அத்தியாயம்.12
எப்போதும் கலகலப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் அந்த சிறிய வீட்டின் உணவறையில்….. இன்று வழக்கத்திற்கு விரோதமாய் விரும்பத்தகாத அமைதியே ஆட்சி செய்தது…… தன் எதிரில் அமர்ந்து உண்ணும் உணவில் கூட கவனமின்றி கைகளால் தட்டில் கோலமிட்ட படி எங்கோ தன் கவனத்தை வைத்திருக்கும் ஷிவானியை…… சற்று ஆராய்தலான பார்வையோடு அதில் சமீபத்தில் சேர்ந்துகொண்ட கவலையோடும் அவளையே தன் கூரிய விழிகளால் அளந்தபடி இருந்தார் பூர்ணிமா…….
பார்த்த வரையில் அவள் மீதான அவரது கவலையும் கவனிப்பும் அதிகமானது என்றே சொல்ல வேண்டும்……சிறுவயதில் இருந்து தான் பார்த்து பார்த்து தன் கைகளுக்குள் பொதிந்து வளர்த்த தன் உயிரான பெண்ணவளின்…… சுபாவங்கள் முற்றிலும் மாறி தன் இயல்பை மீறிய துன்ப நிலையில் அவள் உழல்வதாய் அவருக்கு தோன்றியது…..
இது ஒன்றும் அவரின் தனிப்பட்ட சிந்தனையோ தவறான புரிதலோ அல்ல….. சமீப நாட்களாக ஷிவானி இடம் தெரியும் மாற்றம் அவள் செய்கையின் வித்தியாசம் அனைத்தையும் அவர் பார்க்க நேர்கிறதே……
முன்பெல்லாம் கல்லூரி பாட வேலை முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அவளுக்கு மிகவும் பிடித்த தங்களின் தேநீர் விடுதியில் தனக்கு உதவியாகவும்…… அங்கு வரும் சொந்தங்கள் இருந்தும் தனிமையில் வாடும் வயோதிக மனிதர்களுக்கு ஆறுதலாகவும் தன் பொழுதுகளை உபயோகமாய் கழிக்கும் அவரின் செல்ல மருமகள்…இப்போதெல்லாம் அவரின் கண்களுக்கு காணக்கிடைப்பது கூட இல்லை…..
இரவுகளில் தன் வேலை முடித்து அவர் வரும்போது ஷிவானி தன் அறையில் இருந்தாலும் கூட….. மிகத் தாமதமாகவே அவள் வீட்டிற்கு வருகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர் ஒன்றும் சிறுபிள்ளை அல்லவே……. இவை அனைத்தையும் விட தன்னை வேண்டும் என்றே ஷிவானி முற்றிலும் கண்களால் காணக்கூட தவிர்ப்பதன் காரணம் தான் என்னை யோசித்தும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை…….
இத்தனை மாற்றங்கள் அவளிடம் தெரிந்த போதும்……. என்றுமே ஒரு சிறு தவறையும் சம்பவங்களையும் ஏன் அன்றாட நிகழ்வுகளையும் கூட எந்தவித ஒளிவு மறைவும் இன்றி தன்னிடம் ஒப்புவிக்கும் ஷிவானி……இன்றைய தன் மாற்றங்களையும் அதற்கான காரணத்தையும் நிச்சயம் அவரிடம் ஒரு நாள் தானாகவே வெளிப்படுத்துவாள் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது……
ஆனால் மிகச் சமீபமாக அவர் செவியுறும் சில தகவல்கள்….. எப்போதாவது எதேச்சையாக தன் கண்களை சந்திக்கும் ஷிவானியின் விழிகளில் தோன்றி மறையும் உணர்வுகள்…… சுமக்க முடியாத பாரத்தை தூக்கி சுமப்பது போல் சற்று வலி மிகுந்த அந்த பரிதாபப் பார்வை……
இரண்டு தடவைகளுக்கும் மேல் அப்படி ஒரு பாவனையை அந்த அழகிய விழிகளில் அவர் கண்ட பிறகும்…..அவள் துன்பத்தை தானாகவே தன்னிடம் கூறுவாள் என்று கைகட்டி அமைதி காக்க அந்த பாசமான பெண்மணியால் முற்றிலும் முடியாமல் போனது……..
இருந்தும் நேரடியாக ஷிவானி இடம் எதையும் கேட்டு வற்புறுத்தி தெரிந்து கொள்ள மனமற்று…… அவளின் தோழிகள் இருவரிடமும் அவளின் நிலை குறித்து பேச முயல…..
அவர்களோ சிறு பிள்ளைகள் மனப்பாடம் செய்த செய்யுளை பாடுவது போல்…… தங்கள் தோழியிடம் எந்த ஒரு மாறுதலும் இல்லை என்றும்…… வழக்கம் போல் அவள் கல்லூரியிலும் தங்களுடனும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும்…… மீண்டும் மீண்டும் அவர்கள் சொன்ன விதமே ஏதோ ஒரு பெரும் விடயத்தை தன்னிடம் இருந்து மறைக்க முயல்வது புரிய……மற்ற எப்போதையும்விட இப்போது அவருக்கு தன் வாழ்க்கையின் ஒரே பிடிமானமாய் தான் கருதும்……அந்த வெகுளியான உலக அனுபவம் துளி கூட இல்லாத சிறு பெண்ணின் வாழ்க்கை மீதான பயம் அவருக்கு அதிகரித்தது…….
இனியும் தாமதிக்க முடியாமல் அவளிடம் நேரடியாக பேச வேண்டும் என்ற முடிவை அந்த நிமிடமே பூர்ணிமா எடுத்து விட்டாலும்…… தன் வார்த்தைகளோ அதன் பரிமாணமோ எந்த வகையிலும் ஷிவானியை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்……. தன் குறிக்கோள் அவளின் துன்பத்தை நீக்க வேண்டிய நல்வழி காட்டுதல் மட்டுமே என்பதை ஷிவானி புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மனம் விரும்பியது…….
தன்னுடைய சிறு அசைவு கூட ஷிவானியை பாதிக்கக் கூடாது என்று விரும்பும் தானே….. வார்த்தைகள் என்னும் ஆயுதத்தால் முற்றிலும் அவளை உருக்குலைத்து….. மரண காயத்தை அவளுள் விதைக்கப் போகிறோம் என்று பூர்ணிமா அந்த நிமிடம் அறிந்திருக்க மாட்டார்…….
ஆரியன் என்னும் அரக்கனின் ஆக்ரோஷ தாண்டவத்தால்….. மெல்லிய மலரினும் மென்மை கொண்ட ஷிவானி என்னும் சிறு பெண்ணின் மனம் அனுபவிக்கப் போகும் வலிகள் தான் எத்தனை…….
விழிகளில் சிறிதுகூட சலனமின்றி தன்னையே பார்த்தபடி இருக்கும் அத்தையின் கண்களின் கவனம் புரிந்தாலும்……தலை நிமிர்ந்து அவரை பார்க்கவும் தன் கவலைகள் சொல்லி ஆறுதல் தேடவும் முடியாத நிலையில்….. அமர்ந்திருந்த ஷிவானிக்கு உள்ளுக்குள் குற்ற உணர்ச்சி மிக அதிகமாகவே எழுந்து அவளை துன்புறுத்தியது…….
காலையில் வேண்டுமென்றே நேரம் கழித்து எழுந்து தன் செல்ல அத்தையிடம் அன்பான வசவுகளை விரும்பியே பெற்று…….சிறு மழலை போல் சிறகடிக்கும் சுதந்திரப் பறவை போல் வானவீதியில் இலக்கற்று பறக்கும் குதூகலத்தோடு……. தன் தோழிகள் கைப்பிடித்து கல்லூரி என்னும் சரணாலயத்தில் சுற்றித் திரிந்த காலங்கள் அனைத்தும் கானல் நீராய்……
பாலைவனத்தின் சுடு மணலில் கொதிப்பை இன்று ஒவ்வொரு நிமிடத்திலும் தான் அனுபவிக்கும் இந்த நிலை…… தன் உயிராக உணர்வாக உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் சொந்தங்கள் அனைவரும் எங்கோ ஓர் மூலையில் தன் விழி பார்க்க முடியாத தொலைவில் மறைந்து விட்டதாய் ஒரு மாயத்தோற்றம்…….
இதோ இரண்டடி மட்டுமே விலகி அமர்ந்து தன் கருணை பொங்கும் கண்களில் அன்பை தேக்கி…… ஆறுதல் கொடுக்கக் காத்திருக்கும் அவளின் அன்னைக்கு நிகரான அத்தை பூர்ணிமாவின் அரவணைப்பில் அடங்க முடியாத தன் துயரநிலை… அதை என்னவென்று சொல்வது……..
நடந்த நிகழ்வுகள் எதற்கும் எவரும் காரணமாக முடியாது….. தன் செயலின் வீரியம் உணர்ந்து செயல்படாத அவளின் முட்டாள்தனத்திற்கு வேறு யாரை குற்றம் சொல்ல முடியும்….. இதோ இப்போது கூட ஒரு வினாடி போதும் தன்னை சுற்றி அகழி வெட்டி தனிமைப்படுத்தி தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும்…… அந்த ஆரியன் பற்றியும் அவனிடம் வலியச் சென்று அகப்பட்ட தன் அறிவிலித்தனம் பற்றியும் பூர்ணிமா விடம் கூறிவிட அவளால் முடியும் ஆனால் அதன் பிறகு….??!!!!
சிறுவயது முதல் அவளின் சிறு சிறு தவறுகளுக்கு கூட ஷிவானியை தண்டிக்கவோ ஒரு வார்த்தை கடிந்து கொள்ளவோ செய்யாமல்….. அவள் மீதான அவரின் வளர்ப்பு நிலை குறித்தே கேள்வி எழுப்பி தன் மீதே பழி சுமத்திக் கொள்ளும் பூர்ணிமா வின் குண இயல்பு பற்றி தெளிவாக அறிந்திருந்த ஷிவானிக்கு……
இன்றைய தன் குற்றத்திற்காக அவர் எத்தனை தூரம் தன்னையே வருத்திக் கொள்வாரோ..??!!! என்ற அச்சத்தில் ஒரு வார்த்தை கூட ஆரியனை பற்றியோ…… அவனிடம் சிக்கியிருக்கும் தன்னைப் பற்றியோ தெரிவிக்க கிஞ்சித்தும் தைரியம் இயலவில்லை…….
இத்தனை யோசிக்கும் ஷிவானி தான் பூர்ணிமா விடம் இருந்து மறைத்த இந்த சிறு விடயத்தின் காரணமாய் எத்தனை பெரிய விலை கொடுக்கப் போகிறோம் என்பதை யோசிக்க மறந்து விட்டாளோ…??!!!!……
மிகக் குறுகிய இடைவெளியில் இருந்தும்கூட ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்கும் அன்னியோன்யமும் அன்பும் இருந்தும் பயனின்றி தனித்து நின்ற……. அந்த இருவரின் சிந்தனையை கலைக்கும் விதமாய் பூர்ணிமாவின் செல்போன் ஒலி எழுப்பி அங்கிருந்த அமைதியை கலைத்தது……. ஒரு திடுக்கிடலோடு சுயம் பெற்று தன்னை ஓரவிழியால் நோக்கும் அவளை… அளந்த படி அழைப்பிற்கு பதில் கொடுத்து விட்டு செல்போனை அணைத்து வைத்தவர்……..
ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாய் எழுந்து செல்லும் ஷிவானியை அதற்கு மேல் அப்படியே விட மனமின்றி……ஷிவு கொஞ்சம் நில்லு உன் கிட்ட நான் பேசனும் இப்படி வந்து உட்காரு….. தன் கூப்பிட்டும் நிமிர்ந்து முகம் பார்க்காமல் தலைகுனிந்து நிற்கும் அவளின் உச்சந்தலையை பார்த்து…… கட்டளையாக மொழிந்து விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவரின் பாதங்களை பின்பற்றித் தானும் சென்று அமர்ந்தாள்……..
ஒரு சில வினாடிகள் அமைதியாக யோசித்தவர் பின்பு ஒரு ஆழமான பெருமூச்சு விட்டு ஷிவு இதுக்கு முன்னாடி எப்பவும் உன் செயல்களைப் பற்றி எந்தக் கேள்வியும் நான் கேட்டதே கிடையாது……அப்படி கேள்வி வரும்படி நீ நடந்து கொண்டதும் கிடையாது…….
இப்போது உன்னிடம் எதைப்பற்றியும் நீயாக சொல்வதற்கு முன்பு நான் கேட்க நினைக்க வில்லை ஆனால்..!! என்று நிறுத்த….. கண்களில் ஒருவித பயம் துளிர்விட தெரியாமல் குற்றம் புரிந்துவிட்டு….. தாயின் கண்டிப்பை கண்டு மிரண்டு விழிக்கும் மழலைப் போல் முகம் வைத்து தன்னையே பார்த்திருக்கும் அன்பு அண்ணன் மகளின் மீது உள்ளம் பாகாய் உருகி கரைய….
எழுந்து அவள் அருகில் சற்று நெருங்கி அமர்ந்து தன் கைகள் கொண்டு அவளின் இரண்டு கரங்களையும் பொத்தி பிடித்தவர்…… இந்த சில நாட்களாக நீ உனக்குள் ஏதோ ஒன்று வைத்து தவிப்பது போல் எனக்கு தோன்றுகிறது
உனக்கு என்னிடம் சொல்ல ஏதாவது விஷயங்கள் இருக்கிறதா..??… ஏதாவது தவறு செய்துவிட்டு என்னிடம் கூற பயந்து மறைக்க முயன்றால் அதற்கு எந்த ஒரு அவசியமும் இல்லை ஷிவு….. தன்னுடைய தைரியமான வார்த்தைகள் மட்டுமே அவளுக்கு தெம்பூட்டும் என்று உணர்ந்து அவர் கூற……
ஏனோ இப்போதும் தொண்டை வரை வந்த அனைத்தையும் உள்ளுக்குள் விஷயமாய் விழுங்கி அப்படி ஒன்னும் இல்லை அத்தை மா நான் நல்லாத்தான் இருக்கேன்……. கொஞ்சம் காலேஜ்ல அசைன்மென்ட் பிராக்டிகல் அப்படின்னு டென்ஷன்…… மத்தபடி வேறு எதுவும் இல்லை அத்தை அது எல்லாம் கூட இன்னும் ஒன்றிரண்டு வாரத்திற்குள் முடிந்தது விட்டும்…….
அதன் பிறகு வழக்கம் போல நான் நம்ம ரெஸ்டாரன்ட் வந்து….. என்னோட சந்தோஷமான வேலைகளை திரும்ப செய்வேன் அத்தை மா நீங்க என்ன பத்தி கவலைப் பட்டு மேலும் உங்கள வருத்திக்காதிங்க…….
நடக்கும் அனைத்தும் சில நாட்களில் முடிந்து விடும் என்கிற நம்பிக்கையில் அதற்கு முன்பு ஏன் அவரை கஷ்டப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்…… பூர்ணிமா விடம் உண்மையை மறைத்து கூறிவிட்டு தன் கரங்களை விலக்கிக் கொள்ள முயன்ற ஷிவானியின் கை…. அடுத்த வினாடி பூர்ணிமாவால் மீண்டும் அழுத்தி பிடிக்கப்பட்டது….. அவரின் பார்வையோ அவளின் வலது கை மணிக்கட்டில் வெகு புதிதாக அணிந்திருந்த பார்க்கும் போதே அதன் மதிப்பை ஒளிர்ந்து பறைசாற்றும் அந்த வைர பிரேஸ்லெட் மீது படிந்திருந்தது…….
ஷிவு இது என்ன..??!! இது உனக்கு யார் கொடுத்தது……. அந்த நேரம் வரை இருந்த வார்த்தைகளின் மென்மை தொலைந்து போக சற்று காரமாக வந்து விழுந்த அவர் வார்த்தைகளில்…… திருதிருவென்று இரு நொடிகள் விழித்தவள் இ…து இ…து…..நிஷா இல்ல நம்ம நிஷா அவ தான் அழகா இருக்குன்னு எனக்கு வாங்கி கொடுத்தா கவரிங் 500 ரூப்பிஸ் தான் அத்தை மா வேற ஒன்னும் இல்ல……
சற்று திணறினாலும் ஒருவழியாய் எதையோ சொல்லி முடித்து விட்டு……அதற்கு மேல் நின்றால் இன்னும் என்ன கேள்விகள் வருமோ என்று அஞ்சி தன் கல்லூரி பையைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிய ஷிவானியை நம்பமுடியாமல் பார்த்தபடி திகைப்புடன் நின்றிருந்தார் பூர்ணிமா……
முதல்முறை பொய்யுரைக்கும் காரணத்தால் தடுமாறி எதையோ சொல்லிவிட்டு ஓடிப்போன ஷிவானி விட….. அவள் கையில் பல பலத்த அந்த வைர நகை தான் இனிவரும் காலத்தில் வெகு பயங்கர துன்பத்தின் அறிகுறியாக அவருக்கு தோன்றியது……இத்தனை விலைமதிப்பான பொருளை ஷிவானிக்கு பரிசாக கொடுக்கும் அந்த நட்பு யார்…?? அதையும் அவரிடம் இருந்து மறைக்க அவள் நினைக்கும் காரணம் என்ன…??
சற்று முன்பு கூட சாதாரணமாக தெரிந்த ஷிவானியின் மாற்றங்கள்…..இப்போது பூதாகரமாக எழுந்து அவரின் உள்ளத்தை அழுத்துவது போல் ஒரு வலி நொடியில் உண்டாக…… அப்படியே சோபாவில் பொத்தென்று விழுந்து தன் இதயத்தை பிடித்துக் கொண்டவரின் கண்களில் தானாக தோன்றியது சில கண்ணீர் துளிகள்……
இன்றைய ஷிவானியின் மாற்றங்கள் ஏனோ சட்டென்று கடந்த கால பொழுதுகளை அவரின் அனுமதியின்றியே……. புகை வடிவங்களாய் கண்களுக்குள் காட்சிப்படுத்த அது தந்த மன அழுத்தத்தை தாங்க முடியாமல் விழி மூடி அமர்ந்தவரின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தபடி இருந்தது…….
முழுக்கை மறைத்த சுடிதாரில் பிறர் கண்கள் கவராமல் மறைந்திருந்த அந்த வைர நகையை தொட்டுப் பார்த்த ஷிவானியின் உடலில் ஒரு விறைப்பு ஓடி மறைந்தது……. அன்றைய வெற்றிக்குப் பின் சரியாக சொல்லவேண்டும் என்றால்……அவளின் விடுதலைக்காக அவனோடு போட்டியிட்டு வீழ்ந்து போன யுகேந்திரனின் தோல்வியை கொண்டாடும் பொருட்டு அவள் கைகளில் அணிவிக்கப்பட்டது அந்த வைர பிரேஸ்லெட்……
முகத்தில் ஒரு வித நக்கல் புன்னகை நிறைந்திருக்க தன் கைகளை உடைத்து விடும் நோக்கத்தோடு….. அழுத்திப் பிடித்து அதை அணிவித்து விட்டு விலகாமல்…. அவள் புறங்கையில் தன் உதடுகளை அழுத்தி பதித்து விடுவித்த அந்த ஆரியனின் கண்களில் சில வினாடிகள் என்றாலும்…… தோன்றி மறைந்த குரோதத்தை காண தவறிவிட்ட ஷிவானிக்கு அவனின் செய்கை பயங்கர எரிச்சல் உணர்வோடு பிடித்தம் இன்மையும் தோற்றுவித்தது……
அதைவிட அவனிடமிருந்து அந்தப் பொருளை பெற்றுக் கொள்ள விருப்பம் இன்றி அதை கழட்ட முயன்ற……. அவள் முயற்சியை முறியடித்து தன் ஒற்றைக் கையால் அவளைத் தடுத்து மறுகரம் கொண்டு அவள் இடை வளைத்து தன் உடலோடு அழுத்தி பிடித்தவன்…….மிகச் சிறந்த வெற்றி எனக்குப் கிடைக்க காரணமான என் விசுவாசமான அடிமைக்கு இது என் சிறிய ஊக்கப்பரிசு…….
இதை உன் கைகளில் இருந்து எப்போதும் அவிழ்க்க முயற்சி செய்யாதே பூனைக்குட்டியே இது நான் காணும் வேலைகளில் உன் கைகளில் இல்லை என்றால்……. அதுவே உன்னோடு சேர்த்து உன் தோழிகளுக்கும் நீ வேண்டுமென்றே விலை கொடுத்து வாங்கிய ஆபத்தாக மாறிவிடும்……. என் சொல் கேட்டு நடப்பதை கீழ்ப்படிதலோடு நீ செய்தால் விரைவில் உனக்கு விடுதலை என்னிடமிருந்து……
இரண்டில் எது உன் விருப்பமோ……எவரின் கவனத்தையும் கவராமல் தன் செவியோடு பேசும் அவனின் வார்த்தைகளும் அவன் அருகாமையும் கரங்களில் இரும்புப் பிடியும் அவளுள் அதிதீவிர நடுக்கத்தை தோற்றுவித்து ஷிவானி பலஹீனப்படுத்தி மற்றதை யோசிக்க விடாமல் செய்ய……. அந்த நேரம் அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று விலகி வந்ததோடு அந்த பிரேஸ்லெட்டை பற்றி மறந்து போன ஷிவானிக்கு…… அத்தை கேட்கும் பொழுது தான் அது தன் கைகளில் இருப்பதையே உணரமுடிந்தது……
முதல் வேலையாக இன்று இதை அவனிடம் திரும்பக் கொடுத்து விட்டு….. இதற்குமேல் உன் இஷ்டப்படி செயல்பட என்னால் முடியாது என்று தெளிவுற பேசிவிடவேண்டும்…….போதும் அவனின் கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் அவளின் அதி முட்டாள்தனமான செயலால்.… இன்று தன் தோழிகளை பிரிந்து நிற்பது போல் நாளை தன் அத்தை பூர்ணிமாவின் வருத்தத்திற்கு தான் காரணமாக கூடாது அனைத்தையும் மிக விரைவில் சரி செய்ய வேண்டும்……
இரவெல்லாம் யோசித்து தான் எடுத்த முடிவுகளை செயலாற்றும் பொருட்டு கல்லூரிக்கு விரைந்தவளின் தொலைபேசி சிணுங்க அதை எடுத்து இரண்டு நிமிடங்கள் பேசிய ஷிவானியின் முகபாவனை கவலையை பிரதிபலிக்க சில நிமிடங்கள் விழிமூடி யோசித்தவள் ஒரு ஆழமான பெருமூச்சோடு…….
தன் முன்பு வந்து நின்ற கல்லூரி பேருந்தில் ஏறாமல் அதற்குப் பின்பு வந்து நின்ற காரில் அமைதியாக ஏறி அமர்ந்தாள் ஷிவானி……கல்லூரி செல்லும் பாதைக்கு எதிர்திசையில் அந்த வாகனம் புறப்பட்டு தன் வேகத்தை அதிகரித்து புள்ளியாகி மறைந்து போனது……
சரியாக அவள் சென்ற வாகனம் கிளம்பி இரண்டு மணி நேரங்கள் கழித்து…… தங்கள் தேநீர் விடுதியில் வேலையாக இருந்த பூர்ணிமாவின் செல்போனில் உடனடியாக ஷிவானி படிக்கும் கல்லூரிக்கு வந்து தங்களை சந்திக்கும்படி……மேனேஜ்மென்ட் இடம் இருந்து அவருக்கு அழைப்பு வர……
தன் வேலைகள் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு பதறிய மனதை சமாதானப்படுத்த வழியின்றி விரைந்தார் பூர்ணிமா …..
இன்றைய நாளின் அமைதியான தொடக்கத்திற்கு முற்றிலும் மாறாக முடிவு எத்தனை இதயங்களை உடைத்து நொறுக்கி உடைந்த……கண்ணாடி சில்லுகளாய் மாற்றப் போகிறது என்பதை…… தன் கோரப் பற்களைக் காட்டி புன்னகைத்தபடி வேடிக்கை பார்க்கும் விதியோடு சேர்ந்து நாளை நாமும் தெரிந்து கொள்வோம்…….
சின்ரெல்லா வருவாள்………
.