ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் உள் அலங்காரமும் அங்கிருந்த மாப்பிள்ளை வீட்டு மனிதர்களின் ஆடம்பர தோற்றமும்…… பெண் வீட்டார் சார்பாக அழைக்கப்பட்டிருந்த பல பேருக்கு பெரும் குழப்பத்தையும் அபரிவிதமான பிரமிப்பையும் கொடுத்தது…..அவர்களின் அந்த வித்தியாசமான எண்ணங்களுக்கு அங்கே பலமான காரணமும் இருந்தது……
அதுநாள் வரையில் தங்களுடன் மிகச் சாதாரணமாக பேசி பழகி உறவு பாராட்டியவர்களுக்கு எங்கிருந்து இத்தனை பெரிய சம்பந்தம் அமைந்தது……. என்ற சந்தேகத்தோடு கண்களில் பொங்கும் பொறாமையும் சேர்ந்துகொள்ள வலம்வந்த பலபேரின் பார்வையும் அங்கு மணமேடையில் தான் பதிந்திருந்தது…..
சினிமாவில் கூட இவ்வளவு அழகான அம்சமான ஹீரோக்களை இப்பொழுதெல்லாம் காட்டுவதில்லை என்றும் குறைபாட கூடிய அளவுக்கு……. கம்பீரத்திலும் அழகிலும் அங்கிருந்த கன்னியர் முதல் பேரிளம் பெண்கள் வரை தன் வசீகரத்தால் வசியப்படுத்தி கொண்டிருந்த மணமகனின் தோற்றம் பலரின் ஏக்க பெருமூச்சை வெளிப்பட வைத்தது…….
மணப்பெண் அழைத்ததற்கான குரல் கேட்க மண்டபமே ஒரு நொடி அமைதியாகி மேடையின் பக்கம் திரும்பிப் பார்க்க……..தங்கம் கொண்டு உடல் முழுவதும் இழைத்த அழகிய பட்டுடுத்தி அதற்குப் மிகப் பொருத்தமாக நகைகளில் பெரும் மதிப்பிலான வைரங்கள் சேர்த்து…….
நெத்திச்சுட்டி முதல் கால் கொலுசு வரை பசுந்தளிர் மேனி முழுக்க வைரங்கள் நட்சத்திரங்களாய் ஒளிவீச அதற்கு நடுவில் முழுமதியோ வான் நிலவோ வண்ண முகிலோ என்று நடந்து வரும் பெண்ணானவள் எழில் அழகு……காதல் காமம் இத்தகைய மனித உணர்வுகளைத் தாண்டி கடவுள் தொழும் பக்தனாய் அவளை காணும் கண்கள் அனைத்தையும் ஒரு நொடி பார்க்க வைத்தது அவளின் ஆளை கொல்லும் பெண்ணழகு………
சொர்க்க லோகத்தின் சொந்தமான மங்கை அவள்…. பூமியில் இறங்கி மணமகளாய் சேர்ந்தது போல் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆடவர் மனதை கட்டி இழுக்கும் பாவை அவளின் பளிங்கு மேனி கண்டு…. ஆடவர் குலமே ஆடி போகும் அளவிற்கு பிரம்மனின் அற்புத படைத்தாய் அழகிய கவிதையாய் அவள் இருந்தாள்………
இத்தனை கம்பீரமான கணவன், இவ்வளவு ஆடம்பரமான வாழ்க்கை, இனி அவளுக்கு குறை என்ன…..என்று பேசிய வெளிமனிதர்கள் சுற்றியிருந்த சொந்தங்கள் அறிந்திருக்க மாட்டார்கள்…… தங்கத் தேரில் பவனிவரும் பேதை அவள் மனதில் ஆறாத காயம் ஏற்படுத்திய ரணத்தின் உயிர் போகும் வலியில்…..உணர்வுகளோடு உள்ளமும் மரத்துப்போய் பொம்மை நிலை கடந்த இயந்திரமாய் அவள் மாறிவிட்ட அவலத்தையும்…….
வண்ணக்கிளியாய் வானில் சிறகை விரிக்கும் அவளை சிறையெடுத்த வேடனின் கைகளிலேயே கிள்ளை யாக வாழப்போகும் தன் மீதான பரிதாபத்தையும்……
ஒரு நிமிடம் தலை குணிந்திருந்த அவள் கண்களை நேருக்கு நேராய் யாரேனும் சந்தித்திருந்தால் தெரிந்திருக்கும்…… அந்த அப்பாவிப் பெண்ணின் உள்ளம் படும் பாடு அத்தனை காயத்தையும் தனக்குக் கொடுத்தவனையே இன்று மணந்து கொள்ள வேண்டிய கொடூர நிதர்சனத்தின் கோரம்……..
தன்னைச் சுற்றி இருப்பவரின் எண்ணங்களையும் தனக்கு நடக்கப் போகும் திருமணம் என……. எதுவுமே புத்தியில் பதியாமல் கல்லைப் போல் இறுகிவிட்ட உணர்வுகளோடு மரித்துப் போன உள்ளத்தோடு தன் அருகில் வந்து அமர்ந்த ஷிவானி யின் நிலையை பரிபூரணமாய் இன்னும் சொல்லப்போனால்…..
மற்ற எவரையும் விட மிக மிக ஆழமாய் புரிந்து கொண்ட அவளின் வருங்கால கணவன் ஆரியனுக்கு.... அவளை பற்றியும் அவள் உணர்வுகள் பற்றியும் எந்தக் கவலையும் இல்லையோ…..
இதழில் நிலைத்த புன்னகை ஒரு நொடி கூட வாடாமல்……..உலகாளும் இராஜராஜன் நானே என்று மீசைய முறுக்கி அறிவிக்கும் திமிரோடு அமர்ந்திருந்தவன் சரியான சுப நேரத்தில் தன் கையேந்திய மங்கல நாணை தன்னை சற்றும் பிடிக்காத இவ்வுலகத்தில் அவனை முழு மொத்தமாய் தன் முதல் எதிரியாய் வெறுக்கும் ஷிவானிக்கு சாத்வீக முறைப்படி அணிவித்து…… என் வாழ்வின் சரிபாதி நீ என் உயிரின் முகவரி நீயே என்னும் முகாந்திரம் இட்டு கட்டி முடித்தான்…..
அன்றைய இரவுக்குப் பிறகு அவளிடம் முதல் முறை சிறு சலனம் கண்களில் தேங்கிய விழிநீர் தரை தொட முயன்று பாதியில் மன்னவன் கரம் சேர்ந்தது……. அவள் உள்ள குமுறலை பறைசாற்ற தோன்றிய அந்த விழி நீர் அவனை சுட்டு விட்டதோ..??!! ஆடிப்பட்ட வலி பொருக்க முடியாத வன் போல் இரு நொடிகள் தன் இமை மூடித் திறந்தவன் முகத்தில் மீண்டும் மீண்டிருந்தது பழைய திமிரும் ஆணவமும்……ஒருவேளை அவைகள் அவன் உடன் பிறந்ததோ…??!!!!
தன்னை மணந்து கொண்டதால் துயரப்படும் மனைவி அவளின்…….அருகில் சற்று நகர்ந்து அமர்ந்தவன் பிறர் கவனம் கவராமல் அவள் முகத்தருகில். சற்று குனிந்த படி வாழ்த்துக்கள் பூனைக்குட்டியே விடுதலை என்ற சொல்லையே மறந்து என் நிரந்தர அடிமையாய் பதவி உயர்வு பெற்றதற்கு……நான் உனக்கு வழங்கிய இந்தத் தாலிக்கு வெகுமதியாய் என் மனைவி என்ற பொறுப்பேற்று இன்றைய இரவு உன் எஜமானனுக்கு சேவை செய்ய காத்திரு……..
சேலை மறைத்திருந்த அவளின் குழைந்த மென்மையான வெற்றிட மீது தன் கரம் பதித்து அழுத்தி வேண்டுமென்றே அவளை வலிக்கச் செய்தவன் சொற்களும் செய்கையும்……. மிச்ச சொச்சமாக எங்கோ மூலையில் சிறிது மீதி இருந்த உயிர்ப்பும் இழந்து அவளை மொத்தமாய் உள்ளத்தால் இறக்க செய்தது…….
ஏற்கனவே ரத்தம் கொட்டும் பச்சை ரணத்தில் அவன் சொற்கள் கத்தியின் கூர் முனையாய் இறங்கி விட்டதோ…… அதுவரை அவனை ஏறெடுத்துப் பார்க்காத ஷிவானி சட்டென்று விழி திருப்பி அவன் கண்களை இரு நொடி தன் உள்ளத்தில் குமுறலை எல்லாம் ஒன்று திரட்டி பார்க்க……. அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தது போல் தன்னை நேராக சந்தித்த மனைவியின் கருவிழிகளை அசைய விடாமல் சிறை செய்ய முயன்றது….. அகம்பாவமும் ஆண் திமிர் கொண்ட அவள் கணவனின் கருணையில்லா புன்னகை சிந்தும் கண்கள்…….
பார்த்தடி பெண்ணினே இப்போதே உன் விழிகளால் என்னை மொத்தமாய் விழுங்கி விடாதே இரவுக்கேன்று சற்று மிச்சம் வை நான் உண்பதற்கு உன்னோடு சேர்த்து…..தன்னை அத்தனை வெறுப்போடு பார்த்த ஷிவானியின் பார்வைக்கு பதிலாய் மீண்டுமாக அவள் புறம் இன்னும் நெருக்கி அவள் காதோடு கவிதை படிக்க…….
அவன் அருகாமையோ அல்லது அவள் செவி தீண்டிய அவன் சுவாசத்தின் சூடோ எதுவோ ஒன்று அவள் பெண் உணர்வுகளை ஆழமாய் தாக்கிவிட…… வெளிப்படையாய் உடல் சிலிர்க்க அவன் நெஞ்சில் தன் தளிர் கை பதித்து ஆரியனை தள்ளிவிட்டவள் முகம் கடு கடுக்க தானும் இரண்டடி நகர்ந்து அமர்ந்தாள்……ஏனோ இப்போது அவன் முகத்தில் எல்லையில்லா ஆனந்தத்தின் உதயம்……..
இளையவர்கள் இருவரின் திருமண வைபவத்தை சற்று தள்ளி நின்று வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமாவின்….. விழிகளில் இன்பமும் துன்பமும் கலந்த இருதுளி கண்ணீர் வரிகள்…… ஒருபக்க இதயம் ஆழ்ந்த அமைதியில் திளைக்கும் போதே மறுபாதி உள்ளமோ பயத்திலும் வருத்தத்திலும்
மூழ்கியது……..
இத்தனை காலம் தான் போற்றி வளர்த்த பொக்கிஷபெண்னை சரியாக சேரவேண்டிய இடத்தில் பாதுகாப்பாய் சேர்த்ததில் மகிழ்ந்தாலும்……பூரிப்போடு மகிழ்வின் மொத்த உருவமாய் இருக்க வேண்டிய அவர் இளவரசியின் முகத்தில் விலகாமல் பதிந்திருக்கும் அந்தக் கண்ணீர் தடம்….. அதைக்காணும் போது இப்போது தான் செய்திருக்கும் செயல் சரி தானா என்கிற சந்தேகம் அவருக்கு வந்தது ஆனால் இதில் அவர் செய்ய ஒன்றும் இல்லையே……
அவர்கள் உத்தரவை மறுப்பதற்கோ இவனை விடுத்து அவள் ஆசை கேட்டு வேறொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கோ எந்த உரிமையும் இல்லாது…. பூர்ணிமாவின் கைகளை மிக சாதுரியமாக கட்டிப்போட்ட ஆரியனின் ஆளுமை தருணம் அந்த நேரம் அவருக்கு ஞாபகம் வந்தது……..
ஷிவானி காணாமல் போய் மூன்று மணிநேரங்கள் ஆகியும் வயதுப் பெண் வீடு திரும்பாமல் நெஞ்சம் பதை பதைக்க செய்வது அறியாமல் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்த பூர்ணிமாவை சூரியபிரகாஷ் அமைதிப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போதே…….. அவர்கள் வீட்டு வாயிலில் காற்றை கிழித்துக் கொண்டு பெரும் சத்தத்தோடு ஒரு கருப்பு நிற கார் சடன் பிரேக் அடித்து நிற்க……ஏற்கனவே நெஞ்சம் முழுவதும் அச்சத்தில் இருந்தவர் உடல் இந்த சத்தத்தில் தூக்கி வாரிப் போட……..
ஆனால் பூர்ணிமாவின் பயத்திற்கு முற்றிலும் வேராய் சூர்யப்ரகாஷின் முகத்தில் புன்னகையின் சாயல்…….தன்னை கண்களில் தேங்கிய திகிலோடு பார்த்தவளின் தோல் அனைத்து கைகளைத் தட்டிக் கொடுத்தவர்…….இனி பயம் ஒன்றும் இல்லை ஷிவானி பத்திரமாக வீடு திரும்பிவிட்டாள் அவளின் தலை முடியைக் கூட வேறு யாரும் தொட்டிருக்க முடியாது….. முகத்தில் இருந்த சிரிப்பு வாடாமல் உறுதியாக சொன்னதோடு பூர்ணிமா வின் முகத்தை திருப்பி வாயிலை காட்ட…….
அங்கே தன் கூரிய விழிகளால் அவரையே பார்த்தபடி அகலமான கால்களில் எட்டுகள் வைத்து நடந்து வரும் ஆரியனின் கம்பீரமுமோ அவன் கண்களின் பாவனையுமோ அல்லது அவன் அசாத்திய உயரமுமோ ஏதோ ஒன்று அவரையே சற்று பயமுறுத்தியது……. ஆனால் அனைத்தும் சில கணங்கள் தான் அருகில் வந்து விட்டவனின் கரங்களில் சுயநினைவின்றி கிடந்த சின்னவளை கண்ட நொடி…… உள்ளம் பதற ஷிவு என்ற கூவலோடு….. ஓடி வந்து அவளை தொட முயன்றவரின் கைகள் அவள் மேல் பட்டுவிடாமல் ஷிவானியை தன் புறம் இழுத்து கொண்ட ஆரியனின் செயல்……அப்படியே முகத்தில் அறை வாங்கியது போல் பூர்ணிமா ஸ்தம்பித்து நின்று விட்டார்…….
உணர்விழந்து நின்றவரை சிறிதும் சட்டை செய்யாமல் சூரிய பிரகாஷ் புறம் திரும்பியவன்……. நத்திங் டு வொரி சாதாரண மயக்கம் தான் டாக்டர் கிட்ட செக் பண்ணி ஆச்சு ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் என்றவாறு மாடி அறைக்கு சென்று ஷிவானியின் கட்டிலில்……அவளை கிடத்தியவன் முகம் தாங்கிய விடைகாண உணர்வுகளோடு அவள் பூ முகம் பார்த்தது பார்த்த படி சில கணங்களோ பல யுகங்களோ நின்றவன்
பிறகு ஒரு ஓசையற்ற பெருமூச்சோடு தன் விழிமூடி…… உள்ளுக்குள் கட்டுக்கடங்காமல் பொங்கிய உணர்வுகளை சமன் செய்தவன் மீண்டும் கல்லாய் மாறிய வதனத்தோடு கீழே இறங்கி வந்தான்……..
அவனுக்குத் தெரியும் இனி தான் செய்யப்போகும் செயல்களும் சொல்லப்போகும் வார்த்தைகளும்…… எத்தனை பேர் இதயத்தை காயப்படுத்தும் என்று. அதைவிட தான் யார் மீது இத்தனை பெரிய பழியை சுமத்த போகிறோம் அதனால் அந்த உயிர் எத்தனை வதை படப்போகிறது என அனைத்தையும் அறிந்திருந்தும் அவைகளை செய்ய அவன் சற்றும் தயங்கவில்லை…..
ஏனென்றால் போர்க்களத்தில் எதிரியை நோக்கி வாள் வீச அஞ்சிய வீரனுக்கு வெற்றி என்றும் கிட்டப் போவதில்லை போர் தர்மத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்ட அர்ஜுனன் அவன்……..தன் குறி ஒன்றைத் தவிர்த்து வேறு இதுவும் அவன் பார்வையில் பதிய விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் ஆரியன்…..
கீழே இன்னும் அதே இடத்தில் அசையாமல் இருந்த பூர்ணிமாவின் முன் வந்து நின்றவன் தன் வலது கையால் சத்தமாக சொடக்கிட்டு அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினான்…… சற்று விழித்தபடி பூர்ணிமா அவனைப் பார்க்க. அழுத்தமாக தன் பார்வையை அவரின் விழிகளில் பதிய வைத்தவன்….. சொல்லுங்க பூர்ணிமா நீங்க விட்ட சவால் இப்போ என்ன ஆச்சு……
சரியாக மிகச்சரியாக எந்தவித முத்தாய்ப்பும் இன்றி ஆரியன் நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்…. தலைகுனிந்தவரின் முகத்தைக் கண்டு சற்று இளக்காரமாக சிரித்த ஆரியன்…….
ஆரு என்ன….பூர்ணிமாவுக்கு பதில் தன்னிடம் பேச வந்த சூரிய பிரகாஷை கைகாட்டி தடுத்து நிறுத்தியவன் இல்ல இது நான் பேச வேண்டிய நேரம் நீங்க கொஞ்சம் ஒதுங்கி இருங்க…… தீர்மானமாக சொல்லிவிட்டு அதைவிட அவன் கண்களின் அந்த நேர பார்வை தானாகவே சூரியபிரகாஷ் இரண்டடி பின் செல்ல வைத்தது மீண்டும் பூர்ணிமாவின் புறம் திரும்பியவன்……. சொல்லுங்க மேடம் நீங்க எங்க குடும்பத்தினர் முன்னாடி விட்ட சவால் இப்போ என்ன ஆச்சு……
உங்கள் யார் தயவும் இல்லாமல் ஷிவானியை நானே நல்ல முறையில் வளர்த்து பாதுகாக்கமுடியும் என்று ரொம்ப கம்பீரமாக சவால் விட்டீர்களே அந்த பேச்சு இப்போ எங்க போச்சு……உங்களுடைய வளர்ப்பு முறை தவறாகிவிட்டது ஷிவானியோட படிப்பும் அவளோட ஒழுக்கமும் இப்போ கேள்விக்குறி ஆயிடுச்சு……கண்டவனோடு கூத்து அடிக்கிறாள் என்று காலேஜை விட்டே அவளை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க இதிலேயே தெரிஞ்சு போச்சு உங்க வளர்ப்பின் லட்சணம் என்னன்னு……
இதுதான் நீங்க அவளை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும் விதமா…??!!! இதற்காகத்தான் அத்தனை வேகமாக அன்று அவளை என் வீட்டார்கள் இடம் இருந்து பறித்து வந்தீர்களா…..
நீங்கள் ஏற்றுக்கொண்ட கடமையில் இருந்து தவறி ரொம்ப மோசமா தோல்வி அடைந்து விட்டீங்க…….இனி அவளை திருப்பி எங்களிடம் நிஜமாகவே அவள் இருக்க வேண்டிய அவளுக்கு சொந்தமான இடத்தில் ஷிவானியை ஒப்படைப்பதை தவிர உங்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை………அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு வார்த்தையிலும் சம்மட்டி கொண்டு உள்ளத்தை பிளப்பது போல் ஆரியன் கேட்க……..
புரியாத பாஷை கேட்டு விழிக்கும் குழந்தைபோல் பரிதாபமாக நின்றிருந்தா பூர்ணிமாவின் நிலைகண்டு சூரியபிரகாஷின் உள்ளம்….. அவர்பால் பாகாய் உருகினாளும் ஆரியனின் வார்த்தையும் அவன் பார்வையின் தீர்க்கமும் அவருக்கு அதேபோலோரு தான் அஞ்சி நடுங்கும் இன்னொரு மனிதரின் பார்வையை ஞாபகப்படுத்த அதன் தாக்கத்தால் எதுவும் பேசாமல் அவரை அப்படியே நிற்க வைத்தது……..
அவனுக்கு பதில் ஒன்றும் சொல்ல முடியாமல் சொல்வதற்கு வாய்ப்புகளும் இன்றி பூர்ணிமா வின் தலை தன் தோல்வியை ஒப்புக் கொண்டதாக சம்மதமாய் அசைந்தது….. அவரின் வேதனையோ அவனை விட வயதில் பெரியவரான பூர்ணிமாவை தான் இத்தனை கேள்விகளைக் கேட்கிறோம் என்ற சங்கடமும் சிறிதும் இன்றி…… குட் உங்கள் தோல்வியை நீங்கள் ஒப்புக் கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி……
இப்போ நாம அடுத்த விஷயத்தைப் பத்தி பேசலாமா….. இன்னும் மூணு நாள்ல எனக்கும் உங்க செல்ல மருமகள் ஷிவானிக்கும் கல்யாணம் நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது…….கல்யாணத்தன்று என் பக்கத்துல மணப்பெண்ணா அவள் உட்காரணும் அதுக்கு அவ கிட்ட நீங்க தான் சம்மதம் வாங்கணும்……. ஏன் என்றால் அத்தோடு நிறுத்திவிட்டு பூர்ணிமாவின் துவண்டு போன முகம் பார்த்தவன்…..
இப்போது சற்றே கேலியாக இந்த உலகத்திலேயே உங்க ஒருத்தரின் வார்த்தைகளை தானே அவள் கேட்பாள் உங்கள் அனுமதி இல்லாமல் அவள் துரும்பை கூட அசைக்க மாட்டாளே……..ஆரியனின் வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து அவனை திகைப்பாக பார்த்த பூர்ணிமாவின் கண்களைப் பார்த்து நக்கலாக சிரித்தவன். என்ன எப்பவோ கேட்ட மாதிரி இருக்கா…….
அன்று அவளை தேடி வந்த என் வீட்டு மனிதர்களை நீங்க அவமானப்படுத்திய அன்றும். இதே போன்ற வார்த்தைகளைத் தான் நீங்கள் சொன்னதாக ஞாபகம்…… வலிக்க வலிக்க சற்றும் கருணையின்றி குத்திக்காட்டும் அந்த சிறியவனின் வார்த்தைகள் பூர்ணிமாவை மிகமிக காயப்படுத்த விழி தேங்கிய நீர் அதற்கு மேல் அவருக்கு கட்டுப்படாமல் முகத்தில் வழிந்தது…….
ஆரு… போதும் இந்தப் பேச்சு அவள்தான் நீ சொன்னபடி செய்வதாய் சொல்லிட்டாளே இன்னமும் என்ன…… அதற்கு மேல் தன் உயிரானவள் படும்பாட்டை பொருக்க முடியாமல் அவளை இழுத்து தோளோடு அரவணைப்பாக அணைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் கேட்க…… ஒருவர் அருகாமையில் ஒருவர் ஆறுதல் தேடிய அந்த தம்பதிகளின் இணக்க நிலையை இருநொடி கூர்மையாக பார்த்தவன்……
இப்போது இருக்கையில் இருந்து எழுந்து கொண்டு தன் சட்டையில் மாட்டி இருந்த குளிர் கண்ணாடியை எடுத்து கண்களில் அணிந்து கொண்டவன்……ஓகே இதுக்கு மேல எந்த பேச்சும் வேண்டாம் ஆனால் நான் சொன்னது நடந்தே ஆகணும் இன்னும் மூணு நாளில் சொல்லிவிட்டு வெளியேற போனவன் மீண்டும் திரும்பி நின்று……
இனி அவள் மீது உங்களுக்கு எந்த உரிமையும் இருக்கப்போவதும் இல்லை ஷிவானி முழுக்க முழுக்க எனக்கு மட்டுமே உரிமையானவள்……ஒரு அரசனின் சபை அறிவிப்பாய் உரக்க மொழிந்து விட்டு அங்கிருந்து தன் கம்பீரம் குறையாமல் சென்றான் ஆரியன்…….
அதன் பிறகு சொன்னது போல் மூன்று நாட்களில் மண்டபம் முதல் விருந்து வரை அனைத்து வேலைகளையும் ஆடம்பரத்தோடு அழகாகவும் முடித்து…… தன் மூலமாகவே ஷிவானியும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்து இதோ இன்று தன் நினைத்ததை கனக்கச்சிதமாக நடத்தி முடித்த ஆரியனின் வேகம்….. அவரையே இத்தனை தூரம் மிரட்டி வைக்கும் போது அவரின் ஷிவானி அவன் கையில் என்ன பாடுபடப் போகிறாளோ…??!!!!
மணமேடையை பார்த்தபடி தன் சிந்தனையில் இருந்து அவர் அங்கே தொற்றிய சலசலப்பில் சட்டென்று சுதாரித்து மேடை நோக்கி ஓடினார்……அந்த நேரம் அங்கே இல்லாத சூர்யப்ரகாஷின் துணை அவருக்குப் பெரிதும் தேவைப் பட்டது…..
அனைத்து சடங்குகளும் முடிந்து எழுந்து நின்ற ஆரியன் அமர்ந்திருந்த ஷிவானியின் கைப்பற்றி எழுப்பி நிறுத்தி அவளை தன்னோடு இழுத்தபடியே நடக்க ஆரம்பிக்க…….இத்தனை அவசரமாக அவன் எங்கு கூட்டிச் செல்கிறான் என்பதை உணரமுடியாமல் பதுமை போல் அவன் கைகளில் இழுப்பட்ட ஷிவானியின் மறுகரம் பூர்ணிமா வால் பற்றி நிறுத்தப்பட……
தடைப்பட்ட நடையால் ஆரியன் திரும்பிப் பார்த்தான்….. அது..அது இப்போதுதானே திருமணம் முடிந்திருக்கிறது இன்னும் சம்பிரதாயங்கள் மீதி இருக்கும்போது அவசரமாகச் செல்ல வேண்டிய அவசியம் என்ன…….. தயங்கித் தயங்கி என்றாலும் பூர்ணிமா கேட்டுவிட மீண்டும் கேலியான ஒரு புன்னகையுடன்…..அவரை நெருங்கி இதற்கு மேலான அனைத்து சடங்குகளும் எங்கு நடக்க வேண்டுமோ அங்கு வெகு சிறப்பாக நடந்தேறும்…… அதைப்பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம் என் மனைவியை பற்றியும் தான்…..
முடிந்தால் பாதியில் அர்த்தமற்று வெறுமையாக நிற்கும்…. உங்கள் வாழ்கையை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்…….அவர் கைகளில் சிக்கி இருந்த தன் மனைவியின் கரத்தை ஒரே இழு விசையில் விடுவித்து ஷிவானியை முழு மொத்தமாய் தன் அணைப்பில் கொண்டு வந்தவன்……
அவன் கூறிய வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில் மூளை மரத்துப் போய் நின்றவரை வெகு திருப்தியாக பார்த்து விட்டு அவன் மனைவியோடு அங்கிருந்து வெளியேறினான்……..
சற்று முன்பு கணவனாகிவிட்டவன் கை அணைப்பில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கூட முழுவதும் புரிந்து கொள்ள முடியாமல்……தன் வாழ்க்கையின் ஒரே சொந்தமாய் இது நாள் வரை தான் உயிரிலும் மேலாக நேசித்த அத்தை பூர்ணிமாவை…… திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்ற பெண்ணவள் விழிகளில் தான் எத்தனை வருத்தமும் அவர் மீதான குற்றச்சாட்டும்…,..
மணமக்கள் முதலில் வெளியேறிவிட திருமணத்திற்கு வந்தவர்களும் விருந்துண்டு தங்கள் வீடு பார்த்து கிளம்பிவிட….. மொத்த வெறிச்சோடிய மண்டபத்திலும் ஒற்றை ஆளாய் மணப்பெண் அறையில் நின்றிருந்த பூர்ணிமா என்ன முயன்றும் அந்த நேரம் தன் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஆற்றவும் தேற்றவும் யாருமே இன்றி அப்படியே தரையில் மடிந்த அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தார்…….
விதி வரைந்த அலங்கோலத்தில் விட்டுப்போன அவரின் வாழ்க்கை புள்ளிகள் அவர் இழைத்த தவறுக்கு வேறு யாரை குற்றம் சொல்ல முடியும்……
சின்ரெல்லா வருவாள்………
.