Advertisement

அத்தியாயம் 3:

யசோதராவின் குடும்பம் உயர் மத்தியதர வகுப்பை சேர்ந்தது. இப்பொழு அவர்கள் இருக்கும் வீடு, அவர்களின் தாத்தா வாங்கிய தனி வீடு.

இந்த வீட்டில் தான் சகோதரிகளின் இருவரின் ஜனனம்.

எல்லோரும் இருக்கும்போது பாதுகாப்பாக இருந்த அந்த பங்களா டைப் வீடு, தாத்தா பாட்டியின் மறைவிற்கு பிறகு பாதுகாப்பற்ற சூழ்நிலை அவ்வப்பொழுது நிகழ்வதாக யசோதரா கருதினாள்.

சில பல அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருந்தாலும் என்று இவர்களின் பெற்றவர்கள் துறவறத்தை மேற்கொண்டனரோ, அன்றிலிருந்து மீண்டும் குடும்பத்துக்காண பொருளீட்டும் வேலையை செய்ய ஆரம்பித்தார் யசோதரா மற்றும் யாமியின் தாத்தா.

அவர்களின் குடும்ப தொழிலான வீடு கட்டுமானத்தை யசோதாராவின் தந்தை மிக திறம்படவே நடத்தி வந்தார்.

பெற்றவர்கள் துறவறம் சென்றதும், பாட்டனார் தான் அந்த பணிகளை சிறிய அளவில் நடத்திவந்தார். வயது மூப்பின் காரணமாக லாபம் பெருமளவில் வரவில்லையென்றாலும்  நஷ்டம் ஏற்படாமலேயே நடத்தியும் வந்தார்.

பாட்டியின் மரணத்திற்கு பின் சகோதரிகளின் அழகு மற்றும் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு, ‘காதல்’ என்ற பெயரை சொல்லிக்கொண்டு அவர்களை சுற்றும் கூட்டத்தினரைப் பார்த்து கொஞ்சம் பயந்து தான் போனாள் யசோதரா.

யசோதரா எதிரிலிருக்கும் மனிதர்களின் கண்களை கொண்டே எடை போட்டு விடுபவள். யாமினிக்கு அக்கா என்ன சொன்னாலும் வேதவாக்கு. ‘இவர்களுடன் பழகாதே, ஒதுங்கியிரு!’ என்று யசோதரா கூறிவிட்டால் அவர்களை திரும்பியும் பார்க்கமாட்டாள் யாமினி.

அந்த தனி வீடு அவர்களின் பாதுகாப்பை கேள்விக்கூறி ஆக்கியதால், ஜன சந்தடி மிகுந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற விழைந்தாள் யசோதரா.  இந்த தனி வீட்டை வாடகைக்கு விடவும் முடிவு செய்தனர் சகோதரிகள் இருவரும்.

யாமினியின் கல்லூரிக்கு அருகில்இருக்கும்அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு, யசோதராவிற்கு பிடித்திருந்தது. தங்கை யாமினியின் விருப்பத்தையும் அறிந்ததும், உடனேயே வீடு மாற முடிவு செய்தாள்.

பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் தான் ஒரு மாற்று திறனாளி குழந்தை வக்கிரம் பிடித்த மனித ஜந்துக்களிடம் (மிருகங்கள் எல்லாம் மிக உயர்வானவைகள்) பிடியில் சிக்கியது இந்த யசோதாராவிற்கு தெரியவில்லை.

[அடுக்குமாடி குடியிருப்போ இல்லை தனி வீடோ எதுவாக இருந்தாலும் நம் குழந்தைகளுக்காண பாதுகாப்பை வழங்குவது தான் நமது தலையாய கடமை. குழந்தைகளுடன் தினமும் கலந்துரையாடி, அவர்கள் மனதில் ‘உனக்காக நான் இருக்கிறேன்!’ என்ற தைரியத்தை விதைப்போம்.

தவறு செய்வது குழந்தைகளின் இயல்பு தான் அதை நல்வழி படுத்துகிறேன் என்ற பெயரில், அடித்தோ, திட்டியோ குழந்தைகளின் மனதில் ஒரு குற்ற உணர்வையும், பய உணர்வையும் ஏற்படுத்தாமல், அன்பு வழிகாட்டுதல்களுடன் நல்ல சமுதாயத்தில் நம் குழந்தைகள் வாழ வழி செய்வோம்]

அவரின் இறுதிகாலங்களில் நண்பரிடம் மொத்த தொகைக்கு கொடுத்தவர், அந்த பணத்தையும் சகோதரிகளின் பேரில் முதலீடு செய்து விட்டு மேலோகம் சென்றார்.

“யாமி! இந்த வீகென்ட் நாம வீடு காளி செய்யலாம். நமக்கு தேவையான திங்ஸ் மட்டும் எடுத்துக்கிட்டு போகலாம். மீதி எல்லாம் இங்கயே இருக்கட்டும். அதுக்கும் சேர்த்தே ரென்ட் சொல்லிக்கலாம்.” என்றாள் யசோதரா.

“யதுக்கா எல்லாமே நீயே பார்த்துக்கோ! நீ என்ன சொல்றியோ அதை அப்படியே செய்வது மட்டும் தான் என்னோட வேலை. அதனால ஆளை விடுக்கா!!”

“யாமி ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வளரேன் டா. அப்போ தான் பொறுப்பை எல்லாம் உன் கிட்ட ஒப்படைக்க முடியும்!!” என்று பொய்யாக சலித்தாள் யசோதரா.

“நோ வே யதுக்கா!!” என்று சிரித்தாள் யாமினி.

வேறு வீடு பார்க்கவேண்டும் என்ற நினைவே கசந்தது யாதவனுக்கும், யதீந்திரனுக்கும்.

யுவராணிக்கு அவர்களின் மனது புரிந்தாலும் எதையுமே பெரிதாக எண்ணி கவலைகொள்ளும் மனம் அவளுக்கு என்றுமே இருந்ததில்லை. வாழ்க்கையை அதன் போக்கிலேயே சென்று வாழ்பவள்.

யாதவனின் முகம் தான் சற்று கருத்திருந்தது. அந்த முகத்தை இவர்களுக்கு காட்டாமல் படம் வரைகிறேன் என்ற பெயரில் ஒதுங்கிக்கொண்டான்.

வீடு பார்ப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை.

யதீந்திரனிடமே வீடு பார்க்க சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டான் யாதவன்.

யதீந்தீரனும் யாதவனிடம் ‘சரி’ என்று ஒப்புக்கொண்டு வீடு தேடிக்கொண்டிருக்கிறான். பதினைந்து நாட்களாக தேடியும் விடை என்னவோ பூஜ்யம் தான்.

போகும் இடங்களிலெல்லாம் ‘குடும்பமாக இருந்தால் தான் வீடு!’ என்ற வார்த்தைகள் கோபத்தை கொடுத்தன.

‘ஏன் அவர்கள் மூன்று பேரையும் பார்த்தால் குடும்பமாக தெரியவில்லையா?’ என்ற கேள்விக்கு பதிலாய் வந்த வார்த்தைகளை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை யதீந்திரனால்.

தாங்கள் மூவரும் அனாதையாக பிறந்ததற்கு யாரை குறை கூறி பயன் என்ன என்று விரக்தியும் கொண்டான் யதீந்திரன்.

யுவராணிக்கு பெற்றவர்கள் இருந்தாலும், அவளுக்கும் அவர்களை தெரியாது. தங்களுக்கு ஒரு பெண் பிறந்தது என்பதை தவிர அவர்களுக்கும் யுவராணியை பற்றி தெரியாது.

வரும்வழியில் பார்த்த அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கையில்,  நாங்க மட்டும் ஏன் அப்படி இல்லை?என்ற தாழ்வு மனப்பான்மை மற்றும் சுய பச்சாதாபத்துடன் வீட்டினுள் நுழைந்தான் யதீந்திரன்.

“என்ன தீராண்ணா, வழக்கம் போல வீடு கிடைக்கலையா?” என்ற யுவராணிக்கு ‘ஆம்!’ என்பதாக தலையசைத்தான் யதீந்திரன்.

“விடுண்ணா, இருக்கிறவங்களுக்கு ஒரு வீடு, இல்லாதவர்களுக்கு ஆயிரம் வீடு!! சீக்கிரமே வீடு கிடைக்கும். சாப்பிட வாண்ணா!” என்றவள் தயங்கி,

“கொஞ்சம்யாதவாண்ணாவை கவனி!! எதையோ பறிகொடுத்ததை போல் உட்கார்ந்துகிட்டு இருக்குது.!” என்றாள் யுவராணி.

“எதுக்குடா யுவி அண்ணன் கிட்ட தயக்கம். அவனை நான் பார்த்துக்கிறேன். நீ போய் சாப்பாடு எடுத்து வை.!!” என்று விட்டு யாதவனை பார்க்க சென்றான்.

யாதவனிடம் பேச நினைத்து அவனின் அருகிலே அமர்ந்ததும் அழைப்பு மணி ஓசை கேட்டு எழுந்தான்.

‘இந்த நேரத்தில் யார்?’ என்று மனதில் எழுந்த கேள்வியுடன்.

வாசல் கதவை திறப்பதற்க்காக சென்ற யுவராணியை “நில்லு யுவி! நான் பார்க்கிறேன்!” என்றுவிட்டு அவனே சென்று திறந்தான்.

அங்கே கணேசன் அவரின்  மனைவி மற்றும் கல்யாண பெண் ரோஜா தான் நின்றுக்கொண்டிருந்தனர்.

பத்திரிகை வைக்க வந்திருப்பார்கள் என்று அவனாகவே யூகித்து, “வாங்க சார் வாங்க மேடம், உள்ள வாங்க கல்யாண பொண்ணு!!” என்று அனைவரையும் வரவேற்றான் யதீந்திரன்.

அவர்களின் கைகளில் பத்திரிக்கையோ அல்லது எந்த வித பொருள்களோ இல்லாததைஅவர்கள் உள்ளே நுழையும்போதே கவனித்தான்,

‘இந்த நேரத்தில் இவர்கள் ஏன்? ஏதாவது பிரச்சினையோ?’ என்று மனதினுள்ளேயே பேசியும் கொண்டான்.

“சாப்பிடலாம் சார்! இப்போ தான் யுவி எடுத்துவச்சுக்கிட்டு இருக்கா!” என்றான்.

கணேசனோ பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.

“சொல்லுங்க சார்! ஏதாவது பிரச்சினையா?”

“அது வந்து தம்பி” என்று ஆரம்பித்தவர், “எங்க யாதவன் தம்பியை காணோம்?” என்றார் கணேசன்.

அவர்களின் அரவம் கேட்டு படம் வரைய எடுத்துவைத்திருந்த பொருள்களை உரிய இடத்தில் வைத்துவிட்டு அவர்களை வரவேற்கும் பொருட்டு,

“எல்லோரும் வாங்க, உள்ளே படம் வரைஞ்சுக்கிட்டு இருந்தேன் சார்.!” என்றான் யாதவன்.

“சார் வீடு இன்னும் அமையல. இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தீங்கன்னா சீக்கிரமே காலி செஞ்சு கொடுத்திடுவோம்.” என்றான் யதீந்திரன்.

கணேசனுக்கு புரிந்தது, சொல்ல வந்த விஷயத்தை எப்படி சொல்வேதென்பது.

“கல்யாணம் நடந்தா தானேப்பா, நீங்க வீடு காலி செய்யணும். அது தான் நின்னுபோச்சே!!” என்றார் மிகுந்த வருத்ததுடன்.

கல்யாணம் நின்றுவிட்டது என்று சொன்னதும் யதீந்திரனும், யுவராணியும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

யாதவனின் முகத்தில் அதுவரை இருந்த ‘எதையோ பறிகொடுத்த பாவனை’ முற்றிலும் அகன்று, மனதில் எழுந்த மகிழ்ச்சி வெளியே தெரிந்துவிடாதவாறு பார்த்துக்கொண்டான்.

இந்த வீட்டிற்கு வந்ததும் அவ்வப்பொழுது வந்த ரோஜாவைப் பார்த்து ரசித்தான் யாதவன். சில நேரங்கள் ரோஜாவும் அவனை ரசித்திருக்கிறாள்.

இருவருக்குமே கண்டவுடன் காதல் என்பதில்லை. அது அழகை ஆராதித்து ரசித்து பார்க்கும் பார்வை.

இளவட்டங்கள் எதிர்பாலினத்தவரிடம் ஈர்ப்புக் கொண்டு பார்க்கும் பார்வை!! விரசங்களற்ற பார்வை!

ஒருவேளை ரோஜா அங்கேயே குடியிருந்து இருந்தால் அவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கலாம்.

அவர்கள் வீட்டிற்கு இருந்த இடைவெளி(தூரம்) அவர்களின் மனதில் காதல் துளிர்ப்பதையும் தள்ளி வைத்திருந்தது.

ரோஜாவிற்கு கல்யாணம் என்று கணேசன் சொன்னதுமே யாதவன் மனதில் ஒரு வலி ஏற்பட்டது. அதை யாரிடமும் வெளிப்படுத்திக்கொள்ளவும் நினைக்கவில்லை.

அந்த வலி தான் ‘காதல்!’ என்றும் புரிந்துக்கொண்டான்.

எதிர்காலம் இல்லா அந்த காதலை மறந்துவிடவே முடிவு செய்திருந்தான்.

அதனாலேயே இத்தனை நாட்கள் சோகத்துடன் காணப்பட்டான்.

எந்த நேரத்தில் கணேசன் ‘கல்யாணம் நின்னுப்போச்சு!’ என்று சொன்னாரோ அப்போதே இழந்ததையெல்லாம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை கொண்டான் யாதவன்.

“அச்சோ என்ன அங்கிள் சொல்றீங்க?” என்ற யுவராணியின் குரலில் கணேசனை திரும்பிப் பார்த்தான் யாதவன்.

“என்னத்த சொல்றது? இந்த கால பிள்ளைங்களுக்கு எல்லாமே விளையாட்டா போச்சு!! கல்யாண பையன் ஒரு பெண்ணை விரும்பியிருக்கான். அவங்களுக்குள்ள ஏதோ சண்டைல இந்த கல்யாணத்திற்கும் சம்மதிச்சுட்டான் போல. இப்போ அவங்களுக்குள்ள ராசி ஆகிட்டாங்களாம், அதனால கல்யாணம் வேண்டான்னுனு சொல்லிட்டான்.!” என்றவர் தொடர்ந்து,

“இவ மட்டும் என்ன அவனுக்கு கொறஞ்சவளா? இவளும் ஒருத்தனை விரும்பியிருக்கா! அவளே அதை புரிஞ்சுக்கலையாம். கல்யாணம் நிச்சயம் ஆனப்பிறகு தான் புரிஞ்சுக்கிட்டாளாம்.

அந்த கல்யாணப் பையன் ‘கல்யாணத்தை நிறுத்திடலாம்!’ ன்னு சொன்னதும் உடனேயே ‘சரி’ ன்னு சொல்லிட்டு வந்துட்டா!

ஏன் மா இப்படி கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டு வந்துட்டியே உன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தியான்னு கேட்டா, அவ மனசுல இருக்கிற காதலை சொல்றா!

ரெண்டு பேரும் கொஞ்சம் கூட யோசிக்காம எடுத்த முடிவு குடும்பங்களுக்குள்ள விரிசலைத்தான் கொண்டு வந்திருக்குது. ஏதோ இந்த மட்டும் இப்போவாவது சொன்னாங்களேன்னு சந்தோஷ படத்தான் முடிந்தது.

ஒருவேளை கல்யாணம் முடிஞ்சப்புறம் இந்த முடிவை எடுத்திருந்தா ரெண்டு குடும்பமும் அசிங்க பட்டு போய் இருக்கும்.

அதான் பொண்ணு யாரை  விரும்பிச்சோ அந்த பையன் கிட்டயே பேசிட்டு, அதே முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்ன்னு இருக்கேன்.!” என்று நீண்ட விளக்கம் அளித்தார்.

“நல்ல முடிவு சார்!” என்ற யதீந்திரனை பார்த்து புன்னகைத்தார் கணேசன்.

“அப்போ எப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம் தம்பி? என்று யதீந்திரனைப் பார்த்து கேட்ட கணேசனை அதிர்ச்சியுடன் பார்த்தான் யாதவன்.

 

 

 

 

Advertisement