ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.6
அந்த ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த ஷிவானியின் மனம்…… மிகவும் புண்பட்டு இருந்தது…… அவள் நினைவு தெரிந்து, இது நாள் வரை தான் எதற்கும் இத்தனை தூரம் எவராலும் அவமானப்படுத்தப்பட்ட தாய் அவளுக்கு நினைவில்லை……. தன் ஞாபக அடுக்கில் மொத்தமாய் மறைந்து போன….. பெற்றோரை நினைத்துக் கூட அவள் கண்கலங்க பூர்ணிமா அனுமதித்ததில்லை
எப்போதும் எந்த ஒரு சிறு குறை கூட தெரியாமல்…….ஒரு தேவதையின் இறகாய் அவளை தாங்கும் சொந்தத்தையும் சுற்றத்தாரையும்…..இறைவனின் வரமாய் பெற்ற அந்தச் சின்னஞ்சிறு மழலைப் போல் மனம் கொண்ட சிறு பெண்ணின் மனதை……
வெறிநாய் ஒன்றின் கூறிய பற்கள் கொண்டு குதறியது போல்……. அவளைக் கண்ட சில நிமிடங்களிலேயே சிதைத்து எறிந்து விட்டான் அந்த ஆரியன் அதிலும் அவனின் உதடுகள்……. அவளை பேசியதற்கும் மேலாக மிக மிக அதிகமாகவே அவனின் கண்களும் அதிலிருந்த கரை காண முடியா ஆத்திரமும் வெறுப்பும் அவளை மொத்தமாய் பொசுக்கியது என்றால் அது மிகையல்ல……..
எதற்காக தன்னை சரிவர ஒன்றிரண்டு முறை கூட பார்த்தறியாத ஒருவன்…… இத்தனை மோசமான கடும் சொற்களால் அவளை காயப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றும் புரியாமல்……. தானாகவே கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகி வழிய அடிப்பட்ட கால்கள் வீங்கி கொண்டு அதித வலியை கொடுக்க……
கிட்டத்தட்ட நொண்டி அடிப்பது போல் தன் தோள் பையை நெஞ்சோடு இருக்கி பிடித்தபடி ஷிவானி…… முயன்று நடக்க ஒரு கட்டத்தில் அதுவும் முடியாமல் மண்தரையில் தடுமாறி விழப்போனவளை தாங்கி பிடித்தது வலிமையான புஜங்களுக்கு சொந்தமான இரு கரங்கள்……..இருக்கும் பலவீனத்தில் இந்த தடுமாற்றமும் சேர்ந்துகொள்ள தான் ஆடவன் ஒருவன் கையில் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்பதை கூட உணர மாட்டாமல்…… சிறு குழந்தை போல் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் ஷிவானி…….
அச்சச்சோ…!! ஷிவானி என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி அழுகுறீங்க…?? ப்ளீஸ் அழாதீங்க ஓகே….. உங்களை இப்படி பாக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு….. நான் யுகேந்தர்….. நீங்க கீழ விழாம நான் பிடிச்சுட்டேன் கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள் ப்ளீஸ்……. கிட்டத்தட்ட ஒரு குழந்தையிடம் கெஞ்சும் குரலில் அவன் அவளை மென்மையாய் உலுக்கியபடி வேண்ட……
அப்போதுதான் தன் உணர்வு வந்தது போல் ஷிவானி இறுக மூடிய தன் விழி திறந்து யுகேந்திரனை பார்த்தாள்…… மென்மையான பூவொன்றின் அழகியலை ஞாபகப்படுத்தும் அவள் முகத்தை விழியே எடுக்காமல் ஆயுள் முழுதும் காண வேண்டும் என அவனது உள்ளத்து ஆசை யுகேந்திரனை உந்தித் தள்ள ஆனாலும் கூட…… தாங்கள் இருக்கும் இடமறிந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்…….
ஷிவானி ஆர் யூ ஓகே….? அவளது நலன் பற்றி கேள்வியாய் வினவியவன் ஏதாவது பெரிய பிராப்ளமா…..?? எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்கு செய்ய நான் காத்துகிட்டு இருக்கேன்…… கேட்டவனின் முகத்தில் தெரிந்த உண்மையான பரிதவிப்பில் ஒரு கணம் அவள் மனதில் இதமாய் உணர்ந்தபோதும்…….
ஏனோ அவனின் கை வளவிற்குள் நிற்பது மிகவும் சங்கடமாய் தோன…….. கூச்சம் கொடுத்த உந்துதலில் அவனை விட்டு நகர்ந்தவள் மீண்டும் விழப் போக……. அடுத்த நொடியில் அவளைத் தன் கைகளில் மறுபடியும் தாங்கியவன் தன்னிடம் இருந்து விடுபட முயன்று ஷிவானி யை தடுத்து….. அருகில் இருந்த அமரும் கல்லில் அவளை மென்மையாய்….. உட்கார வைத்தவன் அப்போதுதான் அவள் கால் சிவந்து வீங்கி இருப்பதைக் கண்டான்…….
ஓமை காட் ஷிவானி…!! உங்க காலுக்கு என்ன ஆச்சு பதறி கேட்டவன் முட்டிப் போட்டு தரையில் அமர்ந்தவன் சிறிதும் தயங்காமல்…… அவள் பாதத்தை கைகளில் ஏந்தி….. காயத்தின் தன்மையை ஆராய ஆரம்பித்தான்……. அவள்தான் அந்த சூழ்நிலையும் அவனின் அருகாமையும் கொடுத்த சங்கோஜத்தில் நெளிய ஆரம்பித்தாள்…….
என்ன ஷிவானி இது இவ்வளவு மோசமா அடிபட்டிருக்கு இதனாலதான் அழுதுட்டே வந்தீங்களா……?? ஆனால் எப்படி இது ஆட்சு…….அவன் எழுப்பிய வினாவில் அவளின் கண்கள் தானாய் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு…… சற்று தொலைவில் அமைந்திருந்த அந்த ஆடிட்டோரியத்தின் மேல் சென்று பதிய……..
அவள் கண்கள் போன திசையையும் அந்தப் பார்வை சொல்லிய செய்தியும்…ஏற்கனவே புதிதாக வந்த அந்த திமிர் பிடித்த கும்பலால் அவன் பட்ட அவமானமும் அந்த நேரம் யுகேந்திரன் எனக்கு ஞாபகம் வர…….
அந்த கொழுப்பெடுத்த பணக்கார பசங்க தானே உங்க கிட்ட இவ்ளோ ஹர்ஷா பிஹேவ் பண்ணியது…….. யூகமாய் இல்லாமல் உறுதி என்கிற அழுத்தத்தோடு அவன் கேட்க ஷிவானியின் தலை சம்மதமாய் அசைய முயன்ற நொடியில்……அதுவரை அமைதியாக இருந்த அந்த சூழ்நிலை திடீரென்று மாறியது…….
பயங்கரமான ஹாரன் சத்தத்தோடு…. பூம் பூம் பூம்….. என்ற இஞ்சின் அலரும் சத்தமும் காதை கிழிக்க சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தவர்களின் கண் முன்னால்………அந்தக் கல்லூரி வளாகத்தின் மொத்த இடமும் புழுதி பறக்க நான்கைந்து…….விலை அதிகமான அந்த மோட்டார் பைக்குகள் அவர்கள் இருவரையும் நோக்கி வந்து பிறகு வட்டமாய் சுற்ற ஆரம்பித்தது……..
அது யாருடைய வண்டிகள் என்று தெரிந்ததால்…….ஷிவானி உள்ளுக்குள் ஓடும் நடுக்கத்தோடு தலை நிமிர்ந்து கூட பார்க்க பயந்து போய்…….தன் உடலை மொத்தமாய் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருக்க…….. அந்த வண்டிகளின் சத்தமும் அதை தோற்கடிக்கும்…… அவர்களின் கேலிப் சிரிப்பும் விசில் சத்தமும் யுகேந்திரனை அவன் பொறுமையின் எல்லைகளை சர்வசாதாரணமாய் கடக்க வைக்க……..
இருந்தும் தன் அருகில் மழையில் நனைந்த சின்னஞ்சிறு கோழிக்குஞ்சாய் நடுங்கிக்கொண்டிருக்கும்……. ஷிவானியை நினைத்து தன் கோபத்தை அடக்கியவன் அவளின் பயத்தைப் போக்கும் பொருட்டு……
தன் கைகள் கொண்டு அவள் கையை சற்று அழுத்திப் பிடிக்க….. இப்போது அந்த ஐந்து வண்டிகளில் ஒன்று அவர்களை சுற்றுவதை விட்டு சட்டென்று விலகி……. கோர்த்திருந்த அவர்கள் இருவரின் கைகளையும் மொத்தமாய் சிதைத்துவிடும் வேகத்தில் நெருங்க அந்த வண்டியின் ஆக்ரோஷம் உறுமலும் நொடியில் அவன் அதை திசை மாற்றிய வேகமும்……..
ஷிவானி மட்டும் ஒரு முறையேனும் தன் தலை நிமிர்ந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்….. தன்னை அன்று மோத வந்தவன் யார் என்று…….
சற்று தூரமாக அவர்கள் சுற்றும் வரை கூட பயப்படாமல் நின்றிருந்த யுகேந்திரன் தான் ஷிவானியின் கைகளை தொட்ட நொடியில்…….பாய்ந்து வரும் சுழல் காற்றாய் தன்னை நோக்கி வந்த அந்தப் பைக் காரனின் வேகத்தில் சற்று அதிர்ந்து தான் போய்விட்டான்…….
தன்னிச்சை செயலாய் அவன் கைகள் அவள் கரத்தை விட்டு நகர்ந்து விட…… சரியாய் அதே வினாடியில் அவர்களை நோக்கி வந்த அந்த பைக்கும் சட்டென்று பிரேக் போட்டு நின்றது……. அவர்களை நெருங்கிய வந்த அந்த அரக்கன் தூரத்திலேயே நின்று விட்டதில் ஷிவானி யுகேந்திரன் இருவருக்குமே மனதிற்குள் ரகசியமாய் பெரும் ஆறுதல் எழுந்தது……….
சற்று தொலைவில் அந்தே இருவரின் முகத்தின் ஒவ்வொரு அணுவையும் விடாமல் ஆராய்ந்தவனின் கண்களில்…… அவர்களின் தடுமாற்றமும் பயமும் துல்லியமாய் அவனுக்குத் தெரிய……கேலியும் இளக்காரமும் ஆத்திரமும் கலந்த கலவையான அவன் புன்னகையும் சுட்டெரிக்கும் அவன் கண்களின் வெப்பத்தையும் தலைக்கவசம் அணிந்திருந்தால்…….
ஷிவானியால் பார்க்க முடியாமல் போனது அவளின்…… துரதிஷ்டமாக கூட இருக்கலாம் . ஒருவேளை வஞ்சம் வழியும் அவன் கண்களைப் பார்த்திருந்தால் இனிவரும் காலத்தில் சற்றேனும்…… அவள் அவன் அவளுக்கு இடப்போகும் சங்கிலியின் பிடியில் இருந்து. தப்பித்து கொள்ள முடிந்திருக்குமோ என்னவோ………
நெருக்கமாக அமர்ந்து இருந்த அந்த இருவரும் விலகிக் கொண்டதில் இருந்தே…….தான் வந்த வேலை முடிந்து விட்டதாக நினைத்தவன் அவளை விட்டு தன் பார்வையை சற்றும் திருப்பாமல்…… ஹிந்தியில் சத்தமாய் தன் தோழர்களுக்கு கட்டளையிட்டு……. புயலாய் அங்கிருந்து தன் வண்டியை கிளப்பிக்கொண்டு பறக்க……
அவன் ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு அந்த ரவுடி கும்பலும் அவர்களை விட்டு விலகிச் சென்றது…… அவர்கள் சென்றும் சில நிமிடங்கள் அந்த இடத்தில் அமைதி நிலவ அதை முதலில் கலைத்தது யுகேந்திரன் தான்…….
ஓகே ஷிவானி இந்த மாதிரி பணக்கார ரவுடி பசங்க கிட்ட…… இனிமே ஜாக்கிரதையா இருங்க முன்ன மாதிரி நம்ம காலேஜ் இப்போ இல்லை……. இந்த கும்பல் இங்கு வந்ததிலிருந்து மொத்தமா எல்லாமே மாறிப்போச்சு……. கிட்டத்தட்ட கேங்ஸ்டர் யாரோ நம்ம காலேஜ் கொள்ள நுழைந்தா மாதிரி இருக்கு……
அதனால பீ கேர் ஃபுல் ஓகே அவளுக்கு எச்சரிக்கை சொன்னவன் அத்துடன் நிறுத்தாமல் அவளின் தோழிகளை அழைத்து விஷயத்தைக் கூறி……. மூவரையும் பாதுகாப்பாய் ஒரு ஆட்டோவில் ஏற்றி…… ஷிவானியை வீட்டில் சேர்க்கும்படி சொல்லி தானாகவே தன் மொபைல் நம்பரையும் கொடுத்தவன்…….
எனி டைம் எனி ப்ராப்ளம் எனக்கு கால் பண்ணுங்க ஓகே…… என்னால முடிஞ்ச எந்த உதவியா இருந்தாலும் நிச்சயம் செய்வேன் அவளுக்கு தைரியமும் வழங்கி அனுப்பி வைத்தான்……
என்னதான் மூவரும் சம வயதுடைய ஒரே வகுப்பில் பயிலும் தோழிகளா இருந்தாலும் ஏனோ….. ஷிவானியின் மேல் சற்றுக் கூடுதலான கவனமும் அக்கறையும் கனிவும் வைத்திருக்கும் தோழிகள் இருவருக்கும் அவளின் தற்போதைய நிலையை நினைத்து மிகவும் வருத்தமாய் இருக்க……
இனிமேல் நீ எங்களை விட்டு எப்பவும் தூரமா போகக்கூடாது ஷிவு ….. நீ தனியா இருக்கும் போது தான் உனக்கு ஏதேதோ பிரச்சனைகள் வருது …… இனிமேல் நானே உன்னை வீட்ல இருந்து தினமும் பிக்கப் பண்ணி ட்ராப் பண்றேன்……. கிட்டத்தட்ட நிஷா கட்டளையாய் முடித்துவிட அவளுக்கு கூட அது தான் சரி என்று தோன்றியது……..
இப்போ எங்கே போலாம் ஷிவு வீட்டுக்கா இல்லை காபி ஷாப் போனுமா…?? நிலா கேட்க வீட்டுக்கே போகலாம் இந்த கால்களை வெச்சுக்கிட்டு என்னால கடையில் எந்த வேலையும் பார்க்க முடியாது……. இப்போதான் அத்தை கூட அங்கு கிளம்பிப் சென்று இருப்பாங்க நாம அங்க போய் அவங்கள டென்ஷன் பண்ணதா ஆக வேண்டாம்…….
நானே ஈவினிங் கால் பண்ணி வீட்ல இருக்கேன் என்று தகவல் சொல்றேன்……. தோழியின் விருப்பப்படி அவளை வீட்டில் பத்திரமாய் சேர்ப்பிக்க ஆட்டோ ஓட்டுனரிடம் ஷிவானியின் இல்லம் இருக்கும் தெரு பெயரைச் தெரிவித்து அங்கே போக சொல்ல……..
கிட்டத்தட்ட அவர்கள் வந்த ஆட்டோ அந்த வீதியில் நுழையும் போது அவர்களைத் தாண்டிச் சென்றது…… பூர்ணிமா அமர்ந்திருந்த அந்த கார் இதற்கு முன்பே ஒருமுறை அதே வண்டி அருகே தன் அத்தையோடு ஒருவனைப் பார்த்து இருந்த ஷிவானியால்…….. அந்த வாகனத்தையும் அதற்குள் அமர்ந்திருந்த அவளின் அத்தையையும் அது தங்களை தாண்டிச் சென்ற இரண்டோரு நொடியில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது……..
ஏய்…. ஏய்….. நிலா நிஷா அது அது அந்த கார் அன்னைக்கு அத்தை கூட ஒருவன் தகராறு செய்ததை பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா…….அது அந்த ஆளோட வண்டிதான் எனக்கு நல்லா தெரியும் இப்ப கூட பாரு அத்தை அதற்குள் அமர்ந்திருக்கிறார்கள்…….
நிச்சயம் அந்த முரடன் இந்த முறையும் அவர்களைக் கட்டாயப்படுத்தி தான் கூட்டிப் போய் இருப்பான்…… நாம உடனே அவங்களை காப்பாற்றியாக வேண்டும் சொன்னதோடு……… தாங்கள் வந்த ஆட்டோவிலேயே அந்தக் காரை தொடர்ந்து போகச்சொல்லி ஷிவானி வற்புறுத்த……..
வேறு வழியில்லாமல் அந்த ஆட்டோ வும் அந்த வாகனத்தை பின் தொடர ஆரம்பித்தது….. ஏய் ஷிவு உனக்கு நல்ல தெரியுமா இது அந்த கார் தானா…?? சந்தேகமாக நிஷா கேட்க பிராமிஸா நிஷா….. எனக்கு நல்ல தெரியும் அத்தை சம்பந்தப்பட்ட எந்த விஷயமும் எனக்கு எப்பவும் மறக்காது……. இறுதியாக சொன்னவளின் குரலில்தான் பூர்ணிமா மீதான எத்தனை பாசமும் நம்பிக்கையும்…….
சீரான இடைவெளி விட்டு தோழிகள் அமர்ந்திருந்த ஆட்டோ பூர்ணிமா சென்ற அந்த வாகனத்தை பின்தொடர…….. அது நேராக சென்றது அன்று ஷிவானி அவர்களை முதல் முறை பார்த்த அதே அவர்கள் காபி ஷாப் இருக்கும் தெருவிற்கு முந்தைய தெருவில் தான்…….
இன்றும் அதே போல காரில் இருந்து இறங்கிய பூர்ணிமாவும் அந்த அவனும் இன்றும்……வாக்குவாதத்தில் ஈடுபட ஆனால் இன்று ஷிவானி யால் அந்த ஆணின் தோற்றத்தை முழுவதுமாக பார்க்க முடிந்தது……. பார்த்தவரையில் அவளுக்கு பெரும் அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும்…….
ஆட்டோவில் இருந்த படி அவர்கள் பார்த்துக் கொண்டே இருக்க……. இன்று பூர்ணிமா கண்ணீர் சிந்தவில்லை என்றாலும் இறுகிய முகத்தோடு கோபமாக பேசிவிட்டு அந்த அவனை காணக்கூட பிடிக்காதது போல் வேகமாக அங்கிருந்து நடந்து அடுத்து வந்த திருப்பத்தில் மறைந்து போனார் ……
அந்த காரை ஓட்டி வந்தவன் தானும் சற்று நேரம் அங்கேயே தன் தலையை பிடித்துக்கொண்டு நின்று விட்டு பிறகு தன் காரை கிளப்பிக் கொண்டு செல்ல……..
இப்போ என்னடி பண்றது யார் இந்த ஆளு இவனுக்கும் அத்தைக்கும் என்ன சம்பந்தம்…?? ஒன்னும் புரியலையே அத்தை ஏன் அந்த ஆளிடம் கோபமாக பேச வேண்டும்…?? என்று நிலா கேட்க அதை நாம் கூடிய சீக்கிரமே கண்டுபிடித்து விடலாம்…… உறுதியாகச் சொன்ன ஷிவானி இப்போது தன் அத்தையை விட்டு விட்டு…… அந்தக் காரை மீண்டும் பின்தொடர சொன்னாள்…….
கடைசி வரை சென்று அந்த மனிதனைப் பற்றிய முழுத் தகவலை…… எப்படியும் அறிந்துகொண்டு அவனுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் உள்ள ரகசியத்தை தெரிந்துகொள்ள ஷிவானி முழு உந்துதலோடு செயல்பட ஆரம்பித்தாள்……..
விளக்கை நோக்கிய விட்டில் பூச்சியாய் இன்றைய அவளின்……பயணம் ஷிவானியை எங்கு கொண்டுபோய் எந்த ஆபத்தில் மாட்டி விட காத்திருக்கிறதோ அதை யார் அறிவார்…….
சின்ரெல்லா வருவாள்………..