UD:2
கீதாவிடம் பேசிவிட்டு ஒருவித சந்தோஷ மனநிலையில் எம்.டி யின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளிருந்து வரும் அனுமதிக்காக காத்திருந்தாள் அனிஷா…
அவளது காத்திருப்பிற்கு,”எஸ்… கெட் இன்….”என்ற கம்பீர குரலில் அனுமதி கிடைத்ததும், ஒருமுறை மூச்சை நன்கு உள்ளிழுத்து விட்டு முகத்தில் ஒரு புன்னகையுடன் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தவள் இரண்டு எட்டுகள் கூட எடுத்து வைத்து இருக்க மாட்டாள்…
“அய்யயயயோ…..” என்று அதிர்ந்து நின்று விட்டாள்… இமைக்காத விழியோடு, மூச்சுவிட மறந்த நிலையில் சிலையென நின்றிருக்க…
எந்த அரவமும் இல்லையே என்று யோசனையில் அந்த கம்பெனி எம்.டி இருக்கையில் அமர்ந்து இருந்தவன் கணினியில் இருந்து பார்வையை திருப்பி அறை வாயிலை பார்த்தான்….
பார்த்தவன், சிலையென நின்று இருந்தவளை தன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து, வலகையின் முட்டியை இருக்கையின் கைப்பிடியில் ஊன்றி, இடகையில் பெனாவை(pen) சுழற்றியபடி பார்வையால் அவளை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அளந்தான்….
அவனது பார்வையை கூட உணராமல் சிலை போல் நின்று இருந்தாள் அனிஷா….
பார்வையால் அளந்தவன் இன்னும் அவள் சுயநினைவுக்கு வராததை கண்டு, வலதுகையால் சொடக்கிட்டு அழைக்க, அதில் வெகு நேரம் கழித்து இமைத்தவள், அவளது எம்.டி‘யை பார்த்து பேந்த பேந்த விழித்தாள்…
அவளது அதிர்ந்த முகமும், திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொண்ட குழந்தையின் முழியும் கண்டவனுகோ அவளை பார்த்து கொண்டே இருக்கவேண்டும் போல் தோன்றியது… இவையெல்லாம் ஒருபுறம் மனதில் ரசித்தாலும் பலவருடம் உள்ளுக்குள் எரியும் நெருப்பு அவனை இறுக செய்தது…
முகத்தை கடினமாக்கி கொண்டு, ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘என்ன…’ என்பதை போல் கேட்க,
அதில் சுதாரித்தவள், அவசரமாக அறையை விட்டு வெளியேறி அறை கதவில் இருந்த பெயரை பார்த்தாள் அதில், ‘அபய் கிருஷ்ணா, எம்.டி ‘ என பெயர் பொரிக்க பட்டு இருந்தது…
அதை பார்த்து அதிர்ந்து, தன் வாயை இருகைகளால் பொத்திக் கொண்டவள், ‘மாட்டுனியா டி நிஷா… இவன் முழு பெயரும் அபய் கிருஷ்ணா வா… இது தெரியாம போச்சே டி… இத்தனை நாளா யார பார்க்க கூடாதுன்னு நினைச்சியோ திரும்ப அவன் கிட்டையே வந்து அழகா சிக்கிட்டியே டி… இப்ப என்ன பண்ண போற…’ என்று சில நொடி நிமிடங்கள் யோசித்தவள் ‘ம்ம்ம்… எவ்வளவோ பார்த்துட்டோம்…. இவன ஒருகை பார்த்திற மாட்டோம்… பார்த்துக்கலாம் டி ஸ்டிராங்‘கா இரு போதும்… ‘என்று முடிவெடுத்தவள் இப்பொழுது அசால்ட்டாக வாயை சுழித்து விட்டு மீண்டும் அறையினுள் நுழைந்தாள்….
இவளது வருகைக்காவே காத்து இருந்த அபய், “என்ன மேடம் பெயரை நல்லா செக் பண்ணிட்டீங்களா… இல்ல இன்னும் சந்தேகம் இருக்கா… ?” என்றவன் பார்வையிலும் வார்த்தையிலும் ஏகத்திற்கு நக்கல் வழிந்தது…
“இல்ல நல்லா செக் பண்ணிட்டேன் … நோ டௌட்…” என்று மிக சீரியஸாக பதில் அளித்தாள் நிஷா….
“ஓஓஓ… அப்படி இல்லைன்னா சொல்லுங்க வேண்ணும்னா என் ஐடி புருப் எல்லாம் காட்டுறேன்… ஏன்னா ஒருவேலை நீங்க இந்த இடத்துல ஒரு சொட்டையோ இல்ல மொட்டையோ எதிர் பார்த்து இருக்கலாம்…”என்றவன் இருக்கையில் இன்னும் நன்றாக சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவளை பார்த்து நக்கலாக இதழை ஒருபக்கம் வளைக்க….
‘இதையும் கேட்டுட்டானா பாவி மங்குஸ் மண்டையா …. ம்ம்ம்… இவன் தோரணையே சரியில்லையே…. ஏதோ என்னை வச்சு செய்ய போற மாறி இல்ல இருக்கு…’என்று மனதில் அலர்ட் மணி அடிக்க, வெளியே
“சாரி சார் அது ஜஸ்ட் பார் பஃன்…”என்று முடிக்கும் முன்,
“ஜஸ்ட் ஸ்டாப் ஃபிட்….” என்று கர்ஜிக்க,
அதில் லேசாக அரண்டவள், மெல்லிய குரலில் ” சார்…. நா…” என்று விளக்கம் கூற வர,
“ஐ செட் ஸ்டாப் ஃபிட்…. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க…. ஒரு இடத்தில வேலைக்கு வந்தா எப்படி நடந்துக்கனும்னு கூட தெரியாதா… நீங்க எல்லாம் வேலை செஞ்சு என்னத்தை கிழிக்க போறீங்க… பெசிக் மேனர்ஸ் கூட தெரியல… ஒரு ஹையர் அபிசியரை பார்த்தா விஸ் பண்ணும்ன்னு தெரியல… பட் சொட்டையோ மொட்டையோ‘ன்னு பேச மட்டும் தெரியும் கரெக்ட்..?” என்று கோபத்தின் உச்சியில் கத்த,
நிஷா அவனது அனைத்து வார்த்தைகளையும் ஒரு காதின் வழியாக வாங்கி மறுகாதின் வழியாக அனுப்பி வைக்கும் பணியை வெகு தீவிரமாக செய்துக் கொண்டு இருந்தாள்…. ஆனால் கடைசியாக அவன் கூறியதை மட்டும் உள்வாங்கிக் கொண்டவள், அவசரமாக
“நோ சார்…. குட் மார்னிங் சார்…” என்று கம்பீரமாக போலீஸ் சலியூட் வைத்தவளை பார்த்து உக்கிரமானான் அபய் கிருஷ்ணா…
“யூ இடியட்…. உன்னை எல்லாம் வேலைக்கு எடுத்த தாஸை சொல்லனும்…”முதற் வார்த்தைகளை கோபமாக பேசியவன் கடைசி வார்த்தைகளை சற்று மெல்லமாக முனுமுனுத்தான்….
ஆனால் அது நிஷாவின் காதில் அழகாக விழுந்தது… ‘என் நேரம் நான் இன்டர்வியூ எடுக்கும் போது உன்னை பார்த்து இருந்தா அப்படியே அபௌ டர்ன்‘ல ஓடி இருப்பேன் சிவாஜி டயலாக் மாறி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் முடிவுக்கே ஓடினேனு நான் ஸ்டாப்பா…ஆனா என் கெரகம்…. இங்க வந்து உன் கிட்ட மாட்டிக்கிட்டென்… ‘என்று மனதில் புலம்பியவளோ நிர்மலமான முகத்துடன் நின்று இருந்தாள்…
அவள் நின்று இருக்கும் தோரனையும், முழியும் கொஞ்சமும் பொருந்தாமல் இருக்க மனதில் ஏதோ தன்னை பற்றி தான் நினைத்து கவுண்டர் கொடுக்கிறாள் என்று யூகித்தான்….
“சும்மா என் மூஞ்ச பார்க்குற வேலைக்கு தான் இங்க வந்தீங்களா…. ?” என்று சுல்லென்று விழ,
“நோ சார்… அது ரொம்ப கஷ்டமான வேலை சார் வேற வேலை இருந்தா ஓகே சார்…. ” என்று மிகவும் பொறுப்பாக பதிலளிக்க…
“திமிர் உடம்பு முழுக்க திமிர்… “என்று திட்டியவன் அவளை மேற்க்கொண்டு திட்ட போக,
‘எப்படியும் இங்க தானே இருக்கா போறா பார்த்துக்குறேன் டி உன்னை… இத்தனை வருஷம் இதுக்காக தானே காத்துட்டு இருந்தேன் பார்த்துக்குறேன்… ‘என்று எண்ணியவன் சற்று பொறுமையானான்…
அபய், “ஷோ யுவர் ஃபைல்….”
நிஷாவும் அவனது திடிர் அமைதியை கண்டு,’என்ன மங்கூஸ் சைலண்ட் ஆயிருச்சு.. சரியில்லையே… ம்ம்ம்… நிஷா எதுக்கும் உஷாரா இருந்துக்கோ டி….’என்று எண்ணிக் கொண்டே தன் ஃபைலை நீட்ட,
அதை வாங்கி பார்த்தவன், ஐந்து கம்பெனியில் பணி புரிந்து இருக்கிறாள் என்பதை கண்டு, “ஆக ஒரு கம்பெனில ஒரு வருஷத்துக்கு மேல வேலை செஞ்சு பழக்கம் இல்ல…. ஏன்…?”
அவனை வெறித்துப் பார்த்தவள், “பெர்சனல் பிராபிளம் சார்….” வார்த்தையில் இத்தனை நேரம் இருந்த துள்ளல் போய், ஒரு வெறுமை இருந்ததை உணர்ந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“இங்க கம்பெனில வேலை செய்யனும்னா மூன்னு வருஷம் இருந்தே ஆகனும்… தெரியும் தானே ..?”
“எஸ் சார்… அக்ரிமெண்ட்ல சைன் பண்ணும் போது படிச்சேன்….”என்க,
“ஆர் யூ சுவர்… ஆர் யூ ஓகே வித் இட்…? சப்போஸ் நடுவில் நீங்க போற மாதிரி இருந்தா மூன்னு வருஷத்துக்கான சேலரி அமௌட்டை நீங்க குடுத்துட்டு தான் போகனும்… “
‘ஒருவேலை உன்னை முன்னாடியே பார்த்து இருந்தா கண்டிப்பா நான் சைன் பண்ணி இருக்க மாட்டேன்… ஆனா இப்ப என்னால என்ன பண்ண முடியும்….?’ என்று எண்ணியவள்,
“ஐ‘ம் ஓகே வித் தி அக்ரிமென்ட் சார்…. “என்று அவனது வார்த்தைக்கு சரி என்றுரைத்தவளை ஒரு சில நொடிகள் கூர்ந்து பார்த்தவன், பின் தன் பி.ஏ வை இன்டர் காமில் அழைத்தான்…
உள்ளே நுழைந்தவன், “எஸ் சார்….”என்க,
“இவங்களுக்கு என்ன புரோசியுஞர்‘ன்னு சொல்லிடுங்க… அலாட் ஹர் இன் ரிஷி டீம்… “என்று உத்தரவிட்டவன் அதன் பின் இருவரையும் கண்டுக் கொள்ளமால் கணினியில் தன் பார்வையை செலுத்தினான்….
அவனது பி.ஏ, “ஓகே சார்….” என்றவிட்டு நிஷாவின் புறம் திரும்பி உடன் வருமாறு சைகை காட்டிவிட்டு முன் செல்ல,
அவரை பின் தொடர்ந்து சென்றவள், அறை வாசல் வரை வந்து பின் திரும்பி அபயை பார்த்து ஆழ்ந்த குரலில், “தேங்க்ஸ்….” என்றாள்…
அதில் சரெலென்று அவளை திரும்பி பார்த்தவன் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக அனிஷாவின் விழியோடு விழிக் கலந்தான் அவன் அறியாமல்…
சில நொடிகள் நீடித்த அந்த பார்வை பரிமாற்றத்தை முதலில் கலைத்த நிஷா, தலையை குனிந்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்…
அவள் சென்றதும் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த காட்சிகள் படம் ஆயின அவன் நினைவில்….
பின் நினைவு வந்தவனாக அவளது பிரோபைலை கணினியில் முன்தினம் அவனது நண்பனும் தொழில் பங்குதாரரும்மான தாஸ் அனுப்பிய மின்னஞ்சலில் தேடி எடுத்து பார்த்தவனுக்கு அப்பொழுது தான் சற்று நிம்மதியானது…
“இனி நீ என் கைல டி… எப்படி எல்லாம் என்னை திணற வச்ச… இனி என் டர்ன்….”என்று பெண்ணவளின் நிலை அறியாமல் கருவிக்கொண்டவன்,
நிஷாவை குறித்து அடுத்து என்ன செய்வது என்று யோசனையில் ஆழ்ந்தான்…
அறையை விட்டு வெளியே வந்தவளிடம், அபயின் பி.ஏ அவளது வேலைகளை குறித்து அனைத்தையும் கூறியவன், நாளை அவளது ஐ.டி வந்து விடும் என்றும் நாளை முதல் வேலையை தொடங்கலாம் என்றும் கூறி, ஐ.டி‘கான பிராசஸ் மட்டும் இதர விதிமுறைகளை முடித்துவிட்டு ரிஷியிடம், நிஷாவை அறிமுக செய்து வைத்தவன் தன் பணியை பார்க்க சென்றான்…
ரிஷி,”வெல்கம் நிஷா…. நைஸ் டூ மீட் யூ….” என்று புன்னகையுடன் நட்பு கரம் நீட்ட,
நிஷாவும் நட்புடன் கைக்குலுக்கி, “தேங்க்ஸ் சார்… நைஸ் டூ மீட் யூ டூ….” என்க,
“சார் எல்லாம் வேண்டும்… ஜஸ்ட் கால் மீ ரிஷி…. இட்ஸ் எனப்….”என்றவனை நிஷாவிற்கு மிகவும் பிடித்துப் போனது…
ரிஷி, டெஸ்டிங் டீமோட லீடராக இருப்பவன்… அவனது அணியில் மூன்று பேர், கீதா, சுரேஷ், விஷால். இவர்களுடன் சுபா என்பவளும் பணியாற்றினாள்…. ஆனால் சில சொந்த பிரச்சனைகளால் வேலையை விட்டு திடீரென நிற்கும் சூழ்நிலை உருவானதால் அபய் எந்த தடையும் விதிக்காது அவளை வேலையில் இருந்து விடுவித்து இருந்தான்…
இப்பொழுது அவர்களது கம்பெனி ஒரு முக்கியமான வெளிநாட்டு பிராஜக்ட் ஒன்றை கையாண்டுக் கொண்டு இருந்ததால் அவர்களது அணியில் ஆள் பற்றாக்குறையால் மூவரும் சற்று நெருக்கடிக்கு உள்ளானார்கள்…
அதன் பொருட்டே அனிஷா இங்கு வேலை சேர்ந்ததற்கு காரணம்… தனக்கு அவசரமாக வேலை ஒன்று தேவை என்ற நிலையில் இருந்தவளுக்கு வரமாக வந்த வேலை தான் இது… மேலும் ஐந்து கம்பெனியில் வேலை செய்த அனுபவமும், கேள்விகளுக்கு அவள் அளித்த பதில்களும் அவளை இங்கு வேலைக்காக கடைசி பத்து பேரில் முன்னுரிமை கொடுத்து எடுத்திருந்தான் தாஸ்…
அபய் கிருஷ்ணா, கம்பெனியின் முதலாளி என்றாலும் அனைவரிடமும் நட்பாக பழகுபவன்… தனக்கு கீழே வேலை செய்பவர்களை அடிமையென்றோ, பணியாட்கள் என்றோ அவன் என்றும் எண்ணியது இல்லை….
தட்டிக் கொடுத்து வேலையை வாங்கும் ரகம்… ஆனால் அதே இது சரியாக வேலை செய்யாமல் தன்னை ஏமாற்ற நினைத்தால் அவர்களுக்கு அவனது ருத்ர மூர்த்தி அவதாரத்தை காட்டிவிடுவான்….
வேலையில் சாக்கு சொல்லியோ, பொய் சொல்லியோ அவனை ஏமாற்ற முடியாது… எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நல்லவர்களுக்கு மிகவும் நல்லவன் தன்னை ஏமாற்றி துரோகம் செய்ய எண்ணினால் அவர்களுக்கு மட்டுமே தன் இன்னொரு முகத்தை காட்டும் குணம் கொண்டவன் அது வேலை விஷயம் என்றில்லை அது தன் குடும்ப உறுப்பினராகவோ அல்லது நண்பர்களாகவோ இருந்தாலும் சரி…
ரிஷி, அனிஷாவை அவர்களது அணியில் இருந்த அனைவருக்கும் அறிமுக படுத்த, “ரிஷி, நீங்க வொரிப் பண்ணிக்காதீங்க நான் பார்த்துக்குறேன்…”என்றவள்,
மூவர் புறம் திரும்பி, “ஹலோ பிரெண்ட்ஸ்… நான் நிஷா… அனிஷா… இனி உங்க டீம்ல தான் வேலை செய்ய போறேன்… சோ… நான் என்ன பண்ணாலும் நீங்க சகச்சிக்கிட்டு தான் போகனும்… இனி உங்கள் தலையெழுத்தை மாத்த முடியாது… அதனால இனி எதுவா இருந்தாலும் தைரியமா பேஸ் பண்ணலாம் ஒன்னா சேர்ந்து… “என்றவளை மூவரும் புன்னகை முகமாக பார்த்து இருந்தார்கள் இவளை…
கீதாவிற்கு முன்பே இவளை பற்றி தெரிந்து இருந்ததால் முகத்தில் சற்று புன்னகை அதிகமாகவே இருந்தது…
யாரும் எதுவும் பதில் கூறாமல் இருக்கவும்,”என்னாச்சு… ஏன் நோ ரிப்ளை…?” என்று முழிக்க,
சுரேஷ் சிரித்துக் கொண்டே கைநீட்டி, “வெல்கம்….”என்றவன் ,”ஸ்பேஷலி மேட் பீஸ் போல…”என்க,
விஷால், “எலி சிக்கிருச்சு… டைம் பாஸ்க்கு…” என்று அனிஷாவுடன் கைக்குலுக்கி கொண்டான்…
கீதா,” வாயாடி… வெல்கம் டூ அவர் டீம்…” என்று லேசாக கட்டி அணைத்து வரவேற்றாள்…
இதையெல்லாம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்த ரிஷி, “ஓகே காய்ஸ்… கேரியான் யூவர் வொர்க்ஸ்…” என்றவன் அனிஷாவின் புறம் திரும்பி,
“தி இஸ் யூவர் சீட்…. இன்னைக்கு கொஞ்சம் பிரியா இருந்துக்கோ… மூன்னு பேரும் என்ன பண்ணுறாங்கன்னு பாரு… உனக்கு ஆல்ரெடி எக்ஸ்பிரியன்ஸ் இருக்குறனால ட்ரைனிங் இல்ல…. நாளைத் இருந்து உனக்கான பார்டை அலாட் பண்ணுறேன்… நீ ஃபாலோ பண்ணிக்கோ…”
“ஓகே ரிஷி… தேங்க்ஸ்…”என்று புன்னகையுடன் விடை கொடுத்தாள்…
ரிஷி சென்றதும் தன் சுழல் இருக்கையில் அமர்ந்தவள் அதில் ஒரு சுற்று சுற்றினாள்…’ ப‘ வடிவத்தில் இருந்த அந்த மேஜையின் வடிவில், தன் அருகில் கீதாவும், தனக்கு நேர் பின்னால் விஷாலும், அவனுக்கு அருகில் சுரேஷ் என்று இருக்கையின் அமைப்பு இருந்தது…
அவர்களுக்கு பொதுவென ஒருபக்கம் முழுவதும் பைல்கள் அடங்கிய ஒரு கப் ஃபோர்டு மற்றும் பிரின்டரும் இருந்தது…
அதை மனதில் எழுந்த திருப்தியுடன் சுற்றி பார்த்துக் கொண்டே வந்தவள் கீதாவின் பார்வை தன் மீது படிந்து இருப்பதை பார்த்து,
“வொய் கீது டார்லிங் என்னை இப்படி சைட் அடிக்குற….?” என்று ஒற்றை கண்ணை சிமிட்டி கேட்க,
கீதா, “இல்ல உன் ரியாக்ஷனை பார்த்துகிட்டு இருக்கேன்… “
“புரியல….”
“ம்ம்ம்…அது நீ ஒரு சொட்டையோ, மொட்டையோ எதிர் பார்த்து எம்.டி ரூம்க்கு போனியே… அதோட ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு உன்னை பார்த்தேன்….” என்றவள் முகத்தை கையில் தாங்கியபடி இருக்கையின் கைப்பிடியில் கை ஊன்றி இருந்தாள் கீதா…
அவள் கூறியதை கேட்டு சுரேஷும், விஷாலும் அவசரமாக திரும்பி கீதாவையும், அனிஷாவையும் பார்த்து சிரிக்க,
விஷால்,”ஹே…. கீதா என்ன சொல்லுற நீ….?” என்று ஆர்வமாக கேட்க கீதா நடந்த அனைத்தையும் கூறி முடிக்கவும் ஆண்கள் இருவரும் பலமாக சிரிக்க,
அவர்களை பார்த்து உதட்டை பிதுக்கி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டவள், ” இந்த ஆஃபீஸ்ல ஒரு பாஸிடிவ் வைபிரேஷன் இருக்குன்னு ஃபீல் பண்ணினேன் உள்ளே நுழைஞ்சு கொஞ்ச நேரத்தில்…. அது ஏன்னு எம்.டி ரூம் உள்ள போன பின்னாடி தான் தெரிஞ்சுது…. “என்று நிறுத்த,
அதற்கு மூவரும் ஆர்வமாக,”ஏன்….?” என கேட்க,
“ஏன்னா…. எல்லா நெகடிவ் வைபிரேஷனும் எம்.டி ரூம்ல கூடாரம் போட்டு இல்ல உட்கார்ந்து இருக்கு…”என்க,
கீதா,”நிஷா….”
“போ கீது டியர்…. நான் ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா‘வா இருக்கேன்… “என்றவளை கீதா
“நிஷா கொஞ்சம் இங்க பாருடி… ” தன் முன் இருந்த உயிரற்ற கணினியின் திரையை பார்த்து பேசிக் கொண்டு இருந்தவள் கீதாவின் அழைப்பை அலட்சியம் செய்தோடு அல்லாமல் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு,
தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே….
மான் போல வந்தவளே,
எம்.டி கத்தினானோ உன்னிடம்
எம்.டி கத்தினானோ…
வ….
கையை விரித்து சுழல் நாற்காலியில் வலதும் இடதுமாக ஆடிக் கொண்டே ராகத்தோடு இழுத்து பாடியவள், அடுத்த வரியை பாடிக் கொண்டே முழுவட்டம் அடிக்க சுற்றுகையில் அங்கு அபய் கிருஷ்ணா தன் இருகைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி, இவளை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான்…
‘வளரும் பிறையே…’ என அடுத்த வரியை பாட திறந்த அவள் வாய் மீண்டும் மூடாமல் அபயை பார்த்த அதிர்ச்சியில் கண்கள் விரிய பேய் முழி முழித்தாள் அனிஷா….
“ம்ம்ம்… ஏன் நிறுத்திட்டீங்க… கம்மான் பாடுங்க அனிஷா…” என்று அபய் ஊக்குவிக்க, சுற்றி இருந்த மூவரும் சிரிப்பை அடக்க முயற்சித்து கொண்டு இருந்தனர்…
அவனது வார்த்தையில் நினைவுக்கு வந்தவள்,
“ச…சார்… இ… இல்ல சார்… சும்மா… உங்களை பத்தி சொல்லிட்டு இருந்தேன்….” என்று திக்கி திணறி சமாளிக்க,
“இஸ் இட்…. எனக்கு பாட்டு மாதிரி கேட்டுச்சு… சரி என்ன சொல்லிட்டு இருந்தீங்க….?” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அங்கு இருந்த டெஸ்கில் சாய்ந்து நின்று ஆச்சர்யமாக கேட்பது போல் அவளை நக்கலடிக்க….
மற்ற மூவருக்கும் சிரிப்பை அடக்க மிகவும் சிரமமாக இருந்தது போலும், அதை கவனித்த அனிஷா முடிந்த மட்டும் ஓரவிழியில் அவர்களை முறைத்து விட்டு அபயின் புறம் திரும்பியவள், தொண்டையை செருமிக் கொண்டு
“அது வந்து சார்… நீங்க ரொம்பபபப… நல்லவர்… வல்லவர்ர்ர்ர்…’ன்னு….” பாவனையுடன் ராகம் இழுத்து பேசி முடிக்கும் முன்,
“நான்சென்ஸ்……” என்று பொறுமையை இழந்து கத்தி விட்டான் அபய்,
அங்கு இருந்த மற்ற ஊழியர்களும் பதறிவிட, அவர்களது கவனம் இவர்கள் மேல் படர்ந்தது…
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல… நானும் நீங்க வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன்… யூ ஆர் கிராசிங் தி லிமிட்ஸ்…. வேலை பார்க்குற எண்ணம் இருந்தா இங்க இருங்க இல்லாட்டி இப்பவே அவுட்…” கண்மண் தெரியாத கோபம் அவன் மண்டையை சூழ்ந்ததால் சுற்றி இருக்கும் சூழ்நிலையும் மறந்து அனைவர் முன்பும் கத்தி விட்டான்…
அவன் உணராத சுற்று புறத்தை திட்டு வாங்கி கொண்டு இருக்கும் அனிஷா கவனித்திருந்தாள்… கிட்டதட்ட முப்பது பேராது இருக்கும் அந்த இடத்தில் அனைவரும் இவளை பார்த்துக் கொண்டு இருப்பது சற்று அவமானமாக தான் உணர்ந்தாள்…
அதனால் அமைதியாக தலையை குனிந்து, “சாரி சார்…” என்று தவறின் பொருள் உணர்ந்து கூற,
“திஸ் மஸ்ட் பி யூவர் லாஸ்ட் எஸ்கியூஸ்….” என்று அவளை எச்சரித்து விட்டு தன் அறையை நோக்கி சென்றவன்,
ஏதோ நினைவிற்கு வரவும், இடது கையால் தன் நெற்றியில் லேசாக தேய்த்து கொண்டே மீண்டும் இவளை நோக்கி வந்து, அவளை உற்று ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் முடிவை சொன்னதும் தன் அறையை நோக்கி வேகமாக சென்றான்….
அவன் திட்டியதில் தவறை உணர்ந்து தான் இருந்தாள் அனிஷா… இங்கு இவள் வேலையில் தேர்ந்தெடுக்கும் போதே தற்போதைய முக்கிய பிராஜக்டின் அவசியத்தை கூறியே வேலைக்கு தேர்ந்தெடுக்க பட்டாள்…
ஆனால் தாம் சற்று விளையாட்டு தனமாக நடந்துக் கொண்டோமோ என்ற எண்ணம் உத்திக்க அதனால் மன்னிப்பும் கேட்டாள்… இதே வேறு ஏதேனும் விஷயமாக இருந்து இருந்தாள் அவன் பேசிய விதத்திற்கு காளி ஆத்தா ராப் சாங்கிற்கு ஆடியது போல் ஒரு ஆட்டம் ஆடி இருப்பாள் அவனிடம்…
அனிஷா அதை பற்றி யோசித்துக் கொண்டு இருக்க, திட்டிவிட்டு சென்றவன் மீண்டும் இவளிடம் வந்து அவனது முடிவை சொல்லவும்,
அதுவரை தலை கவிழ்ந்து நின்று இருந்தவள் அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க அங்கு அவன் தன் அறையை நோக்கித் சென்றுக் கொண்டு இருந்தான்….
“சார்…..”என்று மெல்ல முனுமுனுத்தவள் பின் நினைவு வந்தவளாக அவனது முடிவினை ஆச்சயபனைக்க அவனது அறை நோக்கி வேகமாக ஓடினாள் அங்கு இருந்த யாரையும் கண்டுக் கொள்ளமால்….
தொடரும் அன்பு தொல்லைகள்…..