ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.16
அந்த நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் மரத்தில் மோதி மணல் லாரி ஒன்று நின்றிருக்க….. அதன் அடியில் முழு மொத்தமாய் உருக்குலைந்த நிலையில்….. சில மணிநேரங்களுக்கு முன்பு புதிதாய் திருமணம் முடித்து பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு பயணம் தொடங்கிய ஆரியன் ஷிவானி தம்பதியினர் வந்த அந்த விலை உயர்ந்த கார்…… மணப்பெண் அமர்ந்திருந்த ஒரு பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கி கிடந்தது….. விபத்து நடந்து சில மணி நேரங்கள் சென்றிருக்க விபத்தின் மிச்ச மீதியை பலர் நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்……
பெரும்பாலானோர் தங்கள் தொலைபேசி கேமராவின் மூலம் விபத்து நடந்த இடத்தை வெகு சுவாரஸ்யமாய் தங்கள் செல்போனில் காணொளியாயை பதிவு செய்ய….. அதில் சிறிது மனிதாபிமானம் மிக்க மனிதர் யாரோ அழைத்ததால் சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்து சேர்ந்தது….. உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் அதன் பிறகு அனைத்தும் அவசரகதியில் நடைபெற……உணர்விழந்த நிலையில் கிடந்தவர்களை சுமந்துகொண்டு மருத்துவமனை நோக்கி பறந்தது அந்த வாகனம்…….
என்ன நடந்தது என்பதை உணரக் கூட அவகாசம் இன்றி நடந்து முடிந்த விபத்தின் தாக்கத்தில்….. முழுதாய் செயல்பட முடியாமல் மூளை மரத்த நிலையில் அந்த அரசு மருத்துவமனை வளாகத்தினுள் ஒரு அறையில் போடப்பட்டிருந்த படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தான் ஆரியன்…..
எதையும் சிந்திக்க முடியாத அளவிற்கு உடல் ஆங்காங்கே வலிக்க இருந்தும் நடந்தவற்றின் தாக்கம் அவனை யோசிக்கத் தூண்டியது…….என்ன நடந்தது. தான் சற்று தவறி இருந்தாலும் என்ன நடந்திருக்கக் கூடும்…… என்பதை பெரும் திகிலோடு மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தது அவன் உள்ளம்………
அந்த இரும்பு மனிதனையே நொடிப்பொழுதில் அசைத்துப் பார்த்து விட்டாள் அவன் மனையாள்…..
என்னதான் மகிழ்ச்சியில் திளைப்பதாக நினைத்ததை நடத்தி முடித்த சந்தோஷத்தோடு இருப்பதாக ஆரியனின் முகம் காட்டிக் கொண்டாலும்….. உண்மை யில் மகிழ்ச்சியின் சாயல் கடுகளவு கூட அவன் மனதில் இல்லை……. அதற்குக் காரணம் தன் அருகில் எவ்வித அசைவும் இன்றி உயிர்ப்பை எங்கோ தொலைத்துவிட்டு….. துயரத்தின் முழு உருவமாய் சிலையாக அமர்ந்திருக்கும்….தன் இல்லாள் பற்றிய சிந்தனையே உள்ளம் முழுவதும் வியாபித்திருக்க……
அதை தொடர்ந்து ஏதேதோ எண்ணங்கள் வந்து மனதை முட்டி மோத….. இதில் ஏற்கனவே வேகமாக தான் செலுத்திக் கொண்டிருந்த வாகனத்தின் விசையை…..தன்னிச்சையாய் அவன் கால்கள் மேலும் வேகப்படுத்த…… சாலையில் கண்மண் தெரியாத வேகத்தில் பறந்து கொண்டிருந்தது அவன் கையில் அந்த கார்……
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக வார்த்தைகளற்ற மௌனத்தில் மூழ்கி இருந்த ஷிவானி அந்த நிமிடம்…… திடீரென்று அத்தனை ஆவேசத்தோடு அவன் புறம் பாய்ந்து ஆரியனின் சட்டையை பிடித்து இழுக்க…… முதலில் ஒரு சில நொடிகளுக்கு ஒன்றும் செய்யத் தோன்றாமல் அவள் புறம் சாய்ந்தவன்…. அலறலாக கேட்ட ஹாரன் சத்தத்தில் தன்னை. நொடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்து சாலையை பார்க்க…..
இவன் காரில் வேகத்துக்கு சற்றும் குறையாத விரைவில் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது அந்த லாரி……..இரண்டு நிமிட இடைவெளியில் எப்படியும் இரு வாகனங்களும் தவிர்க்கும் வழி இன்றி ஒன்றையொன்று பலமாக மோதிக் கொள்ளப் போவது உறுதி என்று அவன் புத்தியில் உரைக்க……..
அதுவும் ஷிவானி அமர்ந்து இருக்கும் இடது பக்கம் தான் முதலில் லாரி உடன் உராய போவதை கணக்கிட்ட ஆரியன்….. அதற்கு மேல் ஒரு மணித்துளி கூட தாமதிக்காமல் சென்டர் லாக்கை விடுவித்து விட்டு….. தன் சட்டையை இன்னமும் பிடித்து இழுத்தபடி இருந்த ஷிவானியின்…… கழுத்தோடு ஒரு கரமும் முதுகை மொத்தமாய் அணைத்தது போல் மறு கரத்தையும் செலுத்தி தன் உடலோடு அவளை பிணைத்துக் கொண்டு…… கீழே விழுந்தாலும் அவளுக்கு எந்த அடியும் படக்கூடாது என்ற ஆவேசத்தோடு தன் முழு பலத்தையும் உபயோகித்து…..கதவைத் திறந்து அவளொடு அவன் வெளியில் குதித்த. சரியான அதே வினாடியில்……. ஷிவானி அமர்ந்திருந்த காரின் இடதுபக்கம் முழுவதும் லாரியில் பக்கவாட்டில் பெரும் சத்தத்தில் மோதி நொறுங்கியது…..அந்த சத்தத்திற்கு பிறகு எதையும் செவியுற முடியாமல்…..
நினைவுகள் மொத்தமாய் மயக்கத்திற்கு செல்ல. அப்போதும் தன் கைப்பிடியில் இருக்கும் மனைவியின் உடலை…. தன்னோடு இறுக்கி அணைத்து பாதுகாத்த படியே தன் நினைவை இழந்தான் ஆரியன்…….
மனக்கண்ணில் தோன்றி மறைந்த நிகழ்வுகள் சற்று அதிகப்படியான அச்சத்தை ஆரியனுக்கு கொடுத்தது தான் மயங்குவதற்கு முன்பு தன் கரத்தில் அசைவின்றி கிடந்த மனைவியின் ஞாபகம்……..
அவளுக்கு என்ன ஆயிற்று இந்த எண்ணம் தோன்றியதும் தன் வலிகள் மறந்து படுக்கையில் இருந்து எழ முயன்று முடியாமல் தவித்தபடி…… பார்வையை சுழற்றியவனின் கண்ணில் பட்டாள் மயங்கி கிடந்தாலும் எந்தவித சிறு கீறலும் இன்றி….. உறங்குவது போல் நிர்மலமான முகத்தோடு விழி மூடி இருந்த அவன் ஆருயிர் மனைவி……. அவள் அருகிலேயே நின்று ஏதோ எழுதிக் கொண்டிருந்த நர்சை கண்டவன் சிஸ்டர் என்று அழைத்து ஷிவானி பற்றி கேள்வி எழுப்ப…… அவங்க நல்லா இருக்காங்க சார் எந்தவிதமான காயமோ வீக்கமோ இல்லை இருந்தாலும் டாக்டர் வந்து சொல்ற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று விட்டு செல்ல…….
அவளைப் பற்றிய கவலையில் அதுவரை தடைபட்ட சுவாசமானது தன்னவளை நலமாக கண்ட பிறகு தன் வேலையை மீண்டும் தொடங்க…… ஆழமான மூச்சு எடுத்து நிதான பட்டவன் உள்ளம் அவளின் செய்கையில் சற்று குழம்பியது…….
கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கும் மேலாக யாருடனும் பேசாமல் தன்னுடன் திருமணம் என்பதை கூட எதிர்க்காமல்……அமைதி காத்தவள் இன்று சட்டென்று அத்தனை ஆபத்தான செயலை யோசிக்காமல் செய்ததன் காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவன் ஒன்றும் முட்டாள் அல்ல…….
சொல்லப்போனால் ஷிவானியை பற்றி அவளுக்கு தெரியாததை கூட அறிந்து வைத்திருக்கும்…… அதன்படி அவள் பலகினம் அறிந்து அதைக் கொண்டு தன்னிஷ்டப்படி எல்லாம் அவளை ஆட்டிப் படைக்கும் மாகா புத்திசாலி ஆயிற்றே இந்த ஆரியன்……. இதுவரை கண்மூடித்தனமாக தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றிய கவனமின்றி இருந்தவள் இப்போது சற்று மூளையை உபயோகித்து யோசித்து இருக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது……
அவள் சற்றுத் தெளிவாக
யோசித்திருந்தால் கூட அவள் துன்பம் அனைத்திற்கும் காரண கர்த்தாவாக அவனை மட்டுமே அவள் மூளை முன்னிறுத்தி இருக்கும் என்பதையும் அவன் அறிவான்……. அப்படி அவன் ஆராய்ந்து கண்டுபிடித்த பின் விளைவு சில நாட்களாக தன் உணர்வுகளை பூட்டி வைத்த அழுத்தம் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து….. இடம் பொருள் ஏவல் இன்றி அவனைத் தாக்க அவளை முற்படுத்தி விட்டது…….. ஷிவானி நிலையை மிக நன்றாக புரிந்துகொள்ள முடிந்த ஆரியனுக்கு அவள் மேல் பரிதாபத்தோடு எரிச்சலும் சேர்ந்தே வந்தது……
அவசர புத்தி…. அதே தன் செயலை குறித்த பின் விளைவுகள் பற்றிய கவனமின்றி செயல்படும் அவசர புத்தி….. அவளின் பெரும் பலகீனமான அதுவே பல நேரம் ஆரியனுக்கு அவள் மீதான கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது……இவள் எப்போது தான் நிதானமாக யோசித்து செயல்பட ஆரம்பிப்பாள் என்று தெரியவில்லை……எத்தனை பெரிய ஆபத்தில் சிக்கி மீண்ட பிறகும் நிதானம் வரவில்லை என்றால்…..ஷிவானியை நினைத்துப் பல்லை கடித்தவன்….. அடுத்த நொடி அதுவரை மனதில் நினைத்திருந்த அனைத்து திட்டங்களையும் மாற்றி அமைத்தான்…..
இருக்கட்டும் இன்னும் சற்று காலம் அவள் நிதானம் பெரும் வரை அவன் காத்திருந்தான் தீரவேண்டும்……இப்போது அவன் நிலைப்பாட்டை எடுத்துரைத்தாள் அதை செவியுற்று அமைதியாக ஆராய்ந்து பார்க்கும் நிதானம் அவளிடம் நிச்சயம் இருக்காது…… அதற்கு பதில் அவளின் இந்த கோபத்தையும் அவன் மீதான வெறுப்பையும் வழக்கம் போல் தான் திட்டத்திற்காக உபயோகித்துக் கொண்டால் என்ன என்று. வழக்கம்போல் சற்று விபரீதமாக ஆரியன் சிந்தித்தான்…….
அந்த அதீத புத்திசாலிக்கு அந்த நேரம் தெரியவில்லை தான் சிக்கலில் மாட்டி வைப்பது…. ஷிவானியை மட்டுமல்ல அவளோடு சேர்த்து தன் எதிர்காலத்தையும் என்பதை…….
அத்தோடு இப்போது தன் அருகிலேயே இருக்கப்போகும் அவன் அழகிய பூனைக்குட்டியை எப்படி வேண்டுமானாலும் சீண்டிப்பார்க்கும் உரிமையும் அவனுக்கு இருக்கிறதே…….முன்பு போல இரவும் பகலும் அவளை எங்கோ தூரத்தில் நிறுத்தி விட்டு தவிக்கும் நிலை அவனுக்கு இனி ஏற்படப் போவதில்லை…….கண்ணுக்குள் கருவிழியாயை அவளை இனி அவன் பார்த்துக் கொள்வான்…….
ஒரு பக்கம் தோள்கள் தொடங்கி முழங்கை முழுவதும் அவளைப் பாதுகாக்கும் பொருட்டு அணைத்திருந்ததால் தரையில் உராய்ந்து காயம்பட்டிருக்க…..ஆங்காங்கே பிளாஸ்திரியும் மருந்தும் பூசப்பட்டு இருந்தாலும் அவன் பூனைக்குட்டியின் நினைவில் வலியையும் மீறிய புன்னகை முகத்தில் உதயமாக……. தலையில் பட்ட காயம் கூட வலி மறந்து போனது…….
முயன்று எழுந்து பக்கத்தில் இருந்த படுக்கையின் அருகில் இருக்கையில் அமர்ந்தவன்…… அவள் நெற்றி வகிட்டில் அவன் வைத்த குங்குமத்தில் இருந்து பாத விரலில் அம்மி மிதித்து…… தான் அணிவித்த மெட்டி வரை நிதானமாக பார்வையிட்ட அவனின் விழிகள் கடைசியாய் அங்கேயே நிலை பெற……..தங்களுக்கு நடந்த திருமணமும் அதை நடத்த தான் மேற்கொண்ட வழிமுறைகளும் ஒவ்வொன்றாய் மனதில் தோன்றி அவனை சூழ்ந்து கொள்ள………
என்ன நினைத்தானோ சற்றென்று விழிகள் கலங்க பூ போன்ற தன் மனைவியின் பாதங்களை…. கைகளால் சற்றும் அழுத்தமின்றி மென்மையாய் பிடித்தவன்….. அதில் தன் முகத்தைப் பொருத்தி விழிமூடி சற்று நேரம் அமைதி காத்தவன் அந்த சிறு தங்க மெட்டி அணிந்த அழகிய பிஞ்சு விரல்களில் தன் உதடுகளை குவித்து முத்தமிட்டான்…….
ஐ அம் சாரி மை ஸ்வீட் லிட்டில் கிட்டி என்று சற்றுக் தவிப்போடு முணுமுணுத்தன அந்த ஆறடி உயர ஆண்மகனின் உதடுகள்…….
அப்போது அறையின் வாயிலில் சலசலப்புக் கேட்க தன் உணர்வு கலைந்து நிமிர்ந்து எழுந்தவனை எதிர் கொண்ட மருத்துவர் எப்படி இருக்கீங்க மிஸ்டர் என்று அவன் நலன் பற்றி வினவ…. ஐ அம் ஓகே டாக்டர் என் மனைவி எப்படி இருக்காங்க ஏன் இன்னும் கண் விழிக்கவில்லை…… அவசரமாக கேட்க….. ஷிஸ் ஓகே இங்க வரும்போது ரெண்டு பேருமே மயக்கமா தான் இருந்தீங்க அவர்களுக்கு எந்தவிதமான காயமும் இல்லை……. சொல்லப்போனா உங்களுக்கு தான் சோல்டர் ல இருந்து கை ஃபுல்லா காயம்…… பின் தலையிலும் கொஞ்சம் பலமான அடி…….ஒரு வாரமாவது உங்கள் காயங்கள் ஆற டைம் எடுக்கும் அதுவரை மெடிசன் கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க ரீ செக்கப் வர வேண்டி இருக்கும்…..
உங்க மனைவியையும் நாங்க தரோவா செக் பண்ணிட்டோம் அவங்க நல்லா இருக்காங்க……ஒரு பெரிய விபத்தில் இருந்து கடைசி நேரத்தில் தப்பிய அதிர்ச்சியால் வந்த மயக்கம்….. அத்தோடு ஏற்கனவே அவங்க கொஞ்சம் சோர்வா இருந்திருக்காங்க வேற ஒன்னும் இல்ல….. இன்னும் ஒரு மணி நேரத்தில அவங்க நார்மல் ஆயிடுவாங்க நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க…….
இருவரின் நிலையையும் தெளிவாக எடுத்துக் கூறிய மருத்துவர் வேறு நோயாளிகளை பார்க்க விலக ……மீண்டும் படுக்கையில் அமர்ந்த ஆரியன் விழிகள் மட்டும் தன் பார்வையின் முழு எல்லையையும் அவள் ஆக்கி எங்கும் நகராதவாறு அவள்மேல் ஒட்டிக் கொண்டது……..சற்று நேரம் அப்படியே இருந்தவன் செல்போன் ஒலிஎழுப்பி அவன் கவனம் கலைக்க அப்போதுதான் அதன் ஞாபகம் வந்து எடுத்துப் பார்த்தவன்……
நொறுங்கிய டிஸ்ப்ளேவில் மங்கலாகத் தெரிந்த பெயரைப் பார்த்து இதழ்கள் கனிவான புன்னகையில் விரிய….. ஃபோனை உயிர்ப்பித்து உற்சாகமாகப் பேச ஆரம்பித்தான்…….
ஏதோ ஜில்லென்ற கைகளின் ஸ்பரிசம் தன் நெற்றியை மிக மென்மையாய் வருட அந்த சுகத்தில் ஆழ்ந்து….. விழிப்பு வந்தாலும் விழி திறக்க மனமற்று தாமதித்த ஷிவானி யின் மூளை சுரணை வந்து விட்டதால் சுறுசுறுப்பாக செயல்பட…… அவளின் மன அழுத்தங்கள் அனைத்தும் மூளையில் உதயமாக….. அப்போது தான் கடைசியாக நடந்த அந்த சம்பவம் தான் தன் கோபத்தின் உந்துதலால் ஆரியனின் சட்டையை பிடித்து இழுத்ததும்……. அதனால் கார் முற்றிலும் நிலை தடுமாறி எதிரில் வந்த லாரி மோதி இருந்ததும்…….
ஆனால் அதற்குள் அசுர வேகத்தில் செயல்பட்ட ஆரியன் அவளை இழுத்துக் கொண்டு காரிலிருந்து வெளியேறி தரையில் விழுந்ததும்…… அதன் பிறகு…. அதன் பிறகு என்ன நடந்தது என்று அவளுக்கு ஒன்றும் நினைவில்லை….. ஏதோ ஒரு மென்மையான படுக்கையில் கிடத்தப்பட்டு இருக்கிறோம் என்று புரிய…… இந்த கைகளின் ஸ்பரிசம் யாராக இருக்கும் ஒருவேளை அந்த ஆரியனின் கைகளாக இருக்குமோ..!!???
அந்த யோசனை வந்தவுடன் பதறி அடித்து அந்த கைகளை தன் மீது இருந்து தட்டிவிட்டு எழுந்து அமர்ந்த ஷிவானி கண்டது….. கிட்டத்தட்ட 65 வயதினை கடந்த சாந்தமான முகத்தில் லக்ஷ்மி கடாட்சம் பொங்கும் அழகிய வயோதிகப் பெண்மணியைதான்…….. இவர் யார் ஆராய்தல் பார்வையோடு ஷிவானி அவரைப் பார்க்க….. அதற்கு முற்றிலும் நேர் மாறாக சிறிதாக நீர்ப்படலம் நிறைந்த கண்களோடு சோகம் அப்பியிருந்த முகத்தில் கருணை வாஞ்சை இன்னும் மகிழ்வும் நிரம்பித் ததும்ப……. அள்ளிப் பருகுவது போல் அவள் முகம் கண்டவரின் வதனத்தில் ஏதோ ஒன்று அவளுக்கு மிகவும் பரிச்சயமானது போல் இருந்தது……
என்னடா மா எதுக்கு இந்த அவசரம் இப்போ உடம்பு எப்படி இருக்கு….. இன்னும் சோர்வா இருந்தால்…. சற்று நேரம் அமைதியாக படுத்திரு பசியாக இருப்பாய் இந்த பாலை குடி பிறகு மீண்டும் ஓய்வெடுக்கலாம்……
சொன்னதோடு ஒரு வெள்ளி டம்ளர் நிறைய இருந்த அந்த பசும் பாலை அவள் உதட்டோடு பொருத்தி சிறு குழந்தைக்கு புகட்டுவது போல் கொடுக்க…… இமை கூட அசைக்க தோன்றாமல் அந்த பெண்மணியின் கனிவு சிந்தும் முகத்தை தன்னை மீறிய ஆவலில் பார்த்துக்கொண்டே….. அவர் புகட்டிய பாலை மறுப்பின்றி குடிக்க முயன்ற ஷிவானியின் கண்கள் ஏனோ வரையறுக்க முடியாத உணர்வு பிரவாகத்தில் ததும்பி நிற்காமல் கன்னங்கள் வழி ஓடியது கண்ணீர் முத்துக்கள்………
யார் இவர் இத்தனை பண்பை அவள் போன்ற அனாதைக்கு வழங்குவது….. இதற்கு முன்பு தன் அத்தையிடம் கூட இது நாள் வரை….. அவள் அனுபவித்திராத ஒரு உயிரை வருடும் பாச அரவணைப்பின் ஸ்பரிசத்தை….. அவரிடம் உணர்ந்து அதில் லயித்து போக விரும்பியது அந்த சிறு பெண்ணின் அன்பிற்கு ஏங்கி தவித்த குழந்தை உள்ளம்…….
ஆனால் இவை அனைத்தும் சில நிமிடங்களே பாலை குடித்த படி தானிருந்த அறையை சுற்றி விழிகளை சுழல விட்ட ஷிவானியின் பார்வையில் விழுந்து அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது அது……..அடுத்த நிமிடம் தான் எங்கிருக்கிறோம் தன் அருகில் அமர்ந்திருப்பது யார் என்று அனைத்துமே எந்தவித ஐயமும் இன்றி அவளுக்கு தெரியவர…….
நோ…..என்ற ஒற்றை அலறலோடு அதுவரை தான் நெகிழ்ந்து அனுபவித்த அந்த வயதானவரின் அரவணைப்பில் இந்து….. தன்னை முற்றாய் ஆங்காரதோடு உதறிக்கொண்டு வெளிவந்த ஷிவானி அதன் பிறகு ஒரு கணம் கூட தாமதிக்காது அந்தப் படுக்கையை விட்டு இறங்கி ஆராயின் வாயிலை நோக்கி விரைந்தாள்…….அந்த நேரம் தான் அவள் உடலிலும் முகத்திலும் எத்தனை கோபமும் வெறுப்பும்……
அவள் மனம் ஒன்றை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது…….கூடாது தான் இங்கு இருக்கக் கூடாது இந்த இடம் நரகம்…. இங்கு உள்ள நபர்கள் மனிதத்தன்மை அற்றவர்கள்……. எப்படியாவது உடனே இங்கிருந்து போய் விட வேண்டும்…….
சின்ரெல்லா வருவாள்………