ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு

அத்தியாயம்.14

அது நேரம் வரை இருந்த ஜாக்கிரதை  மற்றும் உள்ளே செல்லக் கூடாது என்கிற தன் தீர்மானமும் காற்றில் பறக்க  யுகேந்திரனின் நெற்றியில் ரத்தம் பார்த்த நொடி…… அவன் மீதான தன் சலனம் அனைத்தையும்  மறந்து ஒரு சக மனிதனின் உதிரம் கண்டு அவளின் மனிதம் விழித்துக் கொள்ள……. சுற்றுப்புறத்தின் கவனம்  இன்றி அந்த அறைக்குள் நுழைந்தாள் ஷிவானி…… அவளின் இந்த நேர தெளிவில்லாத அவசர முடிவானது அந்த சிறு பெண்ணின் வாழ்க்கையை நொடியில் புரட்டிப்போட காத்திருந்த விதியின் கைகளில் தன் எதிர்காலத்தை தானே  வழங்கிவிட்ட பரிதாப நிலையாகிப்போனது…….

ஓ மை  காட் யுகேந்திரன் உங்களுக்கு என்ன ஆச்சு எப்படி நெற்றியில் எவ்வளவு பெரிய காயம்…… கேட்டபடி அங்கிருந்து ஏதோ ஒரு துணியை எடுத்து அவன் நெற்றியை சுற்றி இருக்கக் கட்டி முடிக்க  அவளின் கைகளை அழுந்தப் பற்றி எழுந்து அமர்ந்தான் யுகேந்திரன்……

ஓ…நோ.. ஷிவானி நீங்க  எதுக்காக இங்கே வந்திங்க    கோபத்தோடு வேகமாக அவன் கேட்க……உங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு நீங்கள் தேவையில்லாமல் விஷயத்தை பேசி குழம்புகிறதா உங்க பிரெண்ட் ரமேஷ் எனக்கு போன் பண்ணி இங்கே வர சொன்ன…. அவள்  பேசும்போதே இடையிட்ட யுகேந்திரன்……

அப்படி எதுவும் இல்லை ஷிவானி இது முழுக்க முழுக்க ஒரு சதி நானாக இங்கே வரவில்லை எனக்கு   நேற்று இரவு என்ன நடந்துச்சுன்னு தெரியல எந்திரிச்சு பார்க்கும்போது நான் இங்க இருக்கேன்…… வெளிய போக முயற்சி பண்ணும் போது அந்த ரமேஷ் தான் என் தலையில்  இப்படி அடித்தது……ஒன்றும் புரியாமல் நான் இருக்கும்போது இப்போ நீ வேறு இங்கு வந்து மாட்டிக் கொண்டாய் இப்போ நாம என்ன செய்வது…….

மயக்கத்தின்    தள்ளாட்டதோடு எழுந்து நிற்க முயன்று முடியாமல்  தன் அலைபாயும் கால்களை நிலைநிறுத்த போராடிக் கொண்டே அவன் சொல்ல…… முன்பு இங்கே வந்தபோது  தோன்றிய பயத்தின் அழுத்தம் இப்போது முழுவதுமாய் உடலில் அமில நதியாய் பாய…….. தான் சிக்கியிருக்கும் சதிவலை  உணர்ந்து திரும்பி பார்த்த ஷிவானியின் கண்களில் பட்டனர் அவள் நுழைந்த அறையின் வாசலை அடைத்தது போல் ஒன்று சேர்ந்து நின்றிருந்த  அந்த ஐவரும்…….

அப்போதுதான்  ஆபத்தின் முழு வீரியம் பெரும் அதிர்வோடு அவளுக்கு  புரிய…… கொஞ்சம் கொஞ்சமாய் அவள் உடலோடு சேர்த்து மூளையையும் பலமிழந்து  அசையவோ மூச்சு விடவோ ஏன் இமைகளை சிமிட்ட கூட தோன்றாமல்…… சிலையாய் சமைத்து நின்ற பெண்ணவளின் பேதலித்த நிலைக் தந்த குதூகலத்தில்  தங்களை ஆண் என்று சொல்லிக் கொள்ளும்….. மலரினும் மென்மையான பெண் என்ற சக உயிரை துன்புறுத்தி மகிழ நினைக்கும் அந்த விஷ ஜந்துக்களின் முகத்தில் திருப்தியான புன்னகை ஒளிர்ந்தது…….

என்ன மிஸ் ஷிவானி அப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குறீங்க எங்க எல்லாரையும் உங்களுக்கு பிடிச்சிருக்கா விளையாட்டுக்கு ரெடியா….. ஒரு விதமான  வெறி கண்களில் மின்ன தன்னிடம் வசமாக வந்து சிக்கி கொண்ட அந்த மான்குட்டியை எப்படியெல்லாம் வதை செய்து துடிதுடிக்க வைக்கலாம் என்று யோசிக்கும் ஓநாயின் சூழ்ச்சி  அவன் முகத்தில்…….

ஒவ்வொரு முறையும் அறிவு என்பதே இன்றி  முட்டாள்தனமாக தான் செய்யும் செயல்களால் சட்டென்று யோசிக்காமல் நடந்து கொள்ளும் முறையால்…… தனக்கு ஏற்படும் இக்கட்டின்  பயங்கரத் தன்மை இன்று மீண்டும் ஒரு முறை உச்சந் தலையில் ஆணியால் அறைந்ததுபோல் தெள்ளத்தெளிவாக புரிய அந்த நிமிடம் ஷிவானிக்கு  தன் மீதே தாளமுடியாது வெறுப்புத் தோன்றியது…..

ஷிவானி பார்த்துக் கொண்டிருக்கும் போதே மிக நிதானமாக காலடி வைத்து அறைக்குள் நுழைந்தவன்…….அவன் முன்னேற அனிச்சை செயலாய் உடல் பதறியடிக்க நடுக்கத்தோடு பின்னே நகர்ந்த ஷிவானியின் பயம் அந்த ரமேஷ் என்னும் கயவனுக்கு இன்னும் இன்னும் இன்பத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது…… அவள்  இப்படி அழுது கதறி கெஞ்சி தன்னிடம் மண்டியிட வேண்டும் என்று அவன் விரும்பினான்……

அப்படி அவள் தன் மானத்தைக் காப்பாற்ற எத்தனை பாடுபட்ட போதும்…‌‌… அதை அழித்து அவளை  நார் நாராகக் கிழித்து அந்த ஆரியனின் கைகளில் வீசி எறிய வேண்டும்…… இதுதான் அவர்கள் வழியில் குறுக்கிட்டு தங்களின் தொழிலையே இல்லாமல் ஆக்கிய……. மாபெரும் குற்றத்திற்காக  அந்த ஆரியனுக்கு கிடைக்கும் சரியான தண்டனையாய் அமையும்‌…..

முதல் முறை தங்களை அவன் இனம் கண்டு கொண்ட போதே சுதாரிக்க வேண்டியது இவன் என்ன செய்து விடுவான்…… என்ற அந்த ஆரியன் மீதான அலட்சியம் தான்  இப்போது அவர்களை அவன் கூண்டோடு அழிக்கும் அளவிற்கு கொண்டு போய்விட்டது…….

பழிக்குப்பழி வாங்க முயன்றாலோ  தங்களால் மட்டுமல்ல வேறு யாராலுமே  நெருங்க முடியாத தூரத்தில்……இமயத்தின் உச்சியில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கும்   பணபலமும் படைபலமும் வாய்ந்த அவனுக்கு ஒரு சிறு மயிரிழை அளவு கூட பதில் கொடுக்க……. இப்புவியில் பிறந்த எவனுக்கும்  திறன் இல்லை என்பதை மிக விரைவிலேயே அவர்கள் அனைவருக்கும் அவன் தன் வழியில் மரண அடி கொடுத்து புரிய வைத்தான்……

சிங்கத்திடம் தோற்று ஓடிய ஓநாய் கூட்டம் அதனை குழியில் தள்ள   நேரம் பார்த்து காத்திருந்த சமயம்…… அந்த காட்டிற்கே அரசனான சிங்கத்தின். அருகில் பிறர் அறியாத அதன் கடும் பாதுகாப்பு கலந்த அரவணைப்பில் சுற்றி வரும் இந்த சிறு புள்ளி மான் குட்டி அந்த ஓநாய்களின் பார்வையில் சிக்கியது விதி செய்த சதி அல்லாமல் வேறென்ன….??!!!! 

பல காலம் காத்திருந்து இந்த நொடிக்காக எத்தனை தூரம் திட்டம் தீட்டி….. அந்த ஆரியனின் கண்களில் சமயம் பார்த்து மண்ணைத் தூவிவிட்டு அவளைக் கொண்டு வந்தாகிவிட்டது……

அது என்ன அத்தனை எளிதா…??!!  எத்தனை அடுக்கு கட்டுக்காவல் இந்த சாதாரண பெண்ணிற்கு அவனால் வழங்கப்பட்டிருந்தது…… சிறிது நாட்களுக்கு முன்னர் அவள் தோழிகளோடு இரவு வேளையில் தனித்து வந்த ஷிவானியை அவர்கள் கடத்த யோசனை செய்ய….. ஆரியனோ   மிக எளிதில் அவர்கள் சதியை முறியடித்த தோடு அடுத்த நாளிலிருந்து…….எப்படிச் செய்தான் என்று கூட உணர முடியாத அளவிற்கு மிக விரைவான அவன் செயல் ஆரியனின் நேரடி பாதுகாப்பில் ஷிவானியை கொண்டு சேர்த்துவிட்டது…….

ஒரு மாதங்களுக்கும் மேலாக அவர்கள் காத்திருப்புக்கு பயன் தருவது போல் நேற்று தான்….. அந்த ஆரியன் மிக அவசர வேலையாய் ஊரை விட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அறிந்து துரிதமான யோசனையின் பேரில் இவளை இங்கே கடத்தி வந்தாகிவிட்டது……இனி தங்கள் பழிவாங்குதலின்  அடுத்தடுத்த கட்டங்களிலின் பரிபூரணமான நிறைவேற்று படலம்…..

தன் நடையை சிறிதும் குறைக்காமல்  தன் ஒவ்வொரு காலடிக்கும் அவளின் முகம் காட்டும் அச்சத்தை….. அணுவணுவாய் ரசித்தபடி ரமேஷ் முன்னேற அதற்குள் சுவரில்  மோதி நின்ற ஷிவானியின் மனது இறைவனிடம் வேண்டியது….. தன்னைக் காப்பாற்ற எவரும் இல்லை என்றாலும் கூட எந்த வழியிலாவது மரணம் வந்தாவது…..இத்தனை பெரிய கொடூரத்திலிருந்து   காப்பாற்றிவிட வேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்தாள்…….

டேய் அவ கிட்டப் போகாத அவளை விட்டுவிடு  உன்னை கெஞ்சி கேட்கிறேன் ரமேஷ் ப்ளீஸ் நீ என்ன  சொன்னாலும் நான் கேக்கறேன் அவள மட்டும் ஒன்னு செஞ்சு விடாதடா….. தன்னை நகர விடாமல் பிடித்தவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற படி யுகேந்திரன் ரமேஷிடம் ஷிவனிக்காக மன்றாட…… இப்போது இவன் புறம் திரும்பிய ரமேஷ்…. 

யுகி உனக்கு விசயம் சரியாக  புரியவில்லை எங்க டார்கெட் நீ இல்ல  இவள் மட்டும் தான் இவள் எங்களுக்கு வேணும்….. இவளை  நாங்க நாசம் செய்யணும் யுகேந்திரன் கன்னத்தை தட்டி சொன்னவன் இப்போது மீண்டும் ஷிவானியை  நோக்கி முன்னேறினான்……தன் மிக அருகில் வந்து விட்ட அவனை தள்ளிவிட கூட தன் கைகளை அந்த ரமேஷின் மேல் பதிவதை  விரும்பாதவள் கிடைத்த இடைவெளியில் நகர்ந்து தப்பிக்க முயல….. 

அவளின் அசைவை நிறுத்துவதுபோல் ஷிவானியின் பக்கவாட்டு சுவற்றில்  தன் வலது கையை அழுத்தமாக வைத்து அவளை நகர விடாமல் செய்தவன்……. அதற்குள்ளாக  என்ன அவசரம் ஷிவானி..?? 

 நீ இந்த வீடு முழுக்க ஓடிப்பிடித்து விளையாட ஆசைப்படும் போது அதை நாங்கள் செய்ய மாட்டோமா  என்ன….?? எகத்தாளமாக அவளின் விழி பார்த்து கேட்டவன் இப்போது இரண்டடி நகர்ந்து நின்று….. ரெடி ஸ்டார்ட் நீ இப்போ ஓட ஆரம்பி  இந்த வீடு முழுக்க உண்னை துரத்தி நான் பிடிப்பேன்……அவன் சொல்லி முடிக்கும் முன்னே அங்கிருந்து ஓட முயன்ற ஷிவானியின் காலை அந்த ரமேஷ் தூக்கி வீசிய எதுவோ வந்து சட்டென்று அடித்துத் தட்டி விட……. அம்மா..!!!   என்ற அலறலோடு தரையில் விழுந்தாள் ஷிவானி……

அந்த வீடே அதிரும் படி சத்தமாக சிரித்து ஷிவானி விழுந்ததை கொண்டாடி மகிழ்ந்த அவர்கள்….. அதன் பிறகு அவளிடம் அசைவில்லாமல் போக…… அவள் அருகில் ரமேஷ் வரும் முன்பே மீதமிருந்த நால்வரில் ஒருவன் முந்திக் கொண்டு…. அண்ணே  நான் பார்க்கட்டுமா சும்மா தக்காளி பழம் மாதிரி ஷைனிங்கா வழுவழுன்னு இருக்காள் எனக்கு முதல் வாய்ப்பு கொடுங்களேன்….. சகிக்க முடியாத ஒரு கோணல் சிரிப்போடு அவன் வேண்டுகோள் வைக்க…… ரமேஷும் அட்டகாசமாய் சிரித்தபடி ஆமோதித்தான்……

பத்தடி தூரத்தில் தரையில் சருகைப்போல் உணர்வின்றி மயங்கி  கிடந்த ஷிவானியை அவசரமாக நெருங்கி அவள் மீது கைவைக்க குனிந்தான்……சரியாக அதே வினாடியில் அந்த வீட்டின் வாசல் கதவு… டமால்…l என்ற குண்டுவெடிப்பின் சத்தத்தோடு திறந்து கொள்ள…….அந்த 5 பேருக்கு  பத்து மடங்கு அதிகமாய் 50 பேர் கருப்பு நிற சீருடை அணிந்து அவர்களை விட மிகமிக திடகாத்திரமான உருவத்தில்…… சடசடவென்று ராணுவ அணிவகுப்பு போல் உள்நுழைந்து மொத்த வீட்டையும் சில கணங்களுக்குள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க…….

அவர்களின் கையில் சிக்கிக் கொண்டு நசுங்கிய வாழைப்பழம் போல் விழிபிதுங்கி நின்றனர் ஷிவானியை சிதைக்க நினைத்து…..  ஆரியன் கைகளில் வசமாய் சிக்கிக் கொண்ட அந்த துர்பாக்கிய சாலிகள்……

அந்த 50 பேரில் எவருமே கீழே மயங்கிக் கிடக்கும் அந்தப் பெண்ணின் தலை முடியைக் கூட தொட முயற்சிக்காமல்….. அவளை விட்டு பல அடி தூரம் நகர்ந்து நின்று மௌனம் காக்க…… அமைதியான கடலில் திடீரென்று தோன்றிய ஆழிப்பேரலை போல் அங்கு விஜயம் செய்தான் ஆரியன்……. இத்தனை நாள் கல்லூரிக்கு வந்த மாணவன் போல அந்த நேரம் அவன் இருந்தான்……

அங்கிருந்த அனைவரையும் தன் ஒற்றைக் கையால் மூங்கில் குச்சியைப் போல் முறித்துப் போட்டு விடும் அபரிவிதமான ஆயிரம் யானைகள் பலத்தை உடலில் தாங்கி  காடாளும் சிங்கம் போல் அல்ல அல்ல இவ்வுலகத்தையே ஒருவனாய் ஆட்சி செய்தும்…… சக்கரவர்த்தியாய் அங்கு வந்து நின்ற ஆரியனின் விஸ்வரூபம் கண்டு தங்கள் குலை  நடுங்கிப் போய் நின்றிருந்தனர்….. அவன் வலிமை தெரிந்தும் மின்சாரத்தோடு மோதிவிட்ட அந்த முட்டாள்கள்…..

கருப்பு நிற கோட் சூட் அணிந்து  அன்றைய அரசர்களின் அப்டேட் வெர்ஷன் போல் அதகளமாக  இருந்த ஆரியன்….. தன்னை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு  அடிக்கும் ஷிவானி பயந்ததைப் போல் 100 மடங்கு அதிகமாய் உடல் வெளிப்படையாக கிடுகிடுவென்று நடுக்கம் எடுக்க……அவன் அடிக்க வேண்டாம் இன்னும் இரண்டு அடி எடுத்து வைத்தால் போதும்  நான் இறந்துவிடுவேன் என்னும் அறிவிப்பை தாங்கி நின்ற ரமேஷின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தான் ஆரியன்…..

அந்தப் புன்னகை இவ்வுலகத்தில் வேறு யாருமே ஆரியனின் அந்தச் சிரிப்பை தங்கள் வாழ்நாளில் காண நிச்சயம் விரும்ப மாட்டார்கள்….. அப்படிக் கண்டு விட்டால் அதன் பிறகு வேறு எதுவும் அவர்கள் காண முடியாமல் போய்விடும்…….ஏனென்றால் அந்த சிரிப்பை கண்ட பிறகு அவர்கள் உயிர் உடலில் தங்கப் போவதில்லையே…….

அப்படிப்பட்ட சிரிப்பை பார்த்து விட்ட ரமேஷின் முகத்தில் மரணத்தையே கழுவிவிட்டு சவக்களை தோன்றி நிலைத்து நின்றது….

குரல் தந்தியடிக்க….. வே…ண்டா…ம்  சா…ர் இது தெ..தெ…ரியாம பண்ணிட்டோம்  இப்போது வரை எங்கள் யாருடைய கை விரலும்   மேடம் மேல் படவே இல்லை…… சத்தியமா நான் சொல்றது உண்மைதான் நம்புங்கள் எங்களையும் விட்டுடுங்க சார்……ஆரியனின் ஒற்றைக் கண் அசைவில் அந்த ரமேஷை  பிடித்திருந்த இருவர் அவனை விட்டு விலகி நிற்க……

கால்களின் நடுக்கத்தில் நிலையாக நிற்க முடியாமல் தரையில் விழுந்தது மண் புழுவைப் போல் ஊர்ந்து வந்து…..ஆரியனிண்  கால்களை பிடித்து உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினான்…….

என்னோடு மோத நீ நினைத்திருந்தால் கூட   உன்னை உயிரோடு விடுவது மட்டும் இல்லாமல் பரிசும்  பாராட்டும் செய்திருப்பேன்….. ஆனால் நீ என் உயிரை விட மேலான ஒன்றின் மீது   கை வைக்க துணிந்து விட்டாய்….. உனக்கு நான் வழங்கும் மிக அதிகபட்ச மன்னிப்பே மரணம் மட்டும் தான்……..சற்றுக் கூர்ந்து கவனித்தால் நெருப்புப்பொறி சுற்றிப் பார்ப்பது போல் கோபக் கனல் தெறிக்க நின்ற ஆரியனின்  உதடுகள் தன் வாக்கியத்தை முடித்த நொடி……. அவன் கைகளில் இருந்த துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா ரமேஷின் இதயத்தில் இறங்கியது…….

பெண்ணை சிறை  எடுத்து அவள் வழி பழிதீர்க்க  நினைத்தவனின் முடிவு எத்தனை கோரமாக இருக்கும்  என்பதை வெளிக்காட்டும் விதமாக உயிரற்று சடலமாய் தரையில் தோய்ந்து விழுந்தான் அவன்……. ஒரு நொடி இறந்தவனைக் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற சிறு வருத்தத்தோடு பார்வையிட்டவன்….. இப்போது  துப்பாக்கியை பக்கத்தில் இருந்தவனிடம் தூக்கிப் போட்டுவிட்டு…… ரமேஷின் உயிரற்ற உடலைத் தாண்டி நடந்தான்……

அது நேரம் வரை இருந்த அத்தனை ஆக்ரோஷமும் கொந்தளிப்பும் கோபமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக…… தரையில் வேரறுந்த கொடி போல் புழுதியில் புரண்டு கிடக்கும் புது மலரைப் போல் அசைவின்றி கிடந்த ஷிவானியின்…… மொத்த உருவத்தையும்  தன் பார்வையின் எல்லையக்கி நடந்தவன் மயில் இறகை கையேந்தும் அற்புத பதத்தில் அவளைத் தொட்டு தூக்கி சில கணங்கள் தன் மார்போடு அணைத்து போல் பிடித்து….. அசையாது அவள் ஸ்பரிசத்தை உள்வாங்கி உணர்ந்து உயிரில் சேமித்து நின்றான்…..

பிறந்த சிசுவை கைகளில் வாங்கிய தாயைப்போல் பரவச உணர்வு காட்டிய முகத்தில் ரம்மியமான புன்னகை உதயமாக…… அதுவரை வாயில் படியில் நின்ற ரூபனை அழைத்தவன்  மீதி நீ பாத்துக்கோ இரண்டு வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டு அங்கிருந்து விலகி நடந்தான்…….

 ஷிவானியை பாதுகாப்பதற்கென்றே இவ்வுலகில் பிறப்பெடுத்த அவளின் உரிமையான உறவான ஆரியன்……

                                  சின்ரெல்லா வருவாள்………