ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.5
அத்தை மா பிளீஸ்….!! என்னடா செல்லம் இல்ல…… நீங்க என்னோட பேபி இல்ல….நான் எது சொன்னாலும் கேப்பிங்க தானே…..?? எனக்கு கால் சரியாகிவிட்டது பாருங்க…… அந்த குட்டி வீட்டில் பூர்ணிமா எங்கு போனாலும் அவர் பின்பே……
அழகிய செல்ல நாய் குட்டியாய்…. தன்னையே . சுற்றி சுற்றி வரும் அண்ணன் மகளை இப்போது……. பொய்யாக கோபம் கொண்ட பார்வையால் முறைக்கு ஆரம்பித்தார் பூர்ணிமா…….
அந்த பார்வை கூட தாங்க முடியாமல் சிறு குழந்தையாய் ஷிவானி இதழ்களை பிதுக்கி முகத்தை சுருக்க……இதற்கு மேல் அவர் எங்கே அவளை அதட்டுவது……?? அதற்கு பதிலாய் அவளின் இரண்டு கன்னங்களையும் பிடித்து கொஞ்சியவர்…..ஷிவுமா சொன்ன புரிஞ்சுக்கடா உனக்கு கால் சரியான மாதிரி தெரியும்…… ஆனா வேகமாக நடந்தாலோ இல்லை ஓட முயன்றாலோ……. பாதம் வலிக்க ஆரம்பித்து விடும்……..
அதனால இன்னும் ஒன் வீக் நல்ல பிள்ளையாக வீட்டில் ரெஸ்ட் எடு , அப்புறமா காலேஜ் போகலாம்…… கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் அவர் கேட்க ஆனால் ஷிவானியால் அவர் சொல்வதை துளி அளவு கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை…….
இந்த ஒரு வார காலமாகவே ஏதோ சிறைப்பட்டது போல் வீட்டில் கிடந்து தவிக்கும் தன் நிலை குறித்து அவளுக்கு சிறு வெறுப்பு கூட வர ஆரம்பித்திருந்தது…….
இதில் அன்றைய நாள் பற்றிய கண்டுபிடிக்க வேண்டிய பல ரகசியங்கள் உண்டு என்கிற போது…… அவள் அமைதியாய் வீட்டில் இருந்தால் அதை எல்லாம் துப்பறிவது யார்…..?? தன்னை பயமுறுத்திய அந்த அது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்………
அத்தோடு தன் அத்தையிடம் வம்பு செய்தவன் யாரென்றும் அறிய வேண்டும்…….இவ்வளவு வேலைகள் இருக்கும் போது இன்னும் ஐந்து நாட்களுக்கு அவளால்….. வீட்டில் அமைதியாக இருக்க முடியும் என்று ஷிவானிக்கு தோன்றவில்லை…….
தன் முகத்தையே பார்த்தபடி சிலையாகிவிட்ட ஷிவானியின் தோளில் தட்டி என்ன யோசனை…?? பூர்ணிமா கேட்க…. அதில் சுதாரித்தவள் அவரை பார்த்து ஒன்னும் இல்லையே……ஹீ…ஹீ.. சற்று வழிந்தபடி சிரித்து சமாளித்தவள்……. முகத்தை பல கோணங்களில் அப்பாவி போல் மாற்றி…… இன்னும் ஏதேதோ பேசி ஒருவழியாக அன்று கல்லூரிக்கு செல்ல…..அத்தையிடம் அனுமதி வாங்கிய ஷிவானி தன் கேள்விகளின் பதில்களை தேடி கிளம்பிவிட்டாள்……..
ஆனால் ஐயோ பாவம்….!! இன்று முதல் தன் நிலை என்ன…? என்று தெரியாமல் . ஏதோ ஜேம்ஸ் பாண்டின் தங்கை போல் கிளம்பிய ஷிவானியை பார்த்து அந்த விதி கூட கேலியாய் சிரித்தது……
ஹாய் ஷிவு குட்டி என்ன திடீர்னு சர்ப்ரைஸ் உள்ள வாடா கால் எல்லாம் இப்போ எப்படி இருக்கு….. பூர்ணிமா உன்னை எப்படி வெளியே விட்டாள்..?? அன்று காலையிலேயே தன் வீட்டிற்கு வருகை தந்த ஷிவானியை அன்போடு சேர்த்து ஆர்ப்பாட்டமாய் வரவேற்றார் சிவகாமி……
ஹாய் சிவா மா கால் இப்போ சரி ஆகி விட்டது இன்னும் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொன்ன உங்க தோழி இடம் இருந்து எப்படியோ முயன்று தப்பித்து வந்து விட்டேன் அவருக்கு சற்றும் குறையாத உற்சாகத்தோடு பதிலளித்தவள்……
எங்க இவ்வளவு காலையிலேயே உங்க அன்பு மகன் அந்த முட்டை போண்டா அப்புறம் உங்க லவ்வர் பாய் யாரையும் வீட்டில் காணவில்லை………என் மகனை என் முன்பே கிண்டல் பண்றியா கழுதை…. என்றபடி சிறியவளின் காதைப் பிடித்து சிவகாமி விளையாட்டாய் திருக…….
ஐயோ சிவமா ப்ளீஸ்.. விடுங்க சாரி சாரி இன்றிலிருந்து உங்க பையன நான் முட்டை போண்டா என்று சொல்லவே மாட்டேன்….. வெங்காய போண்டான்னு கூப்பிடுறேன்……
அவள் மன்னிப்பு கேட்பதில் சமாதானமாகி ஷிவானியின் காதை விட்டவர்….. இப்போது மீண்டும் அவளைத் துரத்த ஆரம்பிக்க….. சிறிது நேரம் அந்த அழகிய வீட்டின் வரவேற்பறை அந்த இரு பெண்களின் பந்தயக் களமானது…….
ஓடிப்பிடித்து விளையாடி ஓய்ந்து அங்கிருந்த சோபாவில் குலுங்கிச் சிரித்த படி இருவரும் அமர…… அதுவரை உற்சாகத்தில் தெரியாத கால் வலி அமர்ந்தவுடன் சற்று பலமாய் தெரிய ஆரம்பித்ததை ……. சிறிதான அவளின் முக சோர்வை வைத்தே கண்டுகொண்டவர்……
அச்சோ…ஷிவு என்னம்மா கால் வலிக்குதா..?? இப்போ இந்த நிலைமையில இப்படி ஓடிப்பிடித்து விளையாட்டு தேவையா…..?? உன்னோடு சேர்ந்து நானும் அறிவில்லாம உன் கூட விளையாண்டேன் பாரு…….தன் கால்களைப் பிடித்து ஆராய முயன்ற சிவகாமியின் கைகளை எட்டிப் பிடித்தவள்…..
சிவா மா அதெல்லாம் இருக்கட்டும் நான் இப்போ இங்க வந்ததுக்கு காரணம் …..கொஞ்ச நாள் முன்னாடி அத்தைக்கு ஏதோ பிரச்சனை என்னிடம்…… கூட அதைப் பற்றி தெரியப்படுத்த வேண்டாம் என்று அவங்க சொல்லியதாய் சொன்னீங்களே…….
அது என்ன விஷயம் எனக்கு தெரியணும் முகத்தில்….. உறுதி கைகாட்டி அழுத்தம் திருத்தமாய் ஷிவானி கேட்க……அம்மாடி அது கொஞ்சம் பெரிய சமாச்சாரம் தான்……ஆனால் அதைப் பத்தி எனக்கு அவ்வளவு டீடெயிலா ஒன்னும் தெரியாது…….
நம்ம காபி ஷாப் இருக்கே அந்த இடத்தின் உரிமையாளர்…. மிஸ்டர் நமச்சிவாயம் அவர் ஒரு பத்து இருபது நாளைக்கு முன்னாடி வந்து பூரணி கிட்ட எதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்லி……. வெளிய கூட்டிட்டுப் போனாரு……..
அவ கிட்ட மட்டும் பேச வேண்டும் என்றதால் நான் உடன் போக முடியவில்லை…… ஆனா ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்த பூர்ணிமா முகத்தில் பழைய இயல்பு மாறி….. ரொம்பவே கோபம் ஆத்திரம் அத்தோடு அவள் திரும்பி வந்து ரொம்ப நேரத்துக்கு…… ஏதோ ஒரு தீவிர யோசனையில் மூழ்கியது போல் இருந்தது நான் வற்புறுத்தி கேட்டும் கூட எதுவுமே சொல்லல…..
அதற்கு பிறகும் அவர் இரண்டு மூன்று முறை நம்ம கடைக்கு வந்து இருக்காரு……. ஆனால் எப்படிக் கேட்டுப் பார்த்தும் பூர்ணிமா விஷயம் என்னன்னு…… என்னிடம் சொல்ல மறுத்துவிட்டாள் அதோட இங்க நடக்கிற எந்த பிரச்சனையும் உனக்கு தெரிய கூடாது என்றும் தடை போட்டுட்டு விட்டாள்……
நடந்த அனைத்தையும் சிவகாமி சொல்லி முடிக்க…….தன் மனக் குழப்பங்களுக்கு ஏதாவது விடை கிடைக்கிறதா என்று…… அங்கு வந்த ஷிவானிக்கு இப்போது இன்னும் குழப்பமும் கேள்விகளும் அதிகரித்தது போல் தான் தெரிந்தது…….
அன்று தான் அத்தையுடன் அந்த தெருவில் பார்த்தது நிச்சயம் நமச்சிவாயம் கிடையாது…… வயதான தலை நரைத்த அந்த மனிதரை பலமுறை ஷிவானி பார்த்திருக்கிறாள்….. அன்று அவனின் முதுகுப்புறம் மட்டுமே அவள் பார்க்க கிடைத்தாலும்…….
ஆறடிக்கும் மேல் உயரமாக கருமையான முடியோடு திடகாத்திரமாக இருந்த அந்த ஆண்…. நிச்சயம் அந்த வயதான மனிதர் இல்லை , அப்படியிருக்க பூர்ணிமா விடம் தகராறு செய்த அவன் யார்…..??
இந்த நமச்சிவாயத்திற்கு அத்தையுடன் ரகசியமாக பேச வேண்டிய காரணம் என்ன அதுவும் அத்தையை இத்தனை வருத்தப்பட வைக்கும் விஷயம்…?
இவை அனைத்தையும் தாண்டி அவளை கல்லூரியில் வைத்து வேண்டுமென்றே திட்டமிட்டு தனிமைப்படுத்தி……. பயம் காட்டியது யார்…?
அன்று நடுவீதியில் தன்னை அத்தனை ஆக்ரோஷமாக கார் கொண்டு இடிக்க வந்தது அது யார்…? யோசிக்க யோசிக்க மூளையே வெடித்துவிடும் போல்…. தலைக்குள் . ஒரு அழுத்தம் உண்டாக இரு கைகளால் தலையை பிடித்துக் கொண்டவள்……. கண் இருக்கும் இடம் உணர்ந்து…..
முகத்தில் எதுவும் காட்டாமல் சரி சிவா மா மறுபடியும் அந்த ஆள் நம்ம இடத்துக்கு வந்த அவர்….. அறியாமல் அவர்கள் பின்னால் இருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்……அவள் எதற்கு அப்படி சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டு தான்….
சரி ஷிவானி இப்போ ரொம்ப டைம் ஆயிடுச்சு நீ எப்படி காலேஜ் போவாய்….. நான் வேண்டுமென்றால் உன்னை கேம்பஸில் டிராப் பண்ணட்டுமா….?? கேட்டு விட்டு ஷிவானி சரி சொல்லும் முன்னும் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவர்….. அவளை பத்திரமாக கல்லூரியின் முன்பு இறக்கி விட்டு…… டாட்டா காட்டி சென்றுவிட்டார்……
சிவகாமி கிளம்பிச் சென்றதும் கூட தன்னை எலியாய் சுரண்டும் குழப்பங்களால்….. நகராது சற்று நேரம் வாசலிலேயே. நின்றளை வினோதமாக பார்த்த அந்தக் கல்லூரியின் பாதுகாவலர்…….
என்னம்மா பொண்ணு உள்ள போகிற மாதிரி எந்த ஐடியாவும் இல்லையா…… யாராவது பாய் ஃபிரண்ட் வரணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கியா என்ன….?? சிறிது நக்கலும் ஆராய்ச்சியுமாய் அந்த மனிதன் கேட்க அந்த கேலி குறளில் சட்டென்று தெளிந்தவள்….
அவன் கேள்வியை உள்வாங்கி அதனால் எழுந்த கோபத்தால்……… தன் நெருப்பு பார்வையை அவனுக்கு வீசிவிட்டு……. ஒன்றும் பேசாமல் விடு விடுவென்று உள்ளே நடந்தாள்……
அவள் ஏற்கனவே மிகத் தாமதமாக கல்லூரி வந்திருக்க . இப்போது முதல் பாட வேளையில் பாதி நேரம் வேறு கடந்திருக்க….. நடுவில் வகுப்பறைச் சென்று ஆசிரியரிடம் திட்டு வாங்க பிடிக்காமல்…… சிறிது நேரம் எங்காவது ஓய்வாக அமர்ந்து இருக்கலாம் என்று நினைத்தவளின் கால்கள்….. ஷிவானியின் கட்டுப்பாட்டை மீறி தானாய்ச் சென்று நின்ற இடம்….??!! அவள் கல்லூரியின் இன்டோர் பாஸ்கெட்பால் ஸ்டேடியம்……கிட்டத்தட்ட அந்த வளாகத்திற்குள் நுழைந்ததும் தான்…..
தான் இங்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டவளின் மனதில்…… சற்று நாளாய் அவள் நினைவை விட்டு ஒதுங்கியிருந்த யுகேந்திரனின் ஞாபகமும் வந்து சேர்ந்து கொள்ள…… இப்போது சற்று மகிழ்ச்சியாகவே உள்நுழைந்தவளின் கண்களுக்கு காணக்கிடைத்த காட்சியில்…….
பார்த்த விழிகள் பார்த்தபடியே இருக்க அவள் முழு உடல் மொத்தமும் பிரம்மிப்போ…?? என்னும் அளவிற்கு அசைவற்ற நிலை உருவாக……. இமைமயிர் கூட அசையாது
தன். எதிரில் வெறித்தபடி நின்ற பெண்ணவளை….. சடுதியில் மின்னலின் விரைவில் தாண்டிச் சென்றது……. அவன் தன் இடது கையால் இலகுவாக வீசிய கூடைப்பந்து………
இப்போதும் இந்த நேரத்தில் யுகேந்திரன் மட்டுமே அங்கு தன் குழுவோடு கூடைப்பந்து பயிற்சியில் இருப்பான்…….அடிக்கடி மறைந்திருந்து தன் தோழிகளோடு அவனை காண்பது ஷிவானியின் தினப்படி பொழுதுபோக்குகளில் ஒன்று…….
முதலில் அந்த விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தால் அப்படி பார்க்க ஆரம்பித்தது போகப்போக….. எப்படி என்று உணராமல் அந்த விளையாட்டை மிகவும் திறம்பட விளையாடும் யுகேந்திரன் மீதான ஆர்வமாக மாறிவிட்டது…….
பழக்கதோஷத்தில் இன்றும் அவனின் பயிற்சி ஆட்டத்தைப் பார்க்க வந்தவளின்…… கண்களில் அவனுக்கு பதில்……..அவள் இதுவரை அந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு முறை கூட கண்டிடாத முற்றிலும் புதிய ஆண்கள் நாலைந்து பேர்…….
உயர உயரமாய் வாட்டசாட்டமாய். அரைகுறை உடையோடு பார்க்கும் போதே நெருப்புப் பொறி பறப்பது போல் மாயையை உண்டாக்கும்……
அதிதீவிர போட்டியில் ஈடுபட்டு இருப்பது போல் அவளுக்கு தோன்றியது……… அவர்களின் விளையாட்டு முறையும் ஆக்ரோஷமும் ஷிவானியை அதே இடத்தில் அசைய விடாது கட்டிப் போட…… மெய் மறந்து பார்த்து நின்றவளின்….. வலது புறம்….விஷ்…. என்ற பலமான காற்றோடு தாண்டிச் சென்ற பந்தின் மூலமாக……. நினைவு பெற்றவள் இப்போது சற்று கவனமாய் அவர்களைப் பார்க்க…….
தன் கண்கள் பார்த்து மூளை அங்கீகரித்த செய்தியில் ஒரு அதீதமான நடுக்கம் ஒரு வகை திகிலோடு…… அவளின் உள்ளங்கால் தொட்டு உச்சி முடி வரை ஓடி மறைய தன்னையறியாமல் இரண்டடி பின் வைத்து நகர்ந்து நின்றாள் ஷிவானி……..
தன் பார்வைக்கு முன்…. அந்த ஐவரில் முதன்மையாய் . அவர்கள் அனைவரையும் விட உயரமாய் , தீப்பொறி பறக்கும் அனல் முகம் காட்டும் அந்த விளையாட்டின் மொத்தத்தையும்……. தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் சுற்றி சுழன்றாடும்…….
அந்த அவனை மட்டும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை ஷிவானி பார்த்திருக்கிறாள் , அது அன்று யுகேந்திரன் இடம் தான் காதல் கடிதம் கொடுக்க முயன்றபோது…. தவறிப் போய் இவனிடம் கொடுக்க நேர்ந்தபோது…….. கண்ணோடு கண்ணாய் ஒரு ஐந்து நிமிடம் அவனை கண்டிருக்கிறாள்…….
அன்று போலவே இன்றும் கூட அதே பயம் அதே நடுக்கம் அவனைப் பார்த்த கணத்தில் தன் மீது உண்டாகும்….. விந்தை தான் என்ன என்று அவளாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை……..
தன் நினைவில் அதுவரை இருந்த அனைத்தும் நீர் கொண்டு அழித்தது போல் மறைந்து போக…….. மூளை வேலை நிறுத்தம் செய்ததாலோ என்னவோ…?? பந்தை தட்டி கொண்டே தன்னை நோக்கி வரும் அந்த அவனின்….. சுத்தமான வார்த்தைகள் கூட அவள் செவியை எட்டிய போதும் மூளையை எட்டாமல் போனது……….
இரும்புத் தூண் போல் வலிமையான அவன் மார்பில் மோதி வினாடியில் கீழே விழுந்தவளை……. காப்பதற்கான எந்த முயற்சியும் இன்றி
கோபம் நிறைந்த அலட்சியத்தோடு அவன் பார்க்க…..
அவன் மார்பில் மோதி அதன் வலிமை தாங்க இயலாது…. கீழே விழுந்தவளோ ஏற்கனவே அடிப்பட்ட பாதத்தோடு சேர்ந்து தரையில் மோதிய இடுப்பும் அதிக வலியை கொடுக்க…..
விழியோரத்தில் முணுக்கென்று பூத்து விட்ட நீரோடு ஷிவானியும் நிமிர்ந்து அதே நேரம் அவனை பார்த்தாள்…….
ஏய் யூ பிளடி இடியட்…..யூ டோண்ட் ஹவ் பிரைன்……. நான் அங்க இருந்து உன்னை தள்ளி போக சொல்லி சத்தம் போட்டுக் கொண்டே வரேன்…… நீ என்னடான்னா காது கேட்காத , கண்ணு தெரியாத அசைவில்லாத பொம்மை மாதிரி நிக்கிற……
உன்ன மாதிரி முட்டாள் எல்லாம் யார் இங்க விட்டது… கண்களில் கண்ணீரோ வலியால் சுளித்த முகத்தோடு தரையில் விழுந்து கிடந்த அவளின் பரிதாப நிலை சிறிதளவு கூட அந்த அவனை பாதித்தது போன்று தெரியவில்லை……..
திகுதிகுவென்று பற்றி எரியும் நெருப்பில் இட்ட இரும்பு போல் சிவந்திருந்த அவன் முகத்தில் எங்கு காணினும் கோபம் கோபம் கோபம் மட்டுமே வியாபித்திருந்தது…….
உடலில் உண்டான வலியை விட ஏனோ அந்த புதியவன் முன்பு அவமானப்பட்டு….. தரையில் கிடக்கும் கோலம் ஷிவானியை மிகவும் மோசமாய் பாதிக்கு……
வெகு வெகுவாய் முயன்று அங்கிருந்த இரும்பு கம்பத்தை பற்றியபடி எழுந்து நின்றவள் . அங்கு அவளை கேலியாய் பார்த்து தங்களுக்குள் சிரித்தபடி….. நக்கல் அடித்துக் கொண்டிருந்த மற்ற இவரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கக் கூட பிடிக்காமல்……..
நொடிக்கு நொடி அதிகமான விசும்பலோடு அந்த ஆடிட்டோரியத்தை விட்டு காலை விந்தி விந்தி….. வெளியில் நடந்த ஷிவானியை அனல் தெறிக்கும் கண்களால் பார்த்தபடி நின்றிருந்த அவன் முகத்தில் இப்போது அதுவரை இருந்த……
கோபம் விலகி ஓட….. காண்பவர் எவரையும் கலங்க வைக்கும் அந்த கண்ணீர் தோற்றத்தை…..தன் உதட்டில் தோன்றிய சற்று வித்தியாசமான இளக்கார புன்னகையோடு அவன் ரசித்து பார்த்திருந்தான்…….
அந்த அவன் ஆரியன்….இனிவரும் நாளில் அந்த அன்பான சிறு பெண்ணின் தலையெழுத்தை அலங்கோலமாய் மாற்றி எழுத போகிறவன்……..
சிண்ட்ரெல்லா வருவாள்………