“என்னைய கொல்ல பாக்குதீகளா…. என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு… பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு…“என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன் அவளுக்கு பதிலளிக்காமல் காருக்குள் கிடத்த, குழலி
“ஸ்ஸ்ஸ்ஸ்…. மெல்ல மெல்ல… ஆஆஆஆ….” என அலறியவளுக்கு அத்தனை வலிகுத்திய இடத்தில்… அது அவளை கொஞ்சம் அசைத்தாலும் பெரும் வலியை உண்டாகியது அவளுக்கு…
அவளது அலறலை கண்டுக்கொள்ளாது, அவள் அருகில் அமர, முருகவேல் அவர்களுடன் செல்லாது இங்கு போலீஸுடன் தேங்கிவிட, கவி “சீக்கிரம் காரை ஹோஸ்பிடலுக்கு விடு….” என உறுமவும், குமார் கையில் கார் பறந்தது அசுர வேகத்தில்….
“என்னைய கொன்னுட்டு நீரு உம்ம அப்பாரு பார்த்த புள்ளைய கட்டிகிட திட்டம் போட்டு இருக்குதீயோ…?” என குற்றம் சாட்டியவளை கவி கண்டுக்கொள்ளாது அவளது அடிபட்ட வயிற்றின் மீது கண்ணாய் இருந்தான்…
அவளோ அடங்குவேனா என்னும் முடிவோடு, “உம்மை போய் நம்புனேனே என்னைய சொல்லணும்… எடுப்பட்ட பயலே… கொலகார பயலே… எடுல உம்ம கைய.…”என அர்ச்சித்தவள் புடவையை பொதித்திருந்த அவளது கையின் மேலிருந்த அவனது கையை தட்டிவிட்டாள் ஆத்திரத்தில்….
ஆனால் அவனோ நீ ஏதோ பேசிக்கொண்டு வா எனக்கென்ன என்னும் தோரனையில்தான் இருந்தான்…
குழலி, “அய்யோ…. ஒத்த புள்ளையா பெத்து வச்சுருக்க என்ற ஆத்தா என்னத்த பண்ண போதோ… கடவுளே… நீத்தேன் அவீகளா காப்பாதணும்…” என இறைவனை வேண்டியப்படி,
“என்னைய கொன்னுபோட்டு, இவீகளுக்கு வேற கண்ணாலம் நடக்க இருந்தா அது நடுவுலேயே அத்துக்கணும்….” என்ற மூக்கை உரிய, வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த குமாரே திகைத்து ஒருநொடி பின் சீட்டில் ஒய்யாரமாக கணவனது கையணைப்பில் அவனது மடியில் படுத்துக்கொண்டு புலம்பியவண்ணம் இருந்த குழலியை திரும்பி பார்த்தான்….
அந்த திகைப்பு எதுனால் என்று அவனிடம்தான் கேட்க வேண்டும்…. மீண்டும் சாலையில் கவனத்தை செலுத்தியவன் ஹோஸ்பிடலுக்கு போகும் வரை அவளது புலம்பலை கேட்டுக்கொண்டே வந்தான்….
ஹோஸ்பிடலுக்கு வந்ததும் மீண்டும் தன்னவளை கையில் எடுக்க, மீண்டும் அவளுக்கு வலி தாளவில்லை… இறுக கண்களை மூடி உதட்டை கடித்தவள், “எடுப்பட்ட பயலே… வலிக்குதல….”என்றவளின் கழுத்தை வளைத்து பிடித்திருந்த கையால் அவனது சட்டையை இறுக்கி பிடித்தாள்….
சில பல நிமிடங்களில் நிகழ்ந்தேறி இருக்கும் இச்சம்பவத்தில் குழலி இப்பொழுது தான் வாய் திறந்து தன் வலியை உரைக்கிறாள்… அதில் அவளை பிடித்திருந்த தன் பிடியை இறுக்கியவன், அவளை திரும்பியும் பாராது உள்ளே நுழைய, குழலிக்கு தான் என்னவோ போல் இருந்தது…
இத்தனை கலவரம் நடந்திருந்தும் கவி தன்னிடம் ஒரு வாரத்தைக் கூட பேசிடாதது அத்தனை வேதனையை கொடுத்ததுஉள்ளுக்குள்…
காரை நிறுத்தியதும் குமார் வேகமாக உள்ளே விரைந்து விஷயத்தை கூற, அடுத்தடுத்த நடக்க வேண்டிய சம்பிரதாயங்கள் நடக்க தொடங்கின…
அவளுக்கு சிகிச்சை நடக்க வேண்டி போலீஸுக்கு அழைத்து விஷயத்தை கூறி அவரை டாக்டரிடம் பேச வைத்ததும், அடுத்து நடக்க வேண்டிய முறைகள் வேகமாக நடந்தேறியது….
ஒருபக்கம் குமார் அனைத்தையும் பார்த்துக்கொள்ள, மறுபக்கம் அவளை உள்ளே அழைத்து செல்ல குழலியை ஸ்டெச்சரில் படுக்க வைத்துவிட்டு கவி, வேகமாக டாக்டர் புறம் திரும்ப போகையில் அவனது சட்டையை பிடித்து இழுத்த குழலியின் விழிகளில் அத்தனை அலைப்புறுதல்…
அவனை தடுத்தாளே ஒழிய வாய் திறந்து எதுவும் பேசிடவில்லை… அவளது மனநிலையை புரிந்துக் கொண்ட கவி, அவள் புறம் குனிந்து அவள் தலையை வருடியபடி,
“கத்தி ரொம்ப ஆழமா படல டி முட்டக்கண்ணி… அதுனால பயப்படாத…இரத்தம் மட்டும் நெறைய போயிருக்கும், அதுவும் பிளட் ஏத்துனா சரியா போயிரும்… உனக்கு ஒன்னும் ஆகாது உன் சாபமும் நடக்க வாயிப்பில்லடி வாயாடி…சோ கவலபடாத…” என்ற படியே அவளுடன் நடந்தவன், சிகிச்சைக்காக உள்ளே அழைத்து செல்லஇருக்க, அவளிடம் இருந்து மெல்ல பிரிந்தான்.…
உள்ளே சென்று கதவை அடைக்கும்வரை இருவரது பார்வையும் ஒன்றோடு ஒன்று கவ்வி இருந்தது… ஒன்று ஆறுதல் தேடி, மற்றொன்று ஆறுதல் கூறி…
அவள் உள்ளே சென்றதும் வெளியே இருந்த நாற்காலியில் பொத்தென்று அமர்ந்தான் கவியழகன்…சில நொடிகள் தான் பின் நிஜம் உரைக்க, தன் ஃபோனில் இருந்து வீட்டிற்கு அழைத்து விஷயத்தைசுருக்கமாக கூறியவன் வரும்போது அவளுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வருமாறு பேசிவிட்டு வைக்க, குமார் வந்து நின்றான்…
சட்டென எழுந்து நின்றவனின் விழிகளில் அத்தனை கோபம் மின்னியது… தன் மனதிற்கு இனியவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை கொன்றுவிடும் வெறி அவனிடம்…
“என்ன குமார்… அவனுங்க யாருன்னு தெரிஞ்சுதா…?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்க,
“பத்ரிநாத் அனுப்பி இருக்கான்…” என்னும் போதே கவிக்கு அப்படியொரு ஆத்திரம்,
“என்னது…” என்று உறும,
“ஆமாங்க சின்னையா… அவன் மொத உங்களைய போடத்தேன் ஆளுங்கள மில்லுக்கு அனுப்பி இருக்கான் ஆனா பொறவு நீங்க அங்குட்டு இல்லனதும் இந்த தடியனுங்க போன் போட்டு அந்த பத்ரிக்கு கேட்டு இருக்கானுவ… அதுக்கு அவன் மொத பெரிய அய்யாவ போட சொல்லி சொல்லியிருக்கானவ… பொறவு தான் அவீக பெரிய அய்யா எங்குட்டு இருக்காகன்னு விசாரிச்சுபுட்டு தோப்புக்கு வந்திருக்காவ… அதுக்குள்ள நம்ம சின்னம்மா அங்குட்டு போகவும் என்னவோ நடந்து போச்சு….” என்றவன் இறுதியில் குரலை தாழ்த்தி கூற, புருவம் சுருக்கியகவி
“இதுயெல்லாம் அந்த தடியனுங்க சொன்னதா...?”
“இல்லைங்கைய்யா… நம்ம சின்னம்மா அவீகளே கேட்டது… வூட்டுல இருந்து உங்களைய பார்க்க வேண்டி, மில்லுக்கு போனாக நாந்த்தேன் கூட்டியாந்த்தேன்… ஆனா உள்ளாற போறத்துக்குள்ளாற அரிசி மில்ல ஏதோ பிரச்சனைட்டு நாந் கிளம்பிட்டேன்… ” என்றவன் பிறகு நடந்தது என்ன வென்று குழலி குமாருக்கு அழைத்து நடந்ததை கூறியது, அங்கு மில்லுக்கு காவலுக்கு இருந்தவரை அடித்துவிட்டு போயிருப்பதை பற்றி கூறியது என அனைத்தும் கூறியவன்…
பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு போலீஸ்க்கு அழைத்து கூறியதும் தான் தான் கவிக்கு அழைத்து விஷயத்தை கூறியது என்று அனைத்தையும் சொல்லி முடிக்கவும் கவியழகனின் முகம் யோசனையில் சுருங்கியது…
அமைதியாக கைகள் கோர்த்து அமர்ந்தவன், என்ன செய்வதென்று யோசனையில் ஆழ்ந்தான்… குமாரும் அவனை எந்த தொந்தரவும் செய்யாது அமைதியாக பக்கத்திலேயே கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் துணையாக…
சில நிமிடங்கள் கழித்து இருக்கையில் இருந்து எழுந்த கவி, தன் அழைப்பேசியில் யாருக்கோ அழைத்து பேசி செய்ய வேண்டிய வேலைகளை செய்ய சொல்லி கேட்டவன் பின் அனைத்தும் சரியென முடிவானதும் அழைப்பை துண்டிக்க, அங்கு வந்து சேர்ந்தனர் முருகவேலோடு சேர்த்து போலீஸும்….
“இல்ல ப்பா… டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு… ஆனா அடி பலமா இல்லஎனக்கு தெரிஞ்சு… பிளட் தான் நெறைய போயிருச்சு…” என்று நிறுத்த, போலீஸ்
“இதை பண்ணதுப…”என சொல்லும் முன்,
“பத்ரிநாத்…. “என்று வெற்று குரலில் கூறியவனின் பார்வை முருகவேல் மீது குற்றம் சாற்றியது…
அதில் தலைகுனிந்தமுருகவேல், பின் நிமிர்ந்து போலீஸிடம் “அவனைய சும்மா உடக்கூடாது… ஆரு மேல கை வைக்க நெனைச்சான்… நாதாரி… ” என பல்லை கடிக்க, கவியழகனோ ஒரு பெருமூச்சுடன்போலிஸின் புறம் திரும்பி நிதானமான குரலில்,
“வேண்டாம் சார்… அவனை ஒன்னும் பண்ண வேண்டாம்… விட்டுருங்க… கேஸ் பைல் பண்ண வேண்டாம்…” என்க அங்கிருந்த அனைவருக்குமே அவனது வார்த்தையில் அத்தனை அதிர்ச்சி…
முருகவேல், “என்ன ராசா சொல்லுத… அவனால உள்ள மருமவ படுத்துகெடுக்கா… ” என்னும் போது நடுவே குறுக்கிட்ட கவி,
“இத அவன் பண்ண காரணம் யாரு…?” என அடக்கப்பட்ட கோபத்தோடு சீற, முருகவேல் திகைத்து அமைதியாக தலையை குனிந்துக்கொண்டவர்அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை…
அவர் அமைதியாகவும் போலீஸீன் புறம் திரும்பியவன், “அவனை ஒன்னும் பண்ண வேண்டாம்… ஏற்கனவே நெல பிரச்சனைல தான் இப்படி பண்ணிருக்காங்க… திரும்பவும் அவங்களை சீண்டி நாங்க பிரச்சினைய இழுத்துக்க விருப்பல… இன்னைக்கு சம்மந்தமே இல்லாம என் வைஃப் உள்ள அடிப்பட்டு டிரீட்மென்ட்ல இருக்கா… இதுக்கும் மேல அவங்க மேல கேஸ் போட்டு, கோபத்த தூண்டி பகைய வளர்க்க நான் விரும்பல… இதை இத்தோட விட்டுரலாம் பிளீஸ்…” என்றவனை பார்த்து,
“இருக்கட்டும் பாதிக்கப்பட்டது நாங்கதானே… விட்ருங்க… நான் நிம்மதியான ஒரு வாழ்க்கைய வாழணும்னு நினைக்குறேன்… ” என்று கராராக பேசி முடிக்க,
அதற்குமேல் அந்த போலீஸுக்கும் எதுவும் பேச முடியவில்லை… ஒரு பெருமூச்சுடன் அவனிடம் தலையை அசைத்துவிட்டு விடைபெற்றனர்…
அதன்பின் முருகவேல் ஏதும் கூறாது, அமைதியாக சென்று அமர்ந்துவிட, கவி சைகையால் குமாரை அழைத்தான்… அவனும் அமைதியாக நகர்ந்து அவன் அருகில் வர, கவி தன் தலையை கோதுவது போல் பாவனையில் மெல்லிய குரலில்
“குத்துனவன் கைய உடைச்சுரு…” என்றதோடு நகரந்துவிட, குமாரும் பதிலேதும் கூறாமல் ஏன் சிறு தலையசைப்பை கூட காட்டாது அவ்விடத்தை விட்டு அகன்றான் தனக்கு வந்த கட்டளையை செய்து முடிக்க…
குழலி இருக்கும் அறையை ஒருதரம் திரும்பி பார்த்தவன், அமைதியாக பின்னந்தலையை கோதியபடி தன் ஃபோனை நோண்டிக்கொண்டே நடந்து சென்று பால்கனியில் நிற்க, அடுத்து செய்ய வேண்டியதை செய்துவிட்டு மீண்டும் முருகவேலின் அருகில் வரும் நேரம் அவனது மொத்த குடும்பத்தின் பெண்களும் பதற்றத்தோடு அங்கு வந்து சேர்ந்தனர்…
காயத்ரி,“அய்யா ராசா… என்னவே ஆச்சு…?”
செல்லதாயி, “எங்சாமி… ஆருல இப்படி பண்ணது…?” என கேட்க,
சைந்தவி, “அண்ணே… என்னணணே இது…?” என்று கேட்க, வசுந்தரா மட்டும் அமைதியாக கண்ணீர் வடித்தபடி நின்றிருந்தார் எந்த அறையென்று கண்களால் தேடியபடி…
பெற்றவள் மனம் வாய் வார்த்தையின்றி உள்ளுக்குள் துடியாய் துடித்துக்கொண்டிருந்தது… அனைவரையும் விடுத்து வசுவின் அருகில் வந்தவன், அவரது கைபிடித்து
“பயப்படாதீங்க அத்த… அவ என் பொண்டாட்டி… அவளுக்கு ஒன்னும் ஆகாது… சின்ன அடித்தான் சீக்கிரம் சரியாகிடுவா… அந்த ரூம்ல தான் டிரீட்மென்ட் போயிட்டு இருக்கு… உள்ள போறவரைக்கும் என் கூட சண்டை போட்டுட்டு தான் போனா….” என்றவன் அவள் புலம்பிய அனைத்தையும் யோசித்தவனுக்கு இதழோரத்தில் லேசாக ஒரு சிரிப்பொன்று தோன்றி மறைந்ததை வசுந்தராவின் கண்கள் கவனிக்க தவறவில்லை…
அதில் சிறிது பலம் பெற்றவர், முகத்தில் முன்பு போல் கலக்கம் அதிகம் இல்லையென்றாலும் மகளை பார்க்க வேண்டும் என்னும் பரிதவிப்பு உள்ளே இருக்கதான் செய்தது…
இவ்வுலகில் தனக்கென இருக்கும் ஒரே உயிர் சொந்தம் மகள் அல்லவா… கட்டியவனை இழந்து பற்றற்று இருந்தவருக்கு ஊன்று கோலாய் இருந்த மகளுக்கு இந்நிலையை அவர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை அதன் விளைவு அறைவாசலையே பார்த்திருந்தார் மகளது ஆரோக்கியம் காண…
அத்தையின் முகத்தில் தெரிந்த தெளிவில் மற்றவர்கள் புறம் திரும்பியவன், அவர்களை பேசி தேற்றும் நேரம்… ஒதுங்கி அறைவாசலையே பார்த்துக்கொண்டிருந்த வசுந்தராவிடம் வந்தார் முருகவேல்…
அருகில் வந்தவர், இருகரம் கூப்பி “என்னைய மன்னிச்சுரு தாயி…” என்றவரின் குரல் உடைய, வசுந்தரா ஸ்தம்பித்து போனாள்அவரின் வார்த்தையில்…
அங்கிருந்து அனைவருக்கும் அவரது இந்த மன்னிப்பு வேண்டல் சற்று ஆச்சரியத்தை தான் கொடுத்து… இத்தனை சீக்கிரத்தில் அவர் மனமாருவார் என்று யாரும் அறிந்திருக்கவில்லை…