கையை விடுவித்தவள் அப்படியே வெளியே போயிருக்கலாம். தலை எழுத்து வேராய் இருக்க, “உன்ன மாதிரி தெரு பொறுக்கு நாய்க்கு இதோ இவள மாதிரி ‘குத்து விளக்கு’ தான் கிடைப்பா.. அவள வச்சுகோ.. இல்ல கட்டிக்கோ.. என்னை எல்லாம் கனவுல கூட நினைச்சுடாத.. நீ நினைச்சா கூட.. அது எனக்குத் தான் அசிங்கம்! உன்ன கல்யாணம் பண்றதுக்கு நெருப்பில குதிச்சிடலாம்… அதுவே மேல்! நீ தொட்ட கைய பினாயில் ஊத்தி தான் கழுவனும்!” பொரிந்து தள்ளிவிட்டு அவள் செல்ல அடி எடுக்க,
“ஏய் .. என்னடி சொன்ன” என்று அவன் மீண்டும் கையை பிடிக்க
“சீ.. கைய விடு, பொறுக்கி” பிடித்த வேகத்தில் அதை உதறியவள் அவனை அவள் முழு பலம் கொண்டு அறைந்து, அதே வேகத்தில் அறையை காலி செய்தாள்.
அவனிடம் யாரும் இப்படிப் பேசியதே இல்லை. கன்னம் எரிந்தது. அவன் சிகப்பு முகத்தில் அவள் விரல் பதிந்த தடம்.
இது முற்றிலும் புதிது. ஒரு நிமிடம் தடுமாறிப் நின்றுவிட்டான். அவன் போடும் புரைக்கு நாய்களை மட்டுமே பார்த்தவனுக்கு அவள் பேச்சு தேளன கொட்டியது.
நண்பர்கள் முன் அவமானப் பட்டு நின்றவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவளை ஒரு வழி ஆக்காமல் விடுவதில்லை எனச் சூளுரைத்தவன் முதலில் அழைத்தது அவளை அனுப்பியதாக நினைத்த ஏஜன்டை! அவனோ “அப்படி யாரையுமே அனுப்பவில்லை” எனவும் அவளை அந்த ஹோட்டல் முழுவதும் தேடித் தோற்றான்.