Advertisement

அத்தியாயம் 2:

யதீந்திரன் தன்னுடைய ஹீரோஹோன்டா வண்டியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த கம்ப்யூட்டர் சென்டர்க்குள் சென்றான்.

அந்த சென்டரின் ஒரு பக்கம் இன்டர்நெட் கஃபேவாக இருந்தாலும், அடுத்த பக்கத்தில் கணினி வகுப்புகள் எடுக்கும் மையமாக இருந்தது.. நவீனமான அனைத்துவித கணினி படிப்புகளும் அங்கே கற்று தரப்பட்டது..

கூடவே சில விதமான படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகளுக்கான உத்திரவாதமும் சேர்த்து தரப்பட்டதால் அந்த சென்டரில் எப்போதும் கூட்டமிருக்கும்..

மொபைல் டேட்டா குறைந்த கட்டணத்தில் கிடைக்க ஆரம்பித்ததிலிருந்தே இன்டர்நெட் கஃபே சற்று மந்தமாகத்தான் போய் கொண்டிருந்தது..  அதனால் கஃபேயை எடுத்துவிட்டு, அதே இடத்தில் மேற்கொண்டு வகுப்புகள் எடுப்பதற்கே பயன்படுத்த இருக்கிறார்கள்..

அந்த வகுப்புகள் எடுப்பதற்கு இன்னும் சில ஆசிரியர்கள் தேவைப்படுவதால் நேர்முக தேர்வுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.. அன்று தான் நேர்முக தேர்வு..

அந்த நேர்முக தேர்வுக்கு பகுதி நேர பணியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்தான்  யதீந்திரன்..

உழைப்பு!! கடின உழைப்பு!! இதற்கு உதாரணம் தான் இந்த யதீந்திரன்!

இப்பொழுது தான் கணினி அறிவியலில் முதுகலை முடித்து, கேம்பஸில் நல்ல கம்பெனியில் கணிசமான சம்பளத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறான்..

முதல் மாத சம்பளம் அன்று தான் பெற்றிருந்தான்..

முதல் மாத சம்பளத்தில் ட்ரீட்என்ற பெயரில் கலாச்சார சீர்கேட்டுடன் கூடிய பண விரயத்தை அறவே வெறுப்பவன்..அதிலும் பணத்தின் அருமையை நன்றாக புரிந்தவன்.. 

அதற்காக பணத்தை மட்டுமே தேடி ஓடுபவனும் இல்லை..

அன்பு தங்கையின் எதிர்காலத்தை கையில் எடுத்துக்கொண்டிருப்பவனுக்கு பணத்தின் தேவை என்பதால் மட்டுமே இந்த பகுதி நேர வேலையில் சேர நினைப்பது..

அது மட்டுமில்லாமல் அவன் மனதில் இருக்கும் கோபம், வன்மமாக மாற இடம் கொடாதிருக்கவும் தான் இந்த பகுதி நேர வேலை..

அவன் மனதின் கோபத்தை அறிந்தவர்கள் மூன்றே பேர் தான்.. அதில் ஒருவர் இந்த பூவுலகத்திலேயே இல்லை..

மற்ற இருவர், அவனின் அன்பு தங்கை யுவராணியும், அவனின் நெருங்கிய நண்பன் யாதவனும் தான்..

யாதவன் நெருங்கிய நண்பன் மட்டுமில்லை அவனுடனேயே சேர்ந்து வளர்ந்தவன். 

சகோதர பாசமும் மூவருக்குள்ளும் எப்போதும் உண்டு..

யதீந்திரனும், யாதவனும் அவர்களின் தங்கை யுவராணியை ஒரு மகாராணியைப் போலவே தான் பார்த்துக்கொள்கின்றனர்.

யாதவன் யதீந்திரனை விட ஓரிரு வயது மூத்தவனாகவோ அல்லது இளையவனாகவோ இருக்கலாம்..(!)

அன்பு இல்லத்தில் வளர்ந்த அவர்களுக்கு அவர்களின் உண்மையான பிறந்த தேதி எதுவென்றே தெரியாது..

தோராயமாக ஒன்பது மாத குழந்தையாக யதீந்திரன் வந்தான் என்றும், யாதவன் அவனைவிட கொஞ்சம் பெரியவனாக இருந்தான் என்றும் அன்பு இல்ல நிர்வாகி அவர்களிடத்தில் சொல்லியிருந்தார்..

தங்கை யுவராணியின் பிறந்த தேதி மட்டுமின்றி  அவளைப் பெற்றவர்களையும் அவர்களுக்கு தெரியும்..

அந்த பெற்றவர்கள், வெவ்வேறு துணைகளுடன் இருக்கும் இடம் கூட  யதீந்திரனுக்கு தெரியும்..

அது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.!

இதில் கொடுமை என்னவென்றால், அவர்களின் இப்போதைய வாழ்க்கை துணைகளைப் பற்றியும் யதீந்திரன் அறிந்தது தான்அவனின் கோபத்தை அதிகப் படுத்தியிருந்தது..

அதைப்பற்றி ஒருவரிடமும் அவன் சொன்னதுமில்லை, சொல்லப்போவதும் இல்லை.

ஆனால், அந்தப் பெற்றவர்களுக்கு பெற்ற பெண்ணைப் பற்றி ஒன்றுமே தெரியாது.. தெரிந்துக்கொள்ளவும் விருப்பம் இல்லை என்பதே உண்மை..!!

நினைவு தெரிந்த நாளிலிருந்தே அன்பு இல்லத்தில் இருப்பதால் யுவராணிக்கு, தன்னைப் பெற்றவர்களை பற்றி ஒன்றுமே தெரியாது..

அதை அவளுக்கு தெரிய விடக் கூடாது என்பதில், யதீந்திரன் உறுதியாக இருக்கிறான். 

யாதவனும், அன்பு இல்லத்தவர்களும் அதற்கு உறுதுணையாக  இருக்கின்றனர்.

கணினி அறிவியலில் இளங்கலை முடிக்கும் வரைக்கும் யாதவனையும் அன்பு இல்லத்தையும் யதீந்திரன் பிரிந்ததேயில்லை..

ஒரு ஐந்து வருடங்களை தவிர..

யதீந்திரனின் வசந்தமான நாட்கள் அந்த ஐந்து வருடங்கள்..

அந்த வசந்தமான நாட்கள் கொடுத்த இன்பமே அவனுக்கு இப்போது கோபமாக ஆகியிருந்தது..

அதை வன்மமாக மாற விடாமல் இருப்பதற்கு அவன் நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது.

வன்மத்தை வெளிப்படுத்த அவனுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் அமைந்தது தான். ஆனால் அவனின் அன்பு இல்ல வளர்ப்பு முறை அவனுக்கு மனக்கட்டுப்பாட்டையும் கொடுத்தது..

யுவராணியின் புன்னகை நிறைந்த முகம் அவனின் கோபத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லாமல் இருக்க உதவியது.

யாதவனுக்கு படிப்பு அதிகம் வரவில்லையென்றாலும் ஓவியத்தில் இருந்த நாட்டத்தால் அவன் பலவிதமான ஓவியங்கள் வரைய கற்றுக்கொண்டதால், யதீந்திரன் இளங்கலையை முடித்தவுடனேயே அவனுடன் சேர்ந்து தங்கை யுவராணியையும் அழைத்துக்கொண்டு அன்பு இல்லத்தை விட்டு வெளியே சென்றான் யாதவன்.

யதீந்திரன் முதுகலை படிப்பதற்கும், தங்கை யுவராணியை படிக்க வைப்பதற்கும் யாதவன் நிறைய உழைக்க வேண்டியிருந்தது..

யாதவனின் பண சுமையை குறைப்பதற்கு யதீந்திரனும் பகுதி நேர வேலையை செய்துக்கொண்டே முதுகலையும் படித்து முடித்து, வேலையில் சேர்ந்து முதல் மாத சம்பளத்தைப் பெற்ற கையோடேயே அந்த பகுதி நேர நேர்முக தேர்விற்கு வந்திருந்தான்.

நேர்முக தேர்வில் தேர்வாகி அடுத்த நாளிலிருந்து அங்கே வேலையில் சேர ஓப்புக்கொண்டு விட்டு வெளியே வந்த அவனை நகர விடாமல் செய்தது தடுப்பின் வழியே வந்த பேச்சுக்கள்..

“யாமி! என்னோட ஐடியா தான் கரெக்ட்!! “

“ஹா!! என்னது எப்படி சுஜி?”

“எஸ் யாமி! இப்படியே நீ செஞ்சுட்டு இருந்தா அக்கா உன்னை விட்டு எங்கும் போக மாட்டங்கள்ல.. அதான் சொன்னேன் என்னோட ஐடியா தான் கரெக்ட்டுன்னு.”

யாமியின் மௌனத்தைப் பார்த்த அந்த சுஜியாகப் பட்டவள் மேலே தொடர்ந்தாள்.

“ஹே யாம்ஸ்!! இன்னிலேர்ந்து உன் போன் நம்பரை சோசியல் மீடியால போடு.. என்னோட ஆன்லைன் பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் உன்னோட நம்பரை தரேன்.. தென்” என்று சிந்தித்த சுஜி,

“ஹான்..!  உனக்கு கொஞ்சம் வெளி உலக பழக்கமும் வேணும் சோ நெக்ஸ்ட் வீகென்ட் என்னோட பப்க்கு வா..!! செம்மயா என்ஜாய் பண்ணலாம்.. அப்படியே நம்ம பிரண்ட்ஸ் கூட மஹாபலிபுரம் போலாம்.” என்றவளை இடைமறித்தாள் யாமி..

“அங்க எல்லாம் அக்கா என்னை கூட்டிட்டு போய் இருக்காங்க..!” என்றாள் அப்பாவியாக..

“தத்தி அக்கா கூட போவதும் இதுவும் ஒன்றா? நீ இப்படியே இருந்த நம்ம வயசு பசங்க எல்லாம் உன்னை திரும்பி கூட பார்க்கமாட்டாங்க..!”

“அவங்க எதுக்கு என்னை திரும்பி பார்க்கணும்?” என்றவள் குரலில் இருந்த குழந்தைத்தனம் யதீந்திரனை அசைத்துப் பார்த்தது.

அவர்களைப் பார்ப்பதற்காக அங்கேயே நின்றுக்கொண்டான்.

அடுத்து அந்த சுஜியாகப்பட்டவள் பேசிய வார்த்தைகள் அனைத்தும் நாராசமாக அவனின் காதுகளில் விழுந்தது..

நட்பில் கூட விஷம் கலக்கும் இந்தமாதிரி விஷ ஜந்துக்களை அடையாளம் கண்டு நல்ல நட்பை பெறுவது கடினம் என்பது அனுபவசாலியான யதீந்திரனுக்கு புரிந்தது..

‘பாவம் அந்த யாமி..!’ என்று மனம் கவலைக்கொண்டது.

சில நிமிடங்கள் சுஜியின் பேச்சுக்களைக் கேட்டு கொண்டிருந்த யாமி, அந்த பேச்சுக்கள் பிடிக்காமல் எழுந்தாள்.

“ஓகே சுஜி, அக்கா இப்போ வந்துருவாங்க.. நான் அங்க போய் நிற்கிறேன்..!” என்று வெளியில் வந்தாள்..

அங்கேயே நின்றுக்கொண்டிருந்த யதீந்திரன், குழந்தைத்தனம் நிறைந்த முகத்துடன், பொம்மையை போல்வெகு அழகாக இருக்கும் அவளை கண்டு ஒரு நிமிடம் இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான்.

ஒரு வித மயக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்த யதீந்திரனை, யாதவனும் யுவராணியும்  விசித்திரமாக பார்த்தனர்.

“தீரா!! என்ன வேலைதான கிடைச்சது, ஏதோ புதையலே கிடைச்சவனை போல வர.! என்ன விஷயம் டா?” என்று கேட்டான் யாதவன்..

“தீராண்ணா!! அப்படி என்ன சந்தோஷமா நடந்தது?” என்றாள் யுவராணி.

அவர்கள் கேட்பது அவனுக்கு காதில் விழுந்தால் தானே அதற்கு பதில் உரைக்க.

சில நிமிடங்கள் பொறுத்திருந்த யாதவன், யதீந்திரனின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்ததும் திரு திரு என்று விழித்துக்கொண்டே அவர்கள் இருவரையும் ‘என்ன’? என்பதை போல் பார்த்தான் யதீந்திரன்.

“ஹா..ஹா! யாதவாண்ணா நீங்க அடிச்சதும் இந்த வீராதி  (வீ)தீரனுக்கு ஏதோ காத்து கருப்பு அடிச்ச பீலிங் வந்துருச்சு..!” என்று சிரித்தவாறே யாதவனுக்கு ஹய்-பய் கொடுத்தாள் யுவராணி.

யாதவனும் பெரிதாக சிரித்தபடியே அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.

“தீரா!! என்ன விஷயம்ன்னு சொன்னா நாங்களும் அந்த சந்தோஷ மயக்கத்துலயே இருப்போம்ல.!”என்றான் யாதவன்.

“அது வந்து டா யுவி.!” என்று ஆரம்பித்த யதீந்திரனை வாசலின் அழைப்புமணி தடுத்தது..

யாதவன் வெளியே சென்று யாரென்று பார்த்தான்.

அந்த வீட்டின் உரிமையாளர் கணேசன் வந்திருந்தார்.

“வாங்க சார்!” என்று வரவேற்றனர் யதீந்திரனும்,யாதவனும்.

“நல்லா இருக்கீங்களா தம்பிகளா? என்ன யுவிம்மா நீ எப்படி இருக்க?” என்றார் கணேசன்.

“நான் நல்லா இருக்கேன் அங்கிள்..நீங்க ஆன்ட்டி அப்புறம் ரோஜா எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று அவர் மற்றும் அவரின் குடும்பத்தின் நலனையும் விசாரித்தாள் யுவராணி.

“எல்லோரும் நலம் தான் யுவி.. ரோஜாக்கு தான் கல்யாணம் வச்சிருக்கோம். அதைப் பத்தி பேசத்தான் இப்போ வந்தேன்.” என்றார் கணேசன்.

“சூப்பர் அங்கிள்.. ஸ்வீட்டான விஷயம் சொன்னதுக்கு ஸ்வீட் எடுத்துட்டு வரேன்..” என்று கிட்சனுக்குள் அவளின் வீல் சேரை கைகளால் நகர்த்தி சென்றாள்.

பிறந்தபோதே கால்கள் செயல் இழந்து இருந்ததால் தான் தம்பதியருக்குள் கருத்துவேறுபாடு ஆகி பிரிந்துசென்றனர் யுவராணியை ஈன்றவர்கள்.

யதீந்திரனும், யுவியின் தாத்தாவும் தான் அவளை அன்னை இல்லத்தில் சேர்த்திருந்தினர்.

“அங்கிள் இந்தாங்க கேசரி .. நானே செஞ்சேன்..! இன்னிக்கு தான் தீரன் அண்ணாக்கு பர்ஸ்ட் மந்த் சலரி.. அதான் ஸ்வீட் ரெடியா இருக்கு..!” என்றவாறே அவரிடம் நீட்டினாள் யுவராணி.

“யுவிம்மா இப்போ ஸ்வீட் கொடுக்கற!! முழு விஷயத்தையும் சொன்ன உடனே இப்படி ஸ்வீட் கொடுப்பியாடா?” என்றார்.

அவர் குரல் சற்று கம்மியது போல் தோன்றியது மற்ற மூவருக்கும்.

“என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க? நாங்க வீடு கிடைக்காம கஷ்டப்படும்போது எங்களை நம்பி இந்த வீட்டை கொடுத்தீங்க!! 3 வருஷமா வாடகை கூட ஏத்தலை!!

அதெல்லாத்தையும் விட எங்களை உங்க சொந்த பிள்ளைங்களை போல தானே சார் நடத்துறீங்க!! அதனால என்ன விஷயமோ அதை கவலைபடாம சொல்லுங்க சார்!! ” என்று நிலைமையை சமாளித்தான் யதீந்திரன்..

அன்பு இல்லத்தில் வளர்ந்த அவர்களுக்கு வீடு ஒன்றும் அவ்வளவு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை..

வீடு பார்க்க என்று சென்று அசிங்கப்பட்ட இடங்களும், அவமானப் பட்ட இடங்களும் நிறையவே கிடைத்தது அவர்களுக்கு.

யாதவன் மற்றும் யதீந்திரனின் நிரந்தர வேலையற்ற நிலை மற்றும் யுவியின் உடல் நிலை என்று எதையுமே கேலி பேசாமல், அவர்களை மதித்து பேசி அவர்களின் நிலைமை புரிந்து வீடு கொடுத்தவர் தான் இந்த கணேசன்.

“அது வந்து தம்பி! இந்த வீடு என் பொண்ணுக்காக தான் நான் வாங்கினேன்.. அவ கல்யாணம் முடிஞ்சு இங்க தான் வாழப்போறா.. அதனால இன்னும் ஒரு நாலஞ்சு மாசத்துல வீட்டை காலி பண்ணி கொடுக்க முடியுமா?” என்றார் கணேசன்.

சில நிமிடங்கள் மௌனமாகவே கழிந்தது..

“அதுக்கென்ன சார்! கண்டிப்பா வெகேட் பண்ணி கொடுத்திடறோம்.. எப்போ கல்யாணம் வச்சு இருக்கீங்க சார்?” என்றான் யதீந்திரன் யாதவனை கண்களாலேயேதுணைக்கு அழைத்தப்படி.

“அடுத்த மாசம் கல்யாணம். மாப்பிள்ளைக்கு இந்த ஊருக்கே இன்னும் இரண்டு மாசத்துலயே மாத்தல்(Transfer) கிடைச்சுடும் போல இருக்கு. அதான் இந்த வீட்டையே அவங்களுக்கு கொடுத்திடலாம்ன்னு தான்..” என்று நிறுத்தி அவர்களை தர்ம சங்கடத்துடன் பார்த்தார் கணேசன்.

“இந்தாங்க அங்கிள் ஸ்வீட், ரோஜா அக்கா இங்க இருக்க போறாங்க அவ்ளோதானே, இதுக்கு போய் நீங்க எதுக்கு பீல் பண்றீங்க அங்கிள்!பீம் பாய் மாதிரி அண்ணனுங்க இருக்காங்களே சீக்கிரமே நல்ல வீடு தேடி பிடிச்சுடுவாங்க.. அப்படி தானே பீம் பாய்ஸ்?” என்று குறும்புடன் அவர்களைப் பார்த்துக்  கேட்டாள் யுவி.

சகோதரர்கள் இருவரும் ஒருசேர “அப்படியே தான் மகாராணி!” என்றனர்.

“பத்திரிக்கை வைக்க குடும்பத்தோட வரேன்.. நீங்க எல்லாரும் வந்து  என் பொண்ணு கல்யாணத்த நல்லபடியா நடத்திக்கொடுக்கணும்.” என்று சொன்னபடியே யுவராணி கொடுத்த இனிப்பை எடுத்து உண்டார்.

“உன்னை மாதிரியே ரொம்ப இனிப்பா இருக்கு யுவிம்மா!”

“சார்! கல்யாண வேலை எது இருந்தாலும் சொல்லுங்க, நாங்க வந்து செய்யறோம்.” என்றான் யாதவன்.

“கண்டிப்பா சொல்றேன் தம்பிங்களா!! உங்க உதவி நிறையவே தேவைப்படும்.. அதெல்லாம் பத்திரிகை வைக்க வரும்போது பேசிக்கலாம்.. இப்போ நான் கிளம்பட்டுமா, மேல் வீட்டுல தான் காலி செஞ்சு கொடுக்க கொஞ்சம் பிரச்சினை செய்யறாங்க.. சொந்தக்காரவுங்க கிட்ட போய் பேசணும்..” என்றவர் குரலில் சிறிது சோர்வு எட்டி பார்த்தது.

யதீந்திரனுக்கு அவரின் சோர்வு புரிந்தே இருந்தது.. ‘கல்யாண வேலை என்றால் சும்மாவா?’ என்று மனதினுள் நினைத்துக்கொண்டான்.

அவர் விடை பெற்று சென்றதும் அடுத்த வீடு தேட வேண்டுமே என்ற ஆதங்கத்தில் இருந்த யாதவனும் யுவியும், யதீந்திரன் வீட்டினுள் இன்ப மயக்கத்துடன் நுழைந்ததை மறந்தே போனார்கள்.

யதீந்திரனுக்கு அவர்கள் மறந்தது நிம்மதியை கொடுத்தது..

வீட்டிற்குள் இத்தனை பிரச்சினையை வைத்துக்கொண்டு, தான் ஒரு பெண்ணைக் கண்டதும் பருவ பையன் போல மயக்கம் கொண்டது இப்பொழுது அவனுக்கு அவன்மீதே ஒரு அருவருப்பை தந்தது..

அதைக்குறித்து  மற்ற இருவரும் மேலே கேள்வி கேட்காததும் அவனுக்கு மிகுந்த நிம்மதியாய் போய்விட்டது.

“தீரா! எந்த ஏரியால வீடு பார்க்கலாம் டா?” என்று கேட்டான் யாதவன்.

“யுவிக்கு ஆபீஸ் கிட்டக்க இருக்கிற மாதிரி பார்த்துக்கலாம் டா! என்ன யுவி நான் சொல்றது கரெக்ட் தானே?”

“சென்ட் பெர்ஸன்ட் கரெக்ட்ண்ணா!” என்று ஆமோதித்தாள் யுவராணி.

யுவராணி சி.ஏ பைனல் செய்துக்கொண்டிருக்கிறாள். அதனால் ஆடிட்டர் அலுவலகத்திற்கு தினமும் அவள் செல்லவேண்டும்.

 யாதவன் தான் தினமும் அவளை கூட்டி சென்று வருவான். அதற்காகவே காலை ஒருமணி நேரம் மாலை ஒருமணி நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது.

அவனின் ஓவிய வேலைகளுக்கு அது கொஞ்சம் இடையூறாகவே இருந்தது. வருமானமும் சற்றே குறையவும் ஆரம்பித்தது..

வீடு கிடைப்பது கடினமாக இருக்கும் என்பதால், வீடு மாற்றுவதை குறித்து அதுவரை அவர்கள் யோசிக்கவே இல்லை.. இப்பொழுது கட்டாயம் மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டதால் தான் இந்த முடிவு.

“யாமி!! ஆன்லைன்ல  வீடு ரெண்ட்க்கு இருக்குன்னு அட்  கொடுக்க சொன்னேனே, செஞ்சியா?” என்று கேட்டாள் யசோதரா.

யாமினியோ ‘அக்கா’ என்று உதட்டை பிதுக்கினாள்.

அவளின் முக பாவனையை பார்த்து, “ஓகே விடு யாமி, போய்லப் (Laptop) எடுத்துட்டு வா! எப்படி கொடுக்கிறதுன்னு நான் சொல்லி தரேன்.”

“யதுக்கா இதுக்கு தான்க்கா நீ வேணும்ங்கிறது.. பாரு இப்போ நீ இருக்கும் போது என்னை எதுக்கு அந்த கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்த்து விட்ட? எனக்கு பிடிக்கலைக்கா!”

“யாமி பேசிக் கம்ப்யூட்டர் கோர்ஸ் தெரிஞ்சுக்கறது நல்லது தான்!! என்று அழுத்ததுடன் முடித்தாள்யசோதரா..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement